1
00:02:02,748 --> 00:02:05,918
பாஷ்

2
00:02:29,984 --> 00:02:32,945
வீரர்களே, அடேன்ஷன் !

3
00:02:33,612 --> 00:02:35,489
ஆயுதங்களை ஏந்துங்கள்.

4
00:03:39,428 --> 00:03:42,264
ஹானர் கார்ட். ஆயுதங்களை இறக்குங்கள்.

5
00:03:43,390 --> 00:03:46,477
வீரர்களே. ஆயுதங்களை இறக்குங்கள் !

6
00:03:51,732 --> 00:03:54,318
ஹானர் கார்ட். ஆயுதங்களை தயாராக்குங்கள்.

7
00:03:55,653 --> 00:03:57,237
வலப்பக்கம் திரும்புங்கள் !

8
00:03:58,072 --> 00:04:00,115
தயாராகுங்கள். குறி பாருங்கள். சுடுங்கள்.

9
00:04:01,575 --> 00:04:02,868
குறி பாருங்கள். சுடுங்கள்.

10
00:04:04,286 --> 00:04:05,579
குறி பாருங்கள். சுடுங்கள்.

11
00:04:07,289 --> 00:04:08,999
ஹானர் கார்ட், அடேன்ஷன்.

12
00:04:10,167 --> 00:04:11,752
இடப்பக்கம் திரும்புங்கள் .

13
00:05:04,263 --> 00:05:05,723
உங்கள் மகனின் நினைவாகவும்,

14
00:05:05,806 --> 00:05:08,392
நன்றியுள்ள ஓர் பெருநகரின் சார்பாகவும்,

15
00:05:09,059 --> 00:05:11,020
லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகர காவல்
துறையின் சார்பாகவும்.

16
00:05:19,903 --> 00:05:23,449
ஹானர் கார்ட். ஆயுதங்களை ஏந்துங்கள்.

17
00:05:24,575 --> 00:05:27,745
வீரர்களே. ஆயுதங்களை ஏந்துங்கள்.

18
00:06:01,528 --> 00:06:03,197
தங்கள் வருகைக்கு நன்றி, தளபதி.

19
00:06:03,280 --> 00:06:06,116
என் உதவி தேவைப்பட்டால்,
தயங்காமல் அழையுங்கள்.

20
00:06:19,797 --> 00:06:20,798
ஆர்செனாக்ஸ்.

21
00:06:22,758 --> 00:06:24,218
தங்கள் இழப்புக்கு மிகவும் வருந்துகிறேன்.

22
00:06:24,551 --> 00:06:25,552
இது உனக்கும்தான் இழப்பு.

23
00:06:26,261 --> 00:06:27,179
சார்?

24
00:06:27,930 --> 00:06:29,556
அவன் உனக்கும்தான் உற்ற துணை
மற்றும் நண்பன்.

25
00:06:29,640 --> 00:06:31,016
ஆமாம். நன்றி.

26
00:06:36,063 --> 00:06:37,731
அன்னிக்கு ராத்திரி என்ன நடந்தது?

27
00:06:40,359 --> 00:06:42,402
அன்னிக்கு ராத்திரி என்னதான் நடந்தது?

28
00:06:43,779 --> 00:06:48,117
சார். அதைப்பற்றி யார்கிட்டயும்
பேசக்கூடாதுன்னு ஆணை.

29
00:06:48,200 --> 00:06:49,409
நீ ஐ.ஓ.டீ.

30
00:06:49,827 --> 00:06:50,869
ஆமாம், சார்.

31
00:06:50,953 --> 00:06:51,995
பணி நேரத்துல காயம் பட்டவன்.

32
00:06:52,746 --> 00:06:54,039
அது அதிர்ச்சியான சம்பவம்தான், சார்.

33
00:06:54,540 --> 00:06:56,333
நாம எல்லாருக்குமே அது அதிர்ச்சியான
சம்பவம்தான்.

34
00:06:57,417 --> 00:06:58,794
ஆனா, ஒரு விஷயம் சொல்றேன்.

35
00:07:01,421 --> 00:07:02,381
என்ன சார்?

36
00:07:03,799 --> 00:07:06,844
நீ இத ரொம்ப நாளைக்கு
மறச்சு வெக்க முடியாது.

37
00:07:06,927 --> 00:07:10,764
கூடிய சீக்கிரமே, என் மகனுக்கு
என்ன ஆச்சுன்னு எனக்கு சொல்ற.

38
00:07:57,811 --> 00:07:59,146
திருட்டு மற்றும் கொலை விசாரணைப் பிரிவு
தோற்றம் 1969

39
00:08:05,152 --> 00:08:07,404
டாஸ்க் ஃபோர்ஸ்

40
00:09:20,852 --> 00:09:23,313
சாத்தியமான காரணங்கள்
தனிப்பட்டவை ஐ.ஏ - 211

41
00:10:07,941 --> 00:10:10,027
டோனி ஆலனோட காரோட ஜிபிஎஸ் தகவல்

42
00:10:10,819 --> 00:10:12,988
-அவன் கொல்லப்பட்ட நாளோட ராத்ரி
பாத்தீங்களா? -இல்ல.....

43
00:10:13,071 --> 00:10:14,823
அந்த கார் பயணிச்ச இடங்கள
இது காட்டும், இல்லயா?

44
00:10:14,906 --> 00:10:18,118
ம்ம்ம. கூடவே இஞ்ஜின் ஆன்,ஆப் செய்யப்பட்ட
இடங்கள் பற்றிய தகவல்களும் இருக்கும்.

45
00:10:18,201 --> 00:10:19,119
ஓகே.

46
00:10:19,202 --> 00:10:22,414
அன்னிக்கு ராத்திரி, மல்ஹோலேண்ட்ல
கார, ரெண்டு நிமிஷம் நிறுத்தியிருக்கான்.

47
00:10:22,748 --> 00:10:25,167
காரும், பிரேதமும் கிடைச்ச இடத்லேர்ந்து
இரெண்டரை மைல் தூரத்துல,

48
00:10:25,250 --> 00:10:26,293
வீட்லேர்ந்து மூணு மைல்.

49
00:10:26,626 --> 00:10:28,003
அவன் கடைசியா போன்
பண்ணதும் அதே நேரத்துலதான்.

50
00:10:28,086 --> 00:10:30,088
-வேகஸ்ல இருக்கற லைலாகிட்ட.
-அதேதான்.

51
00:10:30,172 --> 00:10:31,173
-கொலை எப்படி நடந்திருக்கும்ன்னு
யூகிக்க முடியுது.

52
00:10:31,256 --> 00:10:32,257
-ம்ம்... நானும் அதேதான் நினைக்கறேன்.

53
00:10:33,258 --> 00:10:36,678
காதலிகிட்ட பேசிக்கிட்டே வீடு திரும்பறான்,
எதையோ பாக்கறான்,

54
00:10:36,762 --> 00:10:38,430
"சரி பேபி, அப்றமா பேசறேன்." ஃபோன
வெக்கறான்,

55
00:10:38,513 --> 00:10:39,848
வண்டிய ஓரம்
கட்றான், இறங்கறான்.

56
00:10:41,099 --> 00:10:42,517
ரெண்டு அவன் பின் மண்டைல.

57
00:10:42,851 --> 00:10:45,354
காலைல முதல் வேலையா,
அங்க போய் பாக்கணும்.

58
00:10:46,563 --> 00:10:47,898
எவ்வளவு நாட்களுக்கான
டேட்டா இதுல இருக்கும்?

59
00:10:48,482 --> 00:10:50,317
மூணு வருஷத்துக்கானது.

60
00:10:50,400 --> 00:10:52,861
-நான் அத பாக்கலாமா?
-கண்டிப்பா. இந்தாங்க.

61
00:10:59,951 --> 00:11:03,288
மிஸஸ். ஆலன் ! காலை வணக்கங்கள் !

62
00:11:03,663 --> 00:11:04,831
மிஸ்டர். நாஷ்.

63
00:11:10,712 --> 00:11:14,257
என் வக்கீல்கிட்ட பேசினேன். என் கேஸ்
எப்போ வேணும்னாலும் கோர்ட்டுக்கு வரலாம்.

64
00:11:14,341 --> 00:11:15,509
எப்போ?

65
00:11:15,592 --> 00:11:17,719
சீக்கிரமே. கொஞ்சம் பொறுமையா இருங்க.

66
00:11:18,929 --> 00:11:20,514
பொறுமை என்னோட நடு பெயர்.

67
00:11:22,891 --> 00:11:23,850
உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.

68
00:11:24,267 --> 00:11:25,352
நாம ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும்.

69
00:11:26,436 --> 00:11:28,605
"நம்மள யாரோ கண்காணிச்சு கிட்டே
இருக்காங்க"ங்கற மாதிரியே இருக்கணும்.

70
00:11:30,190 --> 00:11:31,191
யாரும் கண்காணிக்கறாங்களா?

71
00:11:31,274 --> 00:11:32,901
இப்ப வரை இல்லாட்டியும், இனிமே
பாப்பாங்க.

72
00:11:35,904 --> 00:11:37,781
பொறுமை என்னோட நடு பெயர்
இல்லை.

73
00:11:38,782 --> 00:11:40,200
அது எனக்கு தெரியாதா என்ன?

74
00:11:43,703 --> 00:11:45,163
இந்த நாள், உங்களுக்கு
இனிய நாளா அமையட்டும்.

75
00:11:45,622 --> 00:11:46,873
உங்களுக்கும்தான்.

76
00:12:02,097 --> 00:12:03,640
திஸ் ப்ராபர்டி இஸ் ப்ரொடெக்டெட் பை
ஸ்மித் &amp; வெஸ்ஸன்

77
00:13:00,780 --> 00:13:01,865
இர்வ்.

78
00:13:02,699 --> 00:13:03,950
யாரோ வர மாதிரி இருக்கேனு நினைச்சேன்.

79
00:13:04,784 --> 00:13:05,785
கிரேக்.

80
00:13:06,786 --> 00:13:09,414
-காணீ கிச்சன்ல இருக்காளா?
-இல்ல, மேல ஓய்வு எடுத்திட்டிருக்கா.

81
00:13:09,748 --> 00:13:11,333
-எப்படி இருக்கா?
-பரவாயில்லை.

82
00:13:11,875 --> 00:13:12,959
பரவாயில்லையா?

83
00:13:13,043 --> 00:13:15,045
அவளுக்கு நெஞ்சு வலி வந்தா
மாதிரி இருந்தது.

84
00:13:15,128 --> 00:13:17,797
மூச்சு விட முடியலை,
கையெல்லாம் உதறிச்சு.

85
00:13:17,881 --> 00:13:18,965
நெஞ்சு படபடப்பா இருந்துச்சுனா.

86
00:13:19,049 --> 00:13:20,509
என்கிட்ட ஏன் யாரும் சொல்லலை?

87
00:13:22,636 --> 00:13:23,803
அவ சொல்லக்கூடாதுனு சொல்லிட்டா.

88
00:13:27,224 --> 00:13:28,350
இப்ப எப்படி இருக்கா?

89
00:13:28,433 --> 00:13:30,268
மாத்திரை சாப்பிட்டா. இப்ப பரவாயில்லை.

90
00:13:32,062 --> 00:13:33,396
நீ எதுக்கு வந்த?

91
00:13:33,480 --> 00:13:34,648
என் வீட்டுக்கு வரக்கூடாதா?

92
00:13:35,398 --> 00:13:36,525
நான் என்ன சொல்றேனு
உனக்கு புரிஞ்சிருக்கும்.

93
00:13:36,983 --> 00:13:39,903
எனக்கு வேண்டியது, துணி மாதிரி சிலதை
எடுத்துட்டு போக வந்தேன்.

94
00:13:42,364 --> 00:13:43,990
உனக்கு வேணும்கிறத நான் எடுத்துட்டு
வரேன்.

95
00:13:44,074 --> 00:13:47,077
நான் சீக்கிரம் போயிட்டு வந்துடுவேன்.
அவளை தொந்தரவு பண்ண மாட்டேன்.

96
00:13:49,329 --> 00:13:51,122
அவளுக்கு உன்னை பார்க்க
வேணாமாம், இர்வ்.

97
00:13:52,707 --> 00:13:54,584
அவ அதுல தெளிவா இருக்கா.

98
00:14:01,675 --> 00:14:03,134
-ஹே.
-அப்பா.

99
00:14:03,843 --> 00:14:04,886
நீ எங்க கூட வர்றியா?

100
00:14:04,970 --> 00:14:06,429
கொரியன் சாப்பாடு எனக்கு பிடிக்காது.

101
00:14:06,846 --> 00:14:07,847
சாப்பிட்டு பாரு மா.

102
00:14:07,931 --> 00:14:09,724
ஒரு தடவ சாப்பிட்டு பார்த்தேன்,
ஜென்மத்துக்கும் வேணாம்.

103
00:14:09,808 --> 00:14:11,476
அன்னிக்கு முழுக்க மூக்கை உறிஞ்சி
உறிஞ்சி,

104
00:14:11,560 --> 00:14:14,271
நல்ல ரெஸ்டாரெண்ட்ல சாப்பிடற
ஆசையே போச்சு.

105
00:14:14,938 --> 00:14:15,939
உனக்குதான் நஷ்டம்.

106
00:14:16,356 --> 00:14:17,607
நாங்க ஒரு நிமிஷம்
பேசிட்டு வர்றோம், மாட்ஸ்.

107
00:14:18,233 --> 00:14:19,776
சரி. நான் எப்படியும் பாத்ரூம்
போறதா இருந்தேன்.

108
00:14:19,859 --> 00:14:21,236
ப்ரேக்ரூமுக்கு வந்துடு.

109
00:14:22,070 --> 00:14:23,071
இங்க வா.

110
00:14:26,783 --> 00:14:27,826
என்ன ஆச்சு?

111
00:14:28,618 --> 00:14:30,954
நம்பிக்கைய வளர்த்துகாத,
என்னோட யூகமா கூட இருக்கலாம்.

112
00:14:31,288 --> 00:14:33,748
மார்க்ஸ் நிறுவனத்துல இருந்த
ஒரு ரகசிய எஃப்.பி.ஐ. ஏஜெண்ட்,

113
00:14:33,832 --> 00:14:36,001
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி
க்ரிஸ்துமஸ் போது காணாம போயிட்டார்.

114
00:14:36,084 --> 00:14:38,461
மார்க்ஸ் அவரை கொன்னு பாலைவனத்துல
பொதச்சிட்டானு சொல்றாங்க,

115
00:14:38,545 --> 00:14:40,046
ஆனா எங்கனு தெரியல.

116
00:14:40,130 --> 00:14:41,006
சரி.

117
00:14:41,965 --> 00:14:45,051
ஆலெனோட கார்ல, காய்ஞ்சு போன
ரத்தத்தை நாங்க கண்டுப்பிடிச்சிருக்கோம்.

118
00:14:45,635 --> 00:14:46,720
-அவரோடதா?
-இருக்கலாம்.

119
00:14:46,803 --> 00:14:48,013
யாருதுனு கண்டுப்பிடிச்சிட்டிருக்காங்க.

120
00:14:48,096 --> 00:14:50,890
அந்த காரோட கடந்த மூணு வருஷத்து

121
00:14:50,974 --> 00:14:53,101
ஜி.பி.எஸ். விவரங்கள் இன்னிக்கு
கிடைச்சிருக்கு.

122
00:14:53,184 --> 00:14:55,770
அதை வெச்சு பிணத்தை எங்க
பொதைச்சாங்கனு கண்டுப்பிடிக்க முடியுமா?

123
00:14:55,854 --> 00:14:56,813
அதான் என் யூகம்.

124
00:14:57,731 --> 00:15:01,151
டோனி ஆலென் பணத்தோட விளையாடுவான்.
ஆனா கொலைலாம் பண்ணிருக்க மாட்டான்.

125
00:15:01,234 --> 00:15:02,861
வெறும் கையாளா இருந்திருப்பானோ?

126
00:15:02,944 --> 00:15:06,156
பொணத்தை ஒழிச்சு கட்ட, மார்க்ஸுக்கு
ஒரு நம்பிக்கையான ஆள் தேவையா இருந்துச்சு.

127
00:15:06,239 --> 00:15:07,073
மிஸ்டர். வுல்ஃப்.

128
00:15:07,991 --> 00:15:08,908
யாரு?

129
00:15:09,534 --> 00:15:10,827
ஹார்வே கெய்டல்லா?

130
00:15:11,661 --> 00:15:13,288
பல்ப் ஃபிக்ஷன்ல வருவாரே? கையாள்.

131
00:15:13,788 --> 00:15:15,165
நான் படம் பார்க்க மாட்டேன்னு
உனக்கே தெரியும்.

132
00:15:15,582 --> 00:15:17,667
உனக்கு இது படம்னு தெரிஞ்சிருக்கே,
அதுவே பெரிய விஷயம்.

133
00:15:18,335 --> 00:15:19,711
அது தெரியாதா என்ன?

134
00:15:20,128 --> 00:15:23,506
க்ரிஃப்ஃபின் கிட்ட கார்ல
ரத்தம் இருந்துதுனு சொல்லு.

135
00:15:23,590 --> 00:15:25,884
அந்த ஜி.பி.எஸ். விவரங்களை கொடு,
மத்ததை எஃப்.பி.ஐ. பார்த்துக்கட்டும்.

136
00:15:25,967 --> 00:15:28,136
எதுவும் சரியா வரலைனா கூட,
நீ ஏதோ முயற்சி செஞ்சனு திருப்தி இருக்கும்.

137
00:15:28,219 --> 00:15:29,220
அது உதவியாக இருக்கும்.

138
00:15:29,721 --> 00:15:30,680
இருக்கலாம்.

139
00:15:31,097 --> 00:15:32,140
என்னது இருக்கலாம்?

140
00:15:32,724 --> 00:15:35,018
ரொம்ப ட்ராஃபிக் இல்லாம
இருக்கலாம். போலாமா?

141
00:15:35,101 --> 00:15:36,436
இப்பவேவா சாப்பிடணும்?

142
00:15:36,519 --> 00:15:39,189
இது பீக் டைம்.
நாம போய் சேரும் போது சரியா இருக்கும்.

143
00:15:39,272 --> 00:15:41,232
நீ பசில கத்துவ.

144
00:15:41,775 --> 00:15:42,942
ஜாலியா போய்ட்டு வாங்க.

145
00:15:43,026 --> 00:15:44,069
-வரேன் மா.
-பார்க்கலாம்.

146
00:15:57,916 --> 00:15:59,000
சீஃப்.

147
00:15:59,084 --> 00:16:02,796
உன் கிட்ட பேசணும்.
ஒம்னி ஹோட்டல்ல, ரூம் 1530க்கு வா.

148
00:16:06,091 --> 00:16:09,386
நான் இப்ப என் பொண்ணோட சாப்பிட
போறேன். சாப்பிட்டு வரேன்.

149
00:16:10,303 --> 00:16:13,223
சரி. டின்னர என்ஜாய்
பண்ணுங்க.

150
00:16:13,640 --> 00:16:14,766
நன்றி, சார்.

151
00:16:15,600 --> 00:16:16,559
வேலை இருக்கா?

152
00:16:17,060 --> 00:16:18,103
சாப்பிட்ட அப்புறம்தான்.

153
00:16:24,943 --> 00:16:25,860
திறந்திருக்கு.

154
00:16:40,625 --> 00:16:43,920
உள்துறைக்காக என் பையன்
ரகசியமா வேலை செஞ்சிட்டிருந்தான்.

155
00:16:44,003 --> 00:16:45,630
சிறப்பு இயக்க பிரிவு.

156
00:16:46,631 --> 00:16:47,841
எனக்கு தெரியாதே.

157
00:16:48,258 --> 00:16:49,259
யாருக்கும் தெரியாது.

158
00:16:51,970 --> 00:16:53,555
ஊழல் செஞ்ச போதை தடுப்பு
அதிகாரிகாளுக்கு எதிரா

159
00:16:53,638 --> 00:16:56,307
செயல்ப்பட்ட குழுல
இவனும் ஒருத்தன்.

160
00:16:57,225 --> 00:17:00,311
போதை மருந்து விக்கறவங்களை
பிரிச்சு மேய்ஞ்சிட்டு இருந்தாங்க.

161
00:17:01,438 --> 00:17:02,564
இது எல்லாம்?

162
00:17:03,815 --> 00:17:06,568
என் பையனோட கொலை விசாரணை
பண்ணற, கொலை பிரிவு,

163
00:17:06,651 --> 00:17:09,446
இது குண்டர்களோட வேலைனு
சொல்லறாங்க.

164
00:17:09,863 --> 00:17:12,365
இல்லனா, அவன் கொலைக்கும்
ரகசிய வேலைக்கும் சம்பந்தமில்லாம,

165
00:17:12,449 --> 00:17:14,617
ஒரு சாதாரண திருட்டு கலவரத்துல
ஏன் செத்திருப்பான்.

166
00:17:16,327 --> 00:17:17,829
ரெண்டுத்துக்குமே வாய்ப்பிருக்கு.

167
00:17:21,124 --> 00:17:22,792
அவனை பத்தி தெரிஞ்சிருச்சு.

168
00:17:23,918 --> 00:17:25,170
அதான் கொன்னுட்டாங்க.

169
00:17:26,463 --> 00:17:28,923
சார், எனக்கு ஒண்ணு தோணுது.
ஒரு வேளை ப்ராட் காண்ணிஃபா இருக்குமோ?

170
00:17:29,007 --> 00:17:31,009
அவன் வேலைல கெட்டி.

171
00:17:31,092 --> 00:17:32,302
சரிதான்.

172
00:17:33,219 --> 00:17:34,637
ஆனா அவனை செய்ய விடணும்.

173
00:17:38,099 --> 00:17:39,934
ஆனா இது பிரச்சார காலம்,
பாஷ்.

174
00:17:41,144 --> 00:17:43,313
கூட செய்யறவங்களே கொலை
பண்ணியிருந்தா?

175
00:17:45,023 --> 00:17:46,649
இத மறைச்சிடுவாங்களா?

176
00:17:47,025 --> 00:17:48,943
மேயரும் போலிஸ் சீஃபும்
என்ன பண்ணுவாங்க?

177
00:17:49,903 --> 00:17:51,988
தேர்தல் முடியற வரை,
விசாரணைய தள்ளிப்போட என்னல்லாம்

178
00:17:52,071 --> 00:17:53,198
செய்யணுமோ அது எல்லாம் செய்வாங்க.

179
00:17:53,281 --> 00:17:55,283
அப்படியே அதை
மூடி மறைச்சுடுவாங்க.

180
00:17:55,366 --> 00:18:00,038
குற்றவாளிகளோட பேரம் பேசி, விசாரணை,
செய்தினு எதுவும் இல்லாம பண்ணிடுவாங்க.

181
00:18:01,206 --> 00:18:03,124
உண்மையே கண்டுப்பிடிக்க
முடியாம போயிடும்.

182
00:18:04,834 --> 00:18:07,128
இது அவங்கள எவ்வளவு தூரம்
சங்கட படுத்துமோ,

183
00:18:07,212 --> 00:18:09,881
அவங்க அந்த ஆர்.எச்.டி. விசாரணய
எரிச்சுடுவாங்க.

184
00:18:10,298 --> 00:18:11,674
நானா அவங்க நிலைல இருந்தா,

185
00:18:14,093 --> 00:18:15,094
இதைவிட மோசமா பண்ணுவேன்.

186
00:18:26,689 --> 00:18:28,024
சீஃப், என்ன எதுக்கு வர சொன்னீங்க?

187
00:18:28,399 --> 00:18:29,818
நீங்க இதை விசாரணை பண்ணணும்.

188
00:18:30,318 --> 00:18:32,153
-ஆர்.எச்.டி. கூடயா?
-என்னோட.

189
00:18:34,197 --> 00:18:35,698
நீ வேணும், பாஷ்.

190
00:18:35,782 --> 00:18:38,868
விடா முயற்சியா வேலை செய்யற
ஒரு டிடெக்டிவ் தேவை.

191
00:18:38,952 --> 00:18:39,953
அது வந்து, சார்...

192
00:18:40,036 --> 00:18:40,995
ஆர்சினாக்ஸ்.

193
00:18:41,830 --> 00:18:43,706
அவன்கிட்ட நெருங்கவே முடியாது.

194
00:18:44,165 --> 00:18:45,750
இதுக்கு பின்னாடி யார்
இருக்காங்கனு அவனுக்கு தெரியும்.

195
00:18:45,834 --> 00:18:47,669
ஆர்.எச்.டி.யால அவன் கூட பேசவே
முடியலை

196
00:18:49,045 --> 00:18:49,963
ஆனா உன்னால முடியும்.

197
00:18:52,882 --> 00:18:54,384
அது சாக்கடை, சார்.

198
00:18:54,467 --> 00:18:56,886
இணை விசாரணை,
சரியான யோசனையா எனக்கு தோணலை.

199
00:18:56,970 --> 00:18:59,013
ஆர்.எச்.டி. அவங்க வேலைய
பார்க்கட்டும்.

200
00:18:59,097 --> 00:19:00,515
அவங்க உங்க பையனை
கொன்னவனை கண்டுப்பிடிப்பாங்க.

201
00:19:00,890 --> 00:19:01,850
அவங்கள விட்டாதானே.

202
00:19:02,725 --> 00:19:03,726
யாரு விடணும்?

203
00:19:04,310 --> 00:19:05,395
பத்தாவது மாடில இருக்குறவங்க.

204
00:19:12,068 --> 00:19:13,695
என் பையனோட இறுதி சடங்குல . . .

205
00:19:15,280 --> 00:19:17,824
பாதுகாப்பு மரியாதைல சுட்ட
குண்டோட ஓட்டை நீ எடுத்து வெச்சுக்கிட்ட.

206
00:19:19,617 --> 00:19:22,328
நான் எல்லா அதிகாரிகளின்
இறுதி சடங்கிலும் பண்ணுவேன்.

207
00:19:22,412 --> 00:19:23,413
ஏன்?

208
00:19:26,124 --> 00:19:27,625
ஏன்னா அவன் நம்மள்ள ஒருத்தன்.

209
00:19:29,669 --> 00:19:30,920
அப்போ எனக்கு உதவி செய்.

210
00:19:32,297 --> 00:19:34,007
அவனை கொலை பண்ணவனை
கண்டுப்பிடிக்க உதவி பண்ணு.

211
00:20:03,244 --> 00:20:04,245
ஜே. எட்கர்.

212
00:20:04,662 --> 00:20:07,457
நாம முல்ஹால்லாண்ட் போறோமா?
ரொம்ப சூடு ஆகுறதுக்கு முன்னாடி போலாமா?

213
00:20:07,540 --> 00:20:11,127
சே. சுத்தமா மறந்துட்டேன். நான் ஊருக்குள்ள
திடீர்னு வேலை இருந்ததுனு வந்தேன்.

214
00:20:11,210 --> 00:20:12,587
எனக்காக முல்ஹால்லண்டை நீயே
பார்த்துக்கோ

215
00:20:12,670 --> 00:20:14,797
நான் அப்புறம் உனக்கு
ஈடு கட்டறேன்.

216
00:20:15,173 --> 00:20:17,050
-கண்டிப்பா, ஹாரி..
-நன்றி, பார்ட்னர்.

217
00:20:22,263 --> 00:20:24,015
ஃபின்னி ஏதோ நல்லா இருக்கான்.

218
00:20:24,098 --> 00:20:26,184
டிராப்,மிலிட்டரி பென்ஷன் .

219
00:20:26,267 --> 00:20:29,062
மாலிபுல ஏதோ ஒரு இடத்துல
பாதுகாவலனா இருக்கான்.

220
00:20:29,145 --> 00:20:30,980
ஆமா, நான் மட்டும் ஃபின்னியா
இருந்திருந்தா,

221
00:20:31,064 --> 00:20:32,148
வாரத்துல ஆறு நாள் கோல்ஃப்
விளையாடிட்டிருப்பேன்.

222
00:20:32,231 --> 00:20:33,191
வேலைய தூக்கி போட்டிருப்பேன்.

223
00:20:34,359 --> 00:20:36,235
எப்போலேர்ந்து கோல்ஃப்
விளையாடற, காண்ணிஃப்?

224
00:20:38,404 --> 00:20:40,198
ஹாரி பாஷ்.

225
00:20:40,281 --> 00:20:41,783
வாவ், நீ திரும்ப வந்துட்டனு
கேள்விப்பட்டேன்.

226
00:20:41,866 --> 00:20:43,826
ரெண்டு வாரம் ஆச்சு.
வந்து ஒரு கேஸும் பிடிச்சுட்டேன்.

227
00:20:43,910 --> 00:20:45,078
நீலப்படம் எடுக்கறவன், ரெண்டு
தடவ சுடப்பட்டு,

228
00:20:45,161 --> 00:20:46,371
அவன்
கார் ட்ரங்க்லயே அடைக்கப்பட்டிருக்கான்.

229
00:20:46,454 --> 00:20:48,790
போலிஸ் வேலைல இருக்குற
கவர்ச்சியே தனிதான்.

230
00:20:48,873 --> 00:20:50,833
இது, ஜூலி எஸ்பினோசா,
என்னோட பார்ட்னர்.

231
00:20:50,917 --> 00:20:52,293
-ஹாரி பாஷ். உங்களை சந்திச்சதுல
சந்தோஷம்.

232
00:20:52,377 --> 00:20:53,378
-உங்கள சந்திச்சதில் மகிழ்ச்சி.

233
00:20:53,461 --> 00:20:54,337
-சூடா ஒரு கேஸ் பிடிச்சிருக்கீங்கனு
கேள்விப்பட்டேன்.

234
00:20:54,420 --> 00:20:55,296
அப்படியா?

235
00:20:55,380 --> 00:20:56,339
ஆமா, எப்படி போயிட்டிருக்கு?

236
00:20:57,298 --> 00:21:00,259
அந்த பையனோட பார்டன்ர்கிட்ட
பேசவே முடியலை.

237
00:21:00,343 --> 00:21:02,220
மாடில இருக்குறவங்க எங்கள
வேலை செய்ய விடாம,என்ன செய்யணும்,

238
00:21:02,303 --> 00:21:04,097
எப்படி செய்யணும்னு சொல்லி
படுத்திக்கிடுருக்காங்க.

239
00:21:04,180 --> 00:21:06,349
டென்ஸர் இந்த விஷயத்துல
எந்த எல்லைக்கும் போவார்.

240
00:21:06,432 --> 00:21:07,767
அவர் ஆளுங்கள ஒருத்தர் இர்விங்.

241
00:21:07,850 --> 00:21:09,143
ஒஷேக்காக அவர் பேசின வரைதான்.

242
00:21:09,227 --> 00:21:10,311
உண்மை.

243
00:21:10,395 --> 00:21:12,188
அரசியலை ஒதுக்கி வெச்சிட்டு
இதை பார்க்கணும்.

244
00:21:13,272 --> 00:21:14,857
அந்த மாதிரி நடக்கவே நடக்காதுல?

245
00:21:14,941 --> 00:21:15,858
ப்ராட்.

246
00:21:16,317 --> 00:21:17,276
சரி.

247
00:21:17,902 --> 00:21:20,029
சரி, நாங்க... நாங்க பார்த்துக்குறோம்.

248
00:21:21,239 --> 00:21:22,365
நீங்க அமைதியா இருங்க, சரியா?

249
00:21:22,991 --> 00:21:24,200
அதான் நம்மளால முடியும்.

250
00:21:24,283 --> 00:21:26,119
ஹே, நீ எல் கம்பாடெர்க்கு எப்பவாது வாயேன்?

251
00:21:26,202 --> 00:21:27,704
நாம மார்கரீட்டாவா போட்டு தாக்கலாம்.

252
00:21:27,787 --> 00:21:28,830
போலாமே.

253
00:21:29,372 --> 00:21:31,374
-உங்களை சந்திச்சதுல சந்தோஷம்.
-எனக்கும்.

254
00:21:46,139 --> 00:21:48,725
ஜி.பி.எஸ். ரிப்போர்ட்.

255
00:22:08,995 --> 00:22:11,164
கடைசியா உங்க ஏஜெண்ட் ...

256
00:22:11,247 --> 00:22:13,041
கிருஸ்துமஸுக்கு முதல் நாள்.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி.

257
00:22:14,417 --> 00:22:18,129
ஆமா. அன்னிக்கு ராத்திரி, ஆலென்
லாஸ் ஏஞ்செல்ஸிலிருந்து வேகாஸ் போனான்.

258
00:22:18,921 --> 00:22:20,548
அங்க ஆறு மணி நேரம் தங்கினான்.

259
00:22:20,631 --> 00:22:21,591
கிருஸ்துமஸ் அன்னிக்கு, விடியறதுக்கு
முன்னாடி,

260
00:22:21,674 --> 00:22:22,675
திரும்ப அங்கிருந்து கிளம்பி
வந்தான்.

261
00:22:22,759 --> 00:22:23,760
உடனேவா?

262
00:22:24,510 --> 00:22:28,514
எப்பவும் அப்படி நடக்காது. கொஞ்ச
நாளாவது தங்குவான்.

263
00:22:29,098 --> 00:22:33,186
காலைல 6 மணிக்கு, திரும்ப போகும்போது,
நெடுஞ்சாலை 15ல கொஞ்ச தூரம் போய்

264
00:22:33,269 --> 00:22:34,979
காரை நிறுத்திருக்கான்.

265
00:22:35,313 --> 00:22:36,939
கிட்டத்தட்ட 1½ மணி நேரம்.

266
00:22:38,066 --> 00:22:41,027
ரோட்ட விட்டு தள்ளி, பெண்ட்லில,
காலங்கார்த்தால, யார் பண்ணுவாங்க?

267
00:22:42,612 --> 00:22:44,572
நான் ஆயிரம் தடவ அந்த பக்கம்
போயிருக்கேன், எனக்கு நினைவு தெரிஞ்ச வரை,

268
00:22:44,655 --> 00:22:46,908
அங்க உறுப்படியா
ஒண்ணும் இல்லை.

269
00:22:46,991 --> 00:22:48,326
அது ஒரு தனிமையான இடம்.

270
00:22:51,120 --> 00:22:52,705
உங்க முன்னாள் கணவர்
எதுக்கு உங்ககிட்ட இதை குடுத்தார்?

271
00:22:53,664 --> 00:22:56,834
அவர் குடுக்கலை. நான் அவர் மேஜைலேர்ந்து
எடுத்து, காபி பண்ணிட்டேன்.

272
00:22:57,543 --> 00:22:59,796
அதைதானே நீங்க பண்ண மாட்டேனு
சொன்னீங்க?

273
00:22:59,879 --> 00:23:01,464
நான் அவரை உளவு பார்க்க
மாட்டேனு சொன்னேன்.

274
00:23:02,173 --> 00:23:04,300
இது உங்களோட விசாரணை, அவருது
இல்ல.

275
00:23:05,259 --> 00:23:06,886
அது ஒரு மெலிதான கோடு.

276
00:23:08,638 --> 00:23:09,972
நீங்க சொன்னது எனக்கு
பிடிச்சிருந்துது

277
00:23:10,056 --> 00:23:11,057
அதுக்கு ஏதாவது உபயோகமா
இருக்கலாமேனுதான்.

278
00:23:15,895 --> 00:23:16,854
இதுவரைக்கும்..

279
00:23:17,855 --> 00:23:18,731
நல்லா போயிட்டிருக்கு.

280
00:23:39,752 --> 00:23:41,587
-பாஷ்.
-நான் ஊருக்குள்ள இருக்கேன்..

281
00:23:43,214 --> 00:23:44,423
எனக்கு ஒரு அரை மணி நேரம் குடுங்க.

282
00:24:08,573 --> 00:24:09,782
திருட்டு மாதிரி தெரியுது.

283
00:24:10,283 --> 00:24:11,450
அப்படிதான் இருக்க வேண்டியது.

284
00:24:13,035 --> 00:24:14,328
அவனோட ஹாண்ட்லர்கிட்ட பேசினேன்.

285
00:24:14,412 --> 00:24:16,080
ஜார்ஜ் ஏதாவது மைக்
போட்டிருந்தானானு கேட்டேன்.

286
00:24:16,539 --> 00:24:18,541
மைக்கை பத்தின பேச்சே வரலியே

287
00:24:18,624 --> 00:24:21,878
தெரியும். அன்னைக்கு அவன் மைக்
வச்சிருந்ததா லாவ் சொன்னான்

288
00:24:22,753 --> 00:24:23,880
அவனோட கடிகாரம்.

289
00:24:23,963 --> 00:24:25,923
அதை அந்த கொலையாளி
திருடிட்டானா

290
00:24:26,674 --> 00:24:28,467
இது எதேச்சையா நடந்ததுன்னு
லாவ் சொன்னான்

291
00:24:28,551 --> 00:24:29,760
அது அப்படியே இருக்கட்டும்

292
00:24:40,438 --> 00:24:42,356
ஒரு வேளை ஆர்செனோ
சம்மந்தப்பட்டிருக்கலாம்

293
00:24:42,440 --> 00:24:43,816
ஜார்ஜை மாட்டிவிட்டிருக்கலாம்

294
00:24:44,400 --> 00:24:45,568
எனக்கு தெரியாது

295
00:24:46,444 --> 00:24:48,404
உண்மையிலேயே வருத்தத்துல
இருக்கறான்னு நெனைக்குறேன்.

296
00:24:49,989 --> 00:24:52,158
ஒரு வேளை அவனோட பார்ட்னர்லாம் இந்த
கொலையை பத்தி சொல்லாம இருந்திருக்கலாம்

297
00:24:52,533 --> 00:24:54,660
கேமராவுக்காக ஒரு நல்ல
ரியாக்ஷனா இருந்திருக்கலாம்.

298
00:24:55,286 --> 00:24:56,621
அவன்கிட்ட பேசணும்

299
00:24:57,330 --> 00:24:58,873
ஆர்.எச்.டி அவனை
கண்காணிச்சிகிட்டு இருக்கு.

300
00:25:00,041 --> 00:25:01,584
அதுக்கு நாம ஒரு வழி கண்டுபிடிக்கலாம்

301
00:25:02,919 --> 00:25:03,836
நாமளா?

302
00:25:07,089 --> 00:25:08,966
இது எந்த ரெக்கார்ட்லையும் வராது இல்ல?

303
00:25:10,968 --> 00:25:12,261
என்ன ரெக்கார்ட்?

304
00:25:35,243 --> 00:25:36,452
எட்டி, உங்களுக்கு கால் வந்திருக்கு.

305
00:25:37,870 --> 00:25:38,704
சரி

306
00:25:45,503 --> 00:25:47,380
-சீக்கிரம் முடிங்க
-சரி சரி

307
00:25:48,130 --> 00:25:51,717
-ஹலோ?
-ஆஃபிசர் ஆர்சினோ, இது டெபுடி சீஃப் இர்விங்

308
00:25:51,801 --> 00:25:54,387
நீ உங்க வீட்டுக்கு திரும்ப வரணும்.
உடனடியா .

309
00:25:54,804 --> 00:25:56,264
நாம கொஞ்சம் பேசணும்.

310
00:25:56,347 --> 00:25:57,890
என்னால அது முடியாதுன்னு
உங்களுக்கு தெரியும் இல்லையா?

311
00:25:57,974 --> 00:26:01,769
நான் அந்த கடையோட வீடியோல பாத்தேன்.
நீ ரொம்ப கவலையா இருந்தே.

312
00:26:03,104 --> 00:26:04,480
ஆமா. அது சரிதான்.

313
00:26:04,563 --> 00:26:05,898
அன்னைக்கு ராத்திரி என் மகனுக்கு என்ன
நடக்கும்னு

314
00:26:05,982 --> 00:26:07,108
உனக்கு தெரியாதுன்னு எனக்கு
தெரியும்.

315
00:26:07,733 --> 00:26:09,026
எனக்கு தெரியாதுதான்

316
00:26:09,568 --> 00:26:11,153
உனக்கு இதுல சம்மந்தம்
இருக்குன்னு ஆர்.எச்.டி நினைக்குது

317
00:26:11,487 --> 00:26:12,738
எனக்கு தெரியும்.

318
00:26:12,822 --> 00:26:13,906
நான் உனக்கு உதவ முடியும்.

319
00:26:15,491 --> 00:26:16,993
அது எனக்கு தெரியாது

320
00:26:17,076 --> 00:26:18,911
இது விளையாட்டில்ல.

321
00:26:19,328 --> 00:26:21,872
இப்பவே அது வேணுமா
வேணாமான்னு நீ முடிவு பண்ணனும்..

322
00:26:21,956 --> 00:26:23,499
இந்த வாய்ப்பு மறுபடியும் வராது

323
00:26:24,709 --> 00:26:26,919
ஓஹோ சரி. நாம எப்போ
என்ன பண்ணனும்?

324
00:26:27,503 --> 00:26:28,963
பின்வாசல் வழியா வெளில வா.

325
00:26:29,672 --> 00:26:32,300
நீ வெளில வரும் போது உன்னோட,
பையையும் துப்பாக்கியையும் வச்சிட்டு வா.

326
00:26:32,383 --> 00:26:33,843
ஒரு கார் அங்க காத்துக்கிட்டிருக்கும்.

327
00:26:48,691 --> 00:26:50,318
-நீங்க யாரு
-ஊபர்

328
00:27:04,749 --> 00:27:06,000
நான் இங்க பக்கத்துலதான் இருக்கேன்.

329
00:27:07,001 --> 00:27:08,294
நீங்க போயிட்டீங்கன்னு. இத்தனை நேரத்துக்கு
அங்க கண்டுப்பிடிச்சிருப்பாங்க,

330
00:27:08,377 --> 00:27:10,671
உடனே உங்க வீட்டை
கண்காணிக்க சொல்லிருப்பாங்க.

331
00:27:12,381 --> 00:27:13,424
ஊபரா?

332
00:27:27,855 --> 00:27:29,023
என்ன எழவு?

333
00:27:29,106 --> 00:27:31,692
-ஹே, என்னய்யா பண்றே?
-வாயை மூடு

334
00:27:31,776 --> 00:27:33,069
கொன்னுடுவேன்.

335
00:27:39,283 --> 00:27:41,285
-எழுந்திரு, இங்க வா
-அறிவிருக்கா, டேய்

336
00:27:43,204 --> 00:27:44,205
கருமம் புடிச்சவனே

337
00:27:49,251 --> 00:27:50,211
டெபுடி சீஃப்

338
00:27:50,294 --> 00:27:51,921
நாங்கங்கிறதால பொழச்ச

339
00:27:52,505 --> 00:27:54,006
நல்ல வேளை லா எமி இல்லை

340
00:27:54,090 --> 00:27:57,176
லா எமி? என்ன எழவை சொல்றீங்கன்னே
எனக்கு புரியலை.

341
00:27:57,259 --> 00:28:00,388
உங்க மக்கள் புகுந்து அடிச்சாங்களே
ஹைலேண்ட் பார்க்ல ஒரு வீடு

342
00:28:00,471 --> 00:28:01,764
போதை பொருள் விநியோகம் ப்ண்ணும் இடம்.

343
00:28:03,057 --> 00:28:03,933
ச்சே

344
00:28:04,016 --> 00:28:06,602
அது சரிதான். உனக்கு கார்லோஸ்
வேகாவை தெரியுமா?

345
00:28:08,187 --> 00:28:09,772
கடவுளே. உங்களுக்கு என்னதான் வேணும்.

346
00:28:09,855 --> 00:28:10,940
பேர்.

347
00:28:11,524 --> 00:28:14,485
என் மகனை கொன்னவன்.
அதை செய்ய சொன்னவன்.

348
00:28:14,568 --> 00:28:18,280
எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லைன்னு
உங்களுக்கு தெரியும்னு சொன்னீங்களே

349
00:28:18,364 --> 00:28:21,492
பேர் வேணும். இல்லேன்னா
வேகாகிட்ட உன்னை கொடுப்போம்.

350
00:28:28,416 --> 00:28:29,834
அவனை கொல்லப்போறாங்கன்னு
எனக்கு தெரியாது

351
00:28:31,043 --> 00:28:32,086
கடவுள் சத்தியமா

352
00:28:32,545 --> 00:28:34,213
ஜார்ஜ் என்னோட நண்பன்.

353
00:28:34,296 --> 00:28:36,632
-நீ அதையே சொல்லிட்டிரு.
-பேர் வேணும்

354
00:28:36,715 --> 00:28:38,634
உங்களுக்கு புரியலை.
என்னை கொன்னுடுவாங்க

355
00:28:38,717 --> 00:28:40,553
வேகாவும் உன்னை
கண்டிப்பா கொன்னுடுவான்.

356
00:28:40,636 --> 00:28:41,720
எப்படி சாகுறதுன்னு நீயே
முடிவு பண்ணிக்கோ.

357
00:28:43,639 --> 00:28:46,267
கடைசி தடவையா உன்கிட்ட கேக்குறேன்.

358
00:28:47,685 --> 00:28:48,769
முடியாது.

359
00:28:50,020 --> 00:28:51,605
அவனை கட்டி கார்ல போடுங்க.

360
00:28:52,356 --> 00:28:54,775
சர், சர், சரி.
கார்ல் நேஷ்..

361
00:28:57,653 --> 00:28:58,529
நேஷா?

362
00:28:58,904 --> 00:29:01,449
ஆமா. கார்ல் நேஷ்.

363
00:29:01,532 --> 00:29:03,742
அவந்தான் கொலை செய்ய சொன்னான்.
சரியா

364
00:29:03,826 --> 00:29:05,786
ஜார்ஜ் காட்டிக்குடுக்குறவன்னு
அவன் கண்டுபிடிச்சான்.

365
00:29:11,917 --> 00:29:13,085
உனக்கு அவனை தெரியுமா?

366
00:29:13,169 --> 00:29:15,838
வான் நைய்ஸ்ல,முன்னாள் கொலை வழக்கு
போலீஸ் .

367
00:29:16,547 --> 00:29:18,757
நாஷ்தான் சுட சொன்னான்.
யார் சுட்டது?

368
00:29:19,675 --> 00:29:21,218
எனக்கு உறுதியா தெரியலை.

369
00:29:22,136 --> 00:29:25,890
நார்காடிக்ஸ், மேற்கு
ப்யூரோலேந்து,நிக் ரைலியா இருக்கலாம்.

370
00:29:37,693 --> 00:29:39,862
நான் பாக்குற கேஸ்ல கொலை செய்யப்பட்ட
டோனி ஆலென்,

371
00:29:39,945 --> 00:29:41,155
ஹிட்டென் ஹைலேண்ட்ஸ்லதான்
இருந்தான்.

372
00:29:41,238 --> 00:29:43,199
கார்ல் நாஷ்தான் அங்க செக்யூரிட்டி.

373
00:29:43,282 --> 00:29:44,617
அவங்கிட்ட, முன்னாள் போலிஸ், இப்போ
போலிஸா இருக்குறவங்கனு,

374
00:29:44,700 --> 00:29:45,951
வேலை செய்யறவங்க நிறைய பேர்.

375
00:29:46,035 --> 00:29:47,786
நீ இந்த ரெண்டு கேஸும்
சம்பந்தப்பட்டிருக்குனு நினைக்குறியா?

376
00:29:48,621 --> 00:29:49,705
வெரோனிகா ஆலெந்தான் அவ
புருஷனை கொன்னுருப்பானு

377
00:29:49,788 --> 00:29:50,789
நினைக்குறோம், ஆனா அந்த
சமயத்துல அவ வேற

378
00:29:50,873 --> 00:29:52,249
இடத்துல இருந்ததுக்கான
பலமான சாட்சி வெச்சிருக்கா.

379
00:29:53,042 --> 00:29:54,293
அவ நாஷை உபயோகிச்சிருக்கலாம்?

380
00:29:54,376 --> 00:29:55,669
அவ புருஷனை கொல்லவா?

381
00:29:56,170 --> 00:30:00,007
பாருங்க, அவளுக்கு செக்யூரிட்டியா
இருக்குற முன்னாள் போலிஸ தெரிஞ்சுருக்கு.

382
00:30:00,090 --> 00:30:02,551
வீட்டுல பிரச்சனை.
புருஷன் வேற பொண்ணோட சுத்திட்டிருக்கான்.

383
00:30:02,635 --> 00:30:05,012
இவங்க பழக ஆரம்பிச்சுட்டாங்க. ஒண்ணு
இன்னொண்ணுக்கு வழியா இருந்திருக்கு.

384
00:30:05,346 --> 00:30:07,056
வெரோனிகா நாஷை
வேலைக்கு வெச்சிருந்தா?

385
00:30:08,474 --> 00:30:10,267
கூலிக்காக கொன்னவனை
தூக்குல போடலாம்.

386
00:30:10,351 --> 00:30:12,228
நமக்கு வேணும்கிறதை

387
00:30:12,311 --> 00:30:14,396
பிடிங்கிட்டு, ஆர்செனாக்ஸ
விட்டுடலாம்.

388
00:30:14,480 --> 00:30:16,774
ஆலென் கொலைல நாஷோட
பங்கை கண்டுப்பிடிக்கணும்.

389
00:30:17,399 --> 00:30:19,068
அத கண்டுபிடிச்சா ,
அவன் வாயை தொறப்பான்.

390
00:30:19,735 --> 00:30:22,154
உங்க பையன் கொல்ல காரணமா இருந்த
எல்லார் பேரும் வெளில வரும்.

391
00:30:22,696 --> 00:30:24,073
கொலை செஞ்சவன் யாருனும் தெரியலாம்.

392
00:30:38,003 --> 00:30:39,255
நாஷை எப்படி சந்திப்ப?

393
00:30:39,338 --> 00:30:40,422
அவன் துப்பாக்கி வியாபாரி.

394
00:30:41,006 --> 00:30:43,342
வான் நைஸ்ல தகவல் பலகைல
அவன் பேரை பார்த்தேன்.

395
00:30:43,884 --> 00:30:45,427
அவன் எனக்கு நல்ல விலைல தரான்னு
கேள்வி பட்டேன்.

396
00:30:45,511 --> 00:30:46,804
அவன் உனக்கு நல்ல விலைல விக்கறானா,
நீ கேவலமான போலீஸ்ன்னு அவனுக்கு தெரியும்

397
00:30:46,887 --> 00:30:48,180
நீ எந்த மாதிரி ஆள்னு எல்லாம்
தெரிஞ்சு வெச்சிருப்பான்.

398
00:30:48,264 --> 00:30:49,265
அவன் தான் உன்னை வேலைல
சேர்த்தானா?

399
00:30:49,848 --> 00:30:51,308
ஆமா, அப்படி சொல்லலாம்.

400
00:30:51,392 --> 00:30:53,936
சைட் பிஸினஸா ரெண்டு வேலை குடுத்தான்.
அப்படிதான் ஆரம்பிச்சுது.

401
00:30:54,019 --> 00:30:55,104
எவ்வளவு பேர் மொத்தம்?

402
00:30:55,563 --> 00:30:57,565
எனக்கு தெரியாது. என் கூட வேலை
செஞ்சவங்க மட்டும்தான் தெரியும்.

403
00:30:57,648 --> 00:30:58,482
அதுலாம் யாரு?

404
00:30:58,857 --> 00:31:00,109
கடவுளே!!

405
00:31:02,778 --> 00:31:06,198
மௌரீன் ஓ'க்ரேடி.
நிக் ரைலி. பெர்னார்டோ பிக்கினி.

406
00:31:06,282 --> 00:31:07,241
போலிஸ்காரங்க எல்லாருமா?

407
00:31:08,242 --> 00:31:11,662
ஆமா. வாலீ, மேற்கு ப்யூரோ.

408
00:31:12,037 --> 00:31:13,872
எல்லாரும் ஹைலாண்ட்ஸ்ல
நாஷ் கூட வேலை பார்க்குறாங்களா?

409
00:31:13,956 --> 00:31:15,082
ஆமா.

410
00:31:15,165 --> 00:31:16,500
டோனி ஆலென் பத்தி சொல்லு.

411
00:31:18,377 --> 00:31:19,545
என்னை மன்னிச்சுடுங்க.
அது யாருனே தெரியாது.

412
00:31:19,628 --> 00:31:20,754
அன்னிக்கு ராத்திரி நீ அங்க இருந்தியா?

413
00:31:20,838 --> 00:31:22,590
-எந்த ராத்திரி?
-அவனை தாக்கின அந்த ராத்திரி.

414
00:31:23,299 --> 00:31:28,053
நான்தான் சொல்றேனே,
டோனி ஆலென் யாருன்னே தெரியாதுனு.

415
00:31:28,137 --> 00:31:30,514
எனக்கு எந்த தாக்குதலை பத்தியும்
தெரியாது.

416
00:31:30,598 --> 00:31:31,849
நாஷ் அவனை பத்தி சொன்னதில்லையா?

417
00:31:31,932 --> 00:31:33,058
சான்ஸே இல்ல.

418
00:31:33,142 --> 00:31:36,103
கொலைகளை பத்தி எதுவும் சொன்னதில்லை.
நான் எந்த கொலையும் செய்யலை.

419
00:31:36,186 --> 00:31:39,231
சத்தியமா சொல்லறேன், அவன் ஜார்ஜை
கொலை பண்ணப்போறான்னு கூட தெரியாது.

420
00:31:54,079 --> 00:31:55,331
உனக்கு ஒரு வாய்ப்பு.

421
00:31:56,081 --> 00:31:58,667
உனக்கு தெரிஞ்சத ஆர்.எச்.டி.க்கு
சொல்லிட்டு உனக்கு ஒரு ஒப்பந்தம் பண்ணிக்க.

422
00:31:58,751 --> 00:31:59,960
முடியாது.

423
00:32:00,044 --> 00:32:03,672
அப்ப ஒண்ணும் பண்ணாம லா சௌலெட்டா வந்து
கொத்திட்டு போற வரை காத்திட்டிரு.

424
00:32:05,591 --> 00:32:06,967
விஷயம் வெளில கசியும்.

425
00:32:07,343 --> 00:32:09,637
என் பேரை தெருல இழுத்து
விடப்போறீங்களா?

426
00:32:10,012 --> 00:32:11,138
நாம ஒரு ஒப்பந்ததுக்கு வந்துட்டோம்னு
நினைச்சேன்.

427
00:32:11,221 --> 00:32:12,056
ஒப்பந்தமா?

428
00:32:12,848 --> 00:32:15,392
கெட்ட போலிஸோடலாம் நான்
ஒப்பந்தம் போடறதில்லை.

429
00:32:16,393 --> 00:32:21,065
உனக்கு 24 மணி நேரம் டைம். அப்புறம்
கொலைகாரன் உன் வீடு தேடி வருவான்.

430
00:32:33,410 --> 00:32:34,870
நாம சான்ஸ் எடுத்து தான் பார்க்கணும்.

431
00:32:35,913 --> 00:32:37,498
ஆர்.எச்.டி.க்கு நாஷை பத்தி தெரியணும்.

432
00:32:38,207 --> 00:32:39,208
நான் பாத்துக்கறேன்.

433
00:32:41,960 --> 00:32:43,671
அவன் வாயை தொறக்காம இருந்திருந்தா
என்ன பண்ணிருப்பீங்க?

434
00:32:44,046 --> 00:32:45,839
கொலைகாரன்கிட்ட அவன்
பேரை குடுத்திருப்பேன்.

435
00:32:49,802 --> 00:32:52,513
எல் கம்பாடெர்
ஹோம் ஆஃப் தி ஃப்லேமிங் மார்கரீடா.

436
00:33:10,864 --> 00:33:11,990
கானிஃப்.

437
00:33:12,658 --> 00:33:15,160
ஹே, பாஷ். ஒரே நாள்ல
ரெண்டு தடவ சந்திச்சுட்டோம்.

438
00:33:15,536 --> 00:33:17,621
-உனக்கு ஒரு மார்கரீடா வாங்கவா?
-ஒரு நிமிஷம் வர்றியா?

439
00:33:19,748 --> 00:33:20,916
உட்கார இடத்தை பார்த்துக்கோ.

440
00:33:21,917 --> 00:33:25,170
ஐயோ அர்த்தம் வேற மாதிரி
இருக்கே. சீட்டை பார்த்துக்கோ.

441
00:33:28,257 --> 00:33:29,174
என்ன ஆச்சு?

442
00:33:29,258 --> 00:33:30,968
உன்னோட இர்விங் கேஸ்ல
ஒரு துப்பு கிடைச்சிருக்கு.

443
00:33:31,051 --> 00:33:32,553
காலைல இல்லாதது இப்ப கிடைச்சிருக்கா?

444
00:33:32,636 --> 00:33:34,471
ஒரு மணி நேரத்துக்கு
முன்னாடி என் கேஸ்ல தெரிஞ்சுது.

445
00:33:35,180 --> 00:33:37,558
நீலப் படக்காரனா?
அது எப்படி என் கேஸோட சம்பந்தபட்டிருக்கு?

446
00:33:37,641 --> 00:33:38,517
அப்படிதான் தெரியுது.

447
00:33:40,352 --> 00:33:41,478
நீ பெரிய கேடி.

448
00:33:42,563 --> 00:33:44,898
காலைல நீ தற்செயலா என்னை சந்திக்கலை.
என்னை நோட்டம் விட்டுருக்க.

449
00:33:44,982 --> 00:33:46,442
உன் கூட பேசியிருக்க கூடாதோனு
நினைச்சேன்.

450
00:33:46,525 --> 00:33:47,651
உனக்கு இது வேணுமா வேணாமா?

451
00:33:52,197 --> 00:33:53,115
என்னன்னு சொல்லு.

452
00:33:53,615 --> 00:33:56,285
கார்ல் நாஷ். வான் நைஸில்
முன்னாள் கொலை பிரிவு அதிகாரி.

453
00:33:56,952 --> 00:33:58,245
ஹிட்டென் ஹைலாண்ட்ஸ்ல
செக்யூரிட்டியா இருக்கான்.

454
00:33:58,328 --> 00:33:59,371
போலிஸ்காரங்கள வேலைக்கு எடுத்துப்பான்.

455
00:33:59,455 --> 00:34:01,206
வாலீ ப்யூரோல யார் ஆயுதம்
வாங்கணும்னாலும்

456
00:34:01,290 --> 00:34:02,624
அவன்கிட்டதான் போவாங்கனு
பேசிக்கிறாங்க.

457
00:34:02,708 --> 00:34:04,001
சட்டப்பூர்வமாவோ இல்லயோ.

458
00:34:04,418 --> 00:34:06,170
இது எப்படி இர்விங் கொலையோட
சம்பந்தப்பட்டிருக்கு?

459
00:34:06,253 --> 00:34:08,255
நாஷ், எட்டி ஆர்செனாக்ஸுக்கு
துப்பாக்கிகளை வித்துருக்கான்.

460
00:34:11,633 --> 00:34:14,178
சரி. நாங்க என்னன்னு பாக்கறோம்.

461
00:34:14,261 --> 00:34:15,471
ஏதாவது தெரிஞ்சா சொல்லு.

462
00:34:16,847 --> 00:34:18,056
வாய மூடிட்டு போ.

463
00:34:28,901 --> 00:34:30,152
லாஸ் ஏஞ்செல்ஸ் போலிஸ் டிபார்ட்மெண்ட்
ஹாலிவுட் டிவிஷன்

464
00:34:34,990 --> 00:34:35,949
ஹாரி.

465
00:34:36,283 --> 00:34:37,910
ஹே, இன்னிக்கு அங்க எப்படி போச்சு?

466
00:34:37,993 --> 00:34:40,204
அவன் எங்க காரை நிறுத்தியிருந்தானோ
அந்த இடத்தை கண்டுப்பிடிச்சேன்.

467
00:34:40,662 --> 00:34:41,622
எஸ்.ஐ.டி.ய கூப்பிட்டேன்.

468
00:34:41,997 --> 00:34:43,415
-ஏதாவது தெரிஞ்சுதா?
-ஒண்ணும் தெரிலை..

469
00:34:43,499 --> 00:34:45,292
ரத்தமோ, குண்டோட உறையோ
எதுவும் இல்லை.

470
00:34:45,626 --> 00:34:47,669
மலையடி வாரத்துல
பெட்டி இருந்தது.

471
00:34:47,753 --> 00:34:49,379
அவன் பொண்டாட்டி
சொன்ன கருப்பு பெட்டியா?

472
00:34:49,463 --> 00:34:50,839
அதுல துணிய தவிர வேற எதுவும் இல்ல..

473
00:34:51,423 --> 00:34:53,175
இடத்தை பத்தி தெரிஞ்சுதே, நல்லது ஜெர்ரி.

474
00:34:53,258 --> 00:34:55,302
நன்றி. நீங்களா கூப்பிட்டிருக்கீங்க,
என்ன விஷயம்?

475
00:34:55,719 --> 00:34:56,845
கார்ல் நாஷ்..

476
00:34:57,679 --> 00:34:58,722
அவன் மேல ஏதாவது சந்தேகம் இருக்கா?

477
00:34:58,806 --> 00:35:01,141
ஆமா, அவன் சைட்ல துப்பாக்கிலாம்
விக்கறானு துப்பு வந்திருக்கு.

478
00:35:02,059 --> 00:35:03,101
என்னன்னு பார்க்கணும்.

479
00:35:03,185 --> 00:35:04,770
நம்ம கேஸுக்கும் அதுக்கும் என்ன
சம்பந்தம்?

480
00:35:04,853 --> 00:35:08,106
இன்னும் உறுதியா தெரிலை.
நீ எனக்காக ஒண்ணு பண்ணணும்.

481
00:35:08,190 --> 00:35:09,149
என்னன்னு சொல்லுங்க.

482
00:35:16,782 --> 00:35:17,825
அவன் வேலைல இருக்கான்.

483
00:35:20,118 --> 00:35:21,662
இதுலாம் எதுக்காகனு சொல்லறீங்களா?

484
00:35:22,412 --> 00:35:24,498
நான் அப்புறம் விவரம் சொல்லறேன்.
வீட்டுல சந்திக்கலாம்.

485
00:35:34,967 --> 00:35:36,468
அவன் வேலைலதான் இருக்கானா?

486
00:35:36,552 --> 00:35:38,220
ஆமா. ஜே. எட்கர் உறுதிப்படுத்திட்டான்.

487
00:35:48,188 --> 00:35:50,315
அலார்ம், செக்யூரிட்டி கேமரா, எதுவுமே
இல்ல.

488
00:35:50,816 --> 00:35:52,693
அவனுக்கு அதுலாம்
அவசியம்னு தோணிருக்காது.

489
00:35:53,402 --> 00:35:54,403
ஆமா.

490
00:36:10,502 --> 00:36:11,753
முன் அனுபவம் இருக்கு போல!

491
00:36:12,462 --> 00:36:13,505
எப்பவும் வாரண்டோடதான் வருவேன்.

492
00:37:14,399 --> 00:37:15,567
இதுலாம் மேல இருந்துது.

493
00:37:18,904 --> 00:37:21,073
நாஷ்,
டோனி ஆலெனை கண்காணிச்சிருக்கான்.

494
00:37:22,115 --> 00:37:23,492
லைலா பத்தி தெரிஞ்சிருக்கு.

495
00:37:24,368 --> 00:37:25,994
ரவுடிகளை வெச்சு ஆலெனை

496
00:37:26,078 --> 00:37:28,372
கொன்னதா காமிச்சு,
ரைகாஃபை அதுல மாட்டிவிட்டுட்டான்.

497
00:37:30,082 --> 00:37:31,249
இப்ப நாம என்ன பண்ணணும்?

498
00:37:32,042 --> 00:37:34,753
சட்டப்பூர்வமா வாரண்ட் வாங்கிட்டு
திரும்பி வரலாம்.

499
00:37:34,836 --> 00:37:36,588
-இது போதுமா?
-போதும்.

500
00:37:38,215 --> 00:37:40,884
ஆள் வெச்சு கொன்னுருக்கான்.
மொத்த திட்டமும் இங்க இருக்கு.

501
00:37:41,468 --> 00:37:43,220
பெரிய கேள்வி என்னன்னா,
யாரோட திட்டம் இது?

502
00:37:43,303 --> 00:37:45,180
அவனோடதா இல்ல
வெரோனிகா ஆலெனோடதா?

503
00:37:48,016 --> 00:37:50,811
ஹிட்டென் ஹைலேண்ட்ஸ்

504
00:37:58,735 --> 00:38:00,070
நீ இங்க என்ன பண்ற?

505
00:38:00,153 --> 00:38:02,155
கவலைப்படாதீங்க.
நான் ஜாக்ரதையா பாத்துதான் வந்தேன்.

506
00:38:03,949 --> 00:38:05,450
உன்மேல ஏதாவது ஜி.பி.எஸ். ட்ராக்கர்
வெச்சிருக்காங்களானு பார்த்தியா?

507
00:38:05,534 --> 00:38:08,829
ஓ, பார்த்தேனே!
ஜிம்ல இருக்குற என் கார்ல இருக்கு.

508
00:38:09,287 --> 00:38:10,872
இது யாருது?

509
00:38:11,289 --> 00:38:12,416
ஒருத்தர்கிட்ட கடன் வாங்கிட்டு வந்தேன்.

510
00:38:13,417 --> 00:38:14,793
சரி, நாம பேசணும்.

511
00:38:17,170 --> 00:38:18,338
என் பின்னாடி வா.

512
00:38:18,422 --> 00:38:19,631
இப்ப வந்துடறேன்.

513
00:38:19,715 --> 00:38:20,841
சரி.

514
00:38:45,615 --> 00:38:47,367
சரி, கேளுங்க, கேளுங்க.
வாயை மூடு.

515
00:38:47,451 --> 00:38:49,786
ஹே,
என் மேல மைக் எதுவும் இல்லப்பா.

516
00:38:50,746 --> 00:38:52,456
உன் ஃபோனையும் வாட்சையும் தா.

517
00:38:53,582 --> 00:38:54,708
என்ன?

518
00:38:54,791 --> 00:38:56,293
அதுலாம் என்கிட்ட குடு.

519
00:38:57,586 --> 00:39:00,047
விளையாடாதீங்க.

520
00:39:03,341 --> 00:39:04,718
இந்தாங்க. சந்தோஷமா?

521
00:39:07,804 --> 00:39:08,805
பாருங்க.

522
00:39:12,517 --> 00:39:14,061
பேசணும்னு சொன்னல, பேசு.

523
00:39:14,770 --> 00:39:16,354
அவங்க என்கிட்ட கொஞ்சம்
கடுமையா நடந்துட்டாங்க.

524
00:39:17,105 --> 00:39:19,524
ஆர்.எச்.டி.யா? அவங்க
உன்கிட்ட பேசவே கூடாதே!

525
00:39:19,608 --> 00:39:21,193
அவங்க இல்ல.

526
00:39:21,276 --> 00:39:23,487
டெபுடி சீஃப் இர்விங்கும் அவனோட ஒரு
நாயும்.

527
00:39:23,570 --> 00:39:25,864
-இர்விங்கே வந்தானா?
-ஆமா.

528
00:39:26,782 --> 00:39:28,492
கடவுளே! அவனே தனிப்பட்ட
முறைல செயல்படறான்.

529
00:39:28,575 --> 00:39:29,785
ஆமா, ரிகார்ட்ல இல்லதான்.

530
00:39:29,868 --> 00:39:30,869
என்ன சொன்னாங்க?

531
00:39:30,952 --> 00:39:33,747
உங்களுக்கு ஹைலேண்ட் பார்க்ல இருக்குற
அந்த வீட்டைப்பத்தி தெரியுமா?

532
00:39:33,830 --> 00:39:35,957
-அது மாஃபியா கும்பல்.
-இருக்காது!

533
00:39:36,041 --> 00:39:38,835
இல்ல, அவங்கதான்.
வேற யாரைப்பத்தி சொன்னாங்க தெரியுமா?

534
00:39:38,919 --> 00:39:40,962
லா சுலேடானு ஒரு ஆளை
உங்களுக்கு தெரியுமா?

535
00:39:41,463 --> 00:39:43,256
அடச்சே!

536
00:39:45,008 --> 00:39:46,009
வேற என்ன?

537
00:39:47,260 --> 00:39:48,970
டோனி ஆலென்ப்பத்தி கேட்டாங்க.

538
00:39:52,140 --> 00:39:54,810
-நீ என்ன சொன்ன?
-நான் வாயே தொறக்கலை.

539
00:39:55,268 --> 00:39:57,979
ஒண்ணும் சொல்லலை. ஆனா, கேளு,
விஷயம் வெளில தெரிஞ்சிடுச்சு

540
00:39:58,063 --> 00:40:00,023
நமக்குள்ள என்ன நடக்குதுன்னு
அவங்களுக்கு தெரியும்.

541
00:40:00,107 --> 00:40:01,691
எதாவது பேர் வெளில வந்துதா?

542
00:40:01,775 --> 00:40:06,446
இல்லை. ஆனா அவங்களுக்கு என் மேலயும்
ஓக்ரேடி மேலயும் ஒரு கண்ணு இருக்கு.

543
00:40:06,530 --> 00:40:08,198
சரி இது கிளம்பற நேரம்.

544
00:40:09,825 --> 00:40:12,202
இங்கதான் என்னை தவிக்க விடுவியா?

545
00:40:12,285 --> 00:40:16,373
இது கிளம்பற நேரம் கார்ல். என்னோட
பங்கு எனக்கு வேணும்.

546
00:40:16,456 --> 00:40:18,083
அது என்கிட்ட இல்லன்னு உனக்கு தெரியும்

547
00:40:19,626 --> 00:40:21,294
ச்சே

548
00:40:22,546 --> 00:40:25,715
நான் கெஞ்சுற மூட்ல
இல்லை , சரியா ?

549
00:40:25,799 --> 00:40:30,178
நான் இவ்ளோ தூரம் வந்ததே
உனக்கு எல்லாத்தையும்

550
00:40:30,262 --> 00:40:31,972
எடுத்து சொல்றதுக்காகதான்

551
00:40:33,140 --> 00:40:34,641
இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ

552
00:40:34,724 --> 00:40:37,561
கையில கிடைச்சதும் எல்லாருக்கும்
அவங்கவங்க பங்கு கிடைக்கும்

553
00:40:37,644 --> 00:40:41,022
இது ஆகுறதில்லை! எனக்குதான்
ரிஸ்க் அதிகம்.

554
00:40:41,106 --> 00:40:44,484
அது நான். நான்தான் அவனோட பார்ட்னர்.
தப்பினா குறி எனக்குத்தான்.

555
00:40:44,568 --> 00:40:47,571
இங்கேருந்து எப்ப முடியுமோ உடனே
தப்பிச்சுடணும் சாமி.

556
00:40:56,705 --> 00:41:00,125
சரி. நீ வீட்டுக்கு கிளம்பு.

557
00:41:00,709 --> 00:41:02,210
நான் உனக்கான பங்கை கொடுக்குறேன்

558
00:41:03,545 --> 00:41:05,213
உன் பங்கை யாராவது எடுத்துட்டு
வருவாங்க

559
00:41:05,297 --> 00:41:06,381
எப்போ?

560
00:41:06,464 --> 00:41:07,883
நாளைக்கோ, நாளன்னைக்கோ

561
00:41:07,966 --> 00:41:09,676
கவலைப்படாதே, உனக்கு நிச்சயம்
கிடைக்கும்.

562
00:41:09,759 --> 00:41:13,096
அதுக்கிடைல, நீங்க பாத்துக்குங்க.

563
00:41:15,390 --> 00:41:16,641
உன் கடமைய மறந்துடாத

564
00:41:17,058 --> 00:41:18,143
ஆமா, நன்றி.

565
00:41:52,177 --> 00:41:53,887
இவங்களுக்கு அந்த பொறுப்பிருக்கு.

566
00:41:55,388 --> 00:41:57,432
உன் மகன கொன்ன
பாவிங்க அவங்கதான்.

567
00:41:58,266 --> 00:41:59,434
இப்போ என்ன பண்ணனும்?

568
00:41:59,851 --> 00:42:01,436
நாளைக்கு சேர்ச் வாரண்ட் கிடைச்சிடும்.

569
00:42:01,519 --> 00:42:03,146
ஜட்ஜ் கையெழுத்து போட்ட உடனே,
சேர்த்துடுங்க.

570
00:42:03,230 --> 00:42:05,148
ஃபோட்டொவை கண்டுபிடிச்சதும்,
கன் சேஃபை திறக்கலாம்.

571
00:42:06,233 --> 00:42:08,652
அதுக்கப்புறம், டோனி ஆலன் கொலைக்காக
கார்ல் நேஷை கைது பண்ணலாம்.

572
00:42:08,735 --> 00:42:09,694
அப்போ ஆர்.எச்.டி ?

573
00:42:09,778 --> 00:42:12,572
நேஷ் அவங்ககிட்ட ஆலன் கொலை விஷயமா
டீல் பேசுனதும், ஜார்ஜ் கொலையை பத்தி

574
00:42:12,656 --> 00:42:14,616
பேச ஆரம்பிச்சதும், அவங்க பாத்துப்பாங்க.

575
00:42:14,699 --> 00:42:16,201
அவனை நீங்க கைது பண்ணும் போது நான்
இருக்கணும்.

576
00:42:16,284 --> 00:42:18,995
எனக்கென்னமோ அது நல்லதா
படலை சார்.

577
00:42:19,079 --> 00:42:20,497
நான் அங்க இருக்கணும்.

578
00:42:35,303 --> 00:42:38,181
நான் உன் கண்ணை பாக்கணுண்டா
நாயே.

579
00:42:40,183 --> 00:42:42,060
நான் உன் கண்ணை பாக்க போறேன்.

580
00:44:40,428 --> 00:44:41,471
சிறுக்கி.

581
00:44:43,932 --> 00:44:45,517
திருட்டு சிறுக்கி.

582
00:45:44,909 --> 00:45:45,743
ஹை எட்டி

583
00:45:49,998 --> 00:45:51,624
-மோ
-உன் பணம் என்கிட்ட இருக்கு.

584
00:45:54,169 --> 00:45:56,087
ஒரு நிமிஷம் என்னை பயமுறுத்திட்டே.

585
00:45:56,713 --> 00:45:59,340
நீ நாளைக்குதான் வர்றேன்னு
நினைச்சிக்கிட்டிருந்தேன்.

586
00:45:59,424 --> 00:46:01,968
உனக்கு தெரியும் இல்லையா கார்ல்.
அவனுக்கு ஏதாவது வேலை வந்தா போறும்.

587
00:46:02,594 --> 00:46:04,012
இன்னைக்கு ராத்திரி அதை பாத்துக்க
சொன்னார்.

588
00:46:09,350 --> 00:46:10,852
சரி. நான் விளக்கை போடுறேன்.

589
00:46:11,227 --> 00:46:12,228
சரி.
நான் விளக்கை போடுறேன்.

