1
00:01:53,968 --> 00:01:55,970
ஐ28.

2
00:01:58,306 --> 00:02:00,767
- பி6.
- பி6.

3
00:02:02,810 --> 00:02:03,811
ஜி19.

4
00:02:32,173 --> 00:02:33,007
கால்?

5
00:02:48,690 --> 00:02:49,816
ஃபேர்பேங்க்ஸுக்கு வரவேற்கிறோம்

6
00:02:53,903 --> 00:02:55,071
மத்திய புலனாய்வு நிறுவனம்

7
00:04:07,936 --> 00:04:11,064
சரி, முதலில் இருந்து தொடங்குவோம்.
நமக்கு சரியாக என்ன தெரியும்?

8
00:04:11,147 --> 00:04:15,151
ஆர்க்கைவ் 6-ஐ திருட ஹாவ்லாக் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு
ஹேக்கரை வேலைக்கு அமர்த்தினான் என்று தெரியும்.

9
00:04:15,235 --> 00:04:18,530
ஹேக்கர் ஆர்க்கைவை ஒரு தூதுவனிடம் கொடுத்துவிட்டு
பின்னர் காணாமல் போனான் என்று தெரியும்

10
00:04:18,612 --> 00:04:20,240
வின்சென்ட் தியாகோ என்றும் அழைக்கப்படுவான்.

11
00:04:20,323 --> 00:04:21,741
போலி பெயர். போலி ஆவணங்கள். எல்லாமே போலி.

12
00:04:21,824 --> 00:04:24,327
தூதுவனைப் பற்றி நமக்குத் தெரிந்த
ஒரே விஷயம், அவன் விபத்துக்கு

13
00:04:24,410 --> 00:04:26,120
24 மணிநேரத்திற்கு முன்
இங்கு வந்தான் என்பதுதான்.

14
00:04:26,204 --> 00:04:27,872
அதாவது, அவனுக்கு விபத்து பற்றி
முன்பே தெரிந்திருக்கிறது,

15
00:04:27,956 --> 00:04:30,208
ஹாவ்லாக்கைச் சந்தித்து,
ஆர்க்கைவை ஒப்படைக்கக் காத்திருந்தான்.

16
00:04:30,291 --> 00:04:32,502
ஆனால் ஹாவ்லாக் இங்கே விபத்துக்குள்ளாவான்
என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்?

17
00:04:33,545 --> 00:04:36,673
அவர்கள் இருவரும் விமானத்தை அந்த இடத்தில்
வேண்டுமென்றே வீழ்த்த திட்டமிட்டிருந்தால் மட்டுமே.

18
00:04:36,756 --> 00:04:39,592
ஏன்? இங்கே என்ன இருக்கிறது?
அலாஸ்காவில் என்ன இருக்கிறது?

19
00:04:39,676 --> 00:04:42,845
கரடிகள், டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சி,
பறவைகளைவிட பெரிய கொசுக்கள்.

20
00:04:45,390 --> 00:04:46,683
அது என்னது?

21
00:04:46,766 --> 00:04:50,270
டானியின் குடும்பத்திற்கு நிதி உதவி திரட்ட
மெக்காவில் ஒரு உற்சாக நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

22
00:04:50,353 --> 00:04:52,814
அங்கே பீரும் உணவும் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் இருந்தால் நடனமும் கிடைக்கும்.

23
00:04:53,606 --> 00:04:56,150
இறுதிச்சடங்கில் பீரும் நடனமுமா?
அதுவும் ஒரு மனித வேட்டை நடக்கும்போதா?

24
00:04:56,234 --> 00:04:59,571
அது இறுதிச்சடங்கு இல்லை. அதை பாட்லாட்ச்
என்று எங்கள் பழங்குடிகள் சொல்வார்கள்.

25
00:04:59,654 --> 00:05:02,323
எங்கள் ஆள் ஒருவர் இறக்கும்போது,
முழு சமூகமும் ஒன்று கூடி,

26
00:05:02,407 --> 00:05:04,534
குடும்பத்தின் சுமையைக் குறைக்க
தங்களால் முடிந்த உதவியைச் செய்வார்கள்.

27
00:05:05,243 --> 00:05:08,496
ஃபிராங்க், இரண்டாம் லைனில் ஒரு படைவீரர்
பேசுகிறார். அவசரம் என்கிறார்.

28
00:05:08,580 --> 00:05:09,581
ரெம்னிக்.

29
00:05:11,040 --> 00:05:12,292
ஹே, ஃபிராங்க்.

30
00:05:13,626 --> 00:05:15,044
உன் குரலை மறுபடியும் கேட்பதில் சந்தோஷம்.

31
00:05:16,421 --> 00:05:17,505
செய்கிறேன்.

32
00:05:17,589 --> 00:05:20,592
அலாஸ்கா டண்ட்ராவில் இந்நேரம் உன் சடலம்
கிடைத்திருக்கும் என நினைத்தேனே.

33
00:05:20,675 --> 00:05:23,052
சில சமயம் நாம் விரும்புவது
கிடைக்காமல் இருப்பது நல்லது.

34
00:05:23,136 --> 00:05:25,513
அது அதிர்ஷ்டம்தான். எப்படி இருக்கிறாய்?

35
00:05:25,597 --> 00:05:27,307
வலியோடு சோர்வாக இருக்கிறேன், நீ?

36
00:05:28,600 --> 00:05:30,059
நன்றாக இருக்கிறேன்.

37
00:05:30,143 --> 00:05:33,479
விமான விபத்தையும் தேடுதலையும்
தாண்டி வந்திருக்கிறேன்.

38
00:05:33,563 --> 00:05:35,273
அலாஸ்கா உன்னை இன்னும் விடவில்லை.

39
00:05:35,356 --> 00:05:37,150
இன்ஸ்பெக்டர் ப்ரிக்ஸ், அவள் எங்கே?

40
00:05:37,817 --> 00:05:39,944
இப்போது, ஒரு கால் வந்திருக்கிறது.
லைன் இரண்டில் பேசுகிறான்.

41
00:05:40,028 --> 00:05:41,404
சரி.

42
00:05:41,487 --> 00:05:43,948
உன்னைப் பற்றி இன்னும் அதிகமாக
தெரிந்துகொண்டிருக்கிறேன், ஃபிராங்க்.

43
00:05:44,032 --> 00:05:48,328
சிகாகோவில் நீ இருந்த காலம் மற்றும்
உன் வீட்டிற்குத் திரும்பியது பற்றி.

44
00:05:50,997 --> 00:05:52,749
நீ உன் மகளை இழந்தது எனக்குத் தெரியாது.

45
00:05:53,583 --> 00:05:56,377
வருந்துகிறேன், ஃபிராங்க்.
என்னால் கற்பனை கூட செய்ய முடியலை.

46
00:05:56,461 --> 00:05:58,254
என் மகளைப் பற்றி பேசத்தான் அழைத்தாயா?

47
00:05:58,338 --> 00:05:59,923
இல்லை. உன்னுடன் பேசுவதற்காக அழைத்தேன்,

48
00:06:00,006 --> 00:06:03,551
ஏனென்றால், நாம் செல்லும் பாதையில் ஒருவரை ஒருவர்
புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

49
00:06:04,219 --> 00:06:05,845
அதைச் செய்ய, நான் உன்னிடம்
தனியாகப் பேச வேண்டும்.

50
00:06:05,929 --> 00:06:07,430
தயவுசெய்து, ஸ்பீக்கரில் இருந்து எடுக்கிறாயா?

51
00:06:07,513 --> 00:06:09,933
நீ சரணடைந்தால், நீ விரும்பியபடி நாம் பேசலாம்.

52
00:06:10,016 --> 00:06:12,435
சீரியஸாக சொல்கிறேன், ஃபிராங்க்.
இது முக்கியமான விஷயம்.

53
00:06:12,518 --> 00:06:14,270
ஃபோனை கையில் எடுத்து பேசு.

54
00:06:16,272 --> 00:06:18,358
பிராட்ஃபோர்ட் உனது இறுதி பாதுகாப்பு
அமைப்பைப் பற்றி பயப்படுகிறாள்.

55
00:06:18,942 --> 00:06:20,151
தாக்குதலை நிறுத்த விரும்புகிறாள்.

56
00:06:20,235 --> 00:06:21,903
அவள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறாள்.

57
00:06:23,154 --> 00:06:24,572
நான் உன்னை நேசித்தேன், சிட்னி.

58
00:06:24,656 --> 00:06:27,742
ஆனாலும், இதோ, நீ என்னை வேட்டையாடுகிறாய்.

59
00:06:28,493 --> 00:06:29,869
அதனால்தான் நான் ஃபிராங்கிடம் பேச வேண்டும்.

60
00:06:29,953 --> 00:06:32,372
ஃபிராங்க், ப்ளீஸ் ஃபோனை எடுத்து பேசு.

61
00:06:32,455 --> 00:06:33,998
எல்லோர் முன்பாகவும் நான் இதைச் செய்ய விரும்பலை.

62
00:06:34,082 --> 00:06:36,543
- எதைச் செய்ய?
- நம் ரகசியத்தைப் பற்றி பேச.

63
00:06:42,882 --> 00:06:44,050
நன்றி, ஃபிராங்க்.

64
00:06:44,759 --> 00:06:46,386
நான் என் வார்த்தையை காப்பாற்றுபவன் என்பதை

65
00:06:46,469 --> 00:06:47,762
உனக்குக் காட்டுவது எனக்கு முக்கியம்.

66
00:06:48,596 --> 00:06:49,973
உன் மனைவியை நான் திரும்பிக் கொடுத்துவிட்டேன்.

67
00:06:50,932 --> 00:06:53,810
உன் வீட்டில் நீ மறைத்து வைத்திருந்த
ஆயுதம் பற்றி நான் வெளியே சொல்லவில்லை.

68
00:06:53,893 --> 00:06:59,858
அதற்கு பதில், உன்னிடம் இருந்து நான் எதிர்பார்ப்பது…
…ஒரு கேள்விக்கான பதில் மட்டும்தான்.

69
00:07:01,693 --> 00:07:02,902
ஒரே ஒரு கேள்வி.

70
00:07:03,736 --> 00:07:04,737
கேள்வி என்ன?

71
00:07:04,821 --> 00:07:07,824
நேர்மையாக பதில் சொல்வதாக
நீ வாக்குறுதி கொடுக்கணும், ஃபிராங்க்.

72
00:07:08,491 --> 00:07:10,702
- சொல்வாயா?
- கேள்வி என்ன?

73
00:07:10,785 --> 00:07:12,495
அது எளிமையானது, ஃபிராங்க்.

74
00:07:14,122 --> 00:07:15,790
நான் உன்னை நம்பலாமா?

75
00:07:16,624 --> 00:07:19,085
நேரம் எடுத்துக்கொள். நேர்மையாக பதில் சொல்.

76
00:07:19,168 --> 00:07:20,712
நான் உன்னை நம்பலாமா?

77
00:07:21,880 --> 00:07:23,006
நம்பலாமா கூடாதா?

78
00:07:24,382 --> 00:07:25,383
நம்பலாம்.

79
00:07:26,092 --> 00:07:27,510
நன்றி, ஃபிராங்க்.

80
00:07:32,390 --> 00:07:34,809
கண்டுபிடித்துவிட்டேன். அது உள்ளூர்தான்.
அது ஒரு நிலையான எண்.

81
00:07:34,893 --> 00:07:37,061
ஃபோன் கம்பெனியைத் தொடர்புகொண்டு,
அந்த எண்ணின் சொந்தக்காரர் யார் என்று பாரு.

82
00:07:37,145 --> 00:07:38,146
இப்போதே செய், சீக்கிரம்.

83
00:07:56,289 --> 00:07:58,166
- ஃபிராங்க்!
- என்ன?

84
00:07:59,292 --> 00:08:00,293
சாரா.

85
00:08:01,377 --> 00:08:02,587
- சாரா?
- ஃபிராங்க்?

86
00:08:02,670 --> 00:08:04,839
அவர்களைக் காணோம். அவர்கள்…
அவர்கள் கேபினில் இல்லை.

87
00:08:04,923 --> 00:08:06,299
லூக்கையும் கீராவையும் காணோம்.

88
00:08:06,382 --> 00:08:07,508
ஓ, ஓ, மெதுவாக சொல். என்ன ஆச்சு?

89
00:08:07,592 --> 00:08:09,761
அந்த படைவீரர்… இறந்துவிட்டார்.

90
00:08:09,844 --> 00:08:10,803
நீ எங்கே இருக்கிறாய்?

91
00:08:10,887 --> 00:08:13,014
நான் மலையடிவாரத்தில் உள்ள
பெட்ரோல் பங்கில் இருக்கிறேன்.

92
00:08:13,097 --> 00:08:14,974
சரி. அங்கேயே இரு.
நானே நேராக அங்கு வருகிறேன்.

93
00:08:15,058 --> 00:08:16,434
- ஃபிராங்க்.
- இரு. என்ன?

94
00:08:16,517 --> 00:08:18,394
இப்போதுதான் ஒரு வேட்டைக்காரன் கீரா மோரைப்
பார்த்தான், அவள் உயிரோடு இருக்கிறாள்.

95
00:08:18,478 --> 00:08:20,563
- லூக் என்ன ஆனான்?
- அவன் ஒரு கைதியுடன் இருப்பதாகச் சொல்கிறாள்.

96
00:08:20,647 --> 00:08:23,775
நாங்கள் லூக்கைக் கண்டுபிடிப்போம். உன்னை
நேசிக்கிறேன், ஹட்ச்சிடம் ஃபோனைத் தருகிறேன்.

97
00:08:24,359 --> 00:08:26,110
படைவீரர்களை வரச் சொல், ஆம்பர் எச்சரிக்கை விடு.

98
00:08:26,194 --> 00:08:27,654
ஏர் கேரிடம் எனக்கு அவர்களின்
ஹெலிகாப்டர் வேண்டும் என்று சொல்லு.

99
00:08:27,737 --> 00:08:28,905
ஹாவ்லாக் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

100
00:08:28,988 --> 00:08:29,989
போங்க.

101
00:08:39,040 --> 00:08:41,125
- அவள் எங்கே?
- நம் கிராம சுகாதார உதவியாளருடன் இருக்கிறாள்.

102
00:08:41,209 --> 00:08:42,961
நினைவிழந்திருந்தாள் ஆனால்
இப்போது விழித்திருக்கிறாள்.

103
00:08:43,044 --> 00:08:44,462
- நீதான் அவளைப் பார்த்தாயா?
- ஆமாம், சார்.

104
00:08:44,546 --> 00:08:46,881
நான்கு மைல்கள் அப்பால்,
பாதையில் அவளைப் பார்த்தேன்.

105
00:08:51,052 --> 00:08:52,929
லோர்னா, சூசி.

106
00:08:54,305 --> 00:08:55,348
நீ நலமா?

107
00:08:56,307 --> 00:08:58,393
இங்கே வா. இங்கே வா.

108
00:08:58,476 --> 00:08:59,602
என்னை மன்னிச்சிடுங்க.

109
00:09:00,103 --> 00:09:01,855
வருந்தாதே, சரியா?

110
00:09:03,231 --> 00:09:05,608
என்னைப் பாரு. நீ வருந்த வேண்டியது இல்லை.

111
00:09:05,692 --> 00:09:07,068
சரியா? நீ பாதுகாப்பாக இருக்கிறாய்.

112
00:09:08,945 --> 00:09:10,613
உனக்கு உதவி ஏற்பாடு செய்கிறோம்.

113
00:09:12,407 --> 00:09:14,576
சரியா? அதுவரை,

114
00:09:15,368 --> 00:09:18,830
நீ சில புகைப்படங்களைப் பார்த்து லூக்குடன்
இருக்கும் ஆளை அடையாளம் காட்ட வேண்டும்.

115
00:09:31,050 --> 00:09:33,052
- அது இவனா?
- இல்லை.

116
00:09:33,136 --> 00:09:34,637
நீ என்னைச் சுட மாட்டாய்.

117
00:09:35,430 --> 00:09:36,931
ஏற்கனவே உனக்கு வாய்ப்பு கிடைத்தது,
ஆனால் நீ சுடவில்லை.

118
00:09:37,557 --> 00:09:39,309
- இவர்தான்.
- உறுதியாகவா?

119
00:09:39,392 --> 00:09:41,060
- கண்டிப்பாக.
- அப்படியா?

120
00:09:41,895 --> 00:09:43,938
சரி, பரவாயில்லை. உனக்கு ஒன்றுமில்லை. வா.

121
00:09:44,022 --> 00:09:45,982
நான் சுடுவேன். சத்தியமாக சுடுவேன்.

122
00:09:46,858 --> 00:09:50,987
என்னைக் கொன்றால், நீ கண்ணை மூடும்
போதெல்லாம் என் முகம்தான் உனக்குத் தெரியும்.

123
00:09:55,408 --> 00:09:58,036
- நெடுஞ்சாலைக்கு எவ்வளவு தூரம் போகணும்?
- சாலையில் போனால் எட்டு மைல்.

124
00:09:58,119 --> 00:09:59,287
தண்டவாளத்தில் இரண்டு மைல்கள்.

125
00:09:59,370 --> 00:10:00,788
என் பனிச் சறுக்கு இயந்திரத்தைக் கொண்டு வருகிறேன்.

126
00:10:05,919 --> 00:10:09,255
சாரா, நீ இங்கே என்ன செய்கிறாய்?
நான் படைவீரர்களை கேபினுக்கு அனுப்பினேன்.

127
00:10:09,339 --> 00:10:10,673
- லூக் இங்கே இருக்கிறானா?
- இல்லை.

128
00:10:10,757 --> 00:10:12,800
அவன் ஒரு கைதியோடு இருப்பதாக ஹட்ச் சொன்னான்.
எங்கே என்று உனக்குத் தெரியுமா?

129
00:10:12,884 --> 00:10:14,844
இல்லை. ஆனால் அவன் யார்,
எங்கே இருந்தான் என்று தெரியும்.

130
00:10:14,928 --> 00:10:16,721
நெடுஞ்சாலையில் ஒரு விபத்து நடந்தது
என்று கீரா சொன்னாள்.

131
00:10:16,804 --> 00:10:17,889
என்ன… நீ அவளை இங்கே அழைத்து வந்தாயா?

132
00:10:17,972 --> 00:10:19,265
அவள்தான் வற்புறுத்தினாள்.

133
00:10:19,349 --> 00:10:20,725
சரி, சரி, எனக்கு உன் சாவி வேண்டும்.

134
00:10:20,808 --> 00:10:22,560
கடவுளே, நானும் உன்னோடு வருகிறேன்.

135
00:10:22,644 --> 00:10:24,062
நானும் உங்களோடு வரலாமா?

136
00:10:24,145 --> 00:10:25,438
- வேண்டாம்.
- வேண்டாம். நீ இங்கேயே இரு.

137
00:10:25,522 --> 00:10:26,689
நான் உதவ விரும்புகிறேன்.

138
00:10:27,565 --> 00:10:29,692
கேளு, கீரா மோர் வீட்டிற்குள் இருக்கிறாள்.

139
00:10:29,776 --> 00:10:31,194
சரி, அவள் நரக வேதனை அனுபவித்திருக்கிறாள்.

140
00:10:31,277 --> 00:10:32,987
அவளை பரிசோதனை செய்.
அவள் அம்மாவுக்குத் தகவல் சொல்.

141
00:10:33,071 --> 00:10:34,489
சரி.

142
00:10:35,031 --> 00:10:36,074
என் வண்டியின் கதி?

143
00:10:36,157 --> 00:10:39,202
ஒரு வழியாக, உன் வண்டி ஒரு உண்மையான
வண்டியைப் போல ஓட்டப்படப் போகிறது.

144
00:11:06,980 --> 00:11:08,064
ஹலோ?

145
00:11:08,773 --> 00:11:09,899
யாராவது இருக்கிறீர்களா?

146
00:11:18,950 --> 00:11:20,493
என்னிடம் சாவியைக் கொடு.

147
00:11:26,791 --> 00:11:28,376
கேடுகெட்டவனே.

148
00:11:31,087 --> 00:11:32,130
நன்றி.

149
00:11:41,014 --> 00:11:42,307
எனக்கு இதை ஓட்டத் தெரியாது.

150
00:11:42,390 --> 00:11:44,309
சரி, செல்லம், அதை எப்படி ஓட்டுவது
என்று கண்டுபிடி.

151
00:11:44,976 --> 00:11:46,477
நமக்கு ஒரு வேலை இருக்கிறது.

152
00:11:56,779 --> 00:11:58,448
சிஐஏ தலைமையகம்
லாங்லி, வெர்ஜீனியா

153
00:11:58,531 --> 00:12:00,283
- எவ்வளவு காலம் முன் நடந்தது?
- இப்போது நேரலையில் இருக்கிறான்.

154
00:12:00,366 --> 00:12:01,659
அவன் இருக்கும் இடம் நமக்குத் தெரியுமா?

155
00:12:03,828 --> 00:12:05,288
அடுத்த சரிபார்ப்பு: 24:27:36

156
00:12:05,371 --> 00:12:07,498
அவன்தான், மேடம். அது ஹாவ்லாக்தான்.

157
00:12:07,582 --> 00:12:10,168
அவன் ஆன்லைனில் வந்தபோது, ஆர்க்கைவுடன்
அவன் இணைத்த இறுதி பாதுகாப்பு சுவிட்சை

158
00:12:10,251 --> 00:12:11,252
செயலிழக்க செய்ய முயற்சித்தோம்.

159
00:12:11,336 --> 00:12:12,629
- அவன்தான் டைப் செய்கிறானா?
- ஆமாம்.

160
00:12:12,712 --> 00:12:14,839
ஒரு நிமிடத்துக்கும் மேலாக
டைப் செய்கிறான், அப்படியென்றால்,

161
00:12:14,923 --> 00:12:17,467
சுவிட்சை மீட்டமைக்க பல்முனை கடவுச்சொல்லைப்
பயன்படுத்துகிறான் என்று அர்த்தம்.

162
00:12:17,550 --> 00:12:19,302
- இன்னும் உயிரோடு இருக்கிறான்.
- இன்னும் அச்சுறுத்தலாக.

163
00:12:19,385 --> 00:12:20,929
அவன் எங்கிருக்கிறான் என்று
இதன் மூலம் கண்டுபிடிக்க முடியுமா?

164
00:12:21,012 --> 00:12:22,513
அவன் சிக்னல்களை உலகெங்கும் பரவவிடுகிறான்.

165
00:12:22,597 --> 00:12:25,475
அவனுடைய முதன்மை என்கிரிப்ஷன் அடுக்கை கூட
நம்மால் முறியடிக்க முடியவில்லை.

166
00:12:26,184 --> 00:12:28,937
ஜூனி, நீ இந்த சுவிட்சை செயலிழக்கச்
செய்ய வேண்டும் என விரும்புகிறேன்,

167
00:12:29,020 --> 00:12:32,732
மேலும் மாற்று வழி கண்டறிய உனக்கு ஏஜென்சியின்
முழு வளங்களும் உள்ளன என்பதை தெரிந்துகொள்.

168
00:12:32,815 --> 00:12:33,816
உன்னால் அதைச் செய்ய முடியுமா?

169
00:12:33,900 --> 00:12:35,693
- முடியும், மேடம்.
- நல்லது. உன் வேலையைச் செய்.

170
00:12:35,777 --> 00:12:37,737
வேலையை ஆரம்பி. இப்போதே செய்.

171
00:12:42,909 --> 00:12:44,953
ஃபோன் கம்பெனியிலிருந்து தகவல் வந்தது.

172
00:12:45,036 --> 00:12:47,497
நம் பென் ரெஜிஸ்டரில் பதிவு செய்த எண்,
பார்க்ஸ் நெடுஞ்சாலையில் உள்ள

173
00:12:47,580 --> 00:12:50,625
க்ளோண்டைக் லாட்ஜ், அறை எண் 130-ல் இருந்து
வந்தது என்று அவர்கள் உறுதிசெய்தார்கள்.

174
00:12:50,708 --> 00:12:52,210
அது ஹாவ்லாக்தான். அவன் அங்கே இருக்கிறான்.

175
00:12:52,293 --> 00:12:53,962
எவ்வளவு சீக்கிரம் உன்னால் வாரண்ட் வாங்க முடியும்?

176
00:13:01,761 --> 00:13:02,845
ஃபேர்பேங்க்ஸ் காவல்துறை.

177
00:13:03,972 --> 00:13:04,973
ஒன்றுமில்லை.

178
00:13:06,474 --> 00:13:07,475
ஒன்றுமில்லை.

179
00:13:20,363 --> 00:13:21,739
ஒன்றும் பிரச்சினை இல்லை.

180
00:13:28,371 --> 00:13:29,622
அவன் இங்கே இருந்திருக்கிறான்.

181
00:13:30,415 --> 00:13:31,624
எல்லாவற்றையும் பிரித்துத் தேடு.

182
00:14:01,487 --> 00:14:04,616
ஃபிராங்க், நான் ஆராய்ந்து பார்த்தேன்.
உன் மகனுடன் இருக்கும் இவன் பிரச்சினையானவன்.

183
00:14:04,699 --> 00:14:07,952
ரொமேரோ மருத்துவ ரீதியாக மிகுந்த சந்தேக
குணம் உள்ளவன், குற்றவியல் பைத்தியமும் கூட.

184
00:14:08,036 --> 00:14:11,080
கடற்படை அகாடமியில்
முதல் மதிப்பெண்ணுடன் பட்டம் பெற்றான்.

185
00:14:11,164 --> 00:14:13,291
ரோபோடிக்ஸ் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியலில்
பட்டம் பெற்றான்.

186
00:14:13,374 --> 00:14:14,918
டார்பாவில் முதுகலைப் பணியில் வேலை செய்து,

187
00:14:15,001 --> 00:14:17,462
பலவகையான கண்காணிப்பு கருவிகளை உருவாக்கினான்.

188
00:14:18,046 --> 00:14:19,297
பிறகு, எங்கே தவறு நடந்தது?

189
00:14:19,380 --> 00:14:20,381
நீதிமன்ற பதிவுகளின்படி,

190
00:14:20,465 --> 00:14:23,301
டார்பாவில் உள்ள தன் மேலதிகாரிகள் தன்னை
உளவு பார்த்ததாக ரொமேரோ நம்பினான்.

191
00:14:23,384 --> 00:14:25,011
அவனுடைய கணினி மற்றும் ஃபோன் மூலம்.

192
00:14:25,094 --> 00:14:27,096
அவனுக்கு ஒருவகையான மன உளைச்சல் ஏற்பட்டது.

193
00:14:27,180 --> 00:14:29,724
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவன்
ஆறு அரசு அதிகாரிகளைக் கொன்றான்.

194
00:14:29,807 --> 00:14:32,560
அரசாங்க உளவு இடங்கள் என்று அவன் நம்பிய
கட்டிடங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்தான்.

195
00:14:32,644 --> 00:14:35,396
தன் அண்டை வீட்டுக்காரனைக் கொன்று,
மூன்று பற்களைப் பிடுங்கினான்,

196
00:14:35,480 --> 00:14:38,274
உளவு கருவிகளைத் தேடியபோது
தன் நாயை வெட்டிக் கொன்றான்.

197
00:14:38,358 --> 00:14:40,109
- ஐயோ.
- ரொமேரோ ஒரு பழைய காதலியை

198
00:14:40,193 --> 00:14:42,654
பழிவாங்கப் போவதாக பேசியதை கீரா
ஒட்டுக்கேட்டாள். இது ஏதாவது நினைவிருக்கா?

199
00:14:42,737 --> 00:14:44,030
இங்கே பெண்ணைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

200
00:14:44,113 --> 00:14:47,367
அவனது வாழ்க்கையை ஆராய். முன்னாள் காதலியோ, உடன்
வேலை செய்த பெண் அதிகாரி இருக்கிறாளா என பார்.

201
00:14:47,450 --> 00:14:48,701
அவன் எங்கே போகிறான் என எனக்கு தெரியணும்.

202
00:14:48,785 --> 00:14:52,705
அதோடு, ஹாவ்லாக் இங்கிருக்கும் உள்ளூர் ஹோட்டலில்
இருந்துதான் பேசியிருக்கிறான், ஃபிராங்க்.

203
00:14:52,789 --> 00:14:54,123
அதற்கு தூதுவன் பணம் செலுத்தியிருக்கிறான்.

204
00:14:54,749 --> 00:14:57,335
சரி, இப்போது வேண்டாம். ரொமேரோவைப் பின்பற்று.
அவன் எங்கு போகிறான் என்று எனக்குத் தெரியணும்.

205
00:15:01,965 --> 00:15:04,384
இருவரும் பாதுகாப்பாக
இருப்பார்கள் என்று நினைத்தேன், சரியா? நான்… ஆனால்…

206
00:15:05,051 --> 00:15:07,512
விசாரணையில் நடக்கும் எல்லாம், நீயும் அதில்…

207
00:15:10,390 --> 00:15:11,641
ஏதாவது சொல்.

208
00:15:12,350 --> 00:15:13,393
நான் என்ன சொல்லணும் என நினைக்கிறாய்?

209
00:15:13,476 --> 00:15:16,855
எதுவும் சரியாக இல்லாததால்
சொல்வதற்கு எதுவும் இல்லை.

210
00:15:18,815 --> 00:15:21,401
ஐயோ, எனக்கு பயமாக இருக்கு, தாங்க முடியலை,

211
00:15:21,484 --> 00:15:24,153
உன் கண்காணிப்பில் இது நடந்தது என்பதை
என்னால் நம்ப முடியலை.

212
00:15:24,237 --> 00:15:26,281
எனவே, இல்லை. எனக்கு பேச விருப்பமில்லை.

213
00:15:26,364 --> 00:15:27,323
நீ இதை சரிசெய்ய வேண்டும்.

214
00:15:27,407 --> 00:15:29,617
எனக்கு தீர்வு வேண்டும்,
நம் மகனைக் கண்டுபிடிக்கணும்.

215
00:15:29,701 --> 00:15:32,328
ஹே! ஹே! ஹே! நிறுத்துங்கள்!

216
00:15:33,997 --> 00:15:35,248
என்ன நடந்தது?

217
00:15:35,331 --> 00:15:37,083
- கேடுகெட்டவன் என்னைச் சுட பார்த்தான்.
- யார்? என்ன நடந்தது?

218
00:15:37,166 --> 00:15:39,544
விபத்து நடந்த வண்டியைப் பார்த்து,
எல்லோரும் நலமா என்று விசாரிக்க நின்றேன்.

219
00:15:39,627 --> 00:15:41,629
அங்கு இருந்தவர்களில் இந்தப் பையனும் இருந்தானா?

220
00:15:41,713 --> 00:15:43,882
- ஆமாம், இவன்தான்.
- அவனுக்கு அடிபட்டிருந்ததா?

221
00:15:43,965 --> 00:15:44,966
அவர்கள் இருவருக்கும் அடிபட்டிருந்தது.

222
00:15:45,049 --> 00:15:47,427
அவன் எங்கள் மகன். அவன் ஒரு அரசு
கைதியால் கடத்தப்பட்டிருக்கிறான்.

223
00:15:47,510 --> 00:15:49,220
உங்கள் வண்டியின் பிராண்டையும்
மாடலையும் சொல்லுங்கள்.

224
00:15:49,304 --> 00:15:51,556
எனக்குத் தெரியாது.
அது என்னுடையதில்லை. அரசு வண்டி.

225
00:15:51,639 --> 00:15:53,308
- அது கலப்பையுடனான உப்பு பரப்பும் வண்டி.
- உப்பு பரப்பும் வண்டி, சரி.

226
00:15:53,391 --> 00:15:54,601
சரி, அவர்கள் எந்தப் பக்கம் போனார்கள்?

227
00:15:54,684 --> 00:15:56,060
- கிழக்கு.
- போ! போ!

228
00:15:56,144 --> 00:15:57,437
நாங்கள் உதவி அனுப்புகிறோம்.

229
00:16:01,149 --> 00:16:02,150
ஹேய்.

230
00:16:02,650 --> 00:16:06,321
முன்னர் ஃபோனில், தங்கள் ரகசியத்தை
நம் முன்னால் பேச விரும்பவில்லை என்று

231
00:16:06,404 --> 00:16:08,406
ஃபிராங்கிடம் ஹாவ்லாக் சொன்னதற்கு என்ன அர்த்தம்?

232
00:16:08,489 --> 00:16:09,574
அது எதைப் பற்றியது?

233
00:16:10,241 --> 00:16:11,492
ஏதாவது தேவையற்றதாக இருக்கலாம்.

234
00:16:12,619 --> 00:16:14,996
சரி, நானும் அப்படித்தான் நினைத்தேன்.

235
00:16:31,471 --> 00:16:32,972
துருக்கி குடியரசு
வின்சென்ட் தியாகோ

236
00:16:35,391 --> 00:16:38,686
இவை அவனுடையது இல்லை.
மூன்றும் அவன் நண்பனான தூதுவனுடையவை.

237
00:16:39,854 --> 00:16:41,689
இந்த அறையிலிருந்து ஹாவ்லாக்
அழைத்தான் என நமக்குத் தெரியும்.

238
00:16:41,773 --> 00:16:43,650
தூதுவன் பணமாகக் கொடுத்தான் என்று
மேலாளர் என்னிடம் சொன்னார்.

239
00:16:43,733 --> 00:16:46,361
இது ஒரு பாதுகாப்பு இடமாகவோ அல்லது
வண்டி ஏறும் இடமாகவோ இருக்கலாம்.

240
00:16:51,824 --> 00:16:52,825
ஸ்கோஃபீல்ட்.

241
00:16:52,909 --> 00:16:54,410
என் அழைப்பை தவிர்க்கிறாயா?

242
00:16:54,994 --> 00:16:58,248
இல்லை, தவிர்க்கவில்லை.
செல் டவர்கள் வேலை செய்யவில்லை.

243
00:16:58,331 --> 00:17:00,416
என்னால் வை-ஃபை அழைப்பு மட்டுமே செய்ய முடியும்,
அதற்கு சின்னலே கிடைக்கலை.

244
00:17:00,500 --> 00:17:01,709
அம்மா மறுபடியும் விழுந்துட்டாங்க.

245
00:17:01,793 --> 00:17:04,337
- அவங்க நலமா?
- இல்லை. கவலையாக இருக்காங்க.

246
00:17:04,419 --> 00:17:06,339
ஃபோன்கள் பற்றி கேள்விப்பட்டாயா?

247
00:17:06,422 --> 00:17:08,424
அப்பா தனக்காக புது ஃபோன் லைன் ஆர்டர் செய்ததால்

248
00:17:08,508 --> 00:17:11,344
நேற்று சில ஆட்கள் இங்கே வந்ததாக அம்மா சொன்னாங்க.

249
00:17:11,844 --> 00:17:15,138
அப்பா இருபது ஆண்டுகளில் ஒரு ஃபோன் கூட
செய்ததில்லை என நான் உனக்கு சொல்லணுமா என்ன?

250
00:17:15,223 --> 00:17:17,517
- சரி, ஏதாவது காரணம் இருக்கும்…
- அவங்க நோயை கண்டறிந்தனர், சிட்.

251
00:17:17,600 --> 00:17:20,270
இது அதிகாரப்பூர்வமானது.
இரத்த நாளம் சார்ந்த டிமென்ஷியா.

252
00:17:20,353 --> 00:17:21,812
நாம் இன்னொரு டாக்டரிடம் கருத்து கேட்கலாம்.

253
00:17:21,896 --> 00:17:24,273
உனக்கு புரியும் என்று எதிர்பார்க்கலை.
நீ அந்த விதத்தில் அப்பா மாதிரி.

254
00:17:24,357 --> 00:17:25,984
சரி, அது நியாயம் இல்லை.

255
00:17:26,526 --> 00:17:28,110
அம்மாவை காப்பகத்தில் சேர்க்கப் போகிறோம்.

256
00:17:28,194 --> 00:17:29,487
உனக்கு சொல்ல நினைத்தேன்.

257
00:17:30,071 --> 00:17:32,699
- மோலி?
- நான் போகணும். அவங்க கூப்பிடுறாங்க.

258
00:17:36,828 --> 00:17:38,079
என்ன கண்டுபிடித்தாய்?

259
00:17:42,292 --> 00:17:43,793
அந்த ஆர்க்கைவ்.

260
00:17:44,711 --> 00:17:47,297
- எடுங்கள். எல்லாவற்றையும் எடுங்கள்.
- சரி. சரி.

261
00:17:59,559 --> 00:18:01,185
இது எந்த இடம்?

262
00:18:13,531 --> 00:18:15,658
அறிவிப்பு - தனியார் சொத்து
அத்துமீறக் கூடாது

263
00:18:33,801 --> 00:18:35,094
நாம் இங்கே என்ன செய்கிறோம்?

264
00:18:37,347 --> 00:18:39,015
நான் கண்காணிப்பவர்களுள் ஒருவன்.

265
00:18:40,141 --> 00:18:43,561
மக்களைக் கண்காணிப்பது என் வேலை.
அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆய்வு செய்ய வேண்டும்.

266
00:18:45,271 --> 00:18:48,441
பாரு, மக்களைக் கண்காணித்தால்
அவர்களை அமைதியாக வைக்கலாம் என்று

267
00:18:48,525 --> 00:18:50,276
அரசாங்கம் நினைக்கிறது.

268
00:18:50,360 --> 00:18:51,819
அவர்களைக் கட்டுப்படுத்தலாம் என்று.

269
00:18:52,654 --> 00:18:54,239
ஆனால் எனக்கு மக்களைத் தெரியும்.

270
00:18:55,615 --> 00:18:57,242
நான் பல ஆண்டுகளாக அவர்களை ஆய்வு செய்கிறேன்.

271
00:18:59,035 --> 00:19:00,203
உண்மையில் என்னவெனில்…

272
00:19:02,205 --> 00:19:03,331
உண்மை நிலவரம்…

273
00:19:04,791 --> 00:19:08,253
குழப்பம்தான் நம் இயல்பான நிலை.

274
00:19:08,878 --> 00:19:11,464
மக்கள் குழப்பமானவர்கள். பரிபூரணமற்றவர்கள்.

275
00:19:11,548 --> 00:19:15,718
ஆனால் அதற்காக அரசாங்கம்
நம்மைத் தொந்தரவு செய்யத் தேவையில்லை.

276
00:19:28,106 --> 00:19:29,482
எனக்கு கொஞ்சம் உதவு.

277
00:19:31,609 --> 00:19:32,694
வா.

278
00:19:35,780 --> 00:19:37,323
அந்த முனையைப் பிடி.

279
00:19:50,962 --> 00:19:51,963
இது என்னது?

280
00:19:53,965 --> 00:19:57,802
தம்பி, இது அந்த கேடுகெட்டவர்கள்
எதிர்பார்க்காத ஒரு ஆச்சரியம்.

281
00:19:58,720 --> 00:20:00,305
இதுதான் வேடிக்கையான பகுதி.

282
00:20:06,728 --> 00:20:08,021
டாட்டுடனான உன் உரையாடல் எப்படி போச்சு?

283
00:20:09,189 --> 00:20:12,400
வந்து, அது… சொல்வதற்குக் கடினம்.

284
00:20:13,943 --> 00:20:15,570
முயற்சி செய்யலாமே?

285
00:20:18,156 --> 00:20:22,785
நாம் ஒருவருக்கு ஒருவர்
உண்மையாக இல்லை எனத் தோன்றுகிறது.

286
00:20:26,998 --> 00:20:27,999
சரி.

287
00:20:28,082 --> 00:20:30,627
- நாம் பேச வேண்டும் என நினைக்கிறேன்.
- எதைப் பற்றி?

288
00:20:33,546 --> 00:20:35,465
ஃபிராங்க், மார்க்ஸ் பேசுகிறேன். கேட்கிறதா?

289
00:20:38,676 --> 00:20:39,844
ஃபிராங்க் பேசுகிறேன்.

290
00:20:39,928 --> 00:20:43,181
உப்பு வண்டி பற்றி ஏபிபீ எச்சரிக்கை கிடைத்தது,
ஆனால் வேறு ஒன்றும் இருக்கிறது.

291
00:20:43,264 --> 00:20:46,601
ஒரு ஆளில்லா ஏபி&இ சப்ஸ்டேஷன் பற்றி
தகவல் வந்திருக்கிறது.

292
00:20:46,684 --> 00:20:49,312
இருபது நிமிடங்களுக்கு முன், மின்சாரத் தடை
பற்றிய செய்தி ஆபரேஷனுக்கு வந்தது.

293
00:20:49,395 --> 00:20:51,773
அதற்கும் லூக்குக்கும் சம்பந்தம் உண்டு
என நினைக்கிறாயா?

294
00:20:51,856 --> 00:20:53,691
இந்த சப்ஸ்டேஷன் எங்கே இருக்கிறது?

295
00:21:21,803 --> 00:21:22,887
ஆமாம், அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.

296
00:21:23,555 --> 00:21:26,307
அடச்சே! காருக்குப் போ! வண்டிக்கு பின்னால் போ!

297
00:21:33,189 --> 00:21:34,274
- ஒன்றுமில்லையே?
- இல்லை.

298
00:21:39,904 --> 00:21:41,239
ஹட்ச்.

299
00:21:42,699 --> 00:21:44,242
நீ செய்யப் போவதைப் பற்றி யோசி.

300
00:21:44,325 --> 00:21:45,618
நான் நெறிமுறைபடி நடக்கிறேன்.

301
00:21:45,702 --> 00:21:48,621
அந்த டிரைவ் தேசிய பாதுகாப்புக்கான
ஒரு அச்சுறுத்தல்.

302
00:21:49,163 --> 00:21:53,167
நீ எஃப்பிஐ-யிடம் ஆர்க்கைவைக் கொடுத்தால்,
அது காவல் சங்கிலிக்குள் வரும்.

303
00:21:53,918 --> 00:21:55,086
நாம் வெளியே தள்ளப்படுவோம்.

304
00:21:55,169 --> 00:21:56,629
நான் இதைப் பற்றி விவாதிக்கப் போவதில்லை.

305
00:22:00,842 --> 00:22:04,637
சிஐஏ-விடம் இருந்து தகவல் வரும் வரை காத்திரு.
ஃபிராங்க் ஒப்புக்கொள்வார்.

306
00:22:04,721 --> 00:22:06,890
ஃபிராங்க்கின் ஒரே கவலை,
அவன் மகனைப் பற்றி மட்டும்தான், சரியா?

307
00:22:07,390 --> 00:22:11,060
விமானப் பதிவுக் கருவியை ஏற்கனவே
தொலைத்துவிட்டதால், நான் இதையும் இழக்க விரும்பலை.

308
00:22:11,144 --> 00:22:12,186
இது நெறிமுறை.

309
00:22:12,270 --> 00:22:15,690
ஹாவ்லாக் இதை இங்கே வைத்திருக்கிறான் என்றால்,
அதற்கு ஏதாவது காரணம் இருக்கும்.

310
00:22:15,773 --> 00:22:18,109
இந்த டிரைவை நாம் தற்செயலாக கண்டுபிடிக்கவில்லை.

311
00:22:18,735 --> 00:22:19,777
இது ஒரு பொறி.

312
00:22:20,570 --> 00:22:22,780
நான் இந்த டிரைவை ஓஎஸ்ஐ-யிடம்
கொடுக்கப் போகிறேன்.

313
00:22:22,864 --> 00:22:27,493
அது ஒரு வகையான டிரோஜன் ஹார்ஸ் என்பதால்
ஐயல்சனுக்கு அனுப்ப அவன் விரும்பினால்?

314
00:22:28,578 --> 00:22:30,163
இப்போது நீ பதற்றமாகப் பேசுகிறாய்.

315
00:22:30,747 --> 00:22:32,624
- இதுதானா?
- இதுதான்.

316
00:22:34,834 --> 00:22:38,296
நாம் இந்த டிரைவைக் கண்டுபிடித்து
ஆதாரமாகக் கொடுப்பதைத்தான் ஹாவ்லாக் விரும்புகிறான்.

317
00:22:38,379 --> 00:22:39,756
நீ இப்போது செய்வது போலவே.

318
00:22:39,839 --> 00:22:42,675
அவனை நாங்கள் பிடித்து வரும்போது
நன்றி சொல்ல எனக்கு நினைவுபடுத்து, சரியா?

319
00:22:49,933 --> 00:22:51,643
ஃபிராங்க், எனக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

320
00:22:52,143 --> 00:22:53,436
நான் ரொமேரோவின்
கடந்த காலத்தைத் தேடி பார்த்தேன்.

321
00:22:53,519 --> 00:22:55,813
இவன் தனியுரிமைக்கு அச்சுறுத்தலாக
நினைத்த இடங்களைச் சுட்டிக்காட்டி

322
00:22:55,897 --> 00:22:58,983
டஜன் கணக்கான ஆன்லைன்
வீடியோக்களைப் பதிவிட்டிருக்கிறான்.

323
00:22:59,067 --> 00:23:02,320
தூதரகங்கள், செல் டவர்கள்,
எல்லா வகையான ராணுவத் தளங்கள்.

324
00:23:02,403 --> 00:23:03,863
இது என்னை யோசிக்க வைத்தது.

325
00:23:03,947 --> 00:23:07,075
ரொமேரோ தன் பழைய காதலியிடம்
பழிவாங்கப் போவதாகச் சொன்னான்.

326
00:23:07,158 --> 00:23:08,826
ஆனால் அதை நாம் தவறாகப் புரிந்திருந்தால்?

327
00:23:09,452 --> 00:23:11,871
அவள் என்பது ஒரு ஆள் இல்லை என்று நினைக்கிறாயா?

328
00:23:12,664 --> 00:23:13,748
அவள் என்பது ஒரு இடம் என்று நினைக்கிறேன்.

329
00:23:16,209 --> 00:23:18,086
இந்த மின்சாரக் கம்பிகள் எங்கே போகின்றன?

330
00:23:19,837 --> 00:23:21,673
டெல்டா ஜங்ஷன், டோக்…

331
00:23:21,756 --> 00:23:23,383
ககோனா அந்தத் திசையில்தான் இருக்கிறது இல்லையா?

332
00:23:23,466 --> 00:23:25,093
அங்குதான் ஹார்ப் இருக்கிறது.

333
00:23:25,176 --> 00:23:28,304
கேள், கோல், ரொமேரோ சேதப்படுத்திய மின்சார
சப்ஸ்டேஷன், இங்கிருந்து தெற்கில் உள்ள

334
00:23:28,388 --> 00:23:31,224
ஒரு ராணுவ ஆராய்ச்சி பரிசோதனைக்
கூடத்துக்கு மின்சாரம் அளிக்கிறது.

335
00:23:31,307 --> 00:23:32,225
அவன் அதைத்தான் குறி வைக்கிறான்.

336
00:23:32,308 --> 00:23:35,019
அவன் ஒரு ராணுவ ஆராய்ச்சி
பரிசோதனை கூடத்தை குறி வைக்கிறான்.

337
00:23:42,151 --> 00:23:43,319
இது என்ன இடம்?

338
00:23:43,820 --> 00:23:46,489
இந்த இடம்தான் நம் இலக்கு.

339
00:23:49,951 --> 00:23:54,539
தியாகோவின் பாஸ்போர்ட் எல்லாம் போலியானவை, அவனது
கைரேகைகள் கணினியில் இல்லை என்று லாங்லி சொன்னது.

340
00:23:55,790 --> 00:23:58,293
- கோல்?
- ம்-ம். சரி. நன்றி.

341
00:23:59,294 --> 00:24:00,461
- ஹலோ?
- ஹே.

342
00:24:01,004 --> 00:24:02,046
சிட்னி?

343
00:24:03,339 --> 00:24:05,466
ஒரு குலுக்கல் டிக்கெட்டை வாங்க ஆர்வம் இருக்கா?

344
00:24:06,509 --> 00:24:07,635
குலுக்கல் டிக்கெட்டா?

345
00:24:07,719 --> 00:24:08,887
இன்றிரவு நடக்கும் நிகழ்ச்சி.

346
00:24:08,970 --> 00:24:10,305
டானிக்காக.

347
00:24:10,388 --> 00:24:12,223
ஓ, சரி. பொட்லாட்ச்.

348
00:24:13,349 --> 00:24:14,350
குலுக்கலில் என்ன வைத்திருக்கிறாய்?

349
00:24:14,434 --> 00:24:15,476
நிறைய நல்ல பொருட்கள் இருக்கின்றன.

350
00:24:15,560 --> 00:24:20,148
ஒரு டிரம் எரிபொருள், கொஞ்சம் கரிக்கட்டை,
அழகிய கைவினைத் தொப்பியும் உள்ளன.

351
00:24:20,231 --> 00:24:24,152
புகைபோட்ட மான் இறைச்சியும் உள்ளது, நீங்கள் சைவமாக
இருந்தால் பிடிக்காமல் போகலாம், ஆனால்…

352
00:24:24,235 --> 00:24:25,361
இருபது டாலர்கள்.

353
00:24:26,279 --> 00:24:28,448
ஒரு டிரம் எரிபொருள் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்.

354
00:24:30,033 --> 00:24:31,826
உங்கள் செல்ஃபோன் சேவை ரொம்ப மோசம்.

355
00:24:38,958 --> 00:24:40,418
தொலைபேசி.

356
00:24:41,294 --> 00:24:42,962
அவர்கள் திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கிறார்கள்.

357
00:24:45,256 --> 00:24:46,799
உங்கள் ஒரு ஃபோனை கடன் கொடுக்க முடியுமா?

358
00:24:49,010 --> 00:24:52,013
- ஏதாவது வாங்குகிறீர்களா?
- ஒரு வோட்கா. ஐஸ் கலக்காமல்.

359
00:25:01,481 --> 00:25:04,359
- ஹலோ?
- மோலி, நல்லவேளை.

360
00:25:04,442 --> 00:25:07,403
நாம் பேச வேண்டும். அம்மா
ஃபோன் நிறுவன ஆட்களுடன் பேசுவதாக

361
00:25:07,487 --> 00:25:08,780
கற்பனை செய்ததாக நீ சொன்னாய்.

362
00:25:08,863 --> 00:25:11,824
அவங்க கற்பனை செய்யவில்லை.
யாரோ வீட்டில் இருந்திருக்கிறார்கள்.

363
00:25:11,908 --> 00:25:12,742
யார் இருந்தது?

364
00:25:12,825 --> 00:25:16,204
பணியகத்துக்கு உத்தரவு இருப்பதாக நினைக்கிறேன்,
அம்மாவின் ஃபோன் இணைப்பைக் கண்காணிக்கிறார்கள்.

365
00:25:16,746 --> 00:25:17,872
அந்த ஃபோன் இணைப்பைப் பயன்படுத்தாதே.

366
00:25:17,956 --> 00:25:20,083
சிட், நீ என்னைப் பயமுறுத்துகிறாய். என்ன நடக்கிறது?

367
00:25:20,166 --> 00:25:22,794
உனக்குத் தெரியாத யாரிடமும் பேசாதே.
யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்காதே.

368
00:25:22,877 --> 00:25:25,838
சந்தேகப்படும்படி ஏதாவது இருந்தால்,
என்னைக் கூப்பிடு.

369
00:25:25,922 --> 00:25:28,258
- புரிகிறதா?
- இது உன் சட்ட வழக்கு பற்றியதா?

370
00:25:28,341 --> 00:25:29,926
உனக்குப் புரிகிறதா?

371
00:25:30,009 --> 00:25:33,346
போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது. யாரோ
கண்காணிக்கிறார்கள். ஆம், புரிகிறது.

372
00:25:34,222 --> 00:25:36,266
சிட்னி, ஸோயியைப்
பள்ளியில் இருந்து அழைத்து வருகிறேன்.

373
00:25:36,349 --> 00:25:38,268
அவள் இப்போது காரை நோக்கி நடந்து வருகிறாள்.

374
00:25:38,351 --> 00:25:41,604
உன் பைத்தியக்கார வேலை பற்றி பேசி
நான் அவளைப் பயமுறுத்த விரும்பலை, சரியா?

375
00:25:41,688 --> 00:25:44,732
நான் ஃபோனை வைக்கிறேன், ஆனால் எங்களுக்கு
ஆபத்து என்றால், நிச்சயம் நீ என்னை அழைக்கணும்.

376
00:25:44,816 --> 00:25:46,985
சரியா? இப்போது ஃபோனை வைக்கிறேன்.

377
00:25:51,531 --> 00:25:52,699
இது என்னது?

378
00:25:53,283 --> 00:25:54,284
உங்கள் கணவரிடம் இருந்து.

379
00:25:57,370 --> 00:25:58,997
இன்னொரு கிளாஸுக்கு நேரம் இருக்கா?

380
00:26:03,334 --> 00:26:06,462
ஜெனரல் தாட்சர், மதிய வணக்கம்.
துணை மார்ஷல் ஸ்டீவன் கோல்.

381
00:26:06,546 --> 00:26:08,047
நிலைமை பற்றி உங்களுக்குத்
தகவல் தெரிவிக்கப்பட்டதா?

382
00:26:08,131 --> 00:26:09,591
மின்தடை பற்றி எங்களுக்குத் தெரியும்.

383
00:26:09,674 --> 00:26:11,175
தப்பியோடிய ஒரு குற்றவாளியால்
மின்தடை ஏற்பட்டது,

384
00:26:11,259 --> 00:26:13,136
அவன் ஹார்ப் வசதியை
குறி வைக்கலாம் என்று நம்புகிறோம்.

385
00:26:13,219 --> 00:26:15,513
ஹார்ப். அப்படி என்றால் என்ன?

386
00:26:16,097 --> 00:26:18,683
உயர்-அலைவரிசை செயற்பாட்டு
அரோரல் ஆராய்ச்சித் திட்டம்.

387
00:26:18,766 --> 00:26:21,019
இது பழைய டார்பா திட்டத்தின்
ஒரு பகுதியாக இருந்தது.

388
00:26:21,102 --> 00:26:22,228
இது நம்பத் தகுந்த ஆபத்தா?

389
00:26:22,312 --> 00:26:26,399
குறிப்பிட்டு சொல்ல முடியாது, ஆனால் ஆஃப்லைனில்
உள்ள நிலையத்தின் மின்சாரம் ஹார்ப்புக்கு செல்கிறது.

390
00:26:26,482 --> 00:26:28,484
இது பெரிய தாக்குதலுக்கான
முதல் அடி என்று நினைக்கிறோம்.

391
00:26:28,568 --> 00:26:29,861
இவையெல்லாம் என்ன என்றே
எனக்குப் புரியவில்லை.

392
00:26:29,944 --> 00:26:33,406
அவர்கள் விரும்பும் எவரையும் ஒட்டுக் கேட்க
புதிய வழிகளை அவர்கள் சோதிக்கிறார்கள்.

393
00:26:34,657 --> 00:26:35,783
உண்மையில் அவர்களால் அப்படிச் செய்ய முடியுமா?

394
00:26:35,867 --> 00:26:38,453
தப்பியோடிய உங்கள் கைதி
எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும்,

395
00:26:38,536 --> 00:26:41,206
இது போன்ற சம்பவங்களுக்கு
ஹார்ப்பிடம் மாற்றுத் திட்டங்கள் இருக்கும்.

396
00:26:41,289 --> 00:26:44,792
அவர்கள் எவ்வளவு முன்னேற்பாடு செய்தாலும்,
மின்சார விநியோகத்தைத் தாக்கினால்

397
00:26:44,876 --> 00:26:46,794
இது போன்ற பெரிய அமைப்பை வீழ்த்த முடியும்.

398
00:26:46,878 --> 00:26:48,796
அந்த சப்ஸ்டேஷனில் மின்சாரம் தடைபட்டவுடன்,

399
00:26:48,880 --> 00:26:52,884
ஹார்ப் நெட்வொர்க் பிழையைக் கண்டறிந்து
ரிசர்வ் பேட்டரி பேக்அப்பிற்கு மாறியது.

400
00:26:52,967 --> 00:26:54,219
இது மூடப்பட்டது, பாதுகாப்பானது.

401
00:26:54,302 --> 00:26:57,138
அவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள், ஆனால்
எதுவும் உண்மையில் பாதுகாப்பானது இல்லை.

402
00:26:57,222 --> 00:26:59,307
- யாரையும் காயப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை.
- தைரியமாக இரு, பையா.

403
00:26:59,390 --> 00:27:01,100
நாம் இப்போது வரலாறு படைக்கப் போகிறோம்.

404
00:27:07,148 --> 00:27:08,650
நீ களைப்பாக இருப்பது போலத் தெரிகிறது.

405
00:27:09,859 --> 00:27:11,528
ஹோட்டலில் இருந்தே என்னைப்
பின்தொடர்ந்து வருகிறாயா?

406
00:27:13,071 --> 00:27:14,447
நீ உன்னை கவனித்துக்கொள்ள வேண்டும்.

407
00:27:15,406 --> 00:27:16,783
என்ன, நீ என் மருத்துவரா?

408
00:27:16,866 --> 00:27:18,826
இல்லை, நான் உன்னை கண்காணிக்கிறேன்.

409
00:27:20,036 --> 00:27:21,371
நான் அதைத்தான் செய்கிறேன்.
எப்போதும் அதை செய்திருக்கிறேன்.

410
00:27:21,454 --> 00:27:24,290
உன் மீது அக்கறை காட்ட, நான்
உன்னை நம்ப வேண்டியதில்லை, சிட்.

411
00:27:24,374 --> 00:27:26,417
- ஆர்க்கைவ் எங்கே இருக்கிறது?
- அது பாதுகாப்பாக உள்ளது.

412
00:27:26,501 --> 00:27:28,211
- இங்கே இருக்கிறதா?
- நீ சொல்.

413
00:27:28,962 --> 00:27:30,713
என் ஹோட்டல் அறையில் உன் குழு
அதைக் கண்டுபிடித்ததா?

414
00:27:32,298 --> 00:27:33,508
உனக்கு இது விளையாட்டா இருக்கா?

415
00:27:35,385 --> 00:27:36,219
இல்லை.

416
00:27:36,844 --> 00:27:38,137
ஏன் சிரிக்கிறாய்?

417
00:27:39,264 --> 00:27:40,807
ஏனென்றால் நீ உன் வாயால் அப்படி செய்கிறாய்.

418
00:27:41,432 --> 00:27:43,977
கட்டுப்பாட்டில் இல்லாதபோது,
நீ உன் கீழ் உதட்டைக் கடிப்பாய்.

419
00:27:44,060 --> 00:27:47,897
ஆமாம், நீ ரொம்ப தைரியமான
ஆணவக்காரனாக நடிக்கிறாய்,

420
00:27:47,981 --> 00:27:49,732
அது ஏன் என்று உண்மையில்
எனக்குப் புரியவில்லை.

421
00:27:51,651 --> 00:27:53,862
உண்மையில், எனக்குப் புரிகிறது.
நீ இதை ரசிக்கிறாய்.

422
00:27:53,945 --> 00:27:55,405
ஆமாம், நான் இதை ரசிக்கிறேன்.

423
00:27:56,114 --> 00:27:57,949
துரத்தப்படுவது, வேட்டையாடப்படுவது.

424
00:27:58,032 --> 00:28:00,493
விதிகளை மீறி, போகப் போக உருவாக்குவது.

425
00:28:01,119 --> 00:28:03,746
திட்டம் சொதப்பும்போது,
நீ எப்போதும் சிறப்பாகச் செயல்பட்டாய்,

426
00:28:03,830 --> 00:28:05,123
உடனே சிந்தித்து செயல்பட வேண்டியிருந்தது.

427
00:28:05,206 --> 00:28:06,374
வியன்னாவில் செய்தது போலவே.

428
00:28:06,958 --> 00:28:09,210
இது வியன்னா போன்றது கிடையாது.

429
00:28:10,670 --> 00:28:11,713
நீ ஏன் இங்கு வந்தாய்?

430
00:28:12,422 --> 00:28:13,506
ஏன் ரிஸ்க் எடுக்கிறாய்?

431
00:28:15,675 --> 00:28:16,885
உன்னைப் பார்க்க.

432
00:28:18,469 --> 00:28:20,805
இதில் நீ எப்படிப் பொருந்துகிறாய்
என்று பார்க்க முயல்கிறேன்.

433
00:28:20,889 --> 00:28:22,181
நீ யாருடைய பக்கம்?

434
00:28:22,265 --> 00:28:25,810
நிறுவனத்துக்கு நீ மிகவும் தேவை
என்று நம்ப விரும்புகிறேன், ஆனால்…

435
00:28:25,894 --> 00:28:28,521
என் உள்ளுணர்வு உனக்கு
வேறு திட்டம் இருப்பதாக சொல்கிறது.

436
00:28:28,605 --> 00:28:29,814
உன் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்காதே.

437
00:28:29,898 --> 00:28:30,773
ஏன் கேட்கக் கூடாது?

438
00:28:30,857 --> 00:28:33,776
ஏனென்றால், உண்மையில் நீ
நம்பக் கூடிய ஒரே ஆள் நான்தான்.

439
00:28:33,860 --> 00:28:35,528
- நிரூபித்துக் காட்டு.
- எப்படி?

440
00:28:37,322 --> 00:28:38,531
என்னுடன் வா.

441
00:28:39,073 --> 00:28:40,950
நாம் மறைந்து விடுவோம்.

442
00:28:41,034 --> 00:28:43,286
- அது நடக்கப் போவதில்லை.
- நாம் எங்கு வேண்டுமானாலும் போகலாம்.

443
00:28:43,369 --> 00:28:45,413
ஆர்க்கைவ் உடன் இருக்கையில்,
யாராலும் நம்மைத் தொட முடியாது.

444
00:28:46,998 --> 00:28:48,249
அதைப் பற்றி யோசி.

445
00:28:48,750 --> 00:28:51,461
நீயும் நானும். கோவாவில் ஏதோ ஒரு கடற்கரை.

446
00:28:52,086 --> 00:28:53,922
இது எவ்வளவு மோசமாக இருக்கும்?

447
00:28:56,841 --> 00:28:58,009
நான் போக வேண்டும்.

448
00:28:58,843 --> 00:29:00,261
பீருக்கு நன்றி.

449
00:29:23,117 --> 00:29:26,246
அவன் நலமாக இருப்பான்.
லூக் நலமாக இருப்பான்.

450
00:29:26,329 --> 00:29:27,413
ப்ளீஸ் அப்படிச் சொல்லாதே.

451
00:29:27,497 --> 00:29:29,707
நான் என்ன சொல்லணும் என்று நினைக்கிறாய்?
கவலையாக இருக்கிறேன் என்றா?

452
00:29:29,791 --> 00:29:31,459
நம் மகன் எங்கு இருக்கிறான் என்று
எனக்குத் தெரியாது என்றா?

453
00:29:31,543 --> 00:29:34,462
ஆமாம். ஏனென்றால்,
அதுவாவது நேர்மையானதாக இருக்கும்.

454
00:29:35,088 --> 00:29:36,130
அதற்கு என்ன அர்த்தம்?

455
00:29:39,175 --> 00:29:40,927
அடச்சே. ஃபிராங்க்,
நான் உன்னிடம் பொய் சொல்லிவிட்டேன்.

456
00:29:41,010 --> 00:29:43,221
கடத்தல் பற்றி நான் உன்னிடம் பொய் சொல்லிவிட்டேன்.

457
00:29:43,304 --> 00:29:45,014
ஹாவ்லாக், அவன்…

458
00:29:46,933 --> 00:29:48,560
அவன் இதை என்னிடம் கொடுத்தான்.

459
00:29:50,061 --> 00:29:51,104
இது என்னது?

460
00:29:51,187 --> 00:29:52,522
விபத்தின் பதிவு இது.

461
00:29:52,605 --> 00:29:54,440
சிஐஏ-வைச் சேர்ந்த அந்தப் பெண், சிட்னி,

462
00:29:54,524 --> 00:29:59,320
அவன் எனக்கு ஏதாவது கொடுத்து உன்னை ஏமாற்ற
முயலலாம் என்று அவள் நினைத்தாள், அதனால் நான்…

463
00:30:00,280 --> 00:30:01,364
அவன் எதுவும் தரவில்லை என்று அவளிடம் சொன்னேன்.

464
00:30:01,447 --> 00:30:02,866
ஹாவ்லாக் உன்னிடம் இதைக் கொடுத்தானா?

465
00:30:02,949 --> 00:30:05,618
- ஆமாம். நான் அதைக் கொடுக்கவில்லை…
- நீ என்னிடம் பொய் சொன்னாய், சாரா.

466
00:30:05,702 --> 00:30:06,828
ஆமாம், உன்னிடம் சொல்லியிருக்கணும்.

467
00:30:06,911 --> 00:30:08,705
சாரா, இதுவொரு ஆதாரம்.

468
00:30:08,788 --> 00:30:11,291
- சரியா? ஆதாரம்.
- ஃபிராங்க், வேகத்தை குறை!

469
00:30:11,374 --> 00:30:13,001
மெதுவாக ஓட்டு!

470
00:30:15,503 --> 00:30:18,506
ஒரு காவலரின் மனைவியாக இருப்பது
எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும், சரியா?

471
00:30:18,590 --> 00:30:19,883
என் வாழ்க்கை எனக்குப் புரிகிறது.

472
00:30:19,966 --> 00:30:23,094
ஆனால் இந்தக் குடும்பத்தை இது எப்படி
ஆட்டுவிக்கிறது என்று உனக்குப் புரியலையா?

473
00:30:23,177 --> 00:30:24,637
என்ன? நான் என்ன செய்யணும் என்று எதிர்பார்க்கிறாய்?

474
00:30:24,721 --> 00:30:27,056
இந்த வழக்கில் நீ
மேலும் இழுக்கப்படவிருந்தாய், சரியா?

475
00:30:27,140 --> 00:30:31,144
எனக்கு ஒரு தேர்வு இருந்தது, நான்
உன்னைக் காப்பாற்றத் தேர்ந்தெடுத்தேன்.

476
00:30:31,227 --> 00:30:32,729
நீ எங்கு போகிறாய்?

477
00:30:32,812 --> 00:30:34,022
அடச்சே. அடச்சே.

478
00:30:39,736 --> 00:30:41,154
ஃபிராங்க், நான் உன்னை நேசிக்கிறேன்.

479
00:30:41,988 --> 00:30:45,074
நான் உன்னிடம் பொய் சொன்னதை வெறுக்கிறேன்,
ஆனால் உனக்குப் புரியவில்லையா?

480
00:30:45,158 --> 00:30:47,619
நாம் எவ்வளவு உடைந்து போயிருக்கிறோம்
என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.

481
00:30:52,373 --> 00:30:54,292
ஏதாவது சொல்!

482
00:30:54,375 --> 00:30:55,710
சாலை உப்பு.

483
00:30:56,294 --> 00:30:58,504
லூக் இருக்கும்
அரசு பராமரிப்பு வாகனத்தில் இருந்து.

484
00:30:59,756 --> 00:31:01,716
- அதனால் என்ன?
- இது அரசு சாலை இல்லை.

485
00:31:03,218 --> 00:31:04,677
அவன் நமக்கு தடயத்தை விட்டுச் செல்கிறான்.

486
00:31:12,727 --> 00:31:14,979
ஹார்ப்

487
00:31:36,084 --> 00:31:37,252
நடந்து போ.

488
00:31:41,464 --> 00:31:43,174
சரியாக இங்கே வை.

489
00:31:48,388 --> 00:31:49,389
இதை ஆன் பண்ணு.

490
00:31:56,729 --> 00:32:00,525
எலக்ட்ரானிக்ஸ் டெக்னீஷியன் இரண்டாம்
படிநிலை ஐசக் ரொமேரோ பேசுகிறேன்.

491
00:32:00,608 --> 00:32:04,696
வரும் நாட்களில், நான் மனநலம் சரியில்லாததால்
பணியாற்ற தகுதியற்றவன் என்று உங்களிடம் சொல்வார்கள்.

492
00:32:05,572 --> 00:32:07,448
என் அரசுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சி
கொண்டவன் என்று சொல்வார்கள்.

493
00:32:08,366 --> 00:32:10,118
உள்நாட்டுத் தீவிரவாதி என்றும் சொல்வார்கள்.

494
00:32:10,660 --> 00:32:11,828
அவை எல்லாம் உண்மைதான்.

495
00:32:11,911 --> 00:32:16,332
உங்கள் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்க அரசு
கண்காணிக்கிறது என்பதும் உண்மைதான்.

496
00:32:16,416 --> 00:32:19,294
ஒட்டுக்கேட்டவர்களில் நானும்
ஒருவன் என்பதால் எனக்கு அது தெரியும்.

497
00:32:19,377 --> 00:32:23,965
இதற்கு ஒரு தீர்வைச் சொல்ல
எனக்கு தார்மீகக் கடமை இருக்கிறது.

498
00:32:24,048 --> 00:32:27,677
எனக்குப் பின்னால் உயர்-அலைவரிசை செயற்பாட்டு
அரோரல் ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது.

499
00:32:27,760 --> 00:32:31,681
அது உண்மையில்,
ஒரு ஆய்வு நிலையமே கிடையாது.

500
00:32:31,764 --> 00:32:35,476
ஆனால் நிறுத்தப்பட வேண்டிய பரந்த
கண்காணிப்புத் திட்டத்தின் இதயத்துடிப்பு அது.

501
00:32:36,936 --> 00:32:40,982
அதை ஆஃப்லைனாக மாற்றினால்,
பல விளைவுகள் ஏற்படும்.

502
00:32:42,317 --> 00:32:44,235
அதைத் தொடரும் இருள்…

503
00:32:46,362 --> 00:32:47,780
வலி மிகுந்ததாக இருக்கும்.

504
00:32:48,865 --> 00:32:50,783
உயிர்கள் பறிபோகும், அதற்காக…

505
00:32:53,244 --> 00:32:54,787
நான் வருந்துகிறேன்.

506
00:33:07,383 --> 00:33:08,384
நிறுத்து!

507
00:33:10,929 --> 00:33:13,306
- உனக்கு என்ன பிரச்சினை?
- நீங்கள் ஏற்கனவே பலரைக் காயப்படுத்திவிட்டீர்கள்.

508
00:33:13,389 --> 00:33:15,099
நீங்கள் இனி யாரையும் காயப்படுத்த
நான் விடமாட்டேன்.

509
00:33:15,183 --> 00:33:17,060
இது என்ன? நீ தகவல் அனுப்புகிறாயா?

510
00:33:18,478 --> 00:33:20,313
அது என்னது? நீ… அது ஒரு ஒத்திசைக்கும் சுருள்.

511
00:33:20,396 --> 00:33:22,357
இல்லை, அது என் வாயை அகலப்படுத்தும் கருவி.

512
00:33:22,440 --> 00:33:24,484
நீ இவ்வளவு நேரமும்
தகவல் அனுப்பிக்கொண்டு இருந்தாய்.

513
00:33:25,068 --> 00:33:26,361
நீயும் அவர்களில் ஒருவன்தான்.

514
00:33:27,403 --> 00:33:28,488
- என்ன செய்கிறீர்கள்?
- திற…

515
00:33:28,571 --> 00:33:30,114
உன் வாயைத் திற.

516
00:33:31,157 --> 00:33:32,283
- வேண்டாம்! நிறுத்துங்கள்!
- உன் வாயைத் திறந்துத் தொலை.

517
00:33:32,367 --> 00:33:33,201
இது வெளியே வருகிறது.

518
00:33:33,284 --> 00:33:34,994
என் பல் மருத்துவரால்தான்
இதைச் செய்ய முடியும்…

519
00:33:35,078 --> 00:33:36,704
உன் வாயைத் திறந்துத் தொலை!

520
00:33:41,209 --> 00:33:42,502
கேளுங்கள்!

521
00:33:42,585 --> 00:33:43,586
கேளுங்கள்!

522
00:33:46,297 --> 00:33:47,382
இது என்னது?

523
00:33:52,804 --> 00:33:54,222
அது என்ன சத்தம்?

524
00:33:54,722 --> 00:33:55,807
இது ரிப்பீட்டர் கருவி.

525
00:33:56,683 --> 00:33:58,893
அவர்கள் என்னை இதை அணிய வைத்தார்கள்.
எனக்கு வேறு வழியில்லை. சத்தியமாக.

526
00:33:58,977 --> 00:34:00,103
யார் உன்னை இதை அணியச் செய்தார்கள்?

527
00:34:01,604 --> 00:34:03,189
விமானத்தை விபத்துக்குள்ளாக்கியவர்கள்.

528
00:34:04,524 --> 00:34:07,068
எனக்குப் பெயர்கள் தெரியாது, ஆனால்
எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்கிறேன்,

529
00:34:07,151 --> 00:34:09,362
சத்தியமாக சொல்கிறேன், ப்ளீஸ்
துப்பாக்கியை இறக்குங்கள்.

530
00:34:09,988 --> 00:34:13,533
இது ரிப்பீட்டர் கருவி இல்லை. இது
குழந்தையின் பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருள்…

531
00:34:35,680 --> 00:34:36,680
ஹே!

532
00:34:41,352 --> 00:34:43,271
ரேடியோவை எடுத்து, உதவி கேள்.

533
00:34:43,854 --> 00:34:45,064
காரிலேயே இரு.

534
00:34:58,411 --> 00:35:00,163
உன்னைக் கண்டுபிடிப்பேன், லூக்.

535
00:35:17,388 --> 00:35:18,890
லூக்…

536
00:35:23,728 --> 00:35:24,854
லூக்…

537
00:35:26,189 --> 00:35:27,190
அசையாதே!

538
00:35:49,754 --> 00:35:51,256
உன் அப்பாவைத் துப்பாக்கியைக்
கீழே போடச் சொல்.

539
00:35:51,339 --> 00:35:52,966
துப்பாக்கியைக் கீழே போடுங்கள், அப்பா.

540
00:35:53,591 --> 00:35:55,385
கீழே போடு, இல்லைன்னா சுட்டுடுவேன்.

541
00:35:56,386 --> 00:35:57,887
கீழே போடு என்று சொன்னேன்.

542
00:36:01,432 --> 00:36:04,686
- பின்னால் போ.
- என் மகனை விடு, சரியா?

543
00:36:06,813 --> 00:36:08,147
சரி, கேள்.

544
00:36:08,773 --> 00:36:11,943
என்னை எடுத்துக்கோ,
என் மகனை விட்டுவிடு, சரியா?

545
00:36:12,026 --> 00:36:14,404
துப்பாக்கியை இங்கே தூக்கிப் போடு,
உன் மகனை விட்டுவிடுகிறேன்.

546
00:36:15,947 --> 00:36:17,240
இந்தா, சரியா?

547
00:36:18,199 --> 00:36:20,535
அவனுக்கு பதில் என்னை எடுத்துக்கொள். சரியா? விடு.

548
00:36:23,246 --> 00:36:25,373
இங்கே வா, இங்கே வா, இங்கே வா.
இல்லை, இல்லை, இல்லை, இல்லை.

549
00:36:25,456 --> 00:36:27,876
வா. உன்னைப் பிடித்துவிட்டேன். வேண்டாம். சரி.

550
00:36:35,008 --> 00:36:38,845
ஐயோ. லூக்! இங்கே வா.

551
00:36:39,888 --> 00:36:43,141
உன்னைப் பார்க்கிறேன்.
உனக்கு ஒன்றுமில்லையே? ஓ, அன்பே.

552
00:36:43,224 --> 00:36:44,225
ஐயோ.

553
00:36:46,644 --> 00:36:48,396
அடக் கடவுளே.

554
00:36:52,275 --> 00:36:53,318
வா.

555
00:37:22,305 --> 00:37:28,144
ஆக, இவரைப் போன்ற பலர்
வெளியே இருக்கிறார்களா?

556
00:37:30,063 --> 00:37:31,064
ஆமாம்.

557
00:37:45,286 --> 00:37:48,665
அவர்களுள் ஒருவர் கொன்றது…

558
00:37:49,415 --> 00:37:52,043
அறுவை சிகிச்சையில் டானி இறந்துவிட்டான், லூக்.

559
00:37:53,545 --> 00:37:54,963
ஆனி மனமுடைந்து போயிருக்கிறாள்.

560
00:37:56,214 --> 00:37:58,508
இன்றிரவு, மெக்கா பாரில்
ஒரு ஒன்றுகூடல் நிகழ்வு நடக்கிறது.

561
00:38:06,641 --> 00:38:07,642
நான் கீராவைப் பார்க்கணும்.

562
00:38:08,309 --> 00:38:09,352
நிச்சயம் பார்ப்பாய்.

563
00:38:10,728 --> 00:38:13,022
அவள் மருத்துவமனையில் இருக்கிறாள்.

564
00:38:13,898 --> 00:38:15,358
அங்குதான் உன்னைக் கொண்டு போகிறோம்.

565
00:38:15,441 --> 00:38:17,151
அம்மா, சத்தியமாக நான் நல்லா இருக்கேன்.

566
00:38:18,736 --> 00:38:21,364
நீதான் எங்களுக்கு முக்கியம்.

567
00:38:21,447 --> 00:38:24,576
வந்து… நீ நலமாக இருக்கிறாய் என்று
நாங்கள் உறுதிசெய்யணும்.

568
00:38:35,044 --> 00:38:36,588
ஆக, இது முடியவில்லை.

569
00:38:41,843 --> 00:38:43,052
இல்லை.

570
00:39:03,948 --> 00:39:04,949
நீ எங்கே போகிறாய்?

571
00:39:12,957 --> 00:39:16,628
- நான் அவனிடம் பேசட்டுமா?
- அவன் கொஞ்சம் தனியாக இருக்கட்டும்.

572
00:39:23,092 --> 00:39:26,179
இனி என்னால் இதை முன்பு போல் பார்க்க முடியுமா
என்று தெரியவில்லை.

573
00:39:28,389 --> 00:39:30,141
இது மாறிவிட்டது.

574
00:39:32,769 --> 00:39:34,437
எல்லாமே மாறிவிட்டது.

575
00:39:51,621 --> 00:39:52,830
நான் திரும்ப அழைக்கிறேன்.

576
00:39:54,832 --> 00:39:56,543
- அதைப் பிரித்துவிட்டாயா?
- இன்னுமில்லை.

577
00:39:56,626 --> 00:39:58,920
ஆனால், நம்மிடம் ஒரு மாற்று வழி இருக்கலாம்.

578
00:39:59,003 --> 00:40:00,672
ஹாலிடன் 241 பற்றி உங்களுக்குத் தெரியும், அல்லவா?

579
00:40:00,755 --> 00:40:02,257
அது ஒரு கண்காணிப்புத் திட்டம்.

580
00:40:02,340 --> 00:40:05,009
கடலுக்கு அடியில் உள்ள கேபிள்களில்
செல்லும் சிக்இன்ட்-ஐ உறிஞ்சுகிறது.

581
00:40:05,593 --> 00:40:07,595
நம் சர்வர்களில் ஒன்று என்கிரிப்டெட்
மெசேஜை கண்டுபிடித்தது,

582
00:40:07,679 --> 00:40:08,763
அது இவனுடையதாக இருக்கலாம்
என்று நினைக்கிறோம்.

583
00:40:08,846 --> 00:40:12,058
- நினைக்கிறாயா?
- ஆர்க்கைவ் 6-ஐப் பற்றிப் பேசுகிறான். இது அவன்தான்.

584
00:40:12,141 --> 00:40:14,602
அந்த மெசேஜ் எங்கு, யாருக்கு அனுப்பப்பட்டது

585
00:40:14,686 --> 00:40:16,187
என்பதைப் கண்டுபிடிக்க முயல்கிறோம்.

586
00:40:16,271 --> 00:40:18,022
ஜூனி, இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?

587
00:40:18,106 --> 00:40:20,984
எனக்கு 12 மணிநேர அவகாசம் கொடுங்க, இந்த
ஸ்விட்சை வடிவமைத்தவரைக் கண்டுபிடிக்கிறேன்.

588
00:40:24,153 --> 00:40:24,988
மெக்கா பார்

589
00:40:25,071 --> 00:40:26,614
நீ என்னைத்தான் தேடுகிறாய் என்று தெரியும்.

590
00:40:26,698 --> 00:40:29,158
ஆமாம். உன்னைக் கண்டுபிடிப்பது எளிதல்ல.

591
00:40:29,242 --> 00:40:30,994
வந்து, உனக்கு என்ன வேண்டுமோ, சீக்கிரம் சொல்.

592
00:40:31,077 --> 00:40:34,747
ஒருமுறை பயன்படுத்தி, 90 நொடிகளில்
தானே துண்டிக்கப்படும் SIP-ல் இருக்கிறேன்.

593
00:40:34,831 --> 00:40:36,708
ஒரு வேலையைப் பற்றி உன்னிடம் பேச வேண்டும்.

594
00:40:36,791 --> 00:40:38,626
- எனக்கு ஆர்வமில்லை.
- உனக்கு ஆர்வம் தோன்றும்.

595
00:40:38,710 --> 00:40:39,878
அது ஏன்?

596
00:40:39,961 --> 00:40:42,255
சரி, நாம் இருவரும் ஒரே வேலையில்
இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

597
00:40:42,338 --> 00:40:44,507
ஒரு சிக்கலான நிலைமை உருவாகிறது,
அதில் நீ…

598
00:40:45,884 --> 00:40:47,552
மிகவும் ஆர்வமாக இருப்பாய்.

599
00:40:55,393 --> 00:40:56,394
ஓ, இல்லை.

600
00:41:08,323 --> 00:41:10,867
எல்லாரும் கொஞ்சம் கவனிக்க முடியுமா, ப்ளீஸ்?

601
00:41:12,243 --> 00:41:13,953
நன்றி, மிக்க நன்றி.

602
00:41:14,037 --> 00:41:16,289
கேளுங்கள், நீண்ட நேரம் உங்களைக் காக்க
வைக்க மாட்டேன். இடையூறுக்கு மன்னிக்கவும்.

603
00:41:16,372 --> 00:41:19,209
ஆனால், முதலில்,
இன்று இரவு நமக்கு விருந்தளிக்கும்

604
00:41:19,292 --> 00:41:20,627
மெக்கா பாருக்கும் ஜிம்மிற்கும் நன்றி.

605
00:41:20,710 --> 00:41:23,254
எனவே, நன்றி, ஜிம்.

606
00:41:26,341 --> 00:41:31,930
20 நிமிடங்களில் அமைதியான ஏலம் முடிகிறது என்று
பேட் சொன்னார், எனவே உங்கள் ஏலத்தைச் சொல்லுங்கள்.

607
00:41:32,013 --> 00:41:34,474
அங்கு நிறைய நல்ல பொருட்கள் உள்ளன,
வரவு அனைத்தும் குடும்பத்திற்குப் போகும்.

608
00:41:34,557 --> 00:41:36,309
இன்னும் குலுக்கல் சீட்டுகள் உள்ளன!

609
00:41:39,437 --> 00:41:41,523
ஆனால், இன்றிரவு வந்த அனைவருக்கும்

610
00:41:41,606 --> 00:41:43,900
என் இதயத்தின் ஆழத்தில் இருந்து
நன்றி சொல்ல விரும்புகிறேன்.

611
00:41:43,983 --> 00:41:46,110
இது உண்மையிலே முக்கியம்.
எங்களுக்கு இது ரொம்ப முக்கியம்.

612
00:41:46,194 --> 00:41:48,196
இதுதான் நாம், நாம் இப்படித்தான் செய்வோம்.

613
00:41:51,407 --> 00:41:54,786
டானி எனக்கு சகோதரன் போன்றவன்.

614
00:41:55,411 --> 00:41:57,247
ஏழாம் வகுப்பில் முதலில் சந்தித்தோம்.

615
00:41:57,330 --> 00:41:59,832
நான் பதட்டமாக இருந்தேன்,
வகுப்புக்கும் தாமதமாக சென்றேன்,

616
00:41:59,916 --> 00:42:03,628
கால்பந்து மைதானம் வழியாக குறுக்குவழியில்
சென்றேன், நீர்தெளிப்பான்கள் ஓடத்தொடங்கின.

617
00:42:03,711 --> 00:42:07,131
நான் வருவதற்குள், நான்… முழுவதும்
நனைந்துவிட்டேன். தலை முதல் கால் வரை.

618
00:42:07,215 --> 00:42:11,636
நான் யாரென்றே தெரியாத டானி,
அவன் சட்டையை உடனே கழட்டிக் கொடுத்தான்.

619
00:42:11,719 --> 00:42:14,138
அது மூன்று மடங்கு பெரிதாக இருந்தது, ஆனாலும்…

620
00:42:14,222 --> 00:42:16,891
ஆனால், டானி அப்படிப்பட்டவன்தான்.

621
00:42:17,433 --> 00:42:20,019
அன்றிலிருந்து, அவன் எப்போதும்
எனக்கு உறுதுணையாக இருந்தான்.

622
00:42:20,603 --> 00:42:23,731
நாங்கள் ஒன்றாக மார்ஷல்கள் ஆனோம்,
அதுவே மொத்த வாழ்நாள் போல இருந்தது.

623
00:42:23,815 --> 00:42:26,317
நாங்கள் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம்,

624
00:42:26,401 --> 00:42:28,695
எங்களில் ஒருவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்…

625
00:42:29,946 --> 00:42:34,367
விவரங்கள் முக்கியமில்லை, ஆனால் விஷயம் என்னவென்றால்,
நான் டானிக்கு மூன்று வாக்குகள் கொடுத்தேன்.

626
00:42:35,493 --> 00:42:39,914
சரி, முதலாவது, அவனுடைய மனைவி,
ஆனியை நான் எப்போதும் பார்த்துக்கொள்வேன்.

627
00:42:41,207 --> 00:42:42,292
இரண்டாவது…

628
00:42:45,753 --> 00:42:52,010
அவனுடைய குட்டி மகளுக்குத் திருமணம் ஆகும்
அந்த இரவு, நான் அவளோடு நடனம் ஆடுவேன்.

629
00:42:52,886 --> 00:42:55,638
மூன்றாவது, அவனது வாழ்க்கையை
தேவாலயத்தில் மட்டுமல்ல,

630
00:42:55,722 --> 00:43:00,018
மாட்டிறைச்சி மற்றும் பட்வைசர் மதுவுடன் இங்கு
மெக்காவிலும் கொண்டாடுவேன்.

631
00:43:03,938 --> 00:43:05,773
டானி! டானி!

632
00:43:05,857 --> 00:43:07,942
கண்ணீருக்கும், கதைகளுக்கும்
நிறைய நேரம் இருக்கும்,

633
00:43:08,026 --> 00:43:10,153
டானி நம் வாழ்வில் சேர்த்த
அற்புதமானவற்றை நினைவுகூர,

634
00:43:10,236 --> 00:43:12,655
ஆனால் இன்று இரவு,

635
00:43:12,739 --> 00:43:17,493
டானி தன் வாழ்க்கையைக் கொண்டாடியது போல, நாமும்
கோப்பையை உயர்த்தி அவனைக் கொண்டாடுவோம்.

636
00:43:18,703 --> 00:43:20,705
- டானிக்காக!
- டானிக்காக!

637
00:43:20,788 --> 00:43:21,956
உன்னை நேசிக்கிறோம், நண்பா!

638
00:44:02,413 --> 00:44:04,749
மோலி, நீ நிதானமாகப் பேசு.

639
00:44:04,832 --> 00:44:06,042
வீட்டில் யார் இருக்கிறார்கள்?

640
00:44:06,125 --> 00:44:08,127
எஃப்பிஐ. அவர்கள் அனைத்தையும்
எடுத்துக்கொள்கிறார்கள்.

641
00:44:08,211 --> 00:44:11,256
அம்மாவின் கணினி, செக்புக்,
புகைப்படங்கள். நான் என்ன செய்வது?

642
00:44:11,339 --> 00:44:14,634
முதலில், அவர்களிடம் பேசாதே.
ஒரு வார்த்தை கூடப் பேசாதே.

643
00:44:14,717 --> 00:44:15,927
நான் என் வழக்கறிஞரை அழைக்கிறேன்.

644
00:44:16,010 --> 00:44:17,262
அம்மா பயந்திருக்காங்க.

645
00:44:17,345 --> 00:44:19,931
- அம்மா அங்கு இருக்காங்களா?
- இப்போது அவங்களிடம்தான் பேசுகிறார்கள்.

646
00:44:24,936 --> 00:44:27,647
மோலி, நான் சொல்வதை கொஞ்சம் கவனமாகக் கேள்.

647
00:44:28,231 --> 00:44:30,108
ஃபோனைக் கீழே வை, சரியா?

648
00:44:30,191 --> 00:44:32,944
தொடர்பைத் துண்டிக்காதே,
ஃபோனை மட்டும் கீழே வை.

649
00:44:33,027 --> 00:44:35,655
அம்மாவுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு,
உன் வீட்டிற்கு அவங்களைக் கூட்டிட்டுப் போ.

650
00:44:35,738 --> 00:44:38,867
- ஏன்?
- ஃபோனை அப்படியே கீழே வை.

651
00:44:42,495 --> 00:44:45,999
இந்த ஃபோன் கண்காணிக்கப்படுகிறது, நீங்கள்
ஒட்டுக் கேட்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்,

652
00:44:46,082 --> 00:44:47,292
நான் இதைத் தெளிவாகச்
சொல்ல விரும்புகிறேன்.

653
00:44:47,375 --> 00:44:48,960
இப்படிச் செய்ய உங்களுக்கு
எந்த உரிமையும் இல்லை.

654
00:44:49,627 --> 00:44:51,838
என் குடும்பம் எதுவும் செய்யவில்லை.

655
00:44:51,921 --> 00:44:53,047
எனவே, என்னைத் தேடி வாருங்கள்…

656
00:44:55,049 --> 00:44:58,011
என் வாழ்வைக் கிழித்து எறியுங்கள்,
ஆனால் அவர்களை விட்டுவிடுங்கள்.

657
00:44:58,928 --> 00:45:00,763
அவர்கள் ஏற்கனவே போதுமான அளவு
அனுபவித்து விட்டார்கள்.

658
00:45:02,765 --> 00:45:06,019
உன் அப்பா ஜாகிங்கிற்கு
வெளியே சென்றார் என நினைக்கிறேன், அன்பே.

659
00:45:08,771 --> 00:45:10,106
இல்லை, அம்மா.

660
00:45:12,400 --> 00:45:13,776
அப்பா போய்விட்டார்.

661
00:45:14,319 --> 00:45:15,987
அவர் எங்கே போனார்?

662
00:45:19,824 --> 00:45:21,451
உங்களுக்கு ஞாபகம் இல்லை.

663
00:45:21,534 --> 00:45:22,744
ஒரு விபத்து நடந்தது.

664
00:45:24,662 --> 00:45:26,956
சரி. ஐயோ.

665
00:45:27,457 --> 00:45:28,750
என்னை மன்னிச்சிடு.

666
00:45:30,084 --> 00:45:32,086
எனக்கு ஏன் அது ஞாபகம் இல்லை?

667
00:45:33,671 --> 00:45:34,923
பரவாயில்லை.

668
00:45:38,927 --> 00:45:40,428
அது ஒரு துயரமான நாள்.

669
00:45:41,387 --> 00:45:44,140
அவர் உன்னை நினைத்து ரொம்ப பெருமைப்பட்டார், அன்பே.

670
00:45:44,766 --> 00:45:48,186
உன் அப்பா உன்னை அவ்வளவு நேசித்தார்.

671
00:45:51,105 --> 00:45:52,106
ஆமாம்.

672
00:45:52,649 --> 00:45:53,650
உங்களையும் அவர் நேசித்தார்.

673
00:45:54,692 --> 00:45:55,693
ஆமாம்.

674
00:45:56,277 --> 00:45:58,238
நீங்கள் போய், மோலியைப் பார்க்கிறீர்களா?

675
00:45:58,863 --> 00:46:00,406
மோலியால் உங்களுக்கு உதவ முடியும்.

676
00:46:02,158 --> 00:46:03,576
நான் உங்களை நேசிக்கிறேன்.

677
00:46:04,744 --> 00:46:06,204
நானும்தான்.

678
00:46:20,009 --> 00:46:21,010
மன்னிக்கவும்.

679
00:46:21,886 --> 00:46:24,681
எதற்கு? உன் குடும்பத்தைக் காப்பாற்றியதற்காகவா?

680
00:46:24,764 --> 00:46:27,684
அதற்கு நீ எப்போதும் வருத்தப்பட வேண்டியதே இல்லை.

681
00:46:33,273 --> 00:46:34,482
அபாயம், அபாயம், அபாயம்.

682
00:46:34,566 --> 00:46:38,945
நவம்பர் 207 என்ஜினில் நெருப்பு. உடனடி
தரையிறங்கலுக்கு திசை வழிகாட்டுதல் கோருகிறேன்.

683
00:46:39,028 --> 00:46:41,614
காற்றழுத்தம் குறைகிறது. நாம் தரையிறங்க வேண்டும்.

684
00:46:41,698 --> 00:46:44,033
ஹாவ்லாக் காக்பிட் பதிவை உனக்கு அனுப்பினானா?

685
00:46:44,117 --> 00:46:45,910
- சாராவிடம் கொடுத்திருக்கிறான்.
- அவன் ஏன் கொடுத்தான்?

686
00:46:45,994 --> 00:46:47,787
நம்மிடம் இருந்து அவன் திருடி இருக்கிறான்.

687
00:46:47,871 --> 00:46:48,913
குறிப்பு ஏதும் இல்லை. தகவல் ஏதும் இல்லை.

688
00:46:48,997 --> 00:46:51,124
என்னிடம் கொடுக்கச் சொல்லி
அறிவுறுத்தியிருக்கிறான், அவ்வளவுதான்.

689
00:46:51,207 --> 00:46:53,459
அவளது சாவிக்கொத்தில் உள்ள
டிஸ்கோ பந்தில் ஒளித்து வைத்திருக்கிறான்.

690
00:46:54,210 --> 00:46:55,837
சரி, இப்போது என் செய்திகள் இன்னும்
படபடப்பைத் தருகின்றன.

691
00:46:55,920 --> 00:46:56,963
அது என்னது?

692
00:46:57,046 --> 00:46:59,090
அந்தத் தூதுவன் கொண்டு வந்த
ஹார்ட் டிரைவை நாங்கள் மீட்டோம்.

693
00:46:59,173 --> 00:47:00,842
ஆர்க்கைவ் 6. நீ ஓஎஸ்ஐ-யிடம் அதைக் கொடுத்தாய்…

694
00:47:00,925 --> 00:47:02,635
ஆமாம், அவர்கள் என்கிரிப்ஷனை
முறியடிக்க இன்னமும் முயற்சிக்கிறார்கள்.

695
00:47:02,719 --> 00:47:06,389
ஆனால், அவர்கள் பார்த்தவரை, அந்த டிரைவில்
அரச ரகசியங்கள் இல்லை என்று தடயவியல் சொல்கிறது.

696
00:47:06,472 --> 00:47:08,182
அது வழிகாட்டும் குறியீட்டுத் தொகுப்பு.

697
00:47:08,266 --> 00:47:10,435
விமானவியலில் பயன்படுத்தப்படுவது போன்றது.

698
00:47:10,518 --> 00:47:12,145
- விமானத்தில்.
- ஆமாம்.

699
00:47:12,812 --> 00:47:15,899
இன்று, அழைப்பில், உன்னைப்
பாதுகாப்பது போல ஹாவ்லாக் நடித்தான்.

700
00:47:16,441 --> 00:47:17,525
நீ என்னிடம் ஏதும் சொல்லணுமா?

701
00:47:17,609 --> 00:47:19,110
அவன் ஆட்டம் காட்டுகிறான்.

702
00:47:21,237 --> 00:47:22,655
சரிதான். நானும் அப்படித்தான் நினைத்தேன்.

703
00:47:23,156 --> 00:47:25,867
ஆனால், அதாவது, அது விளையாட்டில்லை
என்றால்… நீ என்னிடம் சொல்வாய்தானே?

704
00:47:25,950 --> 00:47:29,621
பார், விமானம் விழுவதற்கு 24 மணிநேரம்
முன் தூதுவன் வந்துவிட்டான். ஏன்?

705
00:47:29,704 --> 00:47:32,707
அது நம் போக்குவரத்து, அது எங்கே
செல்கிறது என்று நமக்குக் கூடத் தெரியாது.

706
00:47:33,208 --> 00:47:36,085
விமானம் அலாஸ்கா வழியாக வருகிறது
என்று தெரிந்த ஒரே ஆட்கள்…

707
00:47:36,169 --> 00:47:38,254
- சிஐஏ தான்.
- நாம் தவறாகப் புரிந்திருந்தால், ஹட்ச்?

708
00:47:38,338 --> 00:47:41,507
தூதுவன் ஹாவ்லாக்கிற்கு வேலை
செய்யாமல், சிஐஏ-விற்கு வேலை செய்தால்?

709
00:47:41,591 --> 00:47:43,843
அந்த ஹார்ட் டிரைவ், ஆர்க்கைவ் 6 ஆக இல்லாமல்,

710
00:47:43,927 --> 00:47:45,637
விமானத்தை வீழ்த்தும் தவறான
மென்பொருளாக இருந்தால்.

711
00:47:46,554 --> 00:47:49,432
ஹாவ்லாக்கைக் கொல்ல, சிஐஏ விமானத்தை
விபத்துக்குள்ளாக்கியது என்கிறாயா?

712
00:47:49,515 --> 00:47:51,726
அது தற்செயலான விபத்து இல்லை
என்று சொல்கிறேன்.

713
00:47:52,435 --> 00:47:53,770
ஸ்கோஃபீல்ட் பற்றி என்ன?
அவளும் இதற்கு உடந்தையா?

714
00:47:53,853 --> 00:47:56,231
எனக்குத் தெரியாது. அதனால்தான்
இது நமக்குள்ளேயே இருக்கணும்.

715
00:47:56,940 --> 00:47:58,900
ஆம், உன் மனைவியிடம் நீ பேச வேண்டும்.

716
00:47:58,983 --> 00:47:59,984
சரி, பேசுகிறேன்.

717
00:48:00,068 --> 00:48:01,986
ஹே, நீயும் நானும் உட்கார்ந்து

718
00:48:02,070 --> 00:48:03,988
இங்கு என்ன நடக்கிறது என்று
கண்டுபிடிக்க வேண்டும், சரியா?

719
00:48:04,072 --> 00:48:05,532
- சரி.
- சரி.

720
00:48:08,868 --> 00:48:10,036
- ஹே.
- ஹே.

721
00:48:10,119 --> 00:48:13,164
நீ அலுவகத்தில் வேலை செய்யலாம்தானே?
நாம் ஆனிக்கு உதவவே இங்கு வந்திருக்கிறோம்.

722
00:48:13,248 --> 00:48:14,582
சரி. அது எனக்குத் தெரியாது என நினைத்தாயா?

723
00:48:14,666 --> 00:48:16,668
இங்கு 15 விஷயங்கள் நடக்கின்றன.

724
00:48:16,751 --> 00:48:19,128
வந்து, அதில் ஒரே ஒரு விஷயத்தில்
மட்டும்தான் எனக்கு அக்கறை இருக்கு.

725
00:48:19,212 --> 00:48:21,005
நம்மையும், நம் குடும்பத்தையும் பற்றித்தான்
எனக்கு அக்கறை.

726
00:48:21,089 --> 00:48:23,508
உனக்கு வேலை இருக்கிறதுதான், ஆனால்…

727
00:48:25,635 --> 00:48:26,928
உன்னால் தேர்வு செய்ய வாய்ப்பும் இருக்கு.

728
00:48:27,512 --> 00:48:29,556
அதற்கு என்ன அர்த்தம்? இல்லை, நில்லு.
அதற்கு என்ன அர்த்தம்?

729
00:48:29,639 --> 00:48:30,640
“தேர்வு செய்ய வாய்ப்பிருக்கு.”

730
00:48:30,723 --> 00:48:34,269
ஹே, இருவரும் வாங்க.
டானியின் பாடல் ஒலிக்கிறது. வாங்க.

731
00:48:34,352 --> 00:48:37,188
- நான் ஆட மாட்டேன்.
- ஆடாமல் இருக்கக் கூடாது. வா, போலாம்.

732
00:49:13,558 --> 00:49:14,559
என்ன தேர்வு?

733
00:49:16,853 --> 00:49:18,938
நான் தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கு
என்று சொன்னாய்.

734
00:49:20,565 --> 00:49:24,485
ஆமாம். உன் வேலை அல்லது உன் குடும்பம்.

735
00:49:27,572 --> 00:49:28,573
ஃபிராங்க்.

736
00:49:29,199 --> 00:49:30,408
இப்போது வேண்டாம்.

737
00:49:30,992 --> 00:49:33,786
மன்னிக்கவும்.
இதைத் தாமதிக்க முடியாது. இது அவசரம்.

738
00:49:55,975 --> 00:49:57,977
ஃபிராங்க், நாம் ஒரு முக்கியமான
விஷயத்தை கண்டுபிடித்திருக்கிறோம்.

739
00:49:58,811 --> 00:50:00,939
நான் ரொமேரோவின் ஆன்லைன்
வீடியோக்களை சல்லடை போட்டுத் தேடினேன்,

740
00:50:01,022 --> 00:50:03,816
அவன் ஹார்ப்பைப் பற்றி குறிப்பிட்டு
பேசிய ஒரு வீடியோ கிடைத்திருக்கு.

741
00:50:03,900 --> 00:50:06,069
ஒரு ஸ்விட்ச் உள்ளது, அது அவசர காலத்தில்

742
00:50:06,152 --> 00:50:07,987
பேட்டரி பேக்அப்பிற்கு
அமைப்பை மாற்ற உத்தரவிடுகிறது.

743
00:50:08,071 --> 00:50:11,032
அந்த ஸ்விட்சை அமைப்பில் உள்ள
கோளாறு என்று ரொமேரோ சொல்கிறான்.

744
00:50:11,115 --> 00:50:14,536
அமைப்பு திரும்ப ஆன்லைனுக்கு வரும்போது,
அந்த ஸ்விட்ச் அதன் இடத்தில் இல்லாவிட்டால்,

745
00:50:14,619 --> 00:50:16,704
முதன்மை மின்சாரமும், பேட்டரி பேக்அப்பும்

746
00:50:16,788 --> 00:50:18,248
சேர்ந்து இணைப்பில் வரும்.

747
00:50:20,792 --> 00:50:23,419
ஹார்ப் திரும்ப ஆன்லைனுக்கு வரும்போது,
அந்த ஸ்விட்ச் அங்கு இல்லை என்றால்,

748
00:50:23,503 --> 00:50:25,380
நம் மொத்த மின்சார அமைப்பும் நொறுங்கிவிடும்.

749
00:50:26,005 --> 00:50:27,840
சரி. ஜெனரலை கூப்பிடு.
இது ஒரு பொறி என்று சொல்.

750
00:50:27,924 --> 00:50:29,509
இயக்க வேண்டாம் என்று சொல்.

751
00:50:29,592 --> 00:50:31,344
- சரியா?
- புரிகிறது.

752
00:51:48,671 --> 00:51:50,673
தமிழாக்கம்
மேனகா மணிகண்டன்

