1
00:00:53,304 --> 00:00:55,514
த டெர்மினல் லிஸ்ட்

2
00:01:32,802 --> 00:01:38,307
சால் அக்னன்

3
00:01:54,615 --> 00:01:57,535
காப்ஸ்டோன் தொழிற்சாலைகள்
சொத்து நிர்வாக புது துணை தலைவர்.

4
00:02:17,137 --> 00:02:21,559
இன்று சந்திக்கணும். இடம் சொல்லவும்.
கூட்டமாக இருந்தா நல்லது.

5
00:02:33,612 --> 00:02:35,281
-நன்றி.
-மேடம் செக்ரடரி.

6
00:02:35,656 --> 00:02:37,491
-காலை வணக்கம்.
-மேடம் செக்ரடரி.

7
00:02:38,409 --> 00:02:42,288
நான் எனது பணியை இராணுவத்தினரின்
உயிரிழப்புகளைக் குறைப்பதிலும்,

8
00:02:42,371 --> 00:02:45,541
மனநிலை ஆரோக்கியத்தை
மேம்படுத்துவதிலும் அர்ப்பணித்தேன்.

9
00:02:45,624 --> 00:02:49,295
பாரம்பரிய படைகளின் வெற்றியை நாம்
சாதிக்கும் அதே நேரத்தில்,

10
00:02:49,378 --> 00:02:53,674
சிறப்பு நடவடிக்கை வீரர்களது
உடல், மனநிலைகள் மேற்கொள்ளும் சுமை என்பது

11
00:02:53,757 --> 00:02:56,427
சகித்துக் கொள்ள இயலாத அளவு பெருகிவிட்டது.

12
00:02:57,636 --> 00:03:00,764
நமக்கு உயர்நிலை போராளிகள்
இயந்திரங்களானாலும் சரிதான்,

13
00:03:01,265 --> 00:03:02,266
ஆனா, அப்படி இல்ல.

14
00:03:02,933 --> 00:03:07,438
நிதிக்கோரிக்கை செயல்பட அனுப்பறப்ப
நமது நிதித் திட்டத்தை சீரமைக்கப் போகிறோம்.

15
00:03:07,521 --> 00:03:09,148
சீரமைப்பது எந்த விதத்தில்?

16
00:03:09,231 --> 00:03:13,527
நமது சிறப்பு வீரர்களின்
பங்களிப்பு நாட்களை வெகுவாக குறைப்பது.

17
00:03:14,111 --> 00:03:17,448
-சலுகைகள் குறைப்பீடா?
-இல்லை, பணிக் காலம் பற்றி பேசறேன்.

18
00:03:17,531 --> 00:03:21,368
கட்டாய ஓய்வுகள். அவர்களை
இயலாதவர்களாகும் வரை வாட்ட வேணாம்.

19
00:03:21,452 --> 00:03:23,829
தயார்நிலையில இருப்பதில நலிவை காண்கிறோம்.

20
00:03:23,913 --> 00:03:26,916
-நிதிநிலை...
-ஒப்புக் கொள்ளும் எல்லைக்குள் உள்ளன.

21
00:03:27,416 --> 00:03:29,960
ஜூனிலிருந்து நிதித்திட்ட வேலை செய்கிறோம்.

22
00:03:30,044 --> 00:03:32,546
நீங்க சில நாட்களில் மறுசீரமைப்பை பேசறீங்க.

23
00:03:32,630 --> 00:03:36,592
வீட்டுக்கு அழைத்து சொல்லுங்க,
சில இரவுகள் தனியா பணி செய்யப் போறதா.

24
00:03:36,675 --> 00:03:39,386
சிறப்புப் படையினர் நமக்காக போராடறாங்க,

25
00:03:39,470 --> 00:03:42,598
நாம் வார இறுதியை அவர்களுக்காக
போராட ஒதுக்கலாமே. போவோம்!

26
00:03:50,648 --> 00:03:52,816
இது ஜேம்ஸ் ரீஸ் பத்தி, இல்லயா?

27
00:03:53,692 --> 00:03:55,069
அவன் ஒரு புள்ளி விவரமே.

28
00:04:37,903 --> 00:04:42,700
அடுத்த 12 மணி நேரத்துக்குள் அடைய முடியலனா,
பஸ்ஃபீட் நம்மை முந்தி சங்கடமாக்கும்.

29
00:04:42,783 --> 00:04:47,621
எனக்கு வேறொரு கூட்டம் இருக்கு.
நன்றி. செய்யுங்க. நல்ல வேலை, நன்றி. சரி.

30
00:04:55,671 --> 00:04:57,172
எப்படி பார்க்காம விட்டாங்க?

31
00:04:57,256 --> 00:04:59,591
இன்சர்லிக்ல டாக்டர் ரஸ்ஸலுடன் பேசினேன்.

32
00:04:59,675 --> 00:05:03,345
அவர் மேலும் சோதனைகள் செய்யச் சொல்லியும்,
மருத்துவ ஆலோசனையை மீறி,

33
00:05:03,429 --> 00:05:05,222
இறுதி சடங்குக்கு ரீஸ் வெளியேறினான்.

34
00:05:05,305 --> 00:05:07,057
இரு, கடற்படைல கவனிக்கலயா?

35
00:05:07,141 --> 00:05:09,351
இவனை ஒரு பிளாடூனை தலைமை தாங்க செய்தாங்க,

36
00:05:09,435 --> 00:05:12,646
அவனது உடல் நிலை ஒதுக்கப் படக் கூடியதா?
அது கவனக்குறைவு.

37
00:05:14,523 --> 00:05:16,150
சரி. இப்ப என்ன?

38
00:05:16,233 --> 00:05:18,610
ரீஸ் சந்திக்கணுமாம், ஏன்னு தெரியல.

39
00:05:18,694 --> 00:05:21,947
எப்படியானாலும், எனக்கு இந்த மாலை
சில விஷயம் கிடைக்கும்.

40
00:05:22,031 --> 00:05:23,365
பத்திரமா இருக்கியா?

41
00:05:23,949 --> 00:05:27,453
கடாஃபியை கொல்ல சர்ட் வந்தப்ப
அங்க இருந்தேனே. என்னால முடியும்.

42
00:05:29,580 --> 00:05:31,123
நானும் கூட வரட்டுமா.

43
00:05:31,707 --> 00:05:36,253
மறுபடி ரீஸை பார்க்க முடியாம போறதுக்கா?
வேணாம், அவன் என்னை நம்புகிறான்.

44
00:06:54,832 --> 00:06:55,833
அந்த இருக்கை வேணும்.

45
00:07:06,385 --> 00:07:08,303
ரீஸ். எதுக்கு இந்த சந்திப்பு?

46
00:07:08,387 --> 00:07:13,684
சால் அக்னன் பத்தி தெரியுமா, அல்லது
கேப்ஸ்டோன் தொழிற்சாலைகள்னு ஒரு நிறுவனம்?

47
00:07:13,767 --> 00:07:15,686
ஹை, உங்களுக்கு என்ன வேணும்?

48
00:07:15,769 --> 00:07:19,690
எனக்கு லிட்டில் ஜெம்ஸ் மற்றும்
கெளுத்தி மீன்.

49
00:07:19,773 --> 00:07:21,900
-கண்டிப்பா.
-எனக்கு ஒண்ணும் வேணாம்.

50
00:07:21,984 --> 00:07:24,862
-அவருக்கு புகாடினி பாஸ்தா கொடுங்க.
-கண்டிப்பா, இதோ.

51
00:07:25,612 --> 00:07:26,947
கேப்ஸ்டோன் தொழிற்சாலைகளா?

52
00:07:27,030 --> 00:07:29,908
அவங்க தளத்தில் சின்னம் உள்ள ஒரே அமைப்பு.

53
00:07:29,992 --> 00:07:32,202
அக்னன், சொத்து நிர்வாக துணைத் தலைவர்.

54
00:07:32,286 --> 00:07:36,039
நானே சின்ன ஆராய்ச்சி செய்தேன்.
பங்கு சந்தையில் அவங்க முதலீடுகள்...

55
00:07:36,123 --> 00:07:39,960
அற்பம். கார்னிவல் பயண கப்பல்கள்,
பிளானட் ஃபிட்னஸ், ஹெச்அன்எம்...

56
00:07:40,043 --> 00:07:43,338
இருங்க. பிளானட் ஃபிட்னஸ்
பிண்ணனியில் உள்ளவங்க ஈடுபாடா?

57
00:07:43,422 --> 00:07:45,632
பார், சும்மா கேள். விஷயம் என்னன்னா...

58
00:07:45,716 --> 00:07:49,803
அவங்க முதலீடு செய்ய
திரட்டிய பணம் 6000 கோடி டாலர்.

59
00:07:49,887 --> 00:07:52,723
பொதுப் பங்குகளை விட அது ரொம்பவே அதிகம்.

60
00:07:52,806 --> 00:07:54,474
மிச்சமெல்லாம் எங்கே?

61
00:07:54,558 --> 00:07:56,393
அதைதான் நாம் கண்டுபிடிக்கணும்.

62
00:07:58,103 --> 00:07:59,688
இரானியர்களா இருக்குமோ?

63
00:08:00,814 --> 00:08:04,318
இது கஹானி பத்தியே அல்ல,
அவன் வேற லெவல் இலக்கு. இது...

64
00:08:04,401 --> 00:08:09,198
இது உள்நாட்டு, கார்பரேட்
சமாச்சாரம். அதோட முடியல.

65
00:08:14,494 --> 00:08:16,622
கேப்ஸ்டோன் துப்பு எங்கிருந்து வந்தது?

66
00:08:16,705 --> 00:08:18,624
-அது முக்கியமில்ல.
-முக்கியம்.

67
00:08:18,707 --> 00:08:22,961
நான் விவரங்களை வைத்தால்,
ஆதாரம் நம்பத் தகுந்ததானு பார்க்கணும்.

68
00:08:23,670 --> 00:08:24,755
நான்தான் ஆதாரம்.

69
00:08:31,678 --> 00:08:33,889
உங்களிடம் ஒண்ணு காட்டணும்.

70
00:08:35,307 --> 00:08:37,559
இதை என்கிராம் க்ளினிக்கிலிருந்து
எடுத்தேன்.

71
00:08:38,143 --> 00:08:41,480
சம்மந்தமில்லாம இதை உங்களுக்கு
காட்ட விரும்பல.

72
00:08:50,530 --> 00:08:52,074
அது ஒரு கட்டி, ரீஸ்...

73
00:08:53,700 --> 00:08:55,953
அது ஒரு வால்நட் அளவில்,

74
00:08:56,495 --> 00:09:00,415
அது ஹிப்போகாம்பஸ் மற்றும் ஆமிக்டலா
இடையில் உள்ள முனையில் இருக்கு.

75
00:09:00,832 --> 00:09:05,504
நரம்பியல் நிபுணருடன் பேசினேன்.
இதன் காரணமா தலைவலி,

76
00:09:05,587 --> 00:09:09,007
தேவையற்ற பயம்... நினைவுக் குழப்பம்...

77
00:09:13,929 --> 00:09:16,723
-எனக்கில்லை.
-உங்க அனுமதி நேர அத்தாட்சியோடு.

78
00:09:16,807 --> 00:09:21,019
-என்சிஐஎஸ் தானே உனக்கு கொடுத்தது?
-இல்ல. ஹோல்டர் இதைப் பத்தி பேசவே இல்ல.

79
00:09:21,103 --> 00:09:23,855
நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான்
தெரியும்.

80
00:09:24,314 --> 00:09:26,400
நரம்பியலாளர் தசை சோதனை வேணும்னார்.

81
00:09:26,483 --> 00:09:29,486
அதை செய்யாம,
துல்லியமா கண்டு பிடிக்க முடியாது.

82
00:09:29,569 --> 00:09:34,408
நம் இருவருக்குமே தெரியும், நீங்க
குழப்பமான தருணங்களில் இருந்தது.

83
00:09:35,367 --> 00:09:39,496
ஜஹான் கஹானி, கேப்ஸ்டோனின் மீதெல்லாம்,

84
00:09:39,579 --> 00:09:40,831
பழி போட்டுட முடியாது...

85
00:09:42,291 --> 00:09:45,961
பின்னால கண்ணாடில பார்.
தொப்பி போட்டிருக்கும் ஒருத்தனின் நிழல்.

86
00:09:46,044 --> 00:09:50,048
-உன்னால் பார்க்க முடியுதா?
-இல்ல, உணவை முடிப்பவர்கள் மட்டும் தான்.

87
00:09:50,173 --> 00:09:51,258
நாம் போகணும். இப்ப!

88
00:09:52,134 --> 00:09:54,678
இருங்க! ரீஸ்! ஹேய்!

89
00:09:55,470 --> 00:09:56,680
சாப்பிடவேயில்ல...

90
00:10:05,689 --> 00:10:06,857
ரீஸ். ரீஸ். இருங்க!

91
00:10:07,816 --> 00:10:09,609
ஸ்மார்ட் ஃபோன் கையிலிருக்கா?

92
00:10:09,693 --> 00:10:11,945
இல்ல. ஒரு தற்காலிக ஃபோன். என்னாச்சு?

93
00:10:12,029 --> 00:10:13,572
வானம் மூலமா பார்க்கிறாங்க.

94
00:10:13,655 --> 00:10:15,490
ட்ரோன் போல ஏதாவதா?

95
00:10:15,574 --> 00:10:20,287
நான் பார்த்தவன் ஒரு அதிரடி ஆள். அவன்
எனக்காக வந்திருக்கணும்... இல்ல உனக்காக.

96
00:10:20,370 --> 00:10:23,457
ரீஸ், அங்க யாருமே இல்ல.
இது உங்களோட கற்பனை.

97
00:10:23,540 --> 00:10:27,461
இங்கே வர மின் அலைச் சோதனை செய்தேன்.
ஒரே வழி ஆளில்லா விமான வாகனம்.

98
00:10:30,505 --> 00:10:33,133
இது என் வண்டி. உள்ளே ஏறு. உள்ளே ஏறு!

99
00:10:38,013 --> 00:10:39,222
பெல்டை போடு.

100
00:10:39,306 --> 00:10:43,685
புரியல. உங்களை கண்ணாடி போட்ட
ஒருத்தன் பார்த்ததுக்காக நாம் ஓடணுமா?

101
00:10:43,769 --> 00:10:45,103
நாம் ஓடல.

102
00:10:47,564 --> 00:10:48,857
கெட்டியா பிடிச்சுக்க.

103
00:10:54,654 --> 00:10:55,781
இங்கயே இரு.

104
00:10:56,531 --> 00:10:58,158
ஒண்ணுமில்லயே? உன்னை பார்க்கல.

105
00:11:44,162 --> 00:11:45,705
திறந்து படித்துப் பார்!

106
00:11:48,250 --> 00:11:50,502
அது தொழில் முறை இலக்கு தகவல் தொகுப்பு.

107
00:11:51,878 --> 00:11:53,964
இன்னுமா நான் பைத்தியம்னு நினைக்கிற?

108
00:12:22,159 --> 00:12:24,202
-போலீஸ்ல சொல்லணும்.
-போலீஸ் கூடாது.

109
00:12:24,286 --> 00:12:28,415
-பட்டப் பகல்ல உங்களை தாக்க வந்தான்.
-என்சிஐஎஸ் துரோகிகள்.

110
00:12:28,498 --> 00:12:30,834
போலீசிலும் இருக்கலாம், சொல்ல முடியாது.

111
00:12:30,917 --> 00:12:33,086
நாம் கண்காணாம போகணும்.

112
00:12:43,972 --> 00:12:46,183
இதை எப்படி பயன்படுத்தறது தெரியுமா?

113
00:12:46,266 --> 00:12:49,853
-தெரியும்.
-உன்னை தேடறாங்களா தெரியல.

114
00:12:49,936 --> 00:12:54,441
இது ஓயும்வரை, கமுக்கமா இருக்கணும்.
உனக்கு போக இடம் இருக்கா?

115
00:12:56,526 --> 00:12:57,861
-இருக்கா?
-இருக்கு.

116
00:13:06,745 --> 00:13:09,915
உன்னை மாட்டிவிட்டதுக்கு வருத்தம்.
திரும்ப என்னை பார்க்க மாட்ட.

117
00:13:10,790 --> 00:13:11,875
ரீஸ்.

118
00:13:14,669 --> 00:13:16,671
கேப்ஸ்டோன் பற்றி தெரிஞ்சதை சொல்லுங்க.

119
00:13:17,380 --> 00:13:19,549
ஆட்களோட தொடர்பிலிருந்தா, கண்டு பிடிப்பேன்.

120
00:13:45,659 --> 00:13:47,160
என்னிடம் பேச வழி தெரியுமே.

121
00:14:24,739 --> 00:14:25,824
தடையில்லை!

122
00:14:27,784 --> 00:14:28,785
தகருங்க.

123
00:14:34,833 --> 00:14:36,001
உள்ளே ஓடி வாங்க!

124
00:14:40,130 --> 00:14:41,298
உன் பின்னால்.

125
00:14:43,967 --> 00:14:44,968
ஏதும் தடையில்லை!

126
00:14:54,185 --> 00:14:55,186
தடையில்லை!

127
00:14:55,895 --> 00:14:56,980
போ, போ, போ!

128
00:14:57,147 --> 00:14:58,273
ஓடு, ஓடு!

129
00:15:00,191 --> 00:15:01,234
உள்ளே ஓடி வாங்க!

130
00:15:05,989 --> 00:15:07,282
தடை இல்லை! கடைசி அறை.

131
00:15:07,365 --> 00:15:09,701
-என்ன எழவு அது ஹார்க்ரோவ்?
-சார்?

132
00:15:09,784 --> 00:15:12,621
நீதான் வாசலில் இருந்தே.
அறையை பிடித்திருக்கணும்.

133
00:15:12,704 --> 00:15:14,873
சொறிந்துவிடவா உங்களை வைத்திருக்கேன்?

134
00:15:14,956 --> 00:15:17,208
விசுவாசமா இருக்கணும், புரியுதா?

135
00:15:18,126 --> 00:15:20,670
மறுபடி அப்படி பண்ணே, வீட்டுக்கு
அனுப்பிடுவேன்.

136
00:15:27,761 --> 00:15:32,182
துல்லியம் 83 சதவிகிதம், வேகம் 71.

137
00:15:32,724 --> 00:15:34,392
போதாது, ஆனா தாக்கு பிடிச்சீங்க.

138
00:15:34,476 --> 00:15:37,020
நிச்சயமா பகை போராளியா
மாற விரும்ப மாட்டீங்க.

139
00:15:37,729 --> 00:15:40,649
ஹேய், என் செயல்கள் இன்னும் சொதப்பல்தான்.

140
00:15:41,149 --> 00:15:42,859
இதை மறுபடி செய்ய விருப்பமா?

141
00:15:44,027 --> 00:15:45,362
செய்ய ஆசைதான். வேணாம்.

142
00:15:45,445 --> 00:15:47,739
உணவு இடைவேளை முடிந்தது. வாங்க. போவோம்.

143
00:15:56,331 --> 00:16:00,627
கேப்ஸ்டோன் தொழிற்சாலைகள்

144
00:16:29,614 --> 00:16:30,490
ஸ்டீவ்!

145
00:16:31,408 --> 00:16:33,243
-மாலை 2 மணி ஜேனட் லான்ஸிங்.
-ஸ்டீவ்!

146
00:16:33,326 --> 00:16:37,038
மாலை 2: 45க்கு அல் கலீஃப்.
மாலை 3: 30க்கு ரெப்ஸியோன் போர்ட்,

147
00:16:37,122 --> 00:16:40,291
-மாலை 4:30க்கு சூரி ரத்னாவான்...
-ரதானாவான்... ரத்து செய்.

148
00:16:40,375 --> 00:16:42,836
-ஸ்டீவ்...
-இரு, கேரி மேதிஸை கூப்பிட்டு...

149
00:16:42,919 --> 00:16:45,004
-பேசணும்.
-சால், காத்திருக்க சொன்னேன்.

150
00:16:45,088 --> 00:16:48,717
செலவு பண்றோம்னு சொல்.
குரைப்பதானால் சுவரை பாத்து குரைக்கட்டும்.

151
00:17:08,611 --> 00:17:09,696
அவனை உள்ள அனுப்பு.

152
00:17:20,498 --> 00:17:22,959
நீ சான்டா பார்பராவில இருக்கணுமே.

153
00:17:23,501 --> 00:17:24,753
ஒரு பிரச்சினை.

154
00:17:26,463 --> 00:17:28,798
சான்டா பார்பரால இல்லாததுக்கு சொல்வதா?

155
00:17:33,052 --> 00:17:35,972
-என்ன பிரச்சினை?
-சத்தமா சொல்ல முடியாது,

156
00:17:36,055 --> 00:17:40,018
-நீதிமன்ற அறையில் கேட்டுவிடுமோன்னு பயம்.
-நாம் இங்க பத்திரம்தான்.

157
00:17:45,732 --> 00:17:46,775
கோர்டா செத்தான்.

158
00:17:47,692 --> 00:17:48,693
ரீஸ் சாகவில்லை.

159
00:17:49,611 --> 00:17:53,156
-அதை நான் பார்த்துக்கறேன்.
-இதை சிரியாவில் செய்திருக்கணும்,

160
00:17:53,239 --> 00:17:55,700
இப்ப இந்த வெறியன் காலிஃபோர்னியால...

161
00:17:55,784 --> 00:17:58,286
அவன் வெறியனல்ல. அவன் ஒரு சீல் கமாண்டர்.

162
00:17:58,369 --> 00:17:59,204
மரியாதை கொடு.

163
00:18:03,750 --> 00:18:09,005
இது மோசம், ஸ்டீவ். ரீஸ் தப்பிட்டான்,
மற்றும் ஹோல்டர் மீறுகிறான்...

164
00:18:09,088 --> 00:18:11,508
-ஹோல்டருக்கு முக்கியம் தெரியாது.
-என்னை தெரியும்.

165
00:18:11,591 --> 00:18:13,259
நான் முக்கியமானவன்.

166
00:18:13,343 --> 00:18:16,471
ஹார்க்ரோவுடன் பேசு.
பயண விவரங்களை தயார் செய்யறேன்.

167
00:18:16,554 --> 00:18:18,681
நான் சான்டா பார்பரா போகமாட்டேன்.

168
00:18:18,765 --> 00:18:22,435
-மைக் டெடெஸ்கோ அவனே நிறுவனத்தை விற்கலாம்.
-மைக் விற்பனையாளனல்ல.

169
00:18:23,520 --> 00:18:24,938
அவனுக்கு நாட்டங்களுண்டு.

170
00:18:25,814 --> 00:18:28,274
பார், இப்போ ஒருமுகப் படணும் சால், சரியா?

171
00:18:29,234 --> 00:18:31,861
ப்ளானோ பேரம் வெற்றிகரமாகணும். கண்டிப்பாக.

172
00:18:31,945 --> 00:18:35,740
கேப்ஸ்டோன் ஏராளமான பணம்
போட்டிருக்கு, இப்ப வித்துடணும்.

173
00:18:35,824 --> 00:18:40,370
எலாயஸ் ரைபர்க்குக்கு தைரியம் வர காக்க
முடியாது, நீ அங்கே போகணும், சரியா?

174
00:18:42,038 --> 00:18:43,039
பேரம் முடிப்பவன் நீ.

175
00:18:46,292 --> 00:18:47,544
கர்ட், ஜேனட்டை அனுப்பு.

176
00:19:46,978 --> 00:19:48,396
நீ தூங்க வரணும்.

177
00:19:49,898 --> 00:19:51,441
முடியாது. வேலை இருக்கு.

178
00:19:56,654 --> 00:20:00,700
வார்காம் உன்னை
தீக்குளித்து நிரூபிக்கச் சொல்லுதா?

179
00:20:00,867 --> 00:20:03,870
அது ஸொராஸ்ட்ரிய புத்தாண்டு விழா. நூரஸ்.

180
00:20:03,953 --> 00:20:06,623
அது நடவடிக்கைக்கு உகந்ததா தெரியுது.

181
00:20:08,041 --> 00:20:10,710
எங்களை சிரிய பாதுகாப்பு
படைகளுடன் இணைத்தாங்க.

182
00:20:11,336 --> 00:20:13,338
குர்திஸ்தான் பத்தி தெரிஞ்சுக்கணும்.

183
00:20:13,421 --> 00:20:14,547
இவ உதைக்கிறாள்.

184
00:20:15,590 --> 00:20:16,674
உதைக்கிறாளா?

185
00:20:19,260 --> 00:20:20,470
எனக்கு தெரியல...

186
00:20:24,724 --> 00:20:26,309
அப்பாவை போல செம உதை.

187
00:20:26,434 --> 00:20:29,020
இல்ல. இது அவ அம்மாவை போல.

188
00:20:32,440 --> 00:20:35,693
நீ அங்கே ஒரு வேளை சிக்கிக்கொண்டால்,
நான் சமாளிப்பேன்.

189
00:20:35,777 --> 00:20:38,154
என் அப்பா அம்மா வந்து உதவுவாங்க.

190
00:20:42,200 --> 00:20:44,869
நான் திரும்பி வர முடிந்தால்
மீன் பிடிக்கப் போகலாமோ.

191
00:20:47,413 --> 00:20:51,834
விமானத்தை திருடியாவது வீட்டுக்கு
வந்துடுவேன். நான் இங்கே இருப்பேன்.

192
00:20:53,336 --> 00:20:55,421
முழுதும் உன்னுடன் கைகோர்த்து.

193
00:20:55,505 --> 00:20:59,926
மணல் பெட்டி விளையாட்டில் வரும் தாதி
எனக்குத்தான் பிரசவம் பார்க்க வர்றாளோ.

194
00:21:07,767 --> 00:21:09,018
அய்யோ, இல்லை.

195
00:21:21,030 --> 00:21:22,740
பறவைக்கு சரியாயிடுமா, அப்பா?

196
00:21:22,824 --> 00:21:24,492
ஆம். ஆம். சரியாயிடும்.

197
00:21:24,575 --> 00:21:27,662
மயக்கத்தில இருக்கு.
தன் குடும்பத்தை தேடி பறந்து போயிடும்.

198
00:21:49,892 --> 00:21:50,727
நான்தான்.

199
00:21:52,437 --> 00:21:53,438
-நன்றி.
-சரி.

200
00:21:56,190 --> 00:21:58,818
மறைந்திருக்க ஹனிமூன் அறைக்கு
வந்திருக்க போலயே.

201
00:22:01,654 --> 00:22:05,116
நீ சொல்றது சரி. என்சிஐஎஸ் உன்னை தேடுது.

202
00:22:05,199 --> 00:22:08,119
நானா இருந்தா இப்போதைக்கு
வீட்டுக்கே போகமாட்டேன்.

203
00:22:08,202 --> 00:22:12,457
உன்னை லாஸ் ஆஞ்சலஸ்ல சுட்டவன்
ஏட்ரியன் கோர்டோனிஸ்னு தெரியுது.

204
00:22:12,540 --> 00:22:16,377
மார்ஸாக்லருந்து, அல்லது ரெய்டர்ஸ்,
இப்படில்லாம் சொல்லிக்கிறாங்க.

205
00:22:16,461 --> 00:22:18,546
டாலோஸ் டேக்டிகல்ல தனிப்பட்ட பணி.

206
00:22:19,422 --> 00:22:21,507
அவங்கள நேரடியா எதிர்கொண்டதில்லை...

207
00:22:21,591 --> 00:22:24,761
அவங்களுக்கு பாவ புண்ணியம்லாம்
இல்லனு சொல்லலாம்.

208
00:22:24,844 --> 00:22:27,472
கடவுளே, கொஞ்சம் மூச்சு விட்டுட்டு
சாப்பிடேன்?

209
00:22:28,723 --> 00:22:31,851
தின்னும் புர்ரிடோ எங்கயும் போயிடாது.

210
00:22:31,934 --> 00:22:33,895
எனக்கு புகாடினி கிடைக்கலப்பா.

211
00:22:33,978 --> 00:22:38,107
-எனக்கு அதுக்கு அர்த்தமே தெரியாது.
-இந்த புர்ரிடோக்கு நன்றின்னேன்.

212
00:22:38,191 --> 00:22:39,859
-இருக்கட்டும்.
-நன்றி.

213
00:22:54,540 --> 00:22:59,087
லூஸ். அவளுக்கு நல்ல திறமை, இல்ல?

214
00:22:59,587 --> 00:23:04,175
ஆம். பாட்டும் பாடுவா.
கிடாரும் வாசிக்க தெரியும்.

215
00:23:09,222 --> 00:23:11,224
ஆம், எவ்ளோ அருமையானவ, சகோதரா.

216
00:23:21,275 --> 00:23:25,196
அவ இதை வரைந்த நாளை ஞாபகப்படுத்த முடியலை.

217
00:23:25,279 --> 00:23:27,448
எனக்கு போன ஞாயிறே நினைவிலிருப்பதில்லை.

218
00:23:29,200 --> 00:23:31,619
சிரியாவுக்கு முன் நல்லதொரு காலைனு தோணுது.

219
00:23:32,995 --> 00:23:35,957
ஒரு பறவை வந்தது.

220
00:23:37,166 --> 00:23:41,129
சிட்டுக் குருவியா இருக்கும்,
ஜன்னலில் மோதியது. செத்து விழுந்தது.

221
00:23:41,212 --> 00:23:43,631
உனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கே.

222
00:23:43,714 --> 00:23:46,759
இருக்கு, ஆனா பாதிதான். மத்ததெல்லாம்...

223
00:23:46,843 --> 00:23:48,845
சொதப்பல். குழப்பமா இருக்கு.

224
00:23:52,557 --> 00:23:54,892
மற்ற நினைவுகளோடு கலந்துடுது. அதாவது...

225
00:23:56,144 --> 00:23:58,479
கலைடாஸ்கோப்ல பார்க்கிற மாதிரி.

226
00:23:59,856 --> 00:24:04,569
உனக்கு அடி பட்டுச்சே.
இன்னும் அந்த தலைவலிகள் வருதா?

227
00:24:09,490 --> 00:24:10,575
இல்ல.

228
00:24:14,912 --> 00:24:17,165
-இலக்கு தகவல் தொகுப்பை பார்த்தாயா?
-ஆம்.

229
00:24:18,875 --> 00:24:24,046
ஆம். பார்த்தாலே ரொம்ப மோசமானவன்
போல தெரியறான்.

230
00:24:24,130 --> 00:24:25,756
அவன் நாய்க்குட்டியை பார்த்தாயா?

231
00:24:27,508 --> 00:24:31,053
நான் என்ன சொல்றேன்னா,
அவனை பார்த்தா பெரிய ஆள் மாதிரி தோணல.

232
00:24:31,137 --> 00:24:33,139
நானும் அப்படி நினைக்கல.

233
00:24:33,222 --> 00:24:35,349
கேப்ஸ்டோன்ல ஆழமா தேடப் போறேன்.

234
00:24:35,433 --> 00:24:38,561
நாம் செய்யலாம். ஆனா வேறொருவர்
அதை செய்துட்டுருக்காங்க.

235
00:24:39,061 --> 00:24:43,482
ஒரு நிருபர். சந்தேகத்தை எழுப்பாம
கண்டுபிடிக்க அவள் உதவலாம்.

236
00:24:43,566 --> 00:24:44,567
நிருபரா?

237
00:24:45,276 --> 00:24:46,277
ஆம்.

238
00:24:47,111 --> 00:24:48,779
அது தெரிந்தது நல்லதுதான்.

239
00:24:50,323 --> 00:24:52,200
-நீ இங்கிருப்பது தெரியுமா?
-இல்ல.

240
00:24:52,283 --> 00:24:53,993
-நான் இருப்பது?
-தெரியாது.

241
00:24:54,076 --> 00:24:57,705
நீ மட்டும் இதில் சிக்கவில்லை.
நானும் தான். நான் ஒரு சிஐஏ.

242
00:24:57,830 --> 00:25:00,124
நீ போரிடுவது வெளியே தெரியவந்தால்...

243
00:25:00,208 --> 00:25:01,918
-புரியுது.
-லாஸ் ஆஞ்சலஸ்ல...

244
00:25:02,001 --> 00:25:04,670
சொல்றேனே, நீ பத்திரம்தான்.
உறுதியா சொல்றேன்.

245
00:25:06,214 --> 00:25:07,882
பரவாயில்லை. அவள் நமக்கு தேவை.

246
00:25:09,592 --> 00:25:11,344
எந்த வகைல சேர்ப்பதுனு தெரியும்.

247
00:25:12,553 --> 00:25:13,888
நிர்ப்பந்தமே இல்ல.

248
00:25:13,971 --> 00:25:17,433
-நீ விலகுவதானால், புரிந்து கொள்வேன்.
-ஐயோ! நான் விலக மாட்டேன்.

249
00:25:17,516 --> 00:25:19,936
இது எனக்கு நிர்ப்பந்தம் அல்ல, சகோதரா.

250
00:25:21,103 --> 00:25:24,190
நாம் பரஸ்பரம் ஆதரிச்சுக்கணும்.
அவ்வளவுதான்.

251
00:25:24,273 --> 00:25:25,441
எப்போதும்.

252
00:25:27,777 --> 00:25:29,153
அது சரி.

253
00:25:32,907 --> 00:25:34,075
அது சரி.

254
00:25:35,660 --> 00:25:37,745
கண்டிப்பா உன்னை தேடி ஆட்கள்

255
00:25:37,828 --> 00:25:40,623
அலையுறாங்க, நீ கமுக்கமா
இருக்கணும். தயவு செய்து.

256
00:25:43,167 --> 00:25:46,295
-அதைத்தான் சொல்லறேன்.
-நான் ஓய்வெடுக்கிறேன்.

257
00:25:46,379 --> 00:25:48,965
எனக்கு ஏதும் தெரிஞ்சா, அழைத்து சொல்றேன்.

258
00:25:49,924 --> 00:25:52,301
புரியுது. பென்.

259
00:25:54,428 --> 00:25:58,808
கால்ஃப் போட்டிக்கு, பிக் லெபோவ்ஸ்கி
மாதிரியா உடையணிந்து போறே? அப்படியா?

260
00:25:58,891 --> 00:26:00,101
கால்ஃப் பிடிக்காது.

261
00:26:18,995 --> 00:26:20,288
உன்னால போட முடியாது.

262
00:26:23,207 --> 00:26:24,500
அவன் போட முடியாது.

263
00:26:26,419 --> 00:26:29,588
அவனைப் பாரேன், ஒரு ஸ்காட்டி கேமரூன்
முன்மாதிரி வாங்கிட்டா,

264
00:26:29,672 --> 00:26:31,590
தான் ஜெயிச்சிடலாம்னு நினைப்பு.

265
00:26:32,758 --> 00:26:37,430
இவன் கில்லாடி, தெரியுமா. ஆனா,
சொல்லிட்டே இருக்கேன், ஜம்பம் சாயல.

266
00:26:40,474 --> 00:26:42,643
விமானத்துல நல்லா கவனிச்சாங்களா?

267
00:26:42,768 --> 00:26:45,229
அழகு பணிப்பெண்களுடன் நட்பானாயா?

268
00:26:45,313 --> 00:26:50,192
எலாயஸ் 13 மணி நேரம் பறந்தது, பணிப்பெண்களை
சீண்டினதை பற்றி பேச இல்லை.

269
00:26:50,276 --> 00:26:51,444
நான் சீண்டறதை பேசல.

270
00:26:51,527 --> 00:26:55,990
நான் சொல்றது பணம்
கொட்டுபவர்களது ஈர்க்கும் தன்மை.

271
00:26:57,616 --> 00:27:01,203
திரு அக்னன். எப்பவும் தமாஷ்தான்.

272
00:27:01,287 --> 00:27:02,371
கிண்டலுக்கு சொல்லல.

273
00:27:02,455 --> 00:27:07,043
பிளானோ, உலகில் மைக்கின் நிறுவனத்தை வாங்கக்
கூடிய நாலு நிறுவனங்களுள் ஒண்ணு.

274
00:27:07,126 --> 00:27:09,211
நியூபெல்லம் பத்தி ஒரு பேரத்தை முடிப்போம்.

275
00:27:09,295 --> 00:27:11,589
கேப்ஸ்டோன் தொழிற்சாலைகளா? நீங்க ஆடணும்.

276
00:27:11,672 --> 00:27:14,425
அற்புதம். நாங்க யார்கூட ஆடறோம்?

277
00:27:14,508 --> 00:27:16,302
ப்ரைசன் டிசம்பூவை கேட்டிருந்தேன்.

278
00:27:16,385 --> 00:27:18,929
நீங்க ஸ்டீவ் டேவியுடன்.

279
00:27:19,889 --> 00:27:21,140
யார் அவன்?

280
00:27:21,682 --> 00:27:25,102
இல்ல. இங்கே வா, நான் உனக்கு
புரிய வைக்கிறேன்.

281
00:27:29,023 --> 00:27:33,736
கேப்ஸ்டோன் தொழிற்சாலைக்காக
துவங்குவது ப்ரைசன் டிசம்பூ.

282
00:27:58,594 --> 00:27:59,595
அப்படி சொல்லுப்பா.

283
00:28:06,102 --> 00:28:10,648
ஆறு வருடம் முன் இதை
ஆழமா யோசித்தோம்னு சொல்ல தயங்கல.

284
00:28:10,815 --> 00:28:12,024
எனக்கு தெரியாது.

285
00:28:12,108 --> 00:28:14,193
உன் வேலை ரொம்ப கவரக் கூடியது.

286
00:28:14,276 --> 00:28:15,694
எனக்கு நல்லாவே புரியுது.

287
00:28:15,778 --> 00:28:18,572
கேப்ஸ்டோன் ராணுவ ஒப்பந்தங்களை
எங்களுக்கு தரும் முன்,

288
00:28:18,656 --> 00:28:21,867
நியூபெல்லத்துக்கு ஒரு திட்டம்
வைத்திருந்தேன், நல்லா விற்றா

289
00:28:21,951 --> 00:28:26,163
-அந்த அசல் திட்டத்தை ஆயலாம்.
-வந்துட்டார், மிக்க உணர்வுடன்.

290
00:28:27,415 --> 00:28:33,254
தீர்க்கதரிசிகளுக்கு, பலவிதமான
வாய்ப்புகள் தெரியும்.

291
00:28:33,337 --> 00:28:36,424
பங்குதாரர்களா, புரவலர்களா, எங்க பணி,

292
00:28:37,007 --> 00:28:39,760
அந்த நெருக்கத்தை இன்னும் அதிகமாக்குவது.

293
00:28:40,469 --> 00:28:44,515
கேப்ஸ்டோன் கோதாவில்
இறங்கி, ஸ்டீவ் தலைமை தாங்கினா...

294
00:28:44,598 --> 00:28:46,892
அதுக்காகதான் வந்திருக்கோம், இல்லயா?

295
00:28:48,853 --> 00:28:51,939
உங்க இப்போதைய போக்கு
பிடிச்சிருக்கு திரு. டெடெஸ்கோ.

296
00:28:52,481 --> 00:28:53,941
அது உண்மைதான். சரி.

297
00:28:54,024 --> 00:28:56,110
அப்ப, பிளானோ விற்பனைக்கு வந்த மாதிரியா?

298
00:28:58,112 --> 00:29:02,783
திரு. அக்னன், உங்க விடாமுயற்சி புரியுது,
ஆனா சட்டப் படி,

299
00:29:02,867 --> 00:29:04,118
இது ஒரு சமூக அழைப்பு.

300
00:29:04,201 --> 00:29:05,327
சமூக அழைப்பா?

301
00:29:05,703 --> 00:29:07,413
அது சரி. அப்ப இது என்ன?

302
00:29:08,914 --> 00:29:11,208
16ம் தெருல வீட்டை வாடகைக்கு எடுத்தேன்.

303
00:29:12,084 --> 00:29:14,295
இன்றிரவு நடன விருந்து வர பிடிக்குமா?

304
00:29:14,920 --> 00:29:16,422
நட்பு, பெண்களை அழைத்து வரலாம்

305
00:29:16,505 --> 00:29:19,717
ஒரு பாட்டில் பா அர்மான்யேக்,
உங்களை மட்டையாக்கும்.

306
00:29:20,509 --> 00:29:24,138
நான் ஒரு பேரம் தர்றேன், சுமாரா சரியா
இருந்தா, சிறப்பு.

307
00:29:24,221 --> 00:29:26,599
இல்லன்னா, ப்ரைசன் இருக்கவே இருக்கார்.

308
00:29:29,935 --> 00:29:33,564
நீங்க சொன்ன அந்த வீடு எங்க இருக்கு?

309
00:30:19,652 --> 00:30:22,404
ஆம். அவனைக் கண்காணிக்கிறேன்.

310
00:30:24,198 --> 00:30:27,493
நாள் நல்லதாகட்டும், சகோதரா.

311
00:30:28,327 --> 00:30:29,370
ஆம்.

312
00:30:53,769 --> 00:30:55,854
மன்னிக்கணும், ஹலோ?

313
00:30:55,938 --> 00:30:59,149
-ஜோர்ட், நான்தான்.
-கேட்டி, உன்னை அழைச்சிட்டே இருக்கேன்.

314
00:30:59,233 --> 00:31:00,484
என்ன ஆச்சு?

315
00:31:01,151 --> 00:31:04,446
-ஆம், மன்னி. என் ஃபோன் தொலைந்தது.
-உனக்கு ஒண்ணுமில்லயே?

316
00:31:05,322 --> 00:31:07,992
கவனி, ரீஸ் செய்தில நான் சொன்னது தவறு.

317
00:31:08,075 --> 00:31:10,869
-மொத்தமா தப்பு.
-மொத்தமா தப்புன்னா என்ன அர்த்தம்?

318
00:31:12,746 --> 00:31:15,666
நான் ஊரை விட்டு கொஞ்சம் வெளியே போகணும்.

319
00:31:15,749 --> 00:31:17,918
வேலைல மூழ்கி ரொம்ப களைச்சுட்டேன்,
தெரியுமா?

320
00:31:18,002 --> 00:31:21,130
இல்ல, எனக்குத் தெரியாது. நீ எதைச் சொல்றே?

321
00:31:22,089 --> 00:31:25,926
உன் வேலையை காட்டறயே?
கழட்டி விடப் பாக்கறியா?

322
00:31:26,010 --> 00:31:27,803
மன்னி. என்னிடம் நல்லா இருந்தே.

323
00:31:27,886 --> 00:31:31,307
அய்யோ, கேட்டி. உன்னை நம்பினா
எனக்கு இது தான் கிடைக்குமா?

324
00:31:49,491 --> 00:31:52,161
ஆக, நாம இப்ப எப்படி செய்துட்டுருக்கோம்?

325
00:31:52,745 --> 00:31:55,914
இது நல்ல வேலை. நாம் அதை முடிப்போம்.

326
00:32:02,796 --> 00:32:04,757
பட்டும் படாம செய்ய உன்னை அமர்த்தல.

327
00:32:10,971 --> 00:32:13,724
இது நம்மை 5 நிலைகள் கீழே தள்ள போகுது.

328
00:32:15,017 --> 00:32:16,143
அது சரியே.

329
00:32:18,562 --> 00:32:24,360
சிலர், நமது வளங்களை நாமே குறைச்சுக்கறது
புத்திசாலித் தனமில்ல என்பாங்க.

330
00:32:27,905 --> 00:32:29,448
நீ அப்படி சொல்வியா?

331
00:32:32,493 --> 00:32:34,703
லொரைன், நாலு மாதம்தான் இருக்கு.

332
00:32:34,995 --> 00:32:37,956
அனேகமா கமிட்டி இதை அனுமதிக்காது.

333
00:32:38,499 --> 00:32:40,501
ஒரு தோல்விலயா நாம் முடிக்கணும்?

334
00:32:43,128 --> 00:32:46,757
அப்ப, ஓட்டு போட ஆணையிடுவோம்.
சபையில் பாதி பேருக்காவது வெற்றி.

335
00:32:46,840 --> 00:32:50,219
நம் ஒப்பந்தக்காரகள் பத்தி?
இதை அவங்க வெற்றியா பார்ப்பாங்களா?

336
00:32:50,302 --> 00:32:51,970
அனுகூல தொடர்புகளுக்காக

337
00:32:52,054 --> 00:32:55,307
-என்னை வருந்த வைக்க முயற்சிக்கிறாயா?
-சக்தி மிக்கவங்க.

338
00:32:55,391 --> 00:32:57,142
அதான், அவங்க பேச்சு செல்லும்.

339
00:32:58,268 --> 00:32:59,895
உங்க பாரம்பரியம் எதிர்ப்புகளை

340
00:32:59,978 --> 00:33:03,565
-நொறுக்கி அப்படியே இருக்கும்.
-ஹேய்.

341
00:33:03,649 --> 00:33:04,900
இதுவே என் பாரம்பரியம்.

342
00:33:06,610 --> 00:33:09,238
பொறுப்பேற்றப்ப இருந்ததைவிட மேம்படுத்துவது.

343
00:33:50,404 --> 00:33:52,406
க்ரிப்டெக்ஸ்

344
00:34:00,289 --> 00:34:04,543
ஆம். சில விஷயங்கள் இங்கே நடக்குது.
நீங்க தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன்.

345
00:34:30,194 --> 00:34:34,072
ஹேய், செல்லமே, நான் ரேவன்.

346
00:34:36,241 --> 00:34:37,910
துணை வேணுமா?

347
00:34:37,993 --> 00:34:41,163
ஹை, ரேவன். உண்மைல வேணும்தான்.

348
00:34:45,876 --> 00:34:47,628
தெரியுமா, நீ வருவதை பார்த்தேன்.

349
00:34:48,212 --> 00:34:51,089
சக பெண் சாஷா இங்க வர விரும்பினால்,

350
00:34:51,173 --> 00:34:54,343
"அவன் எனக்கே எனக்கு"ன்னு நான் சொன்னேன்.

351
00:34:54,426 --> 00:34:55,594
அப்படியா சொன்ன?

352
00:34:57,721 --> 00:35:02,643
உள்ளே போய் தனியா குடிப்போமா, என்ன சொல்ற?

353
00:35:03,268 --> 00:35:05,103
இங்கயே உட்கார்ந்து பேசினா என்ன?

354
00:35:06,355 --> 00:35:07,731
எனக்கு பேச பிடிக்கும்.

355
00:35:11,527 --> 00:35:13,070
நாம என்ன பேச போறோம்?

356
00:35:13,862 --> 00:35:16,782
பார்ட்டி பண்ண நினைக்கிறேன்.
நீ உதவ முடியுமா?

357
00:35:21,995 --> 00:35:23,121
நீ போலீசா?

358
00:35:25,165 --> 00:35:26,166
இல்ல.

359
00:35:27,000 --> 00:35:31,755
-அப்படின்னா சொல்லிடணும்.
-நிச்சயமா இல்ல. நானல்ல.

360
00:35:36,093 --> 00:35:39,638
உன்னை கோர்த்து விட முடியும்.
குறிப்பா என்ன வேணும்?

361
00:35:39,721 --> 00:35:41,765
-எனக்கு தலைவலியா இருக்கு.
-சொல்லு?

362
00:35:42,599 --> 00:35:45,185
-எவ்ளோ மோசம்?
-ரொம்ப மோசம்.

363
00:35:48,438 --> 00:35:51,900
சரி, நிகழ்ச்சியாளனிடம்
மெதாடோன் வேஃபர் இருக்கு. வேலை செய்யுமா?

364
00:35:53,694 --> 00:35:55,362
அது போதும்னு நினைக்கிறேன்.

365
00:35:56,905 --> 00:36:01,201
ஒண்ணு 100 டாலர், இது உனக்கான குறைந்த விலை.

366
00:36:02,035 --> 00:36:03,078
எனக்கு மட்டுமா?

367
00:36:12,921 --> 00:36:14,548
நன்றி செல்லம். இங்கயே இரு.

368
00:36:22,973 --> 00:36:26,894
பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு டானி

369
00:36:26,977 --> 00:36:31,607
உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

370
00:36:32,524 --> 00:36:34,776
வாங்க பாஸ். என்ன செய்யறீங்க?

371
00:36:34,860 --> 00:36:36,945
-வாங்க பாஸ். வாங்க
-போவோம்.

372
00:36:37,779 --> 00:36:39,823
போவோம். இங்கே வா, ரீஸ்.

373
00:36:40,616 --> 00:36:43,118
ஹேய், செல்லம். எல்லாம் நலம்தானே?

374
00:36:48,248 --> 00:36:49,499
சிலது ஞாபகம் வருது.

375
00:36:52,961 --> 00:36:55,756
சரி, இது உனக்கு மறக்கடிக்க உதவும்.

376
00:37:15,859 --> 00:37:19,279
சொல்லியாகணும், வெளிநாட்டில்
இப்படிப் பட்ட வேலைய செய்ததில்லை.

377
00:37:26,161 --> 00:37:27,621
வெளிநாட்டில பல விதிகள்.

378
00:37:27,955 --> 00:37:29,831
ஆம். ரொம்ப அதிகம்.

379
00:37:40,759 --> 00:37:43,011
நீ போனபின் ரொம்ப மாறிட்டேன்.

380
00:37:46,014 --> 00:37:48,767
தெரியுமா, நான்...
விலகலாம்னு கூட நினைச்சேன்.

381
00:37:49,518 --> 00:37:53,355
நீயும் அதிரடிப்படையும்,
சேற்றில் பூத்த செந்தாமரை, சகோதரா.

382
00:37:53,438 --> 00:37:56,942
நீ எங்கயும் போகல,
உனக்கு நான் நிச்சயமா தேவையும் இல்ல.

383
00:38:02,614 --> 00:38:05,409
எல்லாத்தையும் பார்த்தா,
அது உண்மையல்லன்னு சந்தேகம்.

384
00:38:07,744 --> 00:38:10,956
ஹேய். இதை நான் எடுத்துக்கறேன்.

385
00:38:15,627 --> 00:38:19,673
என்ன? எல்லா விஷயத்தையும் உன்னிடமே
விடுவேன்னு நினைச்சியா?

386
00:38:23,343 --> 00:38:24,386
சரி...

387
00:38:25,095 --> 00:38:27,431
ஒருவரது இரவு பயங்கரமா இருக்கப் போகுது.

388
00:38:29,766 --> 00:38:31,977
-எடுத்துக்கோங்க, பெண்களே.
-நன்றி.

389
00:38:33,520 --> 00:38:35,939
இல்ல இல்ல, நான்தான் சொல்றேனே,

390
00:38:36,023 --> 00:38:41,111
இதுதான் வாழ்க்கையிலேயே நீங்க சாப்பிட்ட
சிறந்த சுஷியாக இருக்கும்.

391
00:38:41,194 --> 00:38:43,155
தயவு செய்து அபத்தமா பேசாதே.

392
00:38:43,238 --> 00:38:45,657
இதுதான் தெரிய வருவது.

393
00:38:46,158 --> 00:38:50,120
சிறந்ததைப் பத்தி பேசணுமா?
சுகியாபாஷி ஜிரோ போயிருக்கியா?

394
00:38:50,203 --> 00:38:54,958
அட, ஜிரோ அனுபவம் பெறலாம்.
அவன் பரவாயில்லை. எதுவோ.

395
00:38:55,042 --> 00:38:57,753
ஆனால், ஸ்டீவ் இந்த
டைஷியை கண்டு பிடித்தான்.

396
00:38:57,836 --> 00:39:00,505
ஹொக்கைடோல இருந்து அவனை வரவழைத்தோம்.

397
00:39:00,589 --> 00:39:04,176
சொல்றேனே, அவன் மீன் கூட பேசுவான்.

398
00:39:04,259 --> 00:39:07,763
படகுத்துறைக்குப் போய்,
கெண்டை, கெளுத்தி மீன்களுடன்

399
00:39:07,846 --> 00:39:11,266
குசுகுசுப்பான். அவை
என்ன சொல்லும்னு தெரியாது.

400
00:39:11,349 --> 00:39:13,310
"என்னை பிடி, நல்ல சுவை."னு சொல்லுமோ.

401
00:39:15,270 --> 00:39:17,397
நான் சாப்பிட்டு பார்க்கணும்னு தோணுது.

402
00:39:17,481 --> 00:39:20,358
சரி. நான் பதிவு செய்யறேன். எப்போ?

403
00:39:23,779 --> 00:39:27,199
எனக்கு கால அட்டவணை இல்லை.
என் குழுவோடு பேசணும்.

404
00:39:27,282 --> 00:39:29,826
குழுவை விட்டு தள்ளுங்க.
நான் கேட்பது உங்களை.

405
00:39:30,368 --> 00:39:31,703
சால், வேணாம்.

406
00:39:35,540 --> 00:39:36,625
நேரமாகிவிட்டது.

407
00:39:36,708 --> 00:39:40,545
இங்கே இவ்ளோ நல்லா அனுபவித்தேன்,
காலை விமானம் ஏறணும்.

408
00:39:43,673 --> 00:39:46,134
எலாயஸ், பல மாதமா உன்னிஷ்டப் படி ஆடினோம்.

409
00:39:47,177 --> 00:39:49,846
கால்ஃப் வேணுமா, கால்ஃப் ஆடி.
மீன் சாப்பிடணுமா...

410
00:39:52,057 --> 00:39:55,894
ஆனா, எல்லையை கடந்துட்டோம்,
நாங்க உன்னை, ரெண்டுல ஒண்ணு முடிவு

411
00:39:55,977 --> 00:39:58,480
செய்ய நிர்பந்திக்கும் நேரம் வந்தாச்சு.

412
00:39:59,147 --> 00:40:01,608
பிளானோவுக்கு நியூபெல்லம் வேணுமா வேண்டாமா?

413
00:40:07,447 --> 00:40:09,282
சொத்து வாங்கும் அணியை அழைக்கிறேன்.

414
00:40:09,991 --> 00:40:13,620
திரு ஹார்னிடம் சொல்,
காலையில் திட்டத்தை சொல்வேன்.

415
00:40:14,996 --> 00:40:16,123
நல்லிரவு.

416
00:40:26,550 --> 00:40:28,260
தேவையில்லாத வேலை இது.

417
00:40:28,343 --> 00:40:32,139
எலாயஸ் ரைபர்க் போன்றவங்கள,
மரியாதையோட நடத்தணும், மட்டமா இல்ல.

418
00:40:36,476 --> 00:40:41,106
உனக்காக எவ்ளோ பணம் சேர்த்தேன்னு
உனக்கு கொஞ்சமாவது தெரியுமா?

419
00:40:41,189 --> 00:40:45,777
கடவுளே, மைக், நீதான் எனக்கு
நன்றி சொல்ல வேண்டியிருக்கும்.

420
00:40:49,698 --> 00:40:53,994
சரி, எல்லோரும் இங்கே கவனிக்கிறீங்களா?
தயை செய்து, எல்லோருமே?

421
00:40:55,537 --> 00:40:56,913
ஒழிங்க.

422
00:40:58,123 --> 00:41:01,877
நிஜம்தான். முடிஞ்சுது, வீட்டுக்கு
போங்க. எல்லோரும், போங்க.

423
00:41:02,669 --> 00:41:04,171
-நிஜமாவா?
-ஆம்.

424
00:42:12,197 --> 00:42:16,826
இன்னக்கி நிறைய பணம் பண்ணிட்டோம் நண்பா.
இன்னக்கி நிறைய பணம் பண்ணிட்டோம் நண்பா.

425
00:42:16,952 --> 00:42:18,620
யாரு என் செல்லம்?

426
00:43:41,911 --> 00:43:45,749
தி டயமண்டின் "லிட்டில் டார்லிங்"
அமெரிக்காவின் அபிமான பாடல்

427
00:44:53,817 --> 00:44:54,901
இதோ வந்தான்.

428
00:45:19,467 --> 00:45:22,262
-மன்னிக்கணும், இந்த பையால, சால்...
-தயவு செய்து!

429
00:45:22,387 --> 00:45:26,641
கவனி, அந்தப் பையால, அது வந்து...

430
00:45:26,766 --> 00:45:29,727
நம் இருவருக்குமே பிடிக்காததா
இருந்தது. சரியா?

431
00:45:30,979 --> 00:45:33,898
உதவுங்க! எனக்கு உதவுங்க! எனக்கு உதவுங்க!

432
00:45:34,065 --> 00:45:38,153
யாராவது எனக்கு உதவி
செய்யுங்களேன்! உதவி செய்யுங்க...

433
00:45:40,822 --> 00:45:44,951
யாராவது! உதவுங்க! உதவி தேவை.

434
00:45:48,788 --> 00:45:50,123
உதவி!

435
00:45:53,376 --> 00:45:54,461
கத்தி முடிச்சியா?

436
00:46:10,393 --> 00:46:12,896
கேப்ஸ்டோன் தொழிற்சாலை
நான் சாக கோருவது ஏன்?

437
00:46:15,940 --> 00:46:20,278
-நீ பேசுறது எனக்கு புரியல.
-சும்மா பொய் சொல்லாதே.

438
00:46:20,361 --> 00:46:21,237
பொய் சொல்லல.

439
00:46:21,321 --> 00:46:23,114
என் தாயின் மீது சத்தியமா.

440
00:46:23,198 --> 00:46:25,742
கட்டியோட அதுக்கு ஏதாவது தொடர்ப்பு இருக்கா?

441
00:46:26,826 --> 00:46:29,037
-என்னது?
-என் தலையில் கட்டி, சால்.

442
00:46:29,120 --> 00:46:30,997
உனக்கு மூளைக் கட்டியா?

443
00:46:31,956 --> 00:46:35,126
அய்யகோ, என்னை அவிழ்த்து விடு,
நான் எதையும் செய்யல.

444
00:46:47,222 --> 00:46:50,099
நான் சமாளிக்கும் ஆட்களை பார்த்தவன், சால்.

445
00:46:52,185 --> 00:46:55,647
வேதனையும் இழிவு படுத்துவதும்.

446
00:46:58,566 --> 00:47:01,361
உன் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு.

447
00:47:02,362 --> 00:47:04,197
அவங்க வாயை திறக்கவேயில்ல.

448
00:47:04,280 --> 00:47:09,118
ஏன்னா தங்களை விட
ஏதோ ஒரு நோக்கம் பெரியதுன்னு நம்பினாங்க.

449
00:47:09,202 --> 00:47:13,623
காட்டிக் கொடுப்பதை விட கத்தி சாவது மேல்

450
00:47:13,706 --> 00:47:15,375
என நினைத்ததால்.

451
00:47:18,419 --> 00:47:20,838
நீ அப்படி இல்லதானே, சால்?

452
00:47:20,922 --> 00:47:23,675
நீ நிஜ நம்பிக்கையில ஆழ்ந்தவனல்ல.
என்னனு தெரியாம

453
00:47:23,758 --> 00:47:27,762
புரியாத உலகம் எதிலோ வீழ்ந்த ஒரு ஆள்.

454
00:47:27,845 --> 00:47:32,392
இதுக்காக நீ சாக விரும்பமாட்ட, சால்.

455
00:47:33,268 --> 00:47:34,602
ஆக, சொல்.

456
00:47:36,729 --> 00:47:41,776
அவன் எதையும்... அவன் எதையுமே...
அவன் எதையும் சொல்வதில்லை.

457
00:47:41,859 --> 00:47:44,404
-யார்?
-இது தரவு தனிமைப்படுத்தல்.

458
00:47:45,405 --> 00:47:47,490
தனித் தனியா செயல் படுவது. உங்களை போல.

459
00:47:47,574 --> 00:47:50,410
-அதில அப்படியே பூரிப்பான்.
-யார் அப்படி பூரிப்பது?

460
00:47:54,289 --> 00:47:57,166
ஸ்டீவ். ஹார்ன்.

461
00:47:58,418 --> 00:48:03,506
ஸ்டீவ் ஹார்ன். அப்படி சொல்லு. இந்தா குடி.

462
00:48:13,099 --> 00:48:14,183
சொல்லு.

463
00:48:14,309 --> 00:48:16,436
ஸ்டீவ் ஒரு தீர்க்கதரிசி. அவன்...

464
00:48:17,145 --> 00:48:20,815
தொழில்நுட்பத்தில சம்பாதித்து,
யூக வணிகத்தில் வளர்ந்தான்.

465
00:48:21,482 --> 00:48:26,279
அவன் மக்களை, வணிகத்தை,
போரை புரிந்து கொண்டவன்.

466
00:48:29,407 --> 00:48:34,329
நான் வெறும் ஒப்புக்குச் சப்பாணி. கையாள்.
பிரச்சினைகளை தீர்ப்பவன்.

467
00:48:36,748 --> 00:48:39,500
ஸ்டீவ் சிரியால ஒரு
தாக்குதலை நடத்தியது எப்படி?

468
00:48:39,584 --> 00:48:44,088
ஸ்டீவுக்கு எங்கும் நண்பர்கள் உண்டு.
கோடீஸ்வரனா இருப்பதன் பலன்.

469
00:48:44,213 --> 00:48:47,342
-அவன் நோக்கம் என்ன?
-எனக்கு தொடர்பில்லாதது அது,

470
00:48:47,425 --> 00:48:50,887
ஆனா, ஏதோ ஒரு விஷயத்தை பத்தின்னு
சொல்லுவாங்க...

471
00:48:53,097 --> 00:48:55,725
திட்டம் ஆர்டி 4895.

472
00:48:56,392 --> 00:48:57,435
அது என்ன?

473
00:48:57,518 --> 00:49:02,690
ஆர்டி4895. ஆனா, சொல்றேன்,
எனக்கு அது என்னன்னு தெரியாது.

474
00:49:04,400 --> 00:49:08,404
ஏராளமான பணம் அதில் ஈடுபட்டிருக்குன்னு
மட்டும் தெரியும்.

475
00:49:10,948 --> 00:49:12,200
இது போதாது.

476
00:49:14,702 --> 00:49:19,207
இல்ல, பார்! பார்! கவனிப்பா, நான் சொல்றேன்,

477
00:49:19,332 --> 00:49:22,835
எனக்கு எதுவும் தெரியாது!
நான் சாதாரண ஆள்! நீயே சொன்ன,

478
00:49:22,919 --> 00:49:24,545
நான் சாதாரண ஆள். அவ்ளோதான்!

479
00:49:35,098 --> 00:49:36,099
அது சரி.

480
00:49:36,724 --> 00:49:38,267
சரி, உன்னை நம்பறேன்.

481
00:49:39,727 --> 00:49:43,731
ஸ்டீவ் ஹார்ன்தான் முடிவு செய்யறான்,
நீ அவனுடைய எடுபிடி நாய்.

482
00:49:43,815 --> 00:49:45,024
-ஆம்!
-சரியா?

483
00:49:45,108 --> 00:49:47,652
-ஆம், அவ்ளோதான்!
-நீ முடிவு செய்யறதில்ல.

484
00:49:47,735 --> 00:49:51,197
-நடந்ததில் உனக்கு நாட்டமில்லை.
-கடவுள் சத்தியமா.

485
00:49:51,948 --> 00:49:55,201
என் குடும்பத்தினரை கொல்ல யாரை ஏவினாய்?

486
00:50:04,877 --> 00:50:07,422
-இன்னும் கொஞ்சம் குடி.
-நான் வீடு போகணும்.

487
00:50:12,802 --> 00:50:14,345
உன்னை ஒரு கேள்வி கேட்டேன்.

488
00:50:27,024 --> 00:50:29,277
ஜாக்ஸன் ஹோல்ல ஒரு வக்கீல் இருக்கான்.

489
00:50:29,360 --> 00:50:31,028
மார்கஸ் பாய்கின்.

490
00:50:31,112 --> 00:50:36,367
உலகலளாவிய கறுப்பு மார்க்கெட் கச்சா
எண்ணெய் வணிகம் செய்றான். மெக்சிகோவிலும்.

491
00:50:36,451 --> 00:50:37,452
மெக்சிகோவா?

492
00:50:40,580 --> 00:50:42,039
பாய்கின் ஏவியது கொலையாளிகளை.

493
00:50:44,417 --> 00:50:46,586
கொலையாளி, அவனை எங்கே பார்ப்பது?

494
00:50:46,669 --> 00:50:49,172
-மெக்சிகோன்னு சொன்னேன்.
-குறிப்பான இடம் சொல்.

495
00:50:49,255 --> 00:50:53,426
"கொலையாளியின் முகவரி என்ன?''
நீ அந்த கேள்வியை கேட்க கூடாது!

496
00:50:53,509 --> 00:50:54,635
பாய்கினுக்கு தெரியுமா?

497
00:50:54,719 --> 00:50:56,471
பாய்கினுக்கு ஏதும் தெரியாது.

498
00:50:56,554 --> 00:51:02,518
பயனற்ற கொலையாளிகளுக்கு பணம்
அனுப்பதான் அவனுக்கு தெரியும்.

499
00:51:04,437 --> 00:51:06,439
அவன் என்னைவிட பயனற்றவன்.

500
00:51:12,028 --> 00:51:15,615
வெளிநாட்டு யுத்த களத்தில்,
செய்வது விடுதலைக்குனு சொல்வாங்க.

501
00:51:15,698 --> 00:51:18,284
ஆனால், சால், அது உண்மையில்,

502
00:51:19,285 --> 00:51:22,079
இந்த உலகில் தீயசக்தி இருக்கு.

503
00:51:24,373 --> 00:51:27,627
அவர்களுக்கு தைரியமில்லாததால்,
அதை கண்களில் பார்ப்போம்.

504
00:51:27,710 --> 00:51:29,629
அதுதான் வேலை. நாங்க செய்கிறோம்.

505
00:51:29,712 --> 00:51:33,132
செய்ய வேண்டியதோ வரி
கட்டிவிட்டு பொத்திக் கொண்டு இருப்பது.

506
00:51:33,216 --> 00:51:35,468
ஆனா நீ, சால்,

507
00:51:36,636 --> 00:51:40,515
ஸ்டீவ் ஹார்ன், கேப்ஸ்டோன் தொழிற்சாலைகள்,

508
00:51:42,517 --> 00:51:44,727
சண்டையில் இறங்க விரும்பினீங்க.

509
00:51:45,770 --> 00:51:48,815
இப்போ, போர்க்களத்தில் இருக்கீங்க.

510
00:51:52,819 --> 00:51:55,404
இது ஒரு மெதாடோன் காக்டெய்ல், சால்.

511
00:51:56,030 --> 00:51:59,534
அமைதியான சாவுக்கு. நீ அதிர்ஷ்டம் செய்தவன்.

512
00:52:00,701 --> 00:52:02,328
உன் தகுதிக்கு மீறியது.

513
00:53:10,813 --> 00:53:11,898
ரீஸ்
செய்தி

514
00:53:11,981 --> 00:53:15,943
கேப்ஸ்டோன் ப்ராஜக்ட் ஆர்டி4895...
ஜாக்கிரதையா இரு

515
00:53:35,588 --> 00:53:39,675
ப்ராஜக்ட் ஆர்டி4895

516
00:54:10,623 --> 00:54:13,292
நாங்க டாஹோல இடத்தை பார்த்தோம், சொன்னேனா?

517
00:54:14,168 --> 00:54:16,003
மேற்கு கரையில ஒரு சின்ன கேபின்.

518
00:54:17,338 --> 00:54:21,008
லாரென் திட்டம். உயரமான
இடத்தில் தடகள வீரர்களை பயிற்றுவிக்க.

519
00:54:21,759 --> 00:54:25,137
எல்லா நட்சத்திரமும் தெரியும்
இடத்திலிருக்க லூசி விரும்பினா.

520
00:54:30,393 --> 00:54:32,395
அவ்ளோதான் அவங்க ஆசைகள்.

521
00:54:33,354 --> 00:54:36,315
இறந்ததால், அவங்களுக்கு எதுவுமே கிடைக்கல.

522
00:54:37,942 --> 00:54:42,863
ஒரு கார்பரேட் சேவை திட்டத்தில்,
இருளைத்தான் அடைந்தனர்.

523
00:54:42,947 --> 00:54:43,990
ஸ்டீவ் ஹார்ன்

524
00:54:45,366 --> 00:54:47,994
அதனாலதான் என் மனைவியும்
பெண்ணும் இறக்க நேரிட்டது.

525
00:54:49,745 --> 00:54:51,247
இதுதான் எனக்குப் புரியல.

526
00:54:52,790 --> 00:54:55,126
அவங்க இதில் பெண்களை சேர்த்தது ஏன்?

527
00:54:58,504 --> 00:55:00,506
கொலை அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

528
00:55:03,175 --> 00:55:06,053
போர் வல்லுனன் பைத்தியமாகி,
தன் குடும்பத்தை கொல்றான்,

529
00:55:06,137 --> 00:55:08,556
டாக்டர்களை கொல்றான், தற்கொலை செய்கிறான்.

530
00:55:08,639 --> 00:55:12,893
மக்களுக்கு கவலையில்லை.
இன்னும் சுவாரசியமா எதிர்பார்ப்பாங்க.

531
00:55:14,645 --> 00:55:17,481
ஸ்டீவ் ஹார்ன். அவன்
சான் ஃபிரான்சிஸ்கோல இருக்கான்.

532
00:55:18,024 --> 00:55:21,986
அமைப்பின் தலைவன். அவன் ஆர்டி4895
பத்தி உண்மையை எனக்கு தரலாம்.

533
00:55:22,820 --> 00:55:25,489
ஆனா, பாய்கின்தான் கொலைகாரனுக்கான நம் பாதை.

534
00:55:26,282 --> 00:55:28,492
லாரெனையும் லூசியையும் கொன்றவன்.

535
00:55:28,576 --> 00:55:31,954
பதில்களா அல்லது ரத்தமா.

536
00:55:33,998 --> 00:55:35,166
சுடுபவன் தேர்வு.

537
00:55:40,963 --> 00:55:42,006
ரத்தம்.

538
00:57:36,537 --> 00:57:38,539
வசனங்கள் மொழிபெயர்ப்பு
கைனூர் சத்யன்

539
00:57:38,622 --> 00:57:40,624
படைப்பு மேற்பார்வையாளர்
சுதா பாலா

