1
00:01:16,665 --> 00:01:18,585
ஹேய்! ஹேய்!

2
00:01:26,305 --> 00:01:29,385
-என்னை கண்டுகொள்ளாதே.
-மன்னிக்கவும், சார்.

3
00:01:29,465 --> 00:01:30,345
டான்யா எங்கே?

4
00:01:30,465 --> 00:01:32,225
போகணும்.
பெற்றோர் இங்குள்ளனர்.

5
00:01:32,305 --> 00:01:33,865
-டான்யா எங்கே?
-கவலைப்படாத.

6
00:01:33,945 --> 00:01:36,265
உண்மையில், டான்யா நலமாக இருக்கிறாள்.

7
00:01:36,345 --> 00:01:38,705
அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை.
கவலை வேண்டாம்.

8
00:01:38,785 --> 00:01:40,305
என்ன கவலை வேணாம், லோபேரா!

9
00:01:40,385 --> 00:01:43,585
அவளை பரிசோதிக்க மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றோம்.

10
00:01:43,665 --> 00:01:45,945
-எங்கே?
-த கிளினிக். நலமாக இருக்கிறாள்.

11
00:01:46,025 --> 00:01:47,225
அவளை தொடக்கூட இல்லை.

12
00:01:47,305 --> 00:01:48,705
பயமுறுத்திருக்காங்க.

13
00:01:48,785 --> 00:01:50,945
-வெளிநாட்டவர்களா?
-ஆமாம்.

14
00:01:51,025 --> 00:01:52,545
வெளிநாட்டவர் என சொன்னாள்.

15
00:01:59,065 --> 00:02:02,225
அவளை காலியான இடத்திற்கு
அழைத்துச் சென்று, அவள் தலையில்

16
00:02:03,145 --> 00:02:06,105
துப்பாக்கியை வைத்து அவளை நிர்வாணமாக்கினர்.

17
00:02:06,945 --> 00:02:08,705
லியோ, போகலாம். வாங்க.

18
00:02:08,785 --> 00:02:10,985
விமானம், ரயில் நிலையங்களை அழைத்தேன்.

19
00:02:11,025 --> 00:02:12,505
அவனுங்க போயிட்டாங்க!

20
00:02:12,585 --> 00:02:14,145
முடிந்ததை நாங்க செய்றோம்.

21
00:02:14,225 --> 00:02:17,385
நான் உள்துறை செயலாளரை அழைத்தேன்.

22
00:02:18,105 --> 00:02:19,985
இதற்கு முன்னுரிமை அளிப்போம்.

23
00:02:26,545 --> 00:02:28,265
-டான்யா, செல்லமே.
-அன்பே.

24
00:02:29,465 --> 00:02:30,985
எப்படி இருக்கிறாய்?

25
00:02:31,545 --> 00:02:32,705
நலமாக இருக்கிறேன்.

26
00:02:32,825 --> 00:02:33,985
நிஜமாகவா?

27
00:02:36,265 --> 00:02:38,345
நாங்கள் வந்துட்டோம், அன்பே.

28
00:02:41,465 --> 00:02:42,985
நானே சிறுநீர் கழித்தேன்.

29
00:02:43,865 --> 00:02:46,545
பரவாயில்லை, பரவாயில்லை.

30
00:02:51,145 --> 00:02:52,665
அதை இங்கே வைத்த போது,

31
00:02:53,185 --> 00:02:55,465
நான் சிறுநீர் கழித்துவிட்டேன், அப்பா.

32
00:03:10,025 --> 00:03:14,225
லோஸ் ஃபராத்

33
00:03:32,945 --> 00:03:36,105
அவள் எப்படி என்று தெரியுமே.
எல்லாவற்றையும் நம்புவாள்.

34
00:03:36,185 --> 00:03:39,425
அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள்.
அவளை ஏமாற்றிவிட்டார்கள்...

35
00:03:43,945 --> 00:03:46,705
-அவளது அறைக்கு கூட்டிச் செல்வோமா?
-வேண்டாம்.

36
00:03:47,825 --> 00:03:50,625
இது பெரிதாக போகுது.
லியோ சும்மா விடமாட்டார்.

37
00:03:50,705 --> 00:03:52,185
அவளை என்ன செய்தார்கள்...

38
00:03:52,265 --> 00:03:55,065
நம்மை தூண்டுறாங்க,
பதிலுக்கு ஏதும் செய்ய வேணாம்.

39
00:03:56,145 --> 00:03:57,625
நான் ஏதாவது செய்யட்டுமா..

40
00:03:59,465 --> 00:04:00,865
எனக்கு உதவு.

41
00:04:06,065 --> 00:04:08,305
பாலிகிராமை சேர்ந்த பிரெஞ்சுக்காரர்கள்.

42
00:04:08,385 --> 00:04:10,225
ஒரு கலைஞராக அவளை விரும்பினர்.

43
00:04:10,305 --> 00:04:11,585
அவள் பாட்டை
கேட்டாங்க.

44
00:04:11,665 --> 00:04:14,065
அதை கேட்காமல் இருந்தால் எப்படி தெரியும்?

45
00:04:14,145 --> 00:04:16,425
யாரோ ஒரு டெமோ கொடுத்ததாக சொன்னார்கள்.

46
00:04:16,465 --> 00:04:17,705
எனக்கு தெரியாது.

47
00:04:17,825 --> 00:04:19,785
-என் சகோதரி ஒரு முட்டாள்.
-இல்லை.

48
00:04:19,865 --> 00:04:21,825
20 வயதாகுது, கனவுகளோடு இருக்கா.

49
00:04:21,945 --> 00:04:23,905
யாருமே நிஜ உலகைக் காட்டலை.

50
00:04:23,985 --> 00:04:25,225
மொராக்கர்கள் செய்தது.

51
00:04:25,305 --> 00:04:27,865
மொராகர், அல்ஜீரியர்,
செர்பியராக இருக்கட்டும்

52
00:04:27,905 --> 00:04:29,545
-மவாட் வேலை இது.
-தெரியாதா?

53
00:04:29,625 --> 00:04:31,465
தெரியும். ஏன் செய்தான்
தெரியுமா?

54
00:04:31,545 --> 00:04:34,145
நீ தர விரும்பிய கப்பலை
நான் விற்காததால் தான்.

55
00:04:34,225 --> 00:04:35,425
திரும்பவுமா, லியோ?

56
00:04:35,465 --> 00:04:37,345
நீ செஞ்ச தப்பால் என்ன நடந்தது?

57
00:04:37,465 --> 00:04:38,465
போதும், லியோ.

58
00:04:38,585 --> 00:04:41,305
அப்பா, மவாட்டாக இருந்தால்,
தண்டிக்கப்படுவான்.

59
00:04:41,345 --> 00:04:43,105
ஓ, அப்படியா? என்ன செய்வாய்?

60
00:04:43,345 --> 00:04:44,665
அவனை சுடப் போகிறாயா?

61
00:04:48,225 --> 00:04:49,585
போலீஸ் என்ன சொன்னாங்க?

62
00:04:50,025 --> 00:04:51,425
கண்டுபிடிக்க மாட்டாங்க.

63
00:04:52,305 --> 00:04:54,225
முதலில் நாம உறுதிப்படுத்தணும்.

64
00:04:54,305 --> 00:04:58,105
ஆனால் எவனோ என் தங்கையின் தலையில
துப்பாக்கிய வச்சிருக்கான்.

65
00:04:58,185 --> 00:04:59,745
ஹியூகோ அவள் என் தங்கை.

66
00:05:01,825 --> 00:05:03,265
மவாடிற்கு என்ன லாபம்?

67
00:05:03,345 --> 00:05:04,465
பழி தீர்ப்பான்.

68
00:05:04,865 --> 00:05:06,025
அவன் ஒரு மனநோயாளி.

69
00:05:11,305 --> 00:05:12,825
நம்மை தூண்ட பார்க்கிறான்.

70
00:05:12,905 --> 00:05:13,825
அதேதான்.

71
00:05:14,145 --> 00:05:16,545
நாம் தாக்குதல் நடத்த விரும்புகிறான்.

72
00:05:16,625 --> 00:05:18,265
அப்பா அவனை சந்தித்தால்

73
00:05:19,105 --> 00:05:20,465
நல்லது என நினைக்கிறேன்.

74
00:05:20,905 --> 00:05:23,985
-முட்டாள்தனமா பேசாத?
-என்னை கொஞ்சம் பேசவிடுவாயா?

75
00:05:31,665 --> 00:05:32,905
அப்பா.

76
00:05:33,225 --> 00:05:34,865
அவனாக இருந்தால் தெரியவரும்.

77
00:05:35,225 --> 00:05:38,705
-அவனை அடித்தே கொன்றுவிடுவேன்.
-லியோ, அமைதியாக இருங்க.

78
00:05:38,785 --> 00:05:41,345
நிதானமாக, சேர்ந்து ஒரு முடிவுக்கு வருவோம்.

79
00:05:47,065 --> 00:05:48,505
நாம் கோபத்தில் ஏதாவது

80
00:05:49,225 --> 00:05:50,945
செய்தால், அவன் விரும்புவதை

81
00:05:51,665 --> 00:05:53,625
செய்து விடுவோம்.

82
00:05:57,465 --> 00:05:58,625
கார்மென் கூறியபடி,

83
00:06:03,025 --> 00:06:06,545
ஃபராட் குடும்பம் முட்டாள்களல்ல
என காண்பிக்கணும்.

84
00:06:06,985 --> 00:06:08,705
நாம கட்டுப்படுத்த வேண்டும்.

85
00:06:09,585 --> 00:06:13,425
எப்போதும் அதிகாரத்தின் அடையாளமே அதுதான்.

86
00:06:14,385 --> 00:06:15,825
நான் யாரென்று நினைச்ச?

87
00:06:15,905 --> 00:06:18,425
மெசேஜை அனுப்பும் ஒரு கமோரா மாஃபியாவா?

88
00:06:18,825 --> 00:06:20,665
நான் முட்டாள் என நினைக்கிறாயா?

89
00:06:21,025 --> 00:06:22,825
என்னை பற்றி உனக்கே தெரியும்.

90
00:06:23,745 --> 00:06:26,305
பேச மாட்டேன், செயலில் இறங்கிவிடுவேன்.

91
00:06:26,905 --> 00:06:29,105
-உனக்கே அது தெரியும்.
-சரி.

92
00:06:29,785 --> 00:06:31,785
என் வீட்டிற்கு ரவுடிகளை அனுப்பின.

93
00:06:31,865 --> 00:06:32,705
என்ன?

94
00:06:33,345 --> 00:06:35,665
அது மொராக்கோ இரகசிய சேவை.

95
00:06:36,345 --> 00:06:37,625
சி.ஈ.எஸ்.ஐ.டி ஐ கேளு.

96
00:06:39,385 --> 00:06:43,345
நமக்கு 20 வருட பழக்கம் என்பதால்
நம்பிக்கையில் உன்னிடம் சொல்கிறேன்.

97
00:06:43,785 --> 00:06:45,185
ஈரானியர் 80 லட்சத்தை

98
00:06:45,265 --> 00:06:47,465
ஏமாற்றியதாக நீ நினைத்தால்
நீ முட்டாள்.

99
00:06:47,545 --> 00:06:49,105
-நான் முட்டாளா?
-ஆமாம்.

100
00:06:49,185 --> 00:06:51,465
என் குடும்பத்துக்கு ஏதாவது நடந்தால்,

101
00:06:51,545 --> 00:06:55,225
அது சின்ன கஷ்டமாக இருந்தாலும்,
என்ன செய்வேன் தெரியுமா?

102
00:06:56,625 --> 00:06:58,385
-என்னை சுட்டுவிடுவாயா?
-இல்லை.

103
00:06:58,465 --> 00:07:00,945
ஈரானியர்களுடன் சேர்ந்து ஏமாற்றிவிட்டாயென

104
00:07:01,025 --> 00:07:02,985
சதாம் உசேனிடம் சொல்லிவிடுவேன்.

105
00:07:03,425 --> 00:07:04,945
எத்தனை வருஷம் போர்?

106
00:07:05,025 --> 00:07:06,465
ஐந்து, ஆறு, ஏழு ஆண்டு?

107
00:07:07,505 --> 00:07:08,825
தன் நண்பரான் மவாட்,

108
00:07:08,905 --> 00:07:12,385
பாக்தாத் குண்டு வீச்சிற்கு விமான பாகங்களை
கொடுத்தார் என்பது

109
00:07:12,465 --> 00:07:14,625
தெரிந்தால், அவர் கடுப்பாவார் தானே?

110
00:07:17,745 --> 00:07:19,225
உன்னை நம்ப மாட்டார்.

111
00:07:19,305 --> 00:07:20,905
நம்புவதற்கு ஏற்ப சொல்வேன்.

112
00:07:21,705 --> 00:07:22,945
ஆதாரமே இல்லாமலா?

113
00:07:24,345 --> 00:07:27,025
எனக்கு எல்லா இடங்களிலும்
எதிரிகள் உண்டு, லியோ.

114
00:07:27,625 --> 00:07:29,825
பலர் என்னை அவதூறாகப் பேசுகிறார்கள்.

115
00:07:30,305 --> 00:07:31,705
சதாமுக்கு அது தெரியும்.

116
00:07:32,265 --> 00:07:33,465
உன்னை நம்பமாட்டார்.

117
00:07:36,185 --> 00:07:37,705
எச்சரிக்கலை என சொல்லாதே.

118
00:07:38,305 --> 00:07:39,745
என்னை மிரட்டுகிறாயா?

119
00:07:45,465 --> 00:07:48,065
உன் மகளைப் போல நானும் சிறுநீர் கழிக்கணுமா?

120
00:07:52,705 --> 00:07:54,345
லியோ முயன்றார்.

121
00:07:54,705 --> 00:07:55,945
முயற்சி செய்தார்.

122
00:07:57,385 --> 00:08:01,385
ஆனால் சில நேரங்களில் திட்டம் போட்டது
நடக்காமல் எல்லாம் மோசமாகிவிடும்.

123
00:08:11,145 --> 00:08:13,025
அந்த அடிதான் ஒரே தூண்டல்.

124
00:08:14,505 --> 00:08:16,305
ஃபராட் அவர்களே!

125
00:08:16,385 --> 00:08:17,465
தயவுசெய்து!

126
00:08:17,865 --> 00:08:22,225
ஏனென்றால், நிஜ சம்பவம் அங்கிருந்து
600 மைல் தொலைவில் நடந்தது.

127
00:08:22,505 --> 00:08:25,665
மொனாகோ

128
00:08:37,705 --> 00:08:41,505
சேட்டோ மொனாகோ

129
00:08:41,745 --> 00:08:44,625
அல்ஜீரியாவுக்கு காலித் தந்த
துப்பாக்கிகள் ஞாபகமா?

130
00:08:45,265 --> 00:08:47,745
அவங்களிடம் ஒரு விரிவான திட்டம் இருந்தது.

131
00:08:49,065 --> 00:08:50,265
மிகவும் விரிவானது.

132
00:08:50,345 --> 00:08:53,745
70 களில் இருந்த, முக்கிய தீவிரவாதம்.

133
00:09:05,385 --> 00:09:07,225
இது பி.எஃப்.எல்.பி யின்

134
00:09:07,305 --> 00:09:10,505
சார்பில் நடக்கும் ஒரு தாக்குதல்!

135
00:09:28,465 --> 00:09:33,265
டான்யா மீறப்பட்ட அதே வாரம்
அதை செய்ய வேண்டும் என

136
00:09:33,345 --> 00:09:35,105
காலித் யோசித்திருக்கார்.

137
00:09:35,185 --> 00:09:37,385
நகருங்க, நகருங்க! போகலாம்!

138
00:09:38,585 --> 00:09:39,425
நகரு!

139
00:10:11,985 --> 00:10:13,545
2 மணிநேரம், கோபம் வருது.

140
00:10:13,625 --> 00:10:14,745
உத்தரவு போட்டாங்க.

141
00:10:14,825 --> 00:10:16,385
என்ன உத்தரவு கழுதை.

142
00:10:17,745 --> 00:10:19,745
ஹேய், எங்கே போறீங்க?

143
00:10:19,865 --> 00:10:21,145
யாரோ வந்திருக்காங்க.

144
00:10:21,225 --> 00:10:22,465
-யாரு?
-சி.ஈ.எஸ்.ஐ.டி.

145
00:10:23,505 --> 00:10:24,745
என்னுடன் வாங்க.

146
00:10:26,545 --> 00:10:28,145
மவாட்டுடன் என்ன பிரச்சனை?

147
00:10:28,225 --> 00:10:29,745
அவன் தப்புக்காக அடித்தேன்.

148
00:10:29,865 --> 00:10:32,065
நீதி அமைச்சருமா அவனுக்காக பேச வரார்?

149
00:10:32,745 --> 00:10:34,425
உங்க முதலாளி யார்?

150
00:10:34,745 --> 00:10:36,065
மவாட்டுக்காக வரலை.

151
00:10:36,145 --> 00:10:37,385
அப்போ, தற்செயலாவா?

152
00:10:37,465 --> 00:10:39,545
அவனை அடித்தவுடன் கடுப்பாகிட்டாங்க.

153
00:10:39,625 --> 00:10:41,625
ஆனா அவன் உங்க செல்லப்பிள்ளை...

154
00:10:42,225 --> 00:10:43,145
என்ன?

155
00:10:43,225 --> 00:10:45,825
...அடுத்த 48 மணி நேரத்திற்குள்.

156
00:10:45,865 --> 00:10:47,625
-என்னது அது?
-நீங்க சொல்லுங்க.

157
00:10:47,705 --> 00:10:50,585
அவர்களுடைய பெயர்கள்
அதிகாரிகளிடம் தரப்படும்...

158
00:10:50,625 --> 00:10:51,505
என்னது இது?

159
00:10:51,585 --> 00:10:52,425
...நிருபரிடம்.

160
00:10:52,505 --> 00:10:57,745
இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்
அரசு பேச்சுவார்த்தை நடத்த மறுத்தால்,

161
00:10:57,825 --> 00:11:01,185
நாங்கள் பணயக்கைதிகளை
கொல்ல தொடங்குவோம்,

162
00:11:01,265 --> 00:11:05,185
இஸ்ரேலிய பாஸ்போர்ட்
வைத்திருப்பவர்களிடமிருந்து தொடங்குவோம்.

163
00:11:07,145 --> 00:11:09,425
-உங்க நண்பர் காலித்.
-"நண்பர் காலித்."

164
00:11:10,945 --> 00:11:12,025
"நண்பன் காலித்..."

165
00:11:12,105 --> 00:11:13,825
என்ன நினைக்கிறீங்கன்னு தெரியல

166
00:11:13,905 --> 00:11:16,105
எனக்கும் இதற்கும் எந்த
சம்பந்தமுமில்ல.

167
00:11:19,425 --> 00:11:22,585
இவை ஐந்து மாதங்களுக்கு முன்பு

168
00:11:22,665 --> 00:11:24,345
எடுக்கப்பட்ட படங்கள்.

169
00:11:24,825 --> 00:11:27,305
நிக்காராகுவா விஷயம்
வெடிப்பதற்கு முன்பு.

170
00:11:28,105 --> 00:11:30,065
நான் சம்பந்தப்பட்டதாக கூறினால்,

171
00:11:30,145 --> 00:11:31,505
உங்களுக்கு என்னை
தெரியல.

172
00:11:31,585 --> 00:11:33,185
ஏன் உங்கள பார்க்க வந்தான்?

173
00:11:37,385 --> 00:11:38,465
என்னை கண்டிக்க.

174
00:11:39,905 --> 00:11:42,225
-உங்களை கண்டிக்கவா?
-ஆம்.

175
00:11:42,665 --> 00:11:43,825
நிக்காராகுவாவில்

176
00:11:43,905 --> 00:11:47,585
உள்ள அமெரிக்கர்களுக்கு உதவியதற்காக
என்னை திட்ட வந்தான்.

177
00:11:48,225 --> 00:11:51,505
காலித் அப்படித்தான்.
நான் வல்லரசுகளுக்கு வேலை செய்கையில்

178
00:11:51,585 --> 00:11:54,545
புண்பட்டு விடுவான்.
"நீ என் நண்பன், ஆனா நான்

179
00:11:54,625 --> 00:11:56,705
-"வியாபாரி" என சொல்வேன்.
-பாருங்க,

180
00:11:56,785 --> 00:11:58,945
இருவரும் என்ன செய்றீங்கன்னு தெரியலை

181
00:11:59,025 --> 00:12:01,905
என் குழந்தைகள் மீது ஆணையாக,
இதுதான் நடந்தது.

182
00:12:01,985 --> 00:12:03,705
எனக்கு கவலையில்லை!

183
00:12:04,225 --> 00:12:05,265
எனக்கு கவலையில்ல!

184
00:12:06,025 --> 00:12:09,145
நான் சி.ஈ.எஸ்.ஐ.டி ஆள் கிடையாது.
அரசாங்கம் அனுப்பினது.

185
00:12:10,265 --> 00:12:13,385
அந்த ஹோட்டலில் மூன்று
ஸ்பானிஷ் குடும்பங்கள் உள்ளன.

186
00:12:14,585 --> 00:12:18,385
நீங்கள் நினைப்பது போல, அவை வெறும்
ஸ்பானிஷ் குடும்பங்கள் அல்ல.

187
00:12:18,465 --> 00:12:22,185
எனவே நீங்க உங்க நண்பனை தொடர்பு கொண்டு
அவர்களை விடச் சொல்லுங்க.

188
00:12:22,265 --> 00:12:23,985
காலித்தை தொடர்புகொள்ள
வழிஇல்ல.

189
00:12:24,065 --> 00:12:25,425
வழியை கண்டுபிடிங்க.

190
00:12:25,745 --> 00:12:27,625
அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால்,

191
00:12:28,065 --> 00:12:30,025
உங்களை சும்மா விடமாட்டோம்.

192
00:12:30,105 --> 00:12:33,265
30 ஆண்டுகளுக்கு சிறையில் வைக்க,
ஆதாரங்கள் உள்ளன.

193
00:12:33,345 --> 00:12:35,145
உங்களையும், மகள் சாரவையும்.

194
00:12:35,865 --> 00:12:37,905
உங்க மனைவிக்கு காசு கிடைக்காது,

195
00:12:37,985 --> 00:12:40,385
ஏனெனில் உங்கள் வங்கிக் கணக்குகள்,

196
00:12:40,665 --> 00:12:43,625
கார்கள், சொத்துகள்,
படகுகளை முடக்கிவிடுவோம்...

197
00:12:43,705 --> 00:12:45,425
படகு. ஒன்று தான் இருக்கு.

198
00:12:48,425 --> 00:12:49,465
சரி, படகு.

199
00:12:49,905 --> 00:12:51,105
பாஸ்போர்ட்.

200
00:12:52,145 --> 00:12:53,865
பாஸ்போர்ட்
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா

201
00:12:56,905 --> 00:12:58,465
அந்த வழியில், போ. போ

202
00:13:03,665 --> 00:13:04,985
பாஸ்போர்ட்.

203
00:13:12,345 --> 00:13:13,385
அனைவரும் யூதரா?

204
00:13:13,465 --> 00:13:14,905
இஸ்ரேலிய குடிமக்கள்.

205
00:13:15,745 --> 00:13:19,385
-இந்த வழியாக. போகலாம். சீக்கிரம்!
-போ, போ.

206
00:13:20,145 --> 00:13:22,305
எல்லாம் எப்படி போகிறது?

207
00:13:22,585 --> 00:13:24,785
குடும்பங்களை பிரிக்காதீர்கள்.

208
00:13:29,705 --> 00:13:31,105
ஐரோப்பியர்கள் வேண்டாம்.

209
00:13:32,825 --> 00:13:35,025
எத்தனை சியோனிஸ்ட் பாஸ்போர்ட் உள்ளன?

210
00:13:35,105 --> 00:13:36,305
இருபத்து நான்கு.

211
00:13:42,465 --> 00:13:43,985
இதுதான் பழமையானதா?

212
00:13:50,185 --> 00:13:51,305
நிச்சயமாக இல்லை.

213
00:13:51,385 --> 00:13:54,465
மார்பெல்லாவில் சமூக மோதலை உருவாக்க
நான் விரும்பலை.

214
00:13:55,305 --> 00:13:58,305
மவாட்டுக்கும் எனக்கும் பல வருட
பரிச்சயம் உண்டு...

215
00:13:59,025 --> 00:14:00,425
ஆம், பிரதிநிதி தான்.

216
00:14:00,505 --> 00:14:02,145
எந்த பிரச்சனையும் வேண்டாம்.

217
00:14:02,825 --> 00:14:05,745
என் வாக்கு உள்ளது,
நாம் சமாளிக்கலாம். கவலைப்படாதே.

218
00:14:12,705 --> 00:14:15,025
பிரச்சனையை நிறுத்த பிரதிநிதி சொல்றார்.

219
00:14:15,105 --> 00:14:15,945
சரி.

220
00:14:16,825 --> 00:14:18,945
டான்யாவுக்கு நடந்ததை
ஏன் குறிப்பிடலை?

221
00:14:19,025 --> 00:14:21,185
அது எதையும் தீர்க்காது, ஹியூகோ.

222
00:14:21,665 --> 00:14:22,585
நிச்சயமாக.

223
00:14:23,505 --> 00:14:25,105
எனவே அதை ஏற்றுக்கொள்ளணுமா?

224
00:14:25,185 --> 00:14:26,065
போதும் ஹியூகோ.

225
00:14:26,385 --> 00:14:29,025
மவாட், சி.ஈ.எஸ்.ஐ.டி நமக்கு
எதிராக உள்ளனர்.

226
00:14:29,105 --> 00:14:30,985
நாம் அரசாங்கத்தை எதிர்க்கணுமா?

227
00:14:36,865 --> 00:14:38,785
ஹேய், கண்ணே.

228
00:14:40,025 --> 00:14:42,545
இல்லை, நான் சொல்வதைக் கேள்.

229
00:14:42,625 --> 00:14:43,745
இது உன் தவறு அல்ல.

230
00:14:43,825 --> 00:14:45,105
-என்னால் தான்.
-இல்ல.

231
00:14:45,185 --> 00:14:47,465
நான் போகாமல் இருந்திருந்தால்.
விடுங்க!

232
00:14:50,905 --> 00:14:53,265
-டான்யா, இங்கே வா.
-முடியாது!

233
00:14:56,265 --> 00:14:57,545
என்னுடன் வா.

234
00:15:06,185 --> 00:15:09,785
காலித், மவாட் ஆகிய இருவரிடமும்
ஒரே நேரத்தில் போராட முடியாது.

235
00:15:10,345 --> 00:15:12,465
மவாட் எல்லோரையும் அழைக்கிறான்.

236
00:15:12,545 --> 00:15:14,025
நாம் அவனை தடுக்கணும்.

237
00:15:14,105 --> 00:15:16,465
ஜெரோமிடம் பேசி
விலையை நிர்ணயிக்க சொல்.

238
00:15:17,265 --> 00:15:18,745
டான்யா விஷயத்துக்கு
பிறகா?

239
00:15:27,105 --> 00:15:28,785
தூக்க மருந்து கொடுத்தேன்.

240
00:15:33,065 --> 00:15:35,425
ஹியூகோ. ரொம்ப ரியாக்ஷன் காட்டாத.

241
00:15:37,225 --> 00:15:38,825
ரியாக்ஷன்? நானா?

242
00:15:38,905 --> 00:15:40,145
ஆம், நீ தான்.

243
00:15:40,265 --> 00:15:43,505
நீ மவாட்டிடம் போனதை
தொடர்ந்து ஈடுகட்ட நினைக்கிற.

244
00:15:44,585 --> 00:15:46,545
அது உங்க மருமகனின் தவறு.

245
00:15:49,945 --> 00:15:52,185
அவனிடமிருந்து நீ கற்றுக்கொள்ளலாமே.

246
00:15:53,585 --> 00:15:55,345
எதை கற்கணும்? பிறரை கவரவா?

247
00:15:55,425 --> 00:15:57,385
இல்லை. உன்னைக் கட்டுப்படுத்த.

248
00:16:01,225 --> 00:16:04,185
அம்மா, அவர்கள் நம்மை
மதிக்க தான் விரும்புகிறேன்.

249
00:16:04,905 --> 00:16:05,865
சரி.

250
00:16:07,225 --> 00:16:09,265
நம்மையா அல்லது உன்னையா?

251
00:16:11,865 --> 00:16:12,745
என்ன?

252
00:16:13,185 --> 00:16:16,425
கண்ணே, பிரச்சனையை தீர்ப்பவங்களை தான்
மக்கள் மதிப்பாங்க.

253
00:16:17,345 --> 00:16:19,465
விருப்பத்தை
திணிப்பவங்களை மதிப்பாங்க.

254
00:16:45,545 --> 00:16:47,345
உம்மை லாபியில் சந்திப்பாங்க.

255
00:16:47,425 --> 00:16:48,585
அது போதும்.

256
00:16:48,665 --> 00:16:50,225
குழுவை உஷார் படுத்தினேன்.

257
00:17:40,905 --> 00:17:42,745
சுட வேண்டாம், சுட வேண்டாம்!

258
00:17:52,065 --> 00:17:53,745
-என்ன?
-இரு கைதிகள் தப்பினர்.

259
00:17:53,825 --> 00:17:55,665
நீ என்ன செய்கிறாய்?

260
00:17:55,745 --> 00:17:56,905
நகரு!

261
00:17:57,865 --> 00:17:58,785
பொறுமை!

262
00:18:00,585 --> 00:18:01,625
தயவுசெய்து.

263
00:18:02,145 --> 00:18:04,625
அமைதியாக இருப்போம். நாம் பேச வேண்டும்.

264
00:18:10,665 --> 00:18:12,345
இனி பேச்சுவார்த்தை இல்லை!

265
00:18:13,065 --> 00:18:15,185
சியோனிஸ்ட் அமைப்பு பதிலளிக்கலன்னா,

266
00:18:15,585 --> 00:18:18,785
55 பி.எல்.எஃப் சகோதரர்களை
அவங்க விடுவிக்கவில்லை என்றால்

267
00:18:18,865 --> 00:18:20,425
அடுத்த அரை மணி நேரத்தில்,

268
00:18:20,505 --> 00:18:23,265
பணயக்கைதிகளை கொல்லத் தொடங்குவோம்!

269
00:18:28,145 --> 00:18:29,665
இது எங்க இறுதி எச்சரிக்கை!

270
00:18:43,985 --> 00:18:45,985
உங்களுக்கு இழப்பீடு வழங்கணுமா?

271
00:18:46,505 --> 00:18:48,065
இது இழப்பீடு அல்ல.

272
00:18:48,865 --> 00:18:50,905
சாரா, உன் அப்பா மோசமாக நடக்கிறார்.

273
00:18:51,025 --> 00:18:52,905
அவர் மவாட்டை அடித்துவிட்டார்.

274
00:18:53,265 --> 00:18:54,425
காயப்படுத்திட்டார்.

275
00:18:55,145 --> 00:18:58,305
மாவட்டை தாக்கியதற்கு
எதுவும் ஈடு செய்ய முடியாது.

276
00:18:59,825 --> 00:19:00,905
இது ஒரு கொள்முதல்.

277
00:19:02,185 --> 00:19:03,305
என்ன வாங்குகிறோம்?

278
00:19:03,905 --> 00:19:06,425
நீங்கள் மவாட்டின் மன்னிப்பு மற்றும் பதிலடி

279
00:19:07,545 --> 00:19:09,025
கொடுப்பதற்கான நியாயமான

280
00:19:09,865 --> 00:19:11,185
உரிமையை வாங்குவீர்கள்.

281
00:19:11,305 --> 00:19:13,065
அப்போ, என் தங்கையின் கதி?

282
00:19:14,345 --> 00:19:18,105
மன்னிக்கவும், மவாட்டுக்கும் அதற்கும்
எந்த சம்பந்தமும் இல்லை.

283
00:19:24,265 --> 00:19:26,185
இந்த கொள்முதலின் விலை என்ன?

284
00:19:26,745 --> 00:19:28,545
என்னிடமிருந்து என்ன வேண்டும்?

285
00:19:28,905 --> 00:19:31,785
நான் உன்னை அழைக்கிறேன், இது அவசரம்.

286
00:19:31,865 --> 00:19:33,505
என் கையில் எதுவுமில்ல லியோ.

287
00:19:33,985 --> 00:19:35,425
காலித் பைத்தியமாகிட்டான்.

288
00:19:35,545 --> 00:19:37,025
உன் அழைப்பை எடுப்பான்.

289
00:19:37,385 --> 00:19:39,425
நான் ஏற்கனவே முயற்சித்து விட்டேன்.

290
00:19:39,505 --> 00:19:40,865
இன்னும் முயற்சி செய்.

291
00:19:42,025 --> 00:19:45,865
அராஃபத் கோபமாக உள்ளார்.
நாம் தீவிரவாதிகளாக பார்க்கப் படுகிறோம்.

292
00:19:45,905 --> 00:19:46,865
தொலைபேசி

293
00:19:46,905 --> 00:19:49,905
மான்ஸர் அந்த ஸ்பானியர்களை
அங்கிருந்து வெளியேற்றணும்.

294
00:19:50,025 --> 00:19:52,985
மிக செல்வாக்கை உடைய
குடும்பத்தை சேர்ந்தவர்கள்?

295
00:19:53,065 --> 00:19:55,505
சி.ஈ.எஸ்.ஐ.டி என்னை தொந்தரவு செய்யுது.

296
00:19:55,585 --> 00:19:57,625
எனக்கும் அழுத்தம் தருகிறார்கள்.

297
00:19:57,665 --> 00:20:00,065
அதுவும், நீ மவாட்டை அடித்ததிலிருந்து.

298
00:20:00,145 --> 00:20:01,665
இதற்கும் அதற்கும் என்ன?

299
00:20:01,745 --> 00:20:02,625
எல்லாமே தான்.

300
00:20:02,665 --> 00:20:06,185
ஈரானியர்களிடமிருந்து வரும் பணத்தால்
மவாட் கோபமாக இருக்கான்.

301
00:20:07,065 --> 00:20:08,185
அவன் ஒரு முட்டாள்.

302
00:20:08,505 --> 00:20:10,985
சி.ஐ.ஏ அவனுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

303
00:20:11,065 --> 00:20:14,265
நீ அவனை
எந்த தைரியத்தில் அடித்தாய்?

304
00:20:14,585 --> 00:20:16,425
இப்போ, பிரச்சனையே காலித் தான்.

305
00:20:16,905 --> 00:20:20,265
இல்ல. மவாட் பிரச்சனையை முடி,
காலித் பற்றி பிறகு பேசலாம்.

306
00:20:20,785 --> 00:20:21,665
சரியா?

307
00:20:31,545 --> 00:20:33,505
ஹேய், என்ன?

308
00:20:33,785 --> 00:20:35,065
நான் பார்த்துக்கறேன்.

309
00:20:35,665 --> 00:20:37,665
சி.ஈ.எஸ்.ஐ.டி கைவிட மாட்டாங்க.

310
00:20:38,625 --> 00:20:40,345
காலித் எவரையும்
கொல்லமாட்டான்.

311
00:20:42,025 --> 00:20:42,985
ஆம், மாட்டான்.

312
00:20:43,865 --> 00:20:44,665
நாம் போவோம்.

313
00:21:05,185 --> 00:21:06,305
என்னுடன் வா.

314
00:21:13,105 --> 00:21:15,545
இல்லை, இல்லை. தயவுசெய்து இருங்க.

315
00:21:15,625 --> 00:21:17,345
இல்ல, நானும் அவரோடு வரேன்.

316
00:21:17,425 --> 00:21:19,065
-கவலைப்படாதே, ப்ளீஸ்.
-இல்ல.

317
00:21:58,825 --> 00:22:01,545
துரதிர்ஷ்டவசமாக, உங்கள் ஆட்கள்

318
00:22:01,625 --> 00:22:04,825
பேரம் பேச மறுக்கின்றனர்.

319
00:22:32,705 --> 00:22:35,025
1,50,000 டாலர் என்பது சாத்தியமற்ற தொகை.

320
00:22:35,585 --> 00:22:36,545
சாத்தியமற்றதா?

321
00:22:36,905 --> 00:22:38,825
நீங்க செய்ததற்கு.

322
00:22:39,465 --> 00:22:42,865
எனக்கு, 1,00,000 டாலர்கள்
மிகவும் நியாயமானதா இருக்கு.

323
00:22:44,705 --> 00:22:48,265
மற்றவர் பணத்தில் பேரம் பேசுவது
ஜாலியாக இருக்குதானே, மச்சான்?

324
00:22:48,345 --> 00:22:49,425
தெளிவுபடுத்துறேன்.

325
00:22:49,505 --> 00:22:51,745
பயந்து அழுத என் தங்கையை நிர்வாணமாக

326
00:22:51,825 --> 00:22:54,785
போதை ஆசாமிகள் நிறைந்த
இடத்தில் விட்டு வந்ததற்கு

327
00:22:54,865 --> 00:22:56,505
நீ பணம் கொடுக்கலை.

328
00:22:57,025 --> 00:22:59,865
ஆனால் மவாட்டை அடித்ததற்கு
எவ்வளவு என்று சொன்னாய்?

329
00:23:00,665 --> 00:23:01,625
1,00,000 டாலரா?

330
00:23:02,545 --> 00:23:04,745
அதுதான் மன்னிப்பின் விலை.

331
00:23:07,945 --> 00:23:11,065
சரி, அதை வாங்கப் போகிறோம்
என்பதால், நாங்கள்

332
00:23:11,145 --> 00:23:12,625
போனஸுக்கு தகுதியானவர்கள்.

333
00:23:12,705 --> 00:23:14,025
-இல்லையா?
-போனஸா?

334
00:23:15,745 --> 00:23:16,705
என்ன போனஸ்?

335
00:23:16,785 --> 00:23:17,825
இந்த போனஸ்தான்.

336
00:23:20,945 --> 00:23:23,425
-நீ என்ன முட்டாளா?
-ஓடு!

337
00:23:23,505 --> 00:23:24,505
வா!

338
00:23:24,585 --> 00:23:25,745
நாசமா போனவனே.

339
00:23:34,225 --> 00:23:35,105
உள்ளே ஏறு!

340
00:23:55,585 --> 00:23:57,185
லியோ இன்னும் நேரம் இருக்கு.

341
00:23:57,265 --> 00:24:00,465
நம் குடும்பம் ராணுவமா மாறுதா?
ஹியூகோக்கு துப்பாக்கியா?

342
00:24:00,545 --> 00:24:01,705
நேரமானது, கார்மென்.

343
00:24:01,785 --> 00:24:02,945
இல்லை, லியோ...

344
00:24:03,025 --> 00:24:04,105
இல்ல, இல்ல, இல்ல.

345
00:24:04,185 --> 00:24:06,065
உங்களால் சாகப்போறான். ப்ளீஸ்.

346
00:24:06,145 --> 00:24:07,825
துப்பாக்கி ஆஸ்கருக்கு.

347
00:24:07,905 --> 00:24:09,985
அது மோசம். ஹியூகோக்கு அது அவமானம்.

348
00:24:10,065 --> 00:24:12,345
-இதுதான் சரியான நேரம், கார்மென்.
-லியோ.

349
00:24:12,705 --> 00:24:13,905
லியோ, ப்ளீஸ்.

350
00:24:17,385 --> 00:24:19,345
போலீஸ் அமைதியை வர்புறுத்தினாலும்.

351
00:24:24,345 --> 00:24:25,465
இந்தா.

352
00:24:25,545 --> 00:24:27,905
-மவாட்டிடம் போகிறோம்.
-ஐயோ, கடவுளே!

353
00:24:27,985 --> 00:24:28,905
அப்போது நான்?

354
00:24:28,985 --> 00:24:30,065
நீ இங்கயே இரு.

355
00:24:30,145 --> 00:24:31,625
-ஏன்?
-ஏன்னா?

356
00:24:31,705 --> 00:24:33,225
நீ நிறைய சொதப்பிவிட்டாய்.

357
00:24:42,425 --> 00:24:43,345
சாரா.

358
00:24:43,985 --> 00:24:45,025
சாரா!

359
00:24:58,465 --> 00:24:59,745
அவரை கொல்லப்போறாங்க.

360
00:25:27,825 --> 00:25:29,385
இல்ல, காலித் பைத்தியமில்ல.

361
00:25:33,025 --> 00:25:34,385
சுடாதே!

362
00:25:40,225 --> 00:25:42,945
இல்ல, இல்ல, அப்படி இருக்க முடியாது.

363
00:26:15,505 --> 00:26:20,545
அங்கிள் காலித், கொல்லக் கூடியவர் தான்.

364
00:26:36,145 --> 00:26:39,585
நீங்கள் அந்த நிலையை அடையும் போது,
முழுவதுமாகத் தோல்வி தான்.

365
00:26:39,665 --> 00:26:43,465
திட்டங்கள், உத்திகள், பொது அறிவுகூட.

366
00:26:44,065 --> 00:26:45,305
சூடா இருக்குல?

367
00:26:45,905 --> 00:26:47,425
ரொம்ப சூடா இருக்கு தானே?

368
00:26:52,185 --> 00:26:54,345
தண்ணீர் வேணும். தண்ணீர் குடிக்கணும்.

369
00:26:58,545 --> 00:27:00,145
இப்படி வியர்க்க கூடாது.

370
00:27:05,585 --> 00:27:07,745
நான் குளிக்க போறேன், அன்பே.

371
00:27:20,585 --> 00:27:21,665
லியோ!

372
00:27:21,865 --> 00:27:23,105
அப்பா!

373
00:27:23,185 --> 00:27:24,505
-லியோ!
-அப்பா!

374
00:27:24,585 --> 00:27:25,825
-எனக்கு உதவு!
-அப்பா!

375
00:27:25,905 --> 00:27:28,105
பொது அறிவு இல்லாமல் போனால்,

376
00:27:28,185 --> 00:27:29,705
குழப்பம் மட்டுமே மிச்சம்.

377
00:27:30,065 --> 00:27:31,665
மேலும், குழப்பம் வரும்போது,

378
00:27:32,065 --> 00:27:34,905
தவறாக நடக்கக்கூடிய
அனைத்தும் மோசமாகிவிடும்.

379
00:28:01,945 --> 00:28:02,865
அதை நிறுத்து.

380
00:28:18,705 --> 00:28:20,785
இது மாரடைப்பு அல்ல, மக்களே.

381
00:28:21,105 --> 00:28:24,745
மன அழுத்தத்தால்
அவர் சரிந்ததாக நினைக்கிறாங்க.

382
00:28:25,105 --> 00:28:26,745
அவரை பார்க்க உள்ளே போலாமா?

383
00:28:26,825 --> 00:28:27,905
இல்லை. அவர்

384
00:28:27,985 --> 00:28:30,625
விழிக்கும் வரை,
நான் மட்டும்தான் பார்ப்பேன்.

385
00:28:30,705 --> 00:28:31,865
ஓய்வெடுக்கட்டும்.

386
00:28:31,945 --> 00:28:33,465
அவருக்கு மன அமைதி தேவை.

387
00:28:34,425 --> 00:28:36,225
அதுவரை நாங்க என்ன செய்யணும்?

388
00:28:36,305 --> 00:28:38,105
உங்களுக்குள் பேசி, உங்களால்

389
00:28:38,345 --> 00:28:40,105
உண்டான பிரச்சனையை மாற்றுங்க.

390
00:28:40,545 --> 00:28:41,705
மவாட் பிரச்சனையா?

391
00:28:41,785 --> 00:28:43,265
மவாட்டிடம் பேச முடியாது.

392
00:28:43,345 --> 00:28:44,745
அப்போ தீர்வு கண்டுபிடி.

393
00:28:45,425 --> 00:28:48,985
1,50,000 டாலருக்கு பதில்
10 லட்சம் கேட்டால் அது உன் பிரச்சனை.

394
00:28:49,065 --> 00:28:51,465
எப்படியும் ஒருநாள் அது உன் பணமாகிவிடும்.

395
00:28:51,545 --> 00:28:53,945
எதையும் மாற்ற முடியாதென அப்பா சொன்னார்.

396
00:28:55,785 --> 00:28:57,825
ஏதாவது தீர்வு சொல்லு, சாரா.

397
00:28:58,185 --> 00:28:59,545
ப்ளீஸ், இதை சரிசெய்.

398
00:29:00,265 --> 00:29:02,145
-அம்மா, பாருங்க...
-ஹியூகோ.

399
00:29:02,225 --> 00:29:03,665
உன் அப்பா இறக்கலாம்.

400
00:29:04,105 --> 00:29:05,905
நிஜமாவே உனக்கு புரியலயா?

401
00:29:10,345 --> 00:29:11,305
கடவுளே.

402
00:29:14,865 --> 00:29:17,465
10 லட்சம் தந்தாலும்
மவாட் சம்மதிக்க மாட்டார்.

403
00:29:18,385 --> 00:29:20,385
அப்பா மருத்துவமனைல இருக்கும் போது.

404
00:29:20,465 --> 00:29:21,705
ஹியூகோ ஒரு முட்டாள்.

405
00:29:21,785 --> 00:29:24,145
அம்மா சொன்னது போல
இதை சரிசெய்தே ஆகணும்.

406
00:29:24,865 --> 00:29:26,585
எல்லாம் போச்சு, ஆஸ்கர்.

407
00:29:28,185 --> 00:29:29,065
சாரா.

408
00:29:31,185 --> 00:29:32,345
சாரா.

409
00:29:32,705 --> 00:29:34,145
என்ன ஆச்சு?

410
00:29:37,665 --> 00:29:38,665
பரவாயில்லையா?

411
00:29:39,105 --> 00:29:40,785
டாக்டரை கூப்பிடவா?

412
00:29:40,865 --> 00:29:41,985
தேவை இல்லை.

413
00:29:42,065 --> 00:29:43,825
சரி, நாம் இங்கிருப்பதால்.

414
00:29:46,425 --> 00:29:48,065
நான் கர்ப்பமாக இருக்கேன்.

415
00:29:50,665 --> 00:29:51,585
என்ன?

416
00:29:56,185 --> 00:29:57,385
கர்ப்பமாக இருக்கேன்.

417
00:30:00,985 --> 00:30:02,625
நாம விரும்பினது, தானே?

418
00:30:59,385 --> 00:31:01,185
அது எனக்கு கவலையில்ல.

419
00:31:03,025 --> 00:31:05,385
இது சீரியஸான விஷயம்.

420
00:31:06,065 --> 00:31:07,625
சரி.

421
00:31:08,505 --> 00:31:10,025
செய்ய வேண்டியதை செய்.

422
00:31:11,545 --> 00:31:14,345
நேரம் இல்லை, கார்மென். உன் இஷ்டம்.

423
00:31:59,185 --> 00:32:02,065
குழந்தைகள் அதிர்ஷ்டம்
கொண்டு வருவதாக சொல்வாங்களே?

424
00:32:04,425 --> 00:32:07,145
இந்த குடும்பத்தில்,
கைக்குண்டு கொண்டு வரணும்.

425
00:32:11,825 --> 00:32:12,865
கவலைப்படாதே.

426
00:32:13,865 --> 00:32:15,065
எல்லாம் சரியாகும்.

427
00:32:16,305 --> 00:32:17,385
இந்த தடவை அல்ல.

428
00:32:19,345 --> 00:32:21,985
ஹியூகோ வரலைன்னா
ஒப்பந்தம் முடிந்திருக்கும்.

429
00:32:22,065 --> 00:32:23,785
ஹியூகோவை குற்றம் சொல்லாதே.

430
00:32:23,865 --> 00:32:25,825
அவன் கோபப்பட்டால், அது உன் தவறு.

431
00:32:25,905 --> 00:32:27,385
மவாட்டிடம் போனது தப்பு,

432
00:32:27,465 --> 00:32:29,385
இப்போ நியாயப்படுத்த விரும்பறான்.

433
00:32:30,505 --> 00:32:32,825
என்னை குறை கூறுவது
அவனுக்கு நல்லது தானே?

434
00:32:33,785 --> 00:32:35,665
இக்குடும்பத்தில் இது வாடிக்கை.

435
00:32:35,745 --> 00:32:37,185
நியாயப்படுத்துவதற்காக,

436
00:32:37,265 --> 00:32:39,705
சண்டை போட்டு, போட்டி போட்டு, ஏமாற்றுவது.

437
00:32:40,985 --> 00:32:42,185
நீ வெளியேறலாமே?

438
00:32:44,945 --> 00:32:45,825
சாராவுடன்.

439
00:32:46,545 --> 00:32:47,705
சுதந்திரமாக இரு.

440
00:32:48,665 --> 00:32:51,105
ஒரு வீட்டை எடு. பெற்றோராகப் போறீங்க தானே?

441
00:32:51,705 --> 00:32:53,745
வெளியில் இருந்து தொழிலை கவனி.

442
00:32:55,825 --> 00:32:56,945
சாரா ஏற்க மாட்டாள்.

443
00:32:58,585 --> 00:32:59,825
குடும்பம் ஆகிட்டீங்க.

444
00:33:14,825 --> 00:33:16,545
நான் கேட்பது உதவி அல்ல.

445
00:33:17,185 --> 00:33:18,545
இது ஒரு செய்கை.

446
00:33:19,785 --> 00:33:21,745
என்னிடம் இதைக் கேட்க

447
00:33:22,185 --> 00:33:24,985
இவ்வளவு தூரம் வந்தாயா?

448
00:33:25,585 --> 00:33:27,465
உங்களிடம் கேட்கும்
கடைசி விஷயம்.

449
00:33:29,105 --> 00:33:31,625
உங்களுக்கு லியோவை
20 வருடங்களாக தெரியும்.

450
00:33:32,385 --> 00:33:34,985
நீங்க வேண்டிய
போதெல்லாம் அவர் உதவியிருக்கார்.

451
00:33:35,905 --> 00:33:38,025
எனக்கு தெரியும், கார்மென்.

452
00:33:39,225 --> 00:33:40,745
எனில் ஏதாவது செய்யுங்கள்.

453
00:33:42,905 --> 00:33:45,185
காலித் மோசமா நடந்துக்கறான்.

454
00:33:46,145 --> 00:33:47,585
பேச்சை கேட்க மாட்டான்.

455
00:33:47,665 --> 00:33:49,465
லியோ ஆபத்தில்
உள்ளதா சொல்லுங்க.

456
00:33:49,545 --> 00:33:52,145
அவர் மருத்துவமனை அல்லது
என்னை அழைக்கலாம்.

457
00:33:52,225 --> 00:33:54,585
காலித் பெரும் சிக்கல்ல இருக்கான்.

458
00:33:54,665 --> 00:33:57,305
-நான் அப்படி நினைக்கல...
-அவனிடம் சொல்லுங்க.

459
00:33:57,385 --> 00:33:59,705
நண்பன் லியோ
இறக்கக்கூடும் என சொல்லுங்க,

460
00:34:00,665 --> 00:34:01,985
பணய கைதிகளை
விடுவிப்பதே

461
00:34:02,065 --> 00:34:04,425
இவருக்காக அவன் செய்யக்கூடிய கடைசி உதவி.

462
00:34:04,505 --> 00:34:05,585
தயவு செய்யுங்கள்.

463
00:34:09,185 --> 00:34:10,185
தயவு செய்யுங்கள்.

464
00:34:18,265 --> 00:34:19,105
இங்கே பார்.

465
00:34:20,265 --> 00:34:21,865
நாம தூரமா போக வேண்டாம்.

466
00:34:21,945 --> 00:34:24,585
சான்பெட்ரோ அல்கந்தாராவில்
நல்ல வீடுகள் உள்ளன.

467
00:34:24,665 --> 00:34:25,985
துறைமுகத்திற்கு பின்.

468
00:34:26,065 --> 00:34:27,265
இரண்டாவதை பாரு.

469
00:34:28,425 --> 00:34:31,185
-உனக்கு நம் வீடு பிடிக்கலை.
-பிடிச்சிருக்கு.

470
00:34:31,265 --> 00:34:33,225
ஆனால் நம்மீது கவனம் செலுத்தணுமே.

471
00:34:33,265 --> 00:34:34,625
நம் குடும்பம் மீது.

472
00:34:35,145 --> 00:34:37,025
அப்படித்தான் நினைக்கிறேன்.

473
00:34:38,145 --> 00:34:39,785
என்னிடம் ஒரு
திட்டம் இருக்கு.

474
00:34:40,225 --> 00:34:41,385
மவாட்டை நீ ஏமாற்று.

475
00:34:43,265 --> 00:34:44,145
என்ன?

476
00:34:44,745 --> 00:34:46,225
அவன் நம்பிக்கையை பெறணும்.

477
00:34:47,425 --> 00:34:49,305
எங்க குடும்பத்தோடு பழகமாட்டான்.

478
00:34:49,425 --> 00:34:51,185
என் தம்பி, அப்பா, என்னோடு.

479
00:34:51,265 --> 00:34:52,745
எங்க வீரத்தை வெறுப்பான்.

480
00:34:52,905 --> 00:34:54,585
ஆனால் உனக்கு பிரச்சனை இல்லை.

481
00:34:55,905 --> 00:34:57,065
நான் உன் கணவன்.

482
00:34:57,585 --> 00:35:00,105
உனக்கு குடும்பப்பெயர் இல்லை, வரலாறு இல்லை.

483
00:35:00,185 --> 00:35:02,385
அப்பா சொன்ன மாதிரி
நீ ஒரு வெற்று பலகை.

484
00:35:03,105 --> 00:35:05,985
நீ குடும்பத்தின் எதிர்காலம் என
மவாட் அறியட்டும்.

485
00:35:07,305 --> 00:35:08,745
அப்பா சுகவீனமாயிட்டாங்க.

486
00:35:09,225 --> 00:35:11,465
ஹியூகோ ஒரு முட்டாள், நான் ஒரு பெண்.

487
00:35:11,545 --> 00:35:12,985
உன்னை அவனுக்கு தெரியும்.

488
00:35:13,745 --> 00:35:15,945
அனாதை, ஆனால் முன்னேறியிருக்க.

489
00:35:16,265 --> 00:35:17,145
சரி.

490
00:35:17,745 --> 00:35:20,465
நான் முதலாளி ஆகப்போவதால்,
உன் அப்பா அடித்ததை

491
00:35:20,545 --> 00:35:22,305
மறந்துவிட அவனிடம் சொல்லணுமா?

492
00:35:22,425 --> 00:35:23,985
-ஒரு டீல் போடு.
-என்ன டீல்?

493
00:35:24,065 --> 00:35:25,425
சந்தையை பகிர்ந்துகொள்ள.

494
00:35:25,505 --> 00:35:27,025
அவன் என்னை சோதிப்பான்.

495
00:35:27,105 --> 00:35:29,225
குடும்பத்தை காப்பாற்ற இதை செய்.

496
00:35:30,545 --> 00:35:32,665
உன் அப்பாவுக்கு தெரிந்தால், சிக்கல்.

497
00:35:32,745 --> 00:35:34,785
ஹியூகோ படகு விஷயத்தில்
கோபப்பட்டாரே?

498
00:35:34,905 --> 00:35:36,585
யாருக்கும் தெரிய வேண்டாம்.

499
00:35:38,785 --> 00:35:40,425
இது நமக்குள் இருக்கட்டும்.

500
00:35:41,505 --> 00:35:42,625
நமக்கு மட்டும்.

501
00:35:43,265 --> 00:35:44,425
ஒரு குழுவாக.

502
00:35:47,745 --> 00:35:49,585
நீயும் மவாட்டை பார்க்க வரலாமே.

503
00:35:50,465 --> 00:35:51,905
நான் லியோவின் மகள்.

504
00:35:52,385 --> 00:35:53,665
அரபு உலகில், இது ஒரு

505
00:35:53,745 --> 00:35:55,265
குலத்தோடு இணைந்திருப்பது.

506
00:35:57,385 --> 00:35:58,745
நீ துரோகியா இருக்கலாம்.

507
00:36:04,985 --> 00:36:05,905
சரி.

508
00:36:07,705 --> 00:36:09,865
ஒரு அணியாக, சுதந்திரமாக இருக்கணும்.

509
00:36:10,665 --> 00:36:12,025
நம் வீடு துவங்கி.

510
00:36:18,025 --> 00:36:19,265
நீ தேர்ந்தெடு.

511
00:36:44,105 --> 00:36:45,265
ஹே...

512
00:36:46,625 --> 00:36:47,745
ஹாய்.

513
00:36:48,305 --> 00:36:49,505
எப்படி இருக்கீங்க?

514
00:36:50,265 --> 00:36:52,185
-சரி.
-சரியா?

515
00:36:53,785 --> 00:36:55,305
எவ்வளவு நாளா இருக்கேன்?

516
00:36:55,905 --> 00:36:57,265
நான்கு நாட்கள்.

517
00:37:01,425 --> 00:37:03,745
அவர்கள் எனக்கு என்னத்தை கொடுத்தாங்க?

518
00:37:03,865 --> 00:37:06,225
ஒரு ரயில் என் மீது
மோதியது போல இருக்கு.

519
00:37:06,265 --> 00:37:07,385
உடம்பு சரியில்லை.

520
00:37:07,465 --> 00:37:09,305
நிறைய மயக்க மருந்து
கொடுத்தாங்க.

521
00:37:12,105 --> 00:37:13,905
-அந்த இரத்த விஷயமாகவா?
-இல்லை.

522
00:37:13,985 --> 00:37:15,745
புற்றுநோய் பிரச்சனையில்லை.

523
00:37:16,385 --> 00:37:19,505
பதட்டத்தோடு இருந்தால்
மனஅழுத்தம் அதைத் தூண்டிவிடும்.

524
00:37:19,985 --> 00:37:21,145
ஹே, ஹே, ஹே.

525
00:37:21,225 --> 00:37:22,585
-எங்கே போறீங்க?
-நான்...

526
00:37:22,665 --> 00:37:24,745
-கைகால் நீட்டணும்.
-இல்ல, தேவையில்லை.

527
00:37:24,865 --> 00:37:27,585
டாக்டர் வரும் வரை அப்படியே படுங்கள்.

528
00:37:27,945 --> 00:37:29,785
எங்களை ரொம்ப பயமுறுத்திட்டீங்க.

529
00:37:29,905 --> 00:37:31,425
அமைதியாக இருங்க, சரியா?

530
00:37:31,505 --> 00:37:33,305
அல்லது என்னையும் சேர்க்கணும்.

531
00:37:40,185 --> 00:37:41,465
மவாட் பற்றி தகவல்?

532
00:37:43,665 --> 00:37:45,505
ஒரு செய்தியும் இல்ல.

533
00:37:49,425 --> 00:37:50,265
காலித் பற்றி?

534
00:37:51,465 --> 00:37:52,945
தெரியல.

535
00:37:59,265 --> 00:38:01,145
சரியாகிவிட்டது போல
கனவு கண்டேன்.

536
00:38:03,745 --> 00:38:05,505
எனக்கு உதவியது யார் தெரியுமா?

537
00:38:07,705 --> 00:38:09,025
சி.ஐ.ஏ.

538
00:38:09,105 --> 00:38:10,265
சி.ஐ.ஏ வா

539
00:38:11,025 --> 00:38:12,265
அல்லது ஜீனாவா?

540
00:38:15,665 --> 00:38:18,145
அவர்கள் மவாட்டை கட்டுப்படுத்த முடியும்.

541
00:38:20,225 --> 00:38:21,625
ஹே, அவளைப் பாருங்க.

542
00:38:21,705 --> 00:38:22,705
அப்பா.

543
00:38:24,025 --> 00:38:25,145
செல்லமே.

544
00:38:25,505 --> 00:38:27,105
உங்களை பார்ப்பது சந்தோஷம்.

545
00:38:29,905 --> 00:38:31,265
அருமை.

546
00:38:31,865 --> 00:38:33,745
-எப்படி இருக்கீங்க?
-நலம்.

547
00:38:34,425 --> 00:38:36,185
எங்களை பயமுறுத்திட்டீங்க.

548
00:38:36,905 --> 00:38:39,105
-உன் உடன்பிறப்புகள்?
-நலம் தான்.

549
00:38:39,945 --> 00:38:41,265
எல்லாம் சரியாகிவிடும்.

550
00:38:41,745 --> 00:38:43,265
காபி குடிக்கப் போகிறேன்.

551
00:38:43,305 --> 00:38:44,905
-சரி அம்மா.
-படுத்திருங்க.

552
00:38:52,105 --> 00:38:53,265
சொல்வதை கேளு.

553
00:38:54,985 --> 00:38:56,745
வேலையை பற்றி பேச வேண்டாம்.

554
00:38:56,785 --> 00:38:58,185
ஒரு திட்டம் இருக்கு.

555
00:38:58,265 --> 00:38:59,265
அப்படியா?

556
00:39:00,945 --> 00:39:02,265
கவலைப்படாதீங்க, அப்பா.

557
00:39:03,025 --> 00:39:04,745
ஆஸ்கரும் நானுமே சரிசெய்வோம்.

558
00:39:07,305 --> 00:39:08,465
என்னை நம்புங்க.

559
00:39:35,105 --> 00:39:35,945
இங்கே வா.

560
00:39:36,745 --> 00:39:37,625
சீக்கிரம்!

561
00:39:38,585 --> 00:39:40,305
நேராகப் பாரு. சரி.

562
00:39:40,745 --> 00:39:42,145
-ஆயுதம் இருக்கா?
-இல்ல.

563
00:39:42,225 --> 00:39:43,465
அவன் காலை சோதனை செய்.

564
00:39:44,545 --> 00:39:45,585
கைரோ?

565
00:39:46,665 --> 00:39:48,545
எகிப்து அரசுடன் பேசுகிறோம்.

566
00:39:48,625 --> 00:39:50,705
நான் எகிப்துக்கு போகும்படி கேட்கலை.

567
00:39:51,105 --> 00:39:54,585
இஸ்ரேலிய அரசாங்கம் பி.எல்.எஃப் உடனான
ஒப்பந்தத்தை மறுக்கிறது.

568
00:39:54,665 --> 00:39:56,225
இந்த நிலைமை மென்மையானது.

569
00:39:56,985 --> 00:39:58,665
இனி யாரும் கொல்லப்படக்கூடாது

570
00:39:58,745 --> 00:40:01,225
அதனால்தான் ஒரு இடைநிலை
தீர்வை வழங்குகிறோம்.

571
00:40:01,265 --> 00:40:03,745
எனக்கு இடைநிலை தீர்வுகள் வேண்டாம்.

572
00:40:09,505 --> 00:40:11,785
அனைத்து உத்தரவாதங்களுடன் ஒரு விமானம்.

573
00:40:12,465 --> 00:40:15,305
இஸ்தான்புல்லுக்கு போ,
துருக்கி அரசு உன்னை

574
00:40:15,425 --> 00:40:17,425
எந்த நாட்டுக்கும்
அனுப்பி வைக்கும்.

575
00:40:17,505 --> 00:40:21,145
ஓடிப்போவதற்காக இதையெல்லாம் செய்தோம்
என்று நினைத்தாயா?

576
00:40:22,425 --> 00:40:24,225
எதற்காக செய்தாய் என தெரியும்.

577
00:40:24,905 --> 00:40:27,385
இஸ்ரேலிய சிறை நண்பர்களுக்கு உதவ விரும்புற,

578
00:40:27,865 --> 00:40:29,385
ஆனா நடைமுறையை அறியணும்.

579
00:40:29,665 --> 00:40:32,865
அந்த விமானத்தை தப்பிக்க
எடுத்து சென்று, அவர்களுக்கு

580
00:40:32,945 --> 00:40:35,745
உதவ மற்றொரு உத்தியை
கண்டுபிடிப்பதுதான் ஒரே வழி.

581
00:40:36,265 --> 00:40:38,785
அல்லது சிறையில் சேர வேண்டும்.

582
00:40:42,745 --> 00:40:44,545
ஒரு முஸாபில்
சிறைக்கு போவதில்ல.

583
00:40:45,265 --> 00:40:46,265
ஏனென்று தெரியுமா?

584
00:40:49,465 --> 00:40:51,865
ஏற்கனவே தான் இறந்துவிட்டதாக நினைப்பான்.

585
00:40:57,465 --> 00:40:59,225
அது இஸ்ரேலின் வெற்றியாகிடும்.

586
00:40:59,785 --> 00:41:01,305
அதுவா வேண்டும் உனக்கு?

587
00:41:01,945 --> 00:41:04,105
இது உம் விருப்பம், திரு. காலித்.

588
00:41:05,265 --> 00:41:06,265
எனக்கு புரியலை.

589
00:41:07,705 --> 00:41:09,305
சுற்றுலா பயணிகள் அதிகம்.

590
00:41:10,305 --> 00:41:14,185
பால்கனியில் இருந்து கீழே எறிய
ஆசைப்படுறாயா?

591
00:41:14,625 --> 00:41:16,105
அப்படிச் செய்தால்,

592
00:41:16,865 --> 00:41:18,505
உலகமே உன்னை கண்டிக்கும்.

593
00:41:18,585 --> 00:41:20,905
அது பாலஸ்தீனத்திற்கு நல்லதல்ல.

594
00:42:05,065 --> 00:42:07,185
பரவாயில்ல, ஜெரோம், பரவாயில்ல.

595
00:42:16,665 --> 00:42:18,545
அவன் வரட்டும்.

596
00:42:24,225 --> 00:42:25,265
நாம் பேசலாமா?

597
00:42:26,265 --> 00:42:29,105
நம்பிக்கையற்று இருப்பதால்
உன்னை அனுப்புறாங்களா?

598
00:42:30,145 --> 00:42:31,265
யாரும் அனுப்பலை.

599
00:42:59,065 --> 00:43:00,425
ஹலோ?

600
00:43:00,865 --> 00:43:03,225
-இறக்கும் தருவாயில் இல்லை போலயே.
-காலித்.

601
00:43:03,265 --> 00:43:05,025
என்னை சமாதானப்படுத்துவதற்காக,

602
00:43:05,465 --> 00:43:07,505
நீ மோசமமான நிலையில் உள்ளதா

603
00:43:07,585 --> 00:43:09,145
மான்ஸரிடம் கூறினாங்க போல.

604
00:43:09,225 --> 00:43:10,305
இல்லை, சகோதரா.

605
00:43:10,425 --> 00:43:12,745
நான் சிக்கல்ல இருக்கேன். சொல்வதை கேள்,

606
00:43:12,865 --> 00:43:14,785
நீ அந்த மக்கள விடுவிக்கணும்.

607
00:43:14,905 --> 00:43:17,105
அவங்க பேச்சுவார்த்தைக்கு வரலை, லியோ.

608
00:43:17,625 --> 00:43:19,385
கொன்றாலும் கண்டுக்க
மாட்டாங்க.

609
00:43:19,465 --> 00:43:21,065
ப்ளீஸ், அப்படி செய்யாதே.

610
00:43:22,465 --> 00:43:25,505
அது என் கையில் இல்ல.
இடம்பெயர்ந்த, வெளியேற்றப்பட்ட,

611
00:43:25,585 --> 00:43:27,185
பாலஸ்தீனர்களிடம் இருக்கு.

612
00:43:27,265 --> 00:43:29,225
இல்ல, காலித். நீயே முடிவெடு.

613
00:43:29,305 --> 00:43:31,025
நீ ஈடுபட முடிவு செய்தாய்.

614
00:43:31,105 --> 00:43:32,105
நீ இதை செய்த.

615
00:43:32,425 --> 00:43:34,185
இதை என் கடமையாகக் கருதினேன்.

616
00:43:34,265 --> 00:43:37,665
காலித், நீ பைத்தியம் இல்லை, நீ ஒரு போராளி.

617
00:43:37,745 --> 00:43:39,985
இது ஒரு பணி, உயிர்த் துறப்பல்ல.

618
00:43:40,065 --> 00:43:42,225
அது தவறானால், பின்வாங்கி விடணும்.

619
00:43:42,905 --> 00:43:43,865
தெரியுமா, லியோ?

620
00:43:45,945 --> 00:43:49,425
இங்க ஐந்து நாட்களா இருக்கேன்,
ஆதரிக்க யாரும் முன்வரலை.

621
00:43:51,985 --> 00:43:55,105
உதவி மட்டுமே கேட்கிறாங்க.

622
00:43:55,185 --> 00:43:56,945
காலித்...

623
00:43:57,025 --> 00:43:58,585
உன்ன நிந்திக்கல, லியோ.

624
00:43:59,185 --> 00:44:00,625
நீ மருத்துவமனைல இருக்க.

625
00:44:01,185 --> 00:44:03,985
ஆனால் எனக்கு இருக்கும்
எல்லா நண்பர்களில்...

626
00:44:05,785 --> 00:44:06,825
ஒருவருமில்லை.

627
00:44:11,905 --> 00:44:13,385
இது விசித்திரமான காலம்.

628
00:44:14,225 --> 00:44:16,545
துரோகிகள் மற்றும் நயவஞ்சகர்களின் காலம்.

629
00:44:18,145 --> 00:44:19,465
ஒன்று சொல்லவா, லியோ?

630
00:44:20,465 --> 00:44:22,185
நான் துரோகியும் அல்ல,

631
00:44:23,585 --> 00:44:25,025
நயவஞ்சகனும் அல்ல.

632
00:44:25,785 --> 00:44:27,305
நீ வெறியனும் அல்ல.

633
00:44:48,025 --> 00:44:49,745
லியோ மருத்துவமனையில் உள்ளார்.

634
00:44:50,465 --> 00:44:53,305
இப்போரின் போது இறந்தால்
ஹியூகோவை தடுக்க முடியாது.

635
00:44:54,705 --> 00:44:56,625
-அவன் அறிவில்லாதவன்.
-ஆம்.

636
00:44:57,145 --> 00:44:58,185
அறிவில்லாதவன்.

637
00:44:58,865 --> 00:45:01,105
அவன் துப்பாக்கி ஏந்திய குருடன் போல.

638
00:45:01,185 --> 00:45:03,185
தொழிலை மரபுரிமையாக பெறலாம்.

639
00:45:03,945 --> 00:45:06,505
அவர்களிடம் நீங்கள் பத்து, இருபது அல்லது

640
00:45:06,585 --> 00:45:08,225
ஐம்பது லட்சம் கேட்கலாம்.

641
00:45:08,665 --> 00:45:10,185
அவங்க மானம் தான் போகும்.

642
00:45:12,145 --> 00:45:14,705
இவை அனைத்திலும் நீ யாருடைய பிரதிநிதி?

643
00:45:16,465 --> 00:45:17,665
சாராவா?

644
00:45:18,065 --> 00:45:19,465
எனக்காக பேசுகிறேன்.

645
00:45:20,225 --> 00:45:21,585
மேலும் நீ யார்?

646
00:45:21,665 --> 00:45:24,625
மாட்ரிட்டில் உள்ள
ஏரோபிக்ஸ் பயிற்சியாளரா?

647
00:45:28,145 --> 00:45:29,265
நான் உங்க கூட்டாளி.

648
00:45:34,145 --> 00:45:35,945
எனக்கு கூட்டாளிகள் தேவையில்லை.

649
00:45:38,905 --> 00:45:40,985
அடுத்த முறை ஈரானியன்
உதவாமல் போனால்

650
00:45:41,065 --> 00:45:43,185
அவனது வேலையை நான் செய்யலாமே?

651
00:45:43,585 --> 00:45:45,385
நபால்முக்காக சண்டையிடாமல்,

652
00:45:45,465 --> 00:45:47,225
லாபத்தை பிரித்துக்கொள்ளலாம்.

653
00:45:48,585 --> 00:45:50,585
உனக்கு அந்த அளவு சக்தி இல்லை.

654
00:45:51,305 --> 00:45:52,745
நீங்க எனக்கு உதவினால்

655
00:45:53,265 --> 00:45:54,425
எனக்கு கிடைக்கும்.

656
00:46:13,305 --> 00:46:15,545
நான் சொல்லும் நபர்கள் என்னுடன் வரணும்.

657
00:46:16,465 --> 00:46:17,985
ரோசானா லோபெஸ்.

658
00:46:20,025 --> 00:46:20,905
அதோ.

659
00:46:21,985 --> 00:46:24,025
கிரிகோரியா அலோன்ஸோ.

660
00:46:26,985 --> 00:46:27,985
போ.

661
00:46:28,905 --> 00:46:29,785
நகரு!

662
00:46:31,545 --> 00:46:32,985
ரூபென் நோட்டாரியோ.

663
00:46:35,345 --> 00:46:37,185
இதோ. போ.

664
00:46:38,665 --> 00:46:40,145
ஜான் வாரெலாஸ்.

665
00:46:47,425 --> 00:46:50,625
பணயக்கைதிகளை படிப்படியாக விடுவிக்க

666
00:46:50,705 --> 00:46:53,385
உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

667
00:46:53,465 --> 00:46:56,145
மத்திய கிழக்கிற்கு போகும் முன்,

668
00:46:56,225 --> 00:47:00,625
கடத்தல்காரர்கள்
ஸ்பானிஷ் குடும்பங்களை விடுவித்தனர்.

669
00:47:01,185 --> 00:47:03,025
பேச்சுவார்த்தையின் விவரங்கள்

670
00:47:03,105 --> 00:47:05,625
இன்னும் சில மணிநேரங்களில் வெளியிடப்படும்.

671
00:47:05,705 --> 00:47:08,465
வாஷிங்டனில், பி.எஃப்.எல்.பி
பயங்கரவாதிகளுக்கு

672
00:47:08,545 --> 00:47:11,105
விலக்கு அளிக்கும் ஒப்பந்தத்தை
வெள்ளை மாளிகை

673
00:47:11,185 --> 00:47:13,825
ஏற்றுக் கொள்ள போவதில்லை
என்று அறிவித்துள்ளது.

674
00:47:36,585 --> 00:47:38,185
பாருங்க, அதோ வந்துவிட்டனர்.

675
00:47:42,585 --> 00:47:43,985
என் செல்ல மகள்.

676
00:47:45,345 --> 00:47:46,465
டான்யா!

677
00:47:47,505 --> 00:47:50,185
-அவர் பலவீனமாகவே இருக்கிறார்.
-என் அன்பே.

678
00:47:50,265 --> 00:47:51,545
எப்படி இருக்கீங்க?

679
00:47:51,625 --> 00:47:54,585
ஏன் கைகுலுக்குகிறாய்? முத்தம் கொடு.

680
00:47:55,385 --> 00:47:56,545
அழகன்.

681
00:47:57,145 --> 00:47:58,705
டிஸ்சார்ஜ் ஆனது மகிழ்ச்சி.

682
00:47:58,785 --> 00:48:00,065
நானும் தான், அன்பே.

683
00:48:03,065 --> 00:48:04,185
நலமா லியோ?

684
00:48:05,425 --> 00:48:07,105
மவாட்டுடனான டீல் பற்றி

685
00:48:07,665 --> 00:48:09,185
கார்மென் சொன்னாள்.

686
00:48:09,625 --> 00:48:10,665
50,000 டாலர்கள்.

687
00:48:11,465 --> 00:48:14,145
அடையாள பூர்வமானது,
எனவே விஷயத்தை மறக்கலாம்.

688
00:48:14,225 --> 00:48:15,905
-மவாட் மறக்கமாட்டான்.
-அப்பா.

689
00:48:15,985 --> 00:48:18,745
இனி மனஸ்தாபம் ஏற்படாமல்
தவிர்க்கணும்.

690
00:48:19,185 --> 00:48:20,625
எப்படி தவிர்ப்பது?

691
00:48:21,265 --> 00:48:24,145
என்னை அனுமதித்தால்,
நான் இடைத்தரகராக முடியும்.

692
00:48:24,265 --> 00:48:26,025
நான் அவரோடு
காபி குடிக்கிறேன்,

693
00:48:26,105 --> 00:48:27,825
அதில் எனக்கு பிரச்சனை இல்லை.

694
00:48:27,905 --> 00:48:29,985
மவாட்டுடன் நேரடி தடமாக இருப்பான்.

695
00:48:30,065 --> 00:48:31,465
நமக்கு வேறு வழியில்லை.

696
00:48:32,745 --> 00:48:34,625
சரி, அதை மட்டுமே செய்.

697
00:48:35,185 --> 00:48:36,225
என்ன பிரச்சனை?

698
00:48:36,305 --> 00:48:37,585
என்னை நம்ப முடியலையா?

699
00:48:38,785 --> 00:48:40,265
ஏன் உன்னை நம்ப மாட்டார்?

700
00:48:40,345 --> 00:48:42,545
முதல் பேரக்குழந்தையை தர போகிறாய்.

701
00:48:45,625 --> 00:48:47,625
-என்ன?
-ஆமாம்.

702
00:48:48,305 --> 00:48:49,345
நிஜமாவா?

703
00:48:51,345 --> 00:48:52,905
அற்புதம்!

704
00:48:53,945 --> 00:48:55,305
மாமியாரே.

705
00:49:00,785 --> 00:49:02,665
அழத் தொடங்க வேண்டாம், சரியா?

706
00:49:02,745 --> 00:49:04,745
இன்றிரவு டான் கார்லோஸில் டின்னர்.

707
00:49:04,825 --> 00:49:06,945
இதைக் கொண்டாட. என்னுடைய விருந்து.

708
00:49:07,865 --> 00:49:08,745
ஹியூகோ.

709
00:51:22,305 --> 00:51:24,305
வசனங்கள் மொழிபெயர்ப்பு
மேனகா மணிகண்டன்

710
00:51:24,385 --> 00:51:26,385
படைப்பு மேற்பார்வையாளர்
கால்வின் மைக்கேல் ஆதாம்

