1
00:00:53,429 --> 00:00:55,514
த டெர்மினல் லிஸ்ட்

2
00:03:58,030 --> 00:04:00,115
சாந்தி அடைய அழகிய இடம், மகனே.

3
00:04:08,666 --> 00:04:12,962
ஆண்டவரே, அவர்களுக்கு
நித்திய சாந்தியை அருள்வீராக

4
00:04:14,505 --> 00:04:16,966
அவர்கள் மீது நிரந்தரமாக ஒளி பொழியட்டும்.

5
00:04:18,133 --> 00:04:21,387
ஆத்மா சாந்தி அடையட்டும்.

6
00:04:25,891 --> 00:04:26,934
ஆமென்.

7
00:04:29,520 --> 00:04:34,566
வா. இது தனியா இருக்க வேண்டிய நேரமல்ல.

8
00:04:35,025 --> 00:04:36,652
அவனை விட்டு வர விரும்பல.

9
00:04:37,236 --> 00:04:38,278
உண்மைதான்.

10
00:04:41,448 --> 00:04:43,701
ஆனால், சங்கமிக்க வேறு வழிகள் இருக்கு.

11
00:04:48,247 --> 00:04:50,040
அப்பதான் லூசியிடம் சொன்னேன்,

12
00:04:50,124 --> 00:04:54,753
"என் தேவபுத்திரிகள் யாரும் அவங்க தேவாலய
உடை சேறாவது பற்றி கவலைப் படவே கூடாது."

13
00:04:59,425 --> 00:05:02,553
அது சரி, என்னிடம் ஒண்ணு உள்ளது.

14
00:05:02,636 --> 00:05:04,471
-அட, வேணாம்.
-வேணாம்னா என்ன அர்த்தம்?

15
00:05:04,638 --> 00:05:07,474
-இல்ல, உனக்கு இதில் தடை.
-எதிலிருந்து தடை?

16
00:05:07,766 --> 00:05:09,226
இவை நினைவலைகள்.

17
00:05:09,309 --> 00:05:11,770
அவனை ஒழிக்கணுமா?
குரல் வளையை நெரிச்சுடறேன்.

18
00:05:11,937 --> 00:05:13,731
கவலை வேணாம். சமத்தா இருப்பேன்.

19
00:05:15,733 --> 00:05:17,568
நான் அதிரடி அணியில் இருந்தப்போ,

20
00:05:18,485 --> 00:05:22,656
எல்லா நடவடிக்கைக்கு பின்னும்,
லாரென் ரீஸ் அற்புத பார்பிக்யூவை செய்வா.

21
00:05:23,407 --> 00:05:24,908
இந்த ஒரு முறை,

22
00:05:24,992 --> 00:05:29,997
சப்ரினா, என்னை சட்ட பூர்வமா
பிரிந்த பிறகு என்று நினைக்கிறேன்.

23
00:05:30,289 --> 00:05:31,540
இது எந்த மனைவி?

24
00:05:34,334 --> 00:05:37,755
நான் மனரீதியா நல்ல நிலையில இல்ல.
ஒரு நல்ல நண்பனா,

25
00:05:38,213 --> 00:05:40,632
ரீஸ், பியர் வாங்கினான்,
ஒரு நாலஞ்சு பெட்டி?

26
00:05:40,716 --> 00:05:43,135
நான் நாலஞ்சு பெட்டி பீர் குடிச்சேனா?

27
00:05:43,677 --> 00:05:47,347
பின்னர் இரவு நகர நகர,
எல்லோரும் போறாங்க, நான் பார்க்கிறேன்,

28
00:05:47,431 --> 00:05:52,728
இந்த அழகான தூய்மையான
சிவப்பு சோஃபாவோ என்னை கூப்பிடுது.

29
00:05:53,562 --> 00:05:55,564
அதான், அதில் படுத்து தூங்கிட்டேன்.

30
00:05:55,689 --> 00:05:59,109
காலையில கொஞ்சம் சீக்கிரமா
விழித்தப்பதான் நினைவு வந்தது.

31
00:06:02,988 --> 00:06:04,406
நான் பார்த்தேன்,

32
00:06:07,659 --> 00:06:09,078
அங்கே...

33
00:06:11,455 --> 00:06:13,624
லாரென், லூசியை சுமந்துகொண்டு,

34
00:06:16,794 --> 00:06:21,632
அவளது முற்றம் ஏன் மூத்திர வாசனை
அடிக்குதுன்னு யோசிக்கிறா.

35
00:06:24,802 --> 00:06:26,470
நீ ஒண்ணுக்குப் போனதால்.

36
00:06:27,805 --> 00:06:29,014
நான்...

37
00:06:36,688 --> 00:06:38,065
நாம் வாழ்த்துவோம்.

38
00:06:39,733 --> 00:06:44,613
ரீஸ் குடும்பத்தை. மூணு தலைமுறைகளா
நான் அறிமுகமான நன்றியுடன்.

39
00:06:45,114 --> 00:06:48,325
நம் வாழ்க்கை, அவங்க நேசத்துக்கு,
தீரத்துக்கு கடமைப் பட்டது.

40
00:06:48,492 --> 00:06:50,035
-அப்படி போடு!
-அப்படி போடு!

41
00:06:59,962 --> 00:07:01,755
நான் சொல்றேன், சகோதரா,

42
00:07:04,174 --> 00:07:07,344
அவங்க இல்லாத உலகம் நிச்சயமா
மோசமாக இருக்கும்.

43
00:07:24,611 --> 00:07:26,321
நான்... வீட்டுக்குப் போகணும்.

44
00:07:27,406 --> 00:07:29,283
-வீட்டுக்கு போறியா?
-அதுக்குள்ளா?

45
00:07:30,075 --> 00:07:33,287
ஆம். நான் வீட்டுக்குப் போகணும்.

46
00:07:35,080 --> 00:07:37,583
வா. எனது ஓட்டுனர் உன்னை அழைத்துப் போவார்.

47
00:08:42,606 --> 00:08:45,317
மார்கரிடாஸ் இருக்கறப்போ
யார் வெயிலை தேடுவாங்க?

48
00:08:59,790 --> 00:09:02,751
ஹேய், பிகாசோ, உன் ஒவியத்தை
காட்டப் போறியா, இல்லயா?

49
00:09:02,876 --> 00:09:04,044
இன்னும் முடியலயே.

50
00:09:04,294 --> 00:09:07,297
நாளை நான் கிளம்பும் வரை கூட
முடிக்க முடியாம போனா?

51
00:09:09,216 --> 00:09:13,136
நீ அந்த ஒவியத்தை காட்டாம இருந்தா,
நான் பாடப் போறேன்.

52
00:09:15,013 --> 00:09:16,431
மாட்டேன்னா நினைக்கறே?

53
00:09:17,933 --> 00:09:20,727
வேக காருக்கும், கடை கனவுகளுக்கும் ஓடினேன்

54
00:09:21,478 --> 00:09:24,398
விந்தைகள் பலவற்றை தேடினேன்

55
00:09:24,731 --> 00:09:28,610
என் பங்கு சிதிலங்களை விட்டு சாடினேன்...

56
00:09:28,819 --> 00:09:29,820
நன்றி.

57
00:09:32,072 --> 00:09:34,783
இன்று காலை எனக்கு வயது 36

58
00:09:35,617 --> 00:09:36,660
முப்பத்தி ஆறா?

59
00:09:38,453 --> 00:09:40,706
பாட்டை நாலு வருடம் முன் எழுதினேன்.

60
00:09:43,417 --> 00:09:46,628
ஆனா மாளாத தூரத்துக்கு நதி இடியை தாங்கியது

61
00:09:53,468 --> 00:09:54,678
என்னதான் அது?

62
00:10:06,565 --> 00:10:08,400
பறவைக்கு சரியாயிடுமா, அப்பா?

63
00:10:12,362 --> 00:10:17,534
ஆம். சும்மா மயக்கத்தில இருக்கு.
தன் குடும்பத்தை தேடி பறந்து போயிடும்.

64
00:10:18,869 --> 00:10:20,620
அவளிடம் பொய் சொல்ல வேணாம்.

65
00:11:19,554 --> 00:11:23,016
மன்னிக்கவும், கமாண்டர்.
நான் சிறப்பு முகவர் ஜாஷுவா ஹோல்டர்.

66
00:11:23,100 --> 00:11:25,018
ஓ, ஆமா. உங்களை நினைவிருக்கு.

67
00:11:25,102 --> 00:11:27,687
என்சிஐஎஸ்க்கு உங்க வீட்டு
கொலை வழக்கு வந்திருக்கு.

68
00:11:27,771 --> 00:11:29,314
வழக்கில் ஏதும் தெரிந்ததா?

69
00:11:29,398 --> 00:11:33,693
இல்ல, உண்மையில, நான் வந்தது,
அறிக்கையில் ஒரு பிழை இருப்பதை விவாதிக்க.

70
00:11:35,445 --> 00:11:37,781
கொலை ஆயுதம், உங்க ஸிக் பி226தானே?

71
00:11:38,281 --> 00:11:42,160
அது காராஜ் பெட்டகத்திலிருந்து
எடுக்கப் பட்டதுதானே?

72
00:11:42,244 --> 00:11:45,997
இல்ல. சொன்னேனே. என் படுக்கை அறை
கைத்துப்பாக்கி பெட்டகத்திலருந்து.

73
00:11:48,041 --> 00:11:49,709
அதை எனக்கு காட்ட தடையில்லயே?

74
00:11:53,422 --> 00:11:54,297
ஹேய்.

75
00:11:57,259 --> 00:12:01,430
பெரிய சந்தேகம், கொலைகாரர்கள்
பெட்டகத்தை திறந்தது எப்படினு நினைக்கறீங்க?

76
00:12:01,805 --> 00:12:03,306
என் ரேகையை எடுத்திருக்கணும்.

77
00:12:03,390 --> 00:12:05,392
அட, அது ரொம்ப சிக்கலானதாச்சே.

78
00:12:05,475 --> 00:12:08,520
ஓட்டை தகர மூடியை வெச்சு
பெட்டகத்தை திறக்க முடியாது.

79
00:12:08,603 --> 00:12:12,190
நானும் அதை தான் சொல்ல முயற்சி
பண்றேன். எதிராளி ரொம்ப திறமைசாலி.

80
00:12:12,274 --> 00:12:14,067
கொலை செய்து தப்பியவனை தேடணும்.

81
00:12:14,151 --> 00:12:16,278
கிளினிக்கில், 30 ஜோடி ரேகை பார்த்தோம்

82
00:12:16,361 --> 00:12:19,364
சிறைச்சாலை நிர்வாகம்,
என்சிஐசி எங்கும் தேடறோம்.

83
00:12:19,448 --> 00:12:20,449
சரி. இன்டர்போல்?

84
00:12:20,782 --> 00:12:22,742
அதையும் பார்த்துட்டுருக்கோம்.

85
00:12:25,912 --> 00:12:27,330
காராஜை காட்ட முடியுமா?

86
00:12:31,960 --> 00:12:35,172
பாருங்க, இந்த பெட்டகத்தின்
கடவுச் சொல் யாருக்கு தெரியும்?

87
00:12:35,672 --> 00:12:36,631
எனக்கு மட்டுமே.

88
00:12:36,715 --> 00:12:40,552
ஆச்சரியமில்ல, ஒரு வேளை துப்பாக்கியை
இதில் மறைச்சு வெச்சிருந்தா--

89
00:12:40,635 --> 00:12:42,554
இல்ல. அது என் படுக்கையறைல இருந்தது.

90
00:12:42,637 --> 00:12:45,891
அட, என்ன செய்யறீங்க?
தும்பை விட்டு வாலை பிடிக்கிறீங்களா?

91
00:12:45,974 --> 00:12:48,477
எல்லா கோணத்தையும்
பார்க்கறதுதான் என் வேலை--

92
00:12:48,560 --> 00:12:52,856
என்சிஐஎஸ் என் பசங்க பார் சண்டையில்
ஈடுபட்டா உடனே முடிவெடுத்திடுமே.

93
00:12:52,939 --> 00:12:55,692
ஒன்னு சொல்றேன். பூஸெர் விஷயத்தில்
கோட்டை விட்டீங்க.

94
00:12:57,569 --> 00:12:59,779
அவன் தற்கொலை செய்யவில்லை, சரியா?

95
00:12:59,863 --> 00:13:02,073
நான் போர்களத்தில இருந்தா, கதவுகளை--

96
00:13:02,157 --> 00:13:04,409
-கமாண்டர்--
-உடைச்சு மக்களை காப்பாத்தணும்.

97
00:13:05,494 --> 00:13:08,788
உங்க நிலைமையை பார்த்து
பரிதாபப்படறேன், உண்மையில்.

98
00:13:08,872 --> 00:13:12,209
நாங்க எதிரி இடத்தில் இல்ல,
பின்னணில வேலை நடந்துட்டுருக்கு.

99
00:13:14,044 --> 00:13:15,128
அது சரி.

100
00:13:27,807 --> 00:13:30,477
நான் அட்மிரலை பார்க்கணும்.
முன்பே பேசிட்டேன்.

101
00:13:30,560 --> 00:13:32,103
ரீஸ். உள்ளே வா.

102
00:13:34,064 --> 00:13:35,440
உட்கார், மகனே.

103
00:13:40,487 --> 00:13:43,698
அழகிய இறுதிச் சடங்கு.
இது கடைசியாக இருந்தால் சரி.

104
00:13:44,074 --> 00:13:45,158
ஆம், சர்.

105
00:13:46,034 --> 00:13:47,661
ஏதாவது விவாதிக்க விரும்பினியா?

106
00:13:47,744 --> 00:13:52,541
என்சிஐஎஸ், சர். அவங்களால
இந்த வழக்கை சமாளிக்க முடியுமா தெரியல.

107
00:13:53,959 --> 00:13:57,087
ஓடின்ஸ் ஸ்வோர்ட் விசாரணை
முடிந்ததுனு கேள்விப்பட்டேன்.

108
00:13:57,170 --> 00:14:00,131
ஐஇடியை வெடிக்கச் செய்தது
மிட்சல்னு ஒப்புக்கிட்டே.

109
00:14:00,215 --> 00:14:03,969
நான் பேசுவது என் குடும்பம் பத்தி.
அது குற்ற விசாரணை வழக்கு.

110
00:14:05,262 --> 00:14:09,140
உளவுத் தடுப்பு துறைக்கு போகணும்.
நடப்பது சொந்த பிரச்சினையா தோணுது.

111
00:14:09,266 --> 00:14:10,267
சொந்த பிரச்சினையா?

112
00:14:10,350 --> 00:14:14,729
நான் கஹானியை பல ஆண்டுகளா தொடரறேன்.
அவனை அடிக்க வேற ஆளில்லை.

113
00:14:14,813 --> 00:14:16,815
அவனுக்கும் குட்ஸுக்கு அது தெரியும்.

114
00:14:17,190 --> 00:14:19,943
ஜஹான் கஹானி கொரனாடோவுல வேலை செய்யல.

115
00:14:20,026 --> 00:14:21,778
அவன் வேதியியலாளன். ஒற்றர் தலைவனல்ல.

116
00:14:21,861 --> 00:14:25,156
அவன் பூஸெரை கொல்ல ஒரு கொலை
படையை அனுப்பினான். என்னையும்.

117
00:14:25,657 --> 00:14:28,451
என் குடும்பத்தை கொன்னவங்க
இன்னும் இருக்காங்க.

118
00:14:28,535 --> 00:14:30,453
மொத்த சமூகமுமே ஆபத்திலிருக்கு.

119
00:14:32,914 --> 00:14:36,835
நீ சுதந்திரமா பேசுற, அதனால
நானும் அப்படியே பேசறேன்.

120
00:14:42,173 --> 00:14:45,302
நீ எங்களை இக்கட்டான
சூழ்நிலையில சிக்க வைக்கிற.

121
00:14:45,927 --> 00:14:50,223
ரெண்டு வாரம் முன், சான்றுகளுக்கு மாறா,
சிரிய ஜனநாயக படை ஆள்

122
00:14:50,307 --> 00:14:53,476
சிரியாவில் ஐஇடியை வெடித்தான்னு
எங்களிடம் சாதித்தாய்.

123
00:14:53,560 --> 00:14:55,145
அதை மறுத்துவிட்டேன், சார்.

124
00:14:55,228 --> 00:14:58,064
நாங்க உனக்காக வாதிட்ட பிறகு.

125
00:14:58,690 --> 00:15:00,734
இப்ப என்னடான்னா,

126
00:15:00,817 --> 00:15:05,238
என்சிஐஎஸ் கூட முரண்டு பிடிச்சுகிட்டு,
குட்ஸ் படைதான் கண்ணுக்கு எதிரேயே

127
00:15:05,322 --> 00:15:08,700
-சீல்களை பிடிக்குது என்கிறாய்--
-சார், நான் சொல்றதை கவனிக்கல.

128
00:15:08,783 --> 00:15:10,994
நீயே உன்னை கவனிக்கிறதில்ல, கமாண்டர்.

129
00:15:12,120 --> 00:15:16,791
ஓடின்ஸ் ஸ்வோர்ட் விஷயத்தில
உன் வேலை போகாம காப்பாத்தினோம்.

130
00:15:17,208 --> 00:15:22,213
கேப்டன் ஹாவர்ட்டுக்கு உன்னை காப்பாத்தறதே
வேலையாப் போச்சே, அதை யோசிச்சுப் பார்.

131
00:15:23,340 --> 00:15:26,635
உண்மை என்னன்னா, உனக்கு
என்ன ஆகுதுன்னே எங்களுக்குத் தெரியல.

132
00:15:27,969 --> 00:15:32,182
உன் ஆளுங்க, உன் குடும்பத்தையே
பாதுகாக்க முடியலன்னும்போது,

133
00:15:32,265 --> 00:15:33,266
எங்களால எப்படி--

134
00:15:34,809 --> 00:15:37,854
ரீஸ்! இதோட விடு, கமாண்டர்.

135
00:15:55,121 --> 00:15:57,165
ஹோல்டர், கேடி புரானெக், வோல்ட்ஸ்ட்ரீம்.

136
00:15:57,248 --> 00:15:59,668
தொடர்பு அலுவலகத்தில
இங்க சந்திக்கலாம்னாங்க.

137
00:15:59,834 --> 00:16:02,587
-அப்படி சொல்லல.
-ப்ரெண்டா ஃப்ரீட்மனோட பேசினேனே.

138
00:16:02,879 --> 00:16:04,297
ப்ரெண்டா குற்றத்தலத்தில,

139
00:16:04,381 --> 00:16:07,133
என்சிஐஎஸ் நிருபர்களை
அனுமதிக்காதுனு சொல்வாங்க.

140
00:16:07,217 --> 00:16:09,969
கொலைகளுக்கு முன்நாள்
கமாண்டர் ரீஸ் என் மூஞ்சில

141
00:16:10,053 --> 00:16:11,554
துப்பாக்கியை நீட்டினார்.

142
00:16:12,305 --> 00:16:14,182
சாட்சி வேணும்னா இதையே நீங்க

143
00:16:14,265 --> 00:16:17,977
சொல்லிக்கலாம், என்ன நடந்ததுன்னு
சொன்னீங்கன்னா. இது நமக்குள்ளே.

144
00:16:20,939 --> 00:16:25,068
அவன் மனைவியும் மகளும் இறந்த நேரம்
ரீஸ் இங்க வந்த 30 நிமிடத்துக்குள்னு

145
00:16:25,151 --> 00:16:26,820
கோரோனர் கணிக்கிறார்.

146
00:16:26,903 --> 00:16:29,072
முப்பது நிமிடம், அவன் வந்த முன்பா பின்பா?

147
00:16:29,155 --> 00:16:32,367
அது தெளிவா தெரியல,
ஆனா, நடக்கக் கூடிய விஷயம்தான்.

148
00:16:32,450 --> 00:16:36,830
அதாவது, யாரோ, அவன் போன பின்
கொன்னிருக்கணும், இல்ல ரீஸே கொலை செய்துட்டு

149
00:16:36,913 --> 00:16:38,540
இங்க வந்திருக்கணும்.

150
00:16:39,374 --> 00:16:41,376
ரீஸுடன் பேசினப்போ, நிலையில் இல்லை.

151
00:16:41,459 --> 00:16:43,086
அதனாலதான் மூஞ்சில துப்பாக்கியா?

152
00:16:43,878 --> 00:16:47,132
ஆம், ஆனா தன் மனைவி,
மகளை கொல்லும் ஆளா தெரியல.

153
00:16:55,557 --> 00:16:56,433
அட கடவுளே.

154
00:16:56,891 --> 00:16:58,268
ஆம், நல்லா இல்லதான்.

155
00:16:59,602 --> 00:17:03,606
அது சரி. ஆக, யாரோ வர்றாங்க,
டாக்டர்களை சுடறாங்க.

156
00:17:03,690 --> 00:17:05,191
டுமீல். டுமீல்.

157
00:17:07,068 --> 00:17:08,403
இங்க என்ன நடக்குது?

158
00:17:09,821 --> 00:17:13,491
இங்க தான் இரண்டு முகமூடி
கொலைகாரங்களோட ரீஸ் சண்டை போட்டதா

159
00:17:13,575 --> 00:17:15,118
சொல்லிக் கொள்ளும் இடம்.

160
00:17:15,368 --> 00:17:16,327
"சொல்லிக் கொள்வதா?"

161
00:17:16,411 --> 00:17:17,829
அதான், பிணமே இல்லையே.

162
00:17:17,912 --> 00:17:21,458
ரீஸ் சொல்றது, அவன் இங்கே
ஒரு கொலைகாரனை மூணு முறை சுட்டு,

163
00:17:21,541 --> 00:17:25,253
ரத்த்தில மிதக்க விட்டு போனானாம்.

164
00:17:25,336 --> 00:17:27,130
யாராவது சாட்சியை கலைச்சாங்களா?

165
00:17:27,213 --> 00:17:30,508
நான் முதல்ல வந்துட்டேன்.
தாக்கியவன் அடையாளமே இல்ல,

166
00:17:30,592 --> 00:17:32,761
தாக்கியவங்க, உயிரோடோ இறந்தோ யாருமில்ல.

167
00:17:32,844 --> 00:17:36,222
இருக்கட்டும், கிளினிக்கில்
கண்காணிப்பு கேமரா இல்லையா?

168
00:17:36,306 --> 00:17:38,308
இல்ல. வாடிக்கையாளர் ரகசியத்துக்காக.

169
00:17:38,892 --> 00:17:40,185
தடயவியல் பத்தி என்ன?

170
00:17:40,268 --> 00:17:43,563
ஏதுமில்ல. குண்டு ரீஸோட
சொந்த துப்பாக்கியிலருந்து என்பதை தவிர.

171
00:17:44,105 --> 00:17:46,316
அப்படீன்னா, எப்படி வெளியில விட்டீங்க?

172
00:17:46,399 --> 00:17:48,526
ஏன்னா, இதில எதுவுமே பொருந்தி வரல.

173
00:17:48,985 --> 00:17:51,488
அவனுக்கு கத்தி காயம் இருக்கு.
கத்தியே இல்ல.

174
00:17:51,571 --> 00:17:55,533
அதோட, வீட்டின் கண்காணிப்பு காமிராவில்
ரீஸ் சகஜமா வெளியே போய், கலக்கமா

175
00:17:55,617 --> 00:17:57,535
திரும்பி வர்றதையும் காட்டுது.

176
00:17:57,619 --> 00:18:02,165
ஜேம்ஸ் ரீஸ் இந்த அறைல யாரோடோ சண்டை
போட்டிருக்கணும், இல்ல யாரோடுமே போராடல.

177
00:18:02,957 --> 00:18:05,502
ஒண்ணை முடிவு செய்யறேன், அப்புறம் அடுத்தது.

178
00:18:06,336 --> 00:18:10,131
ஆனா எனக்குத் தெரிவது, ஜேம்ஸ் ரீஸ்
தான் சொல்றத நம்பறான்.

179
00:18:11,925 --> 00:18:14,219
அதனாலதான் அவன் மன நிலையை சோதிச்சுக்கறான்.

180
00:19:18,908 --> 00:19:21,077
தெளிவா சொல்லிட்டேனே. வேற ஏதும் இல்ல.

181
00:19:21,160 --> 00:19:25,206
எங்ராம் கிளினிக்ல, தாக்கியவன்
அடையாளமே இல்ல. பிணமும் இல்ல.

182
00:19:25,290 --> 00:19:26,749
அதை எப்படி விளக்குவீங்க?

183
00:19:31,671 --> 00:19:34,007
காராஜ் பக்கத்து கதவுகிட்ட வாங்க.

184
00:19:36,050 --> 00:19:37,427
இஎம்எஸ்ஸிடம் பேசியாச்சா?

185
00:19:37,510 --> 00:19:41,180
சில சமயம் விசாரணைக்கு முன்
உடலை அவங்க அகற்ற ஆணைகள் இருக்கு.

186
00:19:41,264 --> 00:19:43,892
இல்ல, அவசர மருத்துவம்,
எம்இஎஸ், சிஎஸ்ஐயை கேட்டாச்சு.

187
00:19:43,975 --> 00:19:46,811
-அட, நான் பைத்தியம் இல்ல.
-நான் அப்படி சொல்லலயே.

188
00:19:47,353 --> 00:19:49,522
அதை நிரூபிக்க உங்களுக்கு யாராவது தேவை.

189
00:19:50,231 --> 00:19:52,859
எம்ஆர்ஐ ஸ்கேன் முடிந்ததும்
தாக்கப் பட்டீங்கதானே?

190
00:19:52,942 --> 00:19:54,611
-ஆம்.
-அது சரி, ஆக,

191
00:19:54,694 --> 00:19:57,780
உங்களுக்கு முடிவுகளை பார்க்க
வாய்ப்பு கிடைக்கவில்லை.

192
00:19:57,864 --> 00:19:59,407
நிறைய வேலை இருந்துச்சே.

193
00:19:59,490 --> 00:20:00,992
இது ஒரு அறிக்கை.

194
00:20:01,743 --> 00:20:05,747
ஒப்பமிட்டா, ஆவணங்களை பார்த்து,
ஸ்கேன்ல ஏதுமில்லன்றது வழக்குக்கு உதவும்.

195
00:20:05,830 --> 00:20:09,709
என் ஸ்கேன்ல ஒண்ணுமில்லன்றத
நிரூபிச்சா எப்படி நமக்கு உதவும்?

196
00:20:09,792 --> 00:20:11,961
யாருமே என்னை நம்ப விரும்பல. வேணாம்.

197
00:20:12,045 --> 00:20:14,631
உங்க வழக்கின் முகவர்,
உங்கள நம்ப விரும்பறார்.

198
00:20:15,298 --> 00:20:17,091
-ஜாஷ் ஹோல்டரை பார்த்தியா?
-ஆம்.

199
00:20:17,842 --> 00:20:21,930
அவன் என்சிஐஎஸ் முகவர். சீல் ஆளை பிடிச்சு
பிரபலமாவதே அவன் ஒரே நோக்கம்.

200
00:20:22,013 --> 00:20:24,849
அப்ப, அவர்தான் முதல்ல வந்தவர்,
ஆனா நீங்க மாட்டவில்லையே?

201
00:20:33,024 --> 00:20:36,027
-உன் ஆய்வுகளை வெச்சிருக்கியா?
-என்ன ஆய்வு?

202
00:20:39,614 --> 00:20:40,823
ஆம். இருக்கு.

203
00:20:42,367 --> 00:20:43,576
நான் அதை பார்க்கணும்.

204
00:20:45,954 --> 00:20:48,498
நான் சொந்த ரகசிய மருத்துவ
அறிக்கையை பெறலாம்.

205
00:20:49,207 --> 00:20:51,668
உங்களிடம் போலீஸ் அறிக்கை
இல்லாதது தெரியும்.

206
00:20:52,794 --> 00:20:54,295
காட்டு, கையெழுத்து போடறேன்.

207
00:21:07,517 --> 00:21:09,560
ஹோல்டர் முதல்ல கிளினிக் வந்தான்னா சொன்ன?

208
00:21:10,269 --> 00:21:12,438
புரிஞ்சுக்க முயற்சி செய்றதா சொன்னார்.

209
00:21:23,533 --> 00:21:26,035
நன்றி. தொடர்பிலிருப்பேன், கமாண்டர்.

210
00:21:26,119 --> 00:21:28,746
இரு. என்ன மாதிரி ஃபோன் நீ வெச்சிருக்க?

211
00:21:30,665 --> 00:21:32,750
-இது போலதான்.
-இரு, இரு, எது போல?

212
00:21:35,253 --> 00:21:36,587
இங்கயே இரு.

213
00:22:13,791 --> 00:22:15,126
உன் ஃபோனை காட்டு.

214
00:22:16,461 --> 00:22:17,545
அதை பார்க்கிறேன்.

215
00:22:21,382 --> 00:22:25,386
உன் ஃபோனை ஏர்ப்ளேன் மோட்ல வை.
ஸ்விட்ச் ஆஃப் செய்யாதே. ஏர்ப்ளேன் மோட்.

216
00:22:25,470 --> 00:22:26,929
இது ஒரு ஃபாரடே பை.

217
00:22:27,013 --> 00:22:30,058
எஸ்சிஐஎஃப்ல இருந்தா வேலை அவங்க
செய்ற விதம் தெரியும்.

218
00:22:31,184 --> 00:22:33,811
ரகசியக் காப்பில்லாத ஸ்மார்ட் ஃபோன்,

219
00:22:33,895 --> 00:22:35,813
ஃபோன் பேச உதவும் ஒரு தேடல் கருவி.

220
00:22:35,897 --> 00:22:38,399
நான் வெளிநாட்டில் உளவறிந்தது அப்படிதான்.

221
00:22:38,483 --> 00:22:42,779
இந்தப் பையில் வை.
இது... இது ஒரு ப்ரீபெய்ட் ஃபோன்.

222
00:22:42,862 --> 00:22:45,698
என்னை தொடர்பு கொள்.
அழைப்பது, டெக்ஸ்ட் கூடாது.

223
00:22:45,782 --> 00:22:49,202
என்ன செய்யணும்னா,
கூகுள் கிஃப்ட் கார்டை காசு தந்து வாங்கு.

224
00:22:49,285 --> 00:22:50,828
இதை தயவு செய்து எழுதிக்கோ.

225
00:22:50,912 --> 00:22:54,248
இதை வைத்து ஒரு த்ரீமா தொடர்பை துவங்கு.

226
00:22:54,332 --> 00:22:58,044
வாட்ஸ்அப் வேணாம். பாதுகாப்பில்லை.
ரொம்ப வருடங்களாவே. சரியா?

227
00:22:58,127 --> 00:23:00,713
த்-ரீ-மா. த்ரீமா.

228
00:23:02,048 --> 00:23:03,049
பேனா கொடு.

229
00:23:05,093 --> 00:23:09,430
என் ரகசிய யூசர் நேமை தருகிறேன்.
த்ரீமாவை இதை வைத்து பயன்படுத்து.

230
00:23:14,060 --> 00:23:15,728
மனப்பாடம் செய், கிழிச்சு போட்டுடு.

231
00:23:18,397 --> 00:23:20,858
சரி. ரொம்ப அதிகமான முன்ஜாக்கிரதை.

232
00:23:22,902 --> 00:23:25,446
கஹானி பத்தி சரியா தெரிஞ்சா,
இதெல்லாம் தூசு.

233
00:23:28,783 --> 00:23:31,744
சரி, நன்றி கமாண்டர்.

234
00:23:35,498 --> 00:23:36,999
என்னை ரீஸ்னு கூப்பிடலாம்.

235
00:23:37,834 --> 00:23:40,628
என் கதையை சொல்றதா இருந்தா
என் பேர்லயே சொல்லலாம்.

236
00:23:41,212 --> 00:23:44,465
சரி, ரீஸ். உறுதியா இருங்க.

237
00:24:32,930 --> 00:24:34,182
யாரடா நீ?

238
00:24:41,772 --> 00:24:43,858
ஐயோ.

239
00:27:53,547 --> 00:27:55,174
தூக்கத்தில எழுப்பிட்டேனா?

240
00:27:55,257 --> 00:27:59,178
க்ரீன்விச் நேரத்துக்கு மூணு மணி முன்.
யேமன் நேரம் இது. என்ன விஷயம்?

241
00:28:04,517 --> 00:28:05,518
நம்ம ஆளை பிடித்தோம்.

242
00:28:07,686 --> 00:28:08,729
நம்ம ஆளா?

243
00:28:19,281 --> 00:28:21,826
ரீஸ், இது... இலக்கு பற்றிய தொகுப்பறிக்கை.

244
00:28:21,909 --> 00:28:24,703
குட்ஸ்க்கு கொரனாடோல
சீல்ஸ் தான் இலக்குனு சொன்ன,

245
00:28:24,787 --> 00:28:27,957
விசாரணைகள் சரியா போக
அவங்களுக்கு ஒரு ஆசாமி தேவை.

246
00:28:28,040 --> 00:28:32,378
முகவர் ஜாஷ் ஹோல்டர்தான், என்னையும்
பூஸரையும் இலக்கா கொண்ட என்சிஐஎஸ் ஆசாமி.

247
00:28:32,461 --> 00:28:37,299
யோசித்துப்பார். சிகாகோ போலீஸ் பூஸெர்
விஷயத்தை கவனித்தாலும், முதல்ல வந்தது அவனே.

248
00:28:37,383 --> 00:28:42,304
புரிந்சுக்கோ, இ எம் டீ வருவதற்க்கு முன்பே
அவன் எம்ஆர்ஐ க்ளினிக்கு வந்துட்டான்.

249
00:28:42,972 --> 00:28:45,141
அவன் அங்க இல்லன்னா அது நடக்க இயலாது.

250
00:28:46,142 --> 00:28:49,854
இவன்தான் சுட ஏவப்பட்டவன்.
இவன்தான் தப்பித்தான்.

251
00:28:52,731 --> 00:28:54,024
நான் ஒண்ணு கேட்கட்டுமா.

252
00:28:57,445 --> 00:28:58,654
நீ எப்படி இருக்க?

253
00:28:59,738 --> 00:29:00,781
நல்லா இருக்கேன்.

254
00:29:08,622 --> 00:29:11,709
இவை தலைவலிக்கு அருமையானவை. ஒண்ணுதான்.

255
00:29:13,169 --> 00:29:16,255
அதுக்கு மேல எடுத்தா தூக்கம் வந்துடும்.
என்னை நம்பு.

256
00:29:19,800 --> 00:29:20,926
சரி.

257
00:29:21,886 --> 00:29:25,347
முதல்ல, உன் உளவு கண்காணிப்பு
மோசமாக இருக்கு.

258
00:29:25,723 --> 00:29:29,185
உன் பெரிய வண்டியோட இவ்வளவு
நெருங்கினா, உன் ரகசியம் காலி.

259
00:29:29,268 --> 00:29:32,813
பாருப்பா. நான் துறையில் இல்ல,
ஆனா முட்டாளல்ல.

260
00:29:32,897 --> 00:29:36,442
லெக்ரான் வண்டியில் போனேன்.
என்னை அவன் பார்க்கலை.

261
00:29:44,074 --> 00:29:47,495
லைட் பியரை குடிக்கிறான். யோக்கியன் மாதிரி.

262
00:29:51,999 --> 00:29:53,250
எவ்ளோ உறுதியா சொல்றே?

263
00:29:55,044 --> 00:29:56,879
அவனை கண்ணுக்கு கண் பார்த்தேன், பென்.

264
00:30:00,299 --> 00:30:01,342
அது அவன்தான்.

265
00:30:09,725 --> 00:30:10,809
திட்டம் என்ன?

266
00:30:19,944 --> 00:30:21,403
ராய்? ராய் போஹம்?

267
00:30:21,654 --> 00:30:23,739
கார்மன்? சந்தித்ததில் மகிழ்ச்சி.

268
00:30:23,822 --> 00:30:26,742
-ரெண்டு படுக்கயறை ஆர்வம்னு சொன்னீங்க.
-சரிதான்.

269
00:30:26,825 --> 00:30:29,828
-அட்டகாசம். மாடியில் ஒரு வீடு தயார்.
-சரி.

270
00:30:31,580 --> 00:30:34,583
முதல்ல கடற்கரையை பார்க்கலாம்னு இருந்தேன்.

271
00:30:34,708 --> 00:30:37,711
-கண்டிப்பா. இப்படி வாங்க.
-அருமை.

272
00:30:41,257 --> 00:30:43,509
பெல்லோஜென்டே உண்மைல ஒரு நல்ல சமுதாயம்.

273
00:30:45,511 --> 00:30:47,638
உங்களை மாதிரி குடியேறியவங்க நிறைய.

274
00:30:47,721 --> 00:30:50,140
நீங்க சுறுசுறுப்பானவர்ன்றது தெரிஞ்சதால,

275
00:30:50,224 --> 00:30:53,686
உச்சி மாடில வெதுவெதுப்பு
நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம்,

276
00:30:53,769 --> 00:30:56,647
சான் டியேகோவிலயே, மிகச் சிறந்த
அலைத் தடுப்புண்டு.

277
00:30:56,730 --> 00:30:59,733
இவர் அலையுள் பாய்வது,
இன்டர்னெட்ல மட்டும்தான்.

278
00:31:07,616 --> 00:31:08,659
சைக்கிள் பாதை.

279
00:31:25,509 --> 00:31:27,344
என்ன வகை பாதுகாப்பு செஞ்சிருக்கீங்க?

280
00:31:27,428 --> 00:31:29,847
-கதவு எப்பவும் பூட்டியிருக்கும்.
-நிச்சயமா.

281
00:31:29,930 --> 00:31:32,850
-இது பாதுகாப்பான பகுதி.
-அலார அறிவிப்பு தேவையில்ல.

282
00:31:32,933 --> 00:31:35,352
இங்க சத்தியமா திருட்டுகள் நடந்ததே இல்லை.

283
00:31:35,436 --> 00:31:38,022
சரி. அப்ப நான் மேலே போக விரும்பறேன்.

284
00:31:38,105 --> 00:31:39,398
போகலாம்.

285
00:31:39,690 --> 00:31:41,900
எல்லா வீடுகளும் மாற்றியமைக்கப் பட்டவை.

286
00:31:41,984 --> 00:31:44,653
மேம்பாடான வசதிகள்,
சூழல் சார்ந்த ஜன்னல்கள்.

287
00:31:44,945 --> 00:31:47,781
போன ஆண்டு, முழு
கட்டடத்தை, சோலாரோட மறுவடிவமைத்தோம்.

288
00:31:47,865 --> 00:31:50,159
-அப்படியா?
-ஆம்.

289
00:31:50,826 --> 00:31:52,077
பசுமைப் புரட்சி.

290
00:31:53,037 --> 00:31:55,539
புழக்கடை பக்கம் பார்த்த சில வீடு இருக்கு,

291
00:31:55,623 --> 00:31:58,292
ஆனா, கடலை பார்த்தவை பொக்கிஷம்
என்று தெரியும்.

292
00:32:05,507 --> 00:32:07,176
ஹேய், நான் லிஸ்.

293
00:32:07,718 --> 00:32:11,597
என் முதலாளி வெளிநாடு போனார்,
நான் என்ன செய்வதுன்னு திகைத்து,

294
00:32:11,680 --> 00:32:15,768
நேரம் வீணாகுது. சான் டியேகோ வந்து திடீர்னு
உன்னை பிடிக்கணும்னு தோணுது.

295
00:32:15,851 --> 00:32:17,394
நட்புக்கான சூழல் பெருகுது.

296
00:32:18,062 --> 00:32:19,021
நான்...

297
00:32:20,064 --> 00:32:25,069
என் பெண்களுக்காக ஏங்கறேன், ரீஸ்.
சீக்கிரமா பேசு.

298
00:32:36,163 --> 00:32:37,247
ஒரே மாதிரி பந்தயம்.

299
00:32:40,209 --> 00:32:41,210
எது வேணும்.

300
00:32:44,296 --> 00:32:47,508
நீ அதை செய்ய வேண்டியதில்ல.
உனக்குதான் நல்ல அதிர்ஷ்டம்.

301
00:32:47,591 --> 00:32:50,260
ஆக, எப்படியிருந்தாலும்
நீதான் ஜெயிக்கப் போறே.

302
00:32:51,387 --> 00:32:53,097
உன் கார்டை வெச்சுக்கலாம்.

303
00:32:53,555 --> 00:32:55,265
யோசனைக்கு நன்றி.

304
00:32:59,728 --> 00:33:02,022
ஆடுபவங்க பாருங்க.

305
00:33:03,816 --> 00:33:04,817
பாருங்க.

306
00:33:06,985 --> 00:33:08,237
இருபது, பந்தயம்.

307
00:33:10,447 --> 00:33:11,699
பந்தயம், இருபது.

308
00:33:15,869 --> 00:33:17,454
என்ன கிண்டல் பண்றியா.

309
00:33:18,288 --> 00:33:19,164
ஜோர்டென்.

310
00:33:19,248 --> 00:33:20,708
ஃபோனை ஒரு வாரமா எடுக்கல.

311
00:33:20,791 --> 00:33:24,545
நீ பிரச்சினைனு நினைக்கிறப்பல்லாம்,
பிரச்சினையா இருக்கா, இல்ல.

312
00:33:24,628 --> 00:33:27,923
கல்லூரி பசங்களை ஏமாத்த போக்கர்
மேஜைல உட்கார்ந்திருக்கே.

313
00:33:28,006 --> 00:33:28,924
வாயை மூடு.

314
00:33:30,551 --> 00:33:31,927
சரி. பந்தயம் பாருங்க.

315
00:33:36,640 --> 00:33:38,434
-எல்லாம் உள்ளே.
-எல்லாம் உள்ளே.

316
00:33:40,310 --> 00:33:43,313
தப்பிக்கப் பார். பெரிய சுறாவோட மோதுகிறாய்.

317
00:33:43,397 --> 00:33:44,815
-சார்.
-சரி, மேடம்.

318
00:33:50,070 --> 00:33:51,321
-நான் ஆடல.
-நல்ல வேலை.

319
00:33:51,405 --> 00:33:52,865
என்னப்பா இது.

320
00:33:56,243 --> 00:33:58,328
வேலைல இருக்கேன் ஜோர்டென். என்ன சொல்றது?

321
00:33:58,412 --> 00:34:00,748
கடந்த ஆறு மாதங்கள்
வீணாகலன்னு சொல்லு.

322
00:34:01,540 --> 00:34:05,627
உனக்கு சிரியா, துருக்கியில,
ஒரு நாளைக்கு 1000 டாலர் செலவழித்தது,

323
00:34:05,711 --> 00:34:08,464
உன், என், இறுதியா
வோல்ட்ஸ்ட்ரீம் நன்மைக்காக.

324
00:34:08,547 --> 00:34:11,258
அலெப்போல நீ எனக்கு
அமர்த்திய ஹோட்டல், குப்பை.

325
00:34:11,341 --> 00:34:13,218
-அவங்க எனக்கு காசு தரணும்.
-சரி.

326
00:34:13,302 --> 00:34:17,264
அவங்க தரவில்லையே? நான் தந்தேன்.
உன் பாதுகாப்புக்கும்.

327
00:34:17,347 --> 00:34:19,933
எப்படியோ ஆண்டின் பெரிய செய்தியை தந்தாய்.

328
00:34:20,017 --> 00:34:22,603
-ஆம். என் வேலைல கெட்டி.
-திடீர்னு காணாம போயிடற.

329
00:34:22,686 --> 00:34:26,190
இதற்கிடையில நான் ஜேம்ஸ் ரீஸ் பத்தி
ஏபிசி7ல தகவல் பெறணுமா?

330
00:34:27,775 --> 00:34:31,153
அட, ஏபிசி7 கிட்ட அவனது ஆதார பூர்வ
மருத்துவ அறிக்கை இல்ல.

331
00:34:34,990 --> 00:34:36,200
அப்ப சொல்லு.

332
00:34:37,659 --> 00:34:40,537
ரீஸின் மன நிலை பத்தி
சில கேள்விகள் இருக்கு.

333
00:34:40,913 --> 00:34:43,874
போலீஸ், குற்றத் தலத்தில்
அணுகல் தர காத்திருக்கேன்.

334
00:34:46,543 --> 00:34:48,837
அவன் வேலையா? குடும்பத்தை கொன்றது?

335
00:34:49,546 --> 00:34:51,173
அதைதான் பார்த்துட்டுருக்கேன்.

336
00:34:53,133 --> 00:34:56,053
என் அல்சருக்கு உன் பெயர்தான், தெரியுமா?
அல்சர் கேட்டி.

337
00:34:56,136 --> 00:34:58,347
-ரொம்பத்தான் கவலைப் படறே.
-சரிதான்.

338
00:35:00,182 --> 00:35:03,936
கவனி, நீ தாக்கம் தரும் வேலையில் சுட்டி.
காத்திருந்தது போதும்.

339
00:35:04,311 --> 00:35:06,897
வோல்ட்ஸ்ட்ரீமின் ஆதாயமே உடனடியானது என்பது.

340
00:35:06,980 --> 00:35:10,150
24 மணி நேரம் இருக்கு,
பிறகு செய்தி தேவை, சரியா?

341
00:35:11,944 --> 00:35:13,195
இவ பணம் கொடுப்பா.

342
00:35:30,337 --> 00:35:34,842
ஆள் போறான். அவன் திரும்பினால் சொல்வேன்.
நல்ல வேட்டையாடு, நண்பா.

343
00:37:43,178 --> 00:37:44,221
இப்ப செய்தி?

344
00:37:45,389 --> 00:37:48,809
அவன் இப்போ பிரதான சாலையில்.
நீ தொடரலாம்.

345
00:38:29,224 --> 00:38:30,267
பியர்.

346
00:38:32,769 --> 00:38:33,770
ஏதாவது?

347
00:38:34,104 --> 00:38:38,108
ஒண்ணுமில்ல. எப்போதும் போல
அசிங்க பாலியல் வெறி படம்தான்.

348
00:38:42,237 --> 00:38:43,280
தலைவலியா.

349
00:38:44,781 --> 00:38:47,242
இல்ல. பரவாயில்லை.
ராத்திரி சரியா தூங்கல.

350
00:38:47,325 --> 00:38:51,705
அந்த வீட்ல இருந்திருந்தா எனக்கும் வரும்.
நீ இங்க வந்திருக்கணும்.

351
00:38:51,788 --> 00:38:55,751
அதிர்ச்சியா இருக்கலாம், நீ தூங்கிய
பின் போர்வைகளை துவைக்கவே இல்ல.

352
00:38:55,834 --> 00:38:58,253
நீ எப்பவுமே தோய்க்கறதில்லயே, நண்பா.

353
00:38:58,336 --> 00:38:59,463
அதேதான்.

354
00:39:03,050 --> 00:39:06,928
உன் ஃபோன் அடிக்குது. ஹேய்! ஃபோன் அலறுது.

355
00:39:08,680 --> 00:39:10,515
-அடச்சே.
-வாஷிங்டன்.

356
00:39:10,849 --> 00:39:13,894
-வாஷிங்டன்லருந்து யார் கூப்பிடுவது?
-நல்ல கேள்வி.

357
00:39:28,033 --> 00:39:29,076
ரிக், நலமா?

358
00:39:29,743 --> 00:39:30,952
ஹேய், சகோதரா.

359
00:39:32,746 --> 00:39:35,499
பார், உனக்காக ஒரு நட்பு
பின்னால் காத்திருக்கு.

360
00:39:42,506 --> 00:39:43,715
மேடம் செக்ரடரி.

361
00:39:45,425 --> 00:39:46,593
கமாண்டர்.

362
00:39:47,677 --> 00:39:49,554
வார்காம்ல நடந்தது தெரிய வந்தது.

363
00:39:49,638 --> 00:39:52,390
அட்மிரலை தாக்கறது
உன் வழக்குக்கு சாதகமாகாது.

364
00:39:52,474 --> 00:39:55,185
சீல்களை ஒழிப்பது
உங்க தகுதிக்கு குறைவுதானே?

365
00:39:55,268 --> 00:39:58,355
இல்ல. நான் உன்னை ஒழிக்கல.
ஜெர்ரி திமிர் பிடித்தவன்.

366
00:40:01,233 --> 00:40:02,943
உன் அப்பா சீல் வீரர்தானே?

367
00:40:04,111 --> 00:40:05,112
ஆம், மேடம்.

368
00:40:06,905 --> 00:40:10,951
ராணுவ குழந்தைப் பருவம் தனிப்
பெருமைதான், ஆனா ஒரு தனி சுமையும் கூட.

369
00:40:13,036 --> 00:40:14,663
ஐரிஷ் மது குடிப்பாயா கமாண்டர்?

370
00:40:15,872 --> 00:40:17,749
எதையும் குறிப்பாக கேட்பதில்லை.

371
00:40:26,800 --> 00:40:30,971
ரிக். எங்களுக்கு விஸ்கி கலந்த
பானம் கொண்டு வர முடியுமா?

372
00:40:31,263 --> 00:40:32,347
சரி, மேடம்.

373
00:40:35,600 --> 00:40:39,229
சீல்ஸ் ராணுவ ஹெலிகாப்டர்களை
பயன் படுத்தி, தாக்கி தப்பும்

374
00:40:39,312 --> 00:40:40,856
முறையை கையாண்டது தெரியுமா?

375
00:40:42,023 --> 00:40:46,903
இளைய சீல் உன் தந்தையும் என் தந்தையும்
சந்தித்திருக்கக் கூடிய தற்செயலான

376
00:40:46,987 --> 00:40:48,822
நிகழ்வை கற்பனை செய்து பார்.

377
00:40:49,239 --> 00:40:51,032
என் தந்தைக்கு பறக்க பிடிக்காது.

378
00:40:52,409 --> 00:40:54,494
அது என் அப்பா கூட பறந்ததால இருக்கலாம்.

379
00:40:56,413 --> 00:40:59,416
மேடம், இது எங்க செலவு.

380
00:41:03,712 --> 00:41:05,672
என் கருத்தை வார்காம்ல பேசினாங்களா?

381
00:41:07,174 --> 00:41:11,303
கஹானி. அவன் சிரியாவில்
பல குப்பைகளை தந்தது மட்டுமல்ல.

382
00:41:11,386 --> 00:41:16,349
சான் டியெகோ என்சிஐஎஸ்ல அவன் ஆசாமி
ஒருத்தனாவது உண்டென நம்ப காரணமிருக்கு.

383
00:41:17,350 --> 00:41:21,897
அதுக்கு மேல எனக்கு தெரியாது. ஆனா,
இதில் நாம் இப்ப நடவடிக்கை எடுக்கணும்.

384
00:41:21,980 --> 00:41:24,733
என் பிளாடூனை மட்டுமே
அவன் அணுகியாதாக இருக்கட்டும்.

385
00:41:24,816 --> 00:41:27,027
கஹானி உனக்கு ஆபத்து இல்ல, கமாண்டர்.

386
00:41:27,110 --> 00:41:28,737
மேடம், நமக்கு அது தெரியாது.

387
00:41:30,447 --> 00:41:31,823
ஹேய், செய்தியை போடு.

388
00:41:33,491 --> 00:41:34,659
உண்மைல தெரியும்.

389
00:41:34,743 --> 00:41:35,577
தொடர்வோம்.

390
00:41:35,660 --> 00:41:38,163
இரானிய ஆயுத நிபுணர் டாக்டர் ஜஹான் கஹானி

391
00:41:38,246 --> 00:41:42,292
ஒரு உயர்நிலை யுஎஸ் ராணுவ நடவடிக்கையில்
வட சிரியாவில் கொல்லப் பட்டார்.

392
00:41:42,375 --> 00:41:46,087
கஹானியை பிடிப்பதற்கான ஒரு
தோல்வியுற்ற முயற்சியில் 12 சீல்கள்

393
00:41:46,171 --> 00:41:48,506
உயிரிழந்த ஒரு வாரத்துள் இந்த நிகழ்வு.

394
00:41:48,590 --> 00:41:50,508
பென்டகனிலிருந்து இந்த அறிக்கை:

395
00:41:50,592 --> 00:41:52,219
"உலகம், குறிப்பா சிரியர்கள்,

396
00:41:52,302 --> 00:41:56,556
இனி நிம்மதியா தூங்கலாம், மத்திய கிழக்கு
உயர் வேதியியல் நிபுணர்களால்

397
00:41:56,640 --> 00:41:59,100
சுதந்தர விரும்பிகளுக்கு இனி ஆபத்தில்லை."

398
00:42:07,525 --> 00:42:10,487
யுத்தம் வீடு வரை துரத்தினால் எப்படி
இருக்கும்னு தெரியும்.

399
00:42:11,029 --> 00:42:14,574
ஆனா, இந்த சாதனை முடிந்தது குறித்து
நீ நிம்மதியாகலாம்

400
00:42:15,116 --> 00:42:16,493
என நம்பறேன்.

401
00:42:18,203 --> 00:42:19,537
நல்லிரவு, கமாண்டர்.

402
00:42:30,966 --> 00:42:34,511
முந்தைய ஓடின்ஸ் ஸ்வோர்ட்
நடவடிக்கையின் தோல்வி குறித்து,

403
00:42:34,594 --> 00:42:36,388
விசாரணை இன்னும் தொடர்கிறது.

404
00:42:48,692 --> 00:42:49,693
டேய்.

405
00:42:50,235 --> 00:42:51,736
என்ன? ஏதும் கிடைத்ததா?

406
00:42:51,820 --> 00:42:55,907
நம்ம ஆள், உன் பயோமெட்ரிக்ஸ அதிரடி தரவு
தொகுப்பிலிருந்து எடுத்தான்.

407
00:42:56,783 --> 00:42:58,535
புரியுது. நான் அவனது இலக்கு.

408
00:42:58,618 --> 00:43:02,706
ஆனா, ஹோல்டர் ரேகைகளை எடுத்தது
கொலைக்கு இரு நாட்கள் முன்.

409
00:43:04,374 --> 00:43:06,001
இவன் நம்ம ஆளாக இருக்கலாம்.

410
00:43:10,005 --> 00:43:11,381
கண்டுபிடிக்க ஒரு வழி.

411
00:43:15,552 --> 00:43:17,178
இடது முழங்கைல கத்தி காயம்.

412
00:43:17,554 --> 00:43:20,098
ஆம். உனக்கு ஒண்ணு கொண்டு வந்தேன்.

413
00:43:33,278 --> 00:43:36,406
உன் மனைவி, மகள் மற்றும் பூஸருக்காக.

414
00:43:53,048 --> 00:43:55,425
-உங்களைதான்.
-நீங்க போலீஸா?

415
00:43:55,508 --> 00:43:59,304
இல்ல. நிருபர். ஜேம்ஸ் ரீஸ்
மூளை ஸ்கேன் கேட்டு அழைத்தேனே.

416
00:43:59,387 --> 00:44:00,430
பதில் சொன்னேன்.

417
00:44:00,513 --> 00:44:03,683
தகவலை சொல்லும் முன்
நாங்க புதிய டாக்டரை நியமிக்கணும்.

418
00:44:03,767 --> 00:44:05,769
எனக்கு நேற்றே தேவைப்பட்டது.

419
00:44:14,611 --> 00:44:16,279
-இதோ வந்துடறேன்.
-நன்றி.

420
00:44:34,089 --> 00:44:36,633
ஹேய், ஜோர்டென். ஆமாம், கிடைச்சுது!

421
00:44:37,133 --> 00:44:40,887
இல்ல, கவனி. லாஸ் ஏஞ்சலீஸ்ல
ஒரு நரம்பியல் நிபுணரை பார்க்கணும்.

422
00:44:41,721 --> 00:44:43,848
என்னை நம்பு. கதை சுவாரசியமா போகுது.

423
00:47:09,077 --> 00:47:11,371
இதுதான் பூஸெரின் அபிமான துப்பாக்கி.

424
00:47:12,830 --> 00:47:17,460
கிம்பர் 1911, 45. டெக்ஸாஸ்ல
இதை சுட்டு பழகி பெரிய ஆளானான்.

425
00:47:17,919 --> 00:47:20,964
தற்கொலை செய்துக்க,
1911தான் பயன்படுத்தியிருப்பான்.

426
00:47:22,382 --> 00:47:24,842
நீங்க தப்பான துப்பாக்கி வைத்து கொன்னீங்க.

427
00:47:26,886 --> 00:47:28,721
இதை நிதானமா, நல்லா கேள்.

428
00:47:29,514 --> 00:47:32,350
அமைதியா இருந்தா, உயிரோட இருப்ப, புரியுதா?

429
00:47:37,397 --> 00:47:41,985
சரி. அய்யோ. நான்... நான்
உன் நண்பனைக் கொலை செய்யல.

430
00:47:42,068 --> 00:47:43,236
-நீ கொன்ன.
-நானல்ல.

431
00:47:43,319 --> 00:47:46,406
என் மனைவியைக் கொன்ன.
என் மகளைக் கொன்ன.

432
00:47:47,156 --> 00:47:50,201
-என்னை கொல்ல பார்த்தே.
-கமாண்டர். யாரையும் கொல்லல.

433
00:47:50,285 --> 00:47:51,202
கைகளை காட்டு.

434
00:47:51,286 --> 00:47:54,330
-நான் யாரையும் கொல்லல.
-உன் கைகளைக் காட்டு.

435
00:48:01,629 --> 00:48:03,089
உன் இடது கையை தூக்கு.

436
00:48:09,429 --> 00:48:10,930
இந்த கையை தூக்கு.

437
00:48:18,104 --> 00:48:19,105
சரி.

438
00:48:21,399 --> 00:48:22,442
சரி.

439
00:48:24,902 --> 00:48:28,197
கொல்லாமலிருக்கலாம்,
ஆனா நீ அதை மூடி மறைச்சே.

440
00:48:28,865 --> 00:48:29,866
எவனுக்கு வேலை செய்ற?

441
00:48:30,700 --> 00:48:32,243
உன் கைகளை இதில் நுழை.

442
00:48:36,581 --> 00:48:39,125
நான் உன்னை ஒரு கேள்வி கேட்டேன்.

443
00:48:42,670 --> 00:48:44,881
-அழுகாதே.
-எனக்கு தெரியாது.

444
00:48:44,964 --> 00:48:47,925
இரானா? சிரியாவா?

445
00:48:50,011 --> 00:48:53,598
என்னை மறுபடி கேட்க வைக்காதே.
யாருக்கு வேலை செய்யறே?

446
00:48:54,599 --> 00:48:56,726
ஆகட்டும். சலிப்பாகுதுப்பா.

447
00:49:10,448 --> 00:49:14,118
நம்மை இவன் முட்டாளாக்குவான்.
நமக்கு தெரிந்தது, தெரிந்த விஷயம் தானே.

448
00:49:14,702 --> 00:49:17,330
இந்த தண்டத்திடம் பொக்கிஷம் இருப்பது உறுதி.

449
00:49:21,376 --> 00:49:23,419
தயவு செய்து, என்னை தாக்காதீங்க.

450
00:49:25,421 --> 00:49:27,340
தயவு செய்து, என்னை தாக்காதீங்க.

451
00:49:30,843 --> 00:49:33,012
அடச்சே. இப்பவே இல்ல. போச்சுடா.

452
00:49:33,596 --> 00:49:34,972
அவனுக்கு மறதி நோய்.

453
00:49:35,973 --> 00:49:37,350
உங்களை கெஞ்சறேன்.

454
00:49:38,393 --> 00:49:41,312
-கமாண்டர்...
-ஏன் உண்மையை சொல்ல மாட்டேங்கிற?

455
00:49:41,396 --> 00:49:42,605
நீ பேசுவது யாரிடம்?

456
00:49:43,898 --> 00:49:47,402
கவனி, சரியா? சும்மா கவனி.
நான் உன்னை குற்றம் சாட்ட மாட்டேன்.

457
00:49:47,735 --> 00:49:50,279
சும்மா... அப்படியே போயிடும்.

458
00:49:51,197 --> 00:49:52,907
-அப்படியே போயிடுமா?
-ஆம்.

459
00:49:52,990 --> 00:49:55,493
சீல் பயோமெட்ரிக்ஸ்லிருந்து
என் ரேகைகளை எடுத்தாய்.

460
00:49:55,576 --> 00:49:58,162
அது என் வேலை.
ஓடின்ஸ் ஸ்வோர்டுக்கு உதவினேன்.

461
00:50:02,375 --> 00:50:06,963
-நீ அதை சொதப்பின.
-கமாண்டர், நான் ஒரு ஃபெடரல் முகவர்.

462
00:50:07,046 --> 00:50:10,508
ஒரு ஃபெடரல் முகவர்!
நான் புகார் தந்தது போலீசுக்கு.

463
00:50:10,591 --> 00:50:12,844
நீ அங்கே முதல்ல போயிருக்க வாய்ப்பே இல்ல.

464
00:50:12,927 --> 00:50:15,179
இல்ல. அங்க முன்பே நீ இருந்தா தவிர.

465
00:50:15,263 --> 00:50:18,349
ஆணைக் குழு கூப்பிட்டது. நீ
கடற்படைன்றதால் கூப்பிடது.

466
00:50:18,433 --> 00:50:19,809
நீ கடற்படைனு தெரியும்.

467
00:50:23,688 --> 00:50:24,647
பொய் சொல்லாதே.

468
00:50:25,898 --> 00:50:26,941
பொய் சொல்லல.

469
00:50:29,360 --> 00:50:31,988
பெரிய எழவாப் போச்சு.

470
00:50:32,321 --> 00:50:34,240
பூஸெர் வீட்ல நடந்தது எனக்கு தெரியும்.

471
00:50:34,323 --> 00:50:37,326
அவன் தற்கொலை செய்துக்கல,
அவனுடன் ஆல்ஃபா பிளாடூன்ல

472
00:50:37,410 --> 00:50:40,413
பதுங்கு குழியில இருந்தப்பவே
அவனை தெரியும். சரியா?

473
00:50:40,496 --> 00:50:42,790
-கமாண்டர்...
-நீதான் என்னை சிக்க வைத்தாய்.

474
00:50:43,416 --> 00:50:48,004
உனக்கு... உனக்கு உடல் நிலை சரியில்ல.

475
00:50:51,632 --> 00:50:56,387
நீ சொல்றது உண்மைன்னா,
கொலைகாரனே இல்ல, என் குடும்பத்தை

476
00:50:58,222 --> 00:50:59,849
நான்தான் கொன்னேன்னு ஆகுது.

477
00:51:01,601 --> 00:51:04,854
இல்ல. இல்ல. அடச்சே.

478
00:51:09,942 --> 00:51:12,737
என்னை எதை வேணும்னாலும்
நம்ப வைக்கலாம். அதை தவிர.

479
00:51:12,987 --> 00:51:15,490
-கமாண்டர், இல்ல, வேணாம். வேணாம்!
-அசையாதே.

480
00:51:15,573 --> 00:51:16,824
-கன்னத்தை தூக்கு.
-இல்ல!

481
00:51:16,908 --> 00:51:18,493
மோவாய்க்கட்டைய தூக்கு.

482
00:51:19,410 --> 00:51:23,664
சால் அக்னன். சால் அக்னன். சால் அக்னன்.

483
00:51:25,333 --> 00:51:28,795
என்னது? நீ என்ன சொல்றே?

484
00:51:28,878 --> 00:51:31,714
சால் அக்னன்.
அவன்தான் எனக்குப் பணம் தர்றான்.

485
00:51:32,256 --> 00:51:36,886
அதுதான் அவன் பெயர். அவன் தகவல் தருவான்.
என் வங்கி கணக்கில் பணம் வரும்.

486
00:51:38,805 --> 00:51:41,057
அவ்ளோதான் எனக்குத் தெரியும். அவ்ளோ...

487
00:54:38,359 --> 00:54:40,361
வசனங்கள் மொழிபெயர்ப்பு சத்யன்

488
00:54:40,444 --> 00:54:42,446
படைப்பு மேற்பார்வையாளர்
சுதா பாலா

