1
00:00:08,050 --> 00:00:09,510
உன்னைத் தெரியும்னு சொன்னான்.

2
00:00:09,593 --> 00:00:12,680
கேடுகெட்ட பாஷ். அவன் தான் இதுக்குப்
பின்னாடி இருக்கான்.

3
00:00:12,763 --> 00:00:14,265
அவன் போலீஸ்காரன் அல்ல.

4
00:00:14,390 --> 00:00:17,685
அவனிடம் சிறை வாசனை வீசிச்சு, அன்பே.
எனக்கு வித்தியாசம் தெரியும்.

5
00:00:17,768 --> 00:00:19,270
அவன் பார்க்க எப்படி இருந்தான்?

6
00:00:19,353 --> 00:00:23,149
பைக் ஓட்டுறவன். குண்டா, நீளமான தலைமுடி,
தாடியோடு இருந்தான்.

7
00:00:24,066 --> 00:00:25,901
நாம் செய்வது அவனுக்கு எப்படித் தெரியும்?

8
00:00:25,985 --> 00:00:27,611
நீ அவனிடம் பேசி காரியத்தைக் கெடுத்துட்டே.

9
00:00:28,028 --> 00:00:31,407
ஆம், நான் படபடப்பானேன்.

10
00:00:31,490 --> 00:00:34,326
ஹேய், என்னை மன்னிச்சிடு.

11
00:00:36,328 --> 00:00:39,290
நீ உன் நண்பர்கள் சிலரை நெருக்கமா
உட்கார சொல்லேன்?

12
00:00:39,832 --> 00:00:41,375
பார்வையை மறைப்பதற்கு.

13
00:00:42,168 --> 00:00:43,627
நான் குறும்பு செய்யணும்.

14
00:00:45,713 --> 00:00:47,423
கடவுளே, நீ கிறுக்கி, ரீட்டா.

15
00:00:48,048 --> 00:00:51,969
ஆம், உனக்குப் பிடித்த மாதிரியே.

16
00:00:53,804 --> 00:00:54,930
அட வா.

17
00:00:59,059 --> 00:01:00,978
என்னை பரிகாரம் செய்ய விடு, அன்பே.

18
00:01:01,479 --> 00:01:05,065
ஹேய், பாஷ் உன்னை ஒலிப்பதிவு
செய்ததா சொல்றான்.

19
00:01:05,149 --> 00:01:06,150
அவனிடம் என்ன இருக்கும்?

20
00:01:06,442 --> 00:01:09,278
எனக்கும் உன் வழக்கறிஞருக்கும் இடையேயான
அறுவை தொலைபேசி அழைப்புகள்.

21
00:01:10,029 --> 00:01:13,115
சத்தியமா, நான் அங்கு மிகுந்த
கவனத்தோடு இருந்தேன்.

22
00:01:14,241 --> 00:01:16,827
அந்த பைக் ஓட்டும் கேடுகெட்டவன்
யாரென்று தெரிஞ்சே ஆகணும்.

23
00:01:17,411 --> 00:01:19,121
ஆமாம், நான் என்ன செய்யணும்னு சொல்லு.

24
00:01:20,080 --> 00:01:22,958
க்ரோனின். க்ரோனினிடம் பேசு.

25
00:01:23,501 --> 00:01:25,920
அவனோட பங்கு வேணும்னா,
அவன் இதை சரி செய்யணும்.

26
00:01:26,587 --> 00:01:28,422
-சரி.
-நேரில்.

27
00:01:29,089 --> 00:01:30,174
தொலைபேசிகள் இனி கிடையாது.

28
00:01:58,744 --> 00:02:01,413
ஆம், அவ அங்கு மொத்தமா
ஒரு மணிநேரம் இருந்தா.

29
00:02:01,497 --> 00:02:02,873
இப்ப வேலைக்குப் போறா.

30
00:02:02,957 --> 00:02:04,250
டெர்ரி ஸ்பென்சர்.

31
00:02:04,333 --> 00:02:07,127
எல்ஏபிடிக்கு வேலை செய்யும் சாதாரண
ஆள். குற்றப் பதிவுகள் இல்லை.

32
00:02:07,211 --> 00:02:08,921
குற்றவாளியா இருந்தா பொருள் அறையில்
வேலை கிடைக்காது.

33
00:02:09,338 --> 00:02:10,965
நேற்றிரவு அவனை பின்தொடர்ந்து
வீட்டுக்கு போனேன்.

34
00:02:11,048 --> 00:02:14,593
ஸ்டூடியோ சிட்டியில் வீடு. சாதாரண ஊரக வீடு.

35
00:02:14,677 --> 00:02:17,429
2001இல் வாங்கினான்.

36
00:02:18,138 --> 00:02:20,182
அடமானம், 800 ஆயிரம்.

37
00:02:21,433 --> 00:02:23,018
அந்தப் பகுதிக்கு சற்று அதிகம் தான்.

38
00:02:23,102 --> 00:02:25,813
அப்போ, நிதி வீழ்ச்சிக்கு முன் இரு
முறை நிதி வாங்கிருக்கான்.

39
00:02:25,896 --> 00:02:28,941
இரண்டாம் திருமணம். இன்னும் முதல் மனைவிக்கு
ஜீவனாம்சம் கொடுக்கிறான்.

40
00:02:29,191 --> 00:02:31,652
ஆழமான கடன் குழிக்குள் விழுந்திருக்கான்.

41
00:02:31,944 --> 00:02:32,862
இப்போதைய மனைவி?

42
00:02:32,945 --> 00:02:33,904
ஆசிரியை.

43
00:02:33,988 --> 00:02:35,614
அவள் எந்த செலவையும் ஏற்பதில்லை.

44
00:02:36,198 --> 00:02:38,617
அப்போ, க்ரோனின் எப்படி
ஸ்பென்சரைக் கண்டுபிடிச்சான்?

45
00:02:39,493 --> 00:02:42,788
பேருந்து இருக்கைகளிலும் சுவரொட்டிகளிலும்
அந்த முகம் எங்கேயும் இருக்கு.

46
00:02:42,872 --> 00:02:43,956
க்ரோனின் &amp; க்ரோனின்
வழக்கறிஞர்கள்

47
00:02:44,039 --> 00:02:45,416
ஸ்பென்சர் அவனைக் கண்டுபிடிச்சிருப்பான்.

48
00:02:45,499 --> 00:02:48,377
நீங்க பழங்காலத்தின் நடமாடும் உதாரணம்னு
தெரியும், ஆனா அதுக்காக?

49
00:02:48,460 --> 00:02:51,338
எனதல்ல. ரைலி என்ற ராணுவ வீரரோடது.

50
00:02:59,471 --> 00:03:00,306
க்ரோனின் மற்றும் க்ரோனின்.

51
00:03:00,764 --> 00:03:02,892
ஆம், நான் லேன்ஸ் க்ரோனினுடன் பேச
விரும்புகிறேன். தயவு செய்து.

52
00:03:02,975 --> 00:03:04,143
அழைப்பவர் யார் என்று அறியலாமா?

53
00:03:04,226 --> 00:03:06,520
டெர்ரி ஸ்பென்சர். அவரிடம்
அவசரம்னு சொல்லுங்க.

54
00:03:06,604 --> 00:03:07,438
ஒரு நொடி.

55
00:03:09,064 --> 00:03:10,232
இதோ ஆரம்பம்.

56
00:03:11,567 --> 00:03:14,361
திரு. ஸ்பென்சர், நீங்க
அழைப்பீங்கன்னு எதிர்பார்க்கலை.

57
00:03:14,737 --> 00:03:16,697
நான் உங்க தொடர்பு ஆள் அல்ல.

58
00:03:18,365 --> 00:03:19,450
ஹலோ?

59
00:03:21,035 --> 00:03:22,411
திரு ஸ்பென்சர்? ஹலோ?

60
00:03:25,372 --> 00:03:28,751
அப்போ, ஸ்பென்சரின் தொடர்பு ஆள்
யாரு? ரீட்டாவா?

61
00:03:28,834 --> 00:03:30,669
நிச்சயமா தெரியல. அவளைப் பின்தொடரு, பானர்.

62
00:03:30,753 --> 00:03:32,296
சரி, செய்கிறேன்.

63
00:03:35,341 --> 00:03:36,383
அவனை எங்கு கண்டுபிடித்தாய்?

64
00:03:36,467 --> 00:03:41,138
நான் ஆரம்பகால வழக்கறிஞரா இருக்கும்போது
ஹெக்டர் ஒரு இலவச மேல்முறையீட்டு மனுதாரர்.

65
00:03:41,221 --> 00:03:43,140
கொலைக்காக தவறாக தண்டிக்கப் பட்டவன்.

66
00:03:43,223 --> 00:03:45,309
சாட்சி பின்வாங்கியது.
மேல்முறையீட்டை வென்றேன்.

67
00:03:45,392 --> 00:03:48,062
ஹெக்டர் விடுதலையானான். அன்றிலிருந்து
என்னுடன் இருக்கிறான்.

68
00:03:48,145 --> 00:03:50,648
என்னிடம் விசுவாசமா இருக்கான்.

69
00:03:52,900 --> 00:03:55,152
உன் கட்டுப்பெட்டி சக வழக்கறிஞர்கள் அவனைப்
பற்றி என்ன நினைக்கிறாங்க?

70
00:03:55,986 --> 00:03:58,280
அவன் காத்திருப்பு அறையில் அடிக்கடி
உட்காராம இருக்க விரும்புறாங்க.

71
00:03:59,156 --> 00:04:01,283
பரவாயில்ல. நான் போகுமிடமெல்லாம்
அவனும் வருவான்.

72
00:04:01,617 --> 00:04:03,160
அவன் வேலையிலும் திறமைசாலி.

73
00:04:04,453 --> 00:04:05,287
உங்களைப் போல.

74
00:04:07,164 --> 00:04:08,582
நீங்க என்னையும் போனரையும் ஒப்பிடுறீங்க.

75
00:04:08,666 --> 00:04:12,586
நிஜத்தில், நீங்க குற்றவாளிகளைத் துரத்துவதை
நிறுத்திய பிறகு, பாஷ்,

76
00:04:12,670 --> 00:04:14,046
உங்களைப் போன்ற நபர் எனக்குத் தேவை.

77
00:04:14,129 --> 00:04:15,422
எனக்கு வேலை கொடுக்கிறீங்களா?

78
00:04:15,506 --> 00:04:17,424
நீங்களும் ஹெக்டரும் நல்ல குழுவா
இருப்பீங்கன்னு தோணுது.

79
00:04:18,008 --> 00:04:20,010
குற்றவாளிகள் தப்புவதற்கு உதவுவதிலா?

80
00:04:20,094 --> 00:04:22,179
அது என் பாணி அல்ல, ஆனால் நன்றி.

81
00:04:22,805 --> 00:04:25,975
பழைய பாடல் மாதிரி, நான்
கஷ்டப்படுவதையே விரும்புகிறேன்.

82
00:04:26,392 --> 00:04:28,268
அனைவருக்கும் நீதிமன்ற நாளுக்குத்
தகுதியானவர்கள்.

83
00:04:28,602 --> 00:04:29,812
பார்டர்ஸுக்கு கிடைத்தது.

84
00:04:30,396 --> 00:04:31,480
பழங்கால ஆள்.

85
00:04:31,939 --> 00:04:33,232
மிகச் சரி.

86
00:05:24,491 --> 00:05:27,536
பாஷ்

87
00:05:40,007 --> 00:05:43,886
நல்ல குதூகலம் தான், டீனா, ஆனா நான்
9:00 மணிக்கு வேலியில் இருக்கணும்.

88
00:05:46,388 --> 00:05:49,641
ஹேய், இந்த வாரம் வெள்ளியன்று பவுலுக்கு
நுழைவுச்சீட்டு இருக்கு. ஓ'ஜேஸ்.

89
00:05:49,725 --> 00:05:51,685
என்னுடன் அந்த காதல் ரயிலில் ஏற விருப்பமா?

90
00:05:51,769 --> 00:05:53,270
நீ பெரிய விசிறின்னு தெரியும்.

91
00:05:53,687 --> 00:05:55,898
உன்னை சகோதரன் போல் விரும்புகிறேன்,
பாப், உனக்குத் தெரியுமே.

92
00:05:58,650 --> 00:05:59,985
என்ன அத்தனை சுவாரசியம்?

93
00:06:00,069 --> 00:06:01,945
ஸ்கைலர் குடும்பத்துடனான நேர்காணல்கள்.

94
00:06:02,029 --> 00:06:04,615
கொலைக்குப் பின் முதல் நேர்காணல்.

95
00:06:04,698 --> 00:06:07,493
டேனியெல்லின் பதக்கம் காணவில்லை என்று
போலீஸிடம் சகோதரி சொன்னாள்.

96
00:06:08,118 --> 00:06:09,870
அடுத்த கேள்விகள் அனைத்தும்
பதக்கத்தைப் பற்றியவை.

97
00:06:10,370 --> 00:06:13,582
"எப்பவெல்லாம் அதை அணிந்தாள்? அதை அவள்
அணிந்துள்ள படங்கள் உண்டா"?

98
00:06:13,665 --> 00:06:15,167
"அன்றிரவு அதை அணிந்திருந்தாளா"?

99
00:06:15,250 --> 00:06:17,753
பதக்கத்தில் என்ன அத்தனை
முக்கியத்துவம்? நினைவு படுத்து.

100
00:06:17,836 --> 00:06:21,215
பார்டர்ஸை இறந்தவருடன் நேரடியாகத்
தொடர்புப் படுத்தும் ஒரே ஆதாரம்.

101
00:06:22,216 --> 00:06:24,468
சரி. அதனால்?

102
00:06:25,677 --> 00:06:28,180
அதை பாஷ் பார்டர்ஸ் வீட்டில்
வைத்தது எனக்குத் தெரியும்.

103
00:06:28,931 --> 00:06:31,433
குற்றம் நடந்த இடத்தில் ஓல்மரின் ரத்தம்
அதை உறுதி செய்கிறது

104
00:06:33,102 --> 00:06:34,603
யாரோ செய்தாங்கன்னு உறுதியாக்குது.

105
00:06:34,686 --> 00:06:37,648
பார்டர்ஸ் வீட்டிற்கு வந்து போன
காவலர்கள் பலர், என்கிறேன்.

106
00:06:38,107 --> 00:06:39,817
நீ என் சக காவலர் மாதிரியே சொல்றே.

107
00:06:43,821 --> 00:06:46,156
யார் நேர்காணல் செய்தது? பாஷ்?

108
00:06:47,574 --> 00:06:49,326
துப்பறிவாளர் ஆர். ராட்ஜர்ஸ்.

109
00:06:50,452 --> 00:06:51,870
என் உண்மையான கருத்து?

110
00:06:51,954 --> 00:06:53,247
எப்போதும்.

111
00:06:54,456 --> 00:06:56,708
உனக்கும் பாஷுக்கும் நடுவில்
என்ன நடந்திருந்தாலும்,

112
00:06:56,792 --> 00:06:58,669
அவர் உனக்குத் துணையா
இருந்திருக்கணும். சந்தேகமின்றி.

113
00:07:00,003 --> 00:07:00,838
நன்றி.

114
00:07:01,839 --> 00:07:03,132
ஆம், அது தவறானது.

115
00:07:03,632 --> 00:07:05,592
காலப்போக்கில் அது உன்
தொழிலைப் பாதித்தது என்றால்...

116
00:07:05,676 --> 00:07:06,677
பாதித்தது.

117
00:07:07,302 --> 00:07:08,387
சரி, அது நாணத்திற்குறியது.

118
00:07:08,470 --> 00:07:09,972
அவருக்கும் அதில் பங்கிருக்கு.

119
00:07:12,099 --> 00:07:15,519
ஆனால் பார்டர்ஸ் பற்றிய காவல்துறைக்
கணிப்பு தவறென்று ரத்தம் சொல்கிறது.

120
00:07:17,229 --> 00:07:18,814
இதுக்கு மேல் என்ன பழிவாங்கல் தேவை?

121
00:07:20,315 --> 00:07:21,483
இன்னும் நிறைய.

122
00:07:27,072 --> 00:07:27,906
1 செய்தி வரவு

123
00:07:27,990 --> 00:07:30,784
பதிலுக்கு பதில், நண்பா. நாளை 1 மணிக்கு
மருத்துவமனையில் வெள்ளோட்டம்.

124
00:07:32,619 --> 00:07:34,538
சரி, ஜெர்ரி, நாம உள்ள போறோம்.

125
00:07:34,621 --> 00:07:36,915
நாளை மதியம், 1:00 மணி, வலி மருத்துவமனை.

126
00:07:36,999 --> 00:07:38,083
நமக்கு ஒரு குழு தேவை.

127
00:07:38,792 --> 00:07:40,002
நாம் பில்லெட்ஸிடம் பேசலாம்.

128
00:07:49,720 --> 00:07:50,971
ஹேய்.

129
00:07:51,638 --> 00:07:52,848
ஹேய்.

130
00:07:56,685 --> 00:07:58,228
இது எப்படி தெரியுதுன்னு சொல்லு.

131
00:08:05,194 --> 00:08:07,279
-தப்பா தெரியுது.
-சரி தானே?

132
00:08:07,738 --> 00:08:13,035
இரண்டாம் பட்டியலில் தேடியபோது,
இதையும் கண்டுபிடித்தேன்.

133
00:08:16,747 --> 00:08:18,707
நீ இன்னும் துப்பறிவாளர் தான்.

134
00:08:19,833 --> 00:08:21,043
ஆம், நானே.

135
00:08:22,044 --> 00:08:23,295
பனிமலையின் நுனி தான்.

136
00:08:23,962 --> 00:08:25,714
அப்படித்தான் நினைக்கிறேன்.

137
00:08:27,424 --> 00:08:29,760
"துப்பாக்கி மிரட்டல்" என்று பதிவானது,

138
00:08:29,843 --> 00:08:33,513
ஆனால் நபர் நேரடியாக தன்னை குறி
வைத்ததாக பாதிக்கப்பட்டவள் கூறினாள்.

139
00:08:34,848 --> 00:08:37,684
"பயங்கர ஆயுத தாக்குதல்" என்று
பலரும் அதை அழைப்பர்.

140
00:08:37,768 --> 00:08:39,228
நான் அழைப்பேன்.

141
00:08:39,311 --> 00:08:42,773
இப்போ இது, அதே விஷயம். சென்ற மாதம்.

142
00:08:42,856 --> 00:08:44,650
யாரோ கணக்குகளை மாத்துறாங்க.

143
00:08:48,028 --> 00:08:49,529
நான் விசாரிக்கிறேன்.

144
00:08:49,863 --> 00:08:52,491
ஒரு திறமையற்ற துப்பறிவாளர்
தொடர்ச்சியைத் தவற விட்டிருப்பார்.

145
00:08:52,574 --> 00:08:53,784
நாம் கவனமா இருந்தது நல்லதாகியது.

146
00:08:54,284 --> 00:08:55,786
ஆம், ரொம்ப அலட்டாதீங்க.

147
00:08:56,203 --> 00:08:58,163
நாம் இத்துறையில் வீணடிக்கப்
பட்டதா யார் சொன்னது?

148
00:08:58,247 --> 00:08:59,831
நான் அல்ல, நண்பா.

149
00:09:10,759 --> 00:09:12,511
நாங்க இங்கே இருப்பது அவசியமா?

150
00:09:12,594 --> 00:09:16,682
லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை உங்கள்
சாமர்த்தியம், அர்ப்பணிப்பைப் பாராட்டுது.

151
00:09:16,765 --> 00:09:19,226
அனாதைகளை இரவு பூரா துரத்திட்டு இருந்தோம்.

152
00:09:19,309 --> 00:09:21,144
அப்போ வீட்டிற்கு போய் கொஞ்சம் தூங்குங்க.

153
00:09:21,520 --> 00:09:23,063
-போங்க.
-நன்றி, பாஸ்.

154
00:09:23,146 --> 00:09:26,358
சரி, நண்பர்களே, காரைச் சுற்றி இந்த
இடத்தை முதலில் பரிசோதிக்கலாம்,

155
00:09:26,441 --> 00:09:27,818
தடயவியல் கூடத்திற்கு அனுப்பலாம்.

156
00:09:37,536 --> 00:09:38,370
சுத்தமாயிருக்கு.

157
00:09:39,705 --> 00:09:40,956
அப்படி ஒண்ணுமே இல்ல.

158
00:09:46,795 --> 00:09:47,921
ஹேய்.

159
00:09:48,005 --> 00:09:48,839
ஏதும் செய்தி?

160
00:09:48,922 --> 00:09:52,134
பாதிரியார் கிராஸ்லி, டேரியஸ் நேட்ரல்
இருப்பிடங்கள் உறுதியானவை.

161
00:09:52,217 --> 00:09:54,428
போ ஜோனஸ் பற்றி நம்மிடம்
யாரும் பேசுவதில்லை.

162
00:09:54,511 --> 00:09:55,554
பக்கத்து வீட்டுக்காரர்கள்?

163
00:09:58,724 --> 00:10:00,267
யாரும் நம்மிடம் பேசுவதில்லை.

164
00:10:02,394 --> 00:10:03,687
சில விஷயங்கள் மாறுவதே இல்லை.

165
00:10:04,730 --> 00:10:07,274
கேரி வைஸின் வீட்டை சோதனையிடும்போது
சுவாரஸியமாக ஏதோ கிடைத்தது.

166
00:10:08,400 --> 00:10:10,027
ஸ்மித் &amp; வெஸ்ஸன் 9 ரக துப்பாக்கி.

167
00:10:10,527 --> 00:10:12,487
அதனால்? அது மிக அரிதல்லவே.

168
00:10:13,280 --> 00:10:14,740
ஒரு போதைப்பொருள் ஆய்வில் கைப்பற்றப்பட்டது.

169
00:10:14,823 --> 00:10:16,742
மேற்கு காவல்துறை, 2013.

170
00:10:16,825 --> 00:10:18,327
உருக்கப்பட வேண்டிய பட்டியலில் இருந்தது.

171
00:10:18,410 --> 00:10:21,496
நாசம். எப்படி மறுபடியும்
புழக்கத்துக்கு வந்தது?

172
00:10:21,580 --> 00:10:22,914
நல்ல கேள்வி.

173
00:10:23,373 --> 00:10:25,709
-பொருட்கள் காணாமல் போகின்றன.
-ஆம், அப்படித்தான்.

174
00:10:25,792 --> 00:10:28,003
போன வருடம் ரோலிங்க் சிக்ஸ்டீஸ்
கும்பலை சோதனையிட்டனர்,

175
00:10:28,086 --> 00:10:30,464
பட்டியலில் இருந்த ஒரு டஜன்
துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

176
00:10:30,547 --> 00:10:31,840
அது நிச்சயம் உள்வேலையா இருக்கணும்.

177
00:10:31,923 --> 00:10:32,924
நிச்சயமா.

178
00:10:38,889 --> 00:10:40,098
நான் கொஞ்சம் நடக்கப் போறேன்.

179
00:10:40,640 --> 00:10:41,725
சரி.

180
00:10:46,938 --> 00:10:47,898
திருமதி. ஜான்ஸன்?

181
00:10:50,150 --> 00:10:51,068
ஜெர்ரி எட்கர்.

182
00:10:52,986 --> 00:10:55,072
உங்க அம்மாவின் விடுமுறை நாள் ரொட்டியை
நாங்க வாங்கினதுண்டு.

183
00:10:55,155 --> 00:10:56,281
என் அம்மாவா?

184
00:10:57,991 --> 00:10:59,534
அது நீண்ட காலத்திற்கு முன்,

185
00:10:59,618 --> 00:11:01,995
அதை ஞாபகம் வைக்கும் அளவு நீங்க
வயதானவரா தெரியல.

186
00:11:02,079 --> 00:11:04,498
அந்த ரொட்டி நினைவிருக்கு. அபார சுவை.

187
00:11:05,832 --> 00:11:07,626
ஆம், சுவையானது.

188
00:11:09,127 --> 00:11:11,046
என்னிடம் செய்முறை இன்று இருந்திருக்கலாம்.

189
00:11:13,382 --> 00:11:15,300
-நீங்க போலீஸா?
-ஆமாம்.

190
00:11:15,801 --> 00:11:17,344
துப்பாக்கிச் சூடு விஷயமா வந்திருக்கீங்களா?

191
00:11:18,053 --> 00:11:18,887
ஆம், மேடம்.

192
00:11:19,262 --> 00:11:20,514
நான் அதைப் பார்க்கவில்லை.

193
00:11:22,808 --> 00:11:24,643
அதை அறிவதற்கு நீங்க பார்க்கத் தேவையில்லை.

194
00:11:26,061 --> 00:11:27,354
எனக்கு அவனைத் தெரியாது.

195
00:11:28,146 --> 00:11:29,272
அந்த இளம் மனிதன்.

196
00:11:30,273 --> 00:11:31,817
அவன் பெயர் கேரி வைஸ்.

197
00:11:37,239 --> 00:11:38,698
துப்பாக்கிச் சூடு கேட்டுது.

198
00:11:39,408 --> 00:11:42,327
பயத்துல செத்துகிட்டு, ஒருத்தன்
ஓடினதைப் பார்த்தேன்.

199
00:11:42,744 --> 00:11:44,955
அவன் உயிரைக் காப்பாத்திக்க
ஓடியது போலிருந்தது.

200
00:11:46,623 --> 00:11:48,333
கறுப்பரா, லத்தீனரா?

201
00:11:48,417 --> 00:11:49,418
கறுப்பர்.

202
00:11:50,919 --> 00:11:52,045
ஏறத்தாழ உங்க வயது.

203
00:11:54,339 --> 00:11:55,298
சரி.

204
00:11:59,553 --> 00:12:03,557
உங்களுக்கு நான் சில படங்களைக் காட்டினா,
அதிலிருந்து அவனை அடையாளம் காட்டுவீங்களா?

205
00:12:08,520 --> 00:12:09,563
காட்ட முடியலாம்.

206
00:12:49,728 --> 00:12:52,522
குற்றத்துறை ஆள் அனுப்புறாங்க. ரெனே டாவிலா,
ஒத்து வருவாங்களா?

207
00:12:52,606 --> 00:12:54,191
அவங்க அடங்கி இருக்கிற வரைக்கும் சரி தான்.

208
00:12:54,274 --> 00:12:56,067
அவங்க பயணம் செய்தா, மாட்டிக்குவோம்.

209
00:12:56,151 --> 00:12:57,527
எது கிடைக்குதோ அதை எடுத்துக்குவோம்.

210
00:12:57,611 --> 00:12:58,820
ஆம்.

211
00:13:00,697 --> 00:13:01,531
பானர் அழைக்கிறார்...

212
00:13:01,615 --> 00:13:02,574
நாசம்.

213
00:13:03,241 --> 00:13:04,326
மன்னிக்கணும்.

214
00:13:05,494 --> 00:13:06,328
பாஷ்.

215
00:13:06,745 --> 00:13:08,371
உங்களுக்கு சில படங்கள் அனுப்பியிருக்கேன்.

216
00:13:08,663 --> 00:13:09,873
டெடெஸ்கோ மற்றும் தோழி.

217
00:13:15,587 --> 00:13:18,924
ஆம், நீதிமன்றத்தில் க்ரோனின் உடன்
இருந்த தோழியை நினைவிருக்கு.

218
00:13:19,007 --> 00:13:19,966
அவளை கேத்தி என்று அழைத்தாள்.

219
00:13:20,383 --> 00:13:24,221
அவளை பின்தொடர்ந்து கார் எண்ணைப்
பார்க்கிறேன். எங்கே போறான்னு கவனிக்கிறேன்.

220
00:13:24,304 --> 00:13:25,639
புரிந்தது. நன்றி.

221
00:13:29,559 --> 00:13:30,977
ஜே, நான் போறேன்.

222
00:13:32,812 --> 00:13:35,774
நான் மையத்துக்குப் போகிறேன். டேவிலாவை
சுற்றுப் பகுதியில் போடுங்க.

223
00:13:35,857 --> 00:13:37,943
நாம் ஒதுங்கணும்னு ஹேரி விரும்பினா
நமக்கு சமிக்ஞை இருக்கு.

224
00:13:38,527 --> 00:13:40,820
-அவனது சமிக்ஞை என்ன?
-ஹோல்ட் ஃபாஸ்ட்.

225
00:14:16,439 --> 00:14:18,441
ராபர்ட்ஸன்

226
00:14:18,817 --> 00:14:21,444
முடியல...

227
00:14:22,737 --> 00:14:24,906
இழுத்து மூடுங்க. எல்லாரும் வெளியேறுங்க.

228
00:14:25,156 --> 00:14:26,783
-அவளை வெளியேற்றுங்க.
-அனைவரும் வெளியே வாங்க!

229
00:14:32,998 --> 00:14:36,251
பதின்மூன்று டெல்ட்டா 10. நான் கோட் ஆறு.
அதிகாரிக்கு உதவி தேவை.

230
00:14:36,334 --> 00:14:38,712
அடையாளம் தெரியாத காற்று வழி
விஷத்தை சுவாசிச்சிருக்காங்க.

231
00:14:38,795 --> 00:14:41,131
ஒரு ஹேஸ்மேட் குழுவும் ஆம்புலன்சும் தேவை.

232
00:14:43,091 --> 00:14:45,176
அதிகாரி எட்ஜ்வுட்டின் யூகம் சரியானது.

233
00:14:45,260 --> 00:14:47,804
அதிகாரி ராப்ஸன், மிகேல் வாஸ்கஸுடன் ஒன்று

234
00:14:47,887 --> 00:14:50,640
அல்லது இரண்டு முறை சந்தித்திருக்கார்.

235
00:14:51,182 --> 00:14:52,934
உடல் கேமிரா 2 ஒளிப்பதிவு
ஆகஸ்ட் 16, 2016 இரவு

236
00:14:56,771 --> 00:15:00,817
போலீஸ். கையில் இருப்பதை கீழே போடு, அதை
உதைத்து விட்டு, திரும்பி நில்.

237
00:15:00,900 --> 00:15:02,319
-அட, நண்பா.
-உன் கைகளைக் காட்டு.

238
00:15:02,402 --> 00:15:04,904
காற்றில் துப்பாக்கியால் சுட்டதா
ஒரு முட்டாள் பற்றி புகார்கள் வந்திருக்கு.

239
00:15:04,988 --> 00:15:07,073
அது நீ தானே? கேள்வியிலிருக்கும் முட்டாள்?

240
00:15:07,157 --> 00:15:10,035
-துப்பாக்கிகள் இல்லை. பட்டாசுகள்!
-பட்டாசுகள் எல்.ஏவில் சட்டப் புறம்பானவை.

241
00:15:10,619 --> 00:15:12,495
-நீ, உன்னை எனக்குத் தெரியும்.
-அப்படித் தோணலை.

242
00:15:12,579 --> 00:15:14,289
ஆம், நீ சின்கோ டி மையோவில் என்னைத்
தொல்லை செய்தாய்.

243
00:15:14,372 --> 00:15:16,041
அடையாள அட்டை காட்டு, நண்பா.

244
00:15:16,124 --> 00:15:17,208
என்ன?

245
00:15:17,292 --> 00:15:18,877
ஹேய், பின்வாங்கு!

246
00:15:18,960 --> 00:15:19,878
இப்போவே பின்வாங்கு.

247
00:15:23,632 --> 00:15:24,549
ஏன் இடைவேளை?

248
00:15:26,343 --> 00:15:29,471
வேண்டும்னே இருக்கலாம். கேமரா வேலை
செய்யாம இருந்திருக்கலாம்.

249
00:15:31,056 --> 00:15:33,391
அந்த சின்கோ டி மையோ சந்திப்பை
உறுதி செய்ய முடியுமா?

250
00:15:33,475 --> 00:15:36,436
அது உடல் கேமிரா வருவதற்கு முன். அவரது சக
காவலரைத் தேடிக்கிட்டு இருக்கோம்.

251
00:15:38,355 --> 00:15:40,357
அவரை கண்டுபிடித்தவுடன், சொல்லவும்.

252
00:15:40,440 --> 00:15:41,900
அவரிடம் பேசுவதற்கு முன்.

253
00:15:42,734 --> 00:15:44,527
சரி, சார். புரிந்தது.

254
00:15:46,613 --> 00:15:47,781
நன்றி, கேப்டன்.

255
00:16:18,645 --> 00:16:20,772
ஒரு வர்த்தக நிறுவனத்தின் பெயரில்
அவ கார் எண் பதிவாகியிருக்கு.

256
00:16:20,855 --> 00:16:25,193
4-2-4-8 எல்-எல்-சி/கே.

257
00:16:25,485 --> 00:16:27,112
வாடகை ஒப்பந்தத்தில் பெயர் செல்டென்.

258
00:16:27,779 --> 00:16:28,822
"கே" கேத்தியில் உள்ளது போல்.

259
00:16:29,489 --> 00:16:31,491
சரி. ஐந்து நிமிடங்களில் வருகிறேன்.

260
00:16:31,574 --> 00:16:32,534
அப்போது பார்க்கலாம்.

261
00:16:35,787 --> 00:16:37,372
கொஞ்சம் நிறுத்துங்க, தயவு செய்து.

262
00:16:59,477 --> 00:17:00,687
உங்களுக்கு உதவலாமா, சார்?

263
00:17:00,770 --> 00:17:03,606
ஆம், நிச்சயம் நம்புகிறேன்.

264
00:17:04,149 --> 00:17:05,650
-எப்படி இருக்கீங்க?
-நலம் தான்.

265
00:17:05,734 --> 00:17:07,861
மனம் உடைவதற்கு வெகு அருகில் இருக்கிறாள்.

266
00:17:07,944 --> 00:17:09,904
எல்லாம் கெட்டால், பார்டர்ஸ் குற்றம்
சொல்வான்னு நினைக்கிறா.

267
00:17:11,197 --> 00:17:12,615
அந்தப் பெண் கிறுக்கி.

268
00:17:13,366 --> 00:17:16,453
அவ தைரியமாகணும். விஷயம் கெடாது.

269
00:17:17,620 --> 00:17:19,581
-அவங்ககிட்ட ரீட்டாவின் ஒலிப்பதிவிருந்தா...
-அவங்களிடம் இல்லை.

270
00:17:20,915 --> 00:17:22,083
அது பொய்.

271
00:17:25,795 --> 00:17:29,174
ஏற்கனவே அவனது விடுதலை பற்றி கவலைப்படுறா,
எப்படி அனைத்தையும் மாற்றும் என்பது பற்றி.

272
00:17:31,926 --> 00:17:34,262
அப்ப அவளை ஆழமாக மூச்சு விட சொல்லி,
பணத்தைப் பற்றி நினைக்கச் சொல்லு.

273
00:17:35,263 --> 00:17:38,057
நான் பார்டர்ஸிடம் பேசுகிறேன். ஸ்பென்சரைத்
தொடர்பு கொள்ள வேண்டாம்.

274
00:17:38,141 --> 00:17:39,976
விசாரணை முடியும் வரை.

275
00:17:41,728 --> 00:17:44,564
மன்னிக்கணும், காவல் அதிகாரி
வாயை மூடுவதில்லை.

276
00:17:44,647 --> 00:17:45,690
பரவாயில்லை.

277
00:17:46,524 --> 00:17:48,443
சுருக்கமா விளக்குங்க. நேரமாகுது.

278
00:17:48,526 --> 00:17:51,821
ஸெல்டென் க்ரோனினின் மனைவி. அதற்கு
முன் கள்ளக் காதலி.

279
00:17:51,905 --> 00:17:54,199
அவள் நில வழக்கறிஞரும் கூட. அந்த
கட்டடத்தை அவனுக்காக கண்டுபிடித்தாள்.

280
00:17:55,575 --> 00:17:56,618
இதோ வருகிறாள்.

281
00:18:02,207 --> 00:18:04,709
நீ வேறெங்கோ போகணுமே, போ. அவளைத்
தொலைக்க மாட்டேன்.

282
00:18:05,710 --> 00:18:07,629
காதில் தேனாகப் பாய்கிறது, சகோதரா. நன்றி.

283
00:18:43,081 --> 00:18:45,166
பார்டர் வரவேற்பறை, தேடுதலுக்கு முன்

284
00:19:07,272 --> 00:19:08,940
பார்டர்ஸ் படுக்கையறை
தேடுதலுக்கு முன்

285
00:19:37,093 --> 00:19:40,972
டேனியெல் ஸ்கைலருடன் ப்ரெஸ்ட்டன் பார்டர்ஸை
தொடர்புப்படுத்தும் ஏதும் கண்டுபிடிங்க.

286
00:19:43,266 --> 00:19:46,644
சரி, முன் மற்றும் பின் காட்சிகளை நான்
பதிவெடுக்கிற வரை, அனைவரும் இங்கே இருங்க.

287
00:20:10,543 --> 00:20:11,586
நன்றி.

288
00:20:12,253 --> 00:20:13,838
ஹேய், என்ன விஷயம்?

289
00:20:15,465 --> 00:20:16,591
என்ன சொல்றே?

290
00:20:16,674 --> 00:20:18,259
2008லிருந்து தூசு படிஞ்சிருக்கு,

291
00:20:18,343 --> 00:20:20,595
பிறகு, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று
முறை திறக்கப்பட்டிருக்கு.

292
00:20:22,472 --> 00:20:23,306
நானும் வேறு யாரும்?

293
00:20:28,061 --> 00:20:31,689
அதிகாரி ராபர்ட் டோரெஸ் மற்றும்
க்ரிஸ்டீனா ஹென்ரி, இன்று காலை.

294
00:20:32,190 --> 00:20:34,776
ஸார்ஜன்ட் டெல்மோர் வாஷிங்க்டன்,
செயலகத்திலிருந்து, நேற்று.

295
00:20:35,735 --> 00:20:37,320
அப்போ, புது முன்னேற்றங்கள்?

296
00:20:39,697 --> 00:20:42,367
முடிக்க போறோம். நன்றி.

297
00:21:12,939 --> 00:21:13,898
ஸ்பென்சர்

298
00:21:13,982 --> 00:21:16,067
-நான் திரு. க்ரோனினை அழைக்கவில்லை.
-நிச்சயமா சொல்றியா?

299
00:21:16,359 --> 00:21:17,860
தெரியாமல் எண் அழுத்தப்பட்டிருக்கலாம்.

300
00:21:17,944 --> 00:21:19,696
ஆனா நான் ஏன் அவரை அழைக்கணும்?
எனக்கு முறை தெரியுமே.

301
00:21:19,779 --> 00:21:21,322
யாரோ உன் பெயரைப் பயன்படுத்தி இருக்காங்க.

302
00:21:21,406 --> 00:21:22,824
அய்யோ, என்ன?

303
00:21:22,907 --> 00:21:23,908
எங்களுக்குத் தெரியாது.

304
00:21:23,992 --> 00:21:25,576
ஏன் யாரோ என் பெயரைப் பயன்படுத்தணும்?

305
00:21:25,660 --> 00:21:26,995
விசாரணை முடியும் வரை நீ
தலைமறைவா இரு.

306
00:21:27,078 --> 00:21:28,788
நோய் விடுப்பு ஏதும் வருதா?

307
00:21:29,789 --> 00:21:30,832
கொஞ்சம் இருக்கு, நினைக்கிறேன்.

308
00:21:30,915 --> 00:21:33,376
எங்களின் வீடு இருக்கு. கொஞ்ச நாள்
நீ அங்கு தங்கணும்.

309
00:21:34,043 --> 00:21:35,837
விசாரணை முடிகிற வரை.

310
00:21:36,129 --> 00:21:37,839
-நான்...
-இதோ முகவரி.

311
00:21:43,761 --> 00:21:45,013
இருபத்து இரண்டு வருடங்கள்.

312
00:21:45,972 --> 00:21:47,974
நகரக் கோப்புகள் புனிதமானவை அல்ல.

313
00:21:49,267 --> 00:21:50,935
வாஷ் நேற்று கோப்புகளைப் பார்த்திருக்கார்.

314
00:21:53,021 --> 00:21:56,065
வழக்கு பற்றிய நினைவுகளை புதுப்பிக்க மாவட்ட
வழக்கறிஞர் அறிவுறுத்தினார்.

315
00:21:56,149 --> 00:21:57,650
இன்று காலை துப்பறிவுக் குழுவும்.

316
00:21:59,610 --> 00:22:00,445
யார்?

317
00:22:00,528 --> 00:22:02,113
கிறிஸ்டினா ஹென்றி.

318
00:22:02,572 --> 00:22:03,823
ஏன்னு தெரியுமா?

319
00:22:04,532 --> 00:22:08,036
நான் தப்பு பண்ணினேனான்னு பார்க்க. எப்படி
தவறு செய்திருப்பேன்னு தெரிஞ்சுக்க.

320
00:22:10,455 --> 00:22:12,749
அப்போ, இல்லாத படம் எது? சொல்ல முடியுமா?

321
00:22:13,958 --> 00:22:15,960
தேடுதலுக்கு முன் என்ற கோப்பில்
ஒரு உடனடி புகைப்படம்.

322
00:22:16,044 --> 00:22:17,628
பார்டர்ஸின் படுக்கையறை.

323
00:22:18,463 --> 00:22:19,756
ஒப்பனை மேஜை.

324
00:22:23,176 --> 00:22:24,927
உங்க மனதில் என்ன இருக்கு, துப்பறிவாளரே?

325
00:22:29,182 --> 00:22:32,310
ஹாலிவுட் ரோந்துக் காவலர்கள்
பார்டர்ஸைப் பிடித்தபோது

326
00:22:32,894 --> 00:22:34,228
குற்றப்பதிவுக்குப் ஆதாரம் இருக்குமுன்...

327
00:22:34,312 --> 00:22:35,813
நான் அங்கு இருந்தேன்.

328
00:22:36,731 --> 00:22:39,108
நீங்க விஷயத்தை சரி செய்ததா
செர்விடோன் சொன்னார்

329
00:22:39,650 --> 00:22:41,027
பார்டர்ஸை விடுவிச்சீங்களாம்.

330
00:22:41,110 --> 00:22:43,154
நீங்க சொன்ன மாதிரி, அது ஆரம்ப கட்டம் தான்.

331
00:22:44,947 --> 00:22:47,492
அவனிடம் பை இருந்தது. முதுகுப் பை.

332
00:22:48,409 --> 00:22:49,368
அது சோதிக்கப்பட்டதா?

333
00:22:50,286 --> 00:22:53,164
தெரியல. அதிகாரி செர்விடோனைக் கேட்டீங்களா?

334
00:22:53,247 --> 00:22:56,417
ஏன்னா, அதில் எது கிடைச்சிருந்தாலும்
அது நீதிமன்றத்தில் எடுபடாது.

335
00:22:58,586 --> 00:23:01,756
பார்டர்ஸ் டேனியெல் ஸ்கைலரைக்
கொலை செய்தான்.

336
00:23:02,882 --> 00:23:06,594
பதக்கத்தை நீங்க படுக்கையறையில்
கண்டெடுத்ததால் பார்டர்ஸ் சிறையிலிருக்கான்.

337
00:23:08,888 --> 00:23:09,722
ஆம்.

338
00:23:11,557 --> 00:23:14,477
மதுபானங்கள்
போர்ட்னர்ஸ்

339
00:23:14,560 --> 00:23:17,355
அப்போ சட்டை மட்டும் போட்டிருந்தான்,
கால் சட்டைகள் இல்லை.

340
00:23:17,688 --> 00:23:20,733
"கொஞ்சம் குளிரடிக்குதே?"
அப்படின்னு கேட்டேன்.

341
00:23:20,817 --> 00:23:23,277
கேளுங்க, நான்... இதென்ன?

342
00:23:23,694 --> 00:23:25,863
மது விடுதியின் கடைசியில்
அமர்ந்திருக்கும் சீமானின் பரிசு.

343
00:23:26,948 --> 00:23:29,909
ஜிம்மி, சீமான் மற்றும் மேதாவி.

344
00:23:29,992 --> 00:23:30,993
கேளுங்கப்பா.

345
00:23:32,995 --> 00:23:34,122
நீங்க எவ்ளோ விரைவா திரும்பணும்?

346
00:23:34,872 --> 00:23:38,042
வேண்டாம். நீ எப்போ பணியை முடிக்கிறாய்?

347
00:23:39,335 --> 00:23:40,253
ஏன்?

348
00:23:40,336 --> 00:23:42,755
நீ சால்ஸா நடனம் செய்ய
விரும்புவேன்னு நினைத்தேன்.

349
00:23:44,674 --> 00:23:46,592
-எங்கே?
-எல் ஃப்ளோரிடீட்டா.

350
00:23:48,636 --> 00:23:50,096
உனக்கு கொஞ்சம் நடனம் செய்து காட்டுவேன்.

351
00:23:52,056 --> 00:23:53,432
செஞ்சாலும் செய்வீங்க.

352
00:23:54,225 --> 00:23:55,768
எனக்கு சால்ஸா ஆடத் தெரியும்.

353
00:23:55,852 --> 00:23:57,353
ஆடுவேன்னு நினைத்தேன்.

354
00:23:59,272 --> 00:24:00,940
நீங்க திருமனம் ஆனவர்னு நினைத்தேன்.

355
00:24:03,025 --> 00:24:04,986
எனக்கா? இல்லை.

356
00:24:05,528 --> 00:24:07,905
என்னை தொல்லை செய்யாமல் இருக்க, அறிமுகமற்ற
பெண்களிடம் அவ்வாறு சொல்வேன்.

357
00:24:09,198 --> 00:24:13,911
அப்ப சொன்னான், "விந்து நீந்தலுக்கு
சுத்தமான காற்று நல்லது" என்று.

358
00:24:14,787 --> 00:24:17,081
விந்து நீந்தல். அதைப் பற்றி படித்தேன்.

359
00:24:17,165 --> 00:24:19,834
லத்தீன் மொழியில் மோட்டஸ், நகர்தல்
என்ற சொல்லிலிருந்து வருது,

360
00:24:19,917 --> 00:24:23,212
"சதை அல்ல, நீந்துதல் தான்
முக்கியம்" என்ற பொருளில்.

361
00:24:23,296 --> 00:24:24,630
நான் ராஜினாமா செய்கிறேன்.

362
00:24:26,299 --> 00:24:27,300
என்னது?

363
00:24:27,383 --> 00:24:29,260
எல்டி சொல்வது சரி. நேரம் வந்தாச்சு.

364
00:24:30,011 --> 00:24:32,597
என் ஓய்வூதியத்தை வாங்கிட்டு,
கடற்கரையில் வாழப் போறேன்.

365
00:24:33,347 --> 00:24:34,557
அல்லது கோல்ஃப் மைதானத்தில்.

366
00:24:35,516 --> 00:24:36,934
நீங்க விளையாடுவதில்லையே.

367
00:24:38,269 --> 00:24:39,729
என்னால் கற்க முடியும்.

368
00:24:42,857 --> 00:24:46,152
ஓய்வு பெற்றாலும் ஜீவனாம்சம்
தொடரும், தெரியுமா?

369
00:24:46,485 --> 00:24:48,654
நரகத்தில் வாயில்கள் வரைக் கூட.

370
00:24:52,700 --> 00:24:54,368
உங்க மேஜை நாற்காலியை நான் எடுத்துக்கலாமா?

371
00:25:47,088 --> 00:25:48,130
நன்றி.

372
00:25:50,633 --> 00:25:52,551
உங்களிடம் நிச்சயம் உளவாளி வாசனை வருது.

373
00:25:52,969 --> 00:25:55,346
அது தான் விஷயமே. மன்னிக்கணும்.

374
00:26:04,313 --> 00:26:05,731
இதற்கு முன் இதை செய்திருக்கீங்களா?

375
00:26:07,692 --> 00:26:11,153
பெரிய விஷயம் இல்லை, மேட்ஸ். என்
குற்றவாளியைப் பிடித்துவிட்டு, வந்துடுவேன்.

376
00:26:14,198 --> 00:26:15,866
ஏதும் முட்டாள்தனமா செய்திடாதீங்க.

377
00:26:18,828 --> 00:26:19,829
எனக்கு நீங்க தான் இருக்கீங்க.

378
00:26:19,912 --> 00:26:21,622
எனக்கு அது நல்லாவே தெரியும்.

379
00:26:31,257 --> 00:26:32,842
அம்மாவோட பிறந்த நாள் வருது.

380
00:26:34,010 --> 00:26:35,011
தெரியும்.

381
00:26:35,094 --> 00:26:36,429
நாம் ஏதாவது செய்யணும்.

382
00:26:39,015 --> 00:26:41,642
நிச்சயமா. ஏதும் யோசனைகள் இருக்கா?

383
00:26:43,477 --> 00:26:45,104
கேட்டலீனாவுக்குப் போகலாம்னு நினைத்தேன்.

384
00:26:46,022 --> 00:26:48,399
அபாரம். சரி.

385
00:26:49,442 --> 00:26:50,901
இன்றிரவு முடிவு செய்யலாம்.

386
00:26:53,779 --> 00:26:56,407
அவங்க எப்போதும் என் பறக்கும் மீன்
கதையை நம்பவே இல்லை.

387
00:27:06,459 --> 00:27:08,961
யாருக்கோ குறைந்த குற்ற
எண்ணிக்கைகள் தேவைப்பட்டன,

388
00:27:09,045 --> 00:27:11,047
அதனால் அதை முயன்று பெற்றனர்.

389
00:27:11,756 --> 00:27:13,007
கனவுக் கதை அது.

390
00:27:14,592 --> 00:27:17,386
உன்னைப் பாதுகாத்துக் கொள், எல்டி.
உளவாளியை யாருக்கும் பிடிக்காது.

391
00:27:18,137 --> 00:27:19,805
மன்னிக்கணும், உண்மை விளம்பி.

392
00:27:19,889 --> 00:27:22,475
எதுவாவும் இருக்க நான் விரும்பல.

393
00:27:23,517 --> 00:27:26,437
பதிவுகளை மாற்றுவதற்கு நான் உடந்தையா
இருந்ததா காட்டிக்க விரும்பல.

394
00:27:29,732 --> 00:27:32,735
சரி, இது கேப்டன் கூப்பர் மேல் தான்
விழும், சரி தானே?

395
00:27:32,818 --> 00:27:35,780
சரி, அதன் ஒரு பகுதி நேரத்துக்கு நான்
இடைக்கால கேப்டனா இருந்தேன்.

396
00:27:39,283 --> 00:27:41,369
எனக்கு அனைத்தின் பிரதிகளும் வேண்டும்.

397
00:27:42,745 --> 00:27:44,830
நிஜமா அது வரை வரும்னு நினைக்கிறீங்களா?

398
00:27:45,373 --> 00:27:46,207
என்ன?

399
00:27:46,791 --> 00:27:47,792
உண்மை விளம்புதல்.

400
00:27:49,794 --> 00:27:51,837
கடவுளே, ஆகக் கூடாதுன்னு நம்புறேன்.

401
00:27:52,505 --> 00:27:56,092
ஓல்மரின் ரத்தத்துடனான கைக்குட்டையை வைக்க
பொருள் அறை ஆளை க்ரோனின் பிடித்தானா?

402
00:27:56,175 --> 00:27:58,135
டெர்ரி ஸ்பென்சர் என்ற குடிமகன்.

403
00:27:58,219 --> 00:27:59,303
நிரூபிக்க முடியுமா?

404
00:27:59,387 --> 00:28:00,679
முயற்சிக்கிறேன்.

405
00:28:01,722 --> 00:28:03,808
கவலை வேண்டாம், நான் இங்கிருந்து
நொண்டிக்கிட்டே போறேன்.

406
00:28:08,312 --> 00:28:10,147
ஹேய், ஜிம்மி, நான் இங்கு
ஜே. எட்கருடன் இருக்கேன்.

407
00:28:10,231 --> 00:28:13,401
இரு குற்றவாளிகளும் பயன்படுத்திய கிடங்கில்
நிஸ்ஸான் ஸென்ட்ராவைக் கண்டுபிடித்தோம்,

408
00:28:13,901 --> 00:28:16,987
ஆனால் நேற்று சில மணி நேரங்களுக்கு
தேடுதலை நிறுத்த நேர்ந்தது.

409
00:28:17,071 --> 00:28:18,030
என்ன பிரச்சனை?

410
00:28:18,114 --> 00:28:19,031
ஃபென்டனில் போதைப் பொருள்.

411
00:28:19,115 --> 00:28:21,158
என் அதிகாரிகளில் ஒருத்தி சிறிது
முகர்ந்துவிட்டாள்.

412
00:28:21,242 --> 00:28:22,952
அவளை தலைகீழாக மயங்கி விழ வைத்தது.

413
00:28:23,035 --> 00:28:24,662
கடவுளே. ஃபென்டனில் வித்தாங்களா?

414
00:28:24,745 --> 00:28:25,871
அதை வைத்து எதையோ செய்திருக்காங்க.

415
00:28:25,955 --> 00:28:30,251
மலிவானது, வேகமானது, அபாயமானது,
ஹெரோயினை விட 100 மடங்கு போதை தருவது.

416
00:28:30,334 --> 00:28:31,877
உன் அதிகாரி நலமாயிடுவாங்களா?

417
00:28:31,961 --> 00:28:33,295
நலமாயிடுவாங்க.

418
00:28:33,379 --> 00:28:35,381
இரண்டு முறை நார்கேன் மருந்து
கொடுத்ததால் பிழைச்சாங்க.

419
00:28:35,464 --> 00:28:36,590
நாசம்.

420
00:28:36,674 --> 00:28:38,342
ஸென்ட்ராவிலிருந்து கைரேகை
எடுத்திருக்காங்க.

421
00:28:38,843 --> 00:28:41,137
ப்ரேண்டன் க்ளீக், கார் திருடன்.

422
00:28:41,220 --> 00:28:43,389
ஜாமீனில் இருக்கான், இம்பீரியல் வேலியில்.

423
00:28:44,598 --> 00:28:45,558
பத்திரமாக இரு, சகோதரா.

424
00:28:45,641 --> 00:28:46,642
நீயும் தான்.

425
00:28:50,438 --> 00:28:54,400
ஃபென்டனில். இப்ப வழக்கை நிறுத்தி, போதைத்
தடுப்புத் துறையை அழைக்கலாமோ.

426
00:28:55,734 --> 00:28:56,735
திட்டத்திலேயே இரு.

427
00:28:58,779 --> 00:29:01,323
நன்றி, ஜேக்கி. அபாரம். செய்தி
கொடுத்துக் கொண்டே இரு.

428
00:29:04,577 --> 00:29:05,703
உன் யூகம் சரி தான்.

429
00:29:05,786 --> 00:29:08,456
சகோதரி ரோஸீ கேஸ்கேட்ஸில்
முகாமிட்டிருக்கிறாள்.

430
00:29:08,581 --> 00:29:09,707
வீடு பூட்டி இருக்கு.

431
00:29:09,790 --> 00:29:11,041
ஆனால் மின் உபயோகம் கூடியிருக்கா?

432
00:29:11,125 --> 00:29:13,085
மூன்று இலக்க எண்களா இருக்கு,
வாரம் முழுக்க.

433
00:29:13,169 --> 00:29:15,004
ஜூனியர் குளிர் சாதனத்தை எப்படி
பயன்படுத்தாம இருப்பான்?

434
00:29:16,088 --> 00:29:17,840
காவல்துறை இரு தெரு தள்ளி
அவனது காரைக் கண்டது.

435
00:29:18,924 --> 00:29:20,551
அப்போ, ஜூனியர் பேக்கர்ஸ்ஃபீல்டில்
இருக்கான்.

436
00:29:22,761 --> 00:29:23,679
எப்போ கிளம்புறோம்?

437
00:29:24,430 --> 00:29:25,556
அவனது சகோதரன் ஆஸ்கர் எங்கே?

438
00:29:27,683 --> 00:29:29,143
ஒருவேளை அவனும் அங்கே இருக்கிறானோ.

439
00:29:32,938 --> 00:29:36,150
தெரிஞ்சவன் மாதிரி இருந்தான், ஆனா தெருவில்
பாதி கிறுக்கன்களும் அப்படித்தான்.

440
00:29:37,151 --> 00:29:39,445
ஒரு ஆயுதமில்லாதவன் உயிரிழந்தான்.

441
00:29:40,070 --> 00:29:41,572
என்ன நடந்தது என்று நாம்
புரிந்து கொள்ளணும்.

442
00:29:46,368 --> 00:29:49,288
சார், நான் 10 வருடமா
வேலை செய்கிறேன்.

443
00:29:50,206 --> 00:29:52,541
சில இரவுகள் அங்கு யுத்த களம்
போல் இருக்கும்.

444
00:29:52,625 --> 00:29:54,251
அன்றிரவும் அப்படித்தான்.

445
00:29:54,793 --> 00:29:55,961
யுத்த களமா?

446
00:29:56,754 --> 00:29:57,713
ஒரு உவமை தான்.

447
00:29:59,298 --> 00:30:00,883
நான் மேலேறி வந்தவன்.

448
00:30:01,550 --> 00:30:03,969
என்ன வேலை, எத்தனை கடினம்னு
எனக்குப் புரியுது.

449
00:30:06,055 --> 00:30:07,723
சார், நான் சொல்வது என்னன்னா,

450
00:30:07,806 --> 00:30:10,601
நான் பார்த்த ஒவ்வொருவரையும் எனக்கு
துல்லியமா நினைவில்லை.

451
00:30:11,435 --> 00:30:12,561
தெரிஞ்சவன் மாதிரி இருந்தான்.

452
00:30:13,062 --> 00:30:14,605
அவ்வளவு தான் சொல்ல முடியும்.

453
00:30:17,066 --> 00:30:18,734
சரி, அப்போ எனக்கு விளக்கிச் சொல்லுங்க.

454
00:30:19,318 --> 00:30:20,861
நீங்க விருந்துக்கு வந்தீங்க.

455
00:30:20,945 --> 00:30:22,029
கவனமாக.

456
00:30:22,780 --> 00:30:25,866
அங்கு துப்பாக்கி இருப்பதாக சந்தேகித்தோம்.
நிறைய 911 அழைப்புகள்.

457
00:30:25,950 --> 00:30:27,451
நீங்க பதட்டமாக இருந்தீங்க.

458
00:30:27,535 --> 00:30:29,119
ஆம், சார். அது பதட்டமான சூழல்.

459
00:30:29,203 --> 00:30:30,955
கூட்டமாக, குழப்பமாக.

460
00:30:31,747 --> 00:30:33,541
நாங்க காரிலிருந்து இறங்கியவுடன்
குப்பிகள் எறிந்தனர்.

461
00:30:33,624 --> 00:30:35,459
நீங்க வாஸ்கேஸை எப்போ பார்த்தீங்க?

462
00:30:35,543 --> 00:30:37,336
உடனேயே. அவன் தான் எங்களை
முதலில் பார்த்தான்.

463
00:30:38,170 --> 00:30:39,296
ஒடத் தொடங்கினான்.

464
00:30:42,591 --> 00:30:44,927
வாஸ்கேஸ் குற்றமற்றவனாக
இருந்தால் ஏன் ஓடினான்?

465
00:30:45,344 --> 00:30:46,929
சந்தேகப்படுவதில் அர்த்தமில்லை.

466
00:30:47,513 --> 00:30:50,140
எனக்கு உங்க மனநிலையில் தான்
ஆர்வம், அதிகாரியே.

467
00:30:51,016 --> 00:30:52,851
என் உயிருக்கு பயந்தேன், சார்.

468
00:30:54,144 --> 00:30:57,231
உள்ளாய்வுத் துறையிடம் சொன்னது போல்,
நான் உயிருக்கு பயந்தேன்.

469
00:31:00,609 --> 00:31:03,070
மேடிக்கு ஒரு பனிக்கட்டி தேநீர் லாட்டே.

470
00:31:03,737 --> 00:31:06,657
மன்னிக்கணும். மறந்துட்டேன். கானர்
அதிக நுரை கேட்டார்.

471
00:31:06,740 --> 00:31:08,158
-பிரச்சனை இல்லை.
-நன்றி.

472
00:31:11,662 --> 00:31:16,292
என் பெற்றோர் நாளை விருந்து வைக்கிறாங்க,
நீ வரணும்னு விரும்புறேன்.

473
00:31:17,459 --> 00:31:19,295
உன் பெற்றோரை நான் சந்திக்க விரும்பறியா?

474
00:31:19,378 --> 00:31:21,213
இல்ல. அது அப்படியல்ல.

475
00:31:21,297 --> 00:31:24,008
அங்கு வேறு நிறைய மக்கள் இருப்பாங்க...

476
00:31:24,091 --> 00:31:25,467
ஹனிக்கு மாச்சியாட்டோ.

477
00:31:28,429 --> 00:31:29,972
-தள்ளிக்குங்க.
-மன்னிக்கணும்.

478
00:31:32,558 --> 00:31:34,977
மேடி பாஷ் தானே? நான் ஹனி சாண்ட்லர்.

479
00:31:35,102 --> 00:31:36,562
ஆம். வணக்கம், திருமதி. சாண்ட்லர்.

480
00:31:37,104 --> 00:31:38,522
உன் அப்பா என்னைப் பற்றி சொல்லியிருப்பார்.

481
00:31:38,606 --> 00:31:40,649
நிச்சயம். இது என் நண்பன் டாம்.

482
00:31:41,650 --> 00:31:44,653
டாம் கேலிகன், குற்றவியல் ஆய்வுப்
பிரிவில் கணக்கர்.

483
00:31:44,737 --> 00:31:46,530
எங்களது திறமையான எதிரிகள்.

484
00:31:47,823 --> 00:31:48,907
உங்களைப்பத்தி கேட்டிருக்கேன்.

485
00:31:48,991 --> 00:31:51,785
மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில்
சொல்வது போல்,

486
00:31:51,869 --> 00:31:53,329
நான் மெஃபிஸ்ட்டோஃபெலீஸின் வேலைக்காரி அல்ல.

487
00:31:54,830 --> 00:31:56,165
உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, டாம்.

488
00:31:56,248 --> 00:31:58,125
-உங்களையும்.
-அழகா இருக்கான்.

489
00:32:00,336 --> 00:32:02,546
யப்பா. மனி சாண்ட்லர்.

490
00:32:02,630 --> 00:32:03,797
அது அசவுகரியமா இருந்தது.

491
00:32:04,298 --> 00:32:06,342
-முன்னாடியே அவங்களை சந்திச்சிருக்கியா?
-இல்லை.

492
00:32:07,134 --> 00:32:08,135
உன்னை அவங்களுக்குத் தெரியுது.

493
00:32:08,427 --> 00:32:09,595
என் அப்பாவைத் தெரிஞ்சவங்க.

494
00:32:09,887 --> 00:32:11,847
நிச்சயம் தெரிஞ்சிருக்கும். அவர் மேல்
வழக்கு போட்டவங்க.

495
00:32:12,556 --> 00:32:14,058
ஆம். தெரிஞ்சது தானே.

496
00:32:14,141 --> 00:32:16,644
உயர மெத்தான வெள்ளை பானம் கானருக்கு,
அதிக நுரையுடன்.

497
00:32:24,068 --> 00:32:27,529
ஆம். நாளை விருந்து. வருகிறேன்.

498
00:32:28,572 --> 00:32:29,406
நல்லது.

499
00:33:12,282 --> 00:33:14,410
கார்ஸியா வலி மருத்துவமனை

500
00:33:27,297 --> 00:33:29,425
-தாமதமா வந்திருக்கீங்க.
-பேருந்து தாமதமா வந்தது.

501
00:33:33,220 --> 00:33:34,596
போகலாம்.

502
00:33:36,432 --> 00:33:37,516
கைபேசிகள்.

503
00:33:48,026 --> 00:33:49,111
உங்க கைபேசி?

504
00:33:51,530 --> 00:33:53,115
போகலாம், நகருங்க.

505
00:34:28,609 --> 00:34:31,195
வேன் நைஸ் சாலையில் இலக்கு தெற்கே போகிறார்.

506
00:34:31,278 --> 00:34:33,280
இது நகரும் கண்காணிப்பு அல்ல
என்று நினைத்தேன்.

507
00:34:33,363 --> 00:34:34,323
பாஷ் வேனில் உள்ளார்.

508
00:34:34,406 --> 00:34:36,200
சரி. வேன் நைஸ் சாலையில் தெற்கே.

509
00:35:08,649 --> 00:35:09,483
நீ நலமா?

510
00:35:11,068 --> 00:35:13,737
நீ இம்முறை பிழைக்க மாட்டாய்னு
லூயிஸ் மிரண்டுவிட்டான்.

511
00:35:14,404 --> 00:35:17,115
நீ போதையேறினாயா? எங்கு வாங்கினாய்?

512
00:35:17,199 --> 00:35:18,408
நாசமாப் போ, ட்ரே.

513
00:35:20,702 --> 00:35:21,995
சரி, நீ என்ன பார்க்கிறாய்?

514
00:35:22,746 --> 00:35:23,622
நீ,

515
00:35:24,748 --> 00:35:25,749
போதையேற்றப் பார்க்கிறாய்.

516
00:35:28,252 --> 00:35:29,711
பைத்தியக்காரனே.

517
00:35:31,129 --> 00:35:31,964
பேசக் கூடாது.

518
00:36:07,040 --> 00:36:08,292
கடன் தீர்ப்பு பத்திரங்களா?

519
00:36:08,375 --> 00:36:10,043
ஸ்பென்சர் கடன் பிரச்சனையில் இருந்தான்.

520
00:36:10,127 --> 00:36:12,296
ஏமாற்றுக்கார வழக்கறிஞரை நியமித்து, அவனை
கடனிலிருந்து மீட்டான்.

521
00:36:13,922 --> 00:36:15,841
முதலீட்டு வட்டங்கள். அய்யோ.

522
00:36:15,924 --> 00:36:18,260
கந்து வட்டிக்காரனைப் பயன்படுத்தலாம்,
கம்மி வட்டி.

523
00:36:20,012 --> 00:36:22,639
வருட முடிவிற்குள் பணத்தை
செலுத்தியாக வேண்டும்.

524
00:36:22,723 --> 00:36:24,099
எவ்ளோ பெரிய தொகை?

525
00:36:24,182 --> 00:36:25,642
-500 ஆயிரம்.
-யப்பாடி.

526
00:36:26,852 --> 00:36:28,645
-அவன் வீட்டை விற்கலாமே.
-இல்லை, முடியாது.

527
00:36:28,729 --> 00:36:31,523
முதலீட்டாளர்கள் விட மாட்டாங்க. அவன்
செலுத்தக் கூடாதுன்னு நினைக்கிறாங்க.

528
00:36:32,024 --> 00:36:33,400
அப்ப தான் அவங்க வீட்டை விற்க முடியும்.

529
00:36:33,483 --> 00:36:35,652
மக்கள் சிறு எழுத்துக்களைப் படிக்கணும்.

530
00:36:36,486 --> 00:36:38,071
யார் இந்த மோசடி வழக்கறிஞர்?

531
00:36:38,155 --> 00:36:39,615
கேத்தி ஸெல்டென்.

532
00:36:40,782 --> 00:36:41,909
திருமதி. லேன்ஸ் க்ரோனின்.

533
00:36:42,284 --> 00:36:43,160
சரியா சொன்னீங்க.

534
00:36:45,037 --> 00:36:48,832
காசு தருவதா உறுதியளித்தாள், ஓல்மரின்
ரத்தத்தை வைக்க ஒப்புக்கொண்டான்.

535
00:36:49,583 --> 00:36:51,335
வாக்குமூலத்தில் ஓல்மரை
கையொப்பமிட வைக்கிறாங்க.

536
00:36:51,418 --> 00:36:53,629
பார்டர்ஸ் விடுதலையாகி, நகர அரசின் மேல்
வழக்கு போடுகிறான்.

537
00:36:54,087 --> 00:36:55,672
க்ரோனின் தன் பங்கைப் பெறுகிறான்.

538
00:36:55,756 --> 00:36:58,008
திறமையான குற்ற உருவாக்கம்.

539
00:37:08,101 --> 00:37:09,645
மருந்துக் கடை

540
00:37:40,092 --> 00:37:41,885
நான் தயார். வேனைப் பார்க்க முடியுது.

541
00:37:42,469 --> 00:37:44,012
நான் பாஷைக் கண்காணிக்கிறேன்.

542
00:37:48,308 --> 00:37:49,393
பிரச்சனையா?

543
00:37:50,060 --> 00:37:52,020
-வேனில் ஏறுங்க.
-என்ன நடக்குது?

544
00:37:55,732 --> 00:37:57,109
அபாயத்தில் இருக்கோம்னு தோணுது.

545
00:37:59,152 --> 00:38:00,153
போலீஸா?

546
00:38:00,237 --> 00:38:01,321
எனக்கு எப்படித் தெரியும்.

547
00:38:02,489 --> 00:38:03,991
காரை முன்னால் பார்த்திருக்கேன்.

548
00:38:06,451 --> 00:38:07,619
வேனில் ஏறுங்க.

549
00:38:08,412 --> 00:38:10,747
அவங்களை துரத்த எனக்குத் தெரியும்.
உன் கைபேசியைக் கொடு.

550
00:38:11,415 --> 00:38:12,541
உன் கைபேசியைக் கொடு.

551
00:38:23,719 --> 00:38:25,971
911, உங்க அவசரம் என்ன?

552
00:38:26,054 --> 00:38:29,016
விக்டரி மற்றும் வேன் நைஸ் அருகே ஹோல்ட்
ஃபாஸ்ட் பீட்ஸா கடை முன்

553
00:38:29,099 --> 00:38:32,102
ஒரு போலீஸ்காரர் சுடப்பட்டார்னு
நினைக்கிறேன். சீக்கிரம் உதவி அனுப்புங்க.

554
00:38:41,945 --> 00:38:45,782
பிரிவுகள் கவனம். துப்பாக்கிச்சூடு. ஹோல்ட்
ஃபாஸ்ட் பீட்ஸா முன் அதிகாரி வீழ்ந்தார்.

555
00:38:45,866 --> 00:38:47,325
விக்டரி மற்றும் வேன் நைஸ்.

556
00:38:47,409 --> 00:38:48,618
எட்கர், கேட்டதா?

557
00:38:49,077 --> 00:38:52,247
நம் வேஷம் கலைந்தது. கிளம்பி அங்கே போ, நீ
வரும்போது கோட் நான்கை அமல்படுத்து.

558
00:38:52,330 --> 00:38:55,417
துப்பாக்கிச் சூடுக்கு ஆதாரமில்லை, என்னை
மருத்துவமனையில் சந்தித்திடு.

559
00:38:55,500 --> 00:38:56,585
புரிந்தது.

560
00:39:03,633 --> 00:39:05,052
அபாரம்.

561
00:39:05,886 --> 00:39:07,179
போலீஸ்காரங்களே தான்.

562
00:39:09,389 --> 00:39:10,515
தெரியும் எனக்கு.

563
00:39:14,811 --> 00:39:16,563
அது வேலை செய்யும்னு உங்களுக்கு
எப்படித் தெரியும்?

564
00:39:16,646 --> 00:39:19,149
போலீஸ்காரன் சுடப்பட்டா, எல்லாத்தையும்
போட்டுட்டு ஓடி வருவாங்க.

565
00:39:23,570 --> 00:39:25,906
இன்றிரவு கிழவருக்கு இரண்டு மடங்கு மருந்து.

566
00:39:57,020 --> 00:39:57,854
நாசம்.

567
00:40:01,608 --> 00:40:02,526
அடச்சே.

568
00:40:09,324 --> 00:40:10,826
கார்ஸியா வலி மருத்துவமனை

569
00:40:10,909 --> 00:40:11,952
திருப்பத்தை தவற விட்டாய்.

570
00:40:12,035 --> 00:40:14,121
எங்கேயாவது போகணுமா, கிழவரே?

571
00:40:14,538 --> 00:40:16,206
இங்கேயே இறக்கி விடுகிறேன்.

572
00:40:16,289 --> 00:40:20,460
இல்ல. மன்னிக்கணும். பரவாயில்லை.

573
00:41:03,753 --> 00:41:05,505
-யாரையாவது பார்த்தியா?
-இல்ல, ஒன்றுமில்லை.

574
00:41:07,591 --> 00:41:09,968
இங்கேயே இரு. யாராவது வந்தா என்னை அழை.

575
00:41:10,051 --> 00:41:11,469
-சரி.
-அவங்க போன இடம் தெரியும்னு தோணுது.

576
00:41:14,472 --> 00:41:16,308
இது பாஷ், செய்தி விட்டுச் செல்லுங்கள்.

577
00:41:17,392 --> 00:41:19,102
அவங்க ஸ்பென்சரிடம் எப்படி
வந்தாங்கன்னு அறிந்தோம்.

578
00:41:19,186 --> 00:41:20,937
என்னைத் திரும்ப அழையுங்கள், சொல்கிறேன்.
அறிந்தோம்.

