1
00:00:53,262 --> 00:00:55,473
த டெர்மினல் லிஸ்ட்

2
00:01:04,440 --> 00:01:07,902
ஹெலிகாப்டர் சுடப்பட்டது.
புழற்கடை தென்கிழக்கு மூலையில்.

3
00:01:07,985 --> 00:01:08,903
நஜாஃப், ஈராக்
2007

4
00:01:08,986 --> 00:01:12,490
கட்டடம் 16லருந்து வெளியேறறோம்.
ஒரு ஹெலிகாப்டர் சுடப்பட்டதாம்.

5
00:01:13,407 --> 00:01:17,411
வாரன்ட் ஆஃபீசர் லிஸ் ரைலி. வகையா
மாட்டினேன். விரைவு அதிரடிப் படை வேணும்.

6
00:01:17,495 --> 00:01:20,748
ஹாமர்ஹெட். வடக்கே விழுந்த கயோவா
நோக்கி போறோம். எப்போ வரும்?

7
00:01:20,831 --> 00:01:22,333
இப்ப வந்துடும், சகோதரா.

8
00:01:22,416 --> 00:01:26,045
ரெண்டு நிமிட தூரத்தில்.
விமான உதவி கேட்டிருக்கோம்.

9
00:01:26,128 --> 00:01:30,382
காப்பாத்த வேணாம், கமாண்டர். நொறுங்கிய
இடம் எதிரிகளால் சூழப் பட்டிருக்கு.

10
00:01:30,508 --> 00:01:31,383
ஆம். உண்மை.

11
00:01:31,467 --> 00:01:34,220
-வடக்கு நோக்கி போறோம்...
-எனக்கு ரொம்ப அவசரம்.

12
00:01:34,303 --> 00:01:37,389
தெருவில வாங்கி சாப்பிடாதேன்னு
சொன்னேனே, டானி.

13
00:01:37,473 --> 00:01:38,766
-ஆகட்டும்!
-முகாமுக்கு வா.

14
00:01:38,849 --> 00:01:42,019
ரேஞ்சர், விரைவு அதிரடி படை
வர்றாங்க. 20 நிமிஷமாகும்.

15
00:01:42,102 --> 00:01:43,854
-அடச்சே!
-கேட்குதா?

16
00:01:43,938 --> 00:01:46,982
-20 நிமிடம் அவங்களுக்கு இல்லை.
-கமாண்டர், புரியுதா?

17
00:01:49,652 --> 00:01:51,445
சமிக்ஞை... இடையூறு...

18
00:01:51,529 --> 00:01:53,614
-கமாண்டர்...
-விபத்து பகுதி போறேன்.

19
00:01:53,697 --> 00:01:56,534
-காக்ஸ் உங்களை உலுக்குவார்.
-காத்திருக்க சொல்றேன்.

20
00:01:56,617 --> 00:01:58,828
டானி, அடக்கிக்கொள்!
காரை நாசம் பண்ணாதே!

21
00:01:58,911 --> 00:02:00,579
அடக்கிட்டு தான் இருக்கேன்.

22
00:02:02,540 --> 00:02:03,541
போ!

23
00:02:30,568 --> 00:02:31,735
போறோம்!

24
00:02:31,819 --> 00:02:32,862
போ!

25
00:02:34,071 --> 00:02:35,281
போ! வேகமா!

26
00:02:36,991 --> 00:02:38,117
டானி!

27
00:02:38,200 --> 00:02:39,910
போங்க. நான் கூட இருக்கேன்!

28
00:02:39,994 --> 00:02:43,789
-நண்பர்கள்! நண்பர்கள்!
-நண்பர்கள்! நண்பர்கள்!

29
00:02:43,873 --> 00:02:44,915
நண்பர்கள்!

30
00:02:45,541 --> 00:02:47,793
-இன்னும் வாங்க! வாங்க!
-தடியர்கள்!

31
00:02:49,169 --> 00:02:50,504
நண்பர்கள்!

32
00:02:50,588 --> 00:02:52,214
எதிரி என் வலதில்!

33
00:02:56,886 --> 00:02:58,888
-உங்க பின்னால இருக்கேன்.
-ஹேய்.

34
00:02:58,971 --> 00:03:01,181
என்னிடம் சொல். ரைலி. எப்படி இருக்கே?

35
00:03:02,349 --> 00:03:03,350
இதைவிட நல்லா...

36
00:03:03,434 --> 00:03:05,311
தெற்கத்திய பேச்சா இது?

37
00:03:05,394 --> 00:03:07,313
ஃபோர்ட் ரக்கர், அலபாமா.

38
00:03:08,814 --> 00:03:10,024
ரத்தம் வருதா?

39
00:03:10,107 --> 00:03:11,400
முதுகு உடைஞ்சிருக்கு.

40
00:03:11,483 --> 00:03:13,736
என்னை பார். நீ வார் ஈகிள்தானே ரைலி?

41
00:03:13,819 --> 00:03:15,863
இல்லை. ரோல் டைட்.

42
00:03:16,572 --> 00:03:19,033
சரி. ரோல் டைட்.

43
00:03:19,116 --> 00:03:21,243
உன்னை வீட்டுக்கு கொண்டு போறோம், சரியா?

44
00:03:21,327 --> 00:03:22,411
அப்பா!

45
00:03:36,675 --> 00:03:38,510
பறவைக்கு சரியாயிடுமா, அப்பா?

46
00:04:51,333 --> 00:04:53,877
இவனை இன்னும் எங்கும் தேடிட்டுருக்கோம்.

47
00:04:53,961 --> 00:04:56,213
சரியான இடத்தை கண்டுபிடித்தோம்னு தோணுது.

48
00:04:56,296 --> 00:05:00,300
ஏதாவது செய்யணும்னு நினைத்திருந்தோம்.
இப்ப ஒரு வாய்ப்பு தெரியுது.

49
00:05:00,384 --> 00:05:01,844
-உங்க பயணம் இன்றிரவா?
-ஆம்.

50
00:05:01,927 --> 00:05:03,679
உன்னை தாமதப் படுத்த விரும்பல.

51
00:05:03,762 --> 00:05:05,139
-பார்த்தது அருமை.
-எனக்கும்.

52
00:05:05,222 --> 00:05:07,808
-கொண்டு விடவா?
-என் ஓட்டுனர் கீழே இருக்கான்.

53
00:05:07,891 --> 00:05:09,309
அடுத்த முறை, என் செலவு.

54
00:05:09,393 --> 00:05:11,603
கண்டிப்பா. விரைவில் பார்ப்போம்.

55
00:05:13,564 --> 00:05:15,649
காத்திருந்ததுக்கு நன்றி, மைக்.

56
00:05:15,733 --> 00:05:16,692
சரி.

57
00:05:18,152 --> 00:05:20,029
-பார்த்ததில் சந்தோஷம்.
-எனக்கும்.

58
00:05:22,489 --> 00:05:23,741
ப்ரையர் இல்லன்னாலும்...

59
00:05:24,366 --> 00:05:27,870
அது தீர்க்கமானதல்ல.
நான்காம் மாடியில் ஒரு ஓட்டு இருக்கு.

60
00:05:27,953 --> 00:05:30,205
லொரைன் ஹார்ட்லேய சுலபமா கவிழ்க்க முடியாது.

61
00:05:30,289 --> 00:05:31,457
கவனி, மைக்.

62
00:05:34,460 --> 00:05:36,545
அதுக்கு அர்த்தம், நியூபெல்லம்தான்

63
00:05:36,628 --> 00:05:41,258
ராணுவ ஒப்பந்தத்தில் இன்னும் மேலோங்கி
இருக்குன்றதை உலகே அறியும் என்பது.

64
00:05:41,341 --> 00:05:43,093
என் வேலை அது. சரியா?

65
00:05:43,177 --> 00:05:46,805
ஆக, எந்த நிமிஷமும்,
எலாயஸ் ரைபர்க், கூப்பிட்டு,

66
00:05:46,889 --> 00:05:49,683
கர்ட்டிடம் மறுபரிசீலனை
செய்யச் சொல்லக் கூடும்.

67
00:05:50,684 --> 00:05:52,227
நான் உனக்கு விற்பேன்.

68
00:05:53,145 --> 00:05:56,440
நான் உனக்கு ஆர்டி4895ஐ
விற்கிறேன். உரிமை, ஆய்வு...

69
00:05:56,982 --> 00:05:58,442
எல்லாம் உனக்கு.

70
00:05:58,525 --> 00:06:00,903
நீ பகுதிகளா பிளானோவுக்கு விற்கலாம்...

71
00:06:02,362 --> 00:06:03,280
நாம் பிரிவோம்.

72
00:06:03,363 --> 00:06:06,658
இருவருக்கும் வெற்றி. உன் தேவையை தந்து,
என் நிறுவனம் என்னிடம்.

73
00:06:10,704 --> 00:06:12,372
போர்ட் அதுக்கு சம்மதிக்காது.

74
00:06:12,456 --> 00:06:16,251
உனக்கு நல்ல பேரம் தர்றேன்.
இதெல்லாம் என்னன்னு உனக்குத் தெரியும்.

75
00:06:16,335 --> 00:06:19,213
மைக், நாம் நிறுவனத்தை விற்கிறோம். முழுசா.

76
00:06:19,296 --> 00:06:21,090
சரியா? அதுதான் திட்டம்.

77
00:06:21,173 --> 00:06:23,008
மாற்று வழி என்ன? சரி,

78
00:06:24,051 --> 00:06:26,678
நியூபெல்லம் உன் தலைமையில
இருக்கணும். செய்வேன்.

79
00:06:27,721 --> 00:06:29,223
பிளானோக்கு அது தேவையில்ல.

80
00:06:51,411 --> 00:06:53,914
லிஸ், காலை மணி 8:00 ஆகுது.

81
00:06:53,997 --> 00:06:55,874
சீக்கிரம் விழிப்பவங்க பிடிக்காது.

82
00:06:55,958 --> 00:06:58,210
அவங்க உனக்கு காலை உணவு சமைத்தாலுமா?

83
00:07:01,088 --> 00:07:03,423
நாம் இன்று வீட்டுக்குத் திரும்ப போறோமா?

84
00:07:03,966 --> 00:07:05,425
அனேகமா இல்ல.

85
00:07:06,135 --> 00:07:08,512
ஹார்னின் எஸ்டேட் பிரயோசனமில்லை.

86
00:07:08,595 --> 00:07:11,098
பாதுகாக்கப் பட்ட இடம், டாலோக்கள் நிறைந்து.

87
00:07:11,890 --> 00:07:13,350
அவனை பிடிப்பது சுலபமல்ல.

88
00:07:14,143 --> 00:07:17,020
கேப்ஸ்டோன்ல நம் முயற்சிகளில்
கவனம் செலுத்தணும்.

89
00:07:17,896 --> 00:07:20,232
ஹார்னை உயிரோட பிடிக்க வாய்ப்பு வரலாம்.

90
00:07:20,315 --> 00:07:23,944
ரீஸ், அது வணிகப் பகுதியின்
நட்ட நடுவில இருக்கு.

91
00:07:24,027 --> 00:07:25,863
அது சுலபமாவா இருக்கும்?

92
00:07:28,699 --> 00:07:29,908
கண்டுபிடிக்க ஒரே வழி.

93
00:07:38,125 --> 00:07:44,131
கேப்ஸ்டோன்
தொழிற்சாலைகள்

94
00:07:56,768 --> 00:07:59,062
அழையாத விருந்தாளிங்க வந்திருக்காங்க போல.

95
00:08:00,522 --> 00:08:02,191
ஆம், அவங்கள பார்க்கிறேன்.

96
00:08:06,987 --> 00:08:08,071
இப்படி வாங்க.

97
00:08:21,710 --> 00:08:25,214
க்வினெத் பால்ட்ரோ தினம் 250 டாலர்
பழக் குழைவு குடிப்பாளாம்.

98
00:08:25,297 --> 00:08:28,675
நம்ப முடியுதா? மாகா,
அஷ்வகந்தா, மூன் டஸ்ட் கலந்து.

99
00:08:29,218 --> 00:08:30,677
நன்றி, எடி.

100
00:08:30,761 --> 00:08:35,307
ஒருத்தரின் திறமையை வளர்க்க,
உடலை பலப்படுத்தணும், தன்னுணர்வை அல்ல.

101
00:08:35,390 --> 00:08:38,435
-நான் ஸ்டீவ் ஹார்ன். நலமா?
-நான் சிறப்பு முகவர் லாயுன்.

102
00:08:38,518 --> 00:08:41,688
இவர் மார்ஷல் சர்வீஸின் மெக்கென்ஸி வில்சன்.

103
00:08:41,772 --> 00:08:45,317
உங்க டாலோஸ் பாதுகாவலர்
ஏட்ரியன் கோர்டோனிஸ் பத்தி உங்களிடம்

104
00:08:45,400 --> 00:08:46,693
நாங்க பேசணும்.

105
00:08:46,777 --> 00:08:50,656
கோர்டோவை சுட்டாங்கனு தெரிஞ்சதும்,
யாராவது வருவீங்கனு நினைச்சேன்.

106
00:08:50,739 --> 00:08:52,866
அவருக்கு லாஸ் ஏஞ்சலீஸில் என்ன வேலை?

107
00:08:52,950 --> 00:08:54,743
தெரியாது. அப்போ வேலையில் இல்ல.

108
00:08:54,826 --> 00:08:57,829
உங்களுக்கு வேலை செய்யறார்.
என்ன செய்றார்னு தெரியாதா?

109
00:08:57,913 --> 00:09:00,916
டாலோஸ் ஆட்கள் பலர்
எனக்கு வேலை செய்யறாங்க, ஆனா...

110
00:09:00,999 --> 00:09:03,043
அவங்க தனிப்பட்ட ஒப்பந்தக்காரர்கள்.

111
00:09:03,126 --> 00:09:05,212
வெளியே பல பேர் இருக்காங்களே.

112
00:09:05,295 --> 00:09:08,423
அது வழக்கமான நடவடிக்கையா, இல்ல,
யாரோ உங்களை தாக்க வந்ததாலா?

113
00:09:09,466 --> 00:09:12,052
கேப்ஸ்டோன் ஏராளமான பணத்தை பார்க்குது,

114
00:09:12,135 --> 00:09:14,096
அதுக்கேத்த அளவு பொச்சரிப்பு.

115
00:09:14,179 --> 00:09:17,683
எங்களுக்கு ஆஃப்ரிக்க தொலை தொடர்பு
தொழில்ல கண் இருக்கு,

116
00:09:17,766 --> 00:09:21,061
ஆக, போகோ ஹராமும்,
அல்-ஷபாபுக்கும் அதில் எரிச்சல்.

117
00:09:21,144 --> 00:09:23,897
-லத்தீன் அமெரிக்கால...
-பெரிய ஆள்னா, பிரச்சினை.

118
00:09:24,982 --> 00:09:28,610
சிலரை உறுத்தாம இப்படி ஒரு
அலுவலகத்தை வெச்சிருக்க முடியாது.

119
00:09:29,152 --> 00:09:31,196
ஜேம்ஸ் ரீஸை கோவப்படுத்துனீங்களா?

120
00:09:32,948 --> 00:09:34,866
பெயரை கேள்விப் பட்டதிலையே.

121
00:09:34,950 --> 00:09:36,994
ஆனா, கோர்டோக்கு நல்லா தெரியும்.

122
00:09:37,077 --> 00:09:38,912
கோர்டோதான் முதல்ல சுட்டான்.

123
00:09:39,621 --> 00:09:44,334
ஜேம்ஸ் ரீஸை, துணைத்தலைவர் சால் அக்னனின்
கொலையிலும் சந்தேகப் படறோம்.

124
00:09:46,295 --> 00:09:48,755
சால் போதை அதிகமாகி இறந்தார்னு கேள்வி.

125
00:09:49,589 --> 00:09:52,092
ஜேம்ஸ் ரீஸை பத்தி ஜாக்கிரதையா இருக்கணுமா?

126
00:09:52,175 --> 00:09:54,511
அவன் தெரியாதது போல நடிக்காதீங்க.

127
00:09:54,594 --> 00:09:58,473
உங்க உடல்ல இருக்க பச்சைபடி,
நீங்களும் ரீஸும் ஒரே அணி.

128
00:09:58,557 --> 00:10:02,019
போன் ஃப்ராக். அது தங்கள் தியாகிகளை
சீல்ஸ் அழைக்கும் விதம்.

129
00:10:02,561 --> 00:10:06,732
ஒண்ணு, இந்த திரு. ஹார்ன்
ஃப்ராக்மேனா இருந்திருக்கணும், அல்லது...

130
00:10:08,608 --> 00:10:10,235
பொய் சொல்லியிருக்கணும்.

131
00:10:13,363 --> 00:10:17,993
மேக் முன்னாள் ராணுவத்தினள். மூன்று பணிகள்.
நேர்மையின்மை பிடிக்காது. பிடிக்குமா?

132
00:10:18,076 --> 00:10:18,910
இல்ல, சர்.

133
00:10:18,994 --> 00:10:22,122
நான் ஃபோர்ட் ப்ராக்கை சார்ந்து
வளர்ந்தேன் மிஸ். வில்சன்.

134
00:10:22,205 --> 00:10:27,252
என் குடும்பத்தில், நண்பர்கள், ராணுவ சேவை
செய்தவங்கதான். சாட் மார்க் வேறாக்கியது.

135
00:10:27,336 --> 00:10:30,589
ஆனால், அதன் கலாச்சாரத்தை
எப்போதுமே மதித்தவன்.

136
00:10:31,590 --> 00:10:33,425
எனது பச்சை நினைவின் சின்னம்.

137
00:10:34,718 --> 00:10:36,094
போற்றுதல்.

138
00:10:39,931 --> 00:10:42,517
உங்களுக்கு தேவையானது கிடைத்தே வழக்கம்தானே?

139
00:10:42,601 --> 00:10:46,104
வாழ்நாள் முழுதும் வெற்றி,
அதுதான் உங்களுக்குத் தெரியும்.

140
00:10:46,188 --> 00:10:48,732
ரீஸ் தனது இரையை வேட்டையாடி கொல்பவன்.

141
00:10:48,815 --> 00:10:50,400
அதுதான் அவனுக்கு தெரியும்.

142
00:10:50,484 --> 00:10:53,528
சரி, நீங்க இந்த வழக்கை
கையாள்வதில் மகிழ்ச்சி.

143
00:10:53,612 --> 00:10:57,824
எனக்கு கூட்டங்கள் இருக்கு, தேடுவோர்
சிறப்புப் படையா? நல்லா இருக்காது.

144
00:10:57,949 --> 00:11:01,161
என் பாதுகாப்பு போதாதுன்னு
நீங்க நினைச்சா, தயை செய்து,

145
00:11:01,244 --> 00:11:04,081
உங்க வசதிப் படி பாதுகாப்பு தரலாம்.

146
00:11:04,164 --> 00:11:08,418
-என் ஆட்கள் உங்களுக்கு தொல்லை தரமாட்டாங்க.
-அது அருமை, நன்றி.

147
00:11:14,841 --> 00:11:16,802
ஒருபோதும் தனிப்பட்டதாக விடாதே, மேக்.

148
00:11:17,511 --> 00:11:19,971
என்னைப் பொறுத்தவரை இவன் மோசமானவன்.

149
00:11:20,639 --> 00:11:24,017
இவனை போற்றுவது நம் வேலை இல்ல.
இவனை காப்பாத்துவது தான்.

150
00:11:25,685 --> 00:11:27,813
உடனே என்னை சந்தித்ததற்கு நன்றி.

151
00:11:27,896 --> 00:11:31,441
வதந்திகளால், விற்பனைக்கு முன்பே
தகவல்களை தெரிஞ்சுக்கலாம்னு.

152
00:11:31,525 --> 00:11:35,362
தி அட்லாண்டிக்ல அட்டையில
வந்தா பேரத்தை முடிக்க உதவுமா?

153
00:11:36,029 --> 00:11:37,906
அது அனேகமா பழுதாகாது, ஆம்.

154
00:11:38,698 --> 00:11:42,577
வியாபாரத்துக்காக நியூபெல்லத்தை
மருந்து தயாரிக்க நிறுவினீங்க,

155
00:11:42,661 --> 00:11:45,664
-அல்ஸெய்மர்ஸ்...
-டாக்டர் டெடெஸ்கோ நரம்பியல் படித்தவர்

156
00:11:45,747 --> 00:11:48,875
-கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில
-பெர்க்லி, குறிப்பு இருக்கு.

157
00:11:48,959 --> 00:11:51,420
அதுதான் ஏன்னு யோசிச்சேன்.

158
00:11:51,503 --> 00:11:55,048
அல்ஸெய்மர்ஸ் ஏன்? குடும்ப நோய் இல்லயே.

159
00:11:58,677 --> 00:12:00,429
ஃப்ளவர்ஸ் ஃபார் அல்ஜர்னான்.

160
00:12:00,512 --> 00:12:02,180
இளங்கலைல படிச்சது, அதோட...

161
00:12:02,264 --> 00:12:06,810
தன்னைத் தானே இழக்கும் எண்ணம்,
அலைக்கழிக்கும் கொடுங்கனவு ஆனது.

162
00:12:06,893 --> 00:12:09,438
அப்போ, விஷயங்களை
மாத்த முடியும்னு நினைச்சேன்.

163
00:12:10,230 --> 00:12:13,859
"அப்போ" வா? அந்த
உற்சாக உணர்வு இப்ப போயிடுச்சா?

164
00:12:13,942 --> 00:12:19,114
இல்லவே இல்லை. எங்க மனித மேம்பாட்டு நிரல்,
டாக்டர். டெடெஸ்கோவின் வாழ்நாள் சாதனை.

165
00:12:19,197 --> 00:12:23,493
கேப்ஸ்டோன் வரும் வரை,
நீங்க ராணுவ ஊக்க மருந்துல ஈடுபடல,

166
00:12:23,577 --> 00:12:25,454
ராணுவ வீரர்களை மேம்படுத்த.

167
00:12:25,954 --> 00:12:29,833
சிலர் உங்க வாழ்நாள் சாதனையை சுயநலத்துக்கு
பயன்படுத்தியதா சொல்வாங்க.

168
00:12:29,916 --> 00:12:33,628
பாதுகாப்புத் துறையுடனான எங்கள்
ஒப்பந்தங்கள், எங்களை பசி குறைப்பு

169
00:12:33,712 --> 00:12:37,048
தூக்க உதவி, ஆக்சிஜன் கிரகிப்பு
தொழிலில் முன்னோடிகளாக்கியது...

170
00:12:37,132 --> 00:12:39,426
நான் சொன்ன மாதிரி சுயநல பயன்.

171
00:12:41,887 --> 00:12:43,346
மன்னிக்கணும்.

172
00:12:45,348 --> 00:12:49,227
மிஸ் புரனெக், நீங்க கேட்கிறதெல்லாமே
இணையத்தில் கிடைக்கும்.

173
00:12:50,395 --> 00:12:54,399
ஒருவேளை, எங்க விரிவாக்க முயற்சிகளை
தெரிஞ்சுக்க விரும்புவீங்களோ?

174
00:12:54,483 --> 00:12:56,401
நாங்க இன்னும் விரிவாக்கம்...

175
00:12:56,485 --> 00:12:59,154
வேணாம். எனக்குத் தேவையானது
கிடைத்தது. நன்றி.

176
00:13:16,213 --> 00:13:17,422
ஹேய்! என்ன ஆச்சு?

177
00:13:17,506 --> 00:13:21,635
நான் பேட்டி காண வந்தது உங்களை,
அங்க இருக்கும் பொம்மை மனுஷியை அல்ல.

178
00:13:22,677 --> 00:13:24,554
ஃபார்மா டைம்ஸ் பேட்டி படித்தேன்.

179
00:13:24,638 --> 00:13:28,892
ஸ்டீவ் ஹார்ன் கையாண்ட விதத்தில
உங்களுக்கு கவலை இருக்கும்னு நினைத்தேன்.

180
00:13:28,975 --> 00:13:33,772
நான் ஸ்டீவோட ஒத்துப் போகாம இருக்கலாம்,
ஆனா அவருக்கு லாபம் பெறும் விதம் தெரியும்.

181
00:13:33,855 --> 00:13:36,816
அதனால்தான் பென்ட்ஹெளஸ்ல
உங்க எதிர்காலத்தை நிர்ணயம்

182
00:13:36,900 --> 00:13:40,278
செய்து, உங்களை கான்ஃபரன்ஸ் அறையில்
வேலை செய்யச் சொல்றார்,

183
00:13:41,071 --> 00:13:42,948
ஆர்டி-4895 என்பது என்ன?

184
00:13:46,243 --> 00:13:48,495
உங்களுக்கு அதில் எவ்ளோ அதிகாரம் இருக்கு?

185
00:13:49,621 --> 00:13:53,041
அதை உபயோகிப்பவர்களுக்கு
மூளைக் கட்டி வரவைக்குது என்றால்?

186
00:13:53,124 --> 00:13:57,087
யாரும் பயன்படுத்தல.
இன்னும் மனித சோதனைக்கு அது வரல.

187
00:13:58,296 --> 00:13:59,631
ஆனா, வந்திருந்தால்?

188
00:14:01,967 --> 00:14:04,386
ரெண்டு மாதம் முன் சிரியா அனுப்பப் பட்டு

189
00:14:04,469 --> 00:14:07,639
திரும்பவே வராத சீல்ஸ் பிளாடூன்ல
அது பயன்பட்டிருந்தால்?

190
00:14:09,349 --> 00:14:10,767
அதைப் பத்தி சொல்வீங்களா?

191
00:14:16,022 --> 00:14:17,983
எனக்கு உண்மையில,

192
00:14:18,858 --> 00:14:22,988
மிக உண்மையா, நீங்க
என்ன பேசறீங்கன்னு புரியல.

193
00:14:35,625 --> 00:14:39,296
இதை மனனப் படுத்திகிட்டு,
நினைவிலிருத்தி, கழிவறைல போட்டுடுங்க.

194
00:14:39,921 --> 00:14:42,549
நீங்க பேச தயாராகும் போது என்னை அணுகுங்க.

195
00:15:40,190 --> 00:15:43,693
இதுதான் உங்க இலக்கு இடம்.
ஹார்னை பார்க்க ஏதுவான இடம்.

196
00:15:44,694 --> 00:15:45,904
எனக்குத் தெரியாது.

197
00:15:46,404 --> 00:15:49,616
பொதுமக்களுக்கு சேதமில்லாம,
ஆறு வீரர்களைக் கொன்று,

198
00:15:49,741 --> 00:15:52,619
எஃபிஐயை மீறி, ஹார்னை
உயிரோடு கொண்டு வர வேண்டுமே?

199
00:15:52,702 --> 00:15:54,788
அவன் நிச்சயமா உயிரோடு இருந்தாகணுமா?

200
00:15:56,623 --> 00:15:57,707
ஆம்.

201
00:15:58,958 --> 00:16:00,710
அவன் சில பதில்கள் தரணும்.

202
00:16:03,546 --> 00:16:06,591
எனக்கு என்ன செய்தான்?
அவனுக்கு உதவியது யார்?

203
00:16:14,849 --> 00:16:16,101
எப்படி இருக்க, ரீஸ்?

204
00:16:17,560 --> 00:16:18,561
நலம்தானே?

205
00:16:19,771 --> 00:16:20,939
நான் நலம்.

206
00:16:25,276 --> 00:16:29,698
இந்த மாத்திரைகள் நல்லா வேலை செய்யுது.
நான் நேரத்தோட செய்தால்...

207
00:16:32,117 --> 00:16:34,703
நாங்க நலம். எங்களால சாதிக்க முடியும்.

208
00:16:35,954 --> 00:16:37,080
அது சரி.

209
00:16:37,664 --> 00:16:39,624
சரி, நான் போய் ரானிடம் பேசறேன்.

210
00:16:39,708 --> 00:16:42,627
விமான கொட்டகைல இன்னும் சில நாள்
இருக்கலாமா பார்க்கிறேன்.

211
00:16:51,511 --> 00:16:53,555
டெடெஸ்கோவோட பேசினேன். சக்தியற்றவன்.

212
00:16:53,638 --> 00:16:56,725
விற்பனையை கூட விருமபல.
ஹார்னை பிடிக்கல போல.

213
00:16:56,808 --> 00:17:00,437
நான் ஆர்டி-4895 பத்தி
சொன்னப்போ, அப்படியே கோபப்பட்டான்.

214
00:17:00,520 --> 00:17:02,230
அவன் அதில் ஈடுபட்டிருக்கானா?

215
00:17:03,106 --> 00:17:06,651
-அட, அவனுக்கு நிச்சயமா ஏதோ தெரியும்.
-நீ என்ன செய்யப் போறே?

216
00:17:07,610 --> 00:17:08,737
நிலைமையை பொறுத்து.

217
00:17:16,411 --> 00:17:20,081
நீ சான் ஃபிரான்சிஸ்கோல இருப்பது தெரியும்.
கிளம்பணும். எஃபிஐ உன்னை தேடுது

218
00:17:20,165 --> 00:17:22,542
-அடச்சே.
-என்ன ஆனது?

219
00:17:29,799 --> 00:17:30,842
கேட்டி?

220
00:17:35,054 --> 00:17:38,349
பல்கலைக் கழகத்தில
ரெண்டு இருக்கு. ஒண்ணு செரோகி தெருவில்.

221
00:17:38,433 --> 00:17:41,853
அட, கிரிக்கெட் இணைப்பை
யாரும் பயன்படுத்தறாங்களா என்ன?

222
00:17:41,936 --> 00:17:43,688
அதான், கொஞ்சம் பேர்தான்.

223
00:17:44,230 --> 00:17:46,065
என்ன சொல்ல வர்றே ஜூனியர்?

224
00:17:46,941 --> 00:17:48,485
நான் சொல்ல வருவது,

225
00:17:49,360 --> 00:17:51,863
அவ்ளோ செல்ஃபோன்களை அவங்க விற்க முடியாது.

226
00:17:51,946 --> 00:17:54,741
அது வெறும் கண் துடைப்பு,
நான்தான் சொல்றேனே.

227
00:17:54,824 --> 00:17:57,202
உனக்கு நிறைய நேரம் இருக்கு.

228
00:17:57,994 --> 00:18:00,079
டுலா, எனக்கு நிறைய நேரம் இருக்கு.

229
00:18:00,163 --> 00:18:02,040
நிருபர் கண்காணிப்பு எப்படி போகுது?

230
00:18:04,375 --> 00:18:08,254
-பரவாயில்லை, பாஸ். எல்லாம் நல்ல...
-இங்க இன்னும் ஆள் வேணும், சர்.

231
00:18:08,338 --> 00:18:10,340
முடிந்த அளவு ஆள் அனுப்பியாச்சு.

232
00:18:10,423 --> 00:18:14,052
எனக்கு புரியுது, மற்றும் எல்லாரோட
பொறுமையை பாராட்டறேன்.

233
00:18:15,053 --> 00:18:18,181
நாம சரியான இடத்தில இருக்கோம்.
இதையே தொடருவோம்.

234
00:18:19,349 --> 00:18:21,392
எங்களோட இறுதி அறிக்கை,

235
00:18:21,476 --> 00:18:24,312
ஒப்பமற்ற பல கண்டுபிடிப்பு
வேலை ஒப்பந்தங்களை காட்டுது.

236
00:18:24,395 --> 00:18:25,396
இப்ப நிலைமை என்ன?

237
00:18:25,480 --> 00:18:28,066
எல்லாத்தையும் மெய்நிகர் தரவு அறைல தருவோம்.

238
00:18:28,149 --> 00:18:29,192
நன்றி.

239
00:18:29,275 --> 00:18:32,237
இதை நிறைவேற்றிய உன்
முயற்சியை பாராட்டறேன் மைக்.

240
00:18:33,363 --> 00:18:36,616
இருந்தாலும், மதிப்பீட்டை
மறுபரிசீலனை செய்யணும்.

241
00:18:37,700 --> 00:18:39,494
அடிப்படைகள் மாறிவிட்டன.

242
00:18:40,203 --> 00:18:43,623
நாங்கள் சலுகை தந்த பின்,
பென்டகனுடனான

243
00:18:43,706 --> 00:18:45,375
உங்க ஒப்பந்தங்களுக்கு ஆபத்தானது.

244
00:18:45,458 --> 00:18:47,335
எங்க ஒப்பந்தங்கள் நிலைத்தன.

245
00:18:50,797 --> 00:18:54,843
உங்களுக்கு கவலையாக இருந்தா,
எல்லாத்தையுமே நிறுத்திடலாம்.

246
00:19:05,687 --> 00:19:06,813
எவ்ளோ தருவீங்க?

247
00:19:10,108 --> 00:19:11,651
எங்கள அறையில் தனியா விடுங்க.

248
00:19:22,078 --> 00:19:24,372
மைக், நீயும்தான். தயவு செய்து.

249
00:20:04,829 --> 00:20:06,080
நியூபெல்லம் ஃபார்மசூடிகல்ஸ்

250
00:20:06,164 --> 00:20:07,540
பணமாக்கல் பட்டியல்:
நியூபெல்லம் ஃபார்மசூடிகல்ஸ்

251
00:20:07,624 --> 00:20:09,083
அங்கீகரிக்கப்பட்ட பங்குகள்: 4,50,00,000
நிலுவையில் உள்ள பங்குகள்: 4,00,00,000

252
00:20:09,167 --> 00:20:10,460
மீதமுள்ள விற்கப் பட வேண்டிய
பங்குகள்: 50,00,000

253
00:20:38,947 --> 00:20:41,741
-மைக்?
-சீல் ரெண்டு மாதம் முன் இடம் மாறினாங்களா?

254
00:20:41,824 --> 00:20:42,742
ஆம்.

255
00:20:42,825 --> 00:20:44,619
சொல்வது பயனுள்ளதாக இருக்கலாம்.

256
00:20:44,702 --> 00:20:48,373
வேணாம், சேட்ல வேணாம்.
நேரா பேசும் போது சொல்லுங்க.

257
00:20:48,456 --> 00:20:50,208
ஆனா இன்றிரவுக்குள் சொல்லணும்.

258
00:20:50,291 --> 00:20:53,670
சரி. தகவல் தர்றேன். உங்க ஸ்மார்ட்
ஃபோனை எடுத்து வர வேணாம்.

259
00:21:20,113 --> 00:21:22,031
விலையை முடிவு செய்தியா?

260
00:21:25,493 --> 00:21:28,413
நான் இன்று செய்த பிரச்சனைக்கு
மன்னிக்கவும்.

261
00:21:31,040 --> 00:21:33,584
ஒண்ணும் பங்கமில்ல.
தப்பில்ல. பார்த்துப்போம்.

262
00:21:37,338 --> 00:21:42,260
சில வருடங்களா நாம் உச்சிகளை தொட்டோம்.
கஷ்டமில்லாம இருக்காது, தெரியும்.

263
00:21:42,343 --> 00:21:45,138
ஆனா, உன் விசுவாசத்தை பாராட்டறேன், மைக்.

264
00:21:45,638 --> 00:21:48,891
நமது வேலையால், சிலர்
இன்னும் உயிரோட இருக்காங்க.

265
00:21:48,975 --> 00:21:52,562
ஆக, நாம நல்லது செய்வோம்னு
சொன்ன சத்தியத்தை காப்பாத்தினே.

266
00:21:55,648 --> 00:21:56,774
நன்றி, மைக்.

267
00:21:59,110 --> 00:22:01,029
நாளை உன்னை பார்க்கிறேன், ஸ்டீவ்.

268
00:22:25,303 --> 00:22:27,680
அவன் மைய சர்வரில் உள்ளீடு செய்தான்.

269
00:22:27,764 --> 00:22:31,309
எதை பதிவெடுத்தான் தெரியல,
ஆனா, பத்திரிக்கையாளரிடம் பேசறான்.

270
00:23:52,557 --> 00:23:54,016
திட்டம் என்ன?

271
00:23:57,228 --> 00:23:58,771
வாகன வரிசை பிரியுது.

272
00:24:00,273 --> 00:24:01,524
ஹார்னை தொடரு.

273
00:24:21,252 --> 00:24:22,253
சொல்?

274
00:24:22,920 --> 00:24:26,048
எப்பவாவது, ஹார்னின் வாகன வரிசை
பிரிவதை பார்த்திருக்க?

275
00:24:26,132 --> 00:24:28,718
-ஒரு முறை கூட இல்ல. என்னாச்சு?
-சொல்றேன்.

276
00:24:38,769 --> 00:24:43,649
அனைத்து பயணிகளும் கவனிக்க. பயணத்தில்
உங்க கிளிப்பர் கார்டை மறந்துடாதீங்க...

277
00:24:45,401 --> 00:24:49,155
தெளிவா இருக்கணும். நியூபெல்லம்
சட்ட விரோதமா ஏதும் செய்யுதுன்னா,

278
00:24:49,238 --> 00:24:52,783
அதுக்கு நான் பொறுப்பல்ல. உங்க செய்தி
இதை புரிஞ்சுக்கலன்னா...

279
00:24:52,867 --> 00:24:55,453
உங்களை நம்பறேன்.
அதான் வந்தேன். சொல்லுங்க.

280
00:24:55,536 --> 00:24:57,705
ஆர்டி-4895, ஹிப்போகேம்பஸ், ஆமிக்டாலா

281
00:24:57,788 --> 00:25:00,958
இடையே தொடர்பை மழுங்கடிக்கும்
ஒரு ஊக்க மருந்து.

282
00:25:01,042 --> 00:25:05,254
அது சண்டை வேதனையை நீக்கி, மத்த நினைவை
பதிக்கச் செய்ய மூளைக்கு உதவுகிறது.

283
00:25:05,796 --> 00:25:07,882
சண்டை வேதனையா? பிடிஎஸ்டி போலவா?

284
00:25:07,965 --> 00:25:12,428
ஆம். நாங்க ஆர்டி-4895ஐ
ரெண்டு வருடம் முன் உருவாக்க ஆரம்பித்தோம்.

285
00:25:12,511 --> 00:25:16,724
பிடிஎஸ்டிக்கு எதிரான தடுப்பு மருந்து,
ஹார்னின் கனவு. அது அவனது பேராசை.

286
00:25:16,807 --> 00:25:20,019
ஆனா, மிருக சோதனைக்கு பின்,
திட்டத்தை கிடப்பில போட்டான்.

287
00:25:20,102 --> 00:25:22,939
அப்போ அது புரியல, ஆனா ரெண்டு மாதம் முன்,

288
00:25:23,022 --> 00:25:25,274
எங்க கேப் டேபிள்ல குளறுபடிகளை பார்த்தேன்.

289
00:25:25,358 --> 00:25:27,526
-கேப் டேபிள்னா?
-பணமாக்கல் பட்டியல்.

290
00:25:27,610 --> 00:25:31,447
என் நிறுவன பங்குதாரர்களையும்,
முதலீடுகளையும் கணக்கிடும் ஆவணம்.

291
00:25:31,572 --> 00:25:34,075
இதுக்கும் சீல்ஸுக்கும் என்ன தொடர்பு?

292
00:25:35,368 --> 00:25:36,452
எல்லாமேதான்.

293
00:25:46,754 --> 00:25:52,718
மாறும் நிலையம்

294
00:26:08,234 --> 00:26:09,402
கடவுளே!

295
00:26:11,028 --> 00:26:12,738
நாம் விவாதிப்பது எவ்ளோ பணம்?

296
00:26:12,822 --> 00:26:15,241
ஒவ்வொரு பாண்டு வெளியீடும் ஒண்ணு,
ஒன்றரை கோடி.

297
00:26:15,324 --> 00:26:18,995
ஆனா, நியூபெல்லத்தில் ரைபர்க்கின்
முக்கிய இலக்கு, ஆர்டி-4895.

298
00:26:19,078 --> 00:26:22,581
சீல்ஸ்களிடம் அது மூளைக் கட்டியை
ஏற்படுத்தியது என்று நினைத்தால்,

299
00:26:22,665 --> 00:26:24,041
செய்திய இன்றிரவே வெளியிடு.

300
00:26:24,125 --> 00:26:25,334
பேரத்தை தடுப்போம்.

301
00:26:25,418 --> 00:26:27,837
அப்படி முடியாது. பரிசீலனை, ஆசிரியர்கள்...

302
00:26:27,920 --> 00:26:30,881
கருவூலம், பொருளாதார
குற்றத் தடுப்பு இதெல்லாம் இருக்கு.

303
00:26:30,965 --> 00:26:32,008
எத்தனை நாளாகும்?

304
00:26:32,633 --> 00:26:36,637
இது முக்கிய செய்தி, நல்லா செஞ்சீங்க.
நீங்க பேரத்தை நிறுத்த முடிஞ்சா...

305
00:26:41,517 --> 00:26:42,977
ஃபோனை எடுத்து வந்தீங்களா?

306
00:26:43,060 --> 00:26:45,396
கார்லயே விட்டுட்டேன், நீதான் சொன்னியே.

307
00:26:45,479 --> 00:26:48,649
நான் அலுவலகத்திலயே வைக்கச் சொன்னேன்.
நாம போகணும்.

308
00:28:01,639 --> 00:28:03,641
போகணும், கிளம்பு. ஆகட்டும்.

309
00:28:26,539 --> 00:28:28,999
அவங்களுக்குத் தெரியும். நாங்க சந்திச்சது.

310
00:28:32,044 --> 00:28:34,588
மூச்சு விடு.
உன் இதயம் படபடன்னு அடிக்குது.

311
00:28:34,672 --> 00:28:36,882
இங்க வா. நீ அமைதியாகணும்.

312
00:28:36,966 --> 00:28:40,136
எஃப்பிஐ முகவர்,
இதில பங்கில்லனு தோணுது. அவன் உதவலாம்.

313
00:28:40,219 --> 00:28:42,847
எஃபிஐ திட்டம் இதில் இல்லை. இதைக் குடி.

314
00:28:42,930 --> 00:28:43,889
எனக்கு தாகமில்ல.

315
00:28:43,973 --> 00:28:46,434
நீ அமைதியாகலன்னா, அதிர்ச்சிக்குள்ளாவாய்.

316
00:28:48,561 --> 00:28:51,939
நீ ஒரு போர் நிருபர்.
இதற்க்கு முன் சண்டை பார்த்திருப்பாய்.

317
00:28:52,022 --> 00:28:54,316
ஆனா என்னிடம் துப்பாக்கி இருந்ததில்லை.

318
00:28:55,568 --> 00:28:59,363
சரி, இப்ப இருக்கு. சொல்லு.
ஹார்ன் உன்னைத் தேடுவது ஏன்?

319
00:29:04,577 --> 00:29:09,874
ஆர்டி-4895 நியூபெல்லம் ஃபார்மசூடிகல்ஸ்
உருவாக்கிய ஒரு மருந்து.

320
00:29:09,957 --> 00:29:14,211
அதன் வேலை, வேதனையை
மூளையில் பதிப்பதை நிறுத்தி,

321
00:29:14,295 --> 00:29:17,173
முழுமையா பிடிஎஸ்டியை அது தடுக்கும்.

322
00:29:17,256 --> 00:29:22,178
எலியில் வேலை செய்தது. நாயில் வேலை
செய்தது. பிறகு, ஹார்ன் மனிதருக்கு வந்தான்.

323
00:29:23,304 --> 00:29:24,722
அது மூளைக் கட்டி கொடுத்தது.

324
00:29:24,805 --> 00:29:26,724
ஆம், ஆர்டி4895 வேலை செய்தால்,

325
00:29:26,807 --> 00:29:30,811
நியூபெல்லம் ஃபார்மசூடிகல்ஸ்
உலகிலே மதிப்பு மிக்க நிறுவனமாகும்.

326
00:29:30,895 --> 00:29:33,731
தோல்வியானா, ஹார்னின்
எல்லா முதலீடும் வீணாகும்.

327
00:29:33,814 --> 00:29:37,067
1500 முதல் 2000 கோடி டாலர் முழுகிவிடும்.

328
00:29:37,151 --> 00:29:39,445
அதனால்தான் இப்பவே விற்க துடிக்கிறான்.

329
00:29:39,528 --> 00:29:41,155
வேற யாருக்குத் தெரியும்?

330
00:29:41,238 --> 00:29:46,327
இரண்டு மாதம் முன், நியூபெல்லத்தில்
ஹார்ன் பத்து கோடி டாலரை எடுத்து,

331
00:29:46,410 --> 00:29:49,705
பிரித்து சில பெயரளவு
நிறுவனங்களுக்கு அனுப்பினான்.

332
00:29:49,788 --> 00:29:51,916
இரண்டு மாதம் முன் வேறென்ன நடந்தது?

333
00:29:52,500 --> 00:29:56,086
இந்த பங்குகள் லஞ்சம். சிரியாவுக்கு.
எங்க ஆட்களைக் கொல்ல.

334
00:29:57,296 --> 00:30:00,633
கதையை முடிக்க விடுங்க.
இப்ப தி அட்லான்டிக் என்னை ஆதரிக்கும்.

335
00:30:00,716 --> 00:30:04,011
அதாவது எல்லா பெரிய ஊடக
வெளியீடுகளும் இதன் பின்னால் இருக்கும்.

336
00:30:04,970 --> 00:30:07,765
பெயர்களை சொல். யார் லாபம் பெறுவார்கள்?

337
00:30:08,474 --> 00:30:10,059
நிறுவன பெயர்கள் இருக்கு.

338
00:30:10,142 --> 00:30:11,810
நல்லது. நிறுவன பெயர்களை சொல்.

339
00:30:13,145 --> 00:30:16,815
நேரம் வேணும். பொருளாதார குற்ற
தடுப்பை அணுகணும், பங்குதாரர்கள்...

340
00:30:16,941 --> 00:30:19,485
-கூடாது.
-எல்லாமே அப்படியே தகரும்.

341
00:30:19,610 --> 00:30:22,071
ஹார்ன், எல்லோரும்
வறுத்தெடுகப் படுவாங்க.

342
00:30:22,154 --> 00:30:24,323
இது உன் செய்தி கதை பத்தி அல்ல.

343
00:30:28,160 --> 00:30:28,994
பெயர்களை கொடு.

344
00:30:29,870 --> 00:30:30,704
இப்பவே!

345
00:30:39,421 --> 00:30:40,673
ரீஸ்! என்ன இது!

346
00:30:54,895 --> 00:30:58,816
-இந்த வழியா போனா பஸ் நிலையம் வரும்.
-ரீஸ், நான் சொல்றதை கேட்கல.

347
00:30:58,899 --> 00:31:02,695
என் நண்பர்களை, குடும்பத்தை
கொன்னவங்க ஜெயிலுக்குப் போகப் போறதில்ல.

348
00:31:03,737 --> 00:31:04,947
நீ சுத்தப் படுத்திக்கோ.

349
00:31:05,030 --> 00:31:07,241
இன்னும் ஆட்கள கொன்னா, செய்தி வராது.

350
00:31:07,324 --> 00:31:09,702
ஹார்ன், யாரும், கண்டுக்கவே மாட்டாங்க!

351
00:31:09,785 --> 00:31:13,289
உன் முகம்தான் செய்தியா வரும்!
நீ பயங்கரவாதின்னு நினைப்பாங்க.

352
00:31:13,372 --> 00:31:16,667
சான் ஃப்ரான்சிஸ்கோலருந்து போ.
இல்ல ஹார்ன் கொன்னுடுவான்.

353
00:31:16,792 --> 00:31:19,920
மறுபடி பிரச்சினையில் மாட்டிக்கொண்டா,
நான் பொறுப்பல்ல.

354
00:31:52,536 --> 00:31:55,497
என்னை எழுப்பறதுக்கே
ஃபோன் பண்றே போலிருக்கு.

355
00:31:55,581 --> 00:31:59,710
ஆம், மன்னி சகோதரா. கவனி, பொருளாதார
குற்றத் தடுப்பு தொடர்பு கிடைத்தா?

356
00:31:59,793 --> 00:32:01,128
கிடைக்கும்.

357
00:32:01,211 --> 00:32:03,839
ஒரு பணமயமாக்கல் அட்டவணை அனுப்பறேன், பென்.

358
00:32:03,922 --> 00:32:07,760
ஹார்னின் ஆர்டி-4895 வலையில
லாபம் பார்த்த அனைவரும்.

359
00:32:08,385 --> 00:32:10,888
பெயரளவு நிறுவனங்கள்.
பெயர்களைத் தருவாயா?

360
00:32:10,971 --> 00:32:13,724
வலிந்து வந்த வேலைக்காக, இவ்ளோ செய்றோம்.

361
00:32:14,850 --> 00:32:17,978
இதை தேடி போனா,
எல்லோரும் கேள்வி கேட்பாங்க.

362
00:32:18,812 --> 00:32:20,397
பெயர்களைத் தர முடியுமா?

363
00:32:25,152 --> 00:32:26,195
அனுப்பு.

364
00:32:29,114 --> 00:32:30,240
அடச்சே.

365
00:32:31,617 --> 00:32:34,495
இந்த முறை யாரும் "தோல்வி"
என்று சொல்ல கூடாது.

366
00:32:34,578 --> 00:32:37,206
செனட்டர் ப்ரையர் இல்லாமல்
அரண் அமைத்து, புதுசா

367
00:32:37,289 --> 00:32:38,916
வரவு செலவு திட்டம் பெறுவோம்.

368
00:32:38,999 --> 00:32:41,919
லொரைன் பத்தி தெரியும்.
பழியை ஏத்துக்க மாட்டா.

369
00:32:42,002 --> 00:32:43,128
அமைதியா இரு.

370
00:32:44,463 --> 00:32:46,340
எனினும், அவங்க...

371
00:32:46,423 --> 00:32:50,094
மன்னிக்கணும், நான் செய்ய வேண்டிய
ஒரு வேலை நினைவு வருது.

372
00:33:18,831 --> 00:33:20,374
இதையா தேடறீங்க ரிச்சர்ட்?

373
00:33:22,668 --> 00:33:27,214
கிரிப்டெக்ஸ் ஃபோன் எல்லாம் இயல்புதான்,
ஆனா, நம்ம நெட்வொர்க்ல இருக்கணும்.

374
00:33:27,297 --> 00:33:30,134
வழக்கறிஞர் கூப்பிடலாம்,
ஆனா இதைத்தான் சொல்வாங்க.

375
00:33:30,217 --> 00:33:31,635
நீ ஒத்துழைக்கணும்.

376
00:33:31,719 --> 00:33:35,889
இது ஏஜென்ட் அஸாட், டிசிஐஎஸ்.

377
00:33:35,973 --> 00:33:39,893
ஹார்ன் பணத்தை பிரித்து உங்க அம்மா
கணக்குக்கு ஒதுக்கியிருக்கான்,

378
00:33:39,977 --> 00:33:42,646
-இது... எவ்ளோ நாளா?
- ரெண்டு வருஷம் போல, மேடம்.

379
00:33:42,730 --> 00:33:47,609
ரொம்ப வினோதம். 2014ல், மேக்கியின்
இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன்.

380
00:33:51,405 --> 00:33:52,865
என்ன எதிர்பார்த்தாய்?

381
00:33:54,408 --> 00:33:57,619
நீ 70,000 கோடி டாலர்
வரவு செலவை மாற்றியமைத்தாய்.

382
00:33:57,703 --> 00:34:00,122
அது என் வேலை, ரிச்சர்ட்.

383
00:34:01,582 --> 00:34:04,710
லொரைன், ஜெஸ்ஸிகா என்னை
விவாகரத்தாக்கி வீசினா...

384
00:34:04,793 --> 00:34:09,923
என்னிடம் இருப்பது போலவே நீ ஹார்னுக்கும்
தண்டமா இருந்திருக்கணும், ச்சே!

385
00:34:11,592 --> 00:34:14,136
ஆனா செய்தி அனுப்ப உன்னை பயன்படுத்த போறோம்.

386
00:34:15,471 --> 00:34:17,139
நான் ரெண்டு பக்கமும் ஆடணுமா?

387
00:34:21,810 --> 00:34:22,895
சரி.

388
00:34:23,729 --> 00:34:24,730
செய்யறேன்.

389
00:34:25,647 --> 00:34:27,608
ஆனா, என் வழக்கறிஞரிடம் பேசணும்.

390
00:34:27,691 --> 00:34:32,571
நிஜமா சொல்லலை. நாங்க உனக்கு
செய்யப் போவது ஒரு செய்தியை அனுப்பும்.

391
00:34:33,197 --> 00:34:35,073
ஹார்னுக்கு ராணுவ வீரனா நடக்க ஆசை.

392
00:34:35,908 --> 00:34:37,326
அவனே போரை உருவாகிட்டான்.

393
00:34:58,055 --> 00:35:01,600
செய்தி - பிளானோவும் நியூபெல்லமும்
ஒன்றாகும் பெரிய பேரம் இறுதியாகிறது

394
00:35:25,249 --> 00:35:28,836
ஆக, நீ சந்தேகித்த பெயர்கள் அதில்.
மார்கஸ் போய்கின், சால் ஆக்னன்,

395
00:35:28,919 --> 00:35:30,838
இருவருக்கும் நிறுவனத்தில் பங்குண்டு.

396
00:35:31,755 --> 00:35:35,259
ஆனா, அடுத்த பெயர்களை கேட்டா
அதிர்ந்து போவாய்.

397
00:35:36,468 --> 00:35:38,804
கவனி, என் ஆள் நல்லா உறுதி செய்தான்.

398
00:35:40,264 --> 00:35:42,349
ஏனென்றால் இந்தப் பெயர்கள்...

399
00:35:43,350 --> 00:35:44,643
எல்லாத்தையுமே மாற்றும்.

400
00:35:46,520 --> 00:35:48,063
என்னிடம் சொல்லிவிடு, பென்.

401
00:36:06,748 --> 00:36:07,958
அது அட்மிரல்.

402
00:36:10,168 --> 00:36:11,795
அதுக்கு என்ன அர்த்தம்?

403
00:36:13,797 --> 00:36:15,674
பணமய பட்டியலில் பில்லரின் பெயர்.

404
00:36:16,633 --> 00:36:19,803
ஹாவர்டின் பெயரும். அதோட கமாண்டர் காக்ஸ்.

405
00:36:23,056 --> 00:36:24,182
அது வார்காம்.

406
00:36:27,019 --> 00:36:28,770
மோசமானவங்க.

407
00:36:31,857 --> 00:36:33,275
எல்லாம் அவங்க செய்தது.

408
00:36:34,151 --> 00:36:38,196
அதை நம்ப முடியல. அட்மிரல், உன் அதிகாரிங்க,
லாரெல், லூசியை கொன்னாங்களா?

409
00:36:42,910 --> 00:36:43,869
ஏன்?

410
00:36:44,620 --> 00:36:46,121
எல்லோருக்கும் ஒரே காரணம்தான்.

411
00:36:49,458 --> 00:36:52,044
செய்துவிட்டு தப்பிடலாம்னு நினைச்சாங்க.

412
00:36:55,964 --> 00:36:58,592
நீ வாங்க வேண்டிய பொருட்கள் பட்டியல், லிஸ்.

413
00:36:58,675 --> 00:37:00,135
வேதியியல் பொருட்கள்.

414
00:37:00,218 --> 00:37:02,220
சிலதை பெட்டி விளம்பரங்களில் பார்.

415
00:37:02,304 --> 00:37:05,515
கேட்டா உன் குழந்தைக்கு
அறிவியல்ல ரொம்ப நாட்டம்னு சொல்.

416
00:37:05,599 --> 00:37:09,102
மத்ததெல்லாம், வெவ்வேறு இடங்களில்.
பல கடைகள், பல ஊர்களில்.

417
00:37:09,186 --> 00:37:11,188
பணம் குடுத்தே வாங்கு.

418
00:37:11,271 --> 00:37:13,774
மார்கோவிடம் நிறைய மீதம் இருக்கும்.

419
00:37:13,857 --> 00:37:16,193
நாம் உண்மையில் குண்டை தயாரிக்கப் போறோமா?

420
00:37:16,276 --> 00:37:18,195
ஊடுறுவி வெடிக்கும் குண்டு தயாரிப்போம்.

421
00:37:19,821 --> 00:37:24,493
ஹேய், கொஞ்சம் மெதுவாக செய்வோம்.
என்ன நடக்குதுன்னு யோசிப்போம்...

422
00:37:24,576 --> 00:37:26,119
லிஸ், எனக்கு நேரமில்லை.

423
00:37:26,203 --> 00:37:29,539
அப்ப, பென்னும் இங்க வரட்டும்.
நாம் இதை தீர ஆய்வு...

424
00:37:29,623 --> 00:37:31,041
சொல்றதை கேள்!

425
00:37:31,124 --> 00:37:33,502
உன்னைக் காப்பாத்த நஜாஃப் வந்தப்போ...

426
00:37:34,461 --> 00:37:36,588
இதெல்லாம் நாங்க நினைக்கல, சரியா?

427
00:37:37,130 --> 00:37:40,300
-அதைச் செய்து தொலைக்காதே!
-பென், பூஸெர், டானி.

428
00:37:40,384 --> 00:37:41,760
எது சரின்னு தெரியும்.

429
00:37:42,469 --> 00:37:45,180
இப்ப, அவர்களில் ரெண்டு பேர்
ஹார்னால இறந்தாங்க.

430
00:37:47,975 --> 00:37:51,603
டானியா? டானி மிட்சல் பத்தியா பேசறே?

431
00:37:52,396 --> 00:37:56,692
டானி நஜாஃப் பக்கமே வந்ததில்லை, ரீஸ்.
2007ல அவன் துவக்கப் பள்ளியில இருந்தான்.

432
00:37:56,775 --> 00:37:58,235
அது ரைஃப் ஹேஸ்டிங்ஸ்.

433
00:38:12,666 --> 00:38:17,087
நீ சொல்வது சரி. என் நினைவு நிச்சயமா
கொஞ்சம் குழம்பிடுச்சு.

434
00:38:18,088 --> 00:38:22,426
அதனாலென்ன. நம்மிடம் பெயர்கள் இருக்கு.
அவங்களை உயிரோட பிடிக்க அவசியம் இல்ல.

435
00:38:26,513 --> 00:38:28,515
நான் சொல்றதை கொஞ்சம் கேட்கிறாயா?

436
00:38:28,598 --> 00:38:30,809
நீ என்னைப் பார்க்கிறாயா?

437
00:38:30,892 --> 00:38:34,104
உனக்கு என்ன ஆகுதுன்னு தெரியும்,
அதன் உச்சத்திலிருக்கே,

438
00:38:34,187 --> 00:38:37,357
நான் உன் பக்கம்தான், சரியா?
எனக்கும் ஹார்ன் சாகணும்.

439
00:38:37,441 --> 00:38:39,693
ஆனா, பொது மக்களை கொல்வதில் ஆசை இல்லை.

440
00:38:39,776 --> 00:38:42,320
பொதுமக்களைப் பலியாக்குவது இப்ப சரியில்ல.

441
00:38:42,404 --> 00:38:44,281
அவங்களை எதிர்த்து நாம் சண்டையிடல.

442
00:38:47,034 --> 00:38:49,578
எனக்கு நீ சொல்லியாகணும்.
உனக்கு புரியுதா?

443
00:38:52,831 --> 00:38:53,832
எனக்கு புரியுது.

444
00:38:59,463 --> 00:39:03,341
ஊடுறுவி வெடிக்கும் குண்டுகள் துல்லியமானவை.

445
00:39:07,012 --> 00:39:08,597
பொதுமக்கள் சாகமாட்டாங்க.

446
00:39:14,019 --> 00:39:15,395
அதைச் செய்வாயா?

447
00:40:53,451 --> 00:40:57,122
ஹார்ன் மேல ஒரு கண் வை. வாகன வரிசை
கேப்ஸ்டோன் தொழிற்சாலைலதான் நிற்குது.

448
00:40:57,789 --> 00:41:01,084
பாதி சான் ஃபிரான்சிஸ்கோவும்.
நிறைய அந்நியர்கள் இருக்காங்க.

449
00:41:03,336 --> 00:41:05,172
வெடிக்கு தூரமா இருப்பாங்க.

450
00:41:06,131 --> 00:41:07,340
அப்படி இல்லன்னா?

451
00:41:08,842 --> 00:41:09,718
ரீஸ்?

452
00:41:10,552 --> 00:41:12,888
அப்ப ஓட்டிட்டே இருக்கேன். வேணாம். இப்ப.

453
00:41:17,100 --> 00:41:20,729
நகரின் எல்லா செய்தி ஊடகத்துக்கும்
அனாமதேய செய்தி வந்தது.

454
00:41:20,812 --> 00:41:25,025
மைக் டெடெஸ்கோ, ரெண்டு வீரர்கள்
பார்ட் நிலையத்தில சுட்டு கொல்லப் பட்டனர்.

455
00:41:30,322 --> 00:41:33,867
போலீசை கூப்பிடு. இங்கே அணிகள் வரணும்.
புகைப்படங்கள் வேணும்.

456
00:41:33,950 --> 00:41:36,703
-எல்லா வண்டிகளையும் கண்காணியுங்க.
-சரி, சர்.

457
00:41:37,954 --> 00:41:40,081
பிளானோ பங்கு 1 மணி நேரத்தில் 18% சரிவு.

458
00:41:40,165 --> 00:41:42,417
-செயற்கையா தெரியுதுல்ல?
-இருக்கும்.

459
00:42:12,781 --> 00:42:17,327
-திரு. ஹார்ன், மைக் டெடெஸ்கோ கொலையுண்டாரா?
-பிளானோ வாங்கும் நிலை பாதிக்குமா?

460
00:42:17,410 --> 00:42:21,206
ஒரிரு வாரத்திலயே ரெண்டு கூட்டாளிகள்
இறந்திருக்காங்களே? உங்க கருத்து?

461
00:42:25,085 --> 00:42:29,881
பாருங்க, உங்களை மாதிரியே, நானும்
மைக் பத்தி கேள்விப் பட்டு, ஆடிப் போனேன்.

462
00:42:30,715 --> 00:42:32,801
மைக் உண்மையான நண்பன், தீர்க்கதரிசி.

463
00:42:32,884 --> 00:42:34,719
அவரால்தான் முதலீடு செய்தேன்.

464
00:42:35,303 --> 00:42:38,932
சாலைப் பொறுத்தவரை நிச்சயமா,
எதை சொல்லலாமென தெரியலை,

465
00:42:39,015 --> 00:42:43,353
முன்னாள் நேவி சீல் ஜேம்ஸ் ரீஸ் எனது சக
ஊழியரின் கொலைக்கு காரணம் என

466
00:42:43,436 --> 00:42:45,605
சந்தேகிக்கப் படுகிறான்.

467
00:42:47,065 --> 00:42:49,150
ஆம், எவ்ளோ பேர் முடியுமோ, அனுப்பு.

468
00:42:50,193 --> 00:42:52,112
ஸ்வாட்டை தயாரா இருக்கச் சொல்.

469
00:42:53,196 --> 00:42:55,448
இது கற்பனையா இருந்தா நல்லது. நன்றி.

470
00:42:57,909 --> 00:43:00,078
போலீஸ் ஆறு நிமிடத்தில் வரும்.

471
00:43:04,416 --> 00:43:05,417
என் கூட வா.

472
00:43:06,668 --> 00:43:07,961
இப்போ.

473
00:43:13,591 --> 00:43:17,095
கமாண்டர் ரீஸுக்கு, போர்க்கால வேதனை
தொடர்புள்ள மனக் கலக்கம்

474
00:43:17,178 --> 00:43:18,763
ஏதோ ஏற்பட்டுள்ளதா தோணுது.

475
00:43:19,180 --> 00:43:21,725
எச்சரிக்கை பத்தி கவலைப் படல,
ஆனா மைக் என்பதால்,

476
00:43:21,808 --> 00:43:23,810
நான் அதை நம்ப வேண்டியிருக்கு.

477
00:43:27,689 --> 00:43:28,690
ஐயோ!

478
00:43:28,773 --> 00:43:29,774
ஏன் இவ்வளவு நேரம்?

479
00:43:30,650 --> 00:43:31,735
சீக்கிரம்!

480
00:43:35,613 --> 00:43:39,034
ஒழுங்கு நிர்வாக போலீஸ் ரீஸின் நோக்கம்
பத்தி ஏதும் சொன்னதா?

481
00:43:39,117 --> 00:43:41,077
அவனுக்கு டெடெஸ்கோவோட என்ன தொடர்பு?

482
00:43:41,161 --> 00:43:45,707
சொல்லக் கூடியதெல்லாம், ஜேம்ஸ் ரீஸ்
மனரீதியாக, உணர்வு ரீதியாக சரியில்லை.

483
00:43:46,833 --> 00:43:50,545
வருத்தத்தை கொடுத்தாலும் போர் வீரன்
இப்படி இருப்பதில் வியப்பில்லை.

484
00:43:55,508 --> 00:43:56,551
அசையாதே!

485
00:43:57,093 --> 00:43:59,512
-நகராதே!
-நகரல!

486
00:43:59,596 --> 00:44:01,806
இதுக்கு மேல எஃப்பிஐயை கேளுங்க.

487
00:44:13,276 --> 00:44:16,696
ஜேம்ஸ் ரீஸ் மைக் டெடெஸ்கோவை கொல்லல.
நீங்களும், உங்க ஆட்களும் தான்.

488
00:44:19,282 --> 00:44:20,158
அடச்சே.

489
00:44:21,785 --> 00:44:25,163
டாலொஸ் பாதுகாப்பு தருவாங்க.
அடியாட்கள் அல்ல, மிஸ் புரனெக்.

490
00:44:25,830 --> 00:44:27,457
உங்களை பத்தி தெரியாதா?

491
00:44:27,540 --> 00:44:29,459
ஆகட்டும், கிளம்பு.

492
00:44:37,926 --> 00:44:41,012
நீங்க நேவி சீல்ஸை வைத்து
ஆர்டி4895ஐ சோதனை செய்தீங்க.

493
00:44:41,096 --> 00:44:44,766
அது கட்டிகளை உருவாக்கியது என்பதால்,
நீங்க கொலை செய்திருக்கீங்க.

494
00:44:45,433 --> 00:44:48,937
என் செய்தி கதையில் இருக்கு. என்னை
கொன்னா, உண்மை வெளிவரும்.

495
00:44:49,020 --> 00:44:51,106
உங்க பேரம் குலையப் போகுது.

496
00:44:51,815 --> 00:44:53,024
கிளம்பு, ஐயோ.

497
00:44:58,446 --> 00:45:01,074
பேரம் நேத்து முடிந்தது, மிஸ். புரனெக்.

498
00:45:01,157 --> 00:45:05,870
மைக்குக்கு நடந்ததை வைத்து பார்த்தா,
இன்று அதை தெரிவிப்பது அநாகரிகம்.

499
00:45:26,433 --> 00:45:27,976
ஓட்டு! ஓட்டு!

500
00:45:29,978 --> 00:45:31,229
கிளம்பு! கிளம்பு!

501
00:45:59,924 --> 00:46:01,134
எழுந்த்துகோ!

502
00:46:02,802 --> 00:46:05,054
பாதுகாப்பு போடுங்க! பிரின்சிபல் தெருவில்!

503
00:46:09,767 --> 00:46:10,894
வாங்க!

504
00:46:12,729 --> 00:46:14,814
போ, போ!

505
00:46:33,583 --> 00:46:36,252
இதை போட்டுக்கோ. இதைப் போட்டுக்கோ!

506
00:46:36,336 --> 00:46:37,629
ஜாக்கிரதையா இரு!

507
00:46:37,712 --> 00:46:40,215
ஹேய், கவனி, வெறியனே!
கொஞ்சம் தைரியமா இரு!

508
00:47:06,616 --> 00:47:07,700
இப்ப போகணும். எழு.

509
00:47:31,766 --> 00:47:32,642
தயவு செய்து!

510
00:47:36,563 --> 00:47:38,523
தயவு செய்து! நிறுத்து! தயவு செய்து!

511
00:48:00,461 --> 00:48:02,672
முடித்தேன், லிஸ்.
ஸுலுவில் சந்திப்போம்.

512
00:48:02,755 --> 00:48:06,259
-ரீஸ், எங்க இருக்க? என்ன ஆச்சு?
-ஸுலுல, 20 நிமிடத்தில பார்ப்போம்.

513
00:48:07,719 --> 00:48:08,803
காரிலிருந்து இறங்கு.

514
00:48:09,971 --> 00:48:10,972
போங்க!

515
00:48:11,973 --> 00:48:12,974
சரி, சரி.

516
00:50:19,767 --> 00:50:21,769
வசனங்கள் மொழிபெயர்ப்பு
கைனூர் சத்யன்

517
00:50:21,853 --> 00:50:23,855
படைப்பு மேற்பார்வையாளர்
சுதா பாலா

