1
00:00:07,238 --> 00:00:09,824
<font face="sans-serif" size="52">சாங் கர்வம் கொண்ட, தண்டமான
தற்பெருமைவாதி,</font>

2
00:00:09,907 --> 00:00:11,617
<font face="sans-serif" size="52">ஆனா அவர் மோசமான ஆளில்லை.</font>

3
00:00:11,700 --> 00:00:13,494
<font face="sans-serif" size="52">-உதவலாமா?
-ரீஜஸ் பாடாஃப்.</font>

4
00:00:13,577 --> 00:00:16,539
<font face="sans-serif" size="52">திரு. சாங்கின் எல்லா தொழில்
விஷயத்துக்கும் ஆலோசகர் நான்.</font>

5
00:00:16,622 --> 00:00:21,544
<font face="sans-serif" size="52">இதில் பார்க்கலாம்...
திரு. சாங் விருப்பத்தை இது விவரிக்கும்.</font>

6
00:00:21,627 --> 00:00:22,586
<font face="sans-serif" size="52">யாருக்கு சொந்தம்?</font>

7
00:00:22,670 --> 00:00:24,088
<font face="sans-serif" size="52">சாங்கின் ஒரே உறவினர்.</font>

8
00:00:24,171 --> 00:00:26,882
<font face="sans-serif" size="52">ஆங்கிலமே பேசாத
புசானில் உள்ள அவர் அம்மா.</font>

9
00:00:26,966 --> 00:00:28,217
<font face="sans-serif" size="52">இங்க என்ன பண்ற?</font>

10
00:00:28,300 --> 00:00:30,177
<font face="sans-serif" size="52">நான் சாங்கின் படைப்பு தொடர்பாளர்.</font>

11
00:00:30,261 --> 00:00:33,013
<font face="sans-serif" size="52">-படைப்பு தொடர்பாளர்"?
-பதவியை உயர்த்தினேன்.</font>

12
00:00:33,097 --> 00:00:35,641
<font face="sans-serif" size="52">அப்போ இந்த ஆளு
கெத்தா நுழைந்து, சாங்கை</font>

13
00:00:35,724 --> 00:00:38,561
<font face="sans-serif" size="52">முழு அதிகாரம் தர கையெழுத்து
போட வெச்சாங்கறியா?</font>

14
00:00:38,644 --> 00:00:39,478
<font face="sans-serif" size="52">நான் நம்பலை.</font>

15
00:00:39,562 --> 00:00:42,606
<font face="sans-serif" size="52">உனக்கு வாசம் வருதா?
கெட்டுப்போன பழம் மாதிரி இருக்கு.</font>

16
00:01:17,433 --> 00:01:18,726
<font face="sans-serif" size="52">ஹலோ?</font>

17
00:01:18,809 --> 00:01:21,520
<font face="sans-serif" size="52">இலெய்ன்? இது ரீஜஸ் பாடாஃப்.</font>

18
00:01:22,563 --> 00:01:25,691
<font face="sans-serif" size="52">திரு. பாட்... ஏதாவது பிரச்சினையா?</font>

19
00:01:26,692 --> 00:01:27,776
<font face="sans-serif" size="52">அது...</font>

20
00:01:28,986 --> 00:01:30,487
<font face="sans-serif" size="52">இப்போ அதிகாலை 3:00 மணி ஆகுது.</font>

21
00:01:32,114 --> 00:01:34,533
<font face="sans-serif" size="52">சாதாரணமா ஆஃபீஸ் வர்ற நேரத்தை விட</font>

22
00:01:34,617 --> 00:01:37,703
<font face="sans-serif" size="52">கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமானு
கேட்க கூப்பிட்டேன்.</font>

23
00:01:42,207 --> 00:01:45,753
<font face="sans-serif" size="52">நிச்சயமா. அவசரம்ன்னா 8:00க்கே வர்றேன்.</font>

24
00:01:47,171 --> 00:01:48,505
<font face="sans-serif" size="52">இது ஏமாற்றமா இருக்கு.</font>

25
00:01:49,173 --> 00:01:51,884
<font face="sans-serif" size="52">அதை விட முன்னதாக எதிர்பார்த்தேன்.</font>

26
00:02:14,323 --> 00:02:15,574
<font face="sans-serif" size="52">ஹலோ?</font>

27
00:02:15,783 --> 00:02:18,577
<font face="sans-serif" size="52">இலெய்ன்? இது ரீஜஸ் பாடாஃப்.</font>

28
00:02:18,661 --> 00:02:20,746
<font face="sans-serif" size="52">சரி, திரு. பாடாஃப், இப்போ பேசினோமே.</font>

29
00:02:20,829 --> 00:02:23,248
<font face="sans-serif" size="52">சாதாரணமா ஆஃபீஸ் வர்ற நேரத்தை விட</font>

30
00:02:23,332 --> 00:02:26,418
<font face="sans-serif" size="52">கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமானு
கேட்க கூப்பிட்டேன்?</font>

31
00:02:29,755 --> 00:02:31,507
<font face="sans-serif" size="52">40 நிமிஷத்தில் வர முடியும்.</font>

32
00:02:36,220 --> 00:02:37,930
<font face="sans-serif" size="52">உங்க செஷன் நிறுத்தப்பட்டது</font>

33
00:02:55,531 --> 00:02:58,117
<font face="sans-serif" size="52">த கன்சல்டன்ட்</font>

34
00:03:16,260 --> 00:03:18,095
<font face="sans-serif" size="52">என் பெயர் இலெய்ன் ஹேமன்.</font>

35
00:03:18,178 --> 00:03:21,432
<font face="sans-serif" size="52">இது செவ்வாய் காலை 3:23 மணி,</font>

36
00:03:21,932 --> 00:03:24,059
<font face="sans-serif" size="52">இந்த பதிவின் போது,</font>

37
00:03:24,184 --> 00:03:27,980
<font face="sans-serif" size="52">நகர்ப்புற எல்ஏயில் காம்ப்வேர்
அலுவலகத்துக்கு வண்டியில் போறேன்.</font>

38
00:03:30,065 --> 00:03:34,695
<font face="sans-serif" size="52">எனக்கு ஏதாவது நடந்தால், இந்த செய்தி
கிளவுடிலிருந்து எடுக்கப்பட்டால்,</font>

39
00:03:34,778 --> 00:03:38,282
<font face="sans-serif" size="52">என்ன நடந்திருக்கும் என்று புரிஞ்சுக்க
இது உதவும்ன்னு நம்புறேன்.</font>

40
00:03:40,993 --> 00:03:44,496
<font face="sans-serif" size="52">வெற்றிகரமான மொபைல் கேம்
ஸ்டூடியோவின் படைப்பு தொடர்பாளராக</font>

41
00:03:44,580 --> 00:03:45,706
<font face="sans-serif" size="52">லாஸ் ஏஞ்சல்ஸில்</font>

42
00:03:46,457 --> 00:03:48,667
<font face="sans-serif" size="52">கடினம் உழைப்பும் தாமதமும் இருக்கும்.</font>

43
00:03:50,461 --> 00:03:53,839
<font face="sans-serif" size="52">வெற்றிக்கு தேவையான எதையும் செய்ய
எப்போதும் நான் தயார்.</font>

44
00:03:55,466 --> 00:03:57,968
<font face="sans-serif" size="52">ஆனா இந்த ஆள் எங்கிருந்து வந்தார்னு தெரியல,</font>

45
00:03:58,052 --> 00:04:00,679
<font face="sans-serif" size="52">இந்த பதவிக்கு எப்படி உயர்ந்தார்னு தெரியல,</font>

46
00:04:03,098 --> 00:04:05,601
<font face="sans-serif" size="52">அவருக்கு என்ன அதிகாரமிருக்குனு தெரியாது.</font>

47
00:04:10,439 --> 00:04:11,523
<font face="sans-serif" size="52">வா.</font>

48
00:04:15,319 --> 00:04:16,737
<font face="sans-serif" size="52">ஏன் இவ்ளோ தாமதம்?</font>

49
00:04:18,447 --> 00:04:21,825
<font face="sans-serif" size="52">-வாலியிலிருந்து வண்டில வர்றேன்.
-பக்கத்தில் தங்க கூடாதா?</font>

50
00:04:23,410 --> 00:04:26,246
<font face="sans-serif" size="52">இரண்டு போராடும் நடிகர்களோடு
தங்கியிருக்கேன்.</font>

51
00:04:27,164 --> 00:04:29,333
<font face="sans-serif" size="52">அவ்ளோ தான் கட்டுப்படியாகும்.</font>

52
00:04:29,416 --> 00:04:31,418
<font face="sans-serif" size="52">4866 மாக்னோலியா.</font>

53
00:04:34,922 --> 00:04:36,131
<font face="sans-serif" size="52">எங்கிருக்கேன் தெரியுமா?</font>

54
00:04:36,215 --> 00:04:39,968
<font face="sans-serif" size="52">இலெய்ஜா மற்றும் டெய்சியோடு.</font>

55
00:04:40,052 --> 00:04:41,762
<font face="sans-serif" size="52">நல்ல நடிகர்கள் அல்ல.</font>

56
00:04:42,596 --> 00:04:43,889
<font face="sans-serif" size="52">அது என்ன?</font>

57
00:04:44,807 --> 00:04:45,849
<font face="sans-serif" size="52">அது என்னை பற்றியா?</font>

58
00:04:45,933 --> 00:04:47,309
<font face="sans-serif" size="52">இது உன் தனிப்பட்ட கோப்பு.</font>

59
00:04:47,392 --> 00:04:49,228
<font face="sans-serif" size="52">அதை ஆவணங்கள் அறையில் பார்த்தேன்.</font>

60
00:04:50,270 --> 00:04:52,689
<font face="sans-serif" size="52">-ஆவணங்கள் அறை இருக்கா?
-ஆமா, நிச்சயமா.</font>

61
00:04:53,440 --> 00:04:56,401
<font face="sans-serif" size="52">ஆலோசகரா இருந்த எல்லா நிறுவனத்திலும்
ஆவண அறை இருக்கு.</font>

62
00:04:57,402 --> 00:05:00,322
<font face="sans-serif" size="52">நான்... எல்லா தகவலும் சர்வரில்
இருப்பதா நினைச்சேன்.</font>

63
00:05:01,031 --> 00:05:03,242
<font face="sans-serif" size="52">சாங் நாம கார்பன் நடுநிலைனார்.</font>

64
00:05:03,325 --> 00:05:05,744
<font face="sans-serif" size="52">இந்த கோப்புகளிலிருந்து நிறைய கத்துக்கலாம்.</font>

65
00:05:05,828 --> 00:05:08,497
<font face="sans-serif" size="52">உதாரணத்துக்கு, காம்ப்வேர் ஊழியர்களின்</font>

66
00:05:08,580 --> 00:05:12,126
<font face="sans-serif" size="52">சராசரி வயது 27ன்னு தெரியுமா? உனக்கு 27.</font>

67
00:05:12,584 --> 00:05:16,004
<font face="sans-serif" size="52">சராசரி கல்வித் தகுதி இளங்கலை பட்டம் என்று?</font>

68
00:05:16,088 --> 00:05:17,798
<font face="sans-serif" size="52">உனக்கு இளங்கலை பட்டம் இருக்கு.</font>

69
00:05:17,881 --> 00:05:20,843
<font face="sans-serif" size="52">சராசரி சம்பளம் $62,000?</font>

70
00:05:22,010 --> 00:05:24,429
<font face="sans-serif" size="52">துரதிர்ஷ்டவசமா, நீ கொஞ்சம்
கம்மியா வாங்குற.</font>

71
00:05:26,306 --> 00:05:28,809
<font face="sans-serif" size="52">அதிகாலை 3:00 மணிக்கு கூப்பிட்டீங்க,</font>

72
00:05:28,892 --> 00:05:31,645
<font face="sans-serif" size="52">ஸ்வெட்பான்ட்டில் இருக்கேன்,
சராசரினு சொல்லவா?</font>

73
00:05:37,776 --> 00:05:40,779
<font face="sans-serif" size="52">பலவகையான சுரோக்கள்.
இரண்டு இலவங்கம்,</font>

74
00:05:40,863 --> 00:05:44,449
<font face="sans-serif" size="52">இரண்டு மாட்சா-க்ரஞ்ச்,
பிஸ்தாவுடன் இரண்டு டார்க் சாக்லேட்.</font>

75
00:05:49,288 --> 00:05:51,123
<font face="sans-serif" size="52">-இலெய்ன்?
-என்ன?</font>

76
00:05:51,999 --> 00:05:55,669
<font face="sans-serif" size="52">இலவங்கபட்டை, மாட்சா-க்ரஞ்ச்,
இல்ல பிஸ்தா உள்ள டார்க் சாக்லேட்?</font>

77
00:05:57,713 --> 00:05:59,548
<font face="sans-serif" size="52">அநேகமா காலை உணவு சாப்பிடமாட்டேன்.</font>

78
00:05:59,631 --> 00:06:03,135
<font face="sans-serif" size="52">காலை 3:00 மணிக்கு சுரோக்கள் வாங்க
ரொம்ப தூரம் போகணும்.</font>

79
00:06:04,136 --> 00:06:05,804
<font face="sans-serif" size="52">அவ்ளோதான், டேனா.</font>

80
00:06:11,643 --> 00:06:12,644
<font face="sans-serif" size="52">உக்காரு.</font>

81
00:06:21,361 --> 00:06:23,197
<font face="sans-serif" size="52">ஏன் இங்க இருக்கேன், திரு. பாடாஃப்?</font>

82
00:06:25,616 --> 00:06:28,076
<font face="sans-serif" size="52">ஒரு விமானம் சியோலிலிருந்து கிளம்பியது</font>

83
00:06:28,160 --> 00:06:31,622
<font face="sans-serif" size="52">லாஸ் ஏஞ்சலஸ் நோக்கி
ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு முன்.</font>

84
00:06:31,705 --> 00:06:33,540
<font face="sans-serif" size="52">அதில் ஒரு பயணி இருக்காங்க</font>

85
00:06:33,624 --> 00:06:36,043
<font face="sans-serif" size="52">அவங்க திரு சாங்
விருப்பத்துக்கு எதிரானவங்க.</font>

86
00:06:36,710 --> 00:06:39,671
<font face="sans-serif" size="52">அவங்க இந்த பயணத்தை முடிக்கக் கூடாது.</font>

87
00:06:42,966 --> 00:06:45,802
<font face="sans-serif" size="52">ஒரு வணிக விமானத்தை நான்
திரும்ப போக வைக்கணுமா?</font>

88
00:06:46,595 --> 00:06:47,429
<font face="sans-serif" size="52">நடு பயணத்தில்?</font>

89
00:06:47,512 --> 00:06:49,890
<font face="sans-serif" size="52">இலெய்ன், நீ இயல்பா பிரச்சினையை தீர்ப்ப.</font>

90
00:06:49,973 --> 00:06:52,226
<font face="sans-serif" size="52">-உன் கோப்பில் அப்படி இருக்கு.
-அப்படியா?</font>

91
00:06:54,436 --> 00:06:57,898
<font face="sans-serif" size="52">அந்த விமானத்தில் யாரு வர்றாங்க?</font>

92
00:07:03,528 --> 00:07:04,655
<font face="sans-serif" size="52">ஆன் சி-வூ.</font>

93
00:07:06,365 --> 00:07:07,366
<font face="sans-serif" size="52">சாங்கின் அம்மாவா?</font>

94
00:07:08,325 --> 00:07:09,409
<font face="sans-serif" size="52">இங்க வர்றாங்களா?</font>

95
00:07:10,535 --> 00:07:15,499
<font face="sans-serif" size="52">அவங்க திரு. சாங் உருவாக்கியதை எல்லாம்
பிரித்து, நாசமாக்க வர்றாங்க.</font>

96
00:07:17,709 --> 00:07:19,169
<font face="sans-serif" size="52">அவரின் கனவு.</font>

97
00:07:20,879 --> 00:07:21,964
<font face="sans-serif" size="52">அவரின் விதி.</font>

98
00:07:25,175 --> 00:07:26,802
<font face="sans-serif" size="52">எப்படி உறவு வைத்தார்?</font>

99
00:07:26,885 --> 00:07:27,803
<font face="sans-serif" size="52">அவரது முகம்.</font>

100
00:07:28,387 --> 00:07:29,513
<font face="sans-serif" size="52">அவரது வாய்.</font>

101
00:07:30,180 --> 00:07:33,225
<font face="sans-serif" size="52">அவர் தொண்டையில், இல்லையா...
அதாவது, மென்மையா இல்லை.</font>

102
00:07:33,308 --> 00:07:35,811
<font face="sans-serif" size="52">செல்லம், நீ அதிகாரிங்ககிட்ட சொல்லணும்.</font>

103
00:07:35,894 --> 00:07:37,813
<font face="sans-serif" size="52">இல்ல, இல்ல, இல்ல. நாங்க சொல்வோம்.</font>

104
00:07:37,896 --> 00:07:39,982
<font face="sans-serif" size="52">"நாங்க?" இதை வேற யாரு பார்த்தது?</font>

105
00:07:40,983 --> 00:07:42,442
<font face="sans-serif" size="52">நானும் இலெய்னும்.</font>

106
00:07:44,319 --> 00:07:46,113
<font face="sans-serif" size="52">மறுபடியும் சுத்துறீங்களா?</font>

107
00:07:46,822 --> 00:07:50,158
<font face="sans-serif" size="52">இல்ல, நாங்க சுத்தல.
ஒரே மூழ்கும் படகில் மாட்டிகிட்டோம்.</font>

108
00:07:53,245 --> 00:07:54,246
<font face="sans-serif" size="52">ஆமாம்.</font>

109
00:08:00,711 --> 00:08:04,256
<font face="sans-serif" size="52">வேலை முடிஞ்சதும் வர்றேன்,
எனக்கு ஷாப்பிங்கில் உதவு.</font>

110
00:08:04,840 --> 00:08:05,841
<font face="sans-serif" size="52">இனிய நாளாகட்டும்.</font>

111
00:08:06,758 --> 00:08:08,468
<font face="sans-serif" size="52">-லவ் யூ.
-சந்தோஷமா இரு.</font>

112
00:08:10,012 --> 00:08:12,639
<font face="sans-serif" size="52">அப்புறம், கண்ணா, அந்த கெட்ட ஆளு</font>

113
00:08:12,723 --> 00:08:15,934
<font face="sans-serif" size="52">ஏதாவது உன் வாயில் போட்டா,
அம்மாகிட்ட வந்து சொல்லு.</font>

114
00:08:16,685 --> 00:08:17,686
<font face="sans-serif" size="52">சரி.</font>

115
00:08:31,491 --> 00:08:32,451
<font face="sans-serif" size="52">என்ன நடந்தது?</font>

116
00:08:32,534 --> 00:08:35,287
<font face="sans-serif" size="52">டெவலப்மென்ட் ஸ்லேட்டை
முழுசா தூக்கி போட்டுட்டாரு.</font>

117
00:08:35,370 --> 00:08:37,706
<font face="sans-serif" size="52">-எப்போ இருந்து?
-காலை 5:30 மணி முதல்.</font>

118
00:08:49,843 --> 00:08:50,927
<font face="sans-serif" size="52">நீ...</font>

119
00:08:51,511 --> 00:08:54,222
<font face="sans-serif" size="52">நாம செய்யும் அனைத்தையும்
அவர் நிறுத்த முடியாது.</font>

120
00:08:54,306 --> 00:08:56,141
<font face="sans-serif" size="52">கெர்ஃபஃபலை விழுங்கியதா சொல்றாங்க.</font>

121
00:08:56,224 --> 00:08:58,602
<font face="sans-serif" size="52">இன்னும் தொண்ணூறு ஐந்து பேர்
வேலை தேடறோம்.</font>

122
00:08:58,685 --> 00:08:59,895
<font face="sans-serif" size="52">கெர்ஃபஃபல்!</font>

123
00:09:02,397 --> 00:09:03,732
<font face="sans-serif" size="52">இல்ல. அவன் தொலைந்தான்.</font>

124
00:09:04,816 --> 00:09:06,026
<font face="sans-serif" size="52">அவன் தொலைந்தான்.</font>

125
00:09:12,991 --> 00:09:14,201
<font face="sans-serif" size="52">நீ எங்க போற?</font>

126
00:09:14,826 --> 00:09:18,038
<font face="sans-serif" size="52">பத்து வாரமா பூனைகள் கழிவதை
பதிவு செஞ்சிட்டு இருந்தேன்.</font>

127
00:09:18,121 --> 00:09:21,166
<font face="sans-serif" size="52">ஏன்? ஏன்னா சாங் மாசம் $5,800
தந்து கொண்டிருந்ததால்.</font>

128
00:09:21,792 --> 00:09:23,126
<font face="sans-serif" size="52">அதை நான் ஏத்துக்கிட்டேன்.</font>

129
00:09:23,210 --> 00:09:27,255
<font face="sans-serif" size="52">இந்த அயோக்கியன் திடீர்னு வந்து,
எல்லாத்தையும் நிறுத்த நினைக்கிறான்.</font>

130
00:09:27,339 --> 00:09:29,132
<font face="sans-serif" size="52">கிரேக், விடுமுறை எடு.</font>

131
00:09:29,216 --> 00:09:33,261
<font face="sans-serif" size="52">-அப்புறம் வருத்தப்படாம இருக்க, நல்லா யோசி.
-முயற்சி செய்யப் போறேன்.</font>

132
00:09:33,345 --> 00:09:36,431
<font face="sans-serif" size="52">-சரி. விசித்திர மனநிலைல இருக்கார்.
-விசித்திர மனநிலையில்!</font>

133
00:09:36,890 --> 00:09:38,308
<font face="sans-serif" size="52">-தள்ளி நில்லு.
-ஹேய்.</font>

134
00:09:39,226 --> 00:09:41,311
<font face="sans-serif" size="52">சாங்கின் அம்மா சியோலிலிருந்து வர்றாங்க.</font>

135
00:09:41,395 --> 00:09:43,355
<font face="sans-serif" size="52">-என்ன?
-விமானம் எப்போ வேணா வரும்.</font>

136
00:09:43,438 --> 00:09:45,107
<font face="sans-serif" size="52">அதை ஏன் என்கிட்ட சொல்லலை?</font>

137
00:09:46,149 --> 00:09:48,443
<font face="sans-serif" size="52">ஓ, கடவுளே! என் வேலையை விட்டிருப்பேன்.</font>

138
00:09:49,861 --> 00:09:51,738
<font face="sans-serif" size="52">அவங்க நோக்கம் என்னனு தெரியாது.</font>

139
00:09:51,822 --> 00:09:54,324
<font face="sans-serif" size="52">இரு. அவங்க வக்கீல்கள்
கொண்டு வர்றாங்களா?</font>

140
00:09:59,621 --> 00:10:01,540
<font face="sans-serif" size="52">-அது?
-திட்டத்தில் மாற்றம்.</font>

141
00:10:01,623 --> 00:10:02,833
<font face="sans-serif" size="52">பசங்களா, பக்கமா வாங்க.</font>

142
00:10:04,000 --> 00:10:06,545
<font face="sans-serif" size="52">இதுதான் ஆட்டம்.
குனிஞ்சு வேலை செய்யப் போறோம்,</font>

143
00:10:06,628 --> 00:10:08,547
<font face="sans-serif" size="52">பிஸியா இருப்போம், ஏன்னா மாற்றம் வருது,</font>

144
00:10:08,630 --> 00:10:10,674
<font face="sans-serif" size="52">அவர் ரொம்ப காலம் இருக்கமாட்டார்.</font>

145
00:10:36,992 --> 00:10:39,744
<font face="sans-serif" size="52">மன்னிக்கணும்... உதவ முடியுமா?</font>

146
00:10:41,246 --> 00:10:43,248
<font face="sans-serif" size="52">மன்னிக்கணும். நான் அதை பேசமாட்டேன்.</font>

147
00:10:44,583 --> 00:10:48,003
<font face="sans-serif" size="52">தேவையான மொழியை தேர்ந்தெடுக்கணும்...</font>

148
00:10:48,086 --> 00:10:49,337
<font face="sans-serif" size="52">ஒரு நிமிஷம்.</font>

149
00:10:49,421 --> 00:10:52,132
<font face="sans-serif" size="52">இது சில விளம்பரங்களை காட்டும்.</font>

150
00:10:53,675 --> 00:10:55,677
<font face="sans-serif" size="52">சாங்-வூ... நான் அவரின் அம்மா...</font>

151
00:10:57,387 --> 00:11:00,474
<font face="sans-serif" size="52">-திருமதி. ஆன்?
-சாங். சாங் வூ.</font>

152
00:11:00,557 --> 00:11:02,559
<font face="sans-serif" size="52">சரியான இடத்துக்கு வந்திருக்கீங்க.</font>

153
00:11:02,642 --> 00:11:05,312
<font face="sans-serif" size="52">என் பெயர் இலெய்ன் ஹேமன்.
உங்க மகனோட வேலை பார்த்தேன்.</font>

154
00:11:05,395 --> 00:11:06,396
<font face="sans-serif" size="52">வந்து உக்காருங்க.</font>

155
00:11:07,397 --> 00:11:09,399
<font face="sans-serif" size="52">ரோஸி, தண்ணீர் கொண்டு வர்றீயா?</font>

156
00:11:10,567 --> 00:11:11,776
<font face="sans-serif" size="52">உங்க பையை தாங்க.</font>

157
00:11:18,450 --> 00:11:20,869
<font face="sans-serif" size="52">தோழர்களே, கவனிங்க, ப்ளீஸ்.</font>

158
00:11:30,754 --> 00:11:33,840
<font face="sans-serif" size="52">இன்று ரொம்ப முக்கியமான
விருந்தினர் வந்திருக்காங்க.</font>

159
00:11:34,341 --> 00:11:35,509
<font face="sans-serif" size="52">சாங்கின் அம்மா.</font>

160
00:11:36,343 --> 00:11:41,765
<font face="sans-serif" size="52">அவங்க அழகான மகன் இதே மண்ணில்
வன்முறையா, கொடூரமா கொல்லப்பட்டார்.</font>

161
00:11:42,807 --> 00:11:46,102
<font face="sans-serif" size="52">திரு. சாங்கின் பணிவான
ஊழியர்களின் சார்பாக...</font>

162
00:11:47,354 --> 00:11:51,399
<font face="sans-serif" size="52">உங்க வேதனையை போக்குறோம்.</font>

163
00:12:21,763 --> 00:12:22,764
<font face="sans-serif" size="52">பேசுங்க.</font>

164
00:12:23,682 --> 00:12:24,891
<font face="sans-serif" size="52">உங்க மனதை திறங்க.</font>

165
00:12:31,606 --> 00:12:33,608
<font face="sans-serif" size="52">என் மகன்...</font>

166
00:12:35,610 --> 00:12:37,320
<font face="sans-serif" size="52">ஒரு நல்ல பையன்.</font>

167
00:12:37,737 --> 00:12:39,406
<font face="sans-serif" size="52">சாங் ஒரு நல்ல பையன்.</font>

168
00:12:41,533 --> 00:12:44,869
<font face="sans-serif" size="52">அவன் மனதில் பாசம் இருந்தது.</font>

169
00:12:45,787 --> 00:12:46,955
<font face="sans-serif" size="52">நம்மை நேசிச்சார்.</font>

170
00:12:48,415 --> 00:12:49,749
<font face="sans-serif" size="52">ஆனால்...</font>

171
00:12:50,584 --> 00:12:53,253
<font face="sans-serif" size="52">அவனை கெட்ட சக்தி கொண்டு போனது.</font>

172
00:12:56,506 --> 00:12:59,676
<font face="sans-serif" size="52">அவரின் நினைவுகளை கௌரவிக்க, கடுமையா உழைங்க.</font>

173
00:13:40,508 --> 00:13:44,721
<font face="sans-serif" size="52">டேனா, இன்றிரவு சாங்கின் அம்மாவுக்கு
முன்பதிவுகள் இருக்கா?</font>

174
00:13:45,221 --> 00:13:47,515
<font face="sans-serif" size="52">அவங்க சூட்கேஸோடு வந்திருக்காங்க.</font>

175
00:13:47,849 --> 00:13:49,601
<font face="sans-serif" size="52">யாரும் என்கிட்ட சொல்லலை.</font>

176
00:13:50,268 --> 00:13:52,187
<font face="sans-serif" size="52">பென்ரித்தில் ஸ்வீட் புக் பண்ணு.</font>

177
00:13:52,270 --> 00:13:55,649
<font face="sans-serif" size="52">அங்கதான் வரும் எல்லா விஐபிகளையும்
சாங் தங்க வைத்தார்.</font>

178
00:13:55,732 --> 00:13:58,109
<font face="sans-serif" size="52">அவரோட அம்மாவை அங்கதான்
தங்க வச்சிருப்பார்.</font>

179
00:13:58,193 --> 00:13:59,694
<font face="sans-serif" size="52">சரி, எனக்கு குழப்பமாகுது.</font>

180
00:13:59,778 --> 00:14:02,072
<font face="sans-serif" size="52">இப்ப உதவியாளர் நானா,
இல்ல இன்னமும் நீயா?</font>

181
00:14:02,155 --> 00:14:04,491
<font face="sans-serif" size="52">நீதான். நான் அவரோட படைப்பு தொடர்பாளர்.</font>

182
00:14:06,076 --> 00:14:08,078
<font face="sans-serif" size="52">மறுபடியும் சொல்லு. அது என்ன?</font>

183
00:14:09,829 --> 00:14:13,333
<font face="sans-serif" size="52">அந்த கண்ணாடியை உடைக்க
எவ்ளோ அழுத்தம் தேவைப்படும்?</font>

184
00:14:13,416 --> 00:14:15,210
<font face="sans-serif" size="52">-அப்ஸ்கர்ட் கேலரி?
-ஆம்.</font>

185
00:14:15,293 --> 00:14:17,712
<font face="sans-serif" size="52">அதில் ஒரு யானையை நிறுத்தலாம்.</font>

186
00:14:17,796 --> 00:14:20,924
<font face="sans-serif" size="52">ஒரு யானை, இல்லை.
இரண்டு காண்டாமிருகம், நிறுத்தலாம்.</font>

187
00:14:21,007 --> 00:14:24,969
<font face="sans-serif" size="52">-இரு காண்டாமிருங்கள் யானையை விட பளு கூட.
-அது சரியா தோணலை.</font>

188
00:14:26,388 --> 00:14:28,056
<font face="sans-serif" size="52">ஹேய், மதிய உணவு வாங்கணுமா?</font>

189
00:14:28,139 --> 00:14:30,600
<font face="sans-serif" size="52">ஸாரி, பிஸியா நடிப்பதில் பிஸியா இருக்கோம்.</font>

190
00:14:30,684 --> 00:14:31,768
<font face="sans-serif" size="52">உனக்கு என்ன தெரியும்?</font>

191
00:14:31,851 --> 00:14:35,647
<font face="sans-serif" size="52">யானையின் எடை 13,000 பவுண்டுகள்,
காண்டாமிருகம் 7,000 பவுண்டுகள்.</font>

192
00:14:35,730 --> 00:14:38,608
<font face="sans-serif" size="52">கண்ணாடி ரொம்ப பலமானது,
ஒரு யானை ஆயாசமா இருக்கலாம்.</font>

193
00:14:38,692 --> 00:14:40,985
<font face="sans-serif" size="52">-அதில் பந்தயம் கட்டறியா?
-இல்லை.</font>

194
00:14:41,945 --> 00:14:44,864
<font face="sans-serif" size="52">உண்மையில், நாம...
நான் முதலில் லன்ச்சுக்கு போறேன்.</font>

195
00:14:46,491 --> 00:14:48,284
<font face="sans-serif" size="52">குதிரைப்படை எப்போ வரும்?</font>

196
00:14:48,743 --> 00:14:51,079
<font face="sans-serif" size="52">அவங்க இதுவரை யாரையும் தக்க வைக்கலை.</font>

197
00:14:51,162 --> 00:14:53,790
<font face="sans-serif" size="52">இரண்டு வாரமே ஆனது.
இன்னும் துக்கத்திலிருக்கலாம்.</font>

198
00:14:53,873 --> 00:14:56,668
<font face="sans-serif" size="52">நிச்சயமா, கொரியன் பேசறார்.
ஏன் பேசமாட்டார்?</font>

199
00:14:56,751 --> 00:14:59,379
<font face="sans-serif" size="52">அவங்களை எதிலாவது கையெழுத்து போட வைத்தால்?</font>

200
00:14:59,462 --> 00:15:03,049
<font face="sans-serif" size="52">-எல்லாத்துக்கும் பதில் சொல்வேன்னு தோணுதா?
-பல மாசங்கள் எடுக்கும்.</font>

201
00:15:03,133 --> 00:15:05,510
<font face="sans-serif" size="52">-அது, நடந்தால், காத்திருப்போம்.
-இல்லை!</font>

202
00:15:05,593 --> 00:15:07,095
<font face="sans-serif" size="52">சாங்கிற்கு செய்ததை பார்த்தியே.</font>

203
00:15:07,178 --> 00:15:09,848
<font face="sans-serif" size="52">கேடுகெட்டவனோடு
வேலை செய்ய முடியாது, முடியுமா?</font>

204
00:15:12,350 --> 00:15:14,018
<font face="sans-serif" size="52">நம்மில் சிலருக்கு முடியும்.</font>

205
00:15:14,394 --> 00:15:17,021
<font face="sans-serif" size="52">இந்த பொறுப்பில் இன்னும் ஆறு மாசம் போதும்.</font>

206
00:15:17,772 --> 00:15:20,984
<font face="sans-serif" size="52">சாங் எனக்கு தனி குறிப்பு எழுதமாட்டார்,
பாடாஃப் செய்வார்.</font>

207
00:15:21,067 --> 00:15:24,696
<font face="sans-serif" size="52">ஸ்வெட்பேண்ட், ஸ்க்ரஞ்சியில்
பாஸை வசியம் செய்ய முடியுமா?</font>

208
00:15:24,779 --> 00:15:28,908
<font face="sans-serif" size="52">ஒரு 747 விமானத்தை நடு வானில் நிறுத்த
அதிகாலை 3:00 மணிக்கு கூப்பிட்டார்.</font>

209
00:15:28,992 --> 00:15:30,160
<font face="sans-serif" size="52">முழு பைத்தியம்.</font>

210
00:15:30,243 --> 00:15:32,579
<font face="sans-serif" size="52">-நாம சரியானதை செய்யணும்.
-ஆமா.</font>

211
00:15:34,080 --> 00:15:35,915
<font face="sans-serif" size="52">ரொம்ப சோர்வா இருக்கேன். தெரியல...</font>

212
00:15:36,541 --> 00:15:37,751
<font face="sans-serif" size="52">எது சரியான விஷயம்?</font>

213
00:15:39,711 --> 00:15:42,839
<font face="sans-serif" size="52">-சாங் அம்மாட்ட டேப் கொடுப்போம்.
-அவங்க அத பார்க்க வேணாம்.</font>

214
00:15:42,922 --> 00:15:46,968
<font face="sans-serif" size="52">அவங்க அத பார்க்க வேணாம்,
ஆனா அது நீக்கும் வேலையை வேகமாக்கும்.</font>

215
00:15:47,051 --> 00:15:48,845
<font face="sans-serif" size="52">இப்போ என்ன செய்யப் போறான்?</font>

216
00:15:54,184 --> 00:15:55,935
<font face="sans-serif" size="52">போறீங்களா, திரு. பாடாஃப்?</font>

217
00:15:56,811 --> 00:16:01,024
<font face="sans-serif" size="52">பென்ரித்தில் சாங் அம்மாக்கு டேனா
அறையை முன்பதிவு செய்திருக்கா.</font>

218
00:16:01,107 --> 00:16:02,776
<font face="sans-serif" size="52">இப்போ அவங்களை கொண்டு போறேன்.</font>

219
00:16:03,818 --> 00:16:06,279
<font face="sans-serif" size="52">திரு. பாடாஃப்.
டேனா இதை கொடுக்க சொன்னாங்க.</font>

220
00:16:06,362 --> 00:16:08,031
<font face="sans-serif" size="52">இதுதான் ஹோட்டலின் முகவரி.</font>

221
00:16:08,114 --> 00:16:09,991
<font face="sans-serif" size="52">நான் கார் ஏற்பாடு செய்யவா?</font>

222
00:16:10,617 --> 00:16:14,454
<font face="sans-serif" size="52">அவரோட அம்மாவை நானே கவனிச்சுக்கணும்னு
சாங் விரும்பியிருப்பார்.</font>

223
00:16:14,537 --> 00:16:18,041
<font face="sans-serif" size="52">அவங்க பாதுகாப்பா
ஹோட்டலுக்கு போவதை உறுதி செய்றேன்.</font>

224
00:16:18,333 --> 00:16:21,002
<font face="sans-serif" size="52">இந்த பக்கமா வாங்கம்மா.</font>

225
00:16:23,296 --> 00:16:24,506
<font face="sans-serif" size="52">அவங்க சூட்கேஸ்.</font>

226
00:16:27,884 --> 00:16:30,637
<font face="sans-serif" size="52">இலெய்ன், நீ இல்லாம என்ன செய்வோம்?</font>

227
00:16:37,519 --> 00:16:41,147
<font face="sans-serif" size="52">ஒரு ஆளு மகனோடும் அம்மாவோடும்
உறவு வைப்பதை என்ன சொல்வோம்?</font>

228
00:16:41,231 --> 00:16:43,066
<font face="sans-serif" size="52">அதுக்கு ஒரு பெயர் இருக்கும்.</font>

229
00:17:05,046 --> 00:17:10,343
<font face="sans-serif" size="52">ஹேய், இயன், என் தனிநபர் கோப்பை பார்க்க
யாரிடம் கேட்கணும்?</font>

230
00:17:10,426 --> 00:17:13,054
<font face="sans-serif" size="52">விண்ணப்பத்தை நிரப்பு, ஈமெயிலில் வரும்.</font>

231
00:17:13,137 --> 00:17:15,348
<font face="sans-serif" size="52">இல்லை, அதாவது காகித நகல்.</font>

232
00:17:15,431 --> 00:17:18,601
<font face="sans-serif" size="52">-ஆவண அறையில் இருப்பதை பார்க்கணும்.
-என்ன?</font>

233
00:17:18,977 --> 00:17:20,186
<font face="sans-serif" size="52">ஆவண அறை.</font>

234
00:17:21,771 --> 00:17:23,940
<font face="sans-serif" size="52">ஆவண அறை பற்றி தெரியாதா?</font>

235
00:17:24,399 --> 00:17:26,192
<font face="sans-serif" size="52">சேமிப்பு அறை இருக்கும்.</font>

236
00:17:26,943 --> 00:17:27,944
<font face="sans-serif" size="52">எங்கே?</font>

237
00:18:27,462 --> 00:18:28,838
<font face="sans-serif" size="52">-என்ன செய்ற?
-கருமம்.</font>

238
00:18:29,964 --> 00:18:32,634
<font face="sans-serif" size="52">இல்ல! இல்ல, இல்ல, இல்ல.</font>

239
00:18:32,717 --> 00:18:34,969
<font face="sans-serif" size="52">நீ சாங் அம்மாட்ட கொடுகாட்டி,
நான் செய்றேன்,</font>

240
00:18:35,053 --> 00:18:38,097
<font face="sans-serif" size="52">ஏன்னா அவன் இருந்தான்னா
நாளைக்கு நான் வரமாட்டேன்.</font>

241
00:18:43,144 --> 00:18:45,229
<font face="sans-serif" size="52">நல்லது. நான் செய்றேன்.</font>

242
00:18:46,564 --> 00:18:47,774
<font face="sans-serif" size="52">சத்தியமாவா?</font>

243
00:19:13,383 --> 00:19:14,467
<font face="sans-serif" size="52">நன்றி.</font>

244
00:19:19,097 --> 00:19:20,473
<font face="sans-serif" size="52">-ஹாய்.
-ஹாய், தங்கணுமா?</font>

245
00:19:21,057 --> 00:19:22,684
<font face="sans-serif" size="52">விருந்தினரை பார்க்கணும்.</font>

246
00:19:22,767 --> 00:19:24,560
<font face="sans-serif" size="52">காம்ப்வேர் பெயரில் முன்பதிவு.</font>

247
00:19:27,146 --> 00:19:28,606
<font face="sans-serif" size="52">முன்பதிவு இருக்கு,</font>

248
00:19:28,690 --> 00:19:31,275
<font face="sans-serif" size="52">ஆனா இதுவரை யாரும் வந்து தங்கவில்லை.</font>

249
00:19:31,359 --> 00:19:32,360
<font face="sans-serif" size="52">அவங்க இல்லையா?</font>

250
00:19:55,800 --> 00:19:56,634
<font face="sans-serif" size="52">ஏய்.</font>

251
00:19:56,718 --> 00:19:59,512
<font face="sans-serif" size="52">ஹோட்டலில் இருக்கேன்,
ஆனா இதுவரை அவங்க வரலை.</font>

252
00:19:59,595 --> 00:20:01,014
<font face="sans-serif" size="52">என்ன? அவர் கொண்டு போகலையா?</font>

253
00:20:02,015 --> 00:20:03,474
<font face="sans-serif" size="52">டின்னர் கொண்டு போயிருப்பார்.</font>

254
00:20:03,558 --> 00:20:07,103
<font face="sans-serif" size="52">அவரோட காருக்கு பின்னால்,
துண்டுதுண்டாக கிடக்கலாம்.</font>

255
00:20:11,441 --> 00:20:14,027
<font face="sans-serif" size="52">-சேய், இங்க இருக்கார்.
-உன் வீட்டிலா?</font>

256
00:20:14,110 --> 00:20:16,237
<font face="sans-serif" size="52">இல்லை, அலுவலகத்தில். சும்மா வந்தார்.</font>

257
00:20:16,320 --> 00:20:18,281
<font face="sans-serif" size="52">-தனியாவா?
-தெரியலை.</font>

258
00:20:19,741 --> 00:20:20,742
<font face="sans-serif" size="52">ஆமா, தனியாதான்.</font>

259
00:20:20,825 --> 00:20:22,035
<font face="sans-serif" size="52">அவங்க எங்கனு கேளு.</font>

260
00:20:22,118 --> 00:20:23,578
<font face="sans-serif" size="52">நீயே கேட்டுக்கோ.</font>

261
00:20:25,872 --> 00:20:27,290
<font face="sans-serif" size="52">சரி, கேட்குறேன்.</font>

262
00:20:27,415 --> 00:20:28,499
<font face="sans-serif" size="52">சரி, பை.</font>

263
00:20:41,471 --> 00:20:44,348
<font face="sans-serif" size="52">இலெய்ன், இவ்ளோ தாமதமா
ஃபோனில் கூப்பிட்டிருக்க.</font>

264
00:20:44,432 --> 00:20:48,811
<font face="sans-serif" size="52">தெரியும், மன்னிச்சுக்கோங்க. அது...
நம் ஊழியர்கள் சேகரிப்பு இருக்கு</font>

265
00:20:48,895 --> 00:20:52,065
<font face="sans-serif" size="52">சாங் அம்மாக்கு பூ அனுப்பினா
நல்லா இருக்கும்னு தோணுச்சு,</font>

266
00:20:52,148 --> 00:20:54,192
<font face="sans-serif" size="52">இல்லாட்டி ஒரு பழங்கள் கூடை.</font>

267
00:20:54,650 --> 00:20:56,486
<font face="sans-serif" size="52">எல்லாரும் சாங்கை நேசிச்சோம்.</font>

268
00:20:56,569 --> 00:20:58,488
<font face="sans-serif" size="52">அது சரியா இருக்கும்னா.</font>

269
00:20:59,155 --> 00:21:03,618
<font face="sans-serif" size="52">எந்த அறை அல்லது ஸ்வீட்டுக்கு
அதை அனுப்பட்டும், திரு. பாடாஃப்?</font>

270
00:21:04,702 --> 00:21:07,705
<font face="sans-serif" size="52">நீங்க அவங்களை
பென்ரித்ல விட்டீங்க, இல்லையா?</font>

271
00:21:07,789 --> 00:21:10,208
<font face="sans-serif" size="52">இல்ல. சாங் அம்மாக்கு வேற திட்டம் இருந்தது.</font>

272
00:21:10,291 --> 00:21:12,210
<font face="sans-serif" size="52">அந்த ஹோட்டல் பதிவை ரத்து செய்யலாம்.</font>

273
00:21:14,462 --> 00:21:15,797
<font face="sans-serif" size="52">எங்க தங்கியிருக்காங்க?</font>

274
00:21:17,256 --> 00:21:18,800
<font face="sans-serif" size="52">அவங்க சொல்லலை.</font>

275
00:21:20,093 --> 00:21:22,095
<font face="sans-serif" size="52">எங்கயாவது அவங்க சூட்கேசோடு</font>

276
00:21:22,178 --> 00:21:23,721
<font face="sans-serif" size="52">விட்டிருப்பீங்களே?</font>

277
00:21:23,805 --> 00:21:25,932
<font face="sans-serif" size="52">இப்போ எங்கே இருக்கோம்?</font>

278
00:21:26,682 --> 00:21:29,185
<font face="sans-serif" size="52">ஆமா, யோசித்து சொல்லுங்க.</font>

279
00:21:30,686 --> 00:21:33,856
<font face="sans-serif" size="52">துடுப்புப் படகுகள் பார்த்தது ஞாபகம் வருது</font>

280
00:21:33,940 --> 00:21:37,193
<font face="sans-serif" size="52">அன்னம் போல் இருந்ததால், எவ்ளோ
வேடிக்கையானதுனு நினைச்சேன்.</font>

281
00:21:40,530 --> 00:21:44,492
<font face="sans-serif" size="52">டேனா, மெக்கார்தர் பார்க் பகுதில உள்ள
எல்லா ஹோட்டலுக்கும் கூப்பிடு</font>

282
00:21:44,575 --> 00:21:47,453
<font face="sans-serif" size="52">ஆன் சி-வூ தங்கியிருக்காங்களானு தெரியணும்.</font>

283
00:21:47,537 --> 00:21:49,205
<font face="sans-serif" size="52">இலெய்ன், குளிச்சிட்டு இருக்கேன்.</font>

284
00:21:49,413 --> 00:21:51,249
<font face="sans-serif" size="52">சரி, ஆனா ஃபோன் வெச்சிருக்க.</font>

285
00:22:05,596 --> 00:22:08,182
<font face="sans-serif" size="52">போக்குவரத்து. 20 நிமிடம். ஸாரி பேட்டி</font>

286
00:22:28,119 --> 00:22:29,328
<font face="sans-serif" size="52">மன்னிக்கணும்.</font>

287
00:22:29,412 --> 00:22:33,166
<font face="sans-serif" size="52">50 வயசிருக்கும் கொரிய பெண் ஊதா சூட்கேஸ்
இழுத்து போறத பார்த்தீங்களா?</font>

288
00:22:33,249 --> 00:22:34,542
<font face="sans-serif" size="52">சாரி, இல்லை.</font>

289
00:22:39,130 --> 00:22:40,256
<font face="sans-serif" size="52">மன்னிக்கணும்.</font>

290
00:22:40,923 --> 00:22:45,094
<font face="sans-serif" size="52">நான் ஊதா சூட்கேஸ் வைத்திருந்த நடுத்தர
வயது கொரிய பெண்ணை தேடறேன்.</font>

291
00:22:45,469 --> 00:22:46,470
<font face="sans-serif" size="52">தெரியலை.</font>

292
00:22:58,566 --> 00:23:01,152
<font face="sans-serif" size="52">-கிரேக்.
-திரு. பாடாஃப்.</font>

293
00:23:01,861 --> 00:23:04,071
<font face="sans-serif" size="52">இப்பவும் வேலை செய்ற. பிரமாதம்.</font>

294
00:23:04,155 --> 00:23:06,240
<font face="sans-serif" size="52">வீடு போக, வண்டிக்கு காத்திருக்கேன்.</font>

295
00:23:07,742 --> 00:23:08,868
<font face="sans-serif" size="52">அது என்ன?</font>

296
00:23:09,827 --> 00:23:11,746
<font face="sans-serif" size="52">அது இதுவரை எதுவும் ஆகலை.</font>

297
00:23:11,829 --> 00:23:13,456
<font face="sans-serif" size="52">சரி, எனக்கு விரிவா சொல்லு.</font>

298
00:23:14,874 --> 00:23:19,128
<font face="sans-serif" size="52">சரி. அது, கண்ணாடியின் இழுவிசை வலிமையை
அடிப்படையாக கொண்டது.</font>

299
00:23:19,212 --> 00:23:20,880
<font face="sans-serif" size="52">இங்கே நீல நிறம் தெரியுதா?</font>

300
00:23:20,963 --> 00:23:23,674
<font face="sans-serif" size="52">கண்ணாடி சுமை கால்குலேட்டர்
யுஆர்எலோடு இணைத்தேன்.</font>

301
00:23:23,758 --> 00:23:27,094
<font face="sans-serif" size="52">கண்ணாடி அதிக தடிமனா இருந்தா,
அதிக பாரம் வைக்கலாம். அதனால்...</font>

302
00:23:28,137 --> 00:23:30,431
<font face="sans-serif" size="52">ஒரு யானை, அது பரவாயில்லை.</font>

303
00:23:30,890 --> 00:23:34,518
<font face="sans-serif" size="52">அப்புறம் யானை மற்றும் காண்டாமிருகம்,
அப்பவும் பரவாயில்லை.</font>

304
00:23:35,978 --> 00:23:37,813
<font face="sans-serif" size="52">யானை, காண்டாமிருகம், குரங்கு.</font>

305
00:23:40,566 --> 00:23:41,567
<font face="sans-serif" size="52">மோசமான குரங்கு.</font>

306
00:23:43,319 --> 00:23:44,862
<font face="sans-serif" size="52">அவை எங்கே போச்சு?</font>

307
00:23:44,946 --> 00:23:48,032
<font face="sans-serif" size="52">-அவை கீழே விழுந்திடுச்சு.
-கீழே என்ன இருக்கு?</font>

308
00:23:48,115 --> 00:23:51,744
<font face="sans-serif" size="52">எது வேணாலும் இருக்கும்.
சில உலோக கூர்முனைகள்,</font>

309
00:23:52,161 --> 00:23:56,999
<font face="sans-serif" size="52">துள்ளும் மேடை,
இல்ல... எது வேணாலும் இருக்கலாம்.</font>

310
00:23:57,917 --> 00:24:00,670
<font face="sans-serif" size="52">கிரேக், அங்க என்ன இருக்க விரும்புற?</font>

311
00:24:02,546 --> 00:24:06,008
<font face="sans-serif" size="52">விழுவது நிற்கிறப்போ
எதை பார்க்க விரும்புற?</font>

312
00:24:08,386 --> 00:24:10,388
<font face="sans-serif" size="52">ஆட விரும்புறேன். எப்போ தயாராகும்?</font>

313
00:24:12,348 --> 00:24:15,559
<font face="sans-serif" size="52">ஆனா நாம இலெய்ன் கூட முதலில் பேசலாமா?</font>

314
00:24:16,269 --> 00:24:17,186
<font face="sans-serif" size="52">இலெய்ன்?</font>

315
00:24:19,105 --> 00:24:20,564
<font face="sans-serif" size="52">உங்க படைப்பு தொடர்பாளர்.</font>

316
00:24:20,648 --> 00:24:23,818
<font face="sans-serif" size="52">இதைதான் அவங்க செய்வாங்க,
நீங்க இதை செய்ய வேண்டியதில்ல.</font>

317
00:24:23,901 --> 00:24:25,111
<font face="sans-serif" size="52">நிச்சயமா. இலெய்ன்.</font>

318
00:24:25,194 --> 00:24:27,613
<font face="sans-serif" size="52">நமக்குள் இருக்கட்டும், அவ இங்க</font>

319
00:24:27,697 --> 00:24:29,490
<font face="sans-serif" size="52">என்ன செய்றான்னு யோசிக்கிறேன்.</font>

320
00:24:29,573 --> 00:24:30,574
<font face="sans-serif" size="52">நல்ல வேலை.</font>

321
00:24:31,742 --> 00:24:32,994
<font face="sans-serif" size="52">நன்றி, பாஸ்.</font>

322
00:25:13,576 --> 00:25:16,037
<font face="sans-serif" size="52">-அதை செய்ய விரும்புறார்.
-என்ன?</font>

323
00:25:16,120 --> 00:25:19,040
<font face="sans-serif" size="52">இரண்டு வருடம் நான் சொன்ன
ஒரு யோசனயை கூட சாங் ஏற்கலை,</font>

324
00:25:19,123 --> 00:25:21,625
<font face="sans-serif" size="52">பின் பாடாஃப் வருகிறார்,
இரண்டே நாட்களில்...</font>

325
00:25:21,709 --> 00:25:22,960
<font face="sans-serif" size="52">சாங் அம்மாவை கொன்னார்.</font>

326
00:25:24,337 --> 00:25:26,505
<font face="sans-serif" size="52">-நில்லு, என்ன?
-அவங்க எங்கனு தெரியல.</font>

327
00:25:26,589 --> 00:25:28,174
<font face="sans-serif" size="52">டேனாக்கு தெரியலை. நான்...</font>

328
00:25:28,966 --> 00:25:30,217
<font face="sans-serif" size="52">நான் போலீஸை கூப்பிடவா?</font>

329
00:25:30,301 --> 00:25:33,929
<font face="sans-serif" size="52">இல்லை. என்ன? என்ன சொல்ல?
ஒரு சுற்றுலா பயணியை காணலைனா?</font>

330
00:25:34,013 --> 00:25:37,892
<font face="sans-serif" size="52">அட. அவங்களுக்கு துக்கத்தை போக்க
கொஞ்ச நேரம் தேவைப்படலாம்.</font>

331
00:25:42,104 --> 00:25:44,523
<font face="sans-serif" size="52">-இனிய இரவு, கிரேக்.
-நில்லு, நில்லு, நில்லு.</font>

332
00:25:44,607 --> 00:25:47,068
<font face="sans-serif" size="52">என்ன? என் மேல கோபமா?</font>

333
00:25:47,860 --> 00:25:50,112
<font face="sans-serif" size="52">கோபம் வர்ற அளவுக்கு சக்தி இல்லை.</font>

334
00:25:50,196 --> 00:25:52,740
<font face="sans-serif" size="52">வலிக்குது. மூணு மணி நேரம்தான் தூங்கினேன்.</font>

335
00:25:52,823 --> 00:25:55,326
<font face="sans-serif" size="52">சூடான டீயும், சுரோக்கள்தான் சாப்பிட்டேன்.</font>

336
00:25:55,409 --> 00:25:59,372
<font face="sans-serif" size="52">கண் சொக்குது, இப்ப நான்
வாலிக்கு 40 நிமிடம் வண்டி ஓட்டணும்.</font>

337
00:25:59,455 --> 00:26:02,875
<font face="sans-serif" size="52">-101ஐ மூடினது தெரியுமா?
-என் வாழ்க்கை கேடுகெட்டது!</font>

338
00:26:04,460 --> 00:26:06,670
<font face="sans-serif" size="52">ஆமா, அது கேன்யனில் ஊர்ந்து போகுது.</font>

339
00:26:06,754 --> 00:26:08,881
<font face="sans-serif" size="52">என் வண்டி வருது. நல்லா இருக்கியா?</font>

340
00:26:09,965 --> 00:26:11,175
<font face="sans-serif" size="52">எப்பவும்.</font>

341
00:26:11,258 --> 00:26:14,804
<font face="sans-serif" size="52">சரி. கொஞ்சம் தூங்கப் பாரு,
ஏன்னா நாளைக்கு நமக்கு வேலை இருக்கு.</font>

342
00:26:14,887 --> 00:26:16,555
<font face="sans-serif" size="52">-சரி.
-பை.</font>

343
00:27:00,808 --> 00:27:03,436
<font face="sans-serif" size="52">வரவேற்கிறோம்
சாங் அம்மா</font>

344
00:27:57,907 --> 00:28:00,784
<font face="sans-serif" size="52">ஆவணங்கள்</font>

345
00:29:20,447 --> 00:29:22,449
<font face="sans-serif" size="52">வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar</font>

346
00:29:22,533 --> 00:29:24,535
<font face="sans-serif" size="52">படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்</font>

