1
00:00:53,262 --> 00:00:55,473
த டெர்மினல் லிஸ்ட்

2
00:01:13,365 --> 00:01:15,242
-கண்டுபிடித்தேன்.
-எதை கண்டுபிடிச்சே?

3
00:01:17,161 --> 00:01:18,788
-இது மான்.
-எப்படி சொல்றே?

4
00:01:21,832 --> 00:01:22,792
குமிழ் நகங்கள்.

5
00:01:23,667 --> 00:01:27,046
பிரமாதம். சரி, அப்ப அவை
எங்கே தண்ணி குடிக்கும்னு தெரியும்.

6
00:01:29,006 --> 00:01:30,633
ஒத்தையடிப் பாதை தெரியுதா?

7
00:01:30,716 --> 00:01:34,136
அதை தொடர்வோம்.
இப்ப எப்படி இருக்கும்னு தெரியும்.

8
00:01:35,513 --> 00:01:38,891
அவை எங்கே குடிக்கும், சாப்பிடும்,
தூங்கும்னு தெரிஞ்சுக்கலாம்.

9
00:01:41,936 --> 00:01:45,189
அவைகள் போகும் பாதைகள்
இப்ப நமக்குத் தெரியும்,

10
00:01:45,272 --> 00:01:49,151
ஆக, நாம் உயரமான இடத்தில் போய் இருந்து,
அவற்றுக்காக காத்திருப்போம்.

11
00:01:49,401 --> 00:01:50,903
சரி, தொடர்ந்து நடங்க.

12
00:01:57,743 --> 00:02:01,372
அப்படிதான். வழியை உருவாக்கு,
என் மான் குட்டி.

13
00:02:17,012 --> 00:02:19,640
ஆகட்டும். நாம் மேலே ஓய்வெடுப்போம், வாலு.

14
00:02:34,864 --> 00:02:36,156
அப்பா.

15
00:02:36,991 --> 00:02:38,200
ஐ லவ் யு

16
00:02:38,826 --> 00:02:40,202
என்னைப் பார்க்கணுமா?

17
00:03:04,977 --> 00:03:06,270
எண்ணெய் விலைப் பட்டியல்

18
00:03:40,638 --> 00:03:43,766
பந்திக்கு முந்திக்கோ...
காஃபிக்காக வெளியே போகிறேன்.

19
00:06:01,779 --> 00:06:03,405
க்ரிப்டெக்ஸ் ஃபோன்.

20
00:06:06,700 --> 00:06:08,577
எதை மறைக்கிறே, மார்கஸ்?

21
00:06:28,305 --> 00:06:30,015
என்னை வந்து பார்க்கணுமா?

22
00:06:30,557 --> 00:06:32,351
-அவை எங்க சாப்பிடும் தெரியும்.
-ஆம்.

23
00:06:32,434 --> 00:06:34,228
எங்கே தூங்கும் தெரியும்.

24
00:06:34,770 --> 00:06:37,314
இப்ப அவை போகும் பாதை தெரியும், அதனால்

25
00:06:37,397 --> 00:06:40,109
நாம் உயரமான இடத்தில போய்,
அவற்றுக்கு காத்திருப்போம்.

26
00:06:41,735 --> 00:06:45,948
வழிகாணுதலில் துல்லியமா இருந்தால்,
என்ன தேடறோம்னு தெரிந்தால்,

27
00:06:47,032 --> 00:06:49,409
ஒரு மானும் நம்மிடமிருந்து ஒளிய முடியாது.

28
00:07:03,257 --> 00:07:04,842
வாங்கடா, தடியர்களா.

29
00:07:05,425 --> 00:07:07,761
நாம் தடுக்கணும். ஒரு தடுப்பு தேவை.

30
00:07:09,930 --> 00:07:12,975
அதே! அதே! அடேங்கப்பா!

31
00:07:13,350 --> 00:07:15,269
அடேங்கப்பா! அதே, அடி அதை!

32
00:07:16,770 --> 00:07:21,650
அதேதான்! அப்படியேதான்! ஆம்!

33
00:07:22,776 --> 00:07:23,861
ரோல் டைட்.

34
00:07:23,944 --> 00:07:27,239
அப்பட்டமா! நல்ல வாய்ப்பை விட்டே.

35
00:07:30,033 --> 00:07:31,368
-ஹேய்.
-ஹேய்.

36
00:07:34,204 --> 00:07:36,874
-மெக்சிகோ போக தயாரா?
-ஆம்.

37
00:07:36,957 --> 00:07:41,670
கவனி, என்ன நடக்க போகுதுன்னு
என்னாலேயே சொல்ல முடியாது.

38
00:07:42,212 --> 00:07:44,089
என்னை விட்டதும், நீ கிளம்பிடணும்.

39
00:07:44,173 --> 00:07:48,051
என்ன, புதையல் எல்லாத்தையும்
நீயே அபகரிச்சுக்குவியா? நடக்காது.

40
00:07:48,677 --> 00:07:50,596
நிஜமா சொல்றேன். மோசமாகப் போகுது.

41
00:07:53,307 --> 00:07:55,559
லூசி என் ஞானமகள், ரீஸ்.

42
00:07:57,102 --> 00:08:00,564
அந்த தடியர்களை பழிவாங்கப்
போகும் என்னை எதுவுமே

43
00:08:01,398 --> 00:08:04,776
இழுத்துப் பிடித்து தடுத்து
நிறுத்திவிட முடியாது.

44
00:08:08,739 --> 00:08:10,407
ரைலி ஏர்க்கு வரவேற்கிறேன்.

45
00:08:38,018 --> 00:08:40,145
வயோமிங்ல அந்த மான் சிக்கியதா?

46
00:08:40,229 --> 00:08:42,940
ஆம். மடையன் எல்லாத்தையும்
இணையத்தில் போட்டான்.

47
00:08:43,315 --> 00:08:45,067
ஏதாவது உதவிகரமா கிடைத்ததா?

48
00:08:45,400 --> 00:08:47,444
ரகசிய சான்டா பரிசு அனுப்பியிருக்கேன்.

49
00:08:47,653 --> 00:08:48,737
அடுத்த உதவாக்கரையா?

50
00:08:49,029 --> 00:08:51,615
அட, நீ சொல். நான் விமானத்தில் இருப்பேன்.

51
00:08:52,741 --> 00:08:56,453
நீ தரையிறங்கியதும் உனக்கு தகவல்
இருக்கும். பயணம் இனிதாகுக!

52
00:09:06,338 --> 00:09:07,381
நீ தயாரா?

53
00:09:29,695 --> 00:09:33,532
மார்கஸ் போய்கின்

54
00:10:07,107 --> 00:10:10,235
-அதில என்ன தெரியுது?
-முழு மேகஸீனை இறக்குறான்.

55
00:10:10,319 --> 00:10:11,945
அட, அது தேவையில்லாத வேலை.

56
00:10:12,070 --> 00:10:15,407
மருத்துவ அறிக்கை மூளைக் கட்டி என்கிறது.
அனேகமா தேறமாட்டான்.

57
00:10:15,490 --> 00:10:18,869
கிளாஸ் தோட்டாக்களை சிதறடிக்கும்னு
தெரியும். அவருக்கு ஆள் சாகனும்.

58
00:10:19,036 --> 00:10:20,912
தடுமாற்றம் அல்ல, அது அனுபவம்.

59
00:10:20,996 --> 00:10:22,372
ஆம், அவன் அனுபவசாலி.

60
00:10:22,831 --> 00:10:24,416
எட்டு போர் தொடுத்தல்கள்.

61
00:10:24,916 --> 00:10:26,960
ஈராக், ஆஃப்கானிஸ்தான், லிபியா.

62
00:10:27,336 --> 00:10:29,963
வெள்ளி நட்சத்திரம்,
பல தாமிர நட்சத்திரங்கள்.

63
00:10:30,505 --> 00:10:33,592
ஒரு படை பாராட்டு பதக்கம் கூட,
வி சின்னத்துடன்.

64
00:10:37,387 --> 00:10:41,058
ரொம்ப ஒன்றிடாதே. மேலே அதிகாரிகள்
ஏற்கனவே கண்காணிக்கிறாங்க.

65
00:10:41,558 --> 00:10:44,102
-பெரிய வழக்குன்னா லாஸ் ஏஞ்சலீஸில்தான்.
-ஆம்.

66
00:10:44,853 --> 00:10:46,980
சரி, ராம்ஸே அடிபணியாமலிருக்கலாம்.

67
00:10:47,481 --> 00:10:49,483
அடிபணியாத ஒரே தருணம் சொல்லேன்.

68
00:10:57,199 --> 00:10:59,284
பாஸ், நேரத்தை வீணாக்கறே.

69
00:10:59,368 --> 00:11:01,578
இடைவிடாத நாட்டம், மேக். இடைவிடாத நாட்டம்.

70
00:11:01,703 --> 00:11:03,163
எனக்கு புரியுது, டெர்ரி.

71
00:11:03,413 --> 00:11:06,416
பார்க்கறது மட்டும் போதாது,
பத்திரிகைல செய்தி வரணும்.

72
00:11:06,500 --> 00:11:07,667
ஒலி பெருக்கில போடு.

73
00:11:08,043 --> 00:11:11,129
சொன்னபடி செய்ய
எனக்கு மகிழ்ச்சி... மகிழ்ச்சி. ஹேய்.

74
00:11:11,755 --> 00:11:13,799
என்னோடு இங்கே, ஆன்டனி லாயுன்,

75
00:11:13,882 --> 00:11:17,260
துரத்தும் அதிரடிப் படையின் தலைமை ஏற்றார்.

76
00:11:17,511 --> 00:11:19,221
டோனி தெரியும். எப்படி போகுது?

77
00:11:19,304 --> 00:11:22,391
சரியில்ல, சார். ரகசியமா
எதையோ பறிப்பீங்கனு தெரியுது.

78
00:11:22,474 --> 00:11:26,603
யாரும் யாரிடமும் பறிக்கல. சரியா?
எங்களிடம் சடலம் இருக்கு. தயாரா இருக்கோம்.

79
00:11:26,686 --> 00:11:30,482
நீ சிகாகோல இருந்தப்ப,
மில்வாகீயை பெரிசா சாதிக்க விட்டாயா?

80
00:11:30,565 --> 00:11:32,943
மில்வாகீக்கு அவங்க என்ன
செய்றாங்கன்னே தெரியாது.

81
00:11:33,026 --> 00:11:35,320
-நல்லது, டோனி.
-எங்களிடம் ஐந்து சடலங்கள்.

82
00:11:35,445 --> 00:11:37,114
எங்க வழக்கு என்று அதிலே புரியுது.

83
00:11:37,864 --> 00:11:41,410
இல்ல தலைமையகத்தை கூப்பிடலாமா?
வாஷிங்டன் என்ன சொல்லுது பார்ப்போமே?

84
00:11:45,914 --> 00:11:49,126
டெப்டுலா, உயிர்வாழும்
அனைத்து குடும்ப உறுப்பினர்,

85
00:11:49,376 --> 00:11:52,462
கூட்டாளிகளது விலாசம் தேவை.
20 வருட சேவை. பெரிய பட்டியல்.

86
00:11:52,546 --> 00:11:55,257
-இதோ தர்றேன்.
-ஜூனியர், சிசிடிவி பதிவை கொடு.

87
00:11:55,549 --> 00:11:59,594
-முக அடையாளத்தை ஆய்வு செய்ய.
-நமக்கு ஏற்கனவே அடையாளங்கள் தெரியும்.

88
00:11:59,678 --> 00:12:01,972
எனக்கு ஜேம்ஸ் ரீஸ் பத்தி கவலை இல்லை.

89
00:12:02,055 --> 00:12:05,058
கார்ல அவனோட இருந்தது யார்னு தெரியணும்.

90
00:12:07,644 --> 00:12:11,982
கேப்ஸ்டோன் குழுமத்தில்
எங்கோ ஆர்-டி-4895ன்ற திட்டம் இருக்கு.

91
00:12:12,065 --> 00:12:15,277
அவங்க நெட்வொர்க் பெரியது.
100க்கு மேல் ரகசிய முதலீடுகள்.

92
00:12:15,652 --> 00:12:19,656
27க்கு குறையாதவை, பிரச்சினை
பகுதிகளில், பென்டகனின் நலனுக்கான

93
00:12:19,781 --> 00:12:21,992
நேரடியான, அல்லது கூட்டு தலையீடுள்ளவை.

94
00:12:22,075 --> 00:12:25,370
பிளாடூன் குடும்பத்தினரது உடல்நிலை
ஆவணங்கள் கிடைத்தன. போதாது.

95
00:12:25,579 --> 00:12:27,247
ஆய்வு செய்யணும். தகவலறிய உரிமை.

96
00:12:27,414 --> 00:12:28,582
நாங்கள் ஏன்?

97
00:12:28,832 --> 00:12:30,876
இது ஒரு சந்ததியின் வரலாறு.

98
00:12:31,376 --> 00:12:35,255
ஒரு இணையப் பக்கமோ அல்லது
ஒரு பெட்டிச் செய்தியோ இதற்குப் போதாது.

99
00:12:35,589 --> 00:12:38,884
-உன் துப்புகளை அனுப்பு, பார்க்கிறேன்.
-உன் இன்பாக்ஸை பார்.

100
00:12:39,342 --> 00:12:41,136
அடாவடி நீ, ஒண்ணு சொல்லட்டுமா?

101
00:12:42,596 --> 00:12:45,515
போகணும். நேதனிடம் இந்த
துப்புகள் வேணும்னு சொல்.

102
00:12:45,599 --> 00:12:46,683
கேட்டி.

103
00:13:01,531 --> 00:13:02,532
ஹலோ?

104
00:13:06,077 --> 00:13:07,829
-ப்ரையன்?
-கேட்டி.

105
00:13:08,163 --> 00:13:11,875
ஹேய், பசங்களா! ஹேய், டெப்!

106
00:13:11,958 --> 00:13:14,794
-கேட்டி!
-மன்னி, தாழ்ப்பாளை பூட்ட முடியல.

107
00:13:14,878 --> 00:13:16,755
இங்க என்ன பண்றே?

108
00:13:16,880 --> 00:13:18,840
அட, என் மின்னஞ்சல் கிடைக்கலையா?

109
00:13:18,924 --> 00:13:23,678
சிரியாவிலருந்து திரும்பிட்டேன். இதுதான்
மீண்டும் நுழைய நல்ல இடம்னு நினைச்சேன்.

110
00:13:25,514 --> 00:13:27,140
சரி, அதான்...

111
00:13:28,391 --> 00:13:30,352
நீ அடுத்த வாரம் சொன்னேன்னு நினைச்சேன்.

112
00:13:30,519 --> 00:13:32,979
அட, என்ன ஆச்சரியம். பழசையெல்லாம் பேசலாம்.

113
00:13:33,063 --> 00:13:36,191
குழந்தையோடு விளையாடலாம். அவன் எழுந்ததும்.

114
00:13:36,525 --> 00:13:39,027
அய்யோ, அழுக்கா இருக்கேன். குளிக்கவேயில்ல.

115
00:13:39,110 --> 00:13:42,155
இன்னும் உடை மாத்தல. ஒரு நொடி.
இதோ வந்துடறேன்.

116
00:13:43,156 --> 00:13:44,074
சரி.

117
00:13:58,046 --> 00:14:01,758
பாருங்க, நான் பொய் சொல்லப் போவதில்லை.
நிலைமை நல்லா இல்ல.

118
00:14:02,300 --> 00:14:05,595
பென்டகனின் நிதித் திட்டம் தீவிரமா மாறுது,

119
00:14:05,720 --> 00:14:08,682
எல்லா துறைகளிலும், நிரவுதல்
அல்லது செலவு குறைப்பு.

120
00:14:09,349 --> 00:14:14,062
இப்படி போகுமானால், நம் ஒப்பந்தம்
18 மாதத்தில் புதுப்பிக்காம காலாவதியாகும்.

121
00:14:15,522 --> 00:14:19,192
எலாயஸ் ரைபெர்க் விஜயத்தை
தள்ளிப்போட்ட நிலையில், நம்மிடமுள்ள

122
00:14:19,276 --> 00:14:21,611
முதலீட்டை பிரச்சினையா கருதக் கூடும்.

123
00:14:22,946 --> 00:14:27,409
இருந்தாலும், நியூபெல்லம் நிர்வாகம்,
பொறுமையா அந்த விற்பனைக்கு முனையணும்னு

124
00:14:27,993 --> 00:14:29,536
கேப்ஸ்டோன் ஆலோசனை சொல்லுது.

125
00:14:30,620 --> 00:14:32,789
என்னை தெரியும், என்னை பத்தி தெரியும்.

126
00:14:33,123 --> 00:14:35,834
நான் எதையும் சமாளிபேன்னா,
சமாளித்ததா அர்த்தம்.

127
00:14:35,917 --> 00:14:39,462
சான்டா பார்பரா எவ்ளோ
சங்கடமாச்சுன்னு ஏதும் தெரியுமா?

128
00:14:40,046 --> 00:14:41,673
உங்க துணைத்தலைவர் உடல், கையில்

129
00:14:41,756 --> 00:14:44,426
போதை ஊசியுடன் போலீஸ் கொண்டு
போனதை பார்த்த போது.

130
00:14:44,509 --> 00:14:46,970
ரைபெர்க் அங்கிருந்தார்,
ஸ்டீவ். பார்த்தார்.

131
00:14:47,512 --> 00:14:52,392
உங்க திறமை மீதான நம்பிக்கை தளர்ந்திருந்தா
எங்களை கோவிச்சுக்கக் கூடாது.

132
00:14:52,475 --> 00:14:55,020
எலாயஸ் விலகணும்னா,
சொல்லுவார். பிரயோஜனமில்லை.

133
00:14:55,103 --> 00:14:59,107
வாஷிங்டனை பொறுத்தவரை, வேகமா இயங்குவது,
ஆனா அனுமானிக்கக் கூடியது.

134
00:14:59,316 --> 00:15:01,359
வெற்றி பெற காய் நகர்த்த தெரியணும்.

135
00:15:01,443 --> 00:15:03,778
நியூபெல்லத்துக்கு போர் வணிகமா இருந்ததில்ல.

136
00:15:03,862 --> 00:15:06,573
நீங்க ஆதரித்ததால் உங்களோடு இறங்கினேன்,

137
00:15:06,656 --> 00:15:11,494
எனக்குத் தேவையானப்போ, நீங்க விற்க முயன்ற
போது, வாயை மூடிட்டுருந்தேன், ஏன்னா...

138
00:15:12,662 --> 00:15:16,541
லாபம் அதிகமாயிருந்தது, ஆனால்,
என் வணிகத்தை சில்லறைக்கு

139
00:15:16,916 --> 00:15:18,293
விற்க விருப்பமில்லை.

140
00:15:18,376 --> 00:15:22,797
கிராக்கி இல்லன்னா உங்க
தயாரிப்புகளை ஊக்கப் படுத்தமாட்டேன்.

141
00:15:23,173 --> 00:15:25,300
எங்களுக்கு எப்போதும் கிராக்கி உண்டு.

142
00:15:27,260 --> 00:15:28,470
அதை கண்டுபிடிப்பேன்.

143
00:15:28,553 --> 00:15:31,431
ஹார்ட்லேயின் வரவு செலவு
துணைக்குழுவுக்கு வரும்.

144
00:15:31,556 --> 00:15:34,601
அதுவரை துணைத் தலைவர் தேர்வு நலமாகட்டும்.

145
00:16:18,770 --> 00:16:22,148
பெல்டை போடு, செல்லம். நாம் இறங்கப் போறோம்.

146
00:17:18,538 --> 00:17:22,584
ஹேய், கார்லோஸ், அலெக்ஸ்.
எப்படி இருக்கீங்க பசங்களா?

147
00:17:24,961 --> 00:17:26,838
முதல் பையை எடுத்துக்கறேன்.

148
00:17:30,800 --> 00:17:31,843
நன்றி.

149
00:17:34,012 --> 00:17:37,474
-நீ மறுபடி வந்தது அருமை, மகனே.
-வருவதே அருமை. ஹலோ பாவொலா.

150
00:17:37,557 --> 00:17:39,601
-பார்த்ததில் சந்தோஷம்.
-எனக்கும்.

151
00:17:42,729 --> 00:17:44,022
பயணம் எப்படி இருந்தது?

152
00:17:44,230 --> 00:17:47,233
பிரமாதம். தெளிவான வானம், மித பானங்கள்.

153
00:17:47,442 --> 00:17:51,196
நம்ப வேணாம். போரின்போது பறப்பது
போலவேதான் இப்பவும் பறக்கிறாள்.

154
00:17:51,696 --> 00:17:54,824
போகலாம், பார்ட்டி மக்களே.
நீச்சல் குளவீடு எனக்கு.

155
00:17:54,908 --> 00:17:56,826
-போவோம்.
-போகலாம்.

156
00:18:04,959 --> 00:18:08,087
சிக்கலில் இருக்கும்போது
உன் அப்பா பாஹா வந்தார்.

157
00:18:09,214 --> 00:18:11,257
அவரும் இதைப் போலத்தான் பார்த்தார்.

158
00:18:12,634 --> 00:18:13,676
அப்புறம்?

159
00:18:16,346 --> 00:18:19,015
ஒரு புத்துணர்வான தேவையை உணர்ந்தார்.

160
00:18:19,974 --> 00:18:21,142
நீயும் அப்படி ஆவாய்.

161
00:18:23,561 --> 00:18:25,063
நன்றி. சரி.

162
00:18:27,065 --> 00:18:29,984
லாஸ் ஆஞ்சலஸ் சம்பவம்,
கேமராக்களில் பதிவானது.

163
00:18:30,068 --> 00:18:31,945
அந்த என்சிஐஎஸ் முகவர் இறந்தது?

164
00:18:32,111 --> 00:18:33,947
கட்டட ஆள், ரீஸை அடையாளம் காட்டினான்.

165
00:18:34,072 --> 00:18:36,366
அவன் வேற பெயரில் வந்ததா சொன்னான்.

166
00:18:37,742 --> 00:18:40,912
ரீஸ், அவன் குடும்பம் பத்தி
ஏதும் சந்தேகம் இருந்தா,

167
00:18:41,246 --> 00:18:42,539
இப்ப அது தீர்ந்தது.

168
00:18:42,747 --> 00:18:44,290
தாமதப் படுத்தினோம், ரிச்.

169
00:18:46,876 --> 00:18:48,461
-செனடர் ப்ரையர், மேடம்.
-சொல்.

170
00:18:48,920 --> 00:18:50,922
குழுவில், விலகியோரை சந்தித்தோம்.

171
00:18:51,089 --> 00:18:55,134
-யார்?
-ஹோல்ப்ரூக், கன்வைசர் கூட.

172
00:18:55,593 --> 00:18:57,095
யாரோ அவங்கள மாத்தினாங்களா?

173
00:18:57,345 --> 00:19:00,098
யாரா இருந்தாலும்
கமுக்கமா இருக்க பார்க்கறாங்க.

174
00:19:00,181 --> 00:19:03,768
உங்க புதிய நிதித்திட்டம்,
பண வரவை ஏராளமா குறைக்கும்.

175
00:19:05,019 --> 00:19:07,021
இது நம்மை எங்கு விட்டுச் செல்லும்?

176
00:19:07,772 --> 00:19:09,399
ஏற்கனவே நமக்கு லாபமே இல்லை.

177
00:19:09,941 --> 00:19:13,027
ஒரு ஓட்டு இழந்தால் கூட, உங்க லாபத்தை
மறந்திட வேண்டும்.

178
00:19:13,486 --> 00:19:15,196
செலவின மீட்சி மிகக் குறைவு.

179
00:19:15,655 --> 00:19:18,491
இந்த அமைப்பில, நாம்
ஒரு தீர்மானத்தை முன்னெடுத்து,

180
00:19:18,575 --> 00:19:21,160
அது சட்ட சபையிலருந்து
வரும்போது, வீணடிப்போம்.

181
00:19:21,244 --> 00:19:23,037
ஜேம்ஸ் ரீஸ் நல்லவனா இருந்தான்.

182
00:19:23,162 --> 00:19:27,333
முதிர்ந்த வாழ்வை அர்ப்பணித்தான்,
சமரசம் செய்றவனா திரும்பினான்.

183
00:19:27,917 --> 00:19:31,004
லாபத்தில் எந்த ஒரு விடுவும் கிடைக்காது.

184
00:19:31,212 --> 00:19:35,300
நமக்கு ஒரு மாற்றம் தேவை, நிரவும்
பேரமல்ல, நமக்கு தேவையானது...

185
00:19:43,641 --> 00:19:45,226
எனக்கு விசாரணையை ஒளிபரப்பணும்.

186
00:19:45,393 --> 00:19:48,104
மேடம், இது ஒரு குழுவின் ரகசியக் கூட்டம்.

187
00:19:48,187 --> 00:19:50,773
அப்ப, இறுதி ஓட்டில் கிளப்பி விடணும்.

188
00:19:51,399 --> 00:19:53,902
சிறப்பு நடவடிக்கையை விட, பெரும் புள்ளிகள்

189
00:19:53,985 --> 00:19:57,488
முக்கியமானவர்கள் என்பதை
இந்த செனடர்கள், எடுத்து சொல்லணும்.

190
00:20:00,491 --> 00:20:02,994
அதை அவர்கள் எடுத்து சொல்வதை
நான் பார்க்கணும்.

191
00:20:20,845 --> 00:20:23,306
-ஆமென்.
-ஆமென்

192
00:20:24,349 --> 00:20:28,770
மார்கோ, பாவொலா, நன்றி. இதில்
நீங்க முடிந்ததுக்கும் மீறி செய்துட்டீங்க.

193
00:20:28,853 --> 00:20:30,939
நாளை கறி உணவு இருக்கு.

194
00:20:31,564 --> 00:20:35,151
சுடும் ரீஸ், பண்ணைக்கு
வந்ததுக்கு, அவனுக்கு வேலை கொடுக்கணும்.

195
00:20:35,234 --> 00:20:37,695
இல்ல. செம்மறி ஆட்டை சுட நான் தேவையில்ல.

196
00:20:37,779 --> 00:20:41,491
தூர இலக்கை சுடுவது பத்தி, பள்ளியை விட,
மார்கோவிடம் நிறைய கற்றதா

197
00:20:41,574 --> 00:20:42,742
என் அப்பா சொல்வார்.

198
00:20:42,825 --> 00:20:45,453
எப்பவும் தாமஸ் சும்மாவே அதிகமாக புகழ்வார்.

199
00:20:45,536 --> 00:20:48,373
நாம் அதே டாம் ரீஸ் பத்திதான் பேசறோமா?

200
00:20:50,041 --> 00:20:52,543
இங்கே எத்தனை முறை வந்தாலும்,

201
00:20:52,627 --> 00:20:54,796
எவ்ளோ அழகா இருக்குன்னு மெய்மறப்பேன்.

202
00:20:55,004 --> 00:20:59,884
போன முறை இங்கே வந்தப்போ,
என்னோட மணநாள்னு நினைக்கிறேன்.

203
00:21:05,473 --> 00:21:09,811
பெண்கள், மரத்தின் கீழ், பாட்டில் நிறைய
மின்மினிப் பூச்சிகளை பிடித்தனர்.

204
00:21:12,146 --> 00:21:16,109
பார். இந்தப் பண்ணை எங்களுக்கு புனிதமானது.

205
00:21:17,110 --> 00:21:20,405
குழப்பங்களிலிருந்து தள்ளி
இருக்கும் ஒரு சரணாலயம்.

206
00:21:29,038 --> 00:21:33,001
திரு. ரீஸ், இறுதிச் சடங்குக்கு
போகணும்னு அம்மாவிடம் சொன்னேன்.

207
00:21:33,126 --> 00:21:34,168
அன்டோனியா.

208
00:21:35,128 --> 00:21:38,589
லூசிக்கு சுகமில்லைனு தெரிந்திருந்தா
கடிதம் எழுதியிருப்பேன்.

209
00:21:40,717 --> 00:21:44,595
அது அவளுக்கு பிடிச்சிருக்கும், செல்லம்.
ரொம்ப பிடிச்சிருக்கும்.

210
00:21:49,434 --> 00:21:51,853
ஜேம்ஸ், நான் வருந்தறேன்.

211
00:21:52,812 --> 00:21:53,855
இருக்கட்டும்.

212
00:21:55,231 --> 00:22:00,194
அருந்தவும், உண்ணவும்
தந்த உபசரிப்பாளருக்கு மனமார்ந்த நன்றி.

213
00:22:20,840 --> 00:22:22,675
ஆக, இதுதான் கேள்வி.

214
00:22:23,134 --> 00:22:27,013
உன்னை பாலின் பண்ணையிலருந்து
இங்கு பெயர்க்க என்ன செய்யணும் நான்?

215
00:22:29,640 --> 00:22:32,018
எனக்கு தெரியாது. முதலாளிகளை பொறுத்தவரை,

216
00:22:32,101 --> 00:22:34,604
அவர்களிடம் பிடித்தது, தலைகாட்டாம இருப்பது.

217
00:22:38,024 --> 00:22:40,943
அட! அழகா இருக்கின்றன, அல்லவா?

218
00:22:41,027 --> 00:22:42,987
அம்மா, அப்பாவிடம் காட்டுவோம்.

219
00:22:43,529 --> 00:22:45,615
...வணிகத்துக்கு நான் அவ்ளோ அலையல.

220
00:22:45,698 --> 00:22:48,117
அதோடு, அவங்களை சுலமா வெல்லலாம்.

221
00:22:48,618 --> 00:22:50,203
அது கேட்க நல்லா இருக்கு.

222
00:23:06,302 --> 00:23:07,303
ரீஸ்
செய்தி

223
00:23:08,221 --> 00:23:13,768
ஆர்டி4895 பற்றி ஏதாவது?

224
00:23:21,359 --> 00:23:24,487
பிளாடூன்ல பலருக்கு மூளைக்கட்டியாம்.
விசாரணை முடியல.

225
00:23:39,669 --> 00:23:40,545
ஹேய்.

226
00:23:41,170 --> 00:23:45,341
ஹேய், சுத்தமாக்க உதவறேன்.
சூரிய அஸ்தமனத்தை பார்த்துட்டிருந்தேன்.

227
00:23:48,219 --> 00:23:49,637
உனக்கு எவ்ளோ பிரச்சனை?

228
00:23:49,720 --> 00:23:51,430
கஷடமில்லை. ப்ரையன், வா.

229
00:23:51,681 --> 00:23:53,266
மாடில உன் ஆய்வுகளை பார்த்தேன்.

230
00:23:54,851 --> 00:23:59,480
அது ஒரு கதை. அவ்ளோதான்.
ஓரிரு நாட்கள் போதும்.

231
00:24:15,037 --> 00:24:21,043
எங்கே இருக்க?

232
00:24:27,633 --> 00:24:29,468
ஒரு பானம் விரும்புவன்னு நினைத்தேன்.

233
00:24:32,346 --> 00:24:33,931
எப்பவும் மனதை படிப்பீங்களே.

234
00:24:46,694 --> 00:24:47,820
பென் பேசினான்.

235
00:24:50,239 --> 00:24:53,910
உன் ஆளின் ஃபோன் மூலம் வந்த பணம்,
என்செனாடா வங்கியிலருந்து.

236
00:24:53,993 --> 00:24:55,661
எங்க ஆட்கள் விசாரிக்கிறாங்க.

237
00:25:04,086 --> 00:25:05,922
நான் எப்போதும் தீராம கேட்பது...

238
00:25:09,091 --> 00:25:13,012
"கடவுளின் நோக்கம் என்ன?
கடவுளின் திட்டம் என்ன?

239
00:25:13,304 --> 00:25:18,976
அவருடைய எந்த தீர்க்கதரிசனத்தால்,
நீ இதைச் செய்யறே?"

240
00:25:21,854 --> 00:25:26,776
ஜாப் கதையை பத்தி நினைக்கும் போது,
ஆச்சர்யப்பட்டேன், ஒருவேளை,

241
00:25:28,277 --> 00:25:31,572
உன்னை நிலைகுலைய வைக்க முடியுமான்னு,

242
00:25:33,241 --> 00:25:35,076
சாத்தானோட ஏதோ பந்தயம் வைத்தாரோ.

243
00:25:43,876 --> 00:25:45,336
ஜாபை வீழ்த்தவே முடியல.

244
00:25:50,091 --> 00:25:52,635
அவங்க என்னை ரொம்பவே நெருங்கிட்டாங்க.

245
00:26:37,847 --> 00:26:42,101
லூசி, இரு! லூசி, இங்கே திரும்ப வந்துடு!

246
00:26:48,274 --> 00:26:50,609
உனக்கு என்செனாடால வணிகம்னு தெரியும்.

247
00:26:50,693 --> 00:26:54,363
அதாவது, அந்த கணக்கு இருந்தா போதும்,
மத்தது தானா நடக்கும்.

248
00:26:54,447 --> 00:26:55,614
ஜேம்ஸ்.

249
00:26:56,532 --> 00:26:58,617
ஹலோ. பளிச்சுனு இருக்கியே. அட.

250
00:26:59,160 --> 00:27:03,164
ராத்திரி உனக்கு ரொம்ப களைப்பா
ஆகிவிட்டது போலிருக்கே?

251
00:27:03,414 --> 00:27:04,790
ஹேய், எப்போ வந்தே?

252
00:27:05,374 --> 00:27:07,710
30 நிமிடம் முன். ரெண்டு நாள் ஓய்வு.

253
00:27:08,210 --> 00:27:12,340
உன்னை தனி ஆளா இவனை
முடிக்க விடுவேன்னு நினைச்சியா, என்ன?

254
00:27:12,506 --> 00:27:13,507
முடிப்பதா?

255
00:27:13,758 --> 00:27:15,384
மார்கோ விஷயங்களை சொன்னான்.

256
00:27:17,053 --> 00:27:21,390
என் பாதுகாப்பு அணி தலைவன், லாரென், லூசி
கொலையாளியை அடையாளம் கண்டதா தோணுது.

257
00:27:27,396 --> 00:27:29,565
-வணக்கம்.
-வணக்கம்.

258
00:27:32,026 --> 00:27:34,862
உன் காரை எடுத்துப் போகவா? காஃபி வாங்கிவர.

259
00:27:35,154 --> 00:27:37,865
நான் போறேன். ப்ரையன்,
டெட்டி கடற்கரைல இருக்காங்க.

260
00:27:38,157 --> 00:27:40,117
-அவங்களோட இரு.
-இது உங்க விடுமுறை.

261
00:27:40,201 --> 00:27:42,370
என்ன வேணும்னு சொல். எனது பரிசு.

262
00:27:42,453 --> 00:27:45,289
இரு வெள்ளை காஃபி.
சாவி வாசல் கதவருகில் இருக்கு.

263
00:27:45,373 --> 00:27:46,415
நன்றி.

264
00:28:04,183 --> 00:28:05,434
கேட்டி புரனெக்?

265
00:28:17,696 --> 00:28:19,490
உங்களைபத்தி படிச்சேன், புரனெக்.

266
00:28:20,616 --> 00:28:23,744
போர்ட்லண்ட், கெனோஷா, ஹுபே மாநிலம்...

267
00:28:24,745 --> 00:28:27,123
வலிய வம்பை தேடிக் கொள்ளும் சுபாவம்.

268
00:28:27,206 --> 00:28:30,042
ஆம், ஆழமா பார்க்க அதுதான் சிறந்த வழி.

269
00:28:31,627 --> 00:28:32,628
நல்லா பேசறீங்க.

270
00:28:34,713 --> 00:28:36,006
ஜேம்ஸ் ரீஸ் எங்கே?

271
00:28:36,799 --> 00:28:38,509
-தெரியாது.
-நான் நம்பல.

272
00:28:38,592 --> 00:28:39,593
இருக்கட்டும்.

273
00:28:40,928 --> 00:28:44,265
உங்க வேலையை எல்லாம் பார்த்தா,
சாமர்த்தியசாலியா தெரியுது.

274
00:28:44,432 --> 00:28:46,684
அப்போ, நீங்க ஒரு கொலைக்கு துணையாவதேன்?

275
00:28:46,767 --> 00:28:48,727
அது கொலையல்ல, தற்காப்பு.

276
00:28:48,811 --> 00:28:50,396
லாஸ் ஆஞ்சலஸ் நிகழ்ச்சியல்ல.

277
00:28:50,479 --> 00:28:52,690
ஜேம்ஸ் ரீஸ் தன் குடும்பத்தினரை கொல்லல.

278
00:28:53,691 --> 00:28:55,526
சால் அக்னனிடம் பேச வேண்டியதுதானே?

279
00:28:55,609 --> 00:29:00,030
கேப்ஸ்டோன், கடற்படை சீல்ஸ் வீரர்களுக்கு
மூளைக் கட்டி தந்தது எப்படினு விசாரிங்க.

280
00:29:00,156 --> 00:29:01,490
அதுதான் உண்மைக் கதை.

281
00:29:02,032 --> 00:29:05,286
சால் அக்னனிடம் பேச ஆசைதான்.
செய்வேன். ஆனா செத்துட்டான்.

282
00:29:06,829 --> 00:29:08,038
சில முறை அழைத்தேன்.

283
00:29:08,456 --> 00:29:11,000
அக்னன் சான்டா பார்பரால,
போதை அதிகமாகி, நீங்க

284
00:29:11,292 --> 00:29:13,294
ரீஸுடன் லாஸ் ஆஞ்சலஸ்ல இருந்த மறுநாள்.

285
00:29:13,711 --> 00:29:15,588
கையில் ஊசியோட செத்து கிடந்தான்.

286
00:29:15,671 --> 00:29:19,091
போதை வழக்கமில்லாதவன்.
அது ஆர்வத்தை தூண்டுது, இல்லையா?

287
00:29:20,509 --> 00:29:22,511
அதோட, என்சிஐஎஸ் ஜாஷ் ஹோல்டர்,

288
00:29:23,179 --> 00:29:25,598
இன்னொருத்தரின் துப்பாக்கியால் சுடப்பட்டு,

289
00:29:25,681 --> 00:29:29,894
ரீஸ் தப்பியோடிய முந்தைய இரவு, இறந்தான்,
அதுவும் அசாதாரணமானது.

290
00:29:40,696 --> 00:29:42,865
அருமையான தகவல் கிடைத்தது. புரியுது.

291
00:29:46,118 --> 00:29:49,205
ஆனா, மேலும் யாரும்
சாவதை விரும்பமாட்டீங்கதானே.

292
00:29:50,539 --> 00:29:54,335
கொலைக்கு உடந்தை என்ற
குற்றத்துக்கு ஆளாக விரும்பமாட்டீங்க.

293
00:30:03,344 --> 00:30:05,804
அவர் எங்க இருக்கார்னு தெரியாது.

294
00:30:08,766 --> 00:30:13,020
ஆனா... எனக்கு தெரிய வந்தா,
உங்களுக்கு சொல்றேன்.

295
00:30:14,480 --> 00:30:16,023
அப்படி சொல்லுங்க, புரனெக்.

296
00:30:25,658 --> 00:30:27,117
குடும்பத்தோடு மகிழுங்க.

297
00:31:17,084 --> 00:31:18,460
உங்களுக்கு என்ன வேணும்?

298
00:31:26,510 --> 00:31:27,845
என்ன இதெல்லாம்?

299
00:31:29,430 --> 00:31:30,347
நாம் பேசுவோம்.

300
00:31:31,307 --> 00:31:33,767
மெஸ்ஸீன்ஸ் போர் பத்தி தெரியுமா?

301
00:31:34,226 --> 00:31:35,394
தெரியாது.

302
00:31:35,811 --> 00:31:39,732
முதல் உலகப் போர். பிரிட்டன்,
ஜெர்மனிக்கு ஃப்ளாண்டர்ஸ்ல இழுபறி.

303
00:31:40,858 --> 00:31:45,029
ஜெனரல் ப்ளூமர்னு ஒருவர் பிரிட்டன்
அணியில், ரொம்ப பொறுமையானவர்.

304
00:31:45,362 --> 00:31:49,783
எதிரி இடத்தின் கீழே, 8000 மீட்டர் நீளமான
சுரங்கத்தை அஞ்சு மாதமா தோண்டினார்.

305
00:31:49,867 --> 00:31:54,997
272 கிலோ வெடிகளை அதில்
நிரப்புகிறார், பிறகு ஒரு நாள், டமால்!

306
00:31:56,915 --> 00:32:00,127
வெடிப்பு 10,000 ஜெர்மானியரை கொல்லுது.
இழுபறி முடிந்தது.

307
00:32:02,838 --> 00:32:04,798
ஜெர்மானியனுக்கு எது தாக்கியதுனே தெரியல.

308
00:32:04,882 --> 00:32:08,052
அது, சுவாரசியம்தான்.
நாம் இங்க என்ன செய்யறோம், ஸ்டீவ்?

309
00:32:09,011 --> 00:32:11,764
எதிரிங்க இடத்துக்குள்ளே போக
கஷ்டப் பட்டிருக்கேன்.

310
00:32:12,806 --> 00:32:13,807
உண்மை தான்.

311
00:32:14,391 --> 00:32:17,603
இன்னும் ஒரு வருடத்தில,
ஹார்ட்லே, ஓய்வு பெறுவாள்.

312
00:32:17,686 --> 00:32:19,104
அவளை நினைக்க யாருமில்ல.

313
00:32:19,271 --> 00:32:23,942
இப்ப போய், அவளை பெரிய ஆளாக்கிடணுமா, அல்லது

314
00:32:24,568 --> 00:32:25,903
வாரிசாக்கணுமானு யோசி.

315
00:32:26,362 --> 00:32:28,864
நமது பேரம் வெறும் தகவல்களுக்காக.

316
00:32:28,947 --> 00:32:30,074
அது சரிதான்.

317
00:32:30,949 --> 00:32:34,203
என் முதலீட்டை காக்க,
பேரத்தை மாத்தறேன், புரியுதா?

318
00:32:34,286 --> 00:32:36,997
-நிதித் திட்டம், வணிகத் தடை.
-ஓட்டுகள் முடிவாகின.

319
00:32:37,164 --> 00:32:38,207
ப்ரையர் அல்ல.

320
00:32:41,377 --> 00:32:45,589
ப்ரையர். ப்ரையர் தான்
இந்த இரட்டை சீரமைப்பை கோருபவன்.

321
00:32:45,881 --> 00:32:47,633
நீ அவன் போக்கை மாத்த வேணாம்.

322
00:32:49,718 --> 00:32:51,261
அவனை என்னிடம் விட்டுடு.

323
00:32:59,395 --> 00:33:04,817
இது உனக்கு ரொம்ப நல்லதாகும் ரிச்சர்ட்.
உனக்கு இன்னும் தெரியல.

324
00:33:23,711 --> 00:33:26,714
நவாஹாஸும் அவன் கும்பலும்,
பல கார்டல்களின் அடியாட்கள்.

325
00:33:26,797 --> 00:33:30,676
கொடூரமான, ஆத்திரம் மிக்கவன்.
தேவையான காசு தந்தா எவரையும் கொல்வான்.

326
00:33:30,926 --> 00:33:32,428
இவன்தான்னு நல்லா தெரியுமா?

327
00:33:32,511 --> 00:33:34,680
எங்க தொடர்புகள்படி, மூணு வாரம் முன்,

328
00:33:34,763 --> 00:33:38,475
வளாகத்திலருந்து கையாளோட போனான்.
நவாஹாஸ் மட்டும் திரும்பினான்.

329
00:33:38,934 --> 00:33:41,270
இடது கையில் ஒரு காயத்துடன்.

330
00:33:48,569 --> 00:33:49,570
இது அவன்தான்.

331
00:33:51,155 --> 00:33:56,910
நவாஹாஸும், ஆட்களும் அடியாட்களை என்செனாடா
வெளியே பழைய தொழிற்சாலைல பயிற்றுவிப்பர்.

332
00:33:56,994 --> 00:34:00,122
-எத்தனை பேர்?
-சில சமயம் 12 பேர். சில சமயம் அதிகமா.

333
00:34:00,831 --> 00:34:02,875
பயிற்சி பெரும் பசங்கள் தனி.

334
00:34:02,958 --> 00:34:06,503
நமக்கு தேவையான பாதுகாப்புக்காக
ஒரு புயல் வருது.

335
00:34:06,587 --> 00:34:10,132
இங்குள்ள குன்றுகள்,
200 மீட்டர் உயர பார்வை தர முடியும்.

336
00:34:10,549 --> 00:34:14,052
தொடர், காத்திரு. சுடுவதற்கு
ரொம்ப சுலபமா இருக்கும்.

337
00:34:14,136 --> 00:34:15,262
இல்லை.

338
00:34:15,679 --> 00:34:18,348
-ஜேம்ஸ்?
-இல்லை, சுடுவது சரியல்ல.

339
00:34:18,474 --> 00:34:20,058
தெளிவா பார்க்கலாமே.

340
00:34:20,142 --> 00:34:22,227
ஆரோன், முன்னாள் சிறப்பு அதிரடி வீரன்.

341
00:34:23,437 --> 00:34:24,813
அவன் உத்திகள் சிறப்பானவை.

342
00:34:24,897 --> 00:34:28,150
உத்திகளை சந்தேகிக்கல, ஆரோன்.
உத்தி பிரச்சினை இல்ல இது.

343
00:34:28,233 --> 00:34:30,360
நாம் போய் நிக்கணும். பார்க்கணும்.

344
00:34:30,694 --> 00:34:33,405
நேருக்கு நேர் மோதணும்.
அப்படிதான் செய்யணும்.

345
00:34:36,492 --> 00:34:38,494
ஹேய், தனியா ஒரு நொடி பேசுவோமா?

346
00:34:46,543 --> 00:34:48,045
கவனி, எனக்கு புரியுது.

347
00:34:48,504 --> 00:34:51,715
அவன் ரத்தத்தை சிந்த
உன்னை மாதிரியே எனக்கும் வெறியுண்டு.

348
00:34:52,591 --> 00:34:53,842
ஆனா, இவன்?

349
00:34:54,635 --> 00:34:57,221
இவன் பெரிய விஷயத்தை நோக்கி கூட்டி செல்லல.

350
00:34:57,638 --> 00:34:59,014
ஸ்டீவ் ஹார்ன் தான்.

351
00:34:59,556 --> 00:35:01,892
சுடு. வெற்றிகரமா கிளம்பு.

352
00:35:04,311 --> 00:35:08,482
அவங்களை கொல்ல வந்தப்போ, லாரென்
லூசி மேல கவிழ்ந்து காப்பாத்தப் பார்த்தா.

353
00:35:09,441 --> 00:35:10,901
அதை சொல்லியிருக்கேனா?

354
00:35:11,026 --> 00:35:15,531
ஆக, லூசியின் கடைசி தருணங்கள்,
அம்மா காப்பாத்த கவிழ்ந்து கதறுவது,

355
00:35:15,697 --> 00:35:17,574
நவாஹாஸ் அதை பார்த்திட்டிருந்தான்.

356
00:35:21,411 --> 00:35:25,249
யார் தண்டிக்கிறான்னு அவன்
பார்க்கணும். வேற மாதிரி செய்யக் கூடாது.

357
00:35:35,217 --> 00:35:36,385
சரி.

358
00:35:39,680 --> 00:35:41,014
சரி, போவோம்.

359
00:35:51,650 --> 00:35:54,570
உங்க ஆட்களை உயிரைப்
பணயம் வைங்கனு சொல்ல முடியாது.

360
00:35:54,653 --> 00:35:56,572
நானும் பென்னும் பார்த்துக்கறோம்.

361
00:35:56,780 --> 00:35:57,781
வேணாம்.

362
00:35:58,824 --> 00:36:01,952
இது தீமையை ஒரேயடியா
உலகிலிருந்து ஒழிக்கும் வாய்ப்பு.

363
00:36:03,370 --> 00:36:07,249
இதுதான் சரியான வழி. நாம் உலகுக்கு
ஒரு சேவையை செய்வோம்.

364
00:36:11,628 --> 00:36:12,629
சரி...

365
00:36:14,548 --> 00:36:18,135
உயரமான இடத்தை கண்காணிக்க
பயன்படுத்தறோம். மேலும் கீழும்.

366
00:36:20,178 --> 00:36:21,305
ரீஸ்.

367
00:36:22,097 --> 00:36:23,348
இல்ல, ஒண்ணுமில்லை.

368
00:36:26,101 --> 00:36:29,313
மத்தவங்க நடந்து அணுகணும்.

369
00:36:30,230 --> 00:36:31,481
ரீஸ்?

370
00:36:31,607 --> 00:36:33,275
ஒண்ணுமில்ல, நல்லா இருக்கேன்.

371
00:36:39,239 --> 00:36:43,493
நடந்ததை நீங்க சொல்வதிலிருந்து,
வேகமா வளரும் கட்டின்னு தெரியுது.

372
00:36:43,577 --> 00:36:47,456
அது க்ளியோப்ளாஸ்டோமாவா
இருந்தா, துரதிர்ஷ்டம். அபூர்வமானதும் கூட.

373
00:36:48,206 --> 00:36:51,501
-நிச்சயமா சொல்ல...
-திசு பரிசோதனை இல்லாம முடியாது. தெரியும்.

374
00:36:52,336 --> 00:36:54,922
மெக்சிகோ மாநகர்ல
பிரமாதமான டாக்டர்கள் உண்டு.

375
00:36:55,547 --> 00:37:00,344
சரியா திட்டமிட்டா, ஆறுலிருந்து ஒன்பது
மாதம். பழைய வாழ்க்கைக்கு திரும்பலாம்.

376
00:37:02,888 --> 00:37:04,473
வேற வழி ஏதாவது?

377
00:37:07,768 --> 00:37:10,228
வேதனை. அனேகமா, மரணம்.

378
00:37:22,824 --> 00:37:25,494
நோய்க்குறிகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

379
00:37:26,536 --> 00:37:29,414
கர்டிகோஸ்டெராயிட்ஸ் வீக்கத்தை குறைக்கும்.

380
00:37:29,498 --> 00:37:34,419
ப்ரொப்ரனலால், டொபிரமேட் வலிப்புகளை,
ஒற்றைத் தலைவலியை குறைக்கலாம்.

381
00:37:36,630 --> 00:37:38,173
மருந்து உங்களை காப்பாத்தாது.

382
00:37:45,681 --> 00:37:48,266
-சொல்லியிருக்கணும்.
-அவனுக்கு தெரிஞ்சிருக்காது.

383
00:37:48,350 --> 00:37:50,852
அபத்தம். அவனைக் கேள்.

384
00:37:59,361 --> 00:38:03,991
பார், சகோதரா, உன் உடம்போட நீ என்ன
வேணுமானாலும் செய்.

385
00:38:06,952 --> 00:38:09,329
ரகசியமா வெச்சிருந்ததுக்கு திட்ட முடியாது.

386
00:38:09,871 --> 00:38:12,082
புரியுது. நான் யார் கருத்து சொல்ல?

387
00:38:13,542 --> 00:38:15,210
எனக்கு ஒரே கேள்விதான்...

388
00:38:17,004 --> 00:38:18,547
உன்னால் செயல்பட முடியுமா?

389
00:38:20,007 --> 00:38:22,217
ஆரோனும் ஆட்களுமே முடிக்கலாம், ஜேம்ஸ்.

390
00:38:24,177 --> 00:38:27,305
வேணும்னா, நவாஹாஸை
துண்டுகளாக்கி கொண்டு வரலாம்.

391
00:38:31,268 --> 00:38:35,147
மாறா, பாவொலா, அன்டோனியாவா
இருந்தா என்ன செய்வீங்க?

392
00:38:36,189 --> 00:38:38,400
அவன் மூஞ்சை பார்க்க விரும்புவீங்களா?

393
00:38:44,573 --> 00:38:46,158
எனக்கு ஒண்ணும் இல்லை.

394
00:38:49,202 --> 00:38:51,580
இதைத் தவிர எனக்கு இழப்பதற்கு ஒண்ணுமில்ல.

395
00:38:55,625 --> 00:38:57,544
என்னிடம் எல்லாமே பறித்தான்.

396
00:38:59,296 --> 00:39:03,091
சரி, ஆரோனிடம் சொல்றேன்.

397
00:39:59,481 --> 00:40:01,817
இப்பவும் எப்படி நிக்கறேன்னே தெரியல.

398
00:40:02,651 --> 00:40:05,153
நானா இருந்தா நொறுங்கிப் போயிருப்பேன்.

399
00:40:07,906 --> 00:40:11,034
என்னைவிட நொறுங்கிப்
போக வேண்டியவங்க இருக்காங்க.

400
00:40:20,293 --> 00:40:24,339
நீ, லாரென், லூசி, எல்லாம்

401
00:40:25,465 --> 00:40:26,967
எங்க குடும்பத்தோட அங்கம்.

402
00:40:29,594 --> 00:40:32,264
ஆக, நாளை நீ பிழைச்சு வந்தா,

403
00:40:33,598 --> 00:40:34,975
இங்க திரும்ப வர வேணாம்.

404
00:40:35,851 --> 00:40:38,103
பழி வாங்க இறக்க, உனக்கு மகிழ்ச்சி.

405
00:40:38,979 --> 00:40:42,232
ஆனா உன் நண்பர்களை
அதில் சேர்த்திருக்கவே கூடாது.

406
00:41:08,675 --> 00:41:12,762
நவாஹாஸ்

407
00:42:29,547 --> 00:42:30,674
அலெஹான்த்ரோ.

408
00:42:40,016 --> 00:42:42,769
மரணக் குழிக்கு நாலு அடியாட்கள் வர்றாங்க.

409
00:42:42,852 --> 00:42:43,812
15 மீட்டர்.

410
00:42:46,147 --> 00:42:47,232
10 மீட்டர்.

411
00:42:48,400 --> 00:42:49,567
5 மீட்டர்.

412
00:43:05,917 --> 00:43:07,502
-தயார்!
-கிளம்பு.

413
00:43:19,639 --> 00:43:20,724
நொறுக்கு அதை!

414
00:43:39,993 --> 00:43:41,077
ஐயோ!

415
00:43:42,370 --> 00:43:43,330
சுவர்!

416
00:44:06,770 --> 00:44:07,687
அடச்சே!

417
00:44:07,812 --> 00:44:10,482
கட்டடம் ரெண்டில்
அடிபணிய வைக்க சுடு. இப்போ!

418
00:44:20,367 --> 00:44:24,162
-யார் அது. அவன் நம்ம ஆளா?
-குண்டு நிரப்பறேன்.

419
00:44:24,245 --> 00:44:26,289
-இல்ல.
-எவ்ளோ நேரம் வேணும்?

420
00:44:26,748 --> 00:44:27,791
பத்து நொடிகள்.

421
00:44:34,381 --> 00:44:35,632
-தயார்.
-கிளம்பறோம்.

422
00:45:01,491 --> 00:45:02,617
பென்?

423
00:45:05,328 --> 00:45:06,579
வழி விட்டு விலகுங்க!

424
00:45:22,637 --> 00:45:24,806
பசங்களை மறைக்கிறேன். போ!

425
00:45:41,114 --> 00:45:43,450
அது நவாஹாஸ்! நான் பாத்துக்கறேன். தடு அவனை.

426
00:45:47,287 --> 00:45:48,913
நீல பிக் அப். அதைச் சுடு!

427
00:45:51,458 --> 00:45:52,709
-கிளம்பு.
-கிளம்பறோம்.

428
00:46:08,641 --> 00:46:09,642
வாங்க.

429
00:46:13,271 --> 00:46:14,272
சகோதரா, நலம்தானே?

430
00:46:14,606 --> 00:46:16,316
-ஐயோ, ஆம்!
-இங்கயே இரு.

431
00:46:39,130 --> 00:46:40,173
ஒழி!

432
00:47:33,560 --> 00:47:35,645
கீழே போடு.

433
00:48:20,231 --> 00:48:21,316
நான் யார்னு தெரியுதா?

434
00:48:24,527 --> 00:48:25,987
நாசமா போ, கடற்படை வீரனே.

435
00:48:33,911 --> 00:48:35,580
அந்த பறவை சரியாயிடுமா, அப்பா?

436
00:48:50,428 --> 00:48:53,222
வேணாம்! வேணாம்! வேணாம்!

437
00:49:48,444 --> 00:49:49,487
நட.

438
00:50:42,874 --> 00:50:44,167
என்னை மன்னி, ப்ரையன்.

439
00:50:48,045 --> 00:50:52,592
என் தப்பு. உண்மையிலேயே
நீங்க இங்க வருவீங்கனே நினைக்கல.

440
00:50:52,842 --> 00:50:55,970
எனக்கு... அவங்க வருவாங்கன்னு தெரியாது.

441
00:51:00,433 --> 00:51:04,270
நீ 17 வயதா இருக்கும்போது
அம்மா சொல்லுவாங்க, தெரியுமா,

442
00:51:05,480 --> 00:51:10,193
"உன் பலம் எதையும் அவளுக்கு தராதே,
ஆற்றலை உறிஞ்சிடுவா" என்று.

443
00:51:12,028 --> 00:51:15,823
உன்னைப் பத்தி கவலைப் படுவதை விடணும்னு
எப்பவோ உறுதி செய்துட்டேன்.

444
00:51:17,408 --> 00:51:21,454
ஆம். நீயும் ஒரு பொன்முடியாளை
மணக்கமாட்டேன்னு உறுதி தந்தாயே,

445
00:51:21,537 --> 00:51:24,749
ஆக, நாம் பரஸ்பரம்
ஏமாத்திக்கிடோம், அவ்ளோதான்.

446
00:51:31,881 --> 00:51:37,261
தெரியுமா, நாங்க இன்றிரவு திரும்பணும்.
நீ வேணும்னா தங்கலாம்.

447
00:51:40,765 --> 00:51:42,141
நான் உனக்கு உகந்தவளல்ல.

448
00:51:44,560 --> 00:51:46,979
-எனக்குத் தெரியும்.
-நான் ஒரு முட்டாள்.

449
00:51:50,107 --> 00:51:51,192
நீ முட்டாள்தான்.

450
00:51:52,276 --> 00:51:53,444
உன்னை நேசிக்கிறேன்.

451
00:51:58,157 --> 00:52:01,661
பார்க்க அற்புதம். அடேங்கப்பா!

452
00:52:02,954 --> 00:52:03,955
ஹலோ?

453
00:52:04,288 --> 00:52:05,873
நியூபெல்லம் மருந்து நிறுவனம்.

454
00:52:06,123 --> 00:52:09,168
ஸ்டீவ் ஹார்ன் பெரும்பான்மை
பங்கை முன்னே வாங்கினான்.

455
00:52:09,252 --> 00:52:12,588
எல்லாத்தையும் ஊக்க
மருந்துக்கானதா ஆக்கினான். முதன்மை

456
00:52:13,756 --> 00:52:15,383
பாதுகாப்பு துறை ஒப்பந்தக்காரன்.

457
00:52:16,509 --> 00:52:19,011
ஆறு கிளைகளுக்கும்
வினியோகமாகும் மருந்துகள்.

458
00:52:19,303 --> 00:52:23,891
முக்கியமானது? இன்னும் கொஞ்ச நாள்ல
நியூபெல்லம் முழுவதையுமே 7000 கோடிக்கு மேல்

459
00:52:23,975 --> 00:52:25,560
விற்கப் போறாங்களாம்.

460
00:52:29,689 --> 00:52:32,358
-கேட்டி?
-நன்றி.

461
00:52:32,859 --> 00:52:34,527
ஆயிரம் நன்றி சொல்லணும் நீ.

462
00:52:40,616 --> 00:52:41,659
எல்லாம் நலம்தானே?

463
00:52:42,118 --> 00:52:45,246
அது விளம்பரம். கொஞ்சம்
மார்கரிட்டாஸ் குடிக்கிறீங்களா?

464
00:52:45,413 --> 00:52:46,539
வேணாம், நன்றி.

465
00:52:47,748 --> 00:52:51,002
-எனக்கு ஒண்ணு. நன்றி.
-சரி. இதோ வந்துடறேன்.

466
00:52:51,294 --> 00:52:52,336
சரி.

467
00:53:00,261 --> 00:53:02,513
நியூபெல்லம் தலைவர்
ராணுவ மாற்றத்தை பேசுகிறார்

468
00:53:52,480 --> 00:53:53,731
நீ சொன்னது சரிதான் போல.

469
00:53:55,191 --> 00:53:56,776
நான் எப்பவுமே சரிதான், ஜூனியர்.

470
00:53:59,362 --> 00:54:01,864
ஹேய் மேக். ஆம். அவ கிளம்பறா.

471
00:54:04,033 --> 00:54:07,161
ரீஸர். ஸ்டீவ் ஹார்ன் பத்தி கண்ட
எல்லாம் இதில் இருக்கு.

472
00:54:09,038 --> 00:54:11,415
குறிப்பா உனக்கு என்ன செய்தான்னு தெரியணும்.

473
00:54:16,963 --> 00:54:18,214
நீ வரலன்றது நிச்சயம்தானா?

474
00:54:18,297 --> 00:54:20,967
ஆசைதான், ஆதரவு நடவடிக்கை
அதிகாரி இப்பவே, சரியா

475
00:54:21,050 --> 00:54:23,052
வர்றதில்லையேனு கேள்வி கேட்கிறார்.

476
00:54:23,219 --> 00:54:25,096
உன்னை எப்பவோ நீக்கியிருப்பேன்.

477
00:54:25,179 --> 00:54:28,432
நிஜத்திலே, உன்
பின்னாலிருப்பவர்களை பார்த்துக் கொள்ளணும்.

478
00:54:44,407 --> 00:54:45,533
இதோ வர்றேன்.

479
00:54:51,414 --> 00:54:54,875
விமானத்தில் செலவுக்கு பணம் இருக்கு.
தேடலுக்கு பங்களிப்பு.

480
00:54:54,959 --> 00:54:58,212
மார்கோ, நீங்க எற்கனவே நிறைய
செய்துட்டீங்க. நன்றி.

481
00:55:07,763 --> 00:55:10,558
இந்தப் பண்ணையில் இது நல்ல வேட்டையாடியது.

482
00:55:10,641 --> 00:55:12,643
இது இங்கதான் இருக்கணும்.

483
00:55:13,477 --> 00:55:17,690
இது உன் அப்பாவோடது.
நான் ஏத்துக்க முடியாது.

484
00:55:18,983 --> 00:55:21,527
நான் திரும்ப வரும் வரை வைத்திருங்களேன்.

485
00:55:29,702 --> 00:55:30,745
ஜேம்ஸ்.

486
00:55:39,378 --> 00:55:40,796
அன்டோனியா.

487
00:55:43,299 --> 00:55:45,468
-பாவொலா.
-ஜேம்ஸ்.

488
00:55:46,969 --> 00:55:48,971
-நீ அவங்கள பார்த்துக்க.
-கண்டிப்பா.

489
00:56:01,776 --> 00:56:03,194
இந்தா. இன்னொண்ணு.

490
00:57:28,112 --> 00:57:32,658
ஆர்டூரோ மோரெனோவின் அன்பார்ந்த நினைவில்
1980-2022

491
00:59:14,969 --> 00:59:16,971
வசனங்கள் மொழிபெயர்ப்பு
கைனூர் சத்யன்

492
00:59:17,054 --> 00:59:19,056
படைப்பு மேற்பார்வையாளர்
சுதா பாலா

