1
00:00:12,283 --> 00:00:13,701
நீ முயற்சிகூட செய்யவில்லை.

2
00:00:14,285 --> 00:00:16,286
செய்கிறேன். எனக்கு சக்தி இல்லை.

3
00:00:17,539 --> 00:00:18,540
வழி கண்டுபிடி.

4
00:00:18,623 --> 00:00:20,583
தேவைப்பட்டால் போய் உதவி தேடு.

5
00:00:20,667 --> 00:00:24,003
சிறையில் 12 வருடங்கள் உயிர் பிழைத்ததும்,
விமான விபத்திலிருந்து தப்பித்ததும்,

6
00:00:24,087 --> 00:00:26,506
இங்கே கரடி போல இறப்பதற்கு அல்ல.

7
00:00:39,394 --> 00:00:40,436
ஹலோ.

8
00:00:42,021 --> 00:00:43,648
ஹே, கண்ணா.
உனக்கு ஒரு குறிப்பு வைத்துவிட்டு வந்தேனே.

9
00:00:45,483 --> 00:00:48,444
இல்லை. நான் பொறிகளை சரிபார்க்க
வந்தேன். ஏதும் பிரச்சினை இல்லையே?

10
00:00:49,863 --> 00:00:51,155
சரி, நான் நலம்தான்.

11
00:00:52,657 --> 00:00:53,992
உண்மையில், நான் உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.

12
00:00:58,288 --> 00:00:59,622
அடக் கடவுளே. வாக்கர்.

13
00:01:00,915 --> 00:01:02,333
வாழ்த்துகள்.

14
00:01:03,418 --> 00:01:04,418
இது நடக்கும் என்று தெரியும்.

15
00:01:05,295 --> 00:01:06,880
உனக்காக ரொம்ப சந்தோஷப்படுகிறேன்.

16
00:01:08,172 --> 00:01:09,757
வாஷிங்டன் ஸ்டேட், வாக்கர்.

17
00:01:11,509 --> 00:01:13,011
உன் அப்பா ரொம்ப பெருமைப்படுவார்.

18
00:01:17,932 --> 00:01:19,225
நான் இங்கிருந்து வெளியே போகணும்.

19
00:01:19,309 --> 00:01:21,019
நான் கொண்டாட வேண்டும்.

20
00:01:21,102 --> 00:01:22,186
நான் இப்போது வீட்டுக்கு வருகிறேன்.

21
00:01:31,613 --> 00:01:32,655
உன் தொப்பியை போட்டுக்கொள்.

22
00:01:41,706 --> 00:01:42,832
நீ யாரென்று எனக்குத் தெரியும்.

23
00:01:44,876 --> 00:01:46,085
இப்படிச் செய்யாதே.

24
00:01:48,796 --> 00:01:49,839
நில்லு.

25
00:01:51,424 --> 00:01:52,675
அதை அவிழ்த்து விடு.

26
00:01:57,597 --> 00:01:59,182
நான் சொன்னது கேட்டிருக்கும். அதை அவிழ்த்து விடு.

27
00:01:59,265 --> 00:02:00,433
அதை உடனே அவிழ்த்து விடு.

28
00:02:00,516 --> 00:02:02,310
நீங்கள் ஏன் இன்னும் அதை கழற்றவில்லை?

29
00:02:02,393 --> 00:02:04,729
- எப்படி என்று எனக்குத் தெரியாது.
- இங்கிருந்து என்னை வெளியேற்று.

30
00:02:05,813 --> 00:02:06,940
திறந்து விடு.

31
00:02:11,986 --> 00:02:13,112
அவளிடம் துப்பாக்கி இருக்கு!

32
00:02:16,491 --> 00:02:17,575
நான் உன்னைக் காயப்படுத்த விரும்பவில்லை.

33
00:02:29,587 --> 00:02:32,090
ஒன்று, இரண்டு, மூன்று.

34
00:02:34,926 --> 00:02:36,886
இரண்டு, மூன்று.

35
00:03:07,625 --> 00:03:09,294
அடச்சே.

36
00:03:09,377 --> 00:03:10,962
அடச்சே.

37
00:03:45,872 --> 00:03:46,873
அலாஸ்கா மாநிலப் படை

38
00:03:53,588 --> 00:03:55,798
அடச்சே. இவள் ஒரு போலீஸ்.

39
00:03:55,882 --> 00:03:56,883
அவளது சாவியை எடு.

40
00:03:56,966 --> 00:03:58,676
- அவளை என்ன செய்வது?
- அவளைப் பற்றி கவலைப்படாதே.

41
00:03:59,719 --> 00:04:01,596
அவளுடைய சாவியைத் தேடு.

42
00:04:44,806 --> 00:04:45,932
ஃபேர்பேங்க்ஸுக்கு வரவேற்கிறோம்

43
00:04:50,019 --> 00:04:51,187
மத்திய புலனாய்வு நிறுவனம்

44
00:05:59,589 --> 00:06:02,967
ஃபேர்பேங்க்ஸுக்கு வருக
ஃபிராங்க்

45
00:06:55,853 --> 00:06:59,566
துப்பு சொல்லும் ஃபோன் அடித்துக்கொண்டே இருக்கிறது.
வாகனங்கள் திருடப்பட்டன, செல்லப்பிராணிகளை காணலை,

46
00:06:59,649 --> 00:07:01,276
கோல்ட்பேனர் விடுதியில் திருட்டு.

47
00:07:01,359 --> 00:07:02,986
அப்படியா? கோல்ட்பேனரிலிருந்து
என்ன திருடினார்கள்?

48
00:07:03,069 --> 00:07:04,070
பணம், கார்டுகள்.

49
00:07:04,153 --> 00:07:05,280
உங்கள் தோள்பட்டை எப்படி இருக்கு?

50
00:07:05,363 --> 00:07:06,739
கோல்ட்பேனருக்கு ஒரு காரை அனுப்பு.

51
00:07:06,823 --> 00:07:09,909
அது தப்பியோடிய கைதிதான், வாய்ப்பைப் பயன்படுத்திய
உள்ளூர் ஆளில்லை என்று உறுதிப்படுத்துவோம்.

52
00:07:09,993 --> 00:07:11,327
பட்டி செல்க் பற்றி பேச வேண்டுமா?

53
00:07:11,828 --> 00:07:12,996
அவனிடம் தப்பியோடிய கைதி இருக்கிறானா?

54
00:07:13,079 --> 00:07:15,331
இந்த மனித வேட்டையை கொண்டாடும் விதத்தில்
அவன் டி-ஷர்ட்டுகளை தயாரிக்கிறான்.

55
00:07:15,415 --> 00:07:17,166
வால்மார்ட் பார்க்கிங் இடத்தில்
அவற்றை விற்பதாக நினைக்கிறேன்.

56
00:07:17,250 --> 00:07:19,002
அவன் பாட்டியை அனுப்பு.
அவள் என்னை ரொம்பவும் பயமுறுத்துவாள்.

57
00:07:19,085 --> 00:07:20,253
அவள் அவனை பார்த்துக்கொள்ளட்டும்.

58
00:07:27,343 --> 00:07:29,178
- ரெம்னிக், அங்கு இருக்கிறாயா?
- பொறிகள் இருக்கிறது, ஜாக்கிரதை.

59
00:07:29,804 --> 00:07:31,264
ரெம்னிக் நீ பேசலாம்.

60
00:07:31,806 --> 00:07:32,974
ஃபிராங்க், நமக்கு ஒரு பிரச்சினை.

61
00:07:34,809 --> 00:07:36,603
இங்கே எல்லா விதமான ஆயுதம் ஏந்திய
பொதுமக்கள் இருக்கிறார்கள்.

62
00:07:36,686 --> 00:07:40,023
ஆண்கள், பெண்கள், பத்து வயதுக்கு
குறைவான சில குழந்தைகள்.

63
00:07:40,106 --> 00:07:41,691
முதியவர் கோல்பெக்கின்
அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.

64
00:07:42,275 --> 00:07:44,152
சரி. அங்கே இருப்பதற்கு அவர்கள்
உரிமையாளரிடம் அனுமதி வாங்கி இருப்பதால்,

65
00:07:44,235 --> 00:07:46,654
அவர்கள் தேட விரும்பினால், அதைப் பற்றி
நம்மால் எதுவும் செய்ய முடியாது.

66
00:07:46,738 --> 00:07:48,865
அந்த வீழ்ச்சி நூறு அடி ஆழம் இருக்கலாம்.

67
00:07:48,948 --> 00:07:50,909
அவன் விழுந்து
உயிர் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை.

68
00:07:51,659 --> 00:07:54,162
அங்கே எங்கோதான் சடலம் இருக்கும்,
எனவே சூரியன் மறையும் வரை காத்திரு.

69
00:07:54,245 --> 00:07:56,331
- என்ன நடக்கிறது?
- வாஷிங்டனுடன் பேசினேன்.

70
00:07:56,414 --> 00:07:58,583
என் ஸீனோகேட் அக்கவுண்ட்டில் ஏற்பட்ட
அத்துமீறிய நுழைவை சைபர் பிரிவு விசாரிக்கிறது.

71
00:07:59,167 --> 00:08:01,044
- உங்கள் தோள்பட்டை எப்படி இருக்கு?
- அதைப் பற்றி பேச விரும்பலை.

72
00:08:01,127 --> 00:08:03,421
அந்த டன்ட்ரா வாகன சண்டையில், சர்வ் செய்யும்
அவருடைய தோள்பட்டை காயப்பட்டது.

73
00:08:03,504 --> 00:08:05,757
- ஜேன். நான் அதைப் பற்றி பேச விரும்பலை.
- அவர் டென்னிஸ் விளையாடுவாரா?

74
00:08:05,840 --> 00:08:07,425
ஃபிராங்க்கும் அவரது நண்பர்களும்
பிங்-பாங் லீக் வைத்திருக்கிறார்கள்,

75
00:08:07,508 --> 00:08:09,135
இந்தக் காயம் அவர் விளையாட்டை பாதிக்கும்
என கவலைப்படுகிறார்.

76
00:08:09,219 --> 00:08:12,096
ஓ, பிங்-பாங் லிகா. உண்மையாகவா?

77
00:08:12,180 --> 00:08:14,307
அதற்கு டேபிள் டென்னிஸ் என்று பெயர்,
அது ரொம்ப தீவிரமானது, ஒரு உண்மையான போட்டி.

78
00:08:14,390 --> 00:08:15,558
நாங்கள் பணத்திற்காக விளையாடுவோம்.

79
00:08:15,642 --> 00:08:16,726
- ஃபிராங்க்.
- சொல்.

80
00:08:17,310 --> 00:08:19,145
ரூத் ரீட், எஸ்டரைச் சேர்ந்த மாநில காவலர்.

81
00:08:19,229 --> 00:08:21,689
அவள் இன்று வேலைக்கு வரவில்லை
எனவே ஒரு காரை அனுப்பினார்கள்.

82
00:08:21,773 --> 00:08:23,441
அவள் சடலத்தைக் கண்டுபிடித்தார்கள்.

83
00:08:25,026 --> 00:08:26,277
நானும் வருகிறேன்.

84
00:08:33,117 --> 00:08:35,661
- அவனை அழுத்தி பிடி!
- சரி. முயற்சி செய்கிறேன்.

85
00:08:35,745 --> 00:08:37,539
ஹே. சரி. எனக்கு ஒரு மில்லி
ட்ரோபெரிடால் தேவை.

86
00:08:37,622 --> 00:08:38,830
செக்யூரிட்டி! என்ன நடந்தது?

87
00:08:38,915 --> 00:08:40,750
இந்த முட்டாள் வெய்ன் கிரேசனின் குடிசைக்குள்
அத்துமீறி நுழைய முயன்றான்,

88
00:08:40,833 --> 00:08:42,293
வெய்ன் இவனை ஏதோ காட்டு விலங்கு என நினைத்தார்.

89
00:08:42,377 --> 00:08:43,628
- இதோ நாம்…
- சுத்தப் பொய்!

90
00:08:45,672 --> 00:08:46,673
மீண்டும் வரவேற்கிறேன்.

91
00:08:47,590 --> 00:08:50,009
- திரும்பி வந்ததில் சந்தோஷம்.
- நன்றி.

92
00:08:50,093 --> 00:08:51,261
சாரா.

93
00:08:51,344 --> 00:08:53,137
- என்ன?
- நாம் கொஞ்சம் பேசணும்.

94
00:08:53,930 --> 00:08:56,683
நீ கடந்து வந்த இந்த அனுபவத்திற்கு பிறகு,

95
00:08:56,766 --> 00:08:59,435
மன உளைச்சல் ஆலோசகரோடு உட்கார்ந்து
பேசுவதுதான் விதிமுறை என்று உனக்கே தெரியும்.

96
00:08:59,519 --> 00:09:01,145
ஓ. அது தேவையில்லை.

97
00:09:01,229 --> 00:09:03,106
வந்து… ப்ளீஸ், டாட்டுடன் பேசு.

98
00:09:03,731 --> 00:09:04,899
நாம் ஒரு நெருக்கடியின் நடுவில் இருக்கிறோம்.

99
00:09:04,983 --> 00:09:07,443
நான் உட்கார்ந்து என் உணர்வுகள்
பற்றி பேச விரும்புகிறாயா?

100
00:09:07,527 --> 00:09:08,778
பென், நான் நல்லாத்தான் இருக்கேன்.

101
00:09:08,862 --> 00:09:09,863
அதைக் கேட்டதில் சந்தோஷம்,

102
00:09:09,946 --> 00:09:13,741
ஆனால், ஆலோசகர் ஒப்புதல் அளிக்கும் வரை,
நீ வேலைக்கு திரும்ப முடியாது.

103
00:09:16,286 --> 00:09:17,370
டாட்டிடம் பேசு.

104
00:09:28,131 --> 00:09:30,717
கடவுளே! அரசு அதிகாரிகள் அதற்குள்
இங்கு வந்து, என்ன செய்கிறார்கள்?

105
00:09:30,800 --> 00:09:31,801
எஃப்பிஐ

106
00:09:31,885 --> 00:09:33,094
என் கணவரைத் தேடுகிறேன்.

107
00:09:33,177 --> 00:09:35,597
அந்தக் காவலர் இறந்ததற்கும்
அவனுக்கும் சம்பந்தம் இருக்குமா, என்ன?

108
00:09:35,680 --> 00:09:36,931
அது அவன் திட்டத்துக்கு உதவும் என்றால், இருக்கும்.

109
00:09:37,015 --> 00:09:38,600
- ஹட்ச்.
- ஷா.

110
00:09:39,183 --> 00:09:40,768
- ஃபிராங்க். மோசமான நாள்.
- ஹே.

111
00:09:40,852 --> 00:09:42,437
ஆமாம், அது இன்னும் முடியவில்லை.

112
00:09:43,396 --> 00:09:44,856
நாம் யாரைத் தேடுகிறோம் என்று தெரியுமா?

113
00:09:44,939 --> 00:09:47,066
இன்னும் இல்லை. ஆனால் இந்த ஆள் கொடூரமானவன்.

114
00:09:47,150 --> 00:09:48,943
பாதிக்கப்பட்டவர் அடிக்கப்பட்டு,
கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

115
00:09:49,027 --> 00:09:51,613
- இப்போது வைகாப்பில் கைரேகைகளை சோதிக்கிறோம்.
- அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

116
00:09:51,696 --> 00:09:53,907
- ஒரு மணிநேரம். இரண்டு கூட ஆகலாம்.
- நம்மிடம் அவ்வளவு நேரமில்லை.

117
00:09:53,990 --> 00:09:55,450
மன்னிக்கவும். நீ கிளம்பிவிட்டாய் என்று நினைத்தேனே?

118
00:09:55,533 --> 00:09:58,203
- நான்தான் அவளை இருக்கச் சொன்னேன். சரியா?
- நீ உண்மையான தொப்பி அணிந்திருக்க போல.

119
00:09:58,286 --> 00:09:59,495
நாம் விரைவாக போக வேண்டும்.

120
00:09:59,579 --> 00:10:01,539
பாரு, நாம் எல்லோரும் இங்கே
ஒரே இலக்கைத்தான் தேடுகிறோம்.

121
00:10:01,623 --> 00:10:03,458
நீ வேலையைத் தொடங்க, உனக்கு
ஒரு பெயரைக் கண்டுபிடிக்கத்தான் முயல்கிறேன்.

122
00:10:03,541 --> 00:10:05,877
எஃப்பிஐயைவிட வேகமாக கொலையாளியை
அடையாளம் காண உனக்கு ஏதும் வழி தெரிந்தால்,

123
00:10:05,960 --> 00:10:07,212
தயவுசெய்து என்னிடம் சொல்.

124
00:10:07,295 --> 00:10:09,130
அந்த பயணப் பாதை கேமராக்களை சோதித்து பார்த்தாயா?

125
00:10:10,924 --> 00:10:12,508
பயணப் பாதை கேமரா திரை

126
00:10:13,051 --> 00:10:16,346
மூத்தவள்
கேத்தரின் வேன் ஹார்ன் எனும் கிட்டி.

127
00:10:16,429 --> 00:10:18,723
தன் மூன்று கணவர்கள், ஒரு வருங்கால கணவர்
மற்றும் மெய்னில்

128
00:10:18,806 --> 00:10:20,516
மனைவியை இழந்த ஒருவரை கொன்ற
கருப்பு விதவை கொலைகாரி அவள்.

129
00:10:21,226 --> 00:10:24,437
அந்த விஷம் கொல்லாததால் அவளுடைய
கடைசி கணவனுக்கு பக்கவாதம் வந்துவிட்டது.

130
00:10:24,520 --> 00:10:26,648
எனவே வேன் ஹார்ன் அவனைப் படகில்
அழைத்து சென்று மூழ்கடித்து கொன்றாள்.

131
00:10:26,731 --> 00:10:28,650
காதலில் நான்தான் துரதிர்ஷ்டசாலி
என்று நினைத்தேன்.

132
00:10:28,733 --> 00:10:30,652
கொலை செய்த ஆண்களிடம் இருந்து
அவள் திருடிய

133
00:10:30,735 --> 00:10:32,153
42 லட்ச டாலர்கள் எதுவுமே
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

134
00:10:32,237 --> 00:10:34,531
எனவே அவளுக்கு பண பலம் இருப்பதாகக் கருதலாம்.

135
00:10:34,614 --> 00:10:35,615
மெதுவாக சாப்பிடு.

136
00:10:35,698 --> 00:10:38,243
பரோட்டாவையே பார்க்காதது போல சாப்பிடுகிறாய்.

137
00:10:38,326 --> 00:10:39,869
இன்னொருத்தியின் பெயர் விவியன் பைக்.

138
00:10:39,953 --> 00:10:43,206
கேடி. ஏமாற்றுக்காரி. 13 வயதில் இருந்து
நீதிமன்றத்தில் சிக்காமல் தப்பித்து வரும்

139
00:10:43,289 --> 00:10:44,624
வன்முறையற்ற குற்றவாளி.

140
00:10:44,707 --> 00:10:46,584
போன இலையுதிர்காலத்தில், டெக்ஸாஸ் அவளை
ஆல் மாறாட்ட வழக்கில் பிடித்தது,

141
00:10:46,668 --> 00:10:47,919
ஆனால் நீதிபதி மென்மையாக நடந்துகொண்டார்.

142
00:10:48,002 --> 00:10:50,755
அவளது தண்டனை 18 மாதங்களாகக் குறைக்கப்பட்டு,
சேவை செய்த நேரத்துடன் முடிந்தது.

143
00:10:50,838 --> 00:10:53,007
- ஃபிராங்க்?
- என்ன?

144
00:10:53,091 --> 00:10:54,425
நீங்கள் இதைப் பார்க்க வேண்டும்.

145
00:10:56,970 --> 00:10:59,347
இந்தக் கைதி புகைப்படங்களை நாம் வெளியிடுவோம்.
பத்திரிகையாளர்களோடு பேசுவோம்.

146
00:10:59,931 --> 00:11:02,308
இந்தப் பெண்கள் ஒரு அதிகாரியைக் கொலை
செய்தார்கள் என்று தெரிவிப்போம்.

147
00:11:03,309 --> 00:11:04,310
பரிச்சயமானது போலத் தோன்றுகிறதா?

148
00:11:05,228 --> 00:11:06,980
- அடக் கடவுளே.
- உங்களுடையது.

149
00:11:07,063 --> 00:11:09,691
சாராவின் மீட்பு வீடியோவில்
அதைத்தான் அவன் அணிந்திருந்தான்.

150
00:11:09,774 --> 00:11:11,568
இவர்கள் இருவரும் ஹாவ்லாக்கோடு பயணித்தார்களா?

151
00:11:11,651 --> 00:11:13,236
அவர்களை கண்டுபிடிக்கும்போது, கேட்போம்.

152
00:11:28,293 --> 00:11:29,627
தொலைநோக்கு பிரச்சினையா
அல்லது வேறு ஏதாவது?

153
00:11:31,963 --> 00:11:33,131
அடச்சே.

154
00:11:41,514 --> 00:11:44,017
பொறுங்க. நமக்கு மேலும் பிரச்சினை தேவையில்லை.

155
00:12:00,867 --> 00:12:02,243
வெளியே போக பின்பக்கம் ஒரு வழி இருக்கு.

156
00:12:02,327 --> 00:12:05,121
சாப்பிடும் அறை, அந்த ஆட்டுத் தலையைத் தாண்டி
போகலாம், அல்லது அது எதுவாக இருந்தாலும்.

157
00:12:08,249 --> 00:12:10,668
நீங்கள் அங்கே போய்,
பின் பக்கமாக வெளியேறுங்கள்.

158
00:12:10,752 --> 00:12:12,670
போகும் வழியில், உள்ளே போய்,
கழிவறை கதவை பூட்டிக்கொள்.

159
00:12:12,754 --> 00:12:14,797
பார்க்கிங் இடத்தில், ஃபோன் பூத்தில் நாம் சந்திப்போம்.

160
00:12:15,632 --> 00:12:17,425
நீ என்ன செய்வதாக திட்டமிட்டிருக்கிறாய்?

161
00:12:24,557 --> 00:12:25,558
அதை நிறுத்து.

162
00:12:25,642 --> 00:12:27,435
என்னை தனியாக விடுங்கள்.

163
00:12:28,478 --> 00:12:29,479
அழுவதை நிறுத்து.

164
00:12:29,562 --> 00:12:32,690
- அழுதுத் தொலையாதே.
- தனியா விடச் சொன்னேன்!

165
00:12:47,413 --> 00:12:48,706
நீ நலமா, செல்லம்?

166
00:12:51,376 --> 00:12:54,212
- ஓ. ஐயோ.
- நான்…

167
00:12:54,295 --> 00:12:58,675
- நிச்சயம் நீ பிரச்சினையில் இருக்க.
- ஒன்றுமில்லை, என் அம்மா வருத்தமா இருக்காங்க.

168
00:13:00,927 --> 00:13:02,136
ஆமாம், சரி.

169
00:13:06,140 --> 00:13:07,809
மன்னிக்கவும், அதிகாரி அவர்களே.

170
00:13:07,892 --> 00:13:09,894
இங்கே ஒரு பிரச்சினை
ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்…

171
00:13:15,024 --> 00:13:16,317
நீங்கள் நலமா, மிஸ்?

172
00:13:18,111 --> 00:13:19,362
இல்லை, நான் நலம்தான்.

173
00:13:19,445 --> 00:13:21,072
நன்றி, அதிகாரி அவர்களே.

174
00:13:21,781 --> 00:13:23,116
மேடம், உள்ளே இருக்கிறீர்களா?

175
00:13:25,243 --> 00:13:26,411
மேடம், நான் உள்ளே வருகிறேன்.

176
00:13:36,838 --> 00:13:39,090
அலாஸ்கா மாநிலப் படை

177
00:13:52,854 --> 00:13:54,480
நீ இதை விசாரிக்க வேண்டும்.

178
00:13:57,192 --> 00:13:58,484
இது என்னது?

179
00:13:58,568 --> 00:14:01,738
வந்து, ஆதாரத்தில் இருந்து நாம் திருடிய
மெமரி கார்டை ஹட்ச் பார்த்துவிட்டான்.

180
00:14:01,821 --> 00:14:03,489
என் மனைவியைப் பிணைக்கைதியாக வைத்திருந்தபோது,
உன் கணவன்

181
00:14:03,573 --> 00:14:05,366
- வங்கியில் பணமாற்றம் செய்திருக்கிறான் போலும்.
- ஸூரிச்.

182
00:14:05,450 --> 00:14:08,244
லக்ஸம்பெர்க். ரீகா.

183
00:14:08,328 --> 00:14:10,538
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள
ஒரு வங்கியில் நான்கு டெபாசிட்டுகள்.

184
00:14:10,622 --> 00:14:12,165
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் என்ன இருக்கு?

185
00:14:12,248 --> 00:14:14,375
என் கடவுச்சொல்லை வாங்கவும்,
என் ஸீனோகேட் கணக்கை அணுகவும்

186
00:14:14,459 --> 00:14:16,336
அவன் விரும்பியதற்கு தொடர்புடைய
ஏதாவது இருக்க வேண்டும்.

187
00:14:18,463 --> 00:14:19,464
இது எப்படி நடந்தது?

188
00:14:22,342 --> 00:14:23,426
நீங்க இருவரும் சேர்ந்தது?

189
00:14:27,096 --> 00:14:28,348
நீ அவனைக் காதலித்தாயா?

190
00:14:32,393 --> 00:14:35,980
உங்கள் முதுகில் உள்ள தழும்புகளைப் பற்றி நீங்கள்
சொன்ன பிறகு நான் சொன்னால் பரவாயில்லையா?

191
00:14:53,706 --> 00:14:55,291
எனக்கு அதை மீண்டும் விளக்கு.

192
00:14:57,627 --> 00:15:00,255
- இதைப் பற்றி பிறகு பேசலாமா?
- நிறுத்து, நான் சீரியஸாக கேட்கிறேன்.

193
00:15:00,338 --> 00:15:02,966
- நாம் மறுபரிசீலனை செய்வோம்.
- வா. இரண்டு நாட்கள்தான் சேர்ந்து இருக்க போகிறோம்.

194
00:15:04,092 --> 00:15:05,510
பரிமாற்றம் இன்றிரவு நடக்கிறது.

195
00:15:05,593 --> 00:15:06,636
அதை மறுபரிசீலனை செய்வோம்.

196
00:15:07,804 --> 00:15:09,013
டின்ஸ்கா.

197
00:15:09,597 --> 00:15:10,765
பின்பக்கத்தில் உள்ள மேஜை.

198
00:15:11,516 --> 00:15:13,017
அவன் ஒரு பெண்ணோடு இருப்பான்.

199
00:15:15,436 --> 00:15:16,437
நான் போகப் போவதில்லை.

200
00:15:19,899 --> 00:15:21,568
கண்டிப்பாக, நீ போவாய்.

201
00:15:24,404 --> 00:15:25,446
லீவை?

202
00:15:31,661 --> 00:15:33,705
- என்ன நடக்கிறது?
- அவனுக்கு நம்மைப் பற்றி தெரியும்.

203
00:15:35,832 --> 00:15:37,208
உன்னையும் என்னையும் பற்றி.

204
00:15:39,210 --> 00:15:40,545
நாம் இதை நிறுத்த வேண்டும்.

205
00:15:45,216 --> 00:15:47,135
ரெம்னிக், இணைப்பில் இருக்கிறாயா? ஃபிராங்க்?

206
00:15:47,218 --> 00:15:49,721
- ஃபிராங்க் பேசுகிறேன், என்ன விஷயம்?
- இங்கே ஆறு மைல்கள் தேடிவிட்டோம்.

207
00:15:49,804 --> 00:15:52,307
வசந்த காலம் வரும் வரை
இதைக் கண்டுபிடிக்க முடியாது.

208
00:15:55,101 --> 00:15:57,061
சரி, தேடலை நிறுத்திவிட்டு,
பேஸுக்கு திரும்பி வா.

209
00:15:57,145 --> 00:15:58,980
- அப்போது, உள்ளூர் காவலர்கள்?
- உள்ளூர் காவலர்களுக்கு என்ன?

210
00:15:59,063 --> 00:16:00,899
தன் இடத்தில் அவர்கள் தேடுவதை
கோல்பெக் விரும்பினால்,

211
00:16:00,982 --> 00:16:03,109
நம்மால் எதுவும் செய்ய முடியாது.
அது அவர்களின் சொந்த பிரச்சினை.

212
00:16:04,110 --> 00:16:05,445
என்ன? என்ன விஷயம்?

213
00:16:06,154 --> 00:16:08,364
அவன் இறக்கவில்லை என்று
உங்களுக்குத் தெரியும்தானே?

214
00:16:10,742 --> 00:16:12,702
அது அவ்வளவு சுலபமில்லை என்று
நம் இருவருக்கும் தெரியும்.

215
00:16:43,066 --> 00:16:44,567
உன் குடும்பம் நிறைய அனுபவித்து விட்டது.

216
00:16:44,651 --> 00:16:46,152
உண்மையாகவே இது தேவையா?

217
00:16:46,236 --> 00:16:48,947
அதாவது, அவசரப் பிரிவில் உதவி தேவைப்படும்
மக்கள் நிறைந்திருக்கிறார்கள்.

218
00:16:52,283 --> 00:16:54,202
- உனக்கு உதவி தேவையா?
- எனக்கு என்ன?

219
00:16:54,285 --> 00:16:58,456
எனக்கு உதவி தேவையில்லை.
என் படிவங்களில் நீ கையெழுத்து போடணும்.

220
00:17:00,166 --> 00:17:01,543
உன் கஷ்டங்களைப் பற்றி சொல்.

221
00:17:02,544 --> 00:17:04,254
சாரா, நீ இங்கே உட்கார்ந்திருப்பதே
உன் அதிர்ஷ்டம்தான்.

222
00:17:04,337 --> 00:17:05,754
அது எப்படி உனக்கு உணர வைக்கிறது?

223
00:17:05,838 --> 00:17:08,007
நீ எதிர்பார்க்கும்படியேதான்.

224
00:17:08,090 --> 00:17:09,175
நிம்மதியாக.

225
00:17:09,884 --> 00:17:11,844
இங்கு இருப்பதில் மகிழ்ச்சி.
உதவ முடிந்ததற்கு மகிழ்ச்சி.

226
00:17:11,927 --> 00:17:14,263
ஆமாம். உன் வேலை பொறுப்புகளைத் தொடர
நீ தயாராக இருக்கிறாய் என்று

227
00:17:14,347 --> 00:17:17,767
மருத்துவமனையை நம்ப வைக்க அது போதுமானதாக
இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

228
00:17:18,350 --> 00:17:19,936
உண்மையாகவா? அது போதாதா?

229
00:17:20,686 --> 00:17:22,312
சாரா, எனக்கு உன்னைப் பற்றித் தெரியும்.

230
00:17:22,397 --> 00:17:24,607
அந்த பார்வை, அந்த தொனி எனக்குத் தெரியும்.

231
00:17:24,691 --> 00:17:27,068
- ஆமாம். நான் விரக்தியடைந்திருக்கிறேன்.
- சரி.

232
00:17:27,151 --> 00:17:28,235
ஏனென்று சொல்.

233
00:17:29,571 --> 00:17:31,072
நீ எப்படி உணர்கிறாய் என்று
தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

234
00:17:31,155 --> 00:17:32,448
நான் எப்படி உணர்கிறேன் என தெரிந்துகொள்ளணுமா?

235
00:17:32,532 --> 00:17:34,826
சரி. நான் எப்படி உணர்கிறேன் என்றால்…

236
00:17:36,578 --> 00:17:37,579
பதற்றமாக.

237
00:17:38,079 --> 00:17:40,915
கவனம் சிதறி. என் மகனைப் பற்றி கவலையாக இருக்கு.

238
00:17:41,666 --> 00:17:42,959
நான்…

239
00:17:44,085 --> 00:17:46,337
ஒரு அம்மாவாக தோற்றுவிட்டதாக உணர்கிறேன்,

240
00:17:46,963 --> 00:17:49,507
ஏனெனில் இங்கே உட்கார்ந்துகொண்டு
உன்னோடு பேசுவதற்கு பதில்,

241
00:17:49,591 --> 00:17:51,843
நான் லூக்கோடு இருந்து, அவனை
வீட்டிற்கு அழைத்து வந்திருக்கணும்.

242
00:17:56,180 --> 00:17:57,181
என்ன தெரியுமா?

243
00:17:58,433 --> 00:17:59,767
நாம் பேசி முடித்துவிட்டோம் என நினைக்கிறேன்.

244
00:17:59,851 --> 00:18:02,353
உன் ஆவணங்களை வைத்துக்கொள்.
நான் வெளியேறுகிறேன் என்று பென்னிடம் சொல்.

245
00:18:02,437 --> 00:18:04,022
நான் என் மகனைக் காப்பாற்றப் போகிறேன்.

246
00:18:07,525 --> 00:18:09,110
அடச்சே.

247
00:18:11,070 --> 00:18:13,114
என் கார் போலீஸ் கிடங்கில் இருக்கு.

248
00:18:14,032 --> 00:18:15,158
நான் கூட்டிட்டு போகவா?

249
00:18:26,628 --> 00:18:27,629
ஹே.

250
00:18:27,712 --> 00:18:29,631
ஹே, அமைதியாகுங்கள். பாதுகாப்பாக இருக்கிறீர்கள்.

251
00:18:31,883 --> 00:18:34,010
நாம் பேசுவது யாருக்கும் கேட்காது.
நாம் தனியாக இருக்கிறோம்.

252
00:18:34,844 --> 00:18:37,680
என் போன்றவனுக்கு எவ்வளவு வளங்களை செலவிடுகிறார்கள்
என உன்னால் கற்பனைகூட செய்ய முடியாது.

253
00:18:38,264 --> 00:18:39,724
அந்த விமானம் பற்றி உன்னிடம் சொன்னேனே?

254
00:18:39,807 --> 00:18:41,267
அது தானாக வானத்திலிருந்து விழவில்லை.

255
00:18:41,351 --> 00:18:42,936
அது விபத்துக்காக வடிவமைக்கப்பட்டது.

256
00:18:43,895 --> 00:18:45,813
நாங்கள் உயிர் பிழைக்கக் கூடாது
என திட்டமிடப்பட்டிருந்தது.

257
00:18:54,572 --> 00:18:56,741
- அவருக்கு ஒரு குடும்பம் இருந்தது, தெரியுமா?
- லூக். வேண்டாம்.

258
00:18:56,824 --> 00:18:58,451
என்ன? அவருக்கு அக்கறை இல்லை.

259
00:18:59,285 --> 00:19:03,790
அந்த சீருடை அணிந்தபோதே
அதன் ஆபத்துகளை அவன் அறிந்திருந்தான்.

260
00:19:04,666 --> 00:19:05,750
எனக்குப் புரிகிறது.

261
00:19:05,833 --> 00:19:07,961
முதல் முறையாக ஒரு பிணத்தைப் பார்ப்பது
ஒரு கடினமான விஷயம்.

262
00:19:08,044 --> 00:19:09,462
எனக்கு வேறு வழி இல்லை.

263
00:19:13,508 --> 00:19:14,509
அந்த சத்தம் கேட்டதா?

264
00:19:15,927 --> 00:19:17,345
பாரு, எனக்கு அந்த சத்தம் கேட்டது.

265
00:19:21,474 --> 00:19:24,185
அந்த நாசக்காரர்கள் தங்கள் போலார் படையிலிருந்து
ஒரு விஐஐஆர்எஸ் எடுத்திருக்கலாம்.

266
00:19:26,062 --> 00:19:28,898
உங்களுக்கு ஒரு தேர்வு இருந்தது.
அது நான் பார்த்த முதல் சடலம் கிடையாது.

267
00:19:28,982 --> 00:19:30,817
உங்களைப் போன்ற ஒருவர்
என் குடும்பத்தையும் அழித்தார்.

268
00:19:30,900 --> 00:19:32,110
வெள்ளை வாகனத்தில் ஏபிபீ எச்சரிக்கை…

269
00:19:32,193 --> 00:19:33,778
நீ என்ன சொன்னாய்?

270
00:19:35,321 --> 00:19:36,406
நீங்கள் பைத்தியமா என்ன?

271
00:19:46,165 --> 00:19:47,250
ஜெஃப்.

272
00:19:49,210 --> 00:19:50,920
ஹே, மார்க்ஸ். என்ன நடக்கிறது?

273
00:19:51,546 --> 00:19:53,923
- அவர்கள் இங்கே இருந்திருக்கிறார்கள்.
- அப்படியா?

274
00:19:54,007 --> 00:19:56,676
அவளுடைய சாவிகளைப் பறித்து, அவள்
வண்டியில் போனதாக சாட்சி சொல்கிறார்.

275
00:19:56,759 --> 00:19:59,470
இடத்தில் இருந்த காவலர் ஏபிபீ எச்சரிக்கை விடுத்தார்.
நாங்கள் இப்போது எல்லையை அமைக்கிறோம்.

276
00:19:59,554 --> 00:20:00,889
- இடத்தில் ஒரு காவலர் இருந்தாரா?
- ஆமாம்.

277
00:20:00,972 --> 00:20:03,016
அவர்தான் தகவல் சொன்னார்.
பின்தொடர்ந்து போனார்.

278
00:20:03,099 --> 00:20:04,434
திரும்பி வந்து இடத்தைப் பத்திரப்படுத்தினார்.

279
00:20:04,517 --> 00:20:07,478
அவர்களில் ஒருவர் அங்கே இருக்கும் பூத்திலிருந்து
ஃபோன் செய்ததாக சாட்சிகள் சொன்னார்கள்,

280
00:20:07,562 --> 00:20:09,314
ஆனால் நாங்கள் சோதித்தபோது,
அந்த இணைப்பு செயலிழந்துவிட்டது.

281
00:20:09,898 --> 00:20:12,317
மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சட்ட அமலாக்க
அதிகாரியும் இந்த இருவரையும் தேடுவார்கள்.

282
00:20:12,400 --> 00:20:13,443
நல்லது. அவர்கள் ஒரு காவலரைக் கொன்றார்கள்.

283
00:20:13,526 --> 00:20:16,613
நம்மிடம் மக்களைவிட அதிக துப்பாக்கிகள்
இருக்கலாம், ஆனால் நாம் வைல்ட் வெஸ்ட் கிடையாது.

284
00:20:16,696 --> 00:20:18,072
நாம் கூட்ட ஆதிக்க நீதி செய்ய மாட்டோம்.

285
00:20:18,156 --> 00:20:20,325
நீங்கள் ஒரு கெளபாய் என்று நினைத்தேன்.

286
00:20:21,743 --> 00:20:23,203
அவர்கள் யாரிடம் பேச முயற்சி செய்தார்கள்?

287
00:20:25,079 --> 00:20:26,664
நீங்கள் நல்லவர், ஃபிராங்க்.

288
00:20:26,748 --> 00:20:28,541
அது பாராட்டாகத் தோன்றவில்லையே?

289
00:20:28,625 --> 00:20:30,043
ஆமாம். உண்மையாகத்தான் சொல்கிறேன்.

290
00:20:30,126 --> 00:20:33,004
உங்களுடைய சமூகத்தைப் பாதுகாப்பது போலவே,
காவலரைக் கொன்ற இந்த இருவரை

291
00:20:33,087 --> 00:20:35,882
பாதுகாப்பாக பிடிப்பதும் உங்களுக்கு
முக்கியமானதுதான். அது கௌரவமானது.

292
00:20:35,965 --> 00:20:37,300
வந்து, அது வேலை.

293
00:20:37,383 --> 00:20:38,843
இருக்கலாம். இங்கே மேலே.

294
00:20:38,927 --> 00:20:42,430
ஆனால் உண்மையான உலகில், இப்படிப்பட்ட கைதிகள்
உங்களைப் போன்ற நல்லவர்களை அழிக்க விரும்புவார்கள்.

295
00:20:43,973 --> 00:20:45,433
78-வது பக்கத்தைக் காணவில்லை.

296
00:20:47,310 --> 00:20:48,853
அவர்கள் யாரையோ அழைக்க முயற்சிக்கவில்லை.

297
00:20:48,937 --> 00:20:50,438
யாரையோ கண்டுபிடிக்கப் பார்க்கிறார்கள்.

298
00:20:50,522 --> 00:20:51,523
ஒயிட் பேஜஸ்

299
00:20:51,606 --> 00:20:54,067
இந்த நகரத்தில் ஒரு தொலைபேசி புத்தகத்தைக்
கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

300
00:20:54,150 --> 00:20:56,528
நான் தேவாலயத்திற்கு, என் சகோதரியின் வீட்டிற்கு
போனேன். இறுதியாக நூலகத்தில் ஒன்று கிடைத்தது.

301
00:20:56,611 --> 00:20:58,821
நல்லது. நூலகம் மூடப்பட்டிருந்ததாக நினைத்தேன்.

302
00:20:58,905 --> 00:21:00,114
ஷார்கி முனோஸ் என்னை உள்ளே அனுமதித்தார்.

303
00:21:00,615 --> 00:21:03,493
“த நோட்புக்” புத்தகத்திற்காக நீங்கள்
12 டாலர் அபராதம் கட்ட வேண்டும் என்றார்.

304
00:21:04,077 --> 00:21:05,662
அவர் நிக்கோலஸ் ஸ்பார்க்ஸின் தீவிர ரசிகன்.

305
00:21:10,959 --> 00:21:12,627
இதோ. ஏரோ எக்ஸ்கர்ஷன்ஸ்.

306
00:21:15,171 --> 00:21:17,006
மீன் பிடிப்பது, மலை ஏறுவது மற்றும்
படகு சவாரி செய்வது.

307
00:21:18,758 --> 00:21:20,552
விமானப் பயண சுற்றுலாக்களும் உண்டு.

308
00:21:22,554 --> 00:21:23,846
அவர்கள் ஒரு விமானியைத் தேடுகிறார்கள்.

309
00:21:23,930 --> 00:21:25,473
ஒன்றும் பிரச்சினை இல்லை!

310
00:21:26,724 --> 00:21:27,850
அதை பத்திரப்படுத்த.

311
00:21:27,934 --> 00:21:29,143
அவர்கள் இங்கே இருந்திருக்கிறார்கள்.

312
00:22:06,389 --> 00:22:08,141
ஹே. என்ன விஷயம்?

313
00:22:08,224 --> 00:22:09,642
நான் உங்களோடு சேர்ந்துகொள்ளலாமா?

314
00:22:09,726 --> 00:22:10,727
நிச்சயமாக. வந்து உட்காருங்கள்.

315
00:22:11,269 --> 00:22:12,395
கொஞ்சம் கதகதப்பு தேவை.

316
00:22:12,478 --> 00:22:14,898
அது ஒரு அழகான பெரெட்டா.

317
00:22:15,565 --> 00:22:16,691
நீங்கள் ராணுவத்தினரா?

318
00:22:18,067 --> 00:22:19,277
ஆமாம். ராணுவத்தில் இருந்தேன்.

319
00:22:19,944 --> 00:22:22,071
நான்கு மாதங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டேன்.

320
00:22:23,156 --> 00:22:24,157
கௌரவமாக.

321
00:22:26,451 --> 00:22:29,204
நீங்கள் பணி புரிந்ததுதான் முக்கியம்.
எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

322
00:22:29,746 --> 00:22:30,997
தட்டையான பாதம்.

323
00:22:32,290 --> 00:22:33,791
போய்த்தொலை.

324
00:22:33,875 --> 00:22:35,084
இங்கிருந்து போ.

325
00:22:35,585 --> 00:22:37,795
- நான் உங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேனா?
- இருக்கலாம்.

326
00:22:37,879 --> 00:22:38,963
இன்று முழுவதும் இங்கே இருந்தேன்.

327
00:22:39,047 --> 00:22:43,092
நானும் பீட்டும் அந்தக் கைதிகளில் ஒருவனைப்
பிடித்தோம். அவன் பனியில் கல் போல உறைத்திருந்தான்.

328
00:22:43,176 --> 00:22:45,136
இந்த நாசக்காரனும் இறந்திருப்பான்
என்று இருபது டாலர் பந்தயம் கட்டுகிறேன்.

329
00:22:45,220 --> 00:22:46,679
நான் அவ்வளவு உறுதியாகச் சொல்ல மாட்டேன்.

330
00:22:46,763 --> 00:22:48,223
இவன் கொஞ்சம் புத்திசாலி என்கிறார்கள்.

331
00:22:56,064 --> 00:22:57,482
- ரெம்னிக்.
- ஃபிராங்க், ஹே.

332
00:22:57,565 --> 00:23:01,027
ஹாய், நான்தான் பேசுகிறேன்.
கிளம்புவதற்கு முன்பே நான் பேசியிருக்கணும்.

333
00:23:01,110 --> 00:23:02,111
நீ எங்கே இருக்கிறாய்?

334
00:23:02,195 --> 00:23:03,655
நான் கேபினுக்கு போய்க்கொண்டிருக்கிறேன்.

335
00:23:03,738 --> 00:23:05,406
லூக்கும் கீராவும் திரும்பி வரவில்லை, நான்…

336
00:23:05,490 --> 00:23:07,325
நானே போய் பார்த்தால், எனக்கு
கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.

337
00:23:07,408 --> 00:23:08,785
- நீ பயணம் செய்கிறாயா?
- ஆமாம்.

338
00:23:08,868 --> 00:23:11,454
- நம் மகனைப் பற்றி கவலைப்படுகிறேன்.
- கவலைப்படாதே, சரியா?

339
00:23:11,538 --> 00:23:12,997
இப்போது கிளின்ட் அவனோடு
வீட்டுக்குத் திரும்புகிறான்.

340
00:23:13,081 --> 00:23:15,458
அதை உறுதிசெய்ய நான் அவனை மறுபடியும் ரேடியோவில்
தொடர்புகொள்கிறேன், ஆனால் நீ வெளியே போகக் கூடாது.

341
00:23:15,542 --> 00:23:18,086
ஃபிராங்க். நான் லூக்கைக் கண்டுபிடிக்க வேண்டும்.

342
00:23:19,420 --> 00:23:21,005
சாரா, மனித வேட்டை நடக்கிறது, புரிந்துகொள்.

343
00:23:21,089 --> 00:23:23,007
குற்றவாளிகள் வெளியே திரிகிறார்கள்.
சரியாக நீ எங்கே இருக்கிறாய்?

344
00:23:23,091 --> 00:23:24,259
நான் படைவீரர்கள் சிலரை அனுப்புகிறேன்.

345
00:23:25,510 --> 00:23:29,097
பார், பாதி தூரம் போய்விட்டேன், நான்
தனியாக இல்லை. நான்…

346
00:23:29,180 --> 00:23:30,181
நான் டாட் லோகனுடன் இருக்கிறேன்.

347
00:23:30,265 --> 00:23:31,641
நீ விளையாடுகிறாய்.

348
00:23:32,934 --> 00:23:35,895
உண்மையாகவா? இங்கு நடப்பவைகளுக்கு இடையே,
நீ டாடைப் பற்றிக் கவலைப்படுகிறாயா?

349
00:23:35,979 --> 00:23:36,980
தன் வண்டியில் என்னை கூட்டிச் செல்கிறான்.

350
00:23:37,063 --> 00:23:40,275
ஆமாம், ஃபிராங்க், நீ இன்னும் சில
படைவீரர்களை அனுப்புவது நல்லது.

351
00:23:40,358 --> 00:23:42,402
அதுதான் நம் இருவருக்கும்
முக்கியமானதாக இருக்க வேண்டும்.

352
00:23:43,278 --> 00:23:44,487
உண்மையில் என்ன நடக்கிறது?

353
00:23:46,906 --> 00:23:48,616
நீ என்ன சொல்கிறாய் என்று…
எனக்குப் புரியவில்லை.

354
00:23:48,700 --> 00:23:50,368
உன் குரலில் இருந்தே எனக்குப் புரிகிறது.

355
00:23:50,451 --> 00:23:52,078
நீ என்னிடம் எதை மறைக்கிறாய்?

356
00:23:52,161 --> 00:23:56,082
நான் கேபினுக்கு சென்று, லூக்கையும் கீராவையும்
வீட்டிற்கு அழைத்து வரப் போகிறேன் என்று சொன்னேனே.

357
00:23:59,919 --> 00:24:01,754
- ஹட்ச்.
- என்ன?

358
00:24:01,838 --> 00:24:04,424
கேள், ஒரு உதவி செய்கிறாயா? கிளின்ட் ஹெய்ஸை
ரேடியோவில் தொடர்புகொள்கிறாயா?

359
00:24:04,507 --> 00:24:06,759
என் பிள்ளைகள் சரியாக எங்கே இருக்கிறார்கள்
என்று கண்டுபிடிக்கிறாயா?

360
00:24:06,843 --> 00:24:08,219
பிறகு, கேபினுக்கு சில குழுக்களை அனுப்பு.

361
00:24:08,303 --> 00:24:09,679
நீ எப்படி அவர்களை வரவழைப்பாய்
என்று எனக்கு கவலை இல்லை.

362
00:24:09,762 --> 00:24:11,139
சரி. ஏதும் பிரச்சினையில்லையே?

363
00:24:11,222 --> 00:24:13,516
- என் மகன் திரும்பக் கிடைத்த பின், இருக்காது.
- சரிதான்.

364
00:24:15,935 --> 00:24:17,645
- ஃபிராங்க்?
- என்ன?

365
00:24:17,729 --> 00:24:19,189
நீங்கள் ஜெட்டி ப்ரூக்ஸை சந்திக்க வேண்டும்.

366
00:24:19,272 --> 00:24:21,024
- அவர்தான் முதலாளி.
- திரு. ப்ரூக்ஸ்.

367
00:24:21,107 --> 00:24:23,484
இங்கு வந்தபோது, அவரது கணினி
இயங்கியதாகச் சொல்கிறார்.

368
00:24:23,568 --> 00:24:24,944
சரி, ஊடுருவல் நிகழ்ந்ததற்கு மன்னிக்கவும்.

369
00:24:25,028 --> 00:24:27,238
உங்கள் கணினியை அவர்கள்
எப்படி அனுகினார்கள் என்று தெரியுமா?

370
00:24:27,864 --> 00:24:31,201
வந்து, ஸ்டிக்கி நோட்ஸில் கடவுச்சொல் இருக்கிறது.

371
00:24:31,284 --> 00:24:32,577
கடவுச்சொல்: பாஸ்வேர்ட்

372
00:24:33,578 --> 00:24:36,789
தப்பியோடிய கைதிகள் மாநிலத்திலிருந்து அவர்களை
அழைத்துச் செல்ல ஒரு விமானியைத் தேடுகிறார்கள்.

373
00:24:36,873 --> 00:24:39,584
ஏதும் குறிப்பிட்ட பணியாளரை
அவர்கள் குறிவைக்கிறார்களா?

374
00:24:39,667 --> 00:24:43,922
விமானியை இல்லை. இங்கிருந்து பொதுவாக,
மீன்பிடிக்கவும், வேட்டையாடவும் வாடகைக்கு விடுவோம்.

375
00:24:44,005 --> 00:24:45,924
விமானப் பயணங்கள் உள்வாடகைதான்.

376
00:24:46,007 --> 00:24:48,718
உங்களிடம் பெரிய பட்டியலே இருக்கு.
இதில் குறைந்தபட்சம் 200 விமானிகள் இருப்பார்கள்.

377
00:24:48,801 --> 00:24:50,887
ஆமாம், 70 ஆண்டுகளாக தொழிலில் இருக்கிறோம்.

378
00:24:51,554 --> 00:24:53,264
அந்த விமானிகளில் சிலர்
என் அப்பாவிற்கு ஓட்டியவர்கள்.

379
00:24:53,348 --> 00:24:55,058
- நன்றி, திரு. ப்ரூக்ஸ்.
- சரி.

380
00:24:55,600 --> 00:24:58,394
சரி, ஜேனிடம் இந்தப் பட்டியலைக் கொடுப்போம்.
அவளை ஃபோனில் அழைப்போம்.

381
00:24:59,103 --> 00:25:01,606
இந்த இருவரும் தேடும் விமானி யாராக இருந்தாலும்,
அவனைப் பார்த்து நிச்சயம் நான் பொறாமைப்பட மாட்டேன்.

382
00:25:19,874 --> 00:25:22,293
நீதான் எங்களைக் கனடாவிற்கு
கூட்டிச் செல்லப் போகிறாய்.

383
00:25:23,253 --> 00:25:25,547
நிச்சயம், உடனே அதைச் செய்கிறேன்.

384
00:25:27,549 --> 00:25:29,342
கிண்டல் என்னை எரிச்சலடையச் செய்யும், ஸ்லேட்.

385
00:25:29,425 --> 00:25:31,469
நீ என்னை எரிச்சலடையச் செய்ய வேண்டாம்.

386
00:25:31,553 --> 00:25:34,180
எனில் இதை முயற்சி செய், முட்டாள்.

387
00:25:34,264 --> 00:25:37,016
நான் உன்னை எங்கும்
கூட்டிட்டுப் போக மாட்டேன். எப்போதும்.

388
00:25:40,979 --> 00:25:42,605
இது இறப்பில் முடிந்தால் நன்றாக இருக்கும்.

389
00:26:00,707 --> 00:26:02,166
நீ என்ன செய்கிறாய்? நீ என்ன…

390
00:26:03,042 --> 00:26:04,335
உங்களுக்கு என்ன பைத்தியமா?

391
00:26:04,419 --> 00:26:06,045
கை உடைந்துவிட்டால், எப்படி விமானம் ஓட்டுவான்?

392
00:26:06,129 --> 00:26:08,089
வந்து, அவனுக்குத்தான் இன்னொரு கை இருக்கே.
சரிதானே, ஸ்லேட்?

393
00:26:08,172 --> 00:26:11,009
இது என்ன முட்டாள்தனமான பெயர்?

394
00:26:11,092 --> 00:26:13,553
அலாஸ்காவில் உள்ள ஒரே விமானி
நீதான் என நினைக்கிறாயா?

395
00:26:13,636 --> 00:26:15,096
நான் கேட்கும் முதல் விமானிதான் நீ.

396
00:26:15,680 --> 00:26:17,765
ஆக, எங்களுக்கு உதவப் போகிறாயா, இல்லையா?

397
00:26:19,058 --> 00:26:20,894
ஹஹ்?

398
00:26:23,521 --> 00:26:25,857
சரி! உனக்கு உதவுகிறேன்!
உனக்கு உதவுகிறேன், சரியா?

399
00:26:25,940 --> 00:26:28,443
பார்த்தாயா? இப்போது எனக்கு சந்தோஷம்.

400
00:26:29,652 --> 00:26:31,404
என்னிடம் பணம் இல்லை.

401
00:26:32,864 --> 00:26:35,241
- என்ன பணம்?
- பெட்ரோலுக்கு.

402
00:26:35,325 --> 00:26:36,326
எரிபொருள்.

403
00:26:37,202 --> 00:26:39,120
எங்கு இருக்கிறீர்கள் என்று
உங்களுக்குத் தெரியாதுதானே?

404
00:26:39,204 --> 00:26:42,040
அலாஸ்காவில் உள்ள காட்டு விமானி
ஒவ்வொருவரும் உங்களைத் தேடுகிறார்.

405
00:26:42,123 --> 00:26:44,667
திரும்ப எரிபொருள் நிரப்புவதற்கு முன்,
முடிந்த அளவுக்கு தூரமாகச் செல்வது நல்லது.

406
00:26:46,502 --> 00:26:49,172
வைட்ஹார்ஸ் 600 மைல் தொலைவில்
உள்ளது. அங்கு போய் திரும்ப எரிபொருள் நிரப்பலாம்…

407
00:26:49,255 --> 00:26:52,342
- எப்படி உன்னிடம் பணம் இல்லாமல் போனது?
- என் முன்னாள் மனைவியிடம் கேளுங்கள்.

408
00:26:52,425 --> 00:26:55,345
நான் ஒரு காட்டு விமானி.
இங்கே எரிபொருள் விலை உயர்ந்தது!

409
00:26:58,765 --> 00:26:59,766
சரி.

410
00:27:00,683 --> 00:27:02,310
உன் வங்கிக் கணக்கு எண்ணைக் கொடு.

411
00:27:03,436 --> 00:27:06,648
நீ புதிய பெயருக்கு யோசிக்கும் நேரத்தில்,
உனக்கு வேண்டிய பணத்தை அனுப்புகிறேன்,

412
00:27:06,731 --> 00:27:09,609
ஏனென்றால், நான் உன்னை ஸ்லேட் என்று
கூப்பிட மாட்டேன், முட்டாளே.

413
00:27:12,153 --> 00:27:13,404
வகைப்படுத்தல் குறியீடு WALBU53K96
கணக்கு எண் 36.25486.15903

414
00:27:29,796 --> 00:27:30,922
4,216,878.94 அமெரிக்க டாலர்கள்

415
00:27:40,890 --> 00:27:41,891
பரிமாற்றம் வெற்றிகரமாக முடிந்தது

416
00:27:57,365 --> 00:27:58,700
வந்து, அவள் என்னைக் கொல்லப் போகிறாள்.

417
00:27:58,783 --> 00:28:00,368
நிச்சயம் செய்வாள்.

418
00:28:00,451 --> 00:28:03,288
நாம் போகும் இடத்திற்கு அவள் வந்ததும்,
நம் இருவரின் கதையும் முடிந்தது.

419
00:28:03,371 --> 00:28:05,373
- நீ எனக்கு உதவத்தான் வேண்டும்.
- என்னால் முடியாது.

420
00:28:05,456 --> 00:28:07,542
ஆம், உன்னால் முடியும். என் கட்டை அவிழ்த்து விடு.

421
00:28:07,625 --> 00:28:09,502
- அவிழ்த்து விடு…
- உன் கணக்கிற்குப் பணம் அனுப்பிவிட்டேன்.

422
00:28:09,586 --> 00:28:12,088
எரிபொருளுக்கு இது போதுமானதாக இருக்கும்…

423
00:28:12,171 --> 00:28:14,215
- கடவுளே!
- ஐயோ.

424
00:28:25,393 --> 00:28:30,023
நீ திரும்ப அந்த முட்டாள்தனமான ஜூடோ தந்திரத்தை
முயற்சித்தால், உன் மூளையைச் சிதறச் செய்துவிடுவேன்.

425
00:28:36,446 --> 00:28:39,616
இவர்கள் ஒவ்வொருவரையும், ஹாவ்லாக்
தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக்கொள்கிறான்.

426
00:28:39,699 --> 00:28:41,075
யாரைப் பயன்படுத்துகிறான்?

427
00:28:41,159 --> 00:28:42,660
தப்பியோடிய கைதிகள். மார்ஷல்கள்.

428
00:28:43,536 --> 00:28:46,623
ஹாவ்லாக்கிற்கு இந்த மனித
வேட்டை ஒரு பெரிய திசைதிருப்பும் வேலைதான்.

429
00:28:47,457 --> 00:28:50,126
- எதை நோக்கி?
- எனக்குத் தெரியாது. எனக்கு அது புரியலை.

430
00:28:50,210 --> 00:28:52,462
அவன் கடினமானவற்றை ஏற்க பயிற்சி பெற்றவன்.

431
00:28:52,545 --> 00:28:53,796
மோசமாக விளையாடவும்.

432
00:28:54,631 --> 00:28:56,216
ஆனால், இதில் ஒரு மாயவித்தை
இருக்கத்தான் செய்கிறது.

433
00:28:56,299 --> 00:28:57,467
உங்களால் உணர முடியும் என்று எனக்குத் தெரியும்.

434
00:28:59,344 --> 00:29:00,637
ஐயோ.

435
00:29:06,809 --> 00:29:08,061
உங்களுக்கு ஒன்றுமில்லையே?

436
00:29:08,144 --> 00:29:09,854
இந்த சாவிகள் எங்கே என்று தெரியவில்லை.

437
00:29:11,022 --> 00:29:12,148
உங்களுக்கு லிஃப்ட் வேண்டுமா?

438
00:29:17,862 --> 00:29:19,239
ரொம்ப சௌகரியம் இருக்காது, ஆனால் இது வீடு.

439
00:29:22,367 --> 00:29:23,535
உங்களிடம் லேண்ட்லைன் ஃபோன் இருக்கிறதா?

440
00:29:24,577 --> 00:29:25,954
என் செல்ஃபோன் செயலிழந்துவிட்டது.

441
00:29:26,037 --> 00:29:27,038
ஆம், சுவரில் இருக்கு.

442
00:29:27,121 --> 00:29:28,414
எங்களிடம் பீரும் இருக்கு.

443
00:29:33,545 --> 00:29:34,837
என்ன இது?

444
00:29:42,512 --> 00:29:43,513
உனக்கு என்ன வேண்டும்?

445
00:29:43,596 --> 00:29:45,807
உன் நாய்க்கு உணவு கொடுத்துத் தொடங்குவோம்.

446
00:29:47,892 --> 00:29:50,019
இப்போது என் வீட்டில் இருக்கிறார்கள்.

447
00:29:50,103 --> 00:29:51,229
இது எப்படி நடந்தது?

448
00:29:51,312 --> 00:29:53,022
என்னால் விளக்க முடியாது. இப்போது முடியாது.

449
00:29:55,066 --> 00:29:59,362
உனக்கு என் செய்தி கிடைத்தது, நீயும் பாதுகாப்பாக
வெளியேறினாய் என்பதுதான் முக்கியமான விஷயம்.

450
00:29:59,445 --> 00:30:01,614
நீ என்னை நேரடியாகத் தொடர்புகொள்ளக் கூடாது.

451
00:30:01,698 --> 00:30:03,032
நான் உனக்கு உதவ முயற்சிக்கிறேன்.

452
00:30:03,116 --> 00:30:05,159
எனக்குத் தெரிந்தவரை, நீதான் சிஐஏ-வை
என் வீட்டிற்கு அழைத்து வந்தாய்.

453
00:30:20,675 --> 00:30:23,761
நான் உன்னை அழைக்கவில்லை. நான் அதை மறுப்பேன். ஆனால்
நாம் அவனை இழந்துவிட்டோம் என உனக்குத் தெரியணும்.

454
00:30:23,845 --> 00:30:25,138
நீ யாரை இழந்துவிட்டாய்?

455
00:30:25,972 --> 00:30:27,307
பொறு, எனக்குக் கேட்கவில்லை.

456
00:30:31,477 --> 00:30:34,105
மார்க்? திரும்பச் சொல், யாரை இழந்துவிட்டாய்?

457
00:30:34,189 --> 00:30:36,441
ஹாவ்லாக் உன் ஸீனோகேட் கணக்கிற்குள்
அத்துமீறி நுழைந்து,

458
00:30:36,524 --> 00:30:39,485
செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் உள்ள
நம் தகவலாளர்களில் ஒருவரான

459
00:30:39,569 --> 00:30:41,070
ஆர்மென் ஜ்டாங்கோவிற்கு செய்தி
அனுப்பியதாக நம்புகிறோம்.

460
00:30:41,946 --> 00:30:43,198
ஜ்டாங்கோ கணினியை ஹேக் செய்பவன்.

461
00:30:43,281 --> 00:30:45,742
தீம்பொருள் மற்றும் பாதுகாப்பு மென்பொருளில்
தேர்ச்சி பெற்றவன்.

462
00:30:45,825 --> 00:30:48,703
ஆர்க்கைவ் 6-ஐ திருட, அவனுக்குப் பணம்
கொடுக்கப்பட்டதாக நினைக்கிறோம்.

463
00:30:49,287 --> 00:30:52,290
இப்போது, ஜ்டாங்கோ போய்விட்டான்,
ஆர்க்கைவ்வும் போய்விட்டது.

464
00:30:52,832 --> 00:30:55,210
- ஹாவ்லாக் அவனுக்குத் துப்புக் கொடுத்தானா?
- எப்படி?

465
00:30:55,293 --> 00:30:59,339
தப்பியோடியவன் எப்படி எங்கள் குழு அங்கு போகும் முன்
ஒரு தகவலாளருக்கு முன்னறிவிப்பு தர முடியும்?

466
00:31:00,381 --> 00:31:01,841
அந்த தூதுவன், அவன் எங்கே இருக்கிறான்?

467
00:31:03,176 --> 00:31:04,219
எனக்கு எப்படித் தெரியும்?

468
00:31:05,178 --> 00:31:07,222
வந்து, நான் அவனைக் கண்டுபிடிப்பது முக்கியம்.

469
00:31:08,223 --> 00:31:10,850
ஜ்டாங்கோவின் கடைசியாகத் தெரிந்த நகர்வுகளை
நாங்கள் சேர்த்துப் பார்க்க முயற்சி செய்கிறோம்.

470
00:31:10,934 --> 00:31:13,102
- நான் அனுப்பிய புகைப்படங்கள் கிடைத்ததா?
- இவை எல்லாம் என்ன?

471
00:31:13,186 --> 00:31:16,439
மூன்று நாட்களுக்கு முன், ஜ்டாங்கோ வீட்டிற்கு
அருகில் கிடைத்த புலனாய்வு படங்கள்.

472
00:31:17,023 --> 00:31:19,484
அவன் சந்திக்கும் நபர்தான்
தூதுவன் என்று நம்புகிறோம்.

473
00:31:19,567 --> 00:31:21,069
அந்த பையில் என்ன இருக்கு?

474
00:31:22,111 --> 00:31:25,198
ஆர்க்கைவ்வை விற்பதற்காக, ஜ்டாங்கோ அதை ஒரு
வெளிப்புற ஹார்ட்டிஸ்க்கிற்கு மாற்றிவிட்டான் என்று

475
00:31:25,281 --> 00:31:26,282
நினைக்கிறோம்.

476
00:31:26,366 --> 00:31:28,785
அந்த விற்பனையை எளிதாக்க
அவன் தூதுவனைப் பயன்படுத்துகிறான்.

477
00:31:28,868 --> 00:31:30,787
நீ அவனைத் தடுக்க வேண்டும்.

478
00:31:31,871 --> 00:31:32,872
ஒரு புகைப்படத்தை வைத்தா?

479
00:31:32,956 --> 00:31:34,207
அதைக் கொண்டு ஏதும் செய்ய முடியாது.

480
00:31:34,290 --> 00:31:37,168
சிட்னி, ஆர்க்கைவ் 6,
கருப்புச் சந்தைக்குப் போனால்,

481
00:31:37,252 --> 00:31:39,212
என்ன பாதிப்பு நேரும் என்று சொல்ல முடியாது.

482
00:31:39,295 --> 00:31:40,672
நீ அதைத் தடுக்க வேண்டும்.

483
00:31:40,755 --> 00:31:44,509
ஹாவ்லாக்கிடம் அது கொடுக்கப்படுவதற்கு முன், அந்த
தூதுவனைக் கண்டுபிடித்து, ஆர்க்கைவ்வை பெற்றுவிடு.

484
00:31:50,265 --> 00:31:51,391
அவன் நல்லவன் போலத் தெரிகிறான்.

485
00:31:52,267 --> 00:31:53,309
அவனுக்கென்று சில தருணங்கள் உண்டு.

486
00:31:53,393 --> 00:31:56,145
சரி, என்ன நடக்கிறது? ஆர்க்கைவ்வும்,
ஏதோவொரு இறந்தவனின் ஸ்விட்சும்,

487
00:31:56,229 --> 00:31:57,689
ஹாவ்லாக்கிடம் இருப்பதாகச் சொன்னாய்
என்று நினைத்தேன்.

488
00:31:57,772 --> 00:32:01,359
அவனிடம் இருக்கிறது, ஆனால் அந்த விஷயத்தை
அவன் விற்பதை அது தடுக்காது.

489
00:32:02,694 --> 00:32:05,321
எனில், அது ஹார்ட் ட்ரைவில்
அவனுக்காக இங்கு வந்துகொண்டு இருக்கிறது.

490
00:32:07,490 --> 00:32:08,700
கடவுளே.

491
00:32:14,038 --> 00:32:15,540
ஹட்ச், கேள், எனக்கு ஒரு உதவி தேவை.

492
00:32:15,623 --> 00:32:18,835
உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பை அழைத்து,
விபத்து நடந்த நாளிலிருந்து,

493
00:32:18,918 --> 00:32:21,337
ரஷ்யா அல்லது அதன் வழியாக அலாஸ்காவிற்கு வந்த

494
00:32:21,421 --> 00:32:23,298
ஒவ்வொரு ஆண் பயணியின்
பட்டியலை வாங்கு, சரியா?

495
00:32:24,340 --> 00:32:25,842
ஆமாம், ஏதும் வித்தியாசமாக இருந்தால்.

496
00:32:27,802 --> 00:32:29,971
நான்தான் சொன்னேனே. இப்படித்தான்
செய்வான், வித்தை காட்டுவான்.

497
00:32:30,054 --> 00:32:31,097
ஆமாம்.

498
00:32:41,065 --> 00:32:43,318
அந்த புகைப்படம், நம் இருவரையும்
கொல்லப் போகிறது.

499
00:32:44,777 --> 00:32:46,237
- நான் உன்னை எச்சரிக்க முயன்றேன்.
- இல்லை.

500
00:32:46,321 --> 00:32:49,240
அவனுடைய பாதுகாப்புக் குழு
கேள்விகள் கேட்பதாகச் சொன்னாய்.

501
00:32:49,324 --> 00:32:50,325
அது எதிர்பார்த்ததுதான்.

502
00:32:50,408 --> 00:32:51,784
இது முழு குழப்பம்.

503
00:32:51,868 --> 00:32:55,038
அதிகாலை 3:00 மணிக்கு நீ
என் விடுதியை விட்டு கிளம்புகிறாய்.

504
00:32:55,121 --> 00:32:57,749
அவனது பாதுகாப்புக் குழு இதை எவ்வளவு
நேரத்தில் கண்டுபிடிக்கும்?

505
00:32:57,832 --> 00:32:58,833
என்னால் இதை சரிசெய்ய முடியும்.

506
00:32:58,917 --> 00:33:00,710
- இல்லை, உன்னால் முடியாது.
- நீ இங்கே இருப்பது யாருக்கும் தெரியாது.

507
00:33:00,793 --> 00:33:02,212
அவர்கள் தெரிந்துகொள்வார்கள். சீக்கிரமே.

508
00:33:02,295 --> 00:33:04,380
நீயும் நானும் இங்கு ஒன்றாக இருக்கிறோம்
என்று அவர்கள் கண்டுபிடிக்கும்போது,

509
00:33:04,464 --> 00:33:06,257
உன் அடையாளம் வெளிச்சத்திற்கு வரும்.

510
00:33:08,092 --> 00:33:09,636
லாங்லிக்கு நான் தெரியப்படுத்த வேண்டும்.

511
00:33:09,719 --> 00:33:11,763
- நீ அப்படி செய்தால், இது முடிந்துவிடும்.
- இது ரொம்ப ஆபத்தானது.

512
00:33:11,846 --> 00:33:13,097
இதில் ஆபத்திற்கு ஏற்ற பலன் இருக்கு.

513
00:33:20,647 --> 00:33:21,981
நாம் இதை முடித்துவிட வேண்டும்.

514
00:33:22,065 --> 00:33:23,691
இந்த ஆபரேஷன் சமரசம் செய்யப்பட்டு உள்ளது.

515
00:33:25,151 --> 00:33:27,362
கடவுளே. நான் இந்த ஆபரேஷனைப் பற்றி பேசவில்லை.

516
00:33:27,445 --> 00:33:29,113
நம்மைப் பற்றிப் பேசுகிறேன். நீயும் நானும்.

517
00:33:29,197 --> 00:33:31,991
கடவுளே, சிட்னி, ஒரு உளவாளியாக இருந்தும்,
இப்படி எதுவும் தெரியாமல் இருக்கிறாய்.

518
00:33:32,075 --> 00:33:34,577
இப்போது நீ இதை நிறுத்தினால்,
லாங்லி அதிகாரிகள் கேள்விகள் கேட்பார்கள்.

519
00:33:34,661 --> 00:33:36,120
நம்மைப் பற்றி அவனிடம் சொல்ல வேண்டியிருக்கும்.

520
00:33:36,913 --> 00:33:39,165
உனக்கு கண்டனம் கிடைக்கும்.
நானும் வேறு இடத்துக்கு மாற்றப்படுவேன்.

521
00:33:39,249 --> 00:33:41,793
நாம் இருவரும் இருக்கவே மாட்டோம்.
எனக்கு அது தேவையில்லை.

522
00:33:50,969 --> 00:33:52,345
எனக்கு நம்மீது நம்பிக்கை இருக்கு.

523
00:33:58,351 --> 00:33:59,936
ஆக, நீ என்ன பரிந்துரைக்கிறாய்?

524
00:34:02,564 --> 00:34:04,983
நாம் தேடும் பெண்கள் பற்றி ஒரு துப்பு கிடைத்தது.
ஒரு பெண் துப்பு சொல்லும் எண்ணிற்கு அழைத்தாள்.

525
00:34:05,483 --> 00:34:06,484
நாம் போகலாம்.

526
00:34:24,168 --> 00:34:25,753
ஃபேர்பேங்க்ஸுக்கு வரவேற்கிறேன்.

527
00:34:31,467 --> 00:34:32,927
நீ கேட்டபடி, சுங்கச்சாவடியுடன் பேசினேன்.

528
00:34:33,010 --> 00:34:34,137
விபத்து நடந்த இரவிலிருந்து,

529
00:34:34,220 --> 00:34:37,390
32 ஆண் பயணிகள் ரஷ்யாவில் இருந்தோ அல்லது ரஷ்யா
வழியாகவோ, மாநிலத்திற்குள் வந்திருக்கிறார்கள்.

530
00:34:37,974 --> 00:34:39,017
அனைவரும் சட்டப்படி வந்திருக்கிறார்கள்.

531
00:34:39,100 --> 00:34:40,142
சந்தேகிக்கும் படி யாரும் இல்லை.

532
00:34:40,226 --> 00:34:41,811
- எதுவும் இல்லையா?
- இல்லை.

533
00:34:42,312 --> 00:34:44,981
- வித்தியாசமாக எதுவும் இல்லை.
- தொடர்ந்து விசாரி, சரியா?

534
00:34:45,064 --> 00:34:47,025
குற்றப் பின்னணியுடன் யாராவது,
வித்தியாசமாக ஏதாவது இருக்கிறதா என்று பார்.

535
00:34:47,108 --> 00:34:49,235
ஹாவ்லாக்கிற்கு ஒரு தகவலாளர்
வந்துகொண்டு இருக்கிறது.

536
00:34:49,943 --> 00:34:51,696
- சரியா? நீ தயாரா?
- புரிகிறது.

537
00:34:52,238 --> 00:34:53,698
சரி. நாம் இதைச் செய்வோம்.

538
00:34:55,408 --> 00:34:56,492
சரி, அந்தக் கதவைப் பூட்டு.

539
00:34:58,036 --> 00:35:00,205
18 மாத தண்டனையில் இருந்து தப்பித்து
ஓடுகிறாய், விவியன்.

540
00:35:00,288 --> 00:35:03,499
வாழ்நாள் முழுவதும் சிறைக் கம்பிக்குப்
பின் கழிக்கப் போகிறாய்.

541
00:35:03,583 --> 00:35:05,168
அரசு காவலர் ஒருவர் இறந்திருக்கிறார்.

542
00:35:06,127 --> 00:35:07,503
எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

543
00:35:07,587 --> 00:35:09,088
நீதிபதி அதை அப்படிப் பார்ப்பார்
என நினைக்கிறாயா?

544
00:35:09,172 --> 00:35:11,424
வன்முறை செய்வது என் வழக்கம் இல்லை.
என் பதிவுகளைப் பாருங்கள்.

545
00:35:11,507 --> 00:35:14,219
ஆள் மாறாட்டம், ஏமாற்று வேலை செய்வேன்,
யாரையும் காயப்படுத்த மாட்டேன்.

546
00:35:18,640 --> 00:35:20,099
இவனைப் பற்றிச் சொல்.

547
00:35:20,183 --> 00:35:21,684
அவன் யாரென்று எனக்குத் தெரியாது.

548
00:35:21,768 --> 00:35:24,520
விவியன், இவன் மிகவும் ஆபத்தானவன்.

549
00:35:25,480 --> 00:35:27,398
மாநில காவல்துறை இவனைக் கண்டுபிடிக்க வேண்டும்.

550
00:35:28,066 --> 00:35:31,277
அவனுக்கு சொந்தமான ஸ்வெட்டர் உன்னிடம் இருந்தது.

551
00:35:31,778 --> 00:35:33,821
நீ அவனைப் பார்த்தாய். எங்கே என்று சொல்.

552
00:35:36,908 --> 00:35:38,117
அவன் எங்கள் விமானத்தில் இருந்தான்.

553
00:35:38,826 --> 00:35:40,828
ஆனால், நான் அப்போது மட்டும்தான் அவனைப் பார்த்தேன்.

554
00:35:42,497 --> 00:35:44,332
ஓடை ஓரமாக இந்த ஸ்வெட்டரைப் பார்த்தேன்.

555
00:35:46,209 --> 00:35:47,544
நிச்சயமாகவா?

556
00:35:48,086 --> 00:35:49,587
அது யார் என்று எனக்குத் தெரியாது.

557
00:35:50,213 --> 00:35:51,256
வேன் ஹார்ன் பற்றி என்ன?

558
00:35:53,007 --> 00:35:54,384
அவங்களுக்கு உடம்பு சரியில்லை.

559
00:35:54,467 --> 00:35:56,427
- நிறைய ரத்தம் போய்விட்டது.
- ம்-ம்.

560
00:35:56,511 --> 00:35:58,388
என்னை உணவு கட்டச் சொன்னாங்க, அப்போது

561
00:35:58,471 --> 00:36:00,723
மருத்துவப் பொருட்கள் வாங்க, விமானியை
அழைத்துப் போனாங்க.

562
00:36:00,807 --> 00:36:02,475
அவங்க திரும்ப வரவில்லை.

563
00:36:02,559 --> 00:36:03,726
அவள் உன்னை ஏமாற்றிவிட்டாள், விவ்.

564
00:36:03,810 --> 00:36:05,645
உன்னை கைவிட்டுவிட்டு போய்விட்டாள்.

565
00:36:05,728 --> 00:36:07,981
இப்போது நீ எங்களுக்கு
உதவுவதன் மூலம் பழி தீர்க்கலாம்.

566
00:36:09,482 --> 00:36:11,109
நான் ஒருபோதும் யாரையும் காயப்படுத்த மாட்டேன்.

567
00:36:11,192 --> 00:36:13,987
அவள் எங்கு போனாள் என்று மட்டும் சொல்.

568
00:36:17,323 --> 00:36:18,408
எனக்கு ஒரு ஒப்பந்தம் வேண்டும்.

569
00:36:18,992 --> 00:36:20,451
- என்ன சொன்னாய்?
- நான் பேசினால்,

570
00:36:20,535 --> 00:36:22,996
என் மேல் புதிய குற்றங்கள் சுமத்தப்படாது
என்று எனக்கு உத்திரவாதம் வேண்டும்.

571
00:36:23,079 --> 00:36:24,998
- உனக்கு…
- கொலை இல்லை.

572
00:36:25,081 --> 00:36:28,668
நீதியிலிருந்து தப்பியோடியவர் குற்றச்சாட்டு இல்லை.
தடை செயல் இல்லை.

573
00:36:28,751 --> 00:36:30,503
என் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.

574
00:36:31,170 --> 00:36:33,464
எனக்கு 14 மாதங்கள் மீதம் உள்ளன,
அதை நீங்கள் நீக்கினால்,

575
00:36:33,548 --> 00:36:35,592
நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும்
எதையும் சொல்வேன்.

576
00:36:39,012 --> 00:36:40,513
என்னால் அதைச் செய்ய முடியாது.

577
00:36:40,597 --> 00:36:41,973
இல்லை, ஆனால் அவளால் முடியும்.

578
00:36:42,056 --> 00:36:44,100
அவள் மாநில காவல்துறையில் வேலை செய்கிறாள்.

579
00:36:44,893 --> 00:36:46,686
உங்களுக்கு என் உதவி வேண்டுமா, வேண்டாமா?

580
00:36:57,322 --> 00:36:59,157
என் உணர்வுகள் பற்றி நான் பேசப் போவதில்லை.

581
00:37:00,450 --> 00:37:02,452
ஆனாலும் அந்த ஆவணங்களில் நீ
கையெழுத்து போட வேண்டும்.

582
00:37:03,620 --> 00:37:06,789
என் உயர்நிலைப் பள்ளி காதலனுக்கு என் வாழ்க்கையைத்
திறந்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

583
00:37:06,873 --> 00:37:07,874
புரிகிறது.

584
00:37:07,957 --> 00:37:10,293
நாம் பேச வேண்டாம், வெறுமனே வண்டி ஓட்டலாம்.

585
00:37:21,804 --> 00:37:23,348
அவரிடம் பொய் சொல்லிவிட்டேன்.

586
00:37:27,268 --> 00:37:29,520
- இது என்னது?
- என்னைக் கடத்தியவன் கொடுத்தது.

587
00:37:29,604 --> 00:37:32,065
- ஃபிராங்கிடம் கொடுக்கச் சொன்னான்.
- ஆனால் நீ கொடுக்கலையா?

588
00:37:32,148 --> 00:37:33,149
- இல்லை.
- ஏன்?

589
00:37:33,233 --> 00:37:34,817
ஏன்னா, என் கணவர் பற்றி எனக்குத் தெரியும்.

590
00:37:34,901 --> 00:37:38,947
இதை நான் அவரிடம் கொடுத்தால், அது அவரை
இன்னும் ஆழமாக இழுத்துவிடும், அப்படி நடந்தால்…

591
00:37:39,030 --> 00:37:40,532
சாரா, இது ஒரு ஆதாரம்.

592
00:37:42,617 --> 00:37:44,160
அவர் காயப்பட நான் விரும்பவில்லை.

593
00:37:45,495 --> 00:37:47,121
இது ரூபியைப் பற்றியது.

594
00:37:54,504 --> 00:37:55,672
அவளை இழந்தது…

595
00:37:57,757 --> 00:37:59,384
எங்களை கிட்டத்தட்ட பிரித்துவிட்டது.

596
00:38:00,927 --> 00:38:02,971
இப்போதுதான், நாங்கள் குணமாகத் தொடங்குகிறோம்.

597
00:38:04,806 --> 00:38:06,266
உனக்கே தெரியும்…

598
00:38:06,349 --> 00:38:09,519
லூக்… அவன் நன்றாக இருக்கிறான்…

599
00:38:10,019 --> 00:38:12,105
இறுதியாக எங்கள் வாழ்க்கையை மீட்டெடுத்தோம்.

600
00:38:12,981 --> 00:38:14,566
இப்போது இது.

601
00:38:14,649 --> 00:38:17,193
பார், சாரா, என்னால் உன் நிலையில்
என்னை வைத்துப் பார்க்க முடியாது.

602
00:38:18,319 --> 00:38:22,407
ஆனால், உன் இழப்பை உண்மையில்
கையாள ஒரே ஒருவழி தான் இருக்கிறது.

603
00:38:23,283 --> 00:38:24,742
ஃபிராங்கிடம் நீ நேர்மையாக இருக்க வேண்டும்.

604
00:38:26,244 --> 00:38:27,579
அனைத்து விஷயங்களிலும்.

605
00:38:29,622 --> 00:38:32,208
என்னால் இன்னொரு இழப்பைத் தாங்க முடியாது.

606
00:38:32,876 --> 00:38:35,253
இன்னொரு சிகாகோவை என்னால் திரும்ப வாழ முடியாது.

607
00:38:36,129 --> 00:38:38,131
சரி. நாம் அதை யோசிக்க வேண்டாம்.

608
00:38:38,756 --> 00:38:40,967
ஃபிராங்க் பாதுகாப்பாக இருக்கிறார்.
நிச்சயம் லூக்கும் பாதுகாப்பாக இருப்பான்.

609
00:38:43,511 --> 00:38:45,555
அனைவரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்
என்பதை நாம் உறுதிசெய்வோம்.

610
00:38:47,515 --> 00:38:48,516
சரி.

611
00:38:51,102 --> 00:38:52,353
நீ சொல்வது உண்மையாக இருக்க வேண்டிக்கொள்கிறேன்.

612
00:38:52,437 --> 00:38:54,022
அடுத்தது சாலை பிரியும் வழியாகச் செல்.

613
00:38:54,606 --> 00:38:56,357
மரங்களுக்கு நடுவே கொஞ்சம் ஓட்டு

614
00:38:57,317 --> 00:38:58,776
நமக்கு ஒரு மறைவான இடத்தைக் கண்டுபிடி.

615
00:38:59,277 --> 00:39:00,570
ஏன்? என்ன செய்யப் போகிறீர்கள்?

616
00:39:00,653 --> 00:39:01,905
நான் சொல்வதை மட்டும் செய்.

617
00:39:16,461 --> 00:39:18,546
கீரா, ஹே, நான் நினைத்தேன்,

618
00:39:18,630 --> 00:39:20,381
ஸ்கிப் பெய்ன்ஸ் ஞாபகம் இருக்கா?

619
00:39:20,882 --> 00:39:23,843
ஏரியிலிருந்து வீடு திரும்பும்போது அவனுக்கும் அவன்
அப்பாவுக்கும் என்ன நடந்தது என்று நினைவிருக்கா?

620
00:39:23,927 --> 00:39:24,928
என்ன?

621
00:39:27,472 --> 00:39:29,140
அவன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று நினைவிருக்கா?

622
00:39:29,641 --> 00:39:30,975
அவன் அப்பா எவ்வளவு துரதிர்ஷ்டசாலி என்று?

623
00:39:34,604 --> 00:39:36,064
நீங்கள் இருவரும் எதைப் பற்றி பேசுகிறீர்கள்?

624
00:39:37,106 --> 00:39:41,027
எங்கள் நண்பன். அவனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது,
இப்போது பரவாயில்லை, ஆனால்…

625
00:39:41,110 --> 00:39:43,780
சீட் பெல்ட் அணிய மறுத்ததால்,
அவனது அப்பா இறந்துவிட்டார்.

626
00:40:19,148 --> 00:40:20,608
பேச ஆரம்பி.

627
00:40:20,692 --> 00:40:22,819
அந்த விமானியுடன் வேன் ஹார்ன்
என்ன திட்டமிட்டிருந்தாள்?

628
00:40:22,902 --> 00:40:25,613
அவன் எங்களை நாட்டை விட்டு வெளியே
அழைத்துச் செல்ல விரும்பினாங்க.

629
00:40:25,697 --> 00:40:26,823
கனடாவுக்கு.

630
00:40:26,906 --> 00:40:28,199
அவங்களுக்கு உடம்பு சரியில்லை.

631
00:40:28,950 --> 00:40:31,369
இறந்துகொண்டு, ஒரு முடிவோடு இருந்தாங்க.

632
00:40:31,452 --> 00:40:33,371
நிச்சயம் நீங்க பறந்து செல்லத்தான் வேண்டுமா?

633
00:40:33,454 --> 00:40:35,373
காற்றழுத்த மாற்றத்தால்,
உங்கள் நிலை இன்னும் மோசமாகும்.

634
00:40:35,456 --> 00:40:36,499
நான் நல்லாத்தான் இருக்கேன்.

635
00:40:36,583 --> 00:40:37,876
இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?

636
00:40:39,085 --> 00:40:41,004
நாங்கள் எவ்வளவு தூரம் செல்வோம்
என்று அவன் கவலைப்பட்டான்.

637
00:40:41,087 --> 00:40:45,383
ஆனால், அவங்க கவலைப்படவில்லை. அவங்களுக்கு
யாரும் இல்லை. குடும்பம் இல்லை. இழக்க ஏதும் இல்லை.

638
00:40:48,386 --> 00:40:50,054
அவர்கள் எங்கிருந்து கிளம்பினார்கள்?

639
00:40:50,138 --> 00:40:51,681
அவன் ஓடுதளம் பற்றி குறிப்பிட்டானா?

640
00:40:51,764 --> 00:40:53,433
அது ஓடுதளம் இல்லை.

641
00:40:53,516 --> 00:40:54,851
அவன் அதை மண் பாதை என்று சொன்னான்.

642
00:40:54,934 --> 00:40:56,185
ஊரின் வடக்கே ஏதோ ஒரு இடம்.

643
00:40:56,269 --> 00:40:57,312
ஃபார்மர்ஸ் லூப்.

644
00:40:58,313 --> 00:41:00,440
உங்களுக்குப் புரியவில்லை.

645
00:41:00,523 --> 00:41:03,693
அவங்க அங்கு போனதும்,
இவன் அவங்களுக்குத் தேவைப்பட மாட்டான்.

646
00:41:03,776 --> 00:41:04,777
நாம் கிளம்பணும்.

647
00:41:04,861 --> 00:41:06,237
அவங்க அவனைக் கொன்னுடுவாங்க.

648
00:41:07,071 --> 00:41:09,699
- என்னிடம் போதுமான எரிபொருள் இல்லை.
- நான் சொல்வதைக் கேள்.

649
00:41:09,782 --> 00:41:11,326
உனக்குப் பிடித்தவர்கள் இருக்கிறார்கள்.

650
00:41:11,993 --> 00:41:13,453
நான் அவர்களை அடைய முடியும்.

651
00:41:13,536 --> 00:41:17,415
எனவே, அவர்களைப் பாதுகாக்க விரும்பினால்,
நான் சொல்வதை நீ அப்படியே செய்ய வேண்டும்.

652
00:42:03,294 --> 00:42:04,462
ஹே, நிறுத்துங்கள், நிறுத்துங்கள்!

653
00:42:04,546 --> 00:42:06,631
நிறுத்துங்கள், சுடாதீர்கள்!
நான் ஒரு விமானி!

654
00:42:07,131 --> 00:42:08,550
அவள் காட்டை நோக்கிப் போகிறாள்.

655
00:42:09,884 --> 00:42:12,720
மரங்களின் வரிசையில்!
சுட வேண்டாம்! சுடாதீர்கள்!

656
00:42:12,804 --> 00:42:16,015
கேளுங்கள். அதிகாரி ரீடுக்கு நீதி வேண்டும் என்று
உங்களைப் போலவே நானும் விரும்புகிறேன்.

657
00:42:16,099 --> 00:42:17,600
ஆனால், இதை நாம் விதிகளின்படி செய்வோம்.

658
00:42:18,184 --> 00:42:19,978
சரியா? அவளை நாம் உயிரோடு பிடிக்க வேண்டும்.

659
00:42:20,061 --> 00:42:21,062
புரிந்ததா?

660
00:42:21,145 --> 00:42:22,272
- புரிந்தது.
- சரி, சார்.

661
00:42:24,148 --> 00:42:25,483
உன் ஆயுதத்தைக் கீழே போடு!

662
00:42:50,300 --> 00:42:52,051
அவளுக்கு நிறைய ரத்தம் போய்விட்டது.

663
00:42:52,677 --> 00:42:54,095
நாங்கள் உன்னை உதவிக்கு அழைத்துச் செல்கிறோம்.

664
00:42:55,138 --> 00:42:56,973
எப்படி இருந்தாலும்,
நான் திரும்பிப் போகவே மாட்டேன்.

665
00:42:59,767 --> 00:43:01,519
இங்கேயே நான் இறந்து விடுகிறேனே.

666
00:43:07,483 --> 00:43:08,902
இப்படியே விட்டுவிடலாமா, ஃபிராங்க்?

667
00:43:08,985 --> 00:43:10,445
இவள் ஒரு காவலரை கொன்றுவிட்டாள்.

668
00:43:11,029 --> 00:43:13,072
இங்கேயே அவள் இறக்கட்டும்.
அவளுக்கு இது தேவைதான்.

669
00:43:17,493 --> 00:43:19,579
நாம் அவளை உயிருடன்
கைது செய்யணும். உயிரோடு.

670
00:43:19,662 --> 00:43:20,663
போகலாம்.

671
00:43:45,271 --> 00:43:47,649
ஜேன், ஃபார்மர்ஸ் லூப்
மண் பாதையில் ஒரு ஆம்புலன்ஸ் தேவை.

672
00:43:47,732 --> 00:43:50,276
ஒரு பெண் நோயாளி இருக்கிறாள்,
உள் ரத்தப் போக்கால் வெளிறிப் போயிருக்கிறாள்.

673
00:43:50,360 --> 00:43:52,695
இரத்த அளவு குறைந்ததால், அதிர்ச்சி
நிலைக்குள் செல்கிறாள் என்று நினைக்கிறேன்.

674
00:43:52,779 --> 00:43:53,905
சரி, ஃபிராங்க்.

675
00:43:53,988 --> 00:43:57,242
மருத்துவ உதவி ஏற்கனவே வந்துகொண்டு இருக்கிறது,
ஐந்து நிமிடங்களில் வந்துவிடும்.

676
00:44:01,788 --> 00:44:04,749
அனைத்துப் பிரிவுகளும்,
ஃபார்மர்ஸ் லூப் மண் பாதைக்குச் செல்லவும்…

677
00:44:36,364 --> 00:44:39,325
இந்த மக்கள் மீது உங்களுக்கு ஏன்
இவ்வளவு கடமை உணர்வு?

678
00:44:39,409 --> 00:44:40,660
இந்த இடத்தின் மீது?

679
00:44:41,911 --> 00:44:43,580
வந்து, இது என் வீடு.

680
00:44:46,666 --> 00:44:48,001
எங்களுக்கு அப்படித் தோன்றவில்லை.

681
00:44:49,252 --> 00:44:50,670
நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த இடம்.

682
00:44:51,212 --> 00:44:52,255
இல்லையா?

683
00:44:58,469 --> 00:45:00,597
நீ இங்கு உயிர்வாழ வேண்டும் என்றால், நீ…

684
00:45:01,890 --> 00:45:03,558
உன் சமூகத்தை பராமரிக்க வேண்டும்.

685
00:45:04,809 --> 00:45:06,853
நெருங்கிய நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை, ஆனால்

686
00:45:08,771 --> 00:45:10,148
நீ உதவி செய்யக் கடமைப்பட்டிருக்கிறாய்.

687
00:45:11,107 --> 00:45:14,277
காலப்போக்கில் ஏதோ ஒரு இடத்தில்,
உனக்கும் உதவி தேவைப்படும்.

688
00:45:16,237 --> 00:45:18,198
நீ எவ்வளவு வலிமையாக இருப்பதாக நினைத்தாலும்.

689
00:45:23,953 --> 00:45:28,791
இங்கு இருக்கும் பிரச்சினைகளை, வெறுமனே
உன் போக்கில் பணம் கொடுத்து தீர்த்துவிட முடியாது.

690
00:45:30,043 --> 00:45:32,587
தவறாக எடுத்துக்கொள்ளாதே,
நாங்கள் சிறந்தவர்கள் இல்லை, ஆனால்…

691
00:45:36,174 --> 00:45:39,469
கடவுள் சத்தியமாக, சில நேரங்களில் இந்த
இடம்தான் நான் புரிந்துகொள்ளும் ஒரே விஷயம்.

692
00:45:46,226 --> 00:45:47,435
ஆமாம்.

693
00:45:49,479 --> 00:45:50,480
என்ன “ஆமாம்”?

694
00:45:50,563 --> 00:45:53,233
நான் அவனை காதலிக்கிறேனா என்று கேட்டீர்களே,
அதற்கான பதில் ஆமாம்.

695
00:45:59,906 --> 00:46:00,990
அது எப்படி நடந்தது?

696
00:46:01,991 --> 00:46:03,868
அதாவது, இரண்டு ஏஜென்டுகள்.

697
00:46:03,952 --> 00:46:06,371
லீவை அப்போது வேறு மாதிரி இருந்தான்.

698
00:46:07,789 --> 00:46:08,790
நாங்கள்…

699
00:46:10,667 --> 00:46:13,378
நாங்கள் தாண்டியிருக்கக் கூடாத,
ஒரு எல்லையைத் தாண்டினோம்.

700
00:46:14,087 --> 00:46:15,255
அது வந்து…

701
00:46:17,382 --> 00:46:19,175
அது காதல் போலத் தோன்றியது.

702
00:46:27,225 --> 00:46:28,768
இது எப்படித் தொடங்கியது என்று கேட்கலாமா?

703
00:46:30,353 --> 00:46:31,437
ஒரு பொய்யுடன்.

704
00:46:33,731 --> 00:46:36,442
நாங்கள் எல்லையின் தவறான பக்கம்
ஒன்றாக இருந்தோம்.

705
00:46:36,526 --> 00:46:38,987
எங்கள் இலக்காக இருந்த
ஒரு எதிரியால் கண்டுபிடிக்கப்பட்டோம்.

706
00:46:39,070 --> 00:46:40,363
எங்கள் மறைவு அம்பலமானது.

707
00:46:40,446 --> 00:46:42,448
கிளம்பியிருக்க வேண்டும்.

708
00:46:42,532 --> 00:46:45,201
ஆனால், மிஷனை முடிப்பது
எங்களையே முடிப்பது போன்று இருந்தது.

709
00:46:45,285 --> 00:46:47,996
அதனால், லீவை ஒரு பொய் சொல்லலாம்
என்று பரிந்துரைத்தான்.

710
00:46:48,079 --> 00:46:49,497
கடினமானதை ஏற்பது.

711
00:46:49,581 --> 00:46:52,417
எங்கள் இலக்கிடம், நாங்கள் நிச்சயதார்த்தம்
செய்துகொண்டதாகச் சொன்னான்.

712
00:46:52,500 --> 00:46:54,460
ஒரு திருமண சான்றிதழை தயார் செய்தான்,

713
00:46:55,420 --> 00:46:57,630
செய்தித்தாளில் திருமண அறிவிப்பு கொடுத்தான்,

714
00:46:57,714 --> 00:46:59,716
டார்கெட்டில் எங்களைப் பதிவு செய்தான்.

715
00:47:00,550 --> 00:47:02,760
உண்மையை அடிப்படையாகக் கொண்டு
கட்டமைக்கப்பட்ட பொய் அது,

716
00:47:02,844 --> 00:47:05,096
நடந்திருக்கக் கூடாத உறவு அது.

717
00:47:05,179 --> 00:47:06,639
அது வேலை செய்தது.

718
00:47:06,723 --> 00:47:11,519
நாங்கள் எங்கள் மிஷனை முடித்து, சிஐஏ செலவில்
தேனிலவுக்காக திரும்பவும் படுக்கைக்குச் சென்றோம்.

719
00:47:12,312 --> 00:47:13,605
ஏன் இதை முடிக்கணும்?

720
00:47:16,441 --> 00:47:18,151
- என்ன சொல்கிறாய்?
- இது ஏற்கனவே சட்டப்பூர்வமானது.

721
00:47:18,234 --> 00:47:19,777
நாம் கணவன் மனைவி.

722
00:47:19,861 --> 00:47:21,446
புரொப்போசல் மட்டும்தான் குறைகிறது.

723
00:47:24,199 --> 00:47:25,450
நீ என்னை…

724
00:47:25,533 --> 00:47:26,659
நிறுத்து.

725
00:47:26,743 --> 00:47:27,952
இதை அதிகாரப்பூர்வமாக ஆக்குவோம்.

726
00:47:28,036 --> 00:47:29,037
நீ செய்வாயா?

727
00:47:29,746 --> 00:47:31,748
நீ செய்வாயா?

728
00:47:31,831 --> 00:47:32,832
நீ செய்வாயா?

729
00:47:37,128 --> 00:47:38,630
சம்மதம்.

730
00:47:38,713 --> 00:47:39,964
“சம்மதம்” சொல்லிவிட்டாள்!

731
00:47:40,798 --> 00:47:42,175
அவள் “சம்மதம்” சொல்லிவிட்டாள்.

732
00:47:49,849 --> 00:47:51,309
இது உண்மையாக இருக்க விரும்பினேன்.

733
00:47:53,353 --> 00:47:54,604
அப்படி இல்லாததற்கு வருந்துகிறேன்.

734
00:47:58,024 --> 00:47:59,234
நானும்தான்.

735
00:48:01,194 --> 00:48:02,570
அவன் ஏன் அப்படிச் செய்தான் என்று நினைக்கிறாய்?

736
00:48:04,656 --> 00:48:06,074
எனக்குத் தெரியாது.

737
00:48:08,034 --> 00:48:09,410
என் நம்பிக்கையைப் பெற.

738
00:48:10,370 --> 00:48:11,913
அனுகல் பெற.

739
00:48:11,996 --> 00:48:13,122
எப்பவும் அப்படித்தான் செய்வான்.

740
00:48:13,831 --> 00:48:15,250
நாங்கள் அப்படித்தான் செய்வோம்.

741
00:48:15,333 --> 00:48:16,793
அது ஒரு மாயத் தந்திரம்.

742
00:48:19,879 --> 00:48:22,840
- அது ஒரு தந்திரம்.
- என்னது?

743
00:48:22,924 --> 00:48:24,342
விவியன் பைக், அந்த ஏமாற்றுப் பேர்வழி.

744
00:48:24,425 --> 00:48:27,470
அவளைப் பிடித்தது, அவளைக்
கைது செய்தது, எல்லாமே தந்திரம்தான்.

745
00:48:28,012 --> 00:48:29,180
ஐயோ.

746
00:48:31,432 --> 00:48:35,019
அரசு நீதிபதி உன் வழக்கை
விடுவிக்க உத்தரவு கொடுத்து இருக்கிறார்.

747
00:48:35,103 --> 00:48:36,729
சியாட்டலில் நீ இறங்கியதும்,

748
00:48:36,813 --> 00:48:40,108
பிஓபி உன் சொத்துப் பட்டியலைப் பார்த்து,
உன் விடுதலையை நடைமுறைப்படுத்துவார்கள்.

749
00:48:40,191 --> 00:48:42,610
- விடுதலை கட்டணம்…
- மிகப் பெரிய ஏமாற்று வேலை.

750
00:48:43,778 --> 00:48:45,238
நாம் அதைக் கிட்டத்தட்ட கவனிக்காமல் விட்டோம்.

751
00:48:46,990 --> 00:48:48,366
உன் ஃபோன் அழைப்பு பதிவுகளைப் பார்த்தேன், விவ்.

752
00:48:48,449 --> 00:48:50,743
உன் கைதிற்குத் துப்புக் கொடுத்த பெண்,
நீதான் என்று எங்களுக்குத் தெரியும்.

753
00:48:50,827 --> 00:48:51,953
உன்னை நாங்கள் கண்டுபிடிக்க
வேண்டும் என்று நீ நினைத்தாய்.

754
00:48:52,036 --> 00:48:54,539
வேன் ஹார்ன் உன் கூட்டாளி இல்லை
என்று நீயே சொன்னாய்.

755
00:48:54,622 --> 00:48:55,832
அவள்தான் உனது இலக்கு.

756
00:48:56,332 --> 00:48:59,002
நீ தரையில் கால் வைத்த தருணத்தில் இருந்து,
அவளைத்தான் ஏமாற்றிகொண்டு இருக்கிறாய்.

757
00:49:00,461 --> 00:49:01,629
கவனித்துக்கொண்டும், ஒட்டு கேட்டுக்கொண்டும்.

758
00:49:03,464 --> 00:49:06,259
அவளைத் தப்பிக்க வழி கண்டுபிடிக்க வைத்து,
அதை எங்களுக்கு சொன்னாய்,

759
00:49:06,342 --> 00:49:09,470
அதை வைத்து, நீ உன் விடுதலைக்கு
பேரம் பேசலாம்.

760
00:49:11,097 --> 00:49:12,932
இது உன் தண்டனையை ரத்து செய்ய இல்லைதானே?

761
00:49:14,726 --> 00:49:16,102
இல்லை, இது பணத்துக்காகத்தான்.

762
00:49:19,022 --> 00:49:20,648
கிட்டி வேன் ஹார்னின் பணம்.

763
00:49:22,400 --> 00:49:24,652
உன்னைக் கைது செய்த வீட்டின்
கணினிப் பதிவைப் பார்த்தால்,

764
00:49:24,736 --> 00:49:26,237
அவளது வங்கியுடன் செய்த பரிவர்த்தனை

765
00:49:27,614 --> 00:49:29,532
தெரியவரும் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது.

766
00:49:34,621 --> 00:49:36,915
நீ எப்படி அதைச் செய்தாய் என்று எனக்குத்
தெரியாது, விவ். எனக்குத் தெரியாது.

767
00:49:36,998 --> 00:49:40,585
ஆனால், காவலர்களால் கண்டுபிடிக்க முடியாத
42 லட்ச டாலரை எப்படியோ கண்டுபிடித்துவிட்டாய்.

768
00:49:45,715 --> 00:49:47,175
நீ அவளிடம் இருந்து திருடினாய்.

769
00:49:47,258 --> 00:49:50,845
நீ சுதந்திரமான பெண் மட்டும் இல்லை,
நீ பணக்காரப் பெண்ணும்தான்.

770
00:49:52,639 --> 00:49:54,891
நமக்குள் இந்த ஒப்பந்தம் இருப்பது நல்லதுதான்.

771
00:49:57,810 --> 00:49:59,062
ஆமாம், சரிதான்.

772
00:49:59,145 --> 00:50:00,605
அதாவது, நீ சுதந்திரமாகப் பேசலாம்
என்று அர்த்தம்.

773
00:50:00,688 --> 00:50:02,565
உனக்கு சுதந்திரம் இருக்கிறது,
வேன் ஹார்னின் பணமும் இருக்கிறது.

774
00:50:02,649 --> 00:50:05,068
நீ இவனை எங்கு பார்த்தாய் என்று எனக்குச் சொல்.

775
00:50:06,069 --> 00:50:07,862
விமானத்தில் அவன் முகம் மறைக்கப்பட்டிருந்தது, விவ்.

776
00:50:09,239 --> 00:50:11,991
விபத்திற்குப் பின், நீ அவன் முகத்தைப் பார்த்தாய்
என்பதால் உனக்கு அவன் முகம் தெரியும்.

777
00:50:12,075 --> 00:50:13,409
எங்கே பார்த்தாய்?

778
00:50:16,204 --> 00:50:17,205
இரண்டு நாட்களுக்கு முன்.

779
00:50:17,747 --> 00:50:20,542
காட்டில், ஆற்றங்கரையில். என்னிடம்
அவனது ஸ்வெட்டரைக் கொடுத்தான்.

780
00:50:20,625 --> 00:50:23,419
அவன் போகும் இடத்திற்கு இது
தேவையில்லை என்று சொன்னான்.

781
00:50:23,503 --> 00:50:26,297
- அவன் எங்கே போனான்?
- எல்லாரும் போன திசைக்கு எதிராக.

782
00:50:28,216 --> 00:50:29,634
அவன் எங்கே போனான்?

783
00:50:30,969 --> 00:50:32,053
ஃபேர்பேங்க்ஸுக்கு.

784
00:50:32,554 --> 00:50:33,596
ஒரு வேலைக்காக.

785
00:50:34,180 --> 00:50:37,058
ஒரு பழைய நண்பருடன் முடிக்கப்படாத
வேலை ஒன்று இருப்பதாகச் சொன்னான்.

786
00:50:39,852 --> 00:50:41,771
முடிந்ததா? ஏன்னா என் டாக்ஸி காத்திருக்கு.

787
00:50:44,315 --> 00:50:45,316
நன்றி.

788
00:50:48,152 --> 00:50:50,363
இனி உன்னுடன் போகர் விளையாடவே மாட்டேன்.

789
00:50:51,322 --> 00:50:52,532
கிட்டி - இறந்துவிட்டாள் - வேன் ஹார்ன்

790
00:50:57,161 --> 00:50:59,372
- ஃபிராங்க், நமக்கு ஒரு பிரச்சினை.
- என்ன?

791
00:50:59,455 --> 00:51:02,000
ரஷ்யாவிலிருந்து வந்த பயணிகளை விசாரித்தேன்.

792
00:51:02,083 --> 00:51:06,296
வின்சென்ட் தியாகோ என்பவன் ஒரு பொய்யான
உள்ளூர் முகவரியைப் பயன்படுத்தினான்.

793
00:51:06,379 --> 00:51:07,922
முகவரி தவறாக இருந்திருக்கலாம்.

794
00:51:08,006 --> 00:51:09,465
நானும் அப்படித்தான் நினைத்தேன்,
அதனால் அவனை கண்காணித்தேன்.

795
00:51:09,549 --> 00:51:10,550
டர்கி குடியரசு
டுராக் கோல்டன்

796
00:51:10,633 --> 00:51:12,677
பாஸ்போர்ட் அசல்தான், ஆனால் அடிப்படை
ஆவணங்கள் அனைத்தும் போலியானவை.

797
00:51:12,760 --> 00:51:13,970
பெயர், பிறப்புச் சான்றிதழ், எல்லாமே.

798
00:51:14,053 --> 00:51:16,764
நான் தூதுவனைக் கண்டுபிடித்துவிட்டேன். இந்த
வியாழக்கிழமை அவன் மாஸ்கோவை விட்டுச் சென்றான்.

799
00:51:16,848 --> 00:51:18,892
அந்த இரவு, ஃபேர்பேங்க்ஸ்
சுங்கச்சாவடியைக் கடந்து சென்றான்.

800
00:51:19,392 --> 00:51:20,602
அதன்பின் அவன் கண்டறியப்படவில்லை.

801
00:51:21,227 --> 00:51:23,813
- சுங்கச்சாவடி சிசிடிவி பதிவை எடுத்தேன்.
- அது அவன்தான்.

802
00:51:23,897 --> 00:51:25,190
அவன்தான் ஹாவ்லாக்கின் தூதுவன்.

803
00:51:26,774 --> 00:51:28,818
ஆம், எல்லையில் சுங்கச்சாவடி
அவனை நிறுத்தியது.

804
00:51:28,902 --> 00:51:30,820
விசாரித்துவிட்டு, அவனை அனுப்பிவிட்டது.

805
00:51:34,407 --> 00:51:35,533
ஆக, அவன் இங்குதான் இருக்கிறான்.

806
00:51:36,034 --> 00:51:37,035
அருமை.

807
00:51:37,118 --> 00:51:40,163
இப்போது இல்லை. இங்குதான் இருந்திருக்கிறான்.
அந்தப் படம் வியாழக்கிழமையின் பதிவு.

808
00:51:40,246 --> 00:51:41,956
விபத்துக்கு இருபத்தி நான்கு மணிநேரம் முன்.

809
00:51:42,040 --> 00:51:44,125
இங்கு ஃபேர்பேங்க்ஸில் இருக்கிறான்,
அன்றிலிருந்து பதுங்கி இருக்கிறான்.

810
00:51:44,209 --> 00:51:45,919
எதற்காக பதுங்கி இருக்கிறான்?

811
00:51:46,878 --> 00:51:49,005
ஆர்க்கைவ்வை வைத்து
அவன் என்ன செய்ய விரும்புகிறான்?

812
00:51:50,381 --> 00:51:53,134
ஹலோ. நான்தான் பேசுகிறேன்.
நான் இங்குதான் இருக்கிறேன்.

813
00:51:53,218 --> 00:51:55,094
அனைத்தும் திட்டமிட்டபடி இருக்கிறது.

814
00:52:14,447 --> 00:52:15,532
லூக்?

815
00:52:17,200 --> 00:52:19,077
- லூக்! சரி.
- நான் மேலே போய் பார்க்கிறேன்.

816
00:52:23,748 --> 00:52:25,124
லூக்!

817
00:52:29,170 --> 00:52:30,463
டாட்!

818
00:52:39,055 --> 00:52:40,640
லூக்!

819
00:52:46,521 --> 00:52:47,522
கீரா.

820
00:52:48,565 --> 00:52:50,650
கீரா, உனக்கு ஒண்ணுமில்லையே?
உனக்கு ஒண்ணுமில்லையே?

821
00:52:51,234 --> 00:52:52,360
எனக்குத் தெரியலை.

822
00:52:55,905 --> 00:52:58,825
- உனக்கு ஒண்ணுமில்லையே? ம்ம்?
- எனக்குத் தெரியலை.

823
00:52:59,617 --> 00:53:01,202
என் கை உடைந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

824
00:53:01,703 --> 00:53:03,246
இங்கிருந்து உன்னை வெளியே
கொண்டு போகிறேன், சரியா?

825
00:53:16,926 --> 00:53:18,970
உனக்கு ஒண்ணுமில்லையே? வா.

826
00:53:21,681 --> 00:53:22,765
வா.

827
00:53:25,852 --> 00:53:26,895
உனக்கு ஒண்ணுமில்லையே?

828
00:53:27,520 --> 00:53:29,480
- நீ நலம்தானே?
- ஆமாம்.

829
00:53:31,024 --> 00:53:34,068
நீ போகணும். நீ ஓடணும்…
உன்னால் முந்த அளவு தூரமாக ஓடு.

830
00:53:34,152 --> 00:53:35,361
நீ நெடுஞ்சாலை வரை ஓடணும், சரியா?

831
00:53:35,445 --> 00:53:37,030
நீ என்ன செய்வாய்? எனக்குத் தெரியலை.

832
00:53:37,113 --> 00:53:38,823
என்னைப் பற்றிக் கவலைப்படாதே.
நாம் இருவரும் அவர் கையில் சிக்கக் கூடாது.

833
00:53:38,907 --> 00:53:40,575
நான் அவரை திசைதிருப்புகிறேன்…

834
00:53:40,658 --> 00:53:42,327
- உன்னிடம் இருந்து அவரை திசைதிருப்புகிறேன்.
- நான் உன்னை விட்டு போக மாட்டேன்.

835
00:53:42,410 --> 00:53:43,411
போ. போ.

836
00:53:49,292 --> 00:53:50,293
சரியா?

837
00:55:33,646 --> 00:55:35,648
தமிழாக்கம்
மேனகா மணிகண்டன்

