1
00:00:09,345 --> 00:00:11,105
இது கலிஃபோர்னியா அல்ல.

2
00:00:12,625 --> 00:00:14,545
இது நியூ யார்க் அல்ல.

3
00:00:16,065 --> 00:00:17,345
இது லண்டன் அல்ல.

4
00:00:18,825 --> 00:00:20,625
இது மார்பெல்லா.

5
00:00:25,105 --> 00:00:27,905
ஒருவழியாக காஸ்டா டெல் சாலுக்கு
ஏரோபிக்ஸ் வந்தது.

6
00:00:29,225 --> 00:00:30,745
உடலை கவனிக்க முடியலையா?

7
00:00:30,825 --> 00:00:32,705
பளு தூக்கி சிரமப்படுகிறீர்களா?

8
00:00:34,065 --> 00:00:39,185
தனியாக உடற்பயிற்சி செய்து
எந்த பலனும் இல்லையா?

9
00:00:39,625 --> 00:00:42,305
இதோ வந்துவிட்டது மொத்த பயிற்சியும்.

10
00:00:43,265 --> 00:00:45,865
ஸ்பெயினின் முக்கிய இடத்தில் அமைந்துள்ள,

11
00:00:45,945 --> 00:00:50,025
மிகச் சிறந்த உடற்பயிற்சி கூடமான
காண்டோங்கா கிளப்பிற்கு வரவேற்கிறோம்.

12
00:00:50,105 --> 00:00:54,185
மகிழ்ச்சியாக பயிற்சி செய்து
உங்கள் தன்னம்பிக்கையை புதுப்பியுங்கள்.

13
00:00:54,865 --> 00:00:55,865
இன்றிலிருந்து,

14
00:00:55,945 --> 00:00:58,465
புயெர்த்தோ பானூஸில் முன்பதிவு உண்டு.

15
00:00:59,545 --> 00:01:01,465
காண்டோங்கா கிளப்பில் இணையுங்கள்!

16
00:01:03,425 --> 00:01:04,385
கட்!

17
00:01:06,225 --> 00:01:10,265
லோஸ் ஃபராத்

18
00:01:54,465 --> 00:01:56,585
இங்கே என்ன செய்றாள்? என்ன சொன்னேன்?

19
00:01:56,665 --> 00:01:58,385
பணம் கட்டாமல் பதிவு கிடையாது.

20
00:02:00,425 --> 00:02:01,425
நேரம் முடிந்தது.

21
00:02:01,985 --> 00:02:03,585
-என்ன?
-பணம் கொடுக்காததால்.

22
00:02:03,665 --> 00:02:05,225
காலை வரை அவகாசம் சொன்னேனே.

23
00:02:05,305 --> 00:02:06,625
என் மேலாளர் கட்டினாரே.

24
00:02:06,705 --> 00:02:08,145
கபி, ஜே யிடம் பேசினாயா?

25
00:02:08,225 --> 00:02:09,825
ஆம். பணத்தை கட்டிவிட்டார்.

26
00:02:09,905 --> 00:02:11,705
அடச்சே, அவரை அழை.

27
00:02:11,785 --> 00:02:13,945
டான்யா, ஸ்டுடியோவை காலி பண்ணுங்க.

28
00:02:14,025 --> 00:02:15,705
சத்தியமாக பணம் கட்டியாச்சு.

29
00:02:15,785 --> 00:02:17,465
8 மணிநேர பதிவுக்கு பணம் தரணும்.

30
00:02:17,545 --> 00:02:18,705
இல்லை, ஐந்து தான்.

31
00:02:18,825 --> 00:02:20,545
போன மாத மூன்று மணிநேரம்?

32
00:02:24,265 --> 00:02:26,185
இந்த வீணாய் போனவள்.

33
00:02:28,705 --> 00:02:31,065
இதை முடிக்கலாம் பிறகு சொந்த பணம் தரேன்.

34
00:02:31,545 --> 00:02:32,545
இது பார் இல்ல.

35
00:02:32,625 --> 00:02:34,505
வெறும் ஒரு பாடல் தான்.

36
00:02:34,545 --> 00:02:35,985
எனக்கு செலவு அதிகம்.

37
00:02:36,945 --> 00:02:38,705
80,000 பெசெட்டாஸ் வேணும் தானே?

38
00:02:38,825 --> 00:02:41,345
கவலைப்படாதே, இப்போதே அதை கொண்டு வரேன்.

39
00:02:41,425 --> 00:02:42,345
மற்றவங்க போங்க.

40
00:02:42,425 --> 00:02:44,825
இல்லை, நான் வரும் வரை இருப்பாங்க.

41
00:02:44,905 --> 00:02:46,065
இங்கேயே இருங்கள்.

42
00:02:48,265 --> 00:02:49,265
அவன் பதிலளிக்கலை.

43
00:02:49,345 --> 00:02:51,305
ஆம். என்னை வீட்டிற்கு அழைத்து போ.

44
00:03:51,905 --> 00:03:55,065
தற்போதைய நிலை
நாள்பட்ட எலும்பு மச்சை புற்றுநோய்

45
00:04:10,145 --> 00:04:12,345
அவைகள் விழித்திருப்பது போல தெரியலை.

46
00:04:12,425 --> 00:04:13,905
இப்போதுதான் சாப்பிட்டது.

47
00:04:13,985 --> 00:04:16,905
-மிஞ்சியது எனக்கு வேணாம்.
-புகார் ஏதும் உள்ளதா?

48
00:04:16,985 --> 00:04:18,585
கண்புரை உள்ளதை தந்தாய்.

49
00:04:18,665 --> 00:04:20,905
அது கண்புரையல்ல, உங்களை பயமுறுத்தினர்.

50
00:04:23,265 --> 00:04:25,585
எனக்கு கிடைத்ததிலே இதுதான் சிறந்தது.

51
00:04:25,665 --> 00:04:27,105
அடுத்த மாதம் புலி வருது.

52
00:04:27,185 --> 00:04:29,305
-புலியா?
-சர்க்கஸில் இருந்தது.

53
00:04:29,345 --> 00:04:31,265
எனக்கு இப்போது தேவை, குரோ.

54
00:04:31,345 --> 00:04:33,025
அப்போ ஒன்றைத் தேர்ந்தெடுங்க.

55
00:04:37,465 --> 00:04:39,225
லியோ! உங்க மனைவி!

56
00:04:41,705 --> 00:04:44,545
இந்த அறிக்கைகளை
அவள் எப்படி கண்டுப்பிடித்தாள்?

57
00:04:44,625 --> 00:04:46,705
உங்க மனதில் பல விஷயங்கள் ஓடும்.

58
00:04:46,785 --> 00:04:49,625
நோய் சம்பந்தமானதை
அலுவலகத்தில் வைக்கச் சொன்னேன்.

59
00:04:49,705 --> 00:04:51,985
அடச்சே. இப்போது என்ன செய்வது?

60
00:04:52,025 --> 00:04:53,785
பேசுங்க. அவளிடம் பேசுங்க.

61
00:04:53,865 --> 00:04:55,545
எப்போது அவளிடம் பேசுவது?

62
00:04:55,625 --> 00:04:57,705
மான்ஸர் வரான்.
ஏற்பாடுகள் செய்யணும்.

63
00:04:57,785 --> 00:05:00,985
அப்படியென்றால், நான்
மாட்ரிட்டுக்கு போறேன்.

64
00:05:01,345 --> 00:05:02,825
சாரா, ஹியூகோ கூட போ.

65
00:05:05,785 --> 00:05:06,785
சண்டையிட போறாங்க.

66
00:05:06,865 --> 00:05:09,425
பரவாயில்லை.
இந்த உயிலைக் காட்டு அது போதும்.

67
00:05:09,905 --> 00:05:13,145
அப்போ, சாரா உங்களுடன்
வேட்டையாட வர மாட்டாள்.

68
00:05:13,225 --> 00:05:15,105
பரவாயில்லை, ஆஸ்கரோடு போகிறேன்.

69
00:05:16,625 --> 00:05:17,985
அவர்களிடம் என்ன சொல்ல?

70
00:05:20,625 --> 00:05:21,865
குணமாகிவிட்டேன் என.

71
00:05:22,665 --> 00:05:24,025
லியோ...

72
00:05:24,105 --> 00:05:26,745
வேறு எதையாவது சொன்னால், அது பிரச்சனை தான்.

73
00:05:26,825 --> 00:05:29,145
அவர்களிடம் பேசு, நீ அதில் வல்லவள்.

74
00:05:29,225 --> 00:05:31,385
நான் வந்ததும், குடும்பமாக இணைவோம்.

75
00:05:32,385 --> 00:05:34,025
என்ன செய்வேன் தெரியுமா?

76
00:05:35,225 --> 00:05:36,585
பொட்டையை வச்சிக்கிறேன்.

77
00:05:44,265 --> 00:05:45,865
மாட்ரிட்டா? எப்போது வரை?

78
00:05:45,985 --> 00:05:46,905
தெரியலை.

79
00:05:47,705 --> 00:05:50,465
டான்யாவின் நெருக்கடி தீரும் காலம்,
இரண்டு நாள்.

80
00:05:50,545 --> 00:05:52,865
உன் அப்பாவுடனான வேட்டை பயணம் என்ன ஆனது?

81
00:05:52,945 --> 00:05:54,065
நீ அவரோடு போ.

82
00:05:54,145 --> 00:05:56,145
அப்படியே அவரோடு நெருக்கமாகலாம்.

83
00:05:56,225 --> 00:05:58,905
அதற்காக நான் வேட்டைக்குச்
செல்லத் தேவையில்லை.

84
00:06:08,025 --> 00:06:09,625
அப்பா ஒரு புற்று நோயாளி.

85
00:06:16,505 --> 00:06:18,065
என் தங்கைக்கு தெரியாது.

86
00:06:19,145 --> 00:06:20,705
எனவே மாட்ரிடுக்கு போறோம்.

87
00:06:25,825 --> 00:06:26,865
அவர் பிழைப்பாரா?

88
00:06:27,785 --> 00:06:28,985
இரத்த புற்றுநோய்.

89
00:06:29,905 --> 00:06:33,785
இது நாள்பட்டதாகத் தெரிகிறது,
எனவே 20 ஆண்டுகள் கூட நீடிக்கலாம்.

90
00:06:35,745 --> 00:06:37,065
இருபது ஆண்டுகள்,

91
00:06:38,265 --> 00:06:39,185
அல்ல ஒரு மாதம்.

92
00:06:42,185 --> 00:06:43,905
அவரும் மாட்ரிடுக்கு போகலாமே?

93
00:06:44,865 --> 00:06:46,505
வேட்டை பயணம் முக்கியமானது.

94
00:06:48,545 --> 00:06:50,065
அவரது கூட்டாளி வரார்.

95
00:06:50,945 --> 00:06:51,945
மான்ஸர் அல் அசாத்

96
00:06:52,425 --> 00:06:54,305
ஒரு ஒப்பந்தம் நடந்து முடியும்.

97
00:06:54,385 --> 00:06:55,865
பிறகு நான் ஏன் போகணும்?

98
00:06:55,945 --> 00:06:57,385
அவரது மூட்டையை தூக்கவா?

99
00:06:57,465 --> 00:06:58,865
அவர் சொன்னால், செய்.

100
00:07:02,225 --> 00:07:03,865
பெரிய ஆட்களை சந்திப்பீங்க,

101
00:07:04,345 --> 00:07:05,585
வேலை தருகின்றவர்கள்.

102
00:07:06,465 --> 00:07:09,545
நீங்க அங்கு போனால் தான்,
அவங்க உங்களை பார்ப்பாங்க.

103
00:07:12,105 --> 00:07:13,545
நபால்ம் நன்றாக இருந்தது,

104
00:07:14,305 --> 00:07:15,625
வேட்டையாட போகையில்,

105
00:07:15,705 --> 00:07:19,425
நம் கூட்டாளியைப் பற்றி நன்கு
அறிய முடியும் என்று அப்பா சொல்வார்.

106
00:07:25,265 --> 00:07:26,345
உன் காதலன்?

107
00:07:26,665 --> 00:07:27,905
அப்பாவுடன் போகிறான்.

108
00:07:29,585 --> 00:07:30,745
என்ன சொல்கிறாய்?

109
00:07:32,305 --> 00:07:33,625
நிஜமாகவா?

110
00:07:34,385 --> 00:07:36,425
ஆஸ்கருக்கு இதில் சம்பந்தம் இல்லை.

111
00:07:53,625 --> 00:07:57,225
சால்வாட் மருந்து

112
00:07:57,345 --> 00:07:58,585
இரத்தப் புற்றுநோய்

113
00:08:19,065 --> 00:08:19,945
அது என்னது?

114
00:08:22,585 --> 00:08:24,905
-300 கிலோ இடை சிங்கம்.
-அடச்சே.

115
00:08:25,865 --> 00:08:27,505
இந்த ஊசியை வைத்து நான்

116
00:08:28,385 --> 00:08:32,065
ஆம்ஃபிடமினை செலுத்தப் போகிறேன்.

117
00:08:32,145 --> 00:08:33,345
எதற்காக?

118
00:08:33,385 --> 00:08:34,705
அதை தூண்டி விட.

119
00:08:35,865 --> 00:08:37,465
ஆம்ஃபிடமின் தரப் போறீங்களா?

120
00:08:37,545 --> 00:08:40,945
ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை,
அப்போது அது தலைக்கேறி,

121
00:08:40,985 --> 00:08:42,865
நாளை, முரட்டுதனாமாக இருக்கும்.

122
00:08:42,985 --> 00:08:45,825
-நல்ல யோசனை.
-என் மகள் உன்னிடம் சொல்லவில்லையா?

123
00:08:45,865 --> 00:08:47,185
என்ன சொல்லவில்லையா?

124
00:08:47,745 --> 00:08:49,825
சிங்கமும் நம்மோட வேட்டைக்கு வருவதை.

125
00:08:50,825 --> 00:08:53,345
இதோ. அதன் பின்புறத்தில் சுடு.

126
00:08:54,305 --> 00:08:55,145
என்ன?

127
00:08:55,225 --> 00:08:57,345
அதனுடைய பின்புறத்தில் சுடு.

128
00:08:58,425 --> 00:09:00,265
துப்பாக்கி பயன்படுத்தியதே இல்ல.

129
00:09:00,345 --> 00:09:02,945
ரைஃபில் போல
அதன் டிரிக்கரை இழுத்தால் போதும்.

130
00:09:02,985 --> 00:09:03,985
சரி.

131
00:09:04,105 --> 00:09:06,305
-ஒருநாள் தொடங்கித்தான் ஆகணும்.
-சரி.

132
00:09:36,865 --> 00:09:38,865
-சாரா, செல்லமே.
-என்ன?

133
00:09:38,985 --> 00:09:40,745
உன்னிடம் ஒரு விண்ணப்பம்,

134
00:09:41,105 --> 00:09:42,985
உன் தங்கையிடம் பொறுமையாக இரு.

135
00:09:46,825 --> 00:09:49,545
ஆவணம் இருப்பிடம்
டான்யாவிற்கு எப்படி தெரிந்தது?

136
00:09:50,985 --> 00:09:52,945
அது முக்கியம் இல்லை.

137
00:09:52,985 --> 00:09:54,625
ஒன்றாக இருப்பதே முக்கியம்.

138
00:09:56,825 --> 00:09:58,465
யாரும் வருத்தப்படக் கூடாது.

139
00:09:58,545 --> 00:10:00,745
அப்பா சாக போவதை, தற்செயலாக அறிந்தேன்!

140
00:10:00,865 --> 00:10:02,505
-அப்பா சாக போகிறாரா?
-இல்லை.

141
00:10:02,585 --> 00:10:04,145
இதில் என்ன எழுதியிருக்கு?

142
00:10:04,865 --> 00:10:07,625
"நாள்பட்ட எலும்புமச்சை
ரத்த புற்றுநோய்," அன்பே.

143
00:10:07,945 --> 00:10:09,465
அது ஆபத்தான நிலையில்லை.

144
00:10:11,225 --> 00:10:12,865
சாரா, உனக்குத் தெரியுமா?

145
00:10:14,225 --> 00:10:15,265
தெரியும்.

146
00:10:15,345 --> 00:10:17,745
மருத்துவ பரிசோதனைக்கு அவரோடு போவேன்.

147
00:10:17,865 --> 00:10:19,825
ஏன் மாட்ரிடில் பார்ட்டி வைத்தோம்?

148
00:10:21,465 --> 00:10:23,065
அவர் பிறந்தநாளுக்கு தானே?

149
00:10:23,425 --> 00:10:24,705
அந்தக் கேக், ஆம்,

150
00:10:24,745 --> 00:10:27,545
ஒரு காரணத்தோடு தான்
300 விருந்தினர்கள் வந்தனர்.

151
00:10:27,625 --> 00:10:30,345
அப்பா உடல் தேறி
பெரிதாக கொண்டாட விரும்பினார்.

152
00:10:31,865 --> 00:10:32,985
நம்பவே முடியவில்லை.

153
00:10:33,105 --> 00:10:35,185
அப்பாவின் புற்றுநோய் பற்றி அவரது

154
00:10:35,265 --> 00:10:36,865
செல்ல மகளுக்கு தெரியுது.

155
00:10:36,945 --> 00:10:39,105
இப்படி நடக்க கூடாதுன்னு நினைத்தார்.

156
00:10:39,185 --> 00:10:41,225
எப்படி நடக்க கூடாது?

157
00:10:41,545 --> 00:10:43,305
நாங்க அவர் பிள்ளைகள் தான்.

158
00:10:43,385 --> 00:10:45,385
ஹியூகோ, நிறுத்து. போதும்.

159
00:10:45,865 --> 00:10:46,865
அப்பா வருணும்.

160
00:10:46,985 --> 00:10:49,505
-மான்ஸரோடு சந்திப்பு.
-சாராவின் காதலானோடு.

161
00:10:50,265 --> 00:10:51,705
தெளிவாக தெரிந்துவிட்டது.

162
00:10:51,745 --> 00:10:52,945
என்ன தெரிந்தது?

163
00:10:53,425 --> 00:10:54,945
நீ சிப்பாயை நகர்த்துற.

164
00:10:54,985 --> 00:10:56,385
யாரும் எதையும் நகர்தலை.

165
00:10:56,465 --> 00:10:57,665
-உண்மையாகவா?
-இல்லை.

166
00:10:59,185 --> 00:11:02,665
சாரா, டான்யாவும் நானும்
முட்டாள் என நினைக்கிறாயா?

167
00:11:03,305 --> 00:11:05,945
மாட்ரிடிலிருந்து காதலனை அறிமுகம் செய்றாள்,

168
00:11:06,025 --> 00:11:08,185
அப்பா சாகும் தருவாயில்
அவனை ஆப்ரிக்கா

169
00:11:08,265 --> 00:11:09,465
அழைத்து செல்கிறாள்.

170
00:11:09,545 --> 00:11:11,425
லியோ ஃபராட் சாகப் போவதில்லை!

171
00:11:14,865 --> 00:11:17,465
அவர் சிகிச்சை எடுக்கக்கூட அவசியமில்லை.

172
00:11:17,545 --> 00:11:19,985
இந்த நிலை மோசமாகாமல்
தவிர்த்தால் போதும்.

173
00:11:20,065 --> 00:11:23,385
இயல்பான வாழ்க்கையை வாழலாமென
மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.

174
00:11:26,825 --> 00:11:28,905
ரத்த புற்றுநோய் சின்னம்மை போன்றதா?

175
00:11:28,985 --> 00:11:30,385
டான்யா, இப்படி பேசாதே.

176
00:11:30,465 --> 00:11:31,305
செல்லமே.

177
00:11:32,825 --> 00:11:34,985
கண்டிப்பாக அது சின்னம்மை இல்லை.

178
00:11:35,665 --> 00:11:37,305
அது தவறாகவும் முடியலாம்.

179
00:11:37,385 --> 00:11:39,505
மூத்த மகளுக்கு ஜால்ரா அடிக்கிறீங்க.

180
00:11:39,585 --> 00:11:41,625
யாருக்கும் ஜால்ரா அடிக்கவில்லை.

181
00:11:41,705 --> 00:11:42,545
வீண் பேச்சு.

182
00:11:42,625 --> 00:11:43,905
வீண் அல்ல.

183
00:11:46,305 --> 00:11:47,625
அது உயிலில் உள்ளது.

184
00:11:55,105 --> 00:11:56,225
என்ன உயில்?

185
00:12:00,945 --> 00:12:04,145
சில வாரம் முன் அனைத்தையும் சரிசெய்ய
அப்பா எழுதிய உயில்.

186
00:12:04,225 --> 00:12:05,345
டான்யா.

187
00:12:06,385 --> 00:12:07,225
ஹியூகோ.

188
00:12:08,785 --> 00:12:10,265
இப்போது வேண்டாம், சாரா.

189
00:12:10,345 --> 00:12:12,345
உங்க அறையில், இதை பொறுமையா படிங்க.

190
00:12:13,025 --> 00:12:14,705
இது ஒரு பெரிய ஆவணம்,

191
00:12:14,785 --> 00:12:16,465
எந்த விவாதமும் வேண்டாம்.

192
00:12:17,025 --> 00:12:18,025
புரிந்ததா?

193
00:12:19,505 --> 00:12:20,745
நன்றாகவே.

194
00:12:34,225 --> 00:12:36,905
மூச்சை இழுத்து பிடிக்கணும்.

195
00:12:36,985 --> 00:12:39,385
ஆள்காட்டி விரலை மெல்லமா நகர்த்து.

196
00:12:40,585 --> 00:12:42,345
ஷாட் அட்டகாசமாக இருக்கட்டும்.

197
00:12:45,665 --> 00:12:46,905
சூப்பர்.

198
00:12:46,985 --> 00:12:48,065
மீண்டும்.

199
00:12:51,745 --> 00:12:53,905
பார்த்தாயா? அவ்வளவு கடினமாக இல்ல.

200
00:12:54,785 --> 00:12:57,225
வேட்டைக்கு ரைஃபிலை பயன்படுத்துவாங்க

201
00:12:57,305 --> 00:12:58,865
-தானே?
-என்னிடம் நீட்டாத.

202
00:12:58,945 --> 00:13:01,025
சரி. மன்னிக்கவும்.

203
00:13:01,905 --> 00:13:04,385
மான்ஸருக்கு
கலாஷ்னிக்கோவ்கள் பிடிக்கும்.

204
00:13:04,985 --> 00:13:07,585
20 வருட பழக்கம்,
அவன் என் குடும்பம் மாதிரி.

205
00:13:07,665 --> 00:13:09,145
அவனுக்கு சாரா பிடிக்கும்.

206
00:13:09,225 --> 00:13:12,545
நபால்ம் பற்றி சொன்ன பிறகு,
உன்னையும் அழைத்து வர சொன்னான்.

207
00:13:12,625 --> 00:13:13,865
அருமை, நன்றி.

208
00:13:13,945 --> 00:13:15,025
-சரி, சுடு.
-சரி.

209
00:13:21,305 --> 00:13:22,945
மீண்டும். சுடு.

210
00:13:25,225 --> 00:13:27,145
நீ மூச்சை கட்டுப்படுத்தல்ல.

211
00:13:27,225 --> 00:13:29,185
பாரு. பின்னாலே போ.

212
00:13:32,105 --> 00:13:34,025
உனக்கு ஒழுக்கம்,

213
00:13:34,105 --> 00:13:36,905
அமைதி, மற்றும் நீடிய பொறுமை தேவை.

214
00:13:43,465 --> 00:13:44,305
-அருமை.
-அட!

215
00:13:45,225 --> 00:13:47,745
-மூச்சு விட மறந்துடாத.
-சரி.

216
00:13:55,225 --> 00:13:56,865
நல்லது. சரி, மீண்டும் சுடு.

217
00:13:58,385 --> 00:14:01,185
இராணுவத்திற்கு ஆயுதங்களை
கொடுக்க, விற்பனையாளர்

218
00:14:01,265 --> 00:14:04,345
காடுகள் மற்றும் பாலைவனங்களை
கடப்பாங்க என நினைத்தேன்.

219
00:14:11,945 --> 00:14:15,145
ஆனால் லியோ வீட்டை தாண்டாமலே
ஏற்பாடு செய்ததாக சொன்னார்.

220
00:14:22,785 --> 00:14:25,465
ஒரு நண்பர் மட்டுமல்லாமல், மத்திய கிழக்குச்

221
00:14:25,545 --> 00:14:27,905
சந்தையில் லியோவின் முக்கிய தொடர்பான,

222
00:14:29,665 --> 00:14:32,505
மான்ஸர் அல் அசாத்தை சந்திக்க,
முதலாம் வகுப்பில்

223
00:14:32,585 --> 00:14:34,945
பயணம் மட்டுமே செய்தார்.

224
00:14:39,945 --> 00:14:40,985
தெற்கு ஏமன்

225
00:14:41,065 --> 00:14:44,625
சோவியத் யூனியன் பாதுகாப்பின் கீழ்
இயங்கிய, அனைத்து அரேபிய

226
00:14:44,705 --> 00:14:47,705
ஆப்ரிக்கா தனிப்படைகளிடம்
மான்ஸருக்கு தொடர்பு உண்டு.

227
00:15:02,305 --> 00:15:03,505
தெற்கு ஏமனில் உள்ள

228
00:15:03,585 --> 00:15:07,385
தனது தலைமையகத்திலிருந்து
கட்டுப்படுத்திய வாடிக்கையாளர்கள்.

229
00:15:10,985 --> 00:15:13,265
வருக! எப்படி இருக்கீங்க, நண்பா?

230
00:15:13,345 --> 00:15:15,185
லியோ விற்பனை செய்ய நினைத்தால்,

231
00:15:15,265 --> 00:15:18,705
மான்ஸர் வாடிக்கையாளரை கொண்டு வருவார்,
பின்னர் இருவரும்

232
00:15:18,785 --> 00:15:20,065
லாபத்தை பிரிப்பாங்க.

233
00:15:21,745 --> 00:15:24,945
மான்ஸருக்கு தெற்கு ஏமனுடன்
நல்ல உறவுதான் இதற்கு காரணம்,

234
00:15:25,025 --> 00:15:28,705
லியோவிடம் டிப்ளோமாட்டிக் பாஸ்போர்ட்
இருந்ததால், அவர் ஆயுதங்களை

235
00:15:28,785 --> 00:15:31,865
வாங்குவதற்கும் விற்பதற்கும்
நாட்டின் பிரதிநிதியானார்.

236
00:15:32,985 --> 00:15:36,665
அது மட்டுமல்ல, இந்த ஆவணத்திற்கும்
அனுமதி கொடுத்துள்ளார்,

237
00:15:36,745 --> 00:15:37,825
பார்க்க எளிமையானது

238
00:15:37,905 --> 00:15:41,505
சட்டப்பூர்வ மற்றும் சட்ட விரோத
ஆயுத வியாபாரிகளை

239
00:15:41,585 --> 00:15:42,865
இது காட்டுகிறது.

240
00:15:42,945 --> 00:15:46,065
இதற்கு பெயர் தான்
பிரத்யேக பயன்பாடு சான்றிதழ்,

241
00:15:46,145 --> 00:15:49,265
ஒரு விற்பனை அரசாங்கத்தால்
உத்தரவாதம் அளிக்கப்படுகிறதென

242
00:15:49,345 --> 00:15:51,465
நிரூபிக்க, நாடுகள் இதை கொடுக்கின்றன.

243
00:15:52,585 --> 00:15:55,465
அந்த ஆவணத்தால்
லியோவின் செயல்பாடுகளை தெற்கு ஏமன்

244
00:15:55,545 --> 00:15:57,345
சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

245
00:15:58,665 --> 00:16:00,665
அடுத்த ஆர்டருக்கு 100 ஆகிவிட்டது.

246
00:16:01,185 --> 00:16:03,265
நமக்கு இன்னும் அதிக தோட்டா தேவை.

247
00:16:03,985 --> 00:16:06,945
இச்சான்றிதழை வைத்து,
லியோ தன் நண்பரான காஸ்பரிடம்

248
00:16:07,025 --> 00:16:09,825
போலந்து நாட்டிலிருந்து, கலாஷ்னிக்கோவ்களை

249
00:16:09,945 --> 00:16:13,305
பல பெட்டிகள் முதல், ஒரு கப்பல் நிறைய

250
00:16:13,385 --> 00:16:16,585
பீரங்கியை தாக்கக்கூடிய ஏவுகணைகளை
அவரால் பெற முடியும்.

251
00:16:16,665 --> 00:16:19,985
போலந்திலிருந்து ஏமனுக்கு போகும்
வணிகக் கப்பலில் ஆயுதங்களை

252
00:16:20,065 --> 00:16:22,545
ஏற்றி, வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப

253
00:16:22,625 --> 00:16:24,185
துறைமுகத்தில் இறக்குவேன்.

254
00:16:26,065 --> 00:16:27,705
எதுவுமே ஏமனை சென்றடையாதா?

255
00:16:30,985 --> 00:16:34,865
அச்சான்றிதழை பயன்படுத்த,
நான் கொடுக்கும் கமிஷன் மட்டும் போகும்.

256
00:17:28,425 --> 00:17:31,065
எனக்கு கொஞ்சம் காலை உணவு தருவியா இல்லையா?

257
00:17:31,145 --> 00:17:32,665
உனக்கு மட்டும் தெரியணுமா?

258
00:17:32,745 --> 00:17:33,665
நான் மூத்தவள்.

259
00:17:33,785 --> 00:17:36,105
-என்ன உரிமை இது?
-உனக்கு இல்லாத ஒன்று!

260
00:17:36,185 --> 00:17:38,665
தீர்மானிக்க தகுதியில்லாததால் கோபப்படுற.

261
00:17:38,745 --> 00:17:40,545
கேவலமான உடன்பிறப்புகளால் தான்.

262
00:17:40,625 --> 00:17:41,745
அப்பா விரும்பியது.

263
00:17:41,825 --> 00:17:43,025
எதை பற்றி பேசுறீங்க?

264
00:17:43,865 --> 00:17:45,425
இந்த உயிலை அப்பா எழுதலை.

265
00:17:45,505 --> 00:17:48,185
நாம சாப்பிடுவோம். பிறகு
பொறுமையாக பேசலாம்.

266
00:17:48,265 --> 00:17:49,745
அவரிடமே பேசிக்கொள்கிறேன்.

267
00:17:52,065 --> 00:17:53,265
எங்கே போகிறாய்?

268
00:17:53,785 --> 00:17:55,985
மூட்டை கட்ட. மார்பெல்லாக்கு போறேன்.

269
00:18:08,825 --> 00:18:13,145
இதைத்தான் நீ செய்ய வேண்டாம் என
நான் உன்னிடம் சொன்னேன்.

270
00:18:13,185 --> 00:18:14,625
நான் ஒரு விஷயமே அல்ல.

271
00:18:15,305 --> 00:18:17,665
அவங்களும் சேர்ந்து முடிவெடுக்கணுமாம்.

272
00:18:17,745 --> 00:18:19,385
நீங்க விரும்பின ஒன்று தானே?

273
00:18:19,425 --> 00:18:20,985
உன் உடன்பிறந்தவங்க, சாரா.

274
00:18:21,065 --> 00:18:23,665
உயிலை மாற்ற அப்பாவோடு
பேசியிருக்கீங்க, அம்மா.

275
00:18:23,785 --> 00:18:27,145
இல்ல, இந்த உயில் சம பங்கை தான் அளிக்கும்.

276
00:18:27,185 --> 00:18:29,905
என் உடன்பிறப்பு தண்டமென
உங்களுக்கே தெரியும்.

277
00:18:29,985 --> 00:18:32,145
அவர்களும் என் பிள்ளைகள் தான்.

278
00:18:32,665 --> 00:18:34,785
உரிமையை பெற, நீ அதற்கு கஷ்டப்படணும்.

279
00:18:34,865 --> 00:18:36,025
எடுத்துக்கக்கூடாது.

280
00:18:39,385 --> 00:18:41,425
இத்தனை வருஷமா உழைச்சது யாரு?

281
00:18:43,065 --> 00:18:44,425
யார் கையெழுத்திட்டது?

282
00:18:45,825 --> 00:18:47,105
அப்பாவுடன் உழைச்சது?

283
00:18:47,825 --> 00:18:51,185
நிறுவனத்திற்காக பல மணிநேரம்,
மாத கணக்கில் அர்ப்பணித்தது?

284
00:18:51,305 --> 00:18:53,265
நபால்ம் செய்கிறவனை கூட்டி வந்தது?

285
00:18:56,665 --> 00:18:58,185
பாரு, அதான் உன் பிரச்சினை.

286
00:18:59,345 --> 00:19:02,345
நீதான் பெரிய அறிவாளி,
பண்பட்டவள், சிறந்தவளென

287
00:19:02,425 --> 00:19:03,545
நினைக்கிறாய்.

288
00:19:04,185 --> 00:19:05,145
நீ கேட்பதில்ல.

289
00:19:05,185 --> 00:19:06,785
நான் கேட்கிறேன் தான்.

290
00:19:06,865 --> 00:19:08,145
இல்ல, நீ கேட்கவில்லை.

291
00:19:08,625 --> 00:19:10,385
அதை உன் பலமாக நினைக்கிறாய்.

292
00:19:11,385 --> 00:19:12,505
அப்படி இல்ல, மகளே.

293
00:19:13,425 --> 00:19:14,585
அது உன் பலவீனம்.

294
00:19:52,385 --> 00:19:56,585
எனவே ஒரு டிப்ளோமாட்டிக் பாஸ்போர்ட்,
பயன்பாட்டுச் சான்றிதழ் இருந்தால்

295
00:19:56,665 --> 00:19:59,385
யார் வேண்டுமானாலும் இடைத்தரகர் ஆகிவிடலாமா?

296
00:19:59,425 --> 00:20:01,505
இல்ல. நிறைய தொடர்புகள் இருக்கணும்,

297
00:20:01,585 --> 00:20:04,865
அரசாங்கத்துடன் தொடர்புள்ள பணக்காரர்கள்,
முக்கியமா பணம்.

298
00:20:05,425 --> 00:20:06,345
பணமா?

299
00:20:06,425 --> 00:20:09,145
பொருளை பெறும்வரை
வாடிக்கையாளர் பணம் தரமாட்டார்.

300
00:20:09,185 --> 00:20:10,665
ஏதும் ஆனா, நாம பொறுப்பு.

301
00:20:11,185 --> 00:20:13,585
யாரோடு வேலை செய்றோம்,
யார் வாடிக்கையாளர்,

302
00:20:13,665 --> 00:20:15,425
யார் உதவுவர் என்பதை அறியணும்.

303
00:20:15,505 --> 00:20:16,505
தனியார் - வேட்டை பகுதி
அத்துமீறி நுழையக் கூடாது

304
00:20:16,585 --> 00:20:17,865
மான்ஸர் உதவுவார்.

305
00:20:19,505 --> 00:20:22,025
அதற்காக அவர் சிங்கத்தை
கொல்ல அனுமதிக்கணுமா?

306
00:21:08,665 --> 00:21:09,665
வருக!

307
00:21:09,745 --> 00:21:11,425
எப்படி இருக்கிறாய், நண்பா?

308
00:21:12,185 --> 00:21:14,545
உன்னைப் பார்க்கும்போது எனக்கு
எப்போதும் மகிழ்ச்சி.

309
00:21:15,665 --> 00:21:17,905
-வருக.
-எனக்கும் அப்படியே.

310
00:21:19,345 --> 00:21:20,545
என்ன வந்திருக்கு?

311
00:21:27,985 --> 00:21:30,185
பட்டினியில் வாடும், அதிக போதையான ஆண்.

312
00:21:30,585 --> 00:21:32,985
அது உன்னை சாப்பிட பார்க்கும்.

313
00:21:34,825 --> 00:21:36,065
இல்ல, இவன் யார்?

314
00:21:37,145 --> 00:21:39,265
ஹலோ. நான் ஆஸ்கர், சாராவின் காதலன்.

315
00:21:40,505 --> 00:21:42,305
திரு. நபால்ம் என்பது நீ தானா?

316
00:21:42,385 --> 00:21:44,665
ஆம். பார்த்ததில் மகிழ்ச்சி, மான்ஸர்.

317
00:21:45,265 --> 00:21:46,145
அங்கிள்னு சொல்

318
00:21:46,665 --> 00:21:48,665
-சரி.
-சாரா எனக்கு மருமகள் மாதிரி.

319
00:21:52,105 --> 00:21:54,105
லியோ உன்னை பற்றி உயர்வாக சொன்னான்.

320
00:21:54,185 --> 00:21:57,305
-மிகைப்படுத்திச் சொல்லிருப்பார்.
-இல்லை, இல்லை.

321
00:21:57,865 --> 00:21:58,705
என்ன சொல்ற?

322
00:22:05,385 --> 00:22:06,465
கேலியாக சொன்னேன்.

323
00:22:06,545 --> 00:22:08,305
அவர் ஜோக் அடிக்கிறவர்.

324
00:22:08,385 --> 00:22:09,505
ஆமாம்.

325
00:22:13,145 --> 00:22:14,505
என்ன விளையாடுகிறாயா?

326
00:22:15,185 --> 00:22:16,305
அவனையும் அழைத்தாயா?

327
00:22:16,385 --> 00:22:18,785
லாபம் பெரியது, அனைவருக்கும் போதுமானது.

328
00:22:19,145 --> 00:22:21,905
அவன் இரு குண்டர்களை
என் வீட்டிற்கு அனுப்பினான்.

329
00:22:21,985 --> 00:22:22,825
லியோ...

330
00:22:22,905 --> 00:22:24,865
மகள் தலையில் துப்பாக்கி வைத்தான்.

331
00:22:24,945 --> 00:22:27,025
-அவன் பதில் சொல்லணும்.
-அப்படியா?

332
00:22:27,465 --> 00:22:28,665
நேரம் வரும்போது.

333
00:22:35,745 --> 00:22:36,705
மவாட்?

334
00:22:40,585 --> 00:22:41,425
வரவேற்கிறேன்.

335
00:22:42,705 --> 00:22:45,705
நீ வர முடிவு செய்ததில்
எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

336
00:22:45,785 --> 00:22:48,865
ஏன் வராமல் இருப்பேன்?
இது வியாபாரம்தான், இல்லையா?

337
00:22:50,425 --> 00:22:51,545
சிங்கங்களை கொல்வது.

338
00:22:52,505 --> 00:22:55,145
உன்னுடன் இருக்கும்போது என்ன நடக்க போகுதோ!

339
00:22:56,545 --> 00:22:58,705
-என்ன நடக்கிறது?
-சொல்வதை கேள்.

340
00:22:59,225 --> 00:23:02,265
இன்று ஒரு சிறப்பான நாளாக இருக்கப் போகிறது.

341
00:23:02,745 --> 00:23:03,945
என்னிடம் சொல்கிறாயா?

342
00:23:06,185 --> 00:23:07,145
லியோ.

343
00:23:08,105 --> 00:23:09,185
மவாட்.

344
00:23:09,785 --> 00:23:11,025
அவரது மருமகன்.

345
00:23:11,585 --> 00:23:13,425
எனக்கு தெரியுமே.

346
00:23:13,505 --> 00:23:15,905
"புயெர்த்தோ பானூஸில்
உடலுடன் சந்திப்பு."

347
00:23:18,105 --> 00:23:19,145
அசலாக இருந்தது.

348
00:23:22,385 --> 00:23:24,185
சி.ஐ.ஏ வையும் அழைத்தாயா?

349
00:23:24,265 --> 00:23:26,945
மாறாக, அவள்தான் எங்களை அழைத்தாள்.

350
00:23:42,825 --> 00:23:43,705
ஹலோ!

351
00:23:45,145 --> 00:23:46,545
-லியோ.
-ரொம்ப நாளாச்சு.

352
00:23:47,185 --> 00:23:48,025
சந்தோஷம்.

353
00:23:50,105 --> 00:23:51,145
மவாட்.

354
00:23:51,585 --> 00:23:53,705
-சந்தோஷம்.
-பயணம் எப்படி இருந்தது?

355
00:23:53,785 --> 00:23:55,345
திடீரென்று, என்னைச் சுற்றி

356
00:23:55,425 --> 00:23:58,545
இரு குழுக்களைச் சேர்ந்த
ஆயுத வியாபாரிகளும் இருந்தனர்,

357
00:23:58,625 --> 00:24:01,305
அதாவது சமதர்ம வாதிகளும், முதலாளிகளும்.

358
00:24:01,385 --> 00:24:04,625
பெரிய ஸ்பான்சர்களான
மான்ஸருடனும், சி.ஐ.ஏ உடனும்

359
00:24:04,705 --> 00:24:06,665
கலந்து பழக வாய்ப்பு கிடைத்தது.

360
00:24:10,945 --> 00:24:12,945
மது அருந்த நான் அழைக்கப்படலை,

361
00:24:14,025 --> 00:24:16,505
ஆனால் அந்த சந்திப்பு பிரபலமாகும்.

362
00:24:27,185 --> 00:24:28,665
கொள்கைகளை பேச மாட்டேன்.

363
00:24:29,225 --> 00:24:31,465
எல்லோரும் நன்றாக சிந்திக்கலாம்,

364
00:24:32,545 --> 00:24:35,225
அனைவரும் ஒருவரையொருவர்
அறிந்திருக்கிறோம்.

365
00:24:36,225 --> 00:24:37,505
பழகியிருக்கிறோம்.

366
00:24:37,585 --> 00:24:40,305
நாம் இன்று இங்கிருப்பது தான்
முக்கியமான விஷயம்,

367
00:24:40,385 --> 00:24:44,185
ஒரே மேஜையில் அமர்ந்து நடைமுறை
விஷயங்களைப் பற்றி விவாதிக்க,

368
00:24:44,265 --> 00:24:46,065
அதாவது, வியாபாரத்தைப் பற்றி.

369
00:24:46,145 --> 00:24:48,905
அரசியலை வாசலிலேயே
விட்டு வரவே எதிர்பார்த்தேன்.

370
00:24:48,985 --> 00:24:50,385
-நான் அப்படி தான்.
-சரி.

371
00:24:50,985 --> 00:24:51,825
லியோ?

372
00:24:53,585 --> 00:24:55,025
முழுமையாக கவனிக்கிறேன்.

373
00:24:56,105 --> 00:24:57,145
நிக்காராகுவா.

374
00:25:00,025 --> 00:25:03,225
கான்ட்ராஸ்களுக்கு அரசாங்கம்
ஆதரவை அதிகரிக்கப் போகிறது.

375
00:25:03,305 --> 00:25:06,425
அதற்கு ஆயுதங்கள் தேவை.
நம்முடையவையல்ல. சோவியத் வகை.

376
00:25:07,305 --> 00:25:09,825
ஜீனா. கியூபா நாட்டினருடன்
வேலை செய்கிறேன்.

377
00:25:09,905 --> 00:25:11,065
அரசியல் பேசலை லியோ.

378
00:25:11,745 --> 00:25:12,745
இது வியாபாரம்.

379
00:25:13,345 --> 00:25:16,705
சி.ஐ.ஏ வுடன் இருப்பது தெரிந்தால்,
வாடிக்கையாளர் இழப்பேன்.

380
00:25:16,785 --> 00:25:18,265
யாருக்கும் தெரியாது லியோ.

381
00:25:18,745 --> 00:25:19,985
ஒருமுறை மட்டும் தான்,

382
00:25:20,065 --> 00:25:22,665
நீ மட்டுமல்ல,
சேர்ந்து தான் செய்யப் போகிறோம்.

383
00:25:23,665 --> 00:25:26,465
எனது கே.ஜி.பி கூட்டாளிக்கு
இது தெரிந்தால்,

384
00:25:26,545 --> 00:25:27,985
நான் கொல்லப்படுவேன்.

385
00:25:29,705 --> 00:25:31,025
வருமானம் இருக்குமா?

386
00:25:31,105 --> 00:25:32,705
நிறைய பணம் கிடைக்கும்...

387
00:25:33,385 --> 00:25:35,425
பிடித்த ஆப்ரிக்கப் புரட்சிகளுக்கு

388
00:25:35,505 --> 00:25:37,785
நீங்களும் மான்ஸரும் பணத்தை செலவிடலாம்.

389
00:25:40,385 --> 00:25:43,345
கான்ட்ராஸ்களுக்கு உங்கள்
ஆயுதங்களை வழங்கலாமே?

390
00:25:43,425 --> 00:25:45,305
முடியாது. அரசாங்க தடை இருக்கு.

391
00:25:45,945 --> 00:25:47,065
ரஷ்ய துப்பாக்கிகளை,

392
00:25:47,145 --> 00:25:49,545
கம்யூனிஸ்ட்டுகள் கொடுத்தது போலிருக்கும்.

393
00:25:51,985 --> 00:25:55,025
ஆயுதங்களுடன் அட்லாண்டிக்கைக் கடக்க
சான்றிதழ் இல்லை.

394
00:25:55,905 --> 00:25:56,785
அது முடியாது.

395
00:25:56,865 --> 00:25:59,265
ஏமன் மூலம்
அல்ஜெசிராஸுக்கு கொண்டு போங்க.

396
00:25:59,345 --> 00:26:01,985
கடப்பதற்கு
ஹாண்டுரன் சான்றிதழ் வழங்குவாங்க.

397
00:26:02,825 --> 00:26:04,145
அப்படியென்றால்...

398
00:26:04,225 --> 00:26:07,905
லியோவுக்கு நிக்காராகுவா ஒப்பந்தத்தை
வழங்கினால் எனக்கென்ன பயன்?

399
00:26:11,625 --> 00:26:12,665
ஈரான்.

400
00:26:14,465 --> 00:26:15,305
என்ன?

401
00:26:15,385 --> 00:26:17,625
எஃப்-14 கான பாகங்களை நீங்க விற்கணும்,

402
00:26:17,705 --> 00:26:19,625
ஈராக் போருக்கு தேவைப்படும்.

403
00:26:19,705 --> 00:26:22,385
அந்த பணத்தை கொண்டு
கான்ட்ராஸ்கள் உதவுவோம்.

404
00:26:22,985 --> 00:26:26,785
நிக்காராகுவாவில் கம்யூனிச வீழ்ச்சிக்கு
ஈரானியர்கள் உதவுகின்றனர்.

405
00:26:26,865 --> 00:26:29,065
அமெரிக்க சி.ஐ.ஏ பைத்தியக்காரர்கள்.

406
00:26:30,065 --> 00:26:33,345
இவை அனைத்தும் மிகவும் நுட்பமானவை.

407
00:26:34,145 --> 00:26:36,905
பல வருஷமா சதாம் உசேனுக்கு
ஆயுதங்களை விற்கிறேன்.

408
00:26:36,985 --> 00:26:39,905
ஈராக் இராணுவம்
எனது சிறந்த வாடிக்கையாளர்.

409
00:26:39,985 --> 00:26:41,585
-என்ன பிரச்சினை?
-அது...

410
00:26:41,665 --> 00:26:44,505
நான் ஈரானுக்கும் சப்ளை செய்வதை
கண்டுபிடித்தால்?

411
00:26:44,585 --> 00:26:45,865
மவாட்...

412
00:26:45,945 --> 00:26:47,705
அனைவருமே ரிஸ்க் எடுக்கிறோம்.

413
00:26:47,785 --> 00:26:49,305
கே.ஜி.பி கண்டுபிடித்தால்.

414
00:26:49,385 --> 00:26:52,585
சதாம் உசேன் கே.ஜி.பி யை விட
மிக மோசமானவர்.

415
00:26:53,105 --> 00:26:56,225
அவருடைய எதிரியான ஈரானுக்கு
நான் சப்ளை செய்தால்,

416
00:26:56,305 --> 00:26:57,705
என்னை துரோகியாக்கிடும்.

417
00:26:57,785 --> 00:27:00,345
தவறு செய்தாலே
மக்களை அமிலத்தில் கரைப்பார்.

418
00:27:00,425 --> 00:27:03,545
யாருக்கும் தெரியாது, மவாட்.
இது ஒரு இரகசிய ஆபரேஷன்.

419
00:27:03,625 --> 00:27:05,665
எனக்கு உத்தரவாதம் தேவை.

420
00:27:07,265 --> 00:27:08,825
நான்தான் உங்க உத்தரவாதம்.

421
00:27:08,905 --> 00:27:11,425
இது வெளியே தெரிந்தால், நாம ஒழிந்தோம்.

422
00:27:12,985 --> 00:27:16,305
உங்க வாழ்க்கையின்
மிகப் பெரிய கமிஷனை பெறப் போறீங்க.

423
00:27:16,385 --> 00:27:18,145
நான் கேட்பதெல்லாம்,

424
00:27:18,225 --> 00:27:19,865
எவ்விதமான அவநம்பிக்கையும்,

425
00:27:20,625 --> 00:27:21,825
அச்சமும் கொள்ளாமல்,

426
00:27:21,945 --> 00:27:23,505
குழுவாக வேலை செய்யணும்.

427
00:27:23,625 --> 00:27:25,225
உங்களுக்கு தெரியாத செய்தி

428
00:27:25,705 --> 00:27:27,025
ஒன்றை சொல்றேன்...

429
00:27:29,345 --> 00:27:30,585
உலகம் மாறுகின்றது.

430
00:27:31,225 --> 00:27:32,705
ஒத்துழைக்க பழகணும்.

431
00:27:39,345 --> 00:27:40,745
-உலக அமைதிக்கு
-சியர்ஸ்.

432
00:27:41,665 --> 00:27:43,505
கடவுளே. நீர் குறும்புக்காரர்!

433
00:27:51,505 --> 00:27:52,825
ஜிம் எப்படி நடக்கிறது?

434
00:27:52,945 --> 00:27:54,505
நன்றாக நடக்கிறது.

435
00:27:54,585 --> 00:27:55,785
நல்லது.

436
00:27:55,865 --> 00:27:56,865
சந்தோஷம்.

437
00:27:57,585 --> 00:28:00,425
சாரா உன்னோடு மகிழ்ச்சியாக
உள்ளதாக செய்தி வந்தது.

438
00:28:02,345 --> 00:28:03,945
அவள் உன்னை மார்பெல்லாவுக்கு

439
00:28:04,025 --> 00:28:06,305
அழைத்து வந்தது, ஏரோபிக்ஸ் கற்பிக்கவா,

440
00:28:06,385 --> 00:28:08,665
மோசமான அண்ணனை
பார்த்துக்கொள்ளவா, உன்னை

441
00:28:09,345 --> 00:28:11,585
தொழிலில் பயன்படுத்தவா என்பது புரியலை.

442
00:28:11,705 --> 00:28:14,785
இது மிகவும் நல்ல கேள்வி. அவளிடமே கேளு.

443
00:28:16,745 --> 00:28:18,665
ஒருவேளை நீ மூன்றையும் செய்யலாம்.

444
00:28:19,585 --> 00:28:21,185
அது அற்புதமாக இருக்கும்.

445
00:28:51,025 --> 00:28:51,905
புதிய பாடலா?

446
00:28:53,665 --> 00:28:55,065
மார்பெல்லாக்கு போகலையா?

447
00:28:58,425 --> 00:28:59,945
நான் உணர்ச்சிவசப்படுபவள்.

448
00:29:00,825 --> 00:29:04,425
உணர்ச்சி வேகத்தில் சிலசமயம்
தவறு செய்துவிடுறேன்.

449
00:29:05,265 --> 00:29:08,225
ஆம், உன்னை
முழுமையாக புரிந்துகொள்ள முடியுது.

450
00:29:08,305 --> 00:29:10,145
உனக்குப் புரியுதா?

451
00:29:14,985 --> 00:29:16,545
எனக்கு எவ்வளவு தருவாய்?

452
00:29:18,145 --> 00:29:19,145
என்ன?

453
00:29:19,985 --> 00:29:20,905
ஆதரவு தர.

454
00:29:21,705 --> 00:29:24,145
டான்யா, இது உன் ஆதரவை பெறுவது பற்றி அல்ல.

455
00:29:24,665 --> 00:29:28,225
குடும்பத்திற்கு எது நல்லது என
நாம் சேர்ந்து தீர்மானிக்கணும்.

456
00:29:30,345 --> 00:29:33,425
சரி. எனது ஆதரவை
நான் உனக்கு விற்க விரும்பினால்?

457
00:29:34,265 --> 00:29:36,025
நீ ஏன் அதைச் செய்யணும்?

458
00:29:37,145 --> 00:29:38,625
ஏனெனில் எனக்கு கவலையில்ல.

459
00:29:38,705 --> 00:29:41,305
ஆயுதங்கள் பற்றி
நான் அலட்டிக்கொள்வதில்ல.

460
00:29:41,385 --> 00:29:43,265
-டான்யா, கேளு.
-மாட்டேன், சாரா.

461
00:29:43,345 --> 00:29:45,825
நான் கவலைப்படுவது இசையைப் பற்றி மட்டுமே.

462
00:29:45,905 --> 00:29:47,705
நான் கணக்கு போட்டுள்ளேன்.

463
00:29:47,785 --> 00:29:49,345
-அப்படியா?
-ஆமாம்.

464
00:29:49,425 --> 00:29:50,625
இசை கலைஞர்கள் செலவு,

465
00:29:50,705 --> 00:29:53,705
சுற்றுப்பயணங்களுக்கான விளம்பரம்,
ரெகார்டிங் செலவு.

466
00:29:53,785 --> 00:29:56,185
மொத்தம் 9 கோடி பெசெட்டாஸ் ஆகும்.

467
00:29:56,825 --> 00:29:59,865
9 கோடி என்பது
ஐந்து வருடத்திற்கான செலவு.

468
00:29:59,945 --> 00:30:01,385
ஐந்து வருடங்களில் அப்பா

469
00:30:01,465 --> 00:30:04,265
சம்பாதிப்பதை ஒப்பிட்டால்,
இது ஒன்றுமே இல்லை.

470
00:30:05,945 --> 00:30:07,545
உன் தொழிலுக்கு பணம் தரணுமா?

471
00:30:08,105 --> 00:30:10,545
இல்ல, அறிமுகத்துக்கு மட்டும் கேட்கிறேன்.

472
00:30:12,905 --> 00:30:13,945
சரி.

473
00:30:15,345 --> 00:30:16,785
அது தோல்வியானால்?

474
00:30:16,865 --> 00:30:18,905
மறு அறிமுகத்திற்கு மேலும் 9 கோடி.

475
00:30:18,985 --> 00:30:20,545
-நல்லா நடக்கும்.
-அல்லது.

476
00:30:20,625 --> 00:30:22,905
சொதப்பும் பாடகி என
மக்கள் நினைக்கலாம்.

477
00:30:23,705 --> 00:30:26,025
நான் நல்ல பாடகி என
ஹியூகோ நினைக்கிறான்.

478
00:30:28,945 --> 00:30:30,545
பிளாக்மெயில் செய்கிறாயா?

479
00:30:31,545 --> 00:30:33,185
நம்மால் இயன்றதை செய்கிறோம்.

480
00:30:37,345 --> 00:30:38,465
என் ஆஃபரை கேள்.

481
00:30:38,865 --> 00:30:41,145
-சொல்.
-டெமோ செலவுகளை நான் ஏற்கிறேன்,

482
00:30:41,225 --> 00:30:42,785
ரெக்கார்டிங் நிறுவனம் அதை

483
00:30:42,865 --> 00:30:46,345
வெளியிட்டால், பார்ட்னர்களாகி
விளம்பரத்தில் முதலீடு செய்வோம்.

484
00:30:47,385 --> 00:30:49,225
-உதவி வேண்டாம்.
-இது உதவி அல்ல.

485
00:30:49,305 --> 00:30:50,585
இது உதவி தான்.

486
00:30:52,105 --> 00:30:54,145
நேரடியாக 9 கோடி கேட்கலாமே?

487
00:30:56,145 --> 00:30:57,385
ஹியூகோ உடனே செய்வான்.

488
00:30:58,225 --> 00:30:59,185
டான்யா...

489
00:31:00,465 --> 00:31:01,825
அவன் யோசிக்க மாட்டான்.

490
00:31:02,985 --> 00:31:04,985
அவனை நம்பி எதையும் செய்வாயா?

491
00:31:10,705 --> 00:31:11,985
முடிவு உன் கையில்.

492
00:31:35,345 --> 00:31:36,305
ஹாய்.

493
00:31:48,945 --> 00:31:51,705
பலரும் எதிர்பாராதவாறு
அட்லெட்டிகோ டி மாட்ரிட்,

494
00:31:51,785 --> 00:31:54,105
இரண்டுக்கு பூஜ்ஜியம் என்று தோன்றுவிட்டார்.

495
00:31:54,185 --> 00:31:57,505
அட்லெட்டிகோ டி மாட்ரிட்-க்கு
இது ஒரு எச்சரிக்கை மணி...

496
00:31:57,585 --> 00:31:59,985
-இங்கே தான். நம்பர் 12.
-சரி.

497
00:32:00,945 --> 00:32:01,985
எவ்வளவு?

498
00:32:02,065 --> 00:32:03,145
2500 பெசெட்டாஸ்.

499
00:32:11,345 --> 00:32:12,545
"மோஃப்லி."

500
00:32:12,625 --> 00:32:14,185
இது பரவாயில்லை, என்னவோ போ.

501
00:32:27,905 --> 00:32:29,185
எப்படி போகுது?

502
00:32:29,265 --> 00:32:30,385
நீ அதிர்ஷ்டசாலி.

503
00:32:30,465 --> 00:32:33,425
நேற்று அழைத்திருந்தால்,
வெறுங்கையாய் போயிருப்பாய்.

504
00:32:33,505 --> 00:32:37,625
நான் மாட்ரிட் வர திட்டமிடவில்லை,
ஆனால் ஒரு வேலை வந்துவிட்டது.

505
00:32:37,705 --> 00:32:38,705
அதை கலக்குறாங்க.

506
00:32:39,225 --> 00:32:40,585
உனக்கு பீர் வேண்டுமா?

507
00:32:40,665 --> 00:32:42,465
-எனக்கு ரம் தான் வேணும்.
-சரி.

508
00:32:42,545 --> 00:32:44,145
-பின்புறம் காத்திரு.
-சரி.

509
00:32:50,785 --> 00:32:52,185
எப்படி இருக்க, டானி?

510
00:32:52,265 --> 00:32:53,585
நலமாக இருக்கிறேன். நீ?

511
00:32:55,825 --> 00:32:56,785
நலம் தான்.

512
00:32:58,505 --> 00:33:00,825
ஸ்ட்ராங்கா இருக்க
கொகோ கோலா கலந்தேன்.

513
00:33:00,905 --> 00:33:01,865
நன்றி.

514
00:33:01,985 --> 00:33:03,385
கோவாலாஸ் தெரியுமா?

515
00:33:03,465 --> 00:33:06,105
நிறுத்து, டானி, இரவு முழுவதும்
இதையே பேசுற.

516
00:33:06,185 --> 00:33:08,625
-என்ன?
-அவை களியாட்டத்தை விரும்பும்.

517
00:33:09,105 --> 00:33:10,345
கோவாலாக்களா?

518
00:33:10,425 --> 00:33:11,505
பேச்சை கேட்காதே.

519
00:33:11,585 --> 00:33:12,825
அவன் ஒரு பைத்தியம்.

520
00:33:12,945 --> 00:33:14,145
இல்லை, இல்லை, இல்லை.

521
00:33:14,225 --> 00:33:15,585
ஆராய்ச்சி செய்றாங்க.

522
00:33:16,225 --> 00:33:20,025
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்.

523
00:33:21,025 --> 00:33:22,225
ஆமாம், சரிதான்.

524
00:33:23,145 --> 00:33:25,745
அவர்களுக்கு பிடித்த களியாட்டம்
எது தெரியுமா?

525
00:33:26,945 --> 00:33:28,625
-எது?
-லெஸ்பியன்கள்.

526
00:33:32,905 --> 00:33:34,985
-அப்படித் தெரியலை.
-எனக்கு தெரியும்?

527
00:33:37,185 --> 00:33:39,145
ஹியூகோ. யாரோ உன்னைத் தேடுறாங்க.

528
00:33:51,145 --> 00:33:52,185
இங்கே என்ன செய்ற?

529
00:33:54,025 --> 00:33:55,305
எனக்கு இது தெரியும்.

530
00:33:56,665 --> 00:33:59,265
அவனிடம் மூன்று வருடங்களாக
கோக் வாங்குகிறாய்.

531
00:34:01,065 --> 00:34:04,265
அவள் போலீஸ் உளவாளி என்பதாலே
மகளை தன்னோடு வைத்திருக்கா.

532
00:34:04,865 --> 00:34:06,305
நீ பேசுகிறது புரியலை.

533
00:34:07,105 --> 00:34:08,745
கமிஷனர் லோபேரா சொன்னார்.

534
00:34:12,225 --> 00:34:14,745
பாரு, அப்பாவின் புற்றுநோய் தவிர, எனக்கு

535
00:34:14,785 --> 00:34:16,665
குடும்பத்தில் நடப்பது தெரியும்.

536
00:34:20,265 --> 00:34:21,425
உனக்கு என்ன வேணும்?

537
00:34:23,185 --> 00:34:24,265
உனக்கு உதவணும்.

538
00:34:33,185 --> 00:34:34,505
அதை விடுவித்தனர்.

539
00:34:35,945 --> 00:34:37,625
இதை பலமுறை
செய்திருக்கீங்களா?

540
00:34:37,705 --> 00:34:39,025
ஆம், பலமுறை.

541
00:34:41,305 --> 00:34:42,985
இல்லை, பரவாயில்லை.

542
00:34:50,305 --> 00:34:53,265
உன்னைப் போலவே எனக்கும் அப்பா இருந்ததில்லை.

543
00:34:54,545 --> 00:34:59,145
உணர்ச்சியற்று, வேட்கையோடு, லட்சியத்துடன்
இருப்பதென்றால் என்னவென்று தெரியும்.

544
00:35:01,625 --> 00:35:02,505
ஆனால் என்ன?

545
00:35:04,385 --> 00:35:06,905
ஆனாலெல்லாம் இல்லை, மாறாக.

546
00:35:06,985 --> 00:35:10,105
அனாதை எப்போதும் சுதந்திரமாக,
இணக்கமாக இருப்பான்.

547
00:35:11,985 --> 00:35:15,265
என்னைப் பொறுத்தவரை,
நீ வெற்றுக் காகிதம் போன்றவன்.

548
00:35:16,265 --> 00:35:19,225
ஒன்றும் எழுதப்படாதது, சுத்தமான காகிதம்.

549
00:35:22,065 --> 00:35:24,065
நான் அப்படி யோசிக்கவே இல்லை.

550
00:35:24,145 --> 00:35:25,105
பிடிச்சிருக்கு.

551
00:35:25,185 --> 00:35:26,745
எனில் நீ முதலில் நம்பணும்.

552
00:35:27,905 --> 00:35:29,425
உண்மையாக இருக்கணும்.

553
00:35:30,665 --> 00:35:31,785
சாராவிடமா?

554
00:35:32,745 --> 00:35:34,785
இல்லை, சாராவைப் பற்றி பேசவில்லை.

555
00:35:36,025 --> 00:35:38,545
குடும்பத்துக்கு உண்மையாக
இருப்பதை சொல்றேன்.

556
00:35:40,185 --> 00:35:41,905
விசுவாசத்தை பற்றி பேசுகிறேன்.

557
00:35:43,745 --> 00:35:46,225
மான்ஸருக்கு நான் இருப்பதை போல.

558
00:35:47,105 --> 00:35:48,705
விரும்பாத ஒப்பந்தங்கள்

559
00:35:48,745 --> 00:35:51,465
செய்து, மவாட் கூட விஸ்கி குடிக்கிறேன்.

560
00:35:52,145 --> 00:35:53,665
உனக்குப் புரிகிறதா?

561
00:35:53,745 --> 00:35:54,705
புரிகிறது.

562
00:35:55,385 --> 00:35:56,905
இந்த உலகம் மோசமானது,

563
00:35:56,985 --> 00:35:59,545
நிறைய குழப்பங்களும்,
சீர்குலைவுகளும் உள்ளன.

564
00:36:00,105 --> 00:36:01,865
விசுவாசமாக இருந்தால், எல்லாம்

565
00:36:03,065 --> 00:36:04,185
தானாகவே நடக்கும்.

566
00:36:05,025 --> 00:36:08,585
இது முதல் விதி, குழப்பத்திலிருந்து
உன்னை காப்பாற்றும் விதி.

567
00:36:17,425 --> 00:36:18,545
லியோ...

568
00:36:20,225 --> 00:36:21,665
கேன்சரை பற்றி தெரியும்.

569
00:36:23,265 --> 00:36:24,305
எப்படி இருக்கீங்க?

570
00:36:27,265 --> 00:36:29,665
நான் நூறு ஆண்டுகள் வாழப் போகிறேன், மகனே.

571
00:36:30,265 --> 00:36:31,465
அடடா.

572
00:36:34,705 --> 00:36:35,945
பயமாக இருக்கா?

573
00:36:38,425 --> 00:36:39,465
ஒன்று தெரியுமா?

574
00:36:40,265 --> 00:36:43,225
திபெத்தில், துறவிகள் மணலைக் கொண்டு

575
00:36:43,265 --> 00:36:47,905
ஓவியம் வரைவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

576
00:36:47,985 --> 00:36:49,065
வண்ணமயமான மணல்.

577
00:36:51,265 --> 00:36:52,665
அழகாக இருக்கும்.

578
00:36:53,985 --> 00:36:59,145
ஒவ்வொரு மண் துகளையும் அதன் இடத்தில் வைக்க
அவர்களுக்கு 5, 10 அல்லது 15 ஆண்டுகளாகும்.

579
00:36:59,945 --> 00:37:01,785
அவர்கள் மிக நுணுக்கமானவர்கள்.

580
00:37:04,425 --> 00:37:08,185
அவர்கள் முடிக்கும் நாளன்று, அதாவது
கடைசி துகளை இடும் நாளன்று,

581
00:37:09,905 --> 00:37:11,265
அவங்க செய்வது என்னதுனா?

582
00:37:12,905 --> 00:37:14,745
அவர்கள் ஓவியத்தின் மீது ஊதுவர்

583
00:37:16,945 --> 00:37:18,425
அந்த ஓவியம் சிதறிவிடும்.

584
00:37:20,545 --> 00:37:21,585
ஏன் செய்றாங்க?

585
00:37:22,105 --> 00:37:25,665
எதுவுமே நிலைக்காது, பற்றற்று இருக்கணும்
என்பதை குறிக்கத்தான்.

586
00:37:31,505 --> 00:37:34,705
திபெத்திய துறவிகள் முட்டாள்கள்
என்று நினைக்கிறேன்.

587
00:37:41,465 --> 00:37:43,625
20 ஆண்டுகளாக,

588
00:37:43,705 --> 00:37:45,625
நானும் மணலை அடுக்கி வருகிறேன்.

589
00:37:46,785 --> 00:37:48,265
ஃபராட் துகள்கள்.

590
00:37:51,145 --> 00:37:53,945
அவ்வளவு எளிதாக அதை ஊதிவிட
நான் விட மாட்டேன்.

591
00:37:55,305 --> 00:37:57,505
அதனாலே ஒரு வலுவான குடும்பம் தேவை.

592
00:37:59,385 --> 00:38:00,425
புரிகிறதா?

593
00:38:06,905 --> 00:38:09,945
-ஹியூகோ...
-உனக்கு ஒன்றும் புரியவில்லை.

594
00:38:11,705 --> 00:38:13,105
எனக்கு எது புரியவில்லை?

595
00:38:13,185 --> 00:38:16,065
அப்பா இறந்த பின்,
சலவைக்காரனின் வாரிசுகள் போல,

596
00:38:16,505 --> 00:38:19,945
எல்லாவற்றையும் மரபுரிமையாக
அடைந்துவிடலாம் என நினைக்கிறாய்.

597
00:38:21,305 --> 00:38:23,745
ஹியூகோ, உனக்கு ஒரு டீல் கொடுக்கிறேன்.

598
00:38:23,785 --> 00:38:25,905
அதுதான் பிரச்சனை, சாரா.

599
00:38:25,985 --> 00:38:28,665
டான்யாவும் நானும் தான் பிரச்சனை
என நினைக்கிற.

600
00:38:29,745 --> 00:38:31,905
ஆனால் பிரச்சனையே மான்ஸர் மாமா தான்.

601
00:38:32,545 --> 00:38:34,185
அவர் ஒப்பந்தம் வழங்கி,

602
00:38:34,265 --> 00:38:37,025
சான்றிதழ் தந்து, உத்தரவாதம் அளிக்கிறார்.

603
00:38:38,305 --> 00:38:40,785
மான்ஸர் மாமா
ஒரு அற்புதமான மனிதர், இல்லையா?

604
00:38:40,905 --> 00:38:44,145
-நல்லவர், விவேகமானவரும் கூட.
-ஆமாம்.

605
00:38:44,225 --> 00:38:46,985
ஆனால் அவர் மூன்று மனைவிகள் உடைய,
ஒரு பாரம்பரிய

606
00:38:47,065 --> 00:38:49,665
அரேபியரும் கூட,
தன் வாழ்நாளில் நம் அம்மாவுடன்

607
00:38:49,745 --> 00:38:52,505
ஒரே டேபிளில் சாப்பிட அமர்ந்ததில்லை.

608
00:38:55,745 --> 00:39:00,745
அதனால் ஒரு பெண்ணான நீ,
மான்ஸர் மாமாவிடம் என்ன பேரம்

609
00:39:01,585 --> 00:39:03,505
பேசுவாய் என யோசிக்கிறேன்.

610
00:39:05,225 --> 00:39:08,145
ஜோர்டானில் அல்-ஃபத்தாவுடன்
உன்னால் பேச முடியுமா?

611
00:39:08,865 --> 00:39:10,265
அல்லது ஏமன் மக்களுடன்?

612
00:39:10,305 --> 00:39:11,465
துனிசியர்களுடன்?

613
00:39:11,545 --> 00:39:13,465
இதை நான் தனியா செய்ய மாட்டேன்?

614
00:39:17,945 --> 00:39:20,905
சாரா, உன் காதலன்,
ஃபராட் குடும்பத்தில் ஒருவன் இல்ல.

615
00:39:37,025 --> 00:39:38,145
இதோ இருக்கிறது.

616
00:39:39,705 --> 00:39:40,625
அடச்சே.

617
00:40:06,905 --> 00:40:08,105
நாம சுட்டுவிட்டோமா?

618
00:40:08,185 --> 00:40:09,265
எனக்குத் தெரியாது.

619
00:40:10,265 --> 00:40:11,385
காயப்பட்டிருக்கும்.

620
00:40:12,545 --> 00:40:13,945
எனக்காக இங்கே காத்திரு.

621
00:40:18,465 --> 00:40:19,665
என்ன செய்ய போறீங்க?

622
00:40:19,745 --> 00:40:21,465
-போய் பார்க்கிறேன்.
-சரி.

623
00:40:27,065 --> 00:40:27,905
லியோ!

624
00:40:30,185 --> 00:40:31,145
லியோ!

625
00:40:34,665 --> 00:40:35,745
லியோ!

626
00:40:44,705 --> 00:40:45,545
லியோ!

627
00:40:49,225 --> 00:40:51,305
ஐயோ. லியோ!

628
00:42:03,265 --> 00:42:04,305
அடச்சே.

629
00:44:31,225 --> 00:44:33,545
இப்போது. சுடு.

630
00:44:38,225 --> 00:44:39,265
நீங்களே சுடுங்க.

631
00:44:40,465 --> 00:44:43,505
-என்னிடம் தோட்டாக்கள் தீர்ந்துவிட்டன.
-இதோ.

632
00:44:55,385 --> 00:44:58,665
கடைசியில் நான் சிங்கத்தைக் கொல்லவில்லை.

633
00:45:02,065 --> 00:45:04,185
என் போட்டி லியோ கிடையாது.

634
00:45:04,265 --> 00:45:06,865
அது ஃபராட் குடும்பத்தின்
செயலற்ற அணி தான்.

635
00:45:08,345 --> 00:45:10,625
என்னை அச்சுறுத்தலாக பார்த்த அந்த அணி.

636
00:45:20,825 --> 00:45:24,345
நிறைய யோசித்து,
இதுதான் சிறந்த முடிவு என நினைக்கிறேன்.

637
00:45:24,425 --> 00:45:25,305
ஆஸ்கர் அருமை.

638
00:45:25,385 --> 00:45:26,945
நண்பர்களே படம் எடுக்கலாம்!

639
00:45:27,025 --> 00:45:28,945
எல்லோருக்கும் பிடிச்சிருக்கு,

640
00:45:29,025 --> 00:45:32,225
உறுதியானவன், நான் விரும்பும் ஆற்றல்
அவனிடம் உள்ளது.

641
00:45:32,345 --> 00:45:37,585
அல்ஜீரிய பூர்வீகத்தைக் கொண்ட
பையனை விரும்பினேன்,

642
00:45:38,585 --> 00:45:41,985
ஆனால் அது நம்மை புத்திசாலியாகவோ,
வலிமையாகவோ மாற்றாது.

643
00:45:51,425 --> 00:45:53,585
முக்கியமான விஷயம் என்னவென்றால்,

644
00:45:53,665 --> 00:45:55,825
அவன் என் மகள் விரும்பும் கணவன்

645
00:45:55,905 --> 00:45:59,185
மற்றும் இந்த குடும்பத்திற்கு
தேவையான சகோதரன்.

646
00:45:59,265 --> 00:46:01,345
-வாழ்த்துவோம்.
-அன்புகாட்ட.

647
00:46:02,025 --> 00:46:03,185
அன்பயாயிருக்க.

648
00:46:03,705 --> 00:46:08,505
பரிசுக்கோப்பையாக, செத்த சிங்கத்துக்குப்
பதிலாக, எனக்குத் திருமணம் நடந்தது.

649
00:46:09,825 --> 00:46:14,825
குடும்பத்திற்குத் தேவையான ஒழுங்குமுறையை
லியோ கொண்டு வருவார் என்று நினைத்தேன்.

650
00:46:15,905 --> 00:46:17,545
அந்த அதிகாரம்.

651
00:46:18,305 --> 00:46:21,465
ஃபராட்ஸ் பொறுத்தவரை,
ஒரே ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்.

652
00:46:23,305 --> 00:46:26,065
என்ன போர் காத்திருக்கு என்பதே
நமக்கு தெரியாது.

653
00:48:48,865 --> 00:48:50,865
வசனங்கள் மொழிபெயர்ப்பு
மேனகா மணிகண்டன்

654
00:48:50,945 --> 00:48:52,945
படைப்பு மேற்பார்வையாளர்
கால்வின் மைக்கேல் ஆதாம்

