1
00:00:26,089 --> 00:00:28,049
எழுந்திரு. அவள் எங்கே?

2
00:00:29,926 --> 00:00:31,886
அவள் வண்டியில் போகிறாளா
அல்லது நடந்து போகிறாளா?

3
00:00:34,305 --> 00:00:35,682
ஸ்கோஃபீல்ட் எங்கே, முட்டாளே?

4
00:00:35,765 --> 00:00:36,891
அவள் எங்கே?

5
00:00:37,642 --> 00:00:39,102
உன்னால் அவளைக் கண்டுபிடிக்க முடியாது.
என்னை நம்பு.

6
00:00:39,185 --> 00:00:40,812
உன்னை நம்பணுமா?
ஏற்கனவே இதை நாம் முயற்சித்தோம்.

7
00:00:40,895 --> 00:00:43,940
- உன்னிடம் பொய் சொல்லியிருக்கேனா?
- நீ அவளைப் பற்றி சொல்லவே இல்லயே.

8
00:00:44,607 --> 00:00:45,859
எனக்கே எதுவும் தெரியாது.

9
00:00:45,942 --> 00:00:48,236
சிஐஏ விமானத்தை வீழ்த்தியது என்று
உன்னிடம் சொல்ல முயற்சித்தேன்.

10
00:00:48,319 --> 00:00:50,029
அதற்கும் அவளுக்கும் ஏதாவது
சம்பந்தம் இருக்கலாம் என நினைத்தேன்,

11
00:00:50,113 --> 00:00:53,074
ஆனால் இது ஒட்டுமொத்தமாக அவளுடைய திட்டம்தான்
என்று நான் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை.

12
00:00:54,868 --> 00:00:59,205
டிஸ்பாட்ச், பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட
விபத்து நடந்திருக்கு. காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

13
00:00:59,289 --> 00:01:01,332
உடனடி மருத்துவ உதவி கோருகிறேன்.

14
00:01:08,631 --> 00:01:10,800
- நீ எங்கே இருக்கிறாய்?
- என்னை மன்னிச்சிடுங்க, ஃபிராங்க்.

15
00:01:10,884 --> 00:01:14,596
நான் ஏன் அப்படியெல்லாம் செய்தேன் என்பதை
நீங்கள் புரிந்துகொள்ள முடியாது என தெரியும்.

16
00:01:14,679 --> 00:01:16,639
புரிந்துகொள்வதா?
மக்கள் இறந்திருக்கிறார்கள், சிட்னி.

17
00:01:16,723 --> 00:01:18,433
நான் விளக்க விரும்புகிறேன்.

18
00:01:18,516 --> 00:01:22,145
பிறகு விளக்கலாம், ஆனால் இப்போது
உங்களை எச்சரிக்கத்தான் அழைத்தேன்.

19
00:01:22,228 --> 00:01:24,689
எனக்கும் பிராட்ஃபோர்டுக்கும்
இடையேயான விஷயத்தில்,

20
00:01:24,772 --> 00:01:25,773
நீங்கள் தலையிடாதீர்கள்.

21
00:01:25,857 --> 00:01:27,150
நீ எங்கேதான் இருக்க?

22
00:01:27,233 --> 00:01:29,068
நீங்கள் இதில் தலையிட்டால், கஷ்டப்படுவீர்கள்.

23
00:01:29,152 --> 00:01:31,196
அதில் எனக்கு சுத்தமாக விருப்பமில்லை.

24
00:01:31,696 --> 00:01:33,781
ப்ளீஸ் ஃபிராங்க், உங்கள் பாதுகாப்புக்காக…

25
00:01:33,865 --> 00:01:35,783
மற்றவர்களுடைய பாதுகாப்பு பற்றி நீ
எப்போதிலிருந்து கவலைப்பட ஆரம்பித்தாய்?

26
00:01:35,867 --> 00:01:37,076
உங்களுக்கு இது எப்படி இருக்கும் என புரிகிறது.

27
00:01:37,660 --> 00:01:39,287
எங்கும் சடலங்களாக இருக்கு, ஸ்கோஃபீல்ட்.

28
00:01:40,496 --> 00:01:41,497
உங்களுக்கு புரியவில்லை.

29
00:01:41,581 --> 00:01:42,999
நீதான் விமானத்தை வீழ்த்தினாய் என புரிகிறது.

30
00:01:43,082 --> 00:01:45,126
உன் கைகளில் இரத்தக் கறை படிந்திருக்கு.

31
00:01:45,210 --> 00:01:47,795
- ஹே, நீ சரணடைய வேண்டும்.
- முடியாது. இப்போது முடியாது.

32
00:01:47,879 --> 00:01:49,631
முதலில் நான் ஒரு விஷயத்தை செய்ய வேண்டியிருக்கு.

33
00:01:50,423 --> 00:01:52,634
- ஆர்க்கைவ் தானே?
- இதைப் பற்றி ஏதாவது

34
00:01:52,717 --> 00:01:54,761
செய்யணும் என உங்களுக்குத் தோன்றும்
என்று எனக்குத் தெரியும்.

35
00:01:54,844 --> 00:01:57,430
எல்லாவற்றையும் சரிசெய்ய, இதை நிறுத்தத் தோன்றும்.

36
00:01:57,513 --> 00:01:58,848
ஆனால் செய்யாதீர்கள்.

37
00:01:58,932 --> 00:02:03,561
ஃபிராங்க், உங்கள் நன்மைக்காக
சொல்கிறேன், பின்வாங்குங்கள்.

38
00:02:03,645 --> 00:02:07,482
இந்த ஊர் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தினால்,
கடுமையான விளைவுகளை சந்திப்பாய் என்று

39
00:02:07,565 --> 00:02:08,941
நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னேன்.

40
00:02:09,441 --> 00:02:11,402
இப்போது அதை நிறைவேற்றப் போகிறேன்.

41
00:02:11,486 --> 00:02:13,321
நீ காற்றைப் போல விரைவாக
அங்கிருந்து கிளம்பு,

42
00:02:13,404 --> 00:02:14,948
ஏனெனில் நான் உன்னைத் தேடி வருகிறேன்.

43
00:02:16,699 --> 00:02:18,159
நீங்க அப்படி செய்ய வேண்டாம், ஃபிராங்க்.

44
00:02:18,243 --> 00:02:20,036
ஓ, அது மட்டும்தான் எனக்கு வேண்டும்.

45
00:02:21,287 --> 00:02:23,373
சரி. ஆனால் நான் உங்களை எச்சரித்துவிட்டேன்.

46
00:02:38,137 --> 00:02:39,264
ஃபேர்பேங்க்ஸுக்கு வரவேற்கிறோம்

47
00:02:43,351 --> 00:02:44,519
மத்திய புலனாய்வு நிறுவனம்

48
00:03:44,120 --> 00:03:45,371
ஃபோர்ட் வெய்ன்ரைட்
ஃபேர்பேங்க்ஸ், அலாஸ்கா

49
00:03:45,455 --> 00:03:46,915
மார்ஷல்கள் ஹார்ட்மனை
கைது செய்துவிட்டார்கள்.

50
00:03:46,998 --> 00:03:49,250
அவனை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று
கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்.

51
00:03:50,376 --> 00:03:52,837
- ஸ்கோஃபீல்ட் எங்கே?
- தெரியலை.

52
00:03:53,546 --> 00:03:54,714
ஆனால் ஒரு எதிர்பாராத பிரச்சினை ஏற்பட்டிருக்கு.

53
00:03:54,797 --> 00:03:56,132
பெரிங்கில் உள்ள நம் சிக்இன்ட் இடம் ஒன்றைப் பற்றி

54
00:03:56,216 --> 00:03:58,218
ஹார்ட்மன் சொல்லிவிட்டதாக தகவல் வருகிறது.

55
00:03:58,301 --> 00:03:59,594
மரணங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

56
00:03:59,677 --> 00:04:01,012
அவனுக்கு என்ன வேண்டுமாம்?

57
00:04:01,095 --> 00:04:02,680
இப்போது சொல்ல முடியாது, ஆனால் நம் ஆய்வாளர்கள்

58
00:04:02,764 --> 00:04:04,807
அவன் ஒரு பீட்டாபைட் டேட்டாவை பதிவிறக்கம்
செய்திருக்கலாம் என நினைக்கிறார்கள்.

59
00:04:05,558 --> 00:04:06,893
நாசமாய் போனவன்.

60
00:04:07,769 --> 00:04:11,022
ஹார்ட்மனின் டெட் மேன்'ஸ் ஸ்விட்சை உருவாக்கிய
பெண் ஃபிலடெல்ஃபியாவில் வாழ்கிறாளா?

61
00:04:11,105 --> 00:04:12,106
ஆமாம். ஹண்டிங் பார்க்கில்.

62
00:04:12,190 --> 00:04:13,441
ஹார்ட்மன் ரஷ்யாவில் இருந்தான்,

63
00:04:13,525 --> 00:04:16,151
அப்படியென்றால் ஆர்க்கைவ் 6ஐ
டிஜிட்டல் முறையில் அனுப்பியிருக்கணும்.

64
00:04:16,235 --> 00:04:17,403
எனக்குப் புரியவில்லை, மேடம்.

65
00:04:17,487 --> 00:04:19,906
பெரிங்கில் உள்ள எல்லா சிக்இன்ட் தளமும்

66
00:04:19,989 --> 00:04:22,158
டிரான்ஸ்-ஆர்க்டிக் கேபிள் வழியாக
செல்லும் டேட்டாவை இடைமறிக்கிறது,

67
00:04:22,242 --> 00:04:25,912
அப்படியென்றால் ஹார்ட்மன் தனது ஹாக்கர்
நண்பனுக்கு அதை அனுப்பியிருந்தால்,

68
00:04:26,579 --> 00:04:28,039
நாம் அதை இடைமறித்திருக்க வாய்ப்புள்ளது.

69
00:04:28,122 --> 00:04:29,666
அதாவது அது நம் சர்வர்களில் இருக்கிறது.

70
00:04:29,749 --> 00:04:32,502
அந்த முட்டாள் ஆர்க்கைவை மீட்க
நம் தளத்திற்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறான்.

71
00:04:33,044 --> 00:04:34,712
அவன் அதைத்தான் பதிவிறக்கம் செய்திருக்கிறான்.

72
00:04:34,796 --> 00:04:36,172
ஒரு ஹார்டு காப்பி உருவாக்கியிருக்கிறான்.

73
00:04:36,256 --> 00:04:39,592
அவனிடம் அது இல்லாவிட்டால்,
நிச்சயம் ஸ்கோஃபீல்டிடம்தான் இருக்கும்.

74
00:04:41,844 --> 00:04:43,012
சரி, கேளு.

75
00:04:43,638 --> 00:04:46,099
இது கட்டுப்படுத்தி நீக்கும் ஒரு நடவடிக்கை.

76
00:04:46,182 --> 00:04:48,893
முதன்மை இலக்கு சிட்னி ஸ்கோஃபீல்ட்.

77
00:04:48,977 --> 00:04:54,732
அவளிடம் ரகசிய தகவல்கள் உள்ளன, அவளை
மிகவும் ஆபத்தானவளாக கருத வேண்டும்.

78
00:04:54,816 --> 00:04:57,819
நீங்கள் அவளை பாரபட்சம் பார்க்காமல் அழிக்க வேண்டும்.

79
00:04:57,902 --> 00:05:00,530
இரண்டாவது இலக்கு லீவை டெய்லர் ஹார்ட்மன்.

80
00:05:01,489 --> 00:05:03,992
அவன் போலீஸ் கஸ்டடியில் இருக்கிறான், ஆனால்
அவனைக் கொல்ல வேண்டும்.

81
00:05:04,576 --> 00:05:06,035
வெளிப்படாமல் இருங்கள்.

82
00:05:06,119 --> 00:05:07,829
எந்தத் தடயத்தையும் விடக் கூடாது.

83
00:05:08,830 --> 00:05:09,956
வேலையைத் தொடங்குங்கள்.

84
00:06:00,381 --> 00:06:02,467
உன்னைச் சார்ந்திருப்பது சுத்தமாக பிடிக்கலை,

85
00:06:02,550 --> 00:06:03,718
ஆனால் எனக்கு உண்மை வேண்டும்.

86
00:06:03,801 --> 00:06:05,136
அதற்கு உன் உதவி தேவை.

87
00:06:05,220 --> 00:06:06,804
சிறையில் இருந்தால்
என்னால் உனக்கு உதவ முடியாது.

88
00:06:06,888 --> 00:06:08,389
நீ சிறையில்தான் இருப்பாய், சரியா?

89
00:06:08,473 --> 00:06:11,768
நீ என் மனைவியைக் கடத்தினாய், என் ஆட்களைக்
கொன்றாய், உன் மனைவி தப்பி ஓடுகிறாள்,

90
00:06:11,851 --> 00:06:14,646
ஜாக்குலின் பிராட்ஃபோர்ட், இப்போது
ஃபோர்ட் வெய்ன்ரைட்டில் தரையிறங்கியிருக்கிறார்.

91
00:06:14,729 --> 00:06:17,941
- அவள் தரையிறங்கி எவ்வளவு காலம் ஆகுது?
- இல்லை, என்ன நடக்கப் போகிறது என்று நீ சொல்.

92
00:06:22,362 --> 00:06:25,198
நீ எதையோ கண்டுபிடித்ததால்
சிஐஏ விமானத்தை வீழ்த்தியதாக

93
00:06:25,281 --> 00:06:26,449
நீ நினைப்பது எனக்குத் தெரியும்.

94
00:06:27,534 --> 00:06:28,660
நீ என்ன கண்டுபிடித்தாய்?

95
00:06:31,955 --> 00:06:33,331
ஒரு சிஐஏ தரவு.

96
00:06:33,414 --> 00:06:34,624
ஆர்க்கைவ் 6.

97
00:06:34,707 --> 00:06:38,086
ஆமாம். பிராட்ஃபோர்ட் பட்டியல் போட்டு
கொலை செய்ததை அந்த ஆர்க்கைவ் நிரூபிக்கிறது.

98
00:06:38,169 --> 00:06:41,631
அவள் எதிரிகளை பட்டியலிட்டு, சட்டப்பூர்வ
நடைமுறையின்றி அவர்களைக் கொல்கிறாள்.

99
00:06:41,714 --> 00:06:44,133
ஆக, ஸ்கோஃபீல்ட் ஒட்டுமொத்த
ஏஜென்சியையும் வீழ்த்த நினைத்தாள்.

100
00:06:44,217 --> 00:06:45,218
ஏஜென்சியை இல்லை. இல்லை.

101
00:06:45,301 --> 00:06:47,929
பிராட்ஃபோர்டை வீழ்த்தி, அவளுடைய
திட்டத்தை அம்பலப்படுத்த விரும்பினாள்.

102
00:06:48,012 --> 00:06:50,056
இடையில் யார் காயப்பட்டாலும்
அவளுக்கு கவலையில்லை.

103
00:06:51,683 --> 00:06:53,184
அது அவ்வளவு எளிமையான விஷயமில்ல.

104
00:06:53,268 --> 00:06:55,311
அது, நீ எந்தப் பக்கத்தில் இருக்கிறாய்
என்பதைப் பொறுத்தது.

105
00:06:55,395 --> 00:06:56,437
அட, புரிஞ்சுக்கோ, ஃபிராங்க்.

106
00:06:56,521 --> 00:06:58,231
பொது நலனுக்காக ஏற்படும் எதிர்பாராத சேதம்.

107
00:06:58,314 --> 00:07:01,442
சில சமயங்களில் அதைத் தவிர்க்க முடியாது என்று
மற்றவர்களைவிட உனக்கு நன்றாகத் தெரியும்.

108
00:07:02,193 --> 00:07:03,444
எனக்கு என்ன தெரியும் என்று சொல்கிறேன்.

109
00:07:04,320 --> 00:07:06,531
இந்தக் குழப்பத்தை முடித்து,
உன் மனைவியைக் கைது செய்வேன்,

110
00:07:06,614 --> 00:07:09,367
அவள் தன் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருப்பாள்.

111
00:07:09,450 --> 00:07:10,952
அதுதான் எனக்குத் தெரியும்.

112
00:07:11,035 --> 00:07:13,037
பிராட்ஃபோர்ட் அங்கு முதலில் சென்றால்
அது நடக்காது, ஃபிராங்க்.

113
00:07:16,624 --> 00:07:19,961
அவள் சிட்னியை கைது செய்ய இங்கு வரவில்லை,
ஃபிராங்க். அவளைக் கொல்ல வந்திருக்கிறாள்.

114
00:07:20,044 --> 00:07:21,379
சிட்னியிடம் ஆர்க்கைவ் இருப்பது அவளுக்குத் தெரியும்.

115
00:07:21,462 --> 00:07:22,714
அவள் அதை வெளியிடப் போவதும் தெரியும்,

116
00:07:22,797 --> 00:07:26,426
அதைத் தடுத்து, தன் ரகசியத்தைக்
காக்க எதையும் செய்வாள்.

117
00:07:26,509 --> 00:07:29,512
நீ என்னை விடுவித்தால்,
பிராட்ஃபோர்டைத் தடுக்க நான் உதவுகிறேன்.

118
00:07:29,596 --> 00:07:31,931
- அது நடக்காது.
- சரி. இதைப் புரிந்துகொள், ஃபிராங்க்.

119
00:07:32,015 --> 00:07:34,851
சிஐஏ என் மனைவியைக் கொல்வதற்கும்
உண்மை வெளியாவதற்கும் இடையே

120
00:07:34,934 --> 00:07:39,522
நீயும் உன் மீதமுள்ள ஆட்களும் மட்டுமே இருக்கிறீர்கள்.

121
00:07:40,607 --> 00:07:42,358
எனவே, சீக்கிரம் வேலையைத் தொடங்கு, ஃபிராங்க்,

122
00:07:42,442 --> 00:07:45,904
ஏன்னா அவள் இறந்துவிட்டால்,
உண்மையும் அவளுடன் சேர்ந்து இறந்துவிடும்.

123
00:07:49,407 --> 00:07:50,992
சரி, எல்லோரும் வாங்க,
கொஞ்சம் கவனியுங்க.

124
00:07:54,495 --> 00:07:58,791
நம்மில் ஒருவள் தப்பியோடி, இப்போது
நம் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்.

125
00:07:58,875 --> 00:08:02,378
சிட்னி ஸ்கோஃபீல்ட் இப்போது தலைமறைவாகி,
USM விமானம் 207 வீழ்ச்சிக்காக

126
00:08:02,462 --> 00:08:05,048
விசாரணைக்காகத் தேடப்படுகிறாள்.

127
00:08:05,131 --> 00:08:08,468
கடைசியாக அவளை டால்டனில், பிராஸ்பெக்ட் கிரீக்கின்
தெற்கே ஐந்து மைல் தொலைவில் பார்த்திருக்கிறார்கள்.

128
00:08:08,551 --> 00:08:10,470
அவள் ஓடிச் செல்கிறாள், எனவே
இன்னும் அந்தப் பகுதியில்தான் இருப்பாள்.

129
00:08:10,553 --> 00:08:13,723
மாநில காவலர்கள், எஃப்பிடி,
சமூக ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுப்போம்.

130
00:08:13,806 --> 00:08:15,558
அவளுடைய புகைப்படத்தை
எல்லா இடங்களிலும் ஒட்டுங்கள்.

131
00:08:15,642 --> 00:08:19,270
நாம் சோர்ந்திருக்கிறோம் எனத் தெரியும், சரியா? நம்
உடல் வலிக்கிறது. வீட்டுக்குப் போக விரும்புகிறோம்.

132
00:08:19,354 --> 00:08:22,982
எனவே, நாம் இங்கே கூடியிருப்பதற்கு ஸ்கோஃபீல்ட்தான்
காரணம் என்று உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

133
00:08:23,608 --> 00:08:26,486
நம் மருத்துவமனை நிரம்பியிருப்பதற்கும்,
நம் குழந்தைகள் பயப்படுவதற்கும் காரணம் அவள்தான்.

134
00:08:26,569 --> 00:08:29,489
கடந்த ஒரு வாரமாக நம் நகரம்
முற்றுகையிடப்பட்டதற்குக் காரணமும் அவள்தான்.

135
00:08:29,572 --> 00:08:32,407
எனவே உங்கள் உறுதியைத் திரட்டுங்கள்.
தேவைப்பட்டால் கோபப்படுங்கள்.

136
00:08:32,492 --> 00:08:35,786
இவளைக் கைது செய்யாவிட்டால், நம் வாழ்க்கை
திரும்ப பழைய நிலைக்குத் திரும்பாது.

137
00:08:35,870 --> 00:08:39,707
நமக்கு ஒரே ஒரு இலக்குதான்,
அது சிட்னி ஸ்கோஃபீல்டைக் கண்டுபிடிப்பது.

138
00:08:39,791 --> 00:08:41,166
எனவே, அதைச் செய்வோம்.

139
00:08:53,263 --> 00:08:56,140
நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும், வின்சென்ட்.
நிச்சயமாகத் தெரியும்.

140
00:08:56,224 --> 00:08:58,601
நீங்களும் ராபர்ட் ஸ்கோஃபீல்டும்
நெருங்கிய நண்பர்கள் என்று தெரியும்.

141
00:08:59,185 --> 00:09:00,562
இந்த நாட்டில் உங்களுக்கு வாழ்க்கை
கொடுத்தது அவர்தான் எனத் தெரியும்.

142
00:09:00,645 --> 00:09:02,522
சிட்னியின் சிறு வயதிலிருந்தே
உங்களுக்கு அவளைத் தெரியும்,

143
00:09:02,605 --> 00:09:04,482
அதனால்தான் அவளுக்கு உதவினீர்கள்
என்று நினைக்கிறேன்.

144
00:09:05,567 --> 00:09:07,360
உங்களுக்கு அவள் மீது அக்கறை உள்ளது.

145
00:09:08,027 --> 00:09:10,905
அதனால், அவளைப் பாதுகாப்பாக அழைத்து வர
நீங்கள் எனக்கு உதவ வேண்டும்.

146
00:09:13,074 --> 00:09:15,243
நானே உதவ விரும்பினாலும்,
என்னால் அது முடியாது.

147
00:09:15,910 --> 00:09:17,328
அவள் எங்கே என்று எனக்குத் தெரியாது.

148
00:09:17,412 --> 00:09:18,788
சிட்னி தலைமறைவாக இருக்கிறாள்.

149
00:09:19,330 --> 00:09:20,832
அவளுக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும்.

150
00:09:21,624 --> 00:09:23,001
ஆர்க்கைவ்வை வெளியிடணும்.

151
00:09:23,626 --> 00:09:26,838
பிராட்ஃபோர்டை வீழ்த்தணும்,
நிச்சயம் அவள் அதைச் செய்வாள்.

152
00:09:27,672 --> 00:09:28,715
பிராட்ஃபோர்ட் இங்கே வந்திருக்கிறாள்.

153
00:09:29,883 --> 00:09:32,594
ஆனால் சிட்னியைக் கொல்ல,
ஒரு குழுவுடன் வந்திருக்கிறாள்,

154
00:09:32,677 --> 00:09:35,471
அதனால்தான் நான் அவளை
முதலில் பிடிக்க நீங்கள் எனக்கு உதவ வேண்டும்.

155
00:09:35,555 --> 00:09:36,931
அவளை எப்படி பிடிப்பது என்று சொல்லுங்கள்.

156
00:09:40,810 --> 00:09:44,606
நீ தேடிக்கொண்டிருக்கும் பெண்ணைப் பற்றி நீ
உண்மையில் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

157
00:09:45,273 --> 00:09:48,443
சிட்னியின் வாழ்க்கையில் நடந்த எல்லாமே,
அவளை இந்தத் தருணத்திற்கு கொண்டு வந்துள்ளது.

158
00:09:48,526 --> 00:09:51,905
அவள் தந்தையின் கொலை,
அவள் குடும்பத்தின் துரோகம்,

159
00:09:51,988 --> 00:09:54,157
உளவாளியாக அவள் வாழ்ந்த வாழ்க்கை.

160
00:09:54,741 --> 00:09:57,952
பிராட்ஃபோர்ட் தன் ரகசியத்தைக் காக்க,
சிட்னியையும் அவள் நேசிப்பவற்றையும்

161
00:09:58,036 --> 00:10:00,496
பயன்படுத்தியிருக்கிறாள்.

162
00:10:01,080 --> 00:10:04,584
அவள் அதைச் சரிசெய்யவும்,
உண்மையை வெளிப்படுத்தவும் முயல்கிறாள்.

163
00:10:04,667 --> 00:10:07,962
சிட்னி தப்பியோடிய குற்றவாளி இல்லை.
அவள் ஒரு உளவாளி.

164
00:10:08,046 --> 00:10:10,423
தோல்வி என்ற வார்த்தைக்கு இடமில்லை.

165
00:10:11,466 --> 00:10:13,343
என் வெளிப்படையான பேச்சை மன்னிக்கவும்,

166
00:10:13,426 --> 00:10:16,846
பிராட்ஃபோர்ட் அவளைக் கண்டுபிடிப்பது பற்றி
எனக்கு வருத்தமில்லை,

167
00:10:16,930 --> 00:10:21,351
நீ முதலில் அவளைப் பிடிப்பது பற்றி
எனக்குக் கவலையும் இல்லை.

168
00:10:21,434 --> 00:10:25,605
உண்மையில், நான் ஸ்கோஃபீல்டை
முழுவதுமாக நம்புகிறேன்.

169
00:10:26,898 --> 00:10:29,234
யார் நீ? எழுந்திரு.

170
00:11:34,090 --> 00:11:35,091
- ஃபிராங்க்.
- சொல்லு.

171
00:11:35,174 --> 00:11:36,801
இதோ. இவங்க…

172
00:11:36,885 --> 00:11:39,554
ஜாக்குலின் பிராட்ஃபோர்ட்,
சிஐஏ-வின் துணை இயக்குநர்.

173
00:11:39,637 --> 00:11:41,055
நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும்.

174
00:11:43,766 --> 00:11:46,728
இங்கு நீங்கள் ரொம்ப பிஸியாக
இருப்பது புரிகிறது.

175
00:11:47,312 --> 00:11:49,647
நீங்களும் உங்கள் குழுவும்
சிறப்பாக வேலை செய்திருக்கிறீர்கள்.

176
00:11:51,482 --> 00:11:53,318
நாம் தனியாகப் பேச ஏதாவது இடம் இருக்கிறதா?

177
00:11:53,401 --> 00:11:54,777
யுஎஸ் மார்ஷல்
தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பிரிவு

178
00:11:54,861 --> 00:11:56,196
ஸ்கோஃபீல்ட் பற்றியா?

179
00:11:56,279 --> 00:11:58,448
இது அதைவிட சற்று சிக்கலானது.

180
00:11:59,240 --> 00:12:04,162
உங்கள் கஸ்டடியில் உள்ள இரண்டு குற்றவாளிகளை நான்
கைது செய்யணும் என்பதை உறுதிப்படுத்த முடியும்.

181
00:12:04,245 --> 00:12:07,207
ஒருவர் விக்டர் தியாகோ என்ற
மாற்றுப்பெயரில் இருக்கிறான்,

182
00:12:07,290 --> 00:12:10,710
மற்றொருவன் முன்னாள் சிஐஏ உளவாளி,
லீவை ஹார்ட்மன்.

183
00:12:10,793 --> 00:12:12,503
ரகசியப் பெயர் "ஹாவ்லாக்."

184
00:12:12,587 --> 00:12:14,672
- ஆமாம், அவன் இங்கு இருக்கிறானா?
- ஆமாம்.

185
00:12:15,548 --> 00:12:16,883
- வாரண்ட் இருக்கா?
- உங்களுக்கு புரியவில்லை.

186
00:12:16,966 --> 00:12:18,968
- இது தேசிய பாதுகாப்பு பற்றிய விஷயம்.
- நீதிமன்ற ஆவணங்கள் இருக்கா?

187
00:12:19,052 --> 00:12:20,720
அது புரிகிறது, ஆனால்
இவர்களுக்கு உரிமைகள் உள்ளன.

188
00:12:20,803 --> 00:12:23,056
எனவே மீண்டும் கேட்கிறேன். உங்களிடம்
நீதிமன்ற ஆவணங்கள் உள்ளனவா?

189
00:12:23,139 --> 00:12:24,766
மார்ஷல், இது விவாதத்திற்குரிய விஷயமல்ல.

190
00:12:24,849 --> 00:12:28,019
உங்கள் கஸ்டடியில் உள்ள அந்த இருவரும்
வன்முறையாளர்கள், அரசு சாரா நபர்கள்,

191
00:12:28,102 --> 00:12:30,980
நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத
அச்சுறுத்தல்களை உருவாக்குபவர்கள்.

192
00:12:32,815 --> 00:12:33,816
சரி.

193
00:12:34,901 --> 00:12:36,611
நீங்கள் லிட்டில் டையோமீட் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

194
00:12:37,403 --> 00:12:40,114
- என்ன சொன்னீர்கள்?
- அது பெரிங் கடலில் ஒரு சிறிய தீவு.

195
00:12:40,198 --> 00:12:42,075
சுமார் 80 பேர் வசிக்கிறார்கள்.

196
00:12:42,158 --> 00:12:44,869
அவர்கள் மலைப்பகுதியில் உள்ள
சிறு குடிசைகளில் வாழ்கிறார்கள்.

197
00:12:44,953 --> 00:12:47,413
அது அமெரிக்காவில் மிகவும்
தொலைவான குடியிருப்பாக இருக்கலாம்.

198
00:12:47,497 --> 00:12:48,581
சரி.

199
00:12:48,665 --> 00:12:50,833
அதிலிருந்து இரண்டு மைல் கிழக்கே,
பிக் டையோமீட் உள்ளது,

200
00:12:50,917 --> 00:12:53,294
அது ரஷ்யாவின் சுகோட்ஸ்கி மாவட்டத்தின் பகுதி.

201
00:12:53,378 --> 00:12:57,006
ரஷ்ய-அமெரிக்க எல்லை
இந்த இரு தீவுகளின் நடுவே செல்கிறது.

202
00:12:57,090 --> 00:12:58,341
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

203
00:12:58,424 --> 00:13:01,302
நான் சொல்ல வருவது, நாம் அருகருகே இருந்தாலும்,

204
00:13:01,386 --> 00:13:03,179
அலாஸ்கா ரஷ்யாவின் பகுதி இல்லை.

205
00:13:03,763 --> 00:13:05,348
பெரிங் கடலில் உள்ள லிட்டில் டையோமீட் தீவு கூட,

206
00:13:05,431 --> 00:13:08,643
அமெரிக்க மண்ணில் உள்ளது,

207
00:13:08,726 --> 00:13:10,770
நீங்கள் இப்போது அங்குதான் நிற்கிறீர்கள்.

208
00:13:10,853 --> 00:13:13,815
சிஐஏ-வுக்கு அமெரிக்காவில்
சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை.

209
00:13:13,898 --> 00:13:16,651
எனவே AUSA-விடமிருந்து உங்களை
சட்ட அதிகாரியாக அங்கீகரிக்க

210
00:13:16,734 --> 00:13:20,196
நீதிமன்ற உத்தரவு இல்லையென்றால்,

211
00:13:20,280 --> 00:13:22,532
என் கட்டளை மையத்தை விட்டு
நீங்கள் உடனே வெளியேற வேண்டும்.

212
00:13:24,450 --> 00:13:25,994
திரு. ரெம்னிக். ஃபிராங்க்.

213
00:13:26,578 --> 00:13:28,454
நம் அறிமுகம் தவறான முறையில் நடந்துவிட்டது.

214
00:13:30,123 --> 00:13:31,666
அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

215
00:13:33,710 --> 00:13:36,629
அவன் உங்களிடம் என்ன சொன்னான்?
அவன் நல்லவன் என்றா?

216
00:13:36,713 --> 00:13:38,923
அவன் திருடிய அந்த உளவுத்துறையின் ரகசியங்கள்,

217
00:13:39,007 --> 00:13:43,678
சிஐஏ நேர்மையற்றது, ஊழல் செய்கிறது என்று
நிரூபிக்கும் என்றானா?

218
00:13:43,761 --> 00:13:46,556
சிஐஏ இல்லை. இல்லை, இல்லை.
அது நீங்கள் மட்டும்தான்.

219
00:13:48,766 --> 00:13:52,270
அவன் உங்களிடம் கட்டுக்கதை சொல்லியிருக்கிறான்.
அவன் எப்பவும் அதைத்தான் செய்வான்.

220
00:13:52,353 --> 00:13:54,898
ஹார்ட்மன் PSYOPs-ல் பயிற்சி பெற்றவன்.

221
00:13:54,981 --> 00:13:56,900
மக்களை எப்படி கையாள்வது என்று
அவனுக்குத் தெரியும்.

222
00:13:56,983 --> 00:13:58,776
சாப்பிடு, நாயே.

223
00:13:58,860 --> 00:14:01,404
அவன் குறிப்பிட்ட அந்த ஆர்க்கைவை
நீங்கள் பார்க்கவாவது செய்தீர்களா?

224
00:14:01,487 --> 00:14:03,239
- இல்லை, பார்க்கவில்லை.
- அதுதான் விஷயம்.

225
00:14:03,323 --> 00:14:06,326
இல்லாத ஒரு பொருள் இருப்பதாக
உங்களை நம்ப வைத்திருக்கிறான்.

226
00:14:07,118 --> 00:14:08,536
இது ஒரு மேஜிக்.

227
00:14:08,620 --> 00:14:10,455
அட, இது ரொம்ப நம்பகமாக இருக்கு.

228
00:14:11,206 --> 00:14:13,082
லீவை ஹார்ட்மன் ஒரு துரோகி.

229
00:14:13,166 --> 00:14:16,377
தன் நாட்டை ஏமாற்ற
தன் மனைவியை பயன்படுத்தினான்,

230
00:14:16,461 --> 00:14:17,921
பிறகு நிலைமை மோசமானதும்,

231
00:14:18,004 --> 00:14:20,131
அவள் தன்னைப் பாதுகாக்க உறுதி செய்தாள்.

232
00:14:20,882 --> 00:14:23,092
ஸ்கோஃபீல்ட் அந்த விமானத்தை வீழ்த்தியது,

233
00:14:23,176 --> 00:14:25,011
ஆர்க்கைவ்வை வெளிப்படுத்துவதற்காக அல்ல.

234
00:14:25,094 --> 00:14:26,846
ஒரே ஒரு நபரை அழிக்கவே அவள் அதைச் செய்தாள்,

235
00:14:26,930 --> 00:14:29,390
அவளை சிக்க வைத்து,
அவள் வாழ்க்கையை அழிக்கக்கூடியவனை.

236
00:14:29,474 --> 00:14:31,517
இப்படிப்பட்டவர்களைத்தான் நீங்கள் எதிர்கொள்கிறீர்கள்.

237
00:14:31,601 --> 00:14:33,895
இங்கே பாருங்க, உங்கள் ஆர்க்கைவில் என்ன இருக்கென
எனக்குத் தெரியாது, எனக்கு அதில் அக்கறையும் இல்லை.

238
00:14:33,978 --> 00:14:35,647
எனக்கு ஸ்கோஃபீல்டை கைது செய்யணும், அவ்வளவுதான்.

239
00:14:35,730 --> 00:14:38,983
அவளால் பலர் இறந்திருக்கிறார்கள்,
அவள் அதற்கு தண்டனை பெறணும்.

240
00:14:39,067 --> 00:14:41,736
எனவே, உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்,
நான் அதைத்தான் செய்யப் போகிறேன்.

241
00:14:42,445 --> 00:14:44,405
இங்குள்ள எல்லோருக்கும்
உங்களைப் பிடிக்கும் என்று தெரியும்.

242
00:14:45,532 --> 00:14:48,701
- என்னது?
- வெளியே சென்று பெரிய நகரத்தைப் பார்த்திருக்கீங்க.

243
00:14:48,785 --> 00:14:52,247
பிறகு எளிய வாழ்க்கைக்காக
வீடு திரும்பியிருக்கிறீர்கள்.

244
00:14:52,330 --> 00:14:54,832
நீங்கள் ஒரு உண்மையான
உள்ளூர் ஹீரோ என்று நினைக்கிறேன்.

245
00:14:54,916 --> 00:14:55,917
ஆமாம்.

246
00:14:56,626 --> 00:14:59,045
நீங்கள் இங்கு திரும்பியது இதை விரும்பியோ,

247
00:14:59,128 --> 00:15:01,130
அல்லது உங்கள் மகளை இழந்ததாலோ
இல்லை என்று எனக்குத் தெரியும்.

248
00:15:02,131 --> 00:15:05,677
உங்களால் நிஜ உலகில் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதால்,

249
00:15:05,760 --> 00:15:08,096
அவமானத்துடன் இந்த ஒதுக்குப்புற
கிராமத்திற்கு திரும்பி வந்தீர்கள்.

250
00:15:09,514 --> 00:15:11,766
ஏன்னா இந்த இடம் பாதுகாப்பானது.

251
00:15:11,849 --> 00:15:14,102
ஏன்னா இந்த இடம் முக்கியமற்றது.

252
00:15:14,185 --> 00:15:18,273
இப்போது உங்களுக்கு உண்மையான சூழல்,
உண்மையான பிரச்சினை,

253
00:15:18,356 --> 00:15:20,316
உண்மையான விளைவுகளுடன் வந்திருக்கிறது.

254
00:15:20,400 --> 00:15:23,278
என்னைத் தடுக்க முயற்சிப்பது,
நீங்கள் செய்த மிகப்பெரிய தவறாக இருக்கும்.

255
00:15:24,821 --> 00:15:25,947
அப்படியா?

256
00:15:26,030 --> 00:15:29,158
நீங்கள் இந்தக் கதவை விட்டு வெளியேறினால்,
உங்கள் முடிவு நல்லபடியாக இருக்காது.

257
00:15:31,286 --> 00:15:33,413
இது கிட்டத்தட்ட மிரட்டல் போல இருக்கிறது.

258
00:15:34,038 --> 00:15:36,040
இதை எச்சரிக்கை என்று சொல்லலாம்.

259
00:15:38,334 --> 00:15:40,587
நானும் ஒரு நட்பான எச்சரிக்கை தருகிறேன்.

260
00:15:42,255 --> 00:15:44,340
உங்கள் செல்வாக்கு இங்கு செல்லுபடியாகாது.

261
00:15:45,592 --> 00:15:47,510
உங்கள் பதவியோ,
DC தொடர்புகளோ பயன்படாது.

262
00:15:47,594 --> 00:15:52,807
வாஷிங்டனில் உங்களுக்கு அதிகாரம் தருவது
இங்கு ஒரு சுமையாகவே இருக்கும்.

263
00:15:54,309 --> 00:15:56,978
நீங்கள் தொடரலாம். என்னைக் குறைத்து
மதிப்பிடுகிறீர்கள். எனக்கு அது பழகிவிட்டது.

264
00:15:57,061 --> 00:15:59,314
ஆனால், நான் ஸ்கோஃபீல்டைப் பிடிப்பேன்,

265
00:15:59,397 --> 00:16:02,317
ஹார்ட்மனையும் தியாகோவையும்
FBI-யிடம் ஒப்படைப்பேன்.

266
00:16:02,400 --> 00:16:03,860
நீங்கள் என் வழியில் குறுக்கிட்டால்,

267
00:16:05,069 --> 00:16:06,905
உங்களையும் கைது செய்வேன்.

268
00:16:22,086 --> 00:16:23,880
ஃபேர்பேங்க்ஸ் சர்வதேச விமான நிலையம்

269
00:17:02,794 --> 00:17:04,128
நான் அதை எடுத்து தரேன்.

270
00:17:05,879 --> 00:17:07,590
- எனக்கு ரொம்ப கவனக்குறைவு.
- அப்படி இல்ல.

271
00:17:08,465 --> 00:17:09,841
உங்களுக்கு எதையாவது தேடித் தரட்டுமா?

272
00:17:09,926 --> 00:17:11,886
- வேணாம். நன்றி.
- வேணாமா? சரி, தேவைன்னா சொல்லுங்க.

273
00:17:13,888 --> 00:17:16,139
- உண்மையில…
- என்ன?

274
00:17:16,808 --> 00:17:18,643
…நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்.

275
00:17:18,725 --> 00:17:19,978
ஓ, சூப்பர். சொல்லுங்க.

276
00:17:24,065 --> 00:17:27,652
ஹேய், மக்களே. ஷில்லர்'ஸ் மருந்தகத்தில் இருந்து
நமக்கு ஒரு துப்பு கிடைத்திருக்கு.

277
00:17:27,735 --> 00:17:30,488
அங்கே ஸ்கோஃபீல்டைப் பார்த்ததாக ஒருவர் சொல்கிறார்.
அது அவள்தான் என்று உறுதியாகச் சொல்கிறார்.

278
00:17:30,572 --> 00:17:32,866
சரி. எஃப்பிடி-க்கு தகவல் சொல்.
நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம் என்றும் சொல்.

279
00:17:39,789 --> 00:17:42,333
ஹார்ட்மனை கஸ்டடியில் எடுக்க
பணியகம் தயாராக வந்துகொண்டிருக்கு.

280
00:17:42,417 --> 00:17:44,210
இன்னும் ஒரு மணிநேரத்திற்குள்
அவர்கள் இங்கே இருப்பார்கள்.

281
00:17:44,294 --> 00:17:45,753
தியாகோவையும் கைது செய்வார்கள்.

282
00:17:45,837 --> 00:17:47,130
அவன்தான் பெரிய பிரச்சினையே.

283
00:17:47,797 --> 00:17:49,841
ஹார்ட்மன் ஏறக்குறைய கட்டுப்படுத்தப்பட்டுட்டான்.

284
00:17:50,383 --> 00:17:52,343
தியாகோ அந்த கிழவனைப் பற்றி சொல்வான்.

285
00:17:53,011 --> 00:17:55,346
- உளவாளிகளை திசை திருப்பணுமா?
- ஒவ்வொரு பிரச்சினையாக பார்ப்போம்.

286
00:17:55,430 --> 00:17:57,181
ஸ்கோஃபீல்டைத்தான் முதலில் பிடிக்கணும்.

287
00:17:58,850 --> 00:18:03,104
ஓஎஸ்பி-ஐ தொடர்புகொள். அந்த ஆர்க்கைவை
அனுப்ப அவள் எங்கே போயிருக்கலாம் என்று கண்டுபிடி.

288
00:18:03,187 --> 00:18:05,690
அவள் செல்ஃபி போடுற மாதிரி இல்ல இது.

289
00:18:05,773 --> 00:18:07,567
அவளுக்கு SIPRNet நெட்வொர்க் வேணும்.

290
00:18:07,650 --> 00:18:11,446
இப்படிப்பட்ட ஒரு டேட்டா அப்லோடைக் கையாளக்கூடிய
இடங்கள் இங்கே அதிகம் இருக்க வாய்ப்பில்ல.

291
00:18:11,529 --> 00:18:15,074
எல்லா யூனிட்களும் கேளுங்க.
10-66, தப்பியோடியவர் காணப்பட்டிருக்கலாம்.

292
00:18:15,158 --> 00:18:18,912
2120 லாத்ராப். அருகில் இருக்கும் யூனிட்கள்,
உடனடியாக பதிலளித்து, உதவுங்கள்.

293
00:18:18,995 --> 00:18:20,955
தேடப்படும் நபர் ஆயுதம் ஏந்தியவர்,
ஆபத்தானவர் என கருதப்படுகிறார்…

294
00:18:21,039 --> 00:18:24,667
அது அவள்தான். குழுவை எச்சரி. நாம் போகலாம்.
LEO-க்களுக்கு முன்பாக நாம் அங்கே போக வேண்டும்.

295
00:18:24,751 --> 00:18:25,752
சீக்கிரம் போ!

296
00:18:37,347 --> 00:18:39,098
- ஹேய், வின்னி. உன் அப்பா இங்கே இருக்காரா?
- ஹேய், ஃபிராங்க்.

297
00:18:39,182 --> 00:18:40,975
இல்ல, அவர் பாட்டி வீட்டுல சம்ப் பம்பு சரிசெய்கிறார்.

298
00:18:41,059 --> 00:18:44,229
- என்ன நடக்குது?
- தப்பியோடிய கைதிபத்தி 911-க்கு அழைப்பு வந்தது.

299
00:18:44,312 --> 00:18:45,522
இந்தப் பெண்ணை பார்த்திருக்கியா?

300
00:18:46,147 --> 00:18:48,399
அவளை எங்கேயும் பார்த்ததில்ல.
நிச்சயமாக இங்கிருந்துதான் அந்த அழைப்பு வந்ததா?

301
00:18:48,483 --> 00:18:50,485
- நாள் முழுக்க இங்குதான் இருக்கியா?
- கிட்டத்தட்ட. ஆமா.

302
00:18:50,568 --> 00:18:52,153
- நான் அப்பாவை கூப்பிடட்டுமா?
- ஒரு நிமிஷம் பொறு.

303
00:18:52,737 --> 00:18:54,864
- உங்க சிசிடிவி ஃபுட்டேஜை நான் பார்க்கணும்.
- சரி.

304
00:19:02,747 --> 00:19:04,374
போய்க்கொண்டே இரு. பின்பக்கமாகப் போ.

305
00:19:15,969 --> 00:19:17,178
இங்கே பாருங்க.

306
00:19:17,262 --> 00:19:18,263
இந்தப் பெண்ணை பார்த்திருக்கிறீர்களா?

307
00:19:21,766 --> 00:19:23,226
ஹரால்டோவோட பேசிக்கொண்ட்டிருந்தாள்
என நினைக்கிறேன்.

308
00:19:23,977 --> 00:19:25,019
ஹரால்டோ எங்கே?

309
00:19:28,815 --> 00:19:30,149
பாத்ரூம் ஹாலுக்கு அந்தப் பக்கம் இருக்கு.

310
00:19:32,360 --> 00:19:34,153
என்ன செய்யுறீங்க?
ஹேய், இங்க அனுமதி இல்லாம வரக் கூடாது.

311
00:19:34,237 --> 00:19:37,282
நில்லுங்க. நிறுத்துங்க!
என்ன பண்ணுறீங்க? நிறுத்துங்க.

312
00:19:37,991 --> 00:19:39,617
சரி, நிறுத்து.
பாஸ் பண்ணு. அது அவள்தான்.

313
00:19:39,701 --> 00:19:40,785
அவள் கையில் இருப்பது என்ன?

314
00:19:41,327 --> 00:19:42,579
ஹேர் டை மாதிரி இருக்கு.

315
00:19:42,662 --> 00:19:45,164
லேடி லஸ்ட்ரஸ் RC-1 மாதிரி இருக்கு.
டெரகோட்டா சில்லி.

316
00:19:45,248 --> 00:19:46,875
- என்னது?
- டெரகோட்டா சில்லி.

317
00:19:46,958 --> 00:19:48,751
மீடியம்-போல்டு சிவப்பு.
ரொம்ப பிரபலமான ஷேடு.

318
00:19:48,835 --> 00:19:49,878
ஆனா அவளுக்கு அது பொருந்தாது.

319
00:19:49,961 --> 00:19:51,087
அவளோடு பேசுவது யாரு?

320
00:19:51,170 --> 00:19:52,380
அவன் பெயர் ஹரால்டோ.

321
00:19:59,178 --> 00:20:00,763
இப்பத்தான் இங்க இருந்தான்.

322
00:20:08,438 --> 00:20:09,522
நீனா, ஹரால்டோவை பார்த்தியா?

323
00:20:10,106 --> 00:20:11,858
எல்லாரும் ஏன் ஹரால்டோவை தேடுறாங்க?

324
00:20:11,941 --> 00:20:14,861
- எல்லாரும்னா யாரு?
- ஒரு வயதான பெண். கோட்-சூட் போட்டிருந்தாங்க.

325
00:20:17,071 --> 00:20:18,072
ஹட்ச்.

326
00:20:18,781 --> 00:20:21,075
ஹே, கேளு, நாம் தாமதமாக வந்துவிட்டோம்.
பிராட்ஃபோர்ட் ஏற்கனவே இங்கு வந்துவிட்டாள்.

327
00:20:32,170 --> 00:20:34,964
இது, ராமியோட சௌடர் ஹவுஸ்
பார்ட்டி பத்தின்னா, நான் குடிச்சேன் ஆனா,

328
00:20:35,048 --> 00:20:37,467
- அவங்க இடத்த நாசமாக்குறதுக்கு முன் கிளம்பிட்டேன்…
- பேசாதே.

329
00:20:37,550 --> 00:20:38,801
நான் சொல்றத கேளு.

330
00:20:41,095 --> 00:20:44,933
- இந்த பொண்ணோட பேசினியா?
- நான்… அப்படித்தான் நினைக்குறேன்.

331
00:20:45,475 --> 00:20:46,684
அவள் என்ன கேட்டாள்?

332
00:20:47,477 --> 00:20:49,729
அவங்க… கொஞ்சம் ஹேர் டை வாங்கினாங்க.

333
00:20:50,313 --> 00:20:53,650
அவ்வளவுதானா?
நல்லா யோசிச்சு சொல்லு, ஹரால்டோ.

334
00:20:54,317 --> 00:20:55,818
அவங்க பயணத்துக்கு வேற ஏதாவது
வேணுமான்னு கேட்டேன்,

335
00:20:55,902 --> 00:20:57,612
- ஆனா எதுவும் வேணாம்னு சொல்லிட்டாங்க.
- அவ பயணமா?

336
00:20:58,279 --> 00:21:00,240
ஆமா. டெனாலி ஸ்டார்ல.

337
00:21:00,823 --> 00:21:03,785
ரயில் நிலையத்துக்கு வழி கேட்டாங்க,
நான் எப்படி போறதுன்னு சொன்னேன்.

338
00:21:08,081 --> 00:21:09,666
அட, நான் ஏதாவது சிக்கல்ல இருக்கேனா?

339
00:21:09,749 --> 00:21:11,751
நான் வக்கீல் வச்சுக்கலாம்னு
நீங்க சொல்ல வேணாமா?

340
00:21:11,834 --> 00:21:14,462
ஃபேர்பேங்க்ஸ் டெப்போவை கண்காணியுங்கள்.
டெனாலி ஸ்டார்.

341
00:21:18,466 --> 00:21:19,717
என்னை இப்படி நடுரோட்டுல
விட்டுட்டுப் போகக் கூடாது!

342
00:21:19,801 --> 00:21:21,302
எனக்கு எக்ஸிமா தோல் நோய் இருக்கு!

343
00:21:21,386 --> 00:21:22,428
ஹேய்!

344
00:21:24,222 --> 00:21:25,557
முட்டாள்.

345
00:21:27,684 --> 00:21:29,143
ஹேய், ஃபிராங்க்.

346
00:21:29,227 --> 00:21:31,604
- எனக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கு.
- அது ப்ரிக்ஸ்.

347
00:21:31,688 --> 00:21:33,273
நீங்கள் பேசிக்கொண்டிருந்த ஆர்க்கைவ் பற்றி.

348
00:21:33,356 --> 00:21:35,024
- சொல்லு.
- நீங்கள் சொல்வது போல, இந்த ஃபைல்

349
00:21:35,108 --> 00:21:38,319
அவ்வளவு பெரியதாக இருந்தால், ஸ்கோஃபீல்டுக்கு அதை
அப்லோட் செய்ய குறைந்த வாய்ப்புகள்தான் இருக்கும்,

350
00:21:38,403 --> 00:21:41,656
அவளுக்கு கம்ப்ரஷன் சாஃப்ட்வேர் அணுகல்
இல்லை என்று வைத்துக் கொண்டால்,

351
00:21:41,739 --> 00:21:44,617
அவள் ஒரு தரவு மையம்
அல்லது தரவு மையத்துடன் நேரடி இணைப்பு உள்ள

352
00:21:44,701 --> 00:21:46,578
ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

353
00:21:46,661 --> 00:21:49,789
மிகப் பெரிய மின்திறன் தேவைப்படும் ஒரு இடம்.

354
00:21:49,873 --> 00:21:51,124
அப்படியென்றால், அவளால் இதை எங்கே செய்ய முடியும்?

355
00:21:51,207 --> 00:21:53,501
என் முதல் யோசனை UAF பயன்படுத்தும்
கோலோக்கள்தான், ஆனால்,

356
00:21:53,585 --> 00:21:55,628
பள்ளி சர்வர்களை சில திடீர் பராமரிப்புக்காக
ஷட்டவுன் செய்ததாக

357
00:21:55,712 --> 00:21:57,255
இப்போதுதான் தகவல் வந்தது.

358
00:21:57,338 --> 00:21:59,299
- அவள் வேறு எங்கே போயிருக்கலாம்?
- ஏதாவதொரு பேஸுக்கு?

359
00:21:59,382 --> 00:22:01,509
யூட்டிலிட்டி கம்பெனி மாதிரி ஏதாவது?
எனக்குத் தெரியலை.

360
00:22:01,593 --> 00:22:03,344
கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்,
எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை.

361
00:22:03,428 --> 00:22:05,889
ஸ்கோஃபீல்ட் வெளியே இருக்கும் வரை,
நிலைமை ரொம்ப ஆபத்தானதுதான்.

362
00:22:05,972 --> 00:22:08,474
அவள் எங்கு போகிறாள் என
பிராட்ஃபோர்டுக்கு முன் நாம கண்டுபிடிக்கணும்.

363
00:22:14,981 --> 00:22:17,233
டெனாலி ஸ்டார்
இப்போது பயணிகளை ஏற்றுகிறது.

364
00:22:17,317 --> 00:22:21,863
அது ஹீலி, டெனாலி, டல்கீட்னா, வாசில்லா,
ஆங்கரேஜ் ஆகிய இடங்களில் நிற்கும்.

365
00:22:22,739 --> 00:22:24,240
ஐந்து நிமிடங்களில் புறப்படவுள்ளது.

366
00:22:24,782 --> 00:22:26,284
ஆல்ஃபா குழு, ஏதாவது தகவல் கிடைத்ததா?

367
00:22:26,367 --> 00:22:28,369
இப்போது தடங்களைத் தேடுகிறோம்.

368
00:22:53,895 --> 00:22:55,021
இன்னும் எங்கள் கண்ணில் அவள் சிக்கவில்லை.

369
00:22:55,104 --> 00:22:56,648
அவள் அங்குதான் இருக்கிறாள். என்னை நம்பு.

370
00:22:56,731 --> 00:22:59,442
ரயில் புறப்படப் போகிறது. அடுத்த ரயிலில் வரும்
கூட்டத்தை நாங்கள் சோதிக்கணுமா?

371
00:22:59,526 --> 00:23:01,569
இல்லை! அவள் இந்த ரயிலில் ஏறிவிட்டாள்.

372
00:23:01,653 --> 00:23:03,029
உன் குழுவை உள்ளே அனுப்பி,
அவளைக் கண்டுபிடி.

373
00:23:05,782 --> 00:23:08,576
ரயிலில் ஏறுங்கள். ஆல்ஃபா,
பின்னாடி இருந்து தேட ஆரம்பியுங்கள்.

374
00:23:08,660 --> 00:23:10,828
எக்கோ, முன்னால் இருந்து தேடி,
பின்னோக்கி வாருங்கள்.

375
00:23:32,141 --> 00:23:33,810
- பின்னால போ!
- என்னது?

376
00:23:33,893 --> 00:23:35,478
சுவரைப் பார்த்து நில்லு!

377
00:23:35,562 --> 00:23:36,896
சரி.

378
00:23:38,731 --> 00:23:43,695
நீ நெடுஞ்சாலையில செய்த அந்த சாகசத்தால,

379
00:23:43,778 --> 00:23:46,155
மூணு ஃபெடரல் ஏஜென்ட்ஸ்
இறந்துட்டாங்கன்னு இப்பத்தான் தெரிஞ்சுது.

380
00:23:47,198 --> 00:23:48,908
இன்னும் ரெண்டு பேர்
தீவிர சிகிச்சைப் பிரிவுல இருக்காங்க!

381
00:23:51,077 --> 00:23:55,331
அவங்கள்ல ஒருத்தர் ஏஜென்ட் லாஃப்ட்குவிஸ்ட், நானும்
அவரும் ஆஃப்கானிஸ்தான்ல ஒண்ணா வேலை செஞ்சோம்.

382
00:23:55,415 --> 00:23:59,711
அவர் ரெண்டு போர்களைத் தாண்டி உயிர் பிழைச்சவர்,
ஆனா இப்ப உன்னால இறந்து போயிட்டார்!

383
00:23:59,794 --> 00:24:01,504
அடச்சே!

384
00:24:02,422 --> 00:24:03,673
அடேய், எழுந்து நில்லு.

385
00:24:08,261 --> 00:24:09,929
இது என்னன்னு உனக்குத் தெரியுமா?

386
00:24:11,681 --> 00:24:14,267
இது ஒரு மேம்படுத்தப்பட்ட துகள் கையெறி குண்டு.

387
00:24:14,350 --> 00:24:17,270
வியட்காங்கில், மூங்கில் மற்றும்
தகரப் பெட்டிகளால் இதை செய்வாங்க.

388
00:24:18,021 --> 00:24:19,731
சரி. கொஞ்சம் பொறு.

389
00:24:19,814 --> 00:24:21,691
இதுல உள்ள பிரைமர் எவ்வளவு
வலிமையானதுன்னு உறுதியா தெரியல.

390
00:24:21,774 --> 00:24:24,485
நிச்சயமா குறைந்தது 5 மீட்டர் சுற்றுவட்டாரத்தைக்
கொல்லும் ஆற்றல் இருக்கும்னு நம்புறேன்.

391
00:24:25,111 --> 00:24:27,572
இது உனக்கே தெரியும்தானே?
ஏன்னா நீ ராணுவத்துல இருந்தவன்.

392
00:24:28,364 --> 00:24:29,866
நீ ராணுவத்துல இருந்ததால,

393
00:24:29,949 --> 00:24:33,369
கைதியோட அறைக்கு ஆயுதத்தோட வர்றது
முட்டாள்தனம் மட்டுமில்ல,

394
00:24:33,453 --> 00:24:36,706
சட்டத்துக்கு எதிரானதும் கூடன்னு உனக்கே தெரியும்.

395
00:24:36,789 --> 00:24:38,958
இப்ப, நீ தரையில படு டா!

396
00:24:39,918 --> 00:24:41,169
இப்போ…

397
00:24:41,753 --> 00:24:43,046
நன்றி.

398
00:24:46,382 --> 00:24:47,800
உன் ஜாக்கெட்டையும் சாவியையும் கொடு.

399
00:25:05,193 --> 00:25:08,071
ஓஎஸ்பி-யின் பகுதியில் உள்ள தரவு அப்லிங்க்
மையங்களின் முதற்கட்ட பட்டியல்.

400
00:25:09,531 --> 00:25:10,698
அலாஸ்கா மாநிலம்

401
00:25:10,782 --> 00:25:12,742
இதில் நிறைய இருக்கு. இதைக் குறைக்கச் சொல்.

402
00:25:12,825 --> 00:25:16,746
ரயிலின் பயண வழியை சரிபார்,
வழியில உள்ள நிறுத்தங்களை வடிகட்டிப் பாரு.

403
00:25:17,789 --> 00:25:18,831
எனக்கு என்ன நிலவரம்னு தெரியணும்.

404
00:25:18,915 --> 00:25:20,625
சாமான்கள் மற்றும்
சரக்கு இடங்களை சரிபார்த்துவிட்டேன்.

405
00:25:20,708 --> 00:25:22,585
ஆல்ஃபாவும் எக்கோவும் இப்போது
பயணிகளின் பெட்டிளை சோதிக்கின்றனர்.

406
00:25:22,669 --> 00:25:24,879
அவள் அங்குதான் இருக்கிறாள். அவளைக் கண்டுபிடி.

407
00:25:28,883 --> 00:25:31,427
கமாண்ட், இது ஆல்ஃபா. பெட்டி 7-ல் அவள் இல்லை.

408
00:25:31,511 --> 00:25:33,805
எக்கோ குழு பேசுகிறேன். அவள் இங்கு இல்ல.

409
00:25:33,888 --> 00:25:35,265
முதன்மை இலக்கு இங்குதான் இருக்கிறாள்.

410
00:25:35,348 --> 00:25:37,517
சிவப்பு தலைமுடி மற்றும் ஆயுதத்தோட,
ஆக்ரோஷமாக இருக்கிறாள்.

411
00:26:28,109 --> 00:26:29,235
ஹேய்.

412
00:26:36,701 --> 00:26:40,413
நீ என்னைக் கொல்ல இங்கு வந்திருந்தால்,
அது எனக்கு பெரிய உபகாரம்தான்.

413
00:26:41,623 --> 00:26:43,708
என்னோட மீதி வாழ்க்கைய
சிறையிலதான் கழிக்கப் போறேன்.

414
00:26:44,834 --> 00:26:46,002
நீங்க எப்படி அதை செஞ்சீங்க?

415
00:26:46,085 --> 00:26:47,253
விமானத்தை வீழ்த்தியதா?

416
00:26:47,337 --> 00:26:50,381
இல்ல. சிட்னியை எப்படி சம்மதிக்க வச்சீங்க?

417
00:26:50,465 --> 00:26:53,134
ஆர்க்கைவை அம்பலப்படுத்தணும்னா,
நான் சாகணும்னு நிச்சயமா

418
00:26:53,218 --> 00:26:55,011
அவகிட்ட சொல்லியிருப்பீங்க.
எப்படி அவள சம்மதிக்க வச்சீங்க?

419
00:26:55,094 --> 00:26:56,930
எந்த விஷயத்திலும் எனக்கு அவள சம்மதிக்க
வைக்க வேண்டிய அவசியமே இல்ல.

420
00:26:57,013 --> 00:26:58,264
சிட்னியை பத்தி உனக்கே தெரியும்.

421
00:26:58,348 --> 00:27:00,475
அவளோட முடிவுகளை எப்பவும் அவள்தான் எடுப்பாள்.

422
00:27:00,558 --> 00:27:02,435
- சிட்னி என் மரண ஆணையில கையெழுத்திட்டாளா?
- இல்ல.

423
00:27:03,019 --> 00:27:06,773
அவள் உன்னைவிடவும், அவளைவிடவும்,
நம் எல்லோரைவிடவும் பெரிய முடிவு எடுத்தாள்.

424
00:27:06,856 --> 00:27:09,776
பிராட்ஃபோர்டை தடுத்து, தன் அப்பாவோட
மரணத்துக்கு பழிவாங்க,

425
00:27:09,859 --> 00:27:12,320
அவள் சிக்கலில் மாட்டிக்க
கொஞ்சம் கூட பயப்படல.

426
00:27:13,321 --> 00:27:15,657
நான் ஒரு உதவியாளராகத்தான் இருந்தேன்.

427
00:27:16,241 --> 00:27:19,661
சிட்னியோட திட்டத்தை முடிக்க, என்னால
முடிஞ்சதை செய்வேன்னு உறுதி கொடுத்தேன்.

428
00:27:20,286 --> 00:27:22,330
நீங்களே பலியாகுற அளவுக்கு கூடவா?

429
00:27:22,413 --> 00:27:25,708
அவளும் அவளோட அப்பாவும் எனக்கு
கொடுத்ததுக்கு, இது ஒரு சின்ன கைமாறுதான்.

430
00:27:25,792 --> 00:27:27,502
நம்பிக்கை. கண்ணோட்டம்.

431
00:27:28,086 --> 00:27:32,215
அந்த மாதிரி நம்பிக்கைகளுக்கு
சில உயிர்களை தியாகம் செய்யலாம்,

432
00:27:32,298 --> 00:27:34,133
என்னோடதையும் சேர்த்து.

433
00:27:34,217 --> 00:27:38,846
அதனாலதான் சிட்னியோட மிஷனை முடிக்க
என்னால முடிஞ்சதை செய்வேன்.

434
00:27:39,597 --> 00:27:42,058
நினைச்சதவிட நம்ம ரெண்டு பேருக்கும்
நிறைய ஒற்றுமை இருக்கு.

435
00:27:42,141 --> 00:27:43,309
அதுக்கு என்ன அர்த்தம்?

436
00:27:53,069 --> 00:27:54,988
இது என்னது? நீ என்ன பண்ணுற?

437
00:27:55,697 --> 00:27:58,283
நீங்க எனக்கு உதவணும்னு கேட்குறேன்,
அப்பத்தான் என்னால அவளுக்கு உதவ முடியும்.

438
00:29:03,723 --> 00:29:05,350
ஹீலி நிலையத்திற்கு வருக.

439
00:29:05,433 --> 00:29:09,270
ஆங்கரேஜ் வரை செல்லும் இந்த ரயில்
இன்னும் ஐந்து நிமடத்தில் புறப்படவுள்ளது.

440
00:29:09,354 --> 00:29:10,355
அவளை தவற விட்டுவிட்டோம்.

441
00:29:10,438 --> 00:29:12,023
அவளை தவற விட்டுவிட்டோம் என்றால் என்ன அர்த்தம்?

442
00:29:12,106 --> 00:29:14,150
நமக்கு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கு,
நாம் நிலமையை கட்டுப்படுத்தணும்.

443
00:29:14,234 --> 00:29:16,027
உள்ளூர் போலீஸ் இங்கே சீக்கிரம் வந்திடுவாங்க.

444
00:29:16,110 --> 00:29:18,780
உள்ளூர் போலீஸை நான் பார்த்துக்கொள்கிறேன்.
ஸ்கோஃபீல்ட் பற்றி சொல்.

445
00:29:18,863 --> 00:29:21,950
அவள் எங்கே என்று தெரியவில்லை.
ஆனால் அவள் ரொம்ப தூரம் போயிருக்க மாட்டாள்.

446
00:29:22,033 --> 00:29:23,368
ரயிலில் இருந்து ஹீலி நிலையத்தில் இறங்கிட்டாள்.

447
00:29:24,494 --> 00:29:26,579
ஹீலி. எனக்கு பட்டியலை காட்டு.

448
00:29:28,540 --> 00:29:31,167
என்ன ஆச்சு?
ஹீலியில் டேட்டா சென்டர் இருக்கா?

449
00:29:31,251 --> 00:29:33,461
இல்ல. அங்கிருந்து அருகில் இருப்பது இதுதான்.

450
00:29:33,545 --> 00:29:35,296
நெனானா நீர்மின் அணை.

451
00:29:35,380 --> 00:29:38,466
இது, பிளாக் ரேபிட்ஸில் உள்ள ராணுவ குளிர்கால
பயிற்சி மையத்திற்கு மின்சாரம் வழங்குகிறது,

452
00:29:38,550 --> 00:29:42,220
அதாவது பாதுகாப்பான செயற்கைக்கோள் அப்லிங்க்களும்,
ஆர்க்கைவை அனுப்ப

453
00:29:42,303 --> 00:29:43,805
அவளுக்கு தேவையான பேண்ட்வித்தும் உள்ளன.

454
00:29:43,888 --> 00:29:45,890
அவள் அவர்களின் அப்லிங்க்கை கைப்பற்ற விரும்புகிறாள்.

455
00:29:45,974 --> 00:29:47,642
அதனால், நாம் முதலில் அங்கு போகணும்.

456
00:29:47,725 --> 00:29:49,143
குழுவுக்கு தகவல் சொல்லு. நாம் போலாம்!

457
00:30:02,657 --> 00:30:04,492
- வெளியே வெப்பநிலை ரெண்டு டிகிரி.
- ஆமாம். இவரைக் கண்டுகொள்ளாதே.

458
00:30:04,576 --> 00:30:06,786
கைது ஆனபோது இதைத்தான் அணிந்திருந்தார்.
வெளியே போகும்போதும் இதையே அணியட்டும்.

459
00:30:06,870 --> 00:30:07,954
அவர் மிருகம் இல்ல.

460
00:30:09,747 --> 00:30:10,999
கொஞ்சம் மனிதாபிமானம் காட்டுங்கள்.

461
00:30:13,418 --> 00:30:15,420
- துப்பாக்கி!
- பின்னாடி போ. இப்பவே!

462
00:30:15,503 --> 00:30:16,671
துப்பாக்கியைக் கீழ போடு!

463
00:30:17,255 --> 00:30:19,507
பின்னாடி போகச் சொல்லு,
இல்லன்னா துப்பாக்கிய அழுத்திடுவேன்.

464
00:30:21,926 --> 00:30:23,303
யாரும் எதுவும் செய்யாதீர்கள்.

465
00:30:25,138 --> 00:30:27,891
கடைசியா சொல்றேன். துப்பாக்கிய கீழ போடுங்க!

466
00:30:52,207 --> 00:30:53,208
எல்லாம் தயாரா?

467
00:30:53,291 --> 00:30:55,835
நாம் பேசிக்கொண்ட மாதிரியே.
எல்லாம் அட்டவணைப்படி இருக்கா?

468
00:30:55,919 --> 00:30:57,587
நாம் கிளம்பலாம். நமக்கு அவ்வளவு நேரம் இல்லை.

469
00:31:07,305 --> 00:31:08,306
ஃபிராங்க் பேசுகிறேன்.

470
00:31:08,389 --> 00:31:09,891
நமக்கு ஒரு பிரச்சினை, ஃபிராங்க்.

471
00:31:09,974 --> 00:31:11,184
ஏதாவது நல்ல செய்தி சொல், மார்க்ஸ்.

472
00:31:11,267 --> 00:31:13,978
ஹீலி நிலையத்தில் இப்போது நிறுத்தப்பட்ட
டெனாலி ஸ்டார் ரயிலில்

473
00:31:14,062 --> 00:31:16,648
ஏதோ கைகலப்பு நடந்ததா தகவல் வந்திருக்கு.

474
00:31:16,731 --> 00:31:18,149
என்ன மாதிரியான கைகலப்பு?

475
00:31:18,233 --> 00:31:20,985
உயிரிழப்புகள் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இப்போதுதான் தகவல் வந்தது. உடனே உங்களை அழைத்தேன்.

476
00:31:21,069 --> 00:31:22,612
சாட்சிகளும் இருக்கிறார்கள்.

477
00:31:24,280 --> 00:31:26,658
சரி. ரயில்வே துறையை
சிசிடிவி ஃபுட்டேஜை எடுக்கச் சொல்லு.

478
00:31:26,741 --> 00:31:28,409
அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள்.
நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம்.

479
00:31:37,210 --> 00:31:38,336
அது அவளாகத்தான் இருக்கணும், சரியா?

480
00:31:39,045 --> 00:31:40,296
ஆமாம், அது அவள்தான்.

481
00:31:40,380 --> 00:31:41,422
அவள் என்னதான் செய்கிறாள்?

482
00:31:42,131 --> 00:31:44,008
தெரியலை, ஹட்ச். எனக்குத் தெரியலை.

483
00:31:54,686 --> 00:31:56,354
சிட் ரொம்ப புத்திசாலி பொண்ணு.

484
00:32:01,317 --> 00:32:02,610
குழு தன் நிலையில் இருக்கா?

485
00:32:02,694 --> 00:32:05,405
நாங்கள் எங்கள் நிலையில் இருக்கிறோம்.
இன்னும் அவளைக் காணோம்.

486
00:32:06,030 --> 00:32:07,240
மொபைல் டூ, ஏதாவது தகவல் இருக்கா?

487
00:32:10,034 --> 00:32:12,078
இல்ல. இங்கே எந்த நடமாட்டமும் இல்லை.

488
00:32:12,161 --> 00:32:14,455
எச்சரிக்கையாக இருங்கள்.
அவள் இங்கே நிச்சயம் வருவாள்.

489
00:32:33,474 --> 00:32:35,810
அவருக்கு எப்படி
கட்டளை மையத்திற்கு சாவி கிடைத்தது?

490
00:32:35,894 --> 00:32:36,895
ஆயுதத்தைப் பற்றி பேசவே வேண்டாம்.

491
00:32:39,480 --> 00:32:41,024
இது நம்முடையது.

492
00:32:56,122 --> 00:32:58,750
ஃபிராங்க், நாம் அவனை தவறவிட்டுட்டோம்.
ஹாவ்லாக் தப்பித்துவிட்டான்.

493
00:32:58,833 --> 00:32:59,834
என்னதான் நடந்துச்சு?

494
00:32:59,918 --> 00:33:01,878
ஒரு காவலரை தாக்கி, தியாகோவை அடைந்தான்.

495
00:33:01,961 --> 00:33:04,005
அவர்கள் கவனச்சிதறலை ஏற்படுத்தினார்கள்,
அவன் தப்பிவிட்டான்.

496
00:33:04,714 --> 00:33:07,717
தேடுதல் குழுவை இரண்டாகப் பிரித்து,
பாதியை அவனைத் தேடி அனுப்பட்டுமா?

497
00:33:09,385 --> 00:33:12,305
வேண்டாம். இல்ல, நாம் ஸ்கோஃபீல்டைத் தேடுவோம்.
அவள்தான் முதன்மையான இலக்கு.

498
00:33:12,388 --> 00:33:13,598
ஹேய், ஃபிராங்க். இணைப்பில் இருக்கிறீர்களா?

499
00:33:13,681 --> 00:33:15,099
எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு, ஜேன்.

500
00:33:18,436 --> 00:33:19,938
அந்த பார்வைக்கான அர்த்தம் எனக்கு தெரியும்.
எனக்கு அது பிடிக்காது.

501
00:33:20,021 --> 00:33:21,606
ரயிலில் சாட்சிகள் இருந்தனர், இல்லையா?

502
00:33:21,689 --> 00:33:23,107
- ஆமா.
- மருந்தகத்தில் இருந்தது போலவே,

503
00:33:23,191 --> 00:33:25,193
- அங்கும் இருந்திருக்கின்றனர்.
- அது விசித்திரமா இருக்கு, ஏன்னா…

504
00:33:25,276 --> 00:33:28,738
இவள் ஸ்கோஃபீல்ட். அவள் சிஐஏ உளவாளி, ஹட்ச்.
ஹாவ்லாக்கிற்கு பயிற்சி கொடுத்ததே அவள்தான்.

505
00:33:28,821 --> 00:33:30,907
அவளுக்கு கேமராவைத் தவிர்க்கத்
தெரியாது என்று நினைக்கிறாயா?

506
00:33:30,990 --> 00:33:32,325
அப்படின்னா, அவள் சொதப்பியிருக்கலாம்.

507
00:33:32,408 --> 00:33:35,286
சரி, ஒரு முறை சொதப்பியிருக்கலாம்,
ஆனால், இப்போது ரயிலில் கலவரம் செய்கிறாளே?

508
00:33:35,954 --> 00:33:37,121
கேள், ஜேன்.

509
00:33:37,205 --> 00:33:40,708
ஷில்லர்'ஸ் மருந்தகத்தில ஸ்கோஃபீல்டை பார்த்ததாக
வந்த அழைப்பை 911-ஐ எடுக்கச் சொல்லு.

510
00:33:40,792 --> 00:33:42,835
- அப்போ ஹாவ்லாக்?
- முதலில், அந்த அழைப்பை எடு.

511
00:34:04,274 --> 00:34:07,777
அவளைப் பார்த்துவிட்டோம்.
ஆற்றின் தெற்குக்கரை. தனியாக இருக்கிறாள்.

512
00:34:09,112 --> 00:34:10,988
எல்லா குழுக்களும், தங்கள் நிலையில் இருங்கள்.

513
00:36:08,565 --> 00:36:09,941
ஆட்டம் முடிந்தது, சிட்.

514
00:36:11,901 --> 00:36:13,111
அது எங்கே?

515
00:36:21,744 --> 00:36:23,538
உன் அப்பாவைப் போலவே
உனக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு.

516
00:36:24,414 --> 00:36:25,665
ஆமாம்.

517
00:36:25,748 --> 00:36:27,959
என் அப்பாவிடமிருந்து
நான் நிறைய பெற்றிருக்கிறேன்.

518
00:36:28,668 --> 00:36:30,169
நல்லதும் கெட்டதும்.

519
00:36:31,754 --> 00:36:34,841
எது நல்லது, எது கெட்டது என்று தீர்மானிக்க
உங்களுக்குத் தகுதி இல்லை.

520
00:36:34,924 --> 00:36:36,718
ஓ, நீ சொல்வது தவறு.

521
00:36:36,801 --> 00:36:42,223
அதைத் தீர்மானிக்க நிச்சயமாக
நான் தகுதியானவள்தான்.

522
00:36:43,850 --> 00:36:49,272
நான் பல ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம்
பார்த்தேன் என்று உனக்கு எதுவும் தெரியாது.

523
00:36:50,440 --> 00:36:52,859
அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

524
00:36:52,942 --> 00:36:54,861
நண்பர்கள் வஞ்சிக்கப்பட்டனர்.

525
00:36:55,528 --> 00:36:57,405
குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

526
00:36:58,031 --> 00:37:00,700
எல்லாமே இந்தக் காரணத்திற்காகவோ,
அல்லது அந்தக் கொடிக்காகவோ இருக்கும்.

527
00:37:01,826 --> 00:37:04,120
இந்த உலகின் கடினமான சூழ்நிலைகளில்
நாம் உழலும்போது,

528
00:37:04,204 --> 00:37:08,124
அது நம்மை மெல்ல மெல்ல அழித்துவிடும்
அல்லது நம்மைக் கூர்மைப்படுத்தும்.

529
00:37:09,209 --> 00:37:11,502
வெளியே தீய சக்தி உள்ளது, சிட்னி.

530
00:37:12,253 --> 00:37:16,382
இது ஏதோவொரு வரையறுக்க முடியாத,
இருப்பு நிலை நெறிமுறை அல்ல.

531
00:37:17,342 --> 00:37:20,595
உண்மையான தீய சக்தி. நிஜமான தீய சக்தி.

532
00:37:21,137 --> 00:37:26,267
அதை எதிர்க்கும் மன உறுதி கொண்டவர்களின்
கைகளில்தான் அது இருக்கிறது.

533
00:37:27,560 --> 00:37:31,564
உன் அப்பாவுக்கு தொலைநோக்கு பார்வை இருந்தது,
ஆனால் மன உறுதி இல்லை.

534
00:37:32,649 --> 00:37:37,153
தான் தொடங்கியதை முடிக்க,
அவருக்கு வலிமை இல்லை.

535
00:37:39,322 --> 00:37:40,698
அதனால்தான் நீங்கள் அவரைக் கொன்றீர்கள்.

536
00:37:41,282 --> 00:37:45,537
நான் சொன்னது போல, நம்மில் சிலர்
மற்றவர்களைவிட வலிமையானவர்கள்.

537
00:37:48,998 --> 00:37:51,000
சரி சொல், ஆர்க்கைவ் எங்கே?

538
00:37:54,546 --> 00:37:56,881
ஃபிராங்க், உங்களுக்காக 911-க்கு
வந்த அழைப்பை எடுத்திருக்கிறோம்.

539
00:37:57,632 --> 00:37:59,217
911, உங்கள் அவசரத் தேவை என்ன?

540
00:37:59,300 --> 00:38:03,304
ஹாய். சிட்னி ஸ்கோஃபீல்ட் என்ற பெண்ணைத்
தேடுகிறீர்கள் என்று செய்திகளில் பார்த்தேன்.

541
00:38:03,388 --> 00:38:06,391
இப்போதுதான்… ஷில்லர்'ஸ் மருந்தகத்தில்
நான் அவளைப் பார்த்ததாக நினைக்கிறேன்.

542
00:38:06,474 --> 00:38:09,018
- அது ஸ்கோஃபீல்ட்தான்.
- அவளே தன்னைப் பற்றிய தகவல் கொடுத்திருக்கிறாள்.

543
00:38:09,102 --> 00:38:10,228
அவள் ஏன் அப்படிச் செய்யணும்?

544
00:38:11,604 --> 00:38:13,273
உனக்கு விவியன் பைக் நினைவிருக்கா?

545
00:38:13,356 --> 00:38:14,524
ஆமாம். நாம் பிடித்த அந்த ஏமாற்றுக்காரி.

546
00:38:14,607 --> 00:38:16,985
அவளும் தன்னைப் பற்றித் தானே
தகவல் கொடுத்தாள். அவள் பிடிபட விரும்பினாள்.

547
00:38:17,068 --> 00:38:18,278
ஸ்கோஃபீல்டும் அதையே செய்கிறாளா?

548
00:38:18,361 --> 00:38:21,656
இல்லை. ஸ்கோஃபீல்ட் அதைவிட ரொம்ப
புத்திசாலி. அவள் பிடிபட விரும்ப மாட்டாள்.

549
00:38:21,739 --> 00:38:23,616
அவள் பின்தொடரப்பட விரும்புகிறாள்.

550
00:38:23,700 --> 00:38:25,910
இது எப்போது நடக்கும்
என்பது மட்டும்தான் கேள்வி, சிட்னி.

551
00:38:25,994 --> 00:38:29,622
எப்படியும் நான் உன்னை கண்டுபிடிப்பேன்
என்று உனக்கே தெரியும்.

552
00:38:30,957 --> 00:38:33,251
நீங்கள் என்னைக் கண்டுபிடிப்பீர்கள்
என்று எனக்குத் தெரியும்.

553
00:38:33,334 --> 00:38:34,961
உண்மையில்…

554
00:38:35,962 --> 00:38:37,630
நாங்கள் அதை உறுதிசெய்தோம்.

555
00:38:51,644 --> 00:38:52,979
ஹே, ஜாக்.

556
00:38:54,647 --> 00:38:55,899
நீங்கள் இங்கு வந்ததில் சந்தோஷம்.

557
00:39:54,999 --> 00:39:57,001
தமிழாக்கம்
மேனகா மணிகண்டன்

