1
00:00:25,401 --> 00:00:26,235
சனியனே!

2
00:01:00,603 --> 00:01:03,439
ஸ்னிக்கீ பீட்

3
00:01:12,323 --> 00:01:14,450
அவளோட பேர் தெரியல;
ஆனா பிரிட்டனை சேர்ந்தவள்.

4
00:01:15,034 --> 00:01:18,579
அவள் உதவியோட லான்ஸை மிரட்டி
பீட், திருட்டு பணத்தை வாங்கினான்.

5
00:01:18,996 --> 00:01:19,830
என்ன சொல்றீங்க?

6
00:01:20,247 --> 00:01:21,791
அது ரொம்ப பெரிய கதை.

7
00:01:22,041 --> 00:01:24,960
அவள், ப்ளீக்கரில் ஏதோ
லைப்ரரி நடத்தறதா கேள்விப்பட்டேன்.

8
00:01:25,336 --> 00:01:27,713
அவளை கண்டுபிடிச்சி,
மேகி, பீட் ஆகியோரின்

9
00:01:27,797 --> 00:01:29,840
திட்டம் பத்தி கேட்கனும்.

10
00:01:31,217 --> 00:01:32,927
தாத்தா, சாம் ரெண்டு பேரும்
பொய் சொல்லிருக்காங்க.

11
00:01:33,803 --> 00:01:34,929
என்ன பொய்?

12
00:01:35,012 --> 00:01:37,389
அப்பாவும், அம்மாவும் விபத்துல
செத்துப் போனதா,

13
00:01:38,390 --> 00:01:40,392
யாரோ குடிச்சிட்டு வந்து
அவங்க கார்ல இடிச்சதா சொன்னாங்க.

14
00:01:40,476 --> 00:01:43,729
ஆனா, போலீஸ் அறிக்கையில் அவன்
குடிக்கலன்னு இருக்கறதா டெய்லர் சொன்னான்.

15
00:01:43,813 --> 00:01:45,689
அப்றம் சொன்னாங்க,
"அந்த போலீஸ் தப்பா எழுதிட்டான்".

16
00:01:45,773 --> 00:01:46,857
ஆனா, அவங்க பொய் பேசறாங்க.

17
00:01:46,941 --> 00:01:50,152
உன் தாத்தா, சாம் ரெண்டு பேரும்
குடிச்சிட்டு உளறினாலும் உளறுவாங்க.

18
00:01:50,486 --> 00:01:54,365
லிலா, டேனியை கொன்றவன்
குடிச்சானோ,இல்லையோ

19
00:01:54,448 --> 00:01:55,574
இவன் குடிச்சிருந்தான்.

20
00:01:56,158 --> 00:01:57,576
அவன் பேரு ஜாக்கஸ் ரேனார்ட்.

21
00:01:58,828 --> 00:02:02,164
அவன் குடும்பத்தினர் கியூபெக்கை
பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

22
00:02:02,581 --> 00:02:04,500
கத்தோலிக்கர்கள். நல்ல மனிதர்கள்.

23
00:02:04,875 --> 00:02:06,001
ஜாக்கஸ் அதை செய்யும்வரை.

24
00:02:07,294 --> 00:02:10,047
மன்னிச்சிக்கோ,
அவன் சரியான பேராசை பேர்வழி

25
00:02:27,773 --> 00:02:28,607
இதோ உங்களுக்கு.

26
00:02:30,150 --> 00:02:31,694
அவள் கால் இல்லை மெஸேஜ் அனுப்பினாளா?

27
00:02:32,945 --> 00:02:34,738
என்னை
மோப்பம் பிடிச்சிட்டா.

28
00:02:35,364 --> 00:02:38,450
நான் இங்க வரப்ப அவள் மெதுவா,
எதுவும் தெரியாத மாதிரி போனாள்.

29
00:02:40,995 --> 00:02:41,996
சரி ஆரம்பிக்கலாம்.

30
00:02:42,830 --> 00:02:45,457
ஷானன்
என்னை சீன் பின் தொடற்றான்!

31
00:02:46,667 --> 00:02:47,918
உனக்கு என்ன வேணும், சீன்?

32
00:02:50,921 --> 00:02:52,047
உனக்கு
நன்றி சொல்ல மறந்துட்டேன்.

33
00:02:52,756 --> 00:02:53,883
எதுக்காக?

34
00:02:54,049 --> 00:02:55,801
என் லாக்கரில் பட்டாசு
வச்சதுக்கு.

35
00:02:57,094 --> 00:02:59,179
ஆடைகளில்
கரப்பான் பூச்சி வச்சதுக்கு.

36
00:02:59,930 --> 00:03:01,348
அது-பேரு.

37
00:03:01,891 --> 00:03:03,225
ஆங், மிரட்டல்கள்.

38
00:03:04,518 --> 00:03:06,645
அப்றம் இந்த கடல் நண்டு.

39
00:03:06,770 --> 00:03:07,980
அப்ப நாம குழந்தைகள்.

40
00:03:08,522 --> 00:03:10,482
கடல் நண்டுக்கு வலிக்கும் தெரியுமா?

41
00:03:12,192 --> 00:03:13,027
தெரியாது.

42
00:03:13,652 --> 00:03:14,570
ஒத்துக்கறேன்.

43
00:03:16,363 --> 00:03:19,074
ஆனா, நண்டுகளின் ஓடு
ரொம்ப கடினமானது.

44
00:03:19,992 --> 00:03:21,827
யாரை சொல்றேன்னு தெரியுதா?

45
00:03:22,828 --> 00:03:24,788
-நீதானே அந்த நண்டு.
-ஆமா.

46
00:03:25,372 --> 00:03:30,169
நீயும், உன் கசினும் செய்த "கேலிகள்",

47
00:03:31,211 --> 00:03:32,630
என்னை வலுவாக்கியுள்ளன.

48
00:03:35,799 --> 00:03:39,094
நீ இங்க ஷானன்பத்தி
பேச வந்ததா நினைச்சேன்.

49
00:03:40,763 --> 00:03:41,847
இரு பேசறேன்.

50
00:03:42,473 --> 00:03:45,267
இத முதல்ல பேசியே ஆகனும்.
ஏன்னா, 20 வருசம் கழிச்சி,

51
00:03:45,351 --> 00:03:48,395
உங்களில் நான் மட்டும் வெற்றிகரமான
தொழிலதிபரா மாறியிருக்கேன்,

52
00:03:48,520 --> 00:03:50,272
லட்சக்கணக்குல சம்பாதிக்கறேன்.

53
00:03:51,357 --> 00:03:53,817
ஆனா, நீ வெறும் போலீஸ்தான்.

54
00:03:55,819 --> 00:03:57,154
நீ அவளை வச்சிருக்க, கரெக்டா?

55
00:04:01,617 --> 00:04:02,785
ஒரே கேள்விதான்.

56
00:04:04,495 --> 00:04:06,622
நீ என் மனைவியை வச்சிருக்கியா?

57
00:04:09,166 --> 00:04:10,125
ஆமா.

58
00:04:22,221 --> 00:04:23,973
பரவால, நீ கொடுத்து வச்சவன்.

59
00:04:25,307 --> 00:04:26,642
நான் ஒரு தடவதான் அவளை
ஜல்சா பண்ணிருக்கேன்,

60
00:04:27,643 --> 00:04:29,895
ஆனா,
நீ தினமும் இரவில் ஜல்சா பண்ற,

61
00:04:29,979 --> 00:04:32,314
எப்படி பார்த்தாலும், உன்னோட
டேஸ்ட் ரொம்ப கேவலமா இருக்கு.

62
00:04:33,774 --> 00:04:35,734
உன்னை அவள் எப்பவோ
கை கழுவி இருக்கனும்.

63
00:04:36,402 --> 00:04:37,444
இப்படியும் திட்டம் இருக்கா?

64
00:04:38,404 --> 00:04:41,949
ஹார்ட்ஃபோர்டு டீல் முடியட்டும்,
பாதி பணத்தை கொடுத்து, முடிச்சிடறேன்.

65
00:04:42,533 --> 00:04:43,742
நான், எதிர்பார்த்தேன்.

66
00:04:45,661 --> 00:04:48,122
அப்பாகிட்ட இருந்து பெற்ற ஆவணங்களில்
நான் கையெழுத்திட்டு தந்ததை படிக்கும்படி

67
00:04:48,247 --> 00:04:49,873
அவள்கிட்ட சொல்லு.

68
00:04:52,334 --> 00:04:54,670
நீ காலேஜ் படிக்காதவன்தானே,
கவலைப்படாத, சொல்றேன்.

69
00:04:54,920 --> 00:04:57,464
ஏஎன்பி இப்ப தனி நிறுவனம்.

70
00:04:58,215 --> 00:05:00,300
ஹோல்டிங் நிறுவனம் மாதிரி,

71
00:05:00,718 --> 00:05:05,264
அதனால, சொத்து பிரச்னை பத்தி
எனக்கு கவலையில்ல.

72
00:05:07,016 --> 00:05:10,894
போலீஸ் சம்பளத்துல ஷானன்
எப்படி நிம்மதியா வாழ்வாள்?

73
00:05:13,939 --> 00:05:15,482
அவள் பணத்தை பார்க்கல.

74
00:05:16,233 --> 00:05:19,445
காதலிக்கற எல்லாரும் இப்டித்தான்
சொல்வாங்க, தெரியாதா?

75
00:05:19,945 --> 00:05:23,449
உண்மைய சொன்னா,
பணம்தான் எல்லாருக்கும் முக்கியம்.

76
00:05:27,327 --> 00:05:29,496
ஏஜே, எவ்ளோ தூரம் இந்த ட்யூப்பை
விடுவ?

77
00:05:29,705 --> 00:05:32,458
வரை படத்தின் படி பார்த்தால்,
தோராயமா 20 மீட்டர் வரும்.

78
00:05:34,543 --> 00:05:37,880
ஐந்தாம் ஹென்றி போல படைகளை
மேற்பார்வை மட்டும் செய்வியா,

79
00:05:37,963 --> 00:05:39,339
உதவி ஏதும் செய்ய மாட்டியா?

80
00:05:39,423 --> 00:05:41,091
"நீங்களே மகிழ்ச்சியா செய்ங்க".

81
00:05:41,175 --> 00:05:42,176
எனக்கு மகிழ்ச்சி இல்ல.

82
00:05:44,094 --> 00:05:46,221
நாளை
மதியம் இது ரெடியா இருக்குமா?

83
00:05:46,680 --> 00:05:50,267
இன்னும் இதை பரிசோதிக்கல,
நானும் அதுக்குள்ள முடிக்க பாக்கறேன்.

84
00:05:50,642 --> 00:05:53,228
ஆனா, எப்படி நடக்கும்னு தெரியல.

85
00:05:54,229 --> 00:05:55,647
இதை வச்சி எவ்ளோ சத்தம் போடலாம்?

86
00:05:56,398 --> 00:05:58,233
டெசிபல் அளவில் கேட்கறியா?

87
00:05:58,317 --> 00:06:02,613
உதாரணமா, புல் அறுக்கற மெசின் 90 டெசிபல்,
ஜெட் விமானம் 120 டெசிபல் சத்தம் தரும்.

88
00:06:02,696 --> 00:06:04,490
எதுவும் கட்டிடம் இடிஞ்சா 85 டெசிபல்.

89
00:06:04,573 --> 00:06:05,908
துப்பாக்கி வெடி சத்தம் 140 டெசிபல்.

90
00:06:06,366 --> 00:06:07,826
இது எவ்ளோ வரும்னா...

91
00:06:12,498 --> 00:06:13,332
கேட்குதா?

92
00:06:13,499 --> 00:06:15,334
என்ன அவனுக்கு பிரச்னை?

93
00:06:15,417 --> 00:06:16,627
நண்பர்கள் ரொம்ப கம்மியாம்.

94
00:06:17,544 --> 00:06:19,671
நீ கேசினோ போகலியா?

95
00:06:20,005 --> 00:06:20,839
இனிமேதான் போகனும்.

96
00:06:21,173 --> 00:06:22,341
என்ன பேர் வேண்டும்?

97
00:06:22,424 --> 00:06:25,094
கேட்ட உடனே மறந்திடற மாதிரி
ஒரு பேரு தேவை.

98
00:06:26,678 --> 00:06:28,388
11 மில்லியன் டாலர் பெரிய பணம்தான்.

99
00:06:29,181 --> 00:06:30,849
அதற்காகத்தான் நீ இத செய்றியா?

100
00:06:30,933 --> 00:06:32,935
ஆமா, $11,000,000. நீ ஏன் பண்ற?

101
00:06:34,144 --> 00:06:35,395
நான் அவளுக்காக வந்தேன்.

102
00:06:38,774 --> 00:06:39,775
யாரு மேகியா?

103
00:06:41,276 --> 00:06:42,986
நிறைய பணம் கிடைச்சா.

104
00:06:43,695 --> 00:06:45,572
என் மக்களுக்கு கேசினோ கட்ட
நினைச்சோம்.

105
00:06:46,031 --> 00:06:47,533
பணத்தை விட அதிக பிரச்னைதான்
கிடைச்சது.

106
00:06:47,991 --> 00:06:50,577
என் மகன் சில டாலர்தான்
சம்பாதிச்சான்.

107
00:06:52,538 --> 00:06:54,123
இப்ப அந்த கேசினோ என்னாச்சி?

108
00:06:54,414 --> 00:06:55,707
கவுன்சில் ஓட்டு போட்டுருக்கு.

109
00:06:55,791 --> 00:06:58,418
ஆனா, பழங்குடியின பிரதிநிதிகளை
வெளியேற்ற ஆரம்பிச்சிட்டாங்க.

110
00:06:58,502 --> 00:07:01,171
மிச்சம் இருக்கறவங்களும்
நிறைய பணம் எதிர்பாக்கறாங்க.

111
00:07:02,840 --> 00:07:04,007
அதை கட்ட வாய்ப்பில்ல.

112
00:07:05,134 --> 00:07:07,386
அதான் இப்ப மற்றொரு பழங்குடியின
மக்களின் கேசினோவுல வேலை செய்றேன்..

113
00:07:08,220 --> 00:07:09,429
சரி நான் கிளம்பறேன்.

114
00:07:11,682 --> 00:07:13,183
நண்பர்கள் ஆகிட்டிங்க போல?

115
00:07:14,184 --> 00:07:16,436
குவாஹூவை நம்பலாமா?

116
00:07:17,437 --> 00:07:20,649
நீயும், பீட்டும் பேசின மாதிரியே,
அந்தாளும் பேசறான்.

117
00:07:20,941 --> 00:07:23,652
எனக்கு அவரை 14 வயசில் இருந்தே
தெரியும்.

118
00:07:24,153 --> 00:07:26,989
காட்டுக்குள்ள அப்பா கூட போறச்சே
குவாஹூ நிறைய உதவி செஞ்சிருக்கார்.

119
00:07:27,072 --> 00:07:29,408
அப்ப, உன் திறமை அவருக்கும்
தெரியும்.

120
00:07:30,826 --> 00:07:32,494
அவருக்கு அவ்ளோ விவரம் பத்தாது.

121
00:07:40,669 --> 00:07:42,129
ஜூலியா. ஹாய்.

122
00:07:42,880 --> 00:07:44,840
நானும், சாமும் லூயிசை பாக்க
வந்தோம்.

123
00:07:44,923 --> 00:07:47,676
அவன் இங்க இல்ல.
வாலரியை தேடி போயிருக்கான் போல.

124
00:07:47,759 --> 00:07:49,887
ஆமா. அவன் டாக்ரி கூட இருக்கான்.

125
00:07:50,262 --> 00:07:53,348
எனக்கு உதவி தேவை. பழங்குடியின ஆள்
அயாவமத் என்ன துரத்தறான்.

126
00:07:53,557 --> 00:07:55,017
நாங்க ரெண்டு பேரும் உடனே வரோம்.

127
00:07:55,100 --> 00:07:56,185
இல்ல, நான் பாத்துக்கறேன்.

128
00:07:56,268 --> 00:07:58,103
ஆனா, எலன், ஜேக்கப்பை,

129
00:07:58,187 --> 00:08:00,480
நீங்க உடனே எங்கயாச்சும்
பாதுகாப்பா வச்சிக்க முடியுமா?

130
00:08:00,689 --> 00:08:02,816
கண்டிப்பா, செய்றோம்,
ஆனா, உன்னை பத்தி கவலையா இருக்கு.

131
00:08:03,192 --> 00:08:05,986
லூயிஸ் அப்றம் அயாவமத்,
2 பேரும் உன்னை சும்மா விடமாட்டானுங்க.

132
00:08:06,069 --> 00:08:07,863
இப்ப பத்திரமான இடத்துல இருக்கேன்.

133
00:08:07,946 --> 00:08:10,365
யாருக்கும், நான் இங்க
இருக்கற விசயம் தெரியாது.

134
00:08:11,825 --> 00:08:12,659
சரி.

135
00:09:55,721 --> 00:09:57,139
ஹன்னா, பேபி.

136
00:09:57,556 --> 00:10:00,267
எழுந்திரு. இதோ காஃபி.

137
00:10:00,350 --> 00:10:01,184
இன்னும் அரை மணி நேரம் தூங்கறேன்.

138
00:10:01,351 --> 00:10:03,520
முடியாது. ஒரு முக்கிய வேலை இருக்கு.

139
00:10:04,146 --> 00:10:05,564
எந்த வேலை பத்தி பேசற?

140
00:10:05,689 --> 00:10:09,276
அந்த 2 கிழவனுங்க, நேத்து வந்தானுங்களே,
அதுல ஒருத்தன், பத்திரத்தை திருடிட்டான்.

141
00:10:09,484 --> 00:10:10,652
அதை நீதான் சரி செய்யனும்.

142
00:10:11,028 --> 00:10:12,571
உடனே, நீ வாலரி வீட்ட
கன்காணிக்கணும்.

143
00:10:12,654 --> 00:10:14,781
அதுக்கு பதிலா உனக்கு
கையடிச்சி விடவா?

144
00:10:15,365 --> 00:10:17,034
கேட்க நல்லாருக்கு, ஆனா. எழுந்திரு.

145
00:10:17,117 --> 00:10:18,452
துப்பாக்கி தருவியா?

146
00:10:19,494 --> 00:10:20,829
-எழுந்திருக்கிறயா?
-சரி.

147
00:10:21,997 --> 00:10:25,000
-சரி, இப்ப என்னோட துப்பாக்கி வேணுமா.
-உன் துப்பாக்கிதான் வேணும்.

148
00:10:25,083 --> 00:10:26,376
நிஜமாவா சொல்ற?

149
00:10:26,460 --> 00:10:27,294
ஆமா, ரொம்ப புடிக்கும்.

150
00:10:27,627 --> 00:10:28,628
எனக்கு தெரியும்.

151
00:10:44,895 --> 00:10:47,731
ஒரு வேலையா நான் உடனே
கிளம்பனும்.

152
00:10:47,939 --> 00:10:49,274
நீயும் கூட வர்றியா?

153
00:10:53,153 --> 00:10:55,322
இருட்டற வரைக்கும் எங்கயும் வரதா
இல்லை.

154
00:11:06,625 --> 00:11:08,126
நிஜமாவா?

155
00:11:34,611 --> 00:11:36,655
துப்பாக்கி ஆசாமி
2764 ஹார்பைசன்

156
00:11:36,738 --> 00:11:39,491
நியூயார்க் போலீஸ் எதுவும்
பாக்கலைன்னு சொல்றான்.

157
00:12:10,897 --> 00:12:11,940
அர்னால்ட்.

158
00:12:17,112 --> 00:12:19,114
சூசன் என்ன சொல்றா?

159
00:12:19,197 --> 00:12:20,490
ஒரு முக்கியமான தகவல்.

160
00:12:22,117 --> 00:12:23,660
இது பெரிய தகவல் இல்ல.

161
00:12:26,913 --> 00:12:28,874
எனக்கு தெரியல. அப்றம்
கூப்பிடறேன்.

162
00:12:30,125 --> 00:12:30,959
யார் அது?

163
00:12:31,084 --> 00:12:32,461
குவாஹூ.

164
00:12:32,752 --> 00:12:34,671
அந்த கேசினோ மேனேஜர், சூசன்,

165
00:12:34,754 --> 00:12:39,176
எருமையை ஆய்வு செய்ய ஸ்மித்சோனியன்
அதிகாரிகளை வர சொல்லிருக்காலாம்.

166
00:12:39,384 --> 00:12:40,218
எப்போ?

167
00:12:40,302 --> 00:12:41,845
நாளைக்கு மதியம்.

168
00:12:47,184 --> 00:12:48,768
இப்ப என்ன நடக்கும்னு பாக்கலாம்.

169
00:12:49,269 --> 00:12:52,189
அது சாதாரண எருமைன்னு தெரிஞ்சா,
மியூசியத்துல எடுத்து வச்சிடுவாங்க,

170
00:12:52,272 --> 00:12:54,524
நாம எல்லாத்தையும் நிறுத்திட்டு,
முதல்ல இருந்து ஆரம்பிக்கனும்.

171
00:12:54,858 --> 00:12:57,319
இது தான் சிறந்த சூழ்நிலை .

172
00:12:57,444 --> 00:13:00,989
ஆனா, மோசமான சூழ்நிலை என்னன்னா
அவங்க 11 மில்லியன் டாலரை கண்டுபிடிக்கிறது

173
00:13:01,239 --> 00:13:03,825
கண்டுபிடிச்சிட்டா, கேசினோவுக்கு
கொள்ளை லாபம் கிடைச்சிடும்.

174
00:13:04,201 --> 00:13:05,785
அப்படி நடக்க விடக்கூடாது.

175
00:13:10,081 --> 00:13:11,249
இன்றிரவே போகலாம்.

176
00:13:13,752 --> 00:13:14,586
இன்னிக்கா?

177
00:13:14,669 --> 00:13:18,131
இருக்கற வசதி போதும்,
ரிகர்சல் பாக்காம போகலாம்.

178
00:13:18,215 --> 00:13:20,383
அவங்கள சமாதானம் செய்யனும்,
ஆனா...

179
00:13:20,759 --> 00:13:25,263
நீ ஒரு ப்ரொஃபெக்ஷனல். வாழ்க்கை முழுக்க
நீ இந்த வேலைய தான் செய்ற.

180
00:13:26,139 --> 00:13:28,517
உன்னோட அணில எல்லா உறுப்பினறும்
இத தான் செய்யறாங்க.

181
00:13:28,600 --> 00:13:30,852
சரிதான், ஆனா, நாம இப்ப
இன்னும் முழுசா திட்டம் போடலியே,

182
00:13:30,977 --> 00:13:32,312
சூசன் இரவு பணியில் இருப்பாள்.

183
00:13:32,729 --> 00:13:35,524
என்னை அடையாளம் தெரியலன்னாலும்,
உன்னை இல்ல ஜினாவை கண்டுபிடிச்சிடுவா.

184
00:13:35,607 --> 00:13:37,442
அப்ப ஜினாவை கூப்பிட
வேணாம்.

185
00:13:37,526 --> 00:13:39,152
எந்த நம்பிக்கைல சொல்ற?

186
00:13:39,236 --> 00:13:44,074
2 நாள் முன், நீ ஒரு கார்ல போனியே,
ஆசிட் தொட்டில சாகுற மாதிரி.

187
00:13:44,950 --> 00:13:45,992
இப்ப இங்க இருக்க. மறந்துட்டியா.

188
00:13:54,876 --> 00:13:56,253
மாரியஸ் ஜே

189
00:14:00,924 --> 00:14:01,800
கேட்டி.

190
00:14:01,883 --> 00:14:04,970
நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர்,
ஏமாற்றுவோறிடம்

191
00:14:05,053 --> 00:14:07,347
பேச விரும்பவில்லை.

192
00:14:07,597 --> 00:14:08,598
5 ஆயிரம் டாலர் தரேன்.

193
00:14:08,723 --> 00:14:11,184
3 மணி நேர வேலைதான்.
துப்பாக்கி, நிர்வாணம் தேவையில்ல.

194
00:14:12,602 --> 00:14:13,979
இப்ப சொல்லு, பணம் தேவையா,
இல்லியா?

195
00:14:14,062 --> 00:14:14,896
என்ன சொல்ற?

196
00:14:15,146 --> 00:14:17,065
அது ஒரு 24 மணிநேர கேசினோ.

197
00:14:20,068 --> 00:14:21,611
எங்க? எப்ப? எப்படி?

198
00:14:21,736 --> 00:14:22,612
மோஹிகன் சன்ல இருக்கு.

199
00:14:22,779 --> 00:14:25,323
கேசினோ மேனேஜர்கிட்ட பேசனும்.
ஹார்ட்ஃபோர்ட் நிருபர் மாதிரி.

200
00:14:26,241 --> 00:14:27,951
அதுவும் இப்பவே, பிற்பகலில்.

201
00:14:28,285 --> 00:14:30,245
காக்டெயில் நீங்க ஏற்பாடு
பண்ணுங்க.

202
00:14:43,300 --> 00:14:44,134
ஒன்னும் பிரச்னை இல்ல.

203
00:14:44,509 --> 00:14:45,885
திட்டத்தில் சில மாற்றம்.

204
00:14:47,137 --> 00:14:48,763
இன்றிரவே நாம போகனும்.

205
00:14:48,847 --> 00:14:49,973
காமெடி பண்ணாத.

206
00:14:50,140 --> 00:14:52,684
நிஜமாதான் சொல்றேன்.
நாளை மதியம் வேற ஒரு பிரச்னை இருக்கு.

207
00:14:52,934 --> 00:14:54,269
இன்னும் மெசின் ரெடி ஆகல.

208
00:14:54,477 --> 00:14:56,771
தெரியும். வேகமா வேலைய முடிங்க.

209
00:14:56,855 --> 00:14:58,231
அது முடியாது.

210
00:14:58,315 --> 00:15:00,275
இயற்பியல் ரீதியா கஷ்டம், மாரியஸ்.

211
00:15:00,400 --> 00:15:01,901
அதை சீக்கிரம் முடிச்சி மூட்டை கட்டு.

212
00:15:03,069 --> 00:15:04,321
அதுல என்ன இருக்கு?

213
00:15:04,446 --> 00:15:05,280
ஒன்னுமில்ல.

214
00:15:07,032 --> 00:15:08,283
சரி இன்னிக்கே போலாம்,

215
00:15:10,201 --> 00:15:13,913
கேசினோ மேனேஜர் இருக்காளே.
அவளை மூட்டை கட்டப்போறியா?

216
00:15:13,997 --> 00:15:15,332
இல்ல, அவளை கேட்டி பாத்துக்குவா.

217
00:15:15,457 --> 00:15:16,666
அவள் வரலன்னு நினைச்சேன்.

218
00:15:16,750 --> 00:15:18,668
திடீர் விருந்தினரா வருவாள்.

219
00:15:18,752 --> 00:15:20,128
இது சரியா கொப்பளிக்குமா?

220
00:15:20,211 --> 00:15:22,422
சரியா செய்யனுமா இல்ல
வேகமா செய்யனுமா?

221
00:15:22,505 --> 00:15:23,506
ரெண்டுமே செய்யனும்.

222
00:15:23,590 --> 00:15:27,010
மானட்கிட்ட சீக்கிரமா நீர்த்தாமரை
வரைய சொல்றாப்ல இருக்கு.

223
00:15:27,135 --> 00:15:29,471
கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே.

224
00:15:29,554 --> 00:15:32,223
நீ இந்த பணத்துக்காக
ரொம்ப கஷ்டப்படற, மகனே.

225
00:15:32,307 --> 00:15:36,811
பாரு எனக்கு தெரியும், நான் ஏமாற்றுபவன்
இல்லை, ஆனா, அவசரப்படறது தப்பாகிடும்.

226
00:15:36,895 --> 00:15:37,729
சரி.

227
00:15:47,197 --> 00:15:48,198
போர்ட்டர்,

228
00:15:49,824 --> 00:15:53,828
டெக்சாஸ் கிழக்கே நாம ஒரு வைல்ட் கேட்டர்ர
வீழ்த்தினோமே, ஞாபகம் இருக்கா?

229
00:15:53,912 --> 00:15:58,833
நீ, நான் அப்றம் மார்க் சேர்ந்து
காலியான எண்ணெய் வயல் நடுவுல.

230
00:15:59,751 --> 00:16:04,255
நமக்கு 30 நிமிக்ஷம் தயார் பண்ண இருந்தது
அப்புறம் இங்க் நிறைந்த எண்ணை குவளை.

231
00:16:04,756 --> 00:16:05,924
அவ்வுளவு தான்?

232
00:16:07,342 --> 00:16:11,096
ஏஜே, ரோடியோ டிரைவ்ல நாம ஒரு
பாதுகாப்பு பெட்டிய க்ராக் பண்ணினோமே?

233
00:16:11,554 --> 00:16:13,973
அதுவும் நடுப்பகல்ல,
பொதுமக்கள் நடமாடும் நேரத்துல.

234
00:16:14,474 --> 00:16:16,101
எந்த திட்டமும் செய்யல,

235
00:16:16,768 --> 00:16:19,104
ஆனா, வாய்ப்பை பயன்படுத்தினோம்.

236
00:16:20,355 --> 00:16:22,148
பீட். ஜினா.

237
00:16:22,691 --> 00:16:23,858
பாப் இல்ல.

238
00:16:24,609 --> 00:16:28,488
உங்களுக்கு சந்தேகம் வந்தா,
எப்பவும் இதைத்தான் சொல்வேன்.

239
00:16:28,571 --> 00:16:29,406
நம்பிக்கைதான் எல்லாம்.

240
00:16:32,450 --> 00:16:33,576
அவன் சொல்றது சரிதான்.

241
00:16:36,371 --> 00:16:38,998
கூடைய ரெடி பண்ணலாம்.
அந்த கருமத்தை மூட்டை கட்டிடலாம்.

242
00:16:39,082 --> 00:16:40,125
நாம போகலாம்.

243
00:16:42,460 --> 00:16:45,171
நீ இதை லூகாகிட்ட சொல்லிடு.
அவனுக்கு ஆச்சரியங்கள் பிடிக்காது.

244
00:16:45,255 --> 00:16:48,216
-பரவால. நான் புரிய வைக்கிறேன்.
-நல்லது.

245
00:16:50,677 --> 00:16:52,345
முற்றிலும் பிடிக்கது.

246
00:16:52,762 --> 00:16:53,930
வேற திட்டம் போடு.

247
00:16:57,058 --> 00:16:58,309
வேற எதுவும் செய்ய முடியாது.

248
00:16:58,435 --> 00:17:01,104
இதுதான் செய்ய முடியும், இல்ல,
$11,000,000 பணத்தை மறந்திடு.

249
00:17:04,441 --> 00:17:06,693
நான் மறந்துட்டேன்னு நினைக்கறியா?

250
00:17:07,527 --> 00:17:08,611
எதை சொல்ற?

251
00:17:09,362 --> 00:17:10,530
நீ ஏமாற்றுபவன்.

252
00:17:14,826 --> 00:17:16,077
இது ஸெட் அப்பா?

253
00:17:16,161 --> 00:17:17,287
இல்ல.

254
00:17:18,246 --> 00:17:21,332
என் பணத்தை திருட
நீ ஏதோ திட்டம் தீட்டிருக்க!

255
00:17:21,416 --> 00:17:23,793
இல்ல, கடவுள் மேல ஆணையா!
என்னை நம்பு, லூகா...

256
00:17:23,877 --> 00:17:26,212
லூகா, அந்த கால் வரும்போது நான் இருந்தேன்.

257
00:17:26,880 --> 00:17:28,173
எது புல்க்ஷிட் இல்லை.

258
00:17:28,631 --> 00:17:30,425
நிஜமாவே இது ஒரு பிரச்னை .

259
00:17:34,846 --> 00:17:38,600
அவன் நல்லவன்னு நீ எப்படி நம்புற?

260
00:17:39,434 --> 00:17:41,352
அவனோட குழு போலீஸ்கிட்ட சிக்கிடுச்சி.

261
00:17:42,145 --> 00:17:44,230
எல்லாரும் பயப்படறாங்க,
அவன்கூட சண்டை போடறாங்க.

262
00:17:44,314 --> 00:17:45,774
யாருக்கும் இதை செய்ய விருப்பம் இல்ல.

263
00:17:47,025 --> 00:17:48,359
யாருமே விரும்பலியா?

264
00:17:50,069 --> 00:17:51,988
அப்றம் எப்படி நீ செய்யப்போற?

265
00:17:53,698 --> 00:17:55,575
குழுவினர் இல்லாம எப்படி?

266
00:17:57,035 --> 00:17:57,869
அதான், நீ இருக்கியே.

267
00:17:57,994 --> 00:17:59,037
நானா?

268
00:17:59,746 --> 00:18:00,663
அவங்களுக்கு உன்னை தெரியும்.

269
00:18:01,206 --> 00:18:02,415
உன் புகழ் பத்தி.

270
00:18:02,791 --> 00:18:04,167
உனக்கு பயப்படறாங்க.

271
00:18:04,250 --> 00:18:05,960
நீ இன்றிரவே போக சொன்னா,

272
00:18:07,045 --> 00:18:08,213
அவங்க போவாங்க.

273
00:18:17,388 --> 00:18:21,017
அந்த லைப்ரரி 2 மணிநேரம் முன்பே
திறந்திருக்கனும், ஆனா இன்னும் திறக்கல.

274
00:18:22,018 --> 00:18:23,311
ஒருவேள, பீட் அவளுக்கு
தகவல் சொல்லிருப்பான்.

275
00:18:23,728 --> 00:18:25,772
நீ இங்க வர்றதை பத்தி.

276
00:18:27,357 --> 00:18:28,608
சரியா சொன்ன.

277
00:18:32,612 --> 00:18:33,988
நான் புத்திசாலின்னு டெய்லர் சொல்வான்.

278
00:18:34,906 --> 00:18:36,449
நான் என்ன வேணா செய்யலாம்.

279
00:18:37,200 --> 00:18:38,368
எனக்கு இது செய்யணும்.

280
00:18:38,785 --> 00:18:39,911
இப்ப நாம செய்றதை சொல்றேன்.

281
00:18:39,994 --> 00:18:43,081
ஜாமீன் எடுக்கற வேலைய கத்துக்கிட்டு
கெட்டவங்களை சமாளிக்க போறேன்.

282
00:18:43,706 --> 00:18:44,541
கார்லி...

283
00:18:45,083 --> 00:18:47,794
அம்மாவும் இதை செய்தாளாம்.
அதுவும் நன்றாக

284
00:18:48,294 --> 00:18:49,337
தாத்தா சொல்லிருக்கார்.

285
00:18:49,921 --> 00:18:51,130
நானும் அவள் மாதிரியே
நல்ல விதமா செய்வேன்.

286
00:18:51,297 --> 00:18:54,133
அவள் எனக்கு கொடுத்திட்டு போன
நல்ல விசயம் இதுதான், தவிற

287
00:18:54,217 --> 00:18:57,220
அவளை மாதிரியே எனக்கும்
முகம் இருக்கு, அனா எனக்கு தெரியல.

288
00:18:59,931 --> 00:19:02,559
கார்லி, இது கெட்டவங்கள
பிடிக்கிறது மட்டும் இல்ல.

289
00:19:04,602 --> 00:19:06,521
நம்ம வாடிக்கையாளர் பல பேரு
ரொம்ப நல்லவங்க.

290
00:19:07,105 --> 00:19:10,024
அவங்க எதாச்சும் தப்பு செய்திட்டு
உதவி கேட்டு நம்மகிட்ட வருவாங்க.

291
00:19:10,525 --> 00:19:13,945
ஆனா, சில நேரம் எதாச்சும்
கெட்டவர்கள் வருவதும் உண்டு.

292
00:19:19,367 --> 00:19:20,201
வா போகலாம்.

293
00:19:21,744 --> 00:19:23,037
செரண்டிப் புக்ஸ்
ஆன்டிக் புக்ஸ்

294
00:19:23,121 --> 00:19:24,122
ஒரு நிமிசம் நில்லுங்க.

295
00:19:24,330 --> 00:19:26,332
ஏதோ கடிதம் கொடுத்தீங்க.

296
00:19:26,416 --> 00:19:27,584
ஓனர் யார்னு தெரியுமா?

297
00:19:27,667 --> 00:19:29,127
ஓ. நன்றாக தெரியுமே.

298
00:19:29,210 --> 00:19:31,212
அவள்கிட்ட இருந்து,
பதில் கடிதம் வரும்.

299
00:19:31,296 --> 00:19:32,964
உங்க உதவி தேவைப்படுது.

300
00:19:34,215 --> 00:19:35,341
என் தம்பி ஒரு மதபோதகர்.

301
00:19:35,425 --> 00:19:38,177
ஸ்டோனி ப்ரூக்ல எங்க வீட்டுகிட்ட
அவன் சின்னதா சர்ச் நடத்தறான்.

302
00:19:38,303 --> 00:19:39,721
பழமையான புத்தகங்களை
சேகரிக்கறது அவன் வழக்கம்.

303
00:19:39,888 --> 00:19:41,931
அதுல அவன் ரொம்ப உணர்ச்சிகரமா இருப்பான்
இல்லியா, கார்லி?

304
00:19:42,015 --> 00:19:44,517
ஆமா. அவர் வீடு முழுக்க,
புத்தகமா கொட்டிகிடக்கும்.

305
00:19:45,727 --> 00:19:49,522
இந்த கடை பத்தி கேள்விப்பட்டேன்.பென்-ஹர்,
1860ம் ஆண்டு புத்தகம் இருக்கறதா.

306
00:19:49,606 --> 00:19:51,566
முதல் பதிப்புதான், எல்லாரும் விற்பாங்க.

307
00:19:51,649 --> 00:19:55,653
ஆனா, இது 3வது பதிப்பு,
பக்கம் 116-ல் எழுத்துப்பிழை இருக்கும்.

308
00:19:55,737 --> 00:19:56,779
பிழையா?

309
00:19:57,822 --> 00:19:59,365
ஆமா, அச்சுப்பிழை.

310
00:19:59,449 --> 00:20:01,367
என் தம்பி இதுபத்தி சொல்லிருக்கான்.

311
00:20:01,451 --> 00:20:04,120
அவனோட பிறந்தநாள் பரிசா,
கார்லி அந்த புத்தகம் தர நினைக்கறா.

312
00:20:04,203 --> 00:20:05,705
என்னோட சொந்த காசில.

313
00:20:06,205 --> 00:20:09,125
கடை உரிமையாளரின் ஃபோன் நம்பர்
எதுவும் வாங்கி தர முடியுமா?

314
00:20:09,208 --> 00:20:10,752
எங்க வீட்டுல இருந்து இது
ரொம்ப தொலைவா இருக்கு.

315
00:20:10,835 --> 00:20:13,129
அப்றம் இவள்கூட நான்
ஒரு வேலையா போகனும்.

316
00:20:13,212 --> 00:20:16,341
பரவால, பாட்டி, இதான் முக்கியம்.
அதை அடுத்த வருசம் பாக்கலாம்...

317
00:20:16,424 --> 00:20:17,550
எனக்கு தெரியல.

318
00:20:17,717 --> 00:20:19,510
ஆனா, அவள் இருக்கும் இடத்தை
சொல்றேன்.

319
00:20:19,928 --> 00:20:21,638
இன்னிக்கு அவள்
புத்தகம் வாங்க போயிருப்பா.

320
00:20:21,721 --> 00:20:24,766
ப்ரூக்ளின்ல அந்த மார்க்கெட்
இருக்கு.

321
00:20:25,016 --> 00:20:27,393
ஹாதோர்ன், அல்பேனிக்கு
பக்கத்துல.

322
00:20:28,144 --> 00:20:29,812
-ரொம்ப நன்றி.
-பரவால.

323
00:20:32,565 --> 00:20:34,317
எப்படி உன்னால இப்டி பேச
முடிஞ்சது?

324
00:20:34,400 --> 00:20:35,443
படம்
பார்த்து கத்துக்கிட்டேன்.

325
00:20:36,611 --> 00:20:38,821
வாவ்! பாட்டி பெரிய திறமைசாலிதான்.

326
00:20:42,200 --> 00:20:46,287
டிம், போன வருசம் நாம
பராமரிப்பு செஞ்சோமா?

327
00:20:46,371 --> 00:20:47,205
பண்ணிருக்கோம்.

328
00:20:47,288 --> 00:20:48,915
அந்த கம்பெனி கை மாறிடுச்சி.

329
00:20:49,415 --> 00:20:52,335
புது முதலாளி எங்களை திரும்பவும்
வருசம் ஒரு தடவ செய்ய சொன்னார்.

330
00:20:52,710 --> 00:20:55,088
முன்னெச்சரிக்கை அவருக்கு பிடிக்கும்.

331
00:20:55,421 --> 00:20:57,548
பிசினஸ் பத்தி பேசுங்க. 2வது முறை
சர்வீஸ் செஞ்சா நாங்க பணம் தரமாட்டோம்.

332
00:20:57,632 --> 00:20:59,050
நீங்க தர வேணாம்.

333
00:20:59,133 --> 00:21:01,177
இப்ப இருக்க ஒப்பந்தமே போதும்.

334
00:21:04,263 --> 00:21:05,390
செக்யூரிட்டிய கூப்பிடுங்க.

335
00:21:06,975 --> 00:21:09,018
அறைகளை திறந்து காட்ட சொல்லுங்க.

336
00:21:10,144 --> 00:21:12,271
இலவச சர்வீசை கைவிட விரும்பல.

337
00:21:16,109 --> 00:21:16,943
நல்லது.

338
00:21:19,988 --> 00:21:22,031
ஏதோ மிதக்குறவிலங்கு கூடு போல இருக்கு.

339
00:21:22,907 --> 00:21:24,367
ஆளாளுக்கு குறை பேசறானுங்க.

340
00:21:24,534 --> 00:21:25,868
கேட்டி எங்க?

341
00:21:28,413 --> 00:21:29,998
அவதான் ஃபோன் பண்றா.

342
00:21:30,748 --> 00:21:32,542
உன்னதான் எதிர்பார்த்தேன். எங்க
இருக்க?

343
00:21:32,625 --> 00:21:34,293
ஒயிட் ப்ளைன்ஸ் போறேன்.

344
00:21:34,377 --> 00:21:35,211
என்ன?

345
00:21:35,294 --> 00:21:38,047
ஆமா...
அமன்டா படிக்கற பள்ளியில் கூப்டாங்க.

346
00:21:38,131 --> 00:21:40,633
அவளுக்கு கால் சுளுக்கிடுச்சாம்.

347
00:21:40,717 --> 00:21:41,884
அதனால, அவளை கூப்பிட போறேன்.

348
00:21:41,968 --> 00:21:44,345
ஏன், பிரெண்டான் எங்க?

349
00:21:44,429 --> 00:21:45,722
இடத்தை நெருங்கிட்டேன்.

350
00:21:46,556 --> 00:21:49,017
ஒரு நிமிசம். அது வெறும் சுளுக்குதான்.
அதனால் ஒன்னும் பிரச்னை இல்ல.

351
00:21:49,142 --> 00:21:51,227
5 ஆயிரம் டாலர் கிடைச்சா
அவளுக்கு தரமான மருத்துவம் தரலாம்.

352
00:21:51,310 --> 00:21:55,106
உனக்கு
குழந்தை இல்ல, அதான் இப்டி பேசற.

353
00:21:56,399 --> 00:21:57,442
இரு...

354
00:21:59,444 --> 00:22:00,486
நாசமா போச்சு.

355
00:22:06,909 --> 00:22:07,910
கேட்டி தப்பிச்சிட்டா.

356
00:22:09,662 --> 00:22:13,291
மாரியஸ். அவள் இல்லாம எப்படி
கேசினோ மேனேஜரை சமாளிக்கறது?

357
00:22:13,499 --> 00:22:14,834
அப்றம், நீ உள்ள போறது கஷ்டம்.

358
00:22:15,168 --> 00:22:16,252
நீ உள்ள போகலன்னா, நாங்க எப்படி...

359
00:22:16,335 --> 00:22:17,670
போர்ட்டர். பதறாத.

360
00:22:25,553 --> 00:22:26,387
மார்ஜோரி.

361
00:22:27,096 --> 00:22:29,223
அவளால் எதுவும் செய்ய
முடியாது.

362
00:22:29,474 --> 00:22:30,683
கரோலினா?

363
00:22:31,184 --> 00:22:32,477
அவள் வேகாஸ்ல
இருக்கா.

364
00:22:37,231 --> 00:22:38,399
பீட் இருக்கான்.

365
00:22:39,150 --> 00:22:40,151
என்னது?

366
00:22:41,402 --> 00:22:43,071
அவனால் நிருபரா நடிக்க
முடியுமா?

367
00:22:43,154 --> 00:22:45,615
குடும்பத்தோட டின்னர் சாப்பிட்ட
கதைய மறந்துட்டியா?

368
00:22:45,698 --> 00:22:47,950
அன்னிக்கு
பயங்கரமா சொதப்பிட்டான்.

369
00:22:48,117 --> 00:22:50,953
அப்ப, நீங்களே ஒரு ஐடியா சொல்லுங்க,
நான் ஏத்துக்க தயார்.

370
00:22:52,580 --> 00:22:53,414
எதாச்சும் சொல்லுங்க.

371
00:22:59,337 --> 00:23:01,714
என்னால இதை செய்ய முடியாது.

372
00:23:01,798 --> 00:23:03,299
நான் மாட்டிக்குவேன்,
போன தடவை மாதிரி.

373
00:23:03,382 --> 00:23:05,426
-உன்னை திரும்பவும் தோக்கவிடமாடேன்,அம்மா.
-ஹனீ, நீ மாட்ட.

374
00:23:05,510 --> 00:23:07,845
உன் காதுல ஃபோன் வச்சிக்க.

375
00:23:08,262 --> 00:23:10,306
இவன் சொல்றதை கேட்டு
அப்படியே பேசி சமாளிச்சிக்க.

376
00:23:10,389 --> 00:23:12,683
ஆனா, அம்மா, நான் இதுவரை
யாரையும் ஏமாத்தினதில்லை ...

377
00:23:12,767 --> 00:23:13,601
சொல்றதை கேளு.

378
00:23:13,935 --> 00:23:18,773
பொய் சொல்ல நினைக்கறப்போ
உண்மைய பேசு, அது போதும்.

379
00:23:19,440 --> 00:23:22,360
நீதான் போகனும் பீட் மர்பியாக.

380
00:23:23,277 --> 00:23:25,154
உனக்கு ஏதாவது சமாளிக்கணும்ன்னா,

381
00:23:25,238 --> 00:23:27,615
உனக்கு தெரிஞ்சதை மட்டும் பேசு.

382
00:23:28,950 --> 00:23:29,992
ஜெயில்ல இருந்த மாதிரி.

383
00:23:33,246 --> 00:23:35,790
இதுவும் ஜெயில் மாதிரிதான்,
உன் சாமர்த்தியத்தை காட்டு.

384
00:23:35,873 --> 00:23:37,166
நான் சொல்றது புரியுதா?

385
00:23:38,167 --> 00:23:39,001
சரி.

386
00:23:41,754 --> 00:23:43,297
இப்ப இது என்ன?

387
00:23:43,631 --> 00:23:46,801
ஜெயில்ல கம்பிகளுக்குப் பின்,
இருப்போம், சரியா?

388
00:23:46,884 --> 00:23:48,177
அது மாதிரி, கூண்டில் இருக்கற

389
00:23:48,636 --> 00:23:51,472
செல்ல பிராணிகள் கடை
ஓனரா நான் நடிக்கறேன்,

390
00:23:51,556 --> 00:23:52,557
-வேணாம்.
-இது எப்படின்னா...

391
00:23:52,640 --> 00:23:53,724
-விலங்குகள் கூண்டில்தான் இருக்கும்...
-பேசாதே. நிறுத்து.

392
00:23:53,808 --> 00:23:54,892
-...அதுவும் ஜெயில் மாதிரிதான்.
-இல்ல. வேணாம்.

393
00:23:54,976 --> 00:23:55,810
-வேணாம்.
-ஏன்?

394
00:23:55,893 --> 00:23:57,603
-செல்ல பிராணிகள் கடை வேணாம்.
-அப்றம், வேற என்ன செய்ய?

395
00:23:57,687 --> 00:24:00,273
சொல்றேன், நீ ஒரு நிருபர்,

396
00:24:00,439 --> 00:24:03,693
அந்த ரூஸ்வெல்ட் காட்டெருமை பத்தி
சூசன்கிட்ட நீ பேட்டி எடுக்கனும்.

397
00:24:03,776 --> 00:24:05,444
-சரி.
-புரியுதா? அதேதான்.

398
00:24:05,862 --> 00:24:06,696
சரி.

399
00:24:06,821 --> 00:24:10,408
அவள், அசந்த நேரம் பாத்து,
குடிக்கற தண்ணில இதை கலந்திடு.

400
00:24:10,908 --> 00:24:11,742
இது என்ன?

401
00:24:11,826 --> 00:24:13,661
பேதி மருந்து.

402
00:24:16,664 --> 00:24:17,832
-ஆமா.
-அவளை கழிய வைக்கனுமா?

403
00:24:17,915 --> 00:24:18,958
அப்பதான், வீட்டுக்கு போவாள்,

404
00:24:19,041 --> 00:24:20,877
சில மணி நேரத்துல
அவளுக்கு சரியாகிடும்.

405
00:24:20,960 --> 00:24:22,170
-மாரியஸ்?
-சொல்லு.

406
00:24:22,503 --> 00:24:23,796
-என்ன?
-இங்க. கொடு.

407
00:24:23,880 --> 00:24:24,714
இது செம ஐடியா.

408
00:24:24,797 --> 00:24:27,466
செமயா இருக்கும்.
ஓகே, அவனை வயர் பண்ணி அனுப்புங்க.

409
00:24:40,730 --> 00:24:42,064
எதுவும் உதவி தேவையா?

410
00:24:46,110 --> 00:24:47,403
என்ன செய்யப்போற?

411
00:24:47,486 --> 00:24:48,571
உன்னோடு ஸ்கிப்ப வெச்சு.

412
00:24:48,863 --> 00:24:51,866
அந்த குடோன்ல இருந்து அவளை
எடுத்து, ஜெயில்ல அடைக்க போறன்.

413
00:24:52,825 --> 00:24:54,243
அப்ப, அந்த பணத்தை நீ
திரும்ப தரனும்.

414
00:24:54,911 --> 00:24:56,579
அவள் சாகுறதுக்கு இது பரவால.

415
00:24:58,623 --> 00:25:01,500
வீடு சுத்தம் செய்றதில் த்ரிஷ்,
சரி இல்ல போல?

416
00:25:02,376 --> 00:25:03,211
இல்ல.

417
00:25:04,670 --> 00:25:05,504
இல்ல.

418
00:25:06,172 --> 00:25:07,006
என்னாச்சி?

419
00:25:07,089 --> 00:25:10,051
எனக்கு ஆதரவா பேசி
நல்ல பேர் வாங்க நினைக்கற.

420
00:25:10,134 --> 00:25:13,679
அப்படி நான் நினைக்கல.
அவளுக்கு சுத்தம் செய்ற வேலை தெரியாது.

421
00:25:13,930 --> 00:25:15,223
நீ வீட்டுல சும்மாதானே இருந்த.

422
00:25:15,306 --> 00:25:18,559
ஒழுங்கா சுத்தம் செய்யலாம்ல,
ஏன் அதை செய்யல?

423
00:25:18,893 --> 00:25:20,269
இப்ப இந்த பேச்சு எதுக்கு?

424
00:25:21,604 --> 00:25:26,067
என்னை காப்பாத்த என்கூட இருந்ததா
டெய்லர்கிட்ட நீ சொன்னியா?

425
00:25:30,112 --> 00:25:31,614
இல்ல, டெய்லர்தான் சொன்னான்.

426
00:25:32,782 --> 00:25:33,824
அப்படி பேசறது சரியா?

427
00:25:33,991 --> 00:25:34,825
இல்லதான்.

428
00:25:38,246 --> 00:25:41,207
எனக்கு தெரியல, ஜூலியா, இதெல்லாம்,
தொகுப்போடு ஒரு பகுதி தான்,சரியா?

429
00:25:41,290 --> 00:25:44,043
நீ அழகா இருக்க, புத்திசாலி,
சுட்டிப் பெண், அப்டின்னு சொன்னேன்.

430
00:25:45,586 --> 00:25:47,046
இதுபத்தி டெய்லர் சொன்னானா?

431
00:25:48,339 --> 00:25:49,173
இல்ல.

432
00:25:50,883 --> 00:25:51,968
அவனால் சொல்ல
முடியாது.

433
00:25:54,387 --> 00:25:56,806
அப்றம் என்ன, யாரும், யாரையும்
காதலிக்கறது தப்பா?

434
00:26:00,977 --> 00:26:04,855
அதான், ஒரு வெற்றிகரமான
வக்கீலா நான் இருக்கறேன், புரியுதா?

435
00:26:06,190 --> 00:26:07,900
நீ பேசறது சிரிப்பா இருக்கு.

436
00:26:11,445 --> 00:26:12,488
எதாச்சும் குடிக்கலாமா?

437
00:26:14,657 --> 00:26:15,491
வேணாம்.

438
00:26:17,743 --> 00:26:19,412
நல்லா இருட்டிடுச்சி. நான்
கிளம்பறேன்.

439
00:26:44,395 --> 00:26:45,813
இதுவும் ஜாலியா இருக்கு.

440
00:26:51,861 --> 00:26:52,903
அப்படி இல்ல.

441
00:27:00,995 --> 00:27:02,413
உனக்கே தெரியும்.

442
00:27:04,623 --> 00:27:05,916
இங்க இருந்து வெளிய போனா.

443
00:27:06,542 --> 00:27:08,294
நான் எங்க போக முடியும்?

444
00:27:09,628 --> 00:27:10,755
எனக்கும் தெரியல.

445
00:27:15,968 --> 00:27:17,762
ஆனா, அன்றிரவில் இருந்து,

446
00:27:22,391 --> 00:27:25,144
எங்கயாச்சும் கொஞ்ச நாள்
ஒளிஞ்சி இருக்கனும்னு நினைச்சேன்.

447
00:27:41,410 --> 00:27:42,745
காதுல என்ன?

448
00:27:42,870 --> 00:27:46,290
இப்ப சொல்லு,
"எடிட்டர் ஃபோனுக்கு வெயிட் பண்றேன்".

449
00:27:46,874 --> 00:27:49,752
"எடிட்டர் ஃபோனுக்கு வெயிட் பண்றேன்".

450
00:27:50,002 --> 00:27:50,836
சரி.

451
00:27:52,088 --> 00:27:53,214
நாம ஆரம்பிக்கலாமா?

452
00:27:53,297 --> 00:27:55,716
நோட்டில் இருக்கற கேள்விகளை
அவள்கிட்ட படிச்சி காட்டு.

453
00:27:55,800 --> 00:27:57,718
-கேள்விய மட்டும் படி...
-நோ, நோ.

454
00:27:58,094 --> 00:27:58,928
என்னாச்சி?

455
00:27:59,011 --> 00:28:02,390
உன்னோட நோட்டை பார்த்து
அப்படியே அவளுக்கு படிச்சி காட்டு.

456
00:28:04,266 --> 00:28:06,310
நோட்ல எழுதிருக்கற கேள்விகளை
நான் படிக்க போறேன்.

457
00:28:07,353 --> 00:28:08,187
சரி.

458
00:28:09,397 --> 00:28:15,403
"டெடி ரூஸ்வெல்ட் எருமையை
ஒரு விபத்தில்தான் கண்டுபிடிச்சீங்களா?"

459
00:28:16,487 --> 00:28:19,281
ஆமா, அதிர்ஷ்டவசமான விபத்து.

460
00:28:19,657 --> 00:28:23,160
நல்லது, அடுத்த கேள்விய கேளு,
அப்படியே குடிக்க தண்ணி கேளு.

461
00:28:23,786 --> 00:28:25,788
"இந்த எருமை இங்க இருக்கறதால,

462
00:28:27,081 --> 00:28:28,499
"கேசினோ வர்ற கூட்டம் அதிகரிக்குமா?"

463
00:28:29,333 --> 00:28:31,794
-அப்டித்தான் நினைக்கறோம்...
-குடிக்க தண்ணி கிடைக்குமா?

464
00:28:33,587 --> 00:28:34,422
தரேன்.

465
00:28:35,840 --> 00:28:37,174
நானே எடுத்திட்டு வரேன்.

466
00:28:41,470 --> 00:28:42,638
அவள் வெளிய போயிட்டா.

467
00:28:42,721 --> 00:28:46,142
சூப்பர். அதை எடு.
அதில் கலக்கு. சீக்கிரம்.

468
00:28:47,601 --> 00:28:48,436
ஓகே.

469
00:28:51,313 --> 00:28:52,398
கடவுளே!

470
00:28:52,690 --> 00:28:54,775
மாரியஸ். சொதப்பிட்டேன்.

471
00:28:54,942 --> 00:28:57,736
அவள் தண்ணி பாட்டிலை,
கீழே போட்டுட்டேன்.

472
00:28:57,820 --> 00:29:00,114
ஏன் அப்படி செஞ்ச.

473
00:29:00,197 --> 00:29:01,824
சரி, பீட். பரவால.

474
00:29:01,907 --> 00:29:03,784
அய்யோ, கடவுளே.
துப்பாக்கி முனைல இருக்கறாப்ல இருக்கு.

475
00:29:12,126 --> 00:29:12,960
அடச்சே.

476
00:29:15,421 --> 00:29:16,505
மாரியஸ்?

477
00:29:17,506 --> 00:29:18,632
மாரியஸ், கேட்குதா?

478
00:29:18,716 --> 00:29:20,092
மாரியஸ் யாரு?

479
00:29:22,428 --> 00:29:24,889
மாரியஸ்? அவர்தான்...

480
00:29:26,265 --> 00:29:27,266
உங்க எடிட்டரா?

481
00:29:29,643 --> 00:29:32,229
ஆமா, என்னோட எடிட்டர்தான்.

482
00:29:34,690 --> 00:29:36,233
அவன் ஹெட்ஃபோனை உடைச்சிட்டான்.

483
00:29:36,317 --> 00:29:37,151
என்ன?

484
00:29:37,234 --> 00:29:38,486
தெரியல...

485
00:29:40,070 --> 00:29:41,530
என்ன பண்றதுன்னு தெரியல.

486
00:29:43,866 --> 00:29:45,993
தண்ணி பாட்டிலை ஏன் எடுத்திங்க?

487
00:29:51,957 --> 00:29:53,083
ஊக்கமருந்து.

488
00:29:54,001 --> 00:29:55,085
சரி.

489
00:29:55,169 --> 00:29:57,421
நிறைய தண்ணி குடிக்கலன்னா...

490
00:29:58,339 --> 00:30:00,299
எனக்கு உடல் வறட்சி ஏற்படும்.

491
00:30:00,633 --> 00:30:05,179
என் உடம்புல இருக்கற சக்தி
குறைஞ்சி, பைத்தியம் பிடிச்சிடும்.

492
00:30:05,346 --> 00:30:06,597
இப்ப அதான் நடந்துச்சா?

493
00:30:07,389 --> 00:30:08,390
ஆமா, ரொம்ப மோசம்.

494
00:30:10,559 --> 00:30:11,393
இங்க வைங்க.

495
00:30:13,354 --> 00:30:14,855
இப்ப பரவால.

496
00:30:15,981 --> 00:30:17,233
நிறைய உடற்பயிற்சி செய்வேன்.

497
00:30:17,775 --> 00:30:19,443
எங்க தோட்டத்தில்.

498
00:30:20,027 --> 00:30:21,070
என்ன தோட்டம்?

499
00:30:22,655 --> 00:30:24,031
அதுதான் எனக்கு ஜிம்.

500
00:30:24,865 --> 00:30:27,618
உங்களுக்கும் உடற்பயிற்சி ஆர்வம்போல.
உங்களை பாத்தாலே தெரியுது.

501
00:30:27,701 --> 00:30:28,661
-அப்டியா?
-ஆமா.

502
00:30:29,119 --> 00:30:29,954
நன்றி.

503
00:30:30,037 --> 00:30:31,956
என்னென்ன செய்வீங்க?

504
00:30:33,666 --> 00:30:34,959
க்ராஸ்ஃபிட் செய்வேன்.

505
00:30:35,793 --> 00:30:36,752
கால்களுக்கு நிறைய பயிற்சி.

506
00:30:36,835 --> 00:30:37,962
பரவால.

507
00:30:38,045 --> 00:30:40,297
அதேதான்.
உங்கள் உழைப்பு...

508
00:30:41,215 --> 00:30:42,550
வீண் போகல.

509
00:30:42,633 --> 00:30:45,261
எனக்கு பொறாமையா இருக்கு.
என் காலை பாருங்க...

510
00:30:46,011 --> 00:30:48,556
அதிகமா பயிற்சி இல்ல, தெரியுதா?

511
00:30:49,265 --> 00:30:50,099
ஆமா.

512
00:30:51,767 --> 00:30:53,352
எதாச்சும் அதிரடி முயற்சி
இப்ப நாம செய்தே ஆகனும்.

513
00:30:53,477 --> 00:30:56,605
இல்ல. இப்ப எதுவும் வேணாம்.

514
00:30:56,689 --> 00:30:57,773
அவள் நம்மை பார்த்தால்...

515
00:30:57,856 --> 00:30:59,275
நான் வேற யோசிக்கறேன், சரியா?

516
00:30:59,358 --> 00:31:01,026
நீ போ. நீயும் போ.

517
00:31:01,110 --> 00:31:03,237
நீ பின் தளத்தில் இரு.
நாங்களும் வரோம்.

518
00:31:12,454 --> 00:31:14,790
நான்தான். கதவில் இருந்து தள்ளி
நில்லு.

519
00:31:26,510 --> 00:31:28,262
வாலரி, என்கிட்ட விளையாடாத.

520
00:31:28,345 --> 00:31:30,889
எதுவும் தப்பா செஞ்ச,
உன்னை சுட்ருவேன்.

521
00:31:38,522 --> 00:31:41,984
அடங் கொய்யால!

522
00:31:43,944 --> 00:31:45,237
சனியன் புடிச்சவ!

523
00:31:47,239 --> 00:31:49,658
அப்படித்தான், அந்த மூலைல,
நல்லது, நேரா வா.

524
00:31:50,784 --> 00:31:52,202
கழிவறை

525
00:31:52,286 --> 00:31:54,413
அப்படித்தான். நேரா வா.

526
00:31:54,788 --> 00:31:56,206
பொறுமையா, பொறுமையா!

527
00:31:57,666 --> 00:31:58,500
நிறுத்து!

528
00:31:58,834 --> 00:31:59,960
உன் பக்கம் இழு.

529
00:32:04,006 --> 00:32:05,424
ஏய், இங்க என்ன நடக்குது?

530
00:32:06,759 --> 00:32:07,760
அதை பாரு...

531
00:32:08,469 --> 00:32:09,595
அதுல என்ன இருக்கு?

532
00:32:09,678 --> 00:32:11,597
இது ஒரு வீடியோ வேலைக்காக.

533
00:32:11,680 --> 00:32:12,931
பிஷப் திருமணத்திற்கு.

534
00:32:13,015 --> 00:32:15,934
மணமக்களுக்கு குழந்தைகள்.

535
00:32:16,018 --> 00:32:17,728
எப்படி வளருதுன்னு காட்டனும்.

536
00:32:17,895 --> 00:32:20,606
இங்க தேவையில்ல.
ஹால்வே போங்க.

537
00:32:20,689 --> 00:32:22,650
இங்கேயிருந்து எடுத்திட்டு போங்க.

538
00:32:34,453 --> 00:32:36,205
-வெண்டி பேசறேன்.
-ஏய், நான்தான்.

539
00:32:36,288 --> 00:32:37,915
-வாலரி?
-எனக்கு ஒரு ரைட் தேவை.

540
00:32:37,998 --> 00:32:40,459
மவுன்ட் வெர்னான்
ஹால் தெரு குடோன்ல இருக்கேன்.

541
00:32:40,542 --> 00:32:41,377
என்னது?

542
00:32:41,752 --> 00:32:43,045
ஒரு நிமிசம் இரு.

543
00:32:43,212 --> 00:32:45,547
ஏய், செக்யூரிட்டி, நான் பேசறது
கேட்குதா?

544
00:32:48,008 --> 00:32:51,136
அந்த பெயில் பாண்ட் கம்பெனிக்காரி
என்னை குடோன்ல அடைச்சிட்டா.

545
00:32:51,512 --> 00:32:54,223
நீ என் வீட்டுக்கு போ,
எனக்கு உடைகள் எடுத்திட்டு வா.

546
00:32:54,723 --> 00:32:57,184
அந்த பை, அதுல இருக்க பணம்,
பாஸ்போர்ட் எல்லாத்தையும் கொண்டுவா.

547
00:32:57,601 --> 00:32:58,644
எப்படி தப்பிச்ச?

548
00:32:59,436 --> 00:33:01,480
நிஞ்சா செஞ்சித்தான்.

549
00:33:01,980 --> 00:33:02,981
சரி வரேன்.

550
00:33:20,624 --> 00:33:22,209
உங்க பணி ஒப்பந்தம் இருக்கா?

551
00:33:22,876 --> 00:33:24,002
இதோ தரேன்.

552
00:33:32,136 --> 00:33:33,429
நான் இத வச்சிக்கறேன்.

553
00:33:33,637 --> 00:33:35,556
நியூ லண்டன்ல இருந்து வரேன்.

554
00:33:35,639 --> 00:33:37,683
இது இல்லாம போக முடியாது...

555
00:33:38,267 --> 00:33:39,101
எவ்ளோ நேரம் ஆகும்?

556
00:33:39,184 --> 00:33:40,769
சீக்கிரம் முடிஞ்சிடும்.

557
00:33:47,860 --> 00:33:50,154
இதோ பாரு, சுண்டெலி.

558
00:33:50,362 --> 00:33:53,031
டம்பெல் நிறைய செய்வேன்,
பார்பெல் இல்ல.

559
00:33:53,741 --> 00:33:54,575
அப்பதான் இந்த மாதிரி வரும்.

560
00:33:54,658 --> 00:33:55,743
-நல்லாருக்கு.
-ஆமா.

561
00:33:56,326 --> 00:33:57,870
உன் கை காட்டு.

562
00:33:58,203 --> 00:33:59,204
வேணாம்.

563
00:33:59,788 --> 00:34:01,248
கூச்சப்படாத, கைய காட்டு.

564
00:34:04,334 --> 00:34:05,169
தளர்வா வை.

565
00:34:08,130 --> 00:34:09,590
நம்பவே முடில.

566
00:34:13,302 --> 00:34:14,928
பெண்ணே நீ இணைக்கபட்டுவிட்டாய்.

567
00:34:16,513 --> 00:34:17,347
நன்றி.

568
00:34:20,309 --> 00:34:21,435
எதாச்சும் குடிக்கலாமா?

569
00:34:23,228 --> 00:34:24,354
சூப்பர்.

570
00:34:24,438 --> 00:34:25,272
ஓகே.

571
00:34:29,443 --> 00:34:30,277
ஓகே.

572
00:34:36,116 --> 00:34:38,118
இது ஒருத்தர் பரிசா கொடுத்தது.

573
00:34:44,249 --> 00:34:45,584
ஓகே.

574
00:34:49,630 --> 00:34:51,089
-சியர்ஸ்.
-சியர்ஸ்.

575
00:34:56,720 --> 00:34:57,763
இது நல்லால்ல.

576
00:34:57,846 --> 00:34:59,097
-இல்ல.
-எனக்கு பிடிச்சிருக்கு.

577
00:34:59,181 --> 00:35:00,015
சொல்றதை கேளு.

578
00:35:00,766 --> 00:35:04,102
தென் பகுதியில் காலேஜ் படிச்சேன்,
மக்காச்சோளத்தின் சுவை தெரியும்.

579
00:35:07,856 --> 00:35:09,942
-இதோ வரேன்.
-சரி காத்திருக்கேன்.

580
00:35:10,400 --> 00:35:11,235
சரி.

581
00:35:19,159 --> 00:35:20,369
என்ன கண்றாவி.

582
00:35:26,041 --> 00:35:26,875
ச்சே.

583
00:35:31,088 --> 00:35:32,130
வந்து தொலை.

584
00:35:39,054 --> 00:35:40,722
தாத்தா, நான்தான்.

585
00:35:40,806 --> 00:35:44,476
சின்ன பிரச்னை. வாலரிய காணோம்.

586
00:35:44,560 --> 00:35:46,812
அவள் எங்க இருப்பாள்னு
எனக்கு தெரியும்,

587
00:35:46,895 --> 00:35:49,022
அவள் வீட்டின் பின் இருக்க வீட்ல.

588
00:35:49,106 --> 00:35:52,109
அவளோட பேரு வெண்டி.

589
00:35:57,155 --> 00:35:58,198
-துப்பாக்கி வேணாம்.
-ஏன்?

590
00:35:58,282 --> 00:35:59,324
இப்ப வேணாம்.

591
00:36:00,450 --> 00:36:02,744
ஏன்னா, வாலரி இருக்கற இடத்தை
வெண்டிதான் சொல்லனும்.

592
00:36:02,953 --> 00:36:04,246
நீதானே, வெண்டி?

593
00:36:08,083 --> 00:36:09,918
நினைச்சதைவிட பெரிசா இருக்கு.

594
00:36:10,002 --> 00:36:11,420
அவள் சொன்ன மாதிரியே.

595
00:36:12,004 --> 00:36:13,005
வேடிக்கையா இருக்கு.

596
00:36:13,547 --> 00:36:14,923
பார்க்க வேடிக்கையா இருக்கு.

597
00:36:17,426 --> 00:36:21,388
இன்றிரவு நீ திரும்பவும்
ஹார்ட்ஃபோர்ட் போகப்போறியா?

598
00:36:23,307 --> 00:36:25,100
இல்ல, கஷ்டம்தான்... தெரியல.

599
00:36:27,019 --> 00:36:28,645
உனக்கு தங்க ரூம் தரோம்.

600
00:36:31,023 --> 00:36:34,109
டிம், திரு. மர்பிக்கு ஒரு ரூம் தரலாமா?

601
00:36:34,192 --> 00:36:36,862
அந்த ரூம், கோல்ட் சர்க்கிளுக்கு
ஒதுக்கப்பட்டிருக்கு...

602
00:36:36,945 --> 00:36:38,697
சாக்கடை மாதிரி பேசாத.

603
00:36:42,701 --> 00:36:43,785
அவன்...

604
00:36:47,331 --> 00:36:48,498
உனக்கு ஒன்னும் பிரச்னை இல்லியே?

605
00:36:50,959 --> 00:36:52,085
ஒரு நிமிசம் இருங்க.

606
00:37:01,053 --> 00:37:02,721
அவளுக்கு ஏதோ ஆச்சு.

607
00:37:03,138 --> 00:37:04,556
நாம மீண்டும் திட்டமிட்டுக்கலாம்.

608
00:37:05,265 --> 00:37:08,185
நான் நினைச்சது நடந்திருச்சு.

609
00:37:10,437 --> 00:37:12,272
நான் கிளம்பறேன். மாரியஸ்?

610
00:37:12,648 --> 00:37:15,192
எங்களை பார்க்காதே,
உன் அம்மாவையும் கண்டுக்காதே.

611
00:37:18,362 --> 00:37:19,947
பீட், நீ யார்னு தெரியுமா?

612
00:37:21,365 --> 00:37:22,199
யாரு?

613
00:37:22,616 --> 00:37:23,867
நீ ஹீரோடா. அசத்திட்ட.

614
00:37:24,326 --> 00:37:25,744
சரி, கிளம்பு.

615
00:37:31,583 --> 00:37:32,417
போ.

616
00:37:33,710 --> 00:37:34,628
நான் பிசியா இருக்கேன்.

617
00:37:34,711 --> 00:37:37,756
டாக்ரிகிட்ட வேலை செய்யற
தடியன் உன்னை தேடிட்டு இருக்கான்.

618
00:37:38,465 --> 00:37:40,592
-என்ன?
-த்ரிஷ்கிட்ட உன்னை பத்தி கேட்டிருக்கான்.

619
00:37:40,842 --> 00:37:42,302
த்ரிஷ் பத்தி அவனுக்கு எப்படி தெரியும்?

620
00:37:42,386 --> 00:37:44,304
அது இப்ப முக்கியம் இல்ல.

621
00:37:45,055 --> 00:37:49,017
டாக்ரிக்கு நீ வேலை செய்றப்போ
உங்களை ஒன்னா பார்த்திருப்பான்.

622
00:37:50,394 --> 00:37:53,397
என்னை பத்தி த்ரிஷ் எதுவும்
சொன்னாளா?

623
00:37:53,480 --> 00:37:56,024
ஆமா, அவளை அவன் ரொம்ப
மிரட்டிட்டு போயிருக்கான்.

624
00:37:56,108 --> 00:37:58,360
அவன் உன்னை
கண்காணிக்க வாய்ப்பிருக்கு.

625
00:38:00,237 --> 00:38:01,655
நுழைவாயில்
குடோன்

626
00:38:17,671 --> 00:38:18,797
எதுவும் உதவி தேவையா?

627
00:38:18,880 --> 00:38:19,840
ஆமா.

628
00:38:20,632 --> 00:38:22,551
உங்களால
முடியும்னு நினைக்கறேன்.

629
00:38:22,634 --> 00:38:24,511
நான் கேசினோவின் துணை
மேனேஜர்.

630
00:38:24,594 --> 00:38:25,762
உன்கிட்ட அவங்க பேசினாங்களா?

631
00:38:25,929 --> 00:38:27,055
யாரு?

632
00:38:27,222 --> 00:38:29,224
அவங்க ஃபோன் பண்ணலியா?
நான் சொல்லியிருந்தேன்.

633
00:38:29,307 --> 00:38:32,644
அவசர உதவி தேவைன்னு
கம்பெனில இருந்து ஃபோன் வந்துச்சி.

634
00:38:32,728 --> 00:38:35,439
அந்த எருமையின் பின்புறம்
நிறைய ஸ்லாட் மெசின் வைக்கனுமாம்.

635
00:38:35,689 --> 00:38:38,608
அதை உடைச்சிடாம, பத்திரமா
நாங்க வைக்கறோம், அப்பதான்,

636
00:38:38,692 --> 00:38:39,735
இன்னும் நிறைய கூட்டம் சேரும்,

637
00:38:39,860 --> 00:38:41,028
நிறைய பணம் சேரும்,
நான் சொல்றது புரியுதா?

638
00:38:41,111 --> 00:38:42,696
-சரி, சூசன், என் பாஸ்.
-ஆமா.

639
00:38:42,779 --> 00:38:45,073
இந்த மாதிரி வேலைக்கு
அவள்தான் அனுமதி தரனும்.

640
00:38:45,449 --> 00:38:46,408
அவளை கூட்டிட்டு வர முடியுமா?

641
00:38:46,533 --> 00:38:49,578
அவள் இங்க இல்ல.

642
00:38:51,580 --> 00:38:53,707
அப்ப, இந்த வேலை செய்றது
எப்படின்னு உனக்கு தெரியும்.

643
00:38:53,790 --> 00:38:56,001
இதை அங்கே வைக்கவா இல்ல
மொத்தமா பின்னாடி வைக்கவா,

644
00:38:56,084 --> 00:38:57,919
இது எப்படின்னா...

645
00:38:58,128 --> 00:38:59,546
நான் சொல்றது புரியுதா?

646
00:38:59,755 --> 00:39:02,507
டிம், இப்ப நீ எதாச்சும் செய்தே
ஆகனும்,

647
00:39:02,591 --> 00:39:04,134
சொந்தமா முடிவு எடு,
புரியுதா?

648
00:39:04,217 --> 00:39:05,677
சரி, ஆனா...

649
00:39:06,470 --> 00:39:08,096
நான் எதுவும் முடிவு செய்ய
முடியாது.

650
00:39:09,598 --> 00:39:11,516
ஏன் உன்னால் முடியாது?

651
00:39:11,683 --> 00:39:13,727
இதை திரும்ப எடுக்கனும்னா,
நீ அவர்கிட்ட பேசு.

652
00:39:13,810 --> 00:39:15,896
-நான் பேசல, நீயே பேசு.
-புரியல. யாருக்கு ஃபோன் பண்றீங்க?

653
00:39:15,979 --> 00:39:18,315
எங்க பாஸ்.
இதை செய்யலன்னா, எங்க கதி அதோகதி.

654
00:39:18,398 --> 00:39:20,525
அப்படியே அவரை கூப்பிட்டாலும்,
எங்க கதி அதோகதிதான்.

655
00:39:20,609 --> 00:39:24,279
சரி, பரவால. இங்கேயே இருங்க,
வேற எங்கயும் போகாதீங்க.

656
00:39:25,781 --> 00:39:26,615
சரி.

657
00:39:36,124 --> 00:39:36,958
நல்லது.

658
00:39:37,042 --> 00:39:39,002
ஜூலியா வச்சிருந்த ஸ்கிப்
குடோன்ல லாக்கர்ல இருந்து காணவில்லை,

659
00:39:39,086 --> 00:39:40,670
அதனால, நானும், சாமும்,

660
00:39:41,046 --> 00:39:43,924
அவள் பக்கத்து வீட்டுல இருக்க
வெண்டியை பாக்க போறோம்.

661
00:39:44,216 --> 00:39:45,175
நீ என்ன பண்ண போறே?

662
00:39:45,258 --> 00:39:47,177
அந்த இங்கிலிஷ்காரிய தேடி வந்தோம்.

663
00:39:47,260 --> 00:39:49,179
-கிடைச்சாளா?
-இல்ல. கார்லி துணைக்கு இருக்கா.

664
00:39:49,262 --> 00:39:50,972
அவளை தேடி போயிருக்கா.

665
00:39:51,890 --> 00:39:53,475
கார்லி இதுல எதுக்கு?

666
00:39:53,558 --> 00:39:54,976
ஓட்டோ, அவள் சும்மா தேட
போயிருக்கா.

667
00:39:55,185 --> 00:39:57,562
நான் எந்த வயசுல இந்த வேலைய
ஆரம்பிச்சேன்னு ஞாபகம் இருக்கா?

668
00:39:57,646 --> 00:39:58,772
இல்ல.

669
00:39:58,939 --> 00:40:01,191
அது வேற விசயம்.

670
00:40:01,733 --> 00:40:03,443
கார்லி ஒன்னும் குழந்தை இல்ல.

671
00:40:03,693 --> 00:40:05,195
தெரியும், ஆனா, பயமா இருக்கு.

672
00:40:05,654 --> 00:40:08,448
அவள் பிரிட்டனை சேர்ந்தவள்,

673
00:40:08,615 --> 00:40:11,368
அவளும் ஏமாற்றுபவள், சரியா?

674
00:40:11,868 --> 00:40:12,994
அதான் பயப்படறேன்.

675
00:40:13,453 --> 00:40:15,539
எதுக்கும் நீ தயாரா இரு.

676
00:40:16,123 --> 00:40:17,415
ஓட்டோ, என்ன பண்ணினே?

677
00:40:17,958 --> 00:40:20,001
டிரைவர் சீட்டுக்கு கீழ பாரு.

678
00:40:28,176 --> 00:40:29,010
என்ன?

679
00:40:29,594 --> 00:40:33,431
நம்ம குடும்பத்துல மட்டும்தான்
இப்டிலாம் ரொமான்ஸ் நடக்கும்.

680
00:40:45,110 --> 00:40:46,111
நான் உதவட்டுமா?

681
00:40:48,071 --> 00:40:51,283
உங்ககிட்ட
ஹார்டி பாய்ஸ் இருக்கா? என் அப்பா...

682
00:40:51,366 --> 00:40:52,409
அதை விரும்புவார்.

683
00:40:52,492 --> 00:40:55,245
எனக்கும் ஹார்டி பாய்ஸ் பிடிக்கும்.
அங்க இருக்கான்னு பாரு.

684
00:40:55,745 --> 00:40:56,580
நன்றி.

685
00:41:04,880 --> 00:41:08,758
ஹலோ, அப்பா, நான் இங்க,
ஃப்ளியா மார்க்கெட்ல இருக்கேன்,

686
00:41:08,842 --> 00:41:12,262
இங்க நான்,

687
00:41:12,345 --> 00:41:16,099
ப்ளூ ஸ்பைன்ஸ் தேடிட்டு இருக்கேன்,
ஆனா இங்க காணலை.

688
00:41:17,100 --> 00:41:21,521
இல்ல,
இன்னும் கொஞ்சம் தேடனும்.

689
00:41:24,316 --> 00:41:25,150
பை.

690
00:41:27,277 --> 00:41:28,195
நன்றி.

691
00:41:40,498 --> 00:41:45,378
அட கடவுளே! என்னோட...சிப்ஸை
கொடுங்க!

692
00:41:45,545 --> 00:41:47,714
நான் சேமிச்ச காசெல்லாம்
கீழ கொட்டி கிடக்குதே.

693
00:41:47,964 --> 00:41:49,966
அதை, எடுத்து கொடுங்க!
சீக்கிரம், எடுங்க.

694
00:41:50,050 --> 00:41:51,968
அதை எடுத்து வச்சிக்காத!

695
00:41:52,219 --> 00:41:54,137
ஒழுங்கா என்கிட்ட கொடு!
சிப்ஸை என்கிட்ட கொடு!

696
00:41:54,221 --> 00:41:57,098
என் சிப்ஸை கொடு!
எடு...

697
00:42:27,212 --> 00:42:28,046
ச்சே.

698
00:42:28,213 --> 00:42:30,715
ஹே, நண்பா, இங்க பாரு
ஒழுகுது.

699
00:42:37,931 --> 00:42:39,057
அடச்சே.

700
00:42:47,023 --> 00:42:48,525
சீட்டோஸ் இருக்கு.
சாப்பிடறியா?

701
00:42:49,150 --> 00:42:50,819
வேணுமா?

702
00:42:51,611 --> 00:42:52,612
உன்கிட்ட பேசனும்.

703
00:42:53,071 --> 00:42:53,905
சரி.

704
00:42:54,447 --> 00:42:55,323
என்னாச்சி?

705
00:42:56,116 --> 00:42:58,493
வின்ஸ்லோ காரில் இருந்த ரத்தத்தின்
சோதனை முடிவுகள் வந்திருக்கு.

706
00:42:58,576 --> 00:43:01,371
அது மாதவிடாய்-நின்றுபோன
ஐரோப்பிய பெண்ணின் ரத்தம்.

707
00:43:03,665 --> 00:43:04,499
சரி.

708
00:43:06,251 --> 00:43:09,004
இப்ப, உன் பாட்டியின் ரத்த மாதிரி
உடனே தேவைப்படுது.

709
00:43:09,671 --> 00:43:11,339
அவளே தானா முன்வரனும்,

710
00:43:11,423 --> 00:43:14,134
ஒத்துக்கலன்னா, கோர்ட் உத்தரவை
காட்டி மிரட்டும் நிலை வரும்.

711
00:43:14,592 --> 00:43:15,427
சரி.

712
00:43:15,510 --> 00:43:17,345
இதை உன்கிட்ட சொல்லத்தான்
கூப்பிட்டேன்.

713
00:43:41,661 --> 00:43:42,954
நான் பின்புறமா வரேன்னு எப்படி
தெரியும்?

714
00:43:43,038 --> 00:43:44,664
101 புலனாய்வு புலி சொன்னா.

715
00:43:45,749 --> 00:43:47,125
அப்ப அங்க இருக்கற பெண்.

716
00:43:47,292 --> 00:43:48,209
என்னோட பேத்தி.

717
00:43:48,585 --> 00:43:49,794
இது எங்க குடும்ப தொழில்.

718
00:43:51,921 --> 00:43:53,423
நான் துப்பாக்கி வச்சிருந்தா,
என்ன செய்வ ஆட்ரி?

719
00:43:54,132 --> 00:43:56,718
அந்த போட்டோ பார்த்தேன்,
அவள் உன் பர்சை எடுத்திட்டா.

720
00:43:57,344 --> 00:44:00,055
ஆனா, கைத்துப்பாக்கி,
இருந்தாதான் பயப்படனும்.

721
00:44:01,222 --> 00:44:03,099
என்னுடைய பை, ...

722
00:44:11,232 --> 00:44:13,276
இதுதான் சரியான வெண்டியா?

723
00:44:13,985 --> 00:44:16,071
அப்படித்தான் எனக்கு தகவல்
கிடைச்சது.

